" /> -->

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. வேதிவினை என்பதை வரையறுக்க.

 2. ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.

 3. ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் போது என்ன நிகழ்கிறது?

 4. மாசுபடுதல் என்றால் என்ன?

 5. மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 6. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?

 7. கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது வெப்ப உமிழ்வினையா ? வெப்பக் கொள்வினையா?

 8. ஏன் ஒளிச்சேர்க்கை ஒரு வேதிவினையாகும்?

 9. குமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட் டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக , நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாக இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல சலுகை தருவதாக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
  அ) ரமேஷின் அறிவுரை சரியானதா?
  ஆ) ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
  இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?

 10. பழனிக்குமார் ஒரு வழக்கறிஞர். அவர் வாடகை அதிகமாக உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அதிகமான வாடகை தர இயலாமல் அருகில் வேதித் தொழிற்சாலை உள்ள ஒரு இடத்தில் குடியேற விரும்புகிறார். அங்கு வாடகை மிகவும் குறைவு. மேலும் மக்கள் நெருக்கமும் குறைவு, 8-வது படிக்கும் அவரது மகன் ராஜசேகருக்கு அப்பாவின் முடிவுபிடிக்கவில்லை. தொழிற்சாலையில்லாத வேறொரு இடத்திற்குச் செல்லாம் என்று கூறுகிறான்.
  அ) ராஜசேகர் கூற்று சரியானதா?
  ஆ) ராஜசேகர் தொழிற்சாலை நிறைந்த பகுதிச்குச் செல்ல மறுத்தது ஏன்?
  இ) ரா ஜசேகர் வெளிப்படுத்திய நற்பண்புகள் என்ன?

 11. துருப்பிடித்தல் என்றால் என்ன?

 12. மின்னாற் பகுத்தல் என்றால் என்ன?

 13. ஒளிவேதி வினைகள் என்றால் என்ன?

 14. வெப்பச் சிதைவு வினைகள் என்றால் என்ன?

 15. ஊசிப்போதல் (துர்நாற்றமடித்தல்) என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Changes Around Us Two Marks Questions )

Write your Comment