முக்கிய வினாவிடைகள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

  Part - A

  32 x 1 = 32
 1. \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  (a)

  0 மற்றும் \(\frac { -5 }{ 4 } \)

  (b)

  –1 மற்றும் 0

  (c)

  –1 மற்றும் –2

  (d)

  –4 மற்றும் –5

 2. பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  (a)

  \(\frac { -20 }{ 12 } ,\frac { 5 }{ 3 } \)

  (b)

  \(\frac { 16 }{ -30 } ,\frac { -8 }{ 15 } \)

  (c)

  \(\frac { -18 }{ 36 } ,\frac { -20 }{ 44 } \)

  (d)

  \(\frac { 7 }{ -5 } ,\frac { -5 }{ 7 } \)

 3. \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  (a)

  \(\frac { 13 }{ 10 } \)

  (b)

  \(\frac { 2 }{ 3 } \)

  (c)

  \(\frac { 3 }{ 2 } \)

  (d)

  \(\frac { 5 }{ 8 } \)

 4. 0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  (a)

  0

  (b)

  1

  (c)

  -1

  (d)

  கிடையாது

 5. பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?

  (a)

  \(\frac { 1 }{ 8 } -\frac { 1 }{ 8 } =0\)

  (b)

  \(\frac { 1 }{ 8 } +\frac { 1 }{ 8 } =\frac { 1 }{ 4 } \)

  (c)

  \(\frac { 1 }{ 8 } +0=\frac { 1 }{ 8 } \)

  (d)

  \(\frac { 1 }{ 8 } -0=\frac { 1 }{ 8 } \)

 6. 7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  (a)

  14p12

  (b)

  28p7

  (c)

  9p

  (d)

  11p12

 7. -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

  (a)

  mn2,27

  (b)

  m2n,27

  (c)

  m2n2,-27

  (d)

  mn2,-27

 8. சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  (a)

  6x4y2

  (b)

  8x2y2

  (c)

  6x2y

  (d)

  -6x2y

 9. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  (a)

  6mn

  (b)

  8m2n

  (c)

  7m2n2

  (d)

  6m2n2

 10. ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.

  (a)

  a-b

  (b)

  a+b

  (c)

  a2-b

  (d)

  (a+b)2

 11. இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  (a)

  குறுங்கோணங்களைப்

  (b)

  விரிகோணங்களைப்

  (c)

  செங்கோணங்களைப்

  (d)

  பொருத்தமானக் கோணங்களைப்

 12. முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்

  (a)

   ∠Q= ∠Y

  (b)

   ∠P= ∠X

  (c)

   ∠Q= ∠X

  (d)

   ∠P= ∠Z

 13. 15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  (a)

  90 மீ

  (b)

  91 மீ

  (c)

  92 மீ

  (d)

  93 மீ

 14. ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  (a)

  50°

  (b)

  60°

  (c)

  70°

  (d)

  80°

 15. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

  (a)

  AB = BD

  (b)

  BD < CD

  (c)

  AC = CD

  (d)

  BC = CD

 16. மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  (a)

  6

  (b)

  8

  (c)

  3

  (d)

  2

 17. மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன ?

  (a)

  4

  (b)

  3

  (c)

  12

  (d)

  64

 18. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.

  (a)

  10%

  (b)

  15%

  (c)

  20%

  (d)

  30%

 19. ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்

  (a)

  48%

  (b)

  49%

  (c)

  50%

  (d)

  45%

 20. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்

  (a)

  64

  (b)

  56

  (c)

  42

  (d)

  36

 21. ஒரு பெண் பூச்சட்டி ஒன்றை  Rs.528இக்கு விற்று 20% இலாபம் பெறுகிறாள். அவள் 25% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

  (a)

  Rs.500

  (b)

  Rs.550

  (c)

  Rs.553

  (d)

  Rs.573

 22. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டா ல், Rs.4400 ஆனது Rs.4851 ஆக _______ ஆகும்.

  (a)

  6 மாதங்கள்

  (b)

  1 ஆண்டு

  (c)

  1\(\frac { 1 }{ 2 } \)ஆண்டுகள்

  (d)

  2 ஆண்டுகள்

 23. (a) \(\frac { x }{ 2 } \)=10     (i) x = 4
  (b) 20= 6x – 4   (ii) x = 1
  (c) 2x – 5 = 3 – x  (iii) x = 20
  (d) 7x – 4 – 8x = 20  (iv) x =\(\frac { 8 }{ 3 } \)
  (e) \(\frac { 4 }{ 11 } \)- x = \(\frac { -7 }{ 11 } \)   (v) x = –24

  (a)

  (i),(ii), (iv) ,(iii),(v)

  (b)

  (iii), (iv) , (i) ,(ii), (v)

  (c)

  (iii),(i) ,(iv), (v), (ii)

  (d)

  (iii), (i), (v), (iv), (ii)

 24. ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.

  (a)

  15

  (b)

  20

  (c)

  25

  (d)

  40

 25. ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு Rs.500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

  (a)

  50,000

  (b)

  30,000

  (c)

  10,000

  (d)

  5,000

 26. Δ GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் ㄥTUG என்பது __________ ஆகும்.

  (a)

  300

  (b)

  400

  (c)

  450

  (d)

  550

 27. ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5: 12: 13 மற்றும் அதன் சுற்றளவு 120 அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.

  (a)

  25, 36, 59

  (b)

  10, 24, 26

  (c)

  36, 39, 45

  (d)

  20, 48, 52

 28. பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு __________ ஆவது உறுப்பும் 8இன் மடங்கு ஆகும்.

  (a)

  2 வது 

  (b)

  4 வது 

  (c)

  6 வது 

  (d)

  8 வது 

 29. இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி_____ எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.

  (a)

  2

  (b)

  3

  (c)

  0

  (d)

  1

 30. கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

  (a)

  C R D T

  (b)

  A P B Q

  (c)

  E U F V

  (d)

  G W H X

 31. கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

  (a)

  H K N Q

  (b)

  I L O R

  (c)

  J M P S

  (d)

  A D G J

 32. கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
  D ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘P H O N E ’ என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?

  (a)

  S C G N H

  (b)

  V R G N G

  (c)

  U D G L R

  (d)

  S D H K Q

 33. Part - B

  23 x 2 = 46
 34. –2 ஐ விட குறைவாக உள்ள 5 விகிதமுறு எண்களை எழுதுக.

 35. பின்வரும் விகிதமுறு எண்களை ஒப்பிடுக.
  \(\frac { 3 }{ -4 } ,\frac { -1 }{ 2 } \)

 36. p + 2q = 18 மற்றும் pq = 40 எனில், \(\frac { 2 }{ p } +\frac { 1 }{ q } \) மதிப்பைக் காண்க

 37. பின்வரும் படங்களில் நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவைக் காண்க. ( π = 3.14 )

 38. ஒவ்வொன்றும் 6 செ.மீ. விட்டமுள்ள மூன்று ஒத்த நாணயங்கள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. நாணயங்களுக்கு இடையில் அடைபட்டுள்ள நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவைக்
  (π=3.14)(√3=1.732)

 39. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.−2m2, (−5m)3

 40. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.2p2q3,-9pq2

 41. விரிவாக்குக (48)3

 42. படத்திலிருந்து, ΔSUN~ΔRAY என நிரூபி.

 43. நாற்க ரம் YOGA, YO = 6 செ.மீ, OG = 6 செ.மீ, ∠O = 55°, ∠G = 35° மற்றும் ∠A = 100o

 44. ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட  தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை  கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 45. சாந்தியிடம் 5 சுடிதார்களும் 4 கவுன்களும் உள்ளன எனில், எத்தனை விதமான வழிகளில் சாந்தி ஒரு சுடிதாரையோ அல்லது ஒரு கவுனையோ அணிவதற்கு வாய்ப்புகள் உள்ளது?

 46. 100மீ ஓட்டம் மற்றும் 4 ×100மீ தொடர் ஓட்டம் போன்ற தடகளப் போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியிலும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற கள விளையாட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியிலும் மாணவர்கள் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுமெனில் விளையாட்டு நாளன்று நடைபெறும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஒரு மாணவருக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 47. எந்த கூட்டு வட்டி வீ்தத்தில், Rs.5625 ஆனது 2 ஆண்டுகளில் Rs.6084 ஆக மாறும்?

 48. சுல்தானா, ஒரு பொது அங்காடியில் பின்வரும் பொருள்களை வாங்கினார். அவர் செலுத்த
  வேண்டிய மொத்த இரசீதுத் தொகையை க் கணக்கிடுக.
  (i) 5% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.800 மதிப்பிலான மருந்துகள்
  (ii) 12% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.650 மதிப்பிலான அழகு சாதனப் பொருள்கள் 
  (iii) 0% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.900 மதிப்பிலான தானியங்கள் 
  (iv) 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.1750 மதிப்பிலான கருப்புக் கண்ணாடி 
  (v) 28% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.28500 மதிப்பிலான காற்றுப் பதனி (AC) 

 49. ஓர் அசலானது கூட்டு வட்டி முறையில், 2 ஆண்டுகளில் Rs.18000 ஆகவும், 4 ஆண்டுகளில்
  Rs.40500 ஆகவும் ஆகிறது எனில், அசலைக் காண்க.

 50. ஒரு பின்னத்தின் பகுதியானது தொகுதியை விட 8 அதிகம் ஆகும். அப்பின்னத்தில் தொகுதியின் மதிப்பு 17 அதிகரித்து பகுதியின் மதிப்பு 1 ஐக் குறைத்தால் \(\frac { 3 }{ 2 } \) என்ற பின்னம் கிடைக்கிறது எனில், முதலில் எடுத்துக் கொண்ட உண்மையான பின்னம் யாது?

 51. (-3,7) (2,-4) மற்றும் (4,6) (-5,-7) என்ற சோடிப் புள்ளிகளை இணைத்து உருவாகும் கோடுகள் சந்திக்கும் புள்ளியைக் காண்க. மேலும் நேர்க்கோடுகள் ஆய அச்சுகளைச் சந்திக்கும் புள்ளிகளையும் காண்க.

 52. படத்தில் வானூர்திக்கும் கப்பலுக்கும் இடையே உள்ள தூரத்தைக் காண்க.

 53. படத்தில், ஒரு கம்பத்தினைத் தரையுடன் நிலை நிறுத்தத் தேவையான கம்பியின் நீளம் என்ன?

 54. குறிப்புஎண் = 4 (key=4) எனக் கொண்ட அடிடிவ் மறைகுறியீடு அட்டவணையினை (Additive cipher table) உருவாக்கவும்.

 55. கொடுக்கப்பட்ட எண்களுக்குத் தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
  184, 230 மற்றும் 276

 56. கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் கழித்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
  1014 மற்றும் 654

 57. Part - C

  13 x 3 = 39
 58. பின்வரும் விகிதமுறு எண்களை இறங்கு வரிசை மற்றும் ஏறு வரிசையில் எழுதுக.
  \(\frac { -3 }{ 5 } ,\frac { 7 }{ -10 } ,\frac { -15 }{ 20 } ,\frac { 14 }{ -30 } ,\frac { -8 }{ 15 } \)

 59. இரு விகிதமுறு எண்களின் பெருக்கற்பலன்\(\frac { -2 }{ 3 } \) ஆகும். ஓர் எண் \(\frac { 3 }{ 7 } \)எனில் மற்றோர் எண்ணைக் காண்க.

 60. பிரதீப், தனது வீட்டின் நுழைவாயிலில், படம் 2.19 இல் உள்ளவாறு மூன்று சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்ட அரைவட்ட வடிவிலான வளைவினை, இரும்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி அமைக்க விரும்புகிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இரும்புச் சட்டத்தின் நீளத்தையும், கண்ணாடி பொருத்துவதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியின் பரப்பளவையும் காண்க

 61. ஒரு செவ்வக வடிவ ஓவியத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 4xy3 மற்றும் 3x2y எனில், அதன் பரப்பளவைக் காண்க.

 62. (கோ  - கோ வடிவொத்தப் பண்பை விளக்குகிறது)
  கொடுக்கப்பட்டுள்ள படம் இல்
  ∠1≡∠3 மற்றும் ∠2≡∠4 எனில், ΔBIG ~ ΔFAT. என நிறுவுக. மேலும் FA ஐக் காண்க

 63. (ப-ப-ப மற்றும் ப-கோ-ப சர்வசமப் பண்புகளை விளக்குகிறது)
  படம இல் ∠E=∠S மற்றும் ES இன் மையப்புள்ளி G எனில், ΔGET ≡ Δ GST.

 64. பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு , பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியருக்குத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

 65. மதன் ஒரு புதிய மகிழுந்து (car) வாங்க விரும்புகிறார். அவருக்குக் கீழ்க்கண்டத் தெரிவுகள் (choice) உள்ளன. படம் 5.12-இல் கொடுக்கப்பட்டுள்ளது போன்று 

  (1) இரண்டு வகையான மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
  (2) ஒவ்வொரு வகையிலும் 5 வண்ணங்கள் கொண்ட மகிழுந்துகள் இருப்பில் உள்ளது
  ஒவ்வொரு வகையிலும்
  (i) GL (நிலையான ரகம்)
  (ii) SS (விளையாட்டு ரகம்)
  (iii) SL (சொகுசு  ரகம் ) என 3 விதமான ரகத்தில் மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
  (i)கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
  (ii) இரண்டாவது வகை மகிழுந்தில் வெள்ளை வண்ண மகிழுந்து இல்லையென்ற நிலையில், பிறவாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 66. ஒரு நகரத்தின் மக்கள்தொகை, ஓர் ஆண்டில் 20000 இலிருந்து 25000 ஆக அதிகரித்துள்ளது  எனில், மக்கள்தொகை அதிகரிப்புச் சதவீதத்தைக்  காண்க.

 67. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், தேர்வின் மொத்த  மதிப்பெண்களைக் காண்க.

 68. A (2,5) B(–5, –2) மற் றும் M(–5,4) N(1,–2) என்ற புள்ளிகளை இணைத்து நேர்க்கோடுகள் வரைக. மேலும் அவ்விரு நேர்க்கோடுகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளியைக் காண்க.

 69. Δ ABC என்பது ஒரு சமபக்க முக்கோணம் மற்றும் செங்கோண முக்கோணம் BCD இல், CD ஆனது 8 செ.மீ எனில், சமபக்க Δ ABC இன் பக்கம் மற்றும் BD ஐக் காண்க.

 70. சீசர் மறைகுறியீடு +4 அட்டவணை தொகுப்பைப் பயன்படுத்தி மறைந்துள்ள இரகசிய வாக்கியத்தைக் காண்க .
  fvieo mr gshiw ger fi xvmgoc

 71. Part - D

  8 x 5 = 40
 72. ஒரு 3 மடிப்பு அழைப்பிதழ் அட்டையானது படம் 2.32 இல்
  உள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ளது. அதன் பரப்பளவைக் காண்க.

 73. காரணிப்படுத்துக: 81x3-3y3

 74. PQ=QR= 5 செ.மீ, ∠QPR = 50o, ∠PRS = 40o மற்றும் ∠RPS = 80o ஆகிய அளவுகளைக் கொண்ட PQRS என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

 75. பட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.

 76. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டு வட்டியைக் காண்க.
  (i) அசல் = Rs.4000, ஆண்டு வட்டி வீ்தம் r = 5%, n=2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி
  கணக்கிடப்படுகிறது.
  (ii) அசல் = Rs.5000, ஆண்டு வட்டி வீ்தம் r = 4%, n = 1\(\frac { 1 }{ 2 } \) ஆண்டுகள், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது..
  (iii) அசல் = Rs.10000, ஆண்டு வட்டி வீ்தம் r=8%, n=2\(\frac { 3 }{ 4 } \) ஆண்டுகள், காலாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்படுகிறது.
  (iv) அசல் = Rs.30000 முதலாம் ஆண்டு வட்டி வீதம், r=7% இரண்டாம் ஆண்டு வட்டி வீதம் r=8% ஆண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்படுகிறது.

 77. ஒரு பேருந்தில் உள்ள 56 பயணிகளில் சில பேர் Rs.8 இக்கான பயணச் சீட்டையும், மீதி உள்ளவர்கள் Rs.10 இக்கான பயணச்சீட்டையும் பெற்று உள்ளனர் . பயணிகளிடம் இருந்து பயணச்சீட்டு கட்டணமாக Rs.500 பெறப்பட்டுள்ளது எனில், ஒவ்வொரு பயணச் சீட்டு வகையிலும் எத்தனை பயணிகள் உள்ளனர் எனக் காண்க.

 78. \(\overset { \_ \_ }{ CA } \) இணை \(\overset { \_ \_ }{ DR } \), CA = 9 செ.மீ, ㄥCAR = 700 , AR = 6 செ.மீ மற்றும் CD = 7 செ.மீ அளவுகளைக் கொண்ட CARD என்ற சரிவகம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

 79. 144 மற்றும் 120இன் மீப்பெரு பொதுக்காரணியினைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் ( 8th Standard Maths Important Questions with Answer key )

Write your Comment