Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 26
    13 x 2 = 26
  1. கொடுக்கப்பட்ட வரைப்படத்தாளில் தங்கச் செவ்வகத்தில் பிபனோசி எண் தொடர் வரிசை எவ்வாறு பிபனோசி தங்கச் சுருளை உருவாக்குகிறது என்பதை வரைந்துக் காட்டுக.

  2. கொடுக்கப்பட்ட எண்களுக்குத் தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
    455 மற்றும் 26

  3. கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் கழித்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
    42 மற்றும் 70

  4. கொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்க.

     

  5. ஒரு பள்ளியில் களப்பயணமாக 56 மாணவிகளும் 98 மாணவர்களும் கன்னியாகுமரி செல்கின்றனர். மாணவ மாணவிகளை இணைத்துச் சம அளவில் உள்ள குழுக்களாகப் பிரித்தால், அதிகபட்சமாக எத்தனை குழுக்களாகப் பிரிக்க முடியும்? (தொடர் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க)

  6. கலை, 168 மி.மீ மற்றும் 196 மி.மீ அளவுள்ள காகிதத்தாளை, தன்னால் முடிந்த அளவு மிகப் பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டிய மிகப் பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன? (தொடர் கழித்தல் முறையை பயன்படுத்தி மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க)

  7. குறிப்புஎண் = 4 (key=4) எனக் கொண்ட அடிடிவ் மறைகுறியீடு அட்டவணையினை (Additive cipher table) உருவாக்கவும்.

  8. “Good Morning” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வரிசைமாற்றி இடம்பெயர்த்து “Doog Gninrom” என மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தையும் இவ்வாறே குறிவிலக்கம் செய்க.
    “ot dnatsrednu taht scitamehtam nac eb decneirepxe erehwreve ni erutan dna laer efil.”

  9. கொடுக்கப்பட்டுள்ள பிக்பென் மறைகுறியீடு உரையினை (Pigpen Cipher Text) குறிவிலக்கம் செய்து செயல்பாடு 3 இக்கான தீர்வுடன் ஒப்பிடவும்.
    I. புதையல் இருக்கும் அறை எண்
    \(\sqcup \sqcap \)
    II. புதையல் இருக்கும் இடம்:

    III. புதையலின் அடையாளம்:

  10. பிபனோசி எண்தொடரின் விதியானது F (n) = F (n-2) + F (n-1) எனில், 11 முதல் 20 வரையிலான பிபனோசி எண்களைக் கண்டுபிடித்து எழுதவும்.

  11. ஒரு நூலகத்தில், 385 கணிதப் புத்தகங்களும், 297 அறிவியல் புத்தகங்களும் 143 தமிழ் புத்தகங்களும் சமமான எண்ணிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான புத்தகங்களையும் சமஅளவில் ஒரு கட்டாக கட்டி அடுக்கினால், ஒவ்வொரு கட்டிலும் உள்ள புத்தகங்களின் அதிகபட்சமான எண்ணிக்கை என்ன? (தொடர் வகுத்தல் முறையைப் பயன்படுத்தவும்)

  12. நீளம் 4 மீ 50 செ.மீ மற்றும் 6 மீ 30 செ.மீ அளவுகள் கொண்ட மரத் துண்டுகளை அளக்கும் மிகப் பெரிய மரத் துண்டின் நீளத்தைக் காண்க. (தொடர் கழித்தல் முறையைப் பயன்படுத்தவும்)

  13. தொடர் வகுத்தல் முறை மற்றும் தொடர் கழித்தல் முறை ஆகிய இரண்டையும் பயன்படுத்தி, 167 மற்றும் 95 என்ற இரு எண்களையும் வகுக்கும் போது மீதி 5 வருகிறதென்றால், அந்த மிகப்பெரிய வகுஎண்ணைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Information Processing Two Marks Question Paper )

Write your Comment