Term 2 வளரிளம் பருவமடைதல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.

    (a)

    வியர்வை

    (b)

    எண்ணெய்

    (c)

    வியர்வை மற்றும் எண்ணெய்

    (d)

    எதுவுமில்லை

  2. விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது

    (a)

    ஆண்குறி

    (b)

    அண்டகம்

    (c)

    கருப்பை

    (d)

    விந்தகங்கள்

  3. நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.

    (a)

    ஹார்மோன்கள்

    (b)

    நொதிகள்

    (c)

    புரதங்கள்

    (d)

    கொழுப்பு அமிலங்கள்

  4. மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    நின்றுவிடுகிறது

    (d)

    இயல்பாக உள்ளது

  5. நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

    (a)

    பொட்டாசியம்

    (b)

    பாஸ்பரஸ்

    (c)

    இரும்பு

    (d)

    கால்சியம்

  6. 3 x 2 = 6
  7. இரண்டாம்நிலை பால் பண்புகள் என்றால் என்ன?

  8. பெண்களில், மாதவிடாய் சுழற்சியின் போது தூய்மையின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக

  9. வளரிளம் பருவம் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

  10. 3 x 3 = 9
  11. வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் யாவை ?

  12. இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.

  13. வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்துத் தேவைகள் பற்றி சுருக்கமாக விளக்குக.

  14. 2 x 5 = 10
  15. தங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உன் வகுப்பு நண்பர்களுக்கு நீ என்ன பரிந்துரை செய்வாய்?

  16. வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 வளரிளம் பருவமடைதல் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Reaching the age of Adolescence Model Question Paper )

Write your Comment