" /> -->

தகவல் செயலாக்கம் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  (a)

  6

  (b)

  8

  (c)

  3

  (d)

  2

 2. மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன ?

  (a)

  4

  (b)

  3

  (c)

  12

  (d)

  64

 3. 7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

  (a)

  10

  (b)

  18

  (c)

  19

  (d)

  20

 4. 4 x 2 = 8
 5. மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது?

 6. பள்ளி மாணவர்களுக்கான நான்கு இலக்க வரிசை எண்ணில், முதல் இலக்கம் A, B, C, D மற்றும் E என்ற ஐந்து எழுத்துக்களில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டும் அமைந்துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 7. ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட  தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை  கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 8. கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவா று வண்ணமிடுக.

 9. 3 x 3 = 9
 10. ஒரு பகடையை  ஒரு முறை உருட்டும் போது  எத்தனை விதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன?

 11. மதன் ஒரு புதிய மகிழுந்து (car) வாங்க விரும்புகிறார். அவருக்குக் கீழ்க்கண்டத் தெரிவுகள் (choice) உள்ளன. படம் 5.12-இல் கொடுக்கப்பட்டுள்ளது போன்று 

  (1) இரண்டு வகையான மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
  (2) ஒவ்வொரு வகையிலும் 5 வண்ணங்கள் கொண்ட மகிழுந்துகள் இருப்பில் உள்ளது
  ஒவ்வொரு வகையிலும்
  (i) GL (நிலையான ரகம்)
  (ii) SS (விளையாட்டு ரகம்)
  (iii) SL (சொகுசு  ரகம் ) என 3 விதமான ரகத்தில் மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
  (i)கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
  (ii) இரண்டாவது வகை மகிழுந்தில் வெள்ளை வண்ண மகிழுந்து இல்லையென்ற நிலையில், பிறவாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 12. சரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?

 13. 2 x 5 = 10
 14. உங்களிடத்தில், 3 நீலவண்ணச் சதுரவில்லைகளும்  3 பச்சை வண்ணச் சதுரவில்லைகளும்  மற்றும் 3 சிவப்பு வண்ணச் சதுரவில்லைகளும்  உள்ளன எனில் , இவற்றைக் கொண்டு அடுத்தடுத்த இருச்சதுரவில்லைகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு அனைத்து விலைகளையும் ஒருமுறைப் பயன்படுத்திச் சதுரவடிவில் பொருத்தவும்.

 15. பட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் - தகவல் செயலாக்கம் Book Back Questions ( 8th Standard Maths - Information Processing Book Back Questions )

Write your Comment