Term 1 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 33
    6 x 3 = 18
  1. ஒரு நாணயத்தை ஒருமுறை சுண்டும்பொழுது  எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன?

  2. ஒரு பகடையை  ஒரு முறை உருட்டும் போது  எத்தனை விதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன?

  3. பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு , பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியருக்குத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

  4. மதன் ஒரு புதிய மகிழுந்து (car) வாங்க விரும்புகிறார். அவருக்குக் கீழ்க்கண்டத் தெரிவுகள் (choice) உள்ளன. படம் 5.12-இல் கொடுக்கப்பட்டுள்ளது போன்று 

    (1) இரண்டு வகையான மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
    (2) ஒவ்வொரு வகையிலும் 5 வண்ணங்கள் கொண்ட மகிழுந்துகள் இருப்பில் உள்ளது
    ஒவ்வொரு வகையிலும்
    (i) GL (நிலையான ரகம்)
    (ii) SS (விளையாட்டு ரகம்)
    (iii) SL (சொகுசு  ரகம் ) என 3 விதமான ரகத்தில் மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
    (i)கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
    (ii) இரண்டாவது வகை மகிழுந்தில் வெள்ளை வண்ண மகிழுந்து இல்லையென்ற நிலையில், பிறவாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

  5. சரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?

  6. எட்டாம் வகுப்பில் உள்ள ஒரு கணித மன்றத்தில் M, A, T மற்றும் H என்ற 4 உறுப்பினர்கள் உள்ளனர் எனில், கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) கணித மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை?
    (ii) கணித மன்றத் தலைவர் மற்றும் உபதலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை?

  7. 3 x 5 = 15
  8. உங்களிடத்தில், 3 நீலவண்ணச் சதுரவில்லைகளும்  3 பச்சை வண்ணச் சதுரவில்லைகளும்  மற்றும் 3 சிவப்பு வண்ணச் சதுரவில்லைகளும்  உள்ளன எனில் , இவற்றைக் கொண்டு அடுத்தடுத்த இருச்சதுரவில்லைகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு அனைத்து விலைகளையும் ஒருமுறைப் பயன்படுத்திச் சதுரவடிவில் பொருத்தவும்.

  9. பட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.

  10. கொடுக்கப்பட்டுள்ள நிலவரைபடத்தினை வரைபட வண்ணமிடுதல் அடிப்படையில் மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைப் பயன்படுத்தி அடுத்தடுத்த இரு மாநிலங்கள் ஒரே வண்ணத்தால் நிரப்பப்படாமல் கீழே கொடுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி மாற்றி வண்ணமிடுக.
    i. ஒவ்வொரு மாநிலத்தையும் வரைபடத்தில் உச்சிகளாக வண்ணமிட்டுக் காட்டவும்.
    ii. அடுத்தடுத்த நிலப்பகுதிகளின் உச்சிகளை விளிம்புகள் கொண்டு இணைக்கவும்

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Information Processing Three and Five Marks Question Paper )

Write your Comment