Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஓர் எண் மற்றோர் எண்ணின் 7 மடங்கு ஆகும். அவற்றின் வித்தியாசம் 18 எனில், அவ்வெண்களைக் காண்க

  2. அடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 75 எனில், அவற்றுள் எது பெரிய எண்?

  3. தேன்மொழியின் தற்போதைய வயது முரளியின் வயதை விட 5 ஆண்டுகள் அதிகம் ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன் தேன்மொழிக்கும் முரளிக்கும் இடையே இருந்த வயது விகிதம் 3:2 எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?

  4. வரைபடத்தாளில் குறிக்காமல் கீழ்க்காணும் புள்ளிகள் அமையும் கால்பகுதிகளைக் காண்க.
    (3, − 4), (5,7), (2,0), ( − 3, − 5), (4, − 3), ( − 7,2), ( − 8,0), (0,10), ( − 9,50).

  5. ஆய அச்சுகளை (2,0) மற்றும் (0,2) ஆகிய புள்ளிகளில் சந்திக்கும் கோடானது, (2,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமா?

  6. கொடுக்கப்பட்ட சமன்பாடுகளுக்கு வரைபடம் வரைக. (i) y = −3 x (ii) y = x−4

  7. மூன்று எண்களின் கூடுதல் 58. இதில் இரண்டாவது எண்ணானது முதல் எண்ணின் ஐந்தில் இரண்டு பங்கின் மூன்று மடங்கு ஆகும். மூன்றாவது எண்ணானது முதல் எண்ணை விட 6 குறைவு எனில், அந்த மூன்று எண்களையும் காண்க.

  8. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு வரைபடம் வரைக.

    சதுரத்தின் பக்கங்கள்(செ.மீ) 2 3 4 5 6
    பரப்பளவு (செ.மீ2) 4 9 16 25 36

    வரைபடமானது ஒரு நேர்க்கோட்டு அமைப்பைக் குறிக்கின்றதா?

  9. ஒரு களப் பயணத்திற்கு 331 மாணவர்கள் சென்றனர் . ஆறு பேருந்துகள் முழுமையாக நிரம்பின. 7 மாணவர்கள் மட்டும் ஒரு வேனில் பயணிக்க வேண்டியதாயிற்று எனில், ஒவ்வொரு பேருந்திலும் எத்தனை மாணவர்கள் இருந்தனர் ?

  10. y = x, y = 2x, y = 3x மற்றும் y = 5x ஆகிய சமன்பாடுகளின் வரைபடங்களை ஒரே வரைபடத்தாளில் வரைக. இந்த வரைபடங்களில் ஏதேனும் சிறப்பை உங்களால் காண முடிகிறதா?

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Algebra Two Marks Question Paper )

Write your Comment