" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  (a)

  பதங்கமாதல்

  (b)

  குளிர்வித்தல்

  (c)

  உறைதல்

  (d)

  படிதல்

 2. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

  (a)

  எதிர் மின்னூட்டம்

  (b)

  நேர்மின்னூட்டம்

  (c)

  பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

  (d)

  எதுவுமில்லை

 3. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

  (a)

  காற்று

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  கார்பன் டை ஆக்சைடு

  (d)

  நைட்ரஜன்

 4. கார்பன்டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

  (a)

  நீலலிட்மசை சிவப்பாக

  (b)

  சிவப்பு லிட்மசை நீலமாக

  (c)

  ஊதா லிட்மசை மஞ்சளாக

  (d)

  லிட்மசுடன் வினை புரிவதில்லை

 5. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

  (a)

  ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.

  (b)

  ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

  (c)

  ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

  (d)

  அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.

 6. _________ மூட்டுகள் அசையாதவை .

  (a)

  தோள்பட்டை மற்றும் கை

  (b)

  முழங்கால் மற்றும் மூட்டு

  (c)

  மேல் தாடை மற்றும் மண்டைஓடு

  (d)

  கீழ்தாடை மற்றும் மேல் தாடை

 7. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

  (a)

  கழுத்தெலும்பு -7

  (b)

  மார்பெலும்பு -10

  (c)

  இடுப்பு எலும்பு - 4

  (d)

  வால் எலும்பு – 4

 8. _____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்

  (a)

  10 முதல் 16

  (b)

  11 முதல் 17

  (c)

  11 முதல்19

  (d)

  11 முதல் 20

 9. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?

  (a)

  வண்ணம் தீட்ட

  (b)

  நிரல் அமைக்க

  (c)

  வருட

  (d)

  PDF ஆக மாற்ற

 10. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

  (a)

  வண்ணம் தீட்ட

  (b)

  கணிதம் கற்க

  (c)

  நிரல் பற்றி அறிய

  (d)

  வரைகலையைக் கற்க

 11. எவையேனும் 15 வினாக்களுக்கு குறுகிய விடையளி

  15 x 2 = 30
 12. வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

 13. வெப்பக் கடத்தல் என்றால் என்ன?

 14. ஒரு கலோரி – வரையறு

 15. புவித்தொடுப்பு என்றால் என்ன?

 16. மின்சுற்று என்றால் என்ன?

 17. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?

 18. நைட்ரஜனின் பயன்கள் யாவை?

 19. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?

 20. உலர்பனி என்பது என்ன ? அதன் பயன்களை எழுதுக.

 21. பொருண்மை அழியாவிதி – வரையறு

 22. அயனி, அயனித்  தொகுப்பு – வரையறு.

 23. கீழ்காணும் சேர்மங்களின் பெயர்களை எழுதுக.
  அ) CO ஆ) N2O இ) NO2 ஈ) PCl5

 24. கிரானியம் என்றால் என்ன?

 25. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக

 26. தசை நார் என்றால் என்ன?

 27. வளரிளம் பருவம் என்றால் என்ன?

 28. பருவமடைதலின்போது ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிடுக.

 29. கருவுறுதல் என்றால் என்ன?

 30. பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன ?

 31. Tux Math என்றால் என்ன?

 32. எவையேனும் 4 வினாக்களுக்கு  விரிவான விடையளி

  4 x 5 = 20
 33. கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

 34. வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.

 35. கீழ்க்காண்பவற்றின் வேதிவாய்பாட்டினை எழுதுக.
  அ. அலுமினியம் சல்பேட்
  ஆ. பேரியம் குளோரைடு
  இ. சில்வர் நைட்ரேட்
  ஈ. மெக்னீசியம் ஆக்சைடு

 36. எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம்  கொடு.

 37. மாதவிடாய் சுழற்சியினைப் பற்றி சுருக்கமாக விவரி

 38. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன? அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குக.

 39. மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?

 40. மனித அச்சு எலும்புக்கூட்டைப் பற்றி எழுதுக. அதன் படம் வரைந்து பாகங்களைக் குறி.

 41. வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?

 42. ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 20°C உயர்த்த 1000J ஆற்றல் தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Science - Half Yearly Model Question Paper 2019 - 2020 )

Write your Comment