This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

3rd Term Data Handling Complete Material

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80
    10 x 2 = 20
  1. பின்வரும் விவரங்களுக்கு ஒரு நிகழ்வெண் பட்டியல் தயார் செய்க:
    15, 17, 17, 20, 15, 18, 16, 25, 16, 15,
    16, 18, 20, 28, 30, 27, 18, 18, 20, 25,
    16, 16, 20, 28, 15, 18, 20, 20, 20, 25.

  2. ஒரு தேர்வில் 100 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு நிகழ்வுச் செவ்வகம் வரையவும்.

    மதிப்பெண்கள் 0-10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70 70-80
    மாணவர்களின்
    எண்ணிக்கை
    5 10 15 20 25 12 8 5
  3. கீழே கொடுக்கப்பட்ட பரவலுக்கு ஒரு நிகழ்வுச் செவ்வகம் வரைந்து அதன் மீது ஒரு நிகழ்வுப் பலகோணம் அமைக்கவும்.

    பிரிவு
    இடைவெளி
    10-20 20-30 30-40 40-50 50-60 60-70 70-80 80-90
    நிகழ்வெண் 4 6 8 10 12 14 7 5
  4. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகத்தைப் பயன்படுத்தாமல், நிகழ்வுப் பலகோணம் வரைக.

    பிரிவு
    இடைவெளி
    10-20 20-30 30-40 40-50 50-60 60-70 70-80 80-90
    நிகழ்வெண் 4 6 8 10 12 14 7 5
  5. பின்வரும் அட்டவணையில் ஒரு குடும்பத்தில் மாத வரவு, செலவு விவரங்கள் தரப்பட்டுள்ளன.

    விவரங்கள் உணவு வீட்டு வாடகை உடை கல்வி சேமிப்பு  இதர
    செலவுகள்
    செலவுகள் (ரூபாயில்  ) 4800          

    கோண அளவைப் பயன்படுத்தி மேற்கண்ட விவரங்களுக்கு ஒரு வட்ட விளக்கப்படம் வரைக.

  6. ஒரு தேர்வில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78, 11 எனில், இதன் கூட்டுச் சராசரியைக் காண்க

  7. ஒரு வகுப்பிலுள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும்போது ஒரு மதிப்பு 150 செ.மீ.க்கு பதிலாக 160 செ.மீ. என்று குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரத்தைக் காண்க.

  8. 17, 15, 9, 13, 21, 7, 32 ஆகியவற்றின் இடைநிலை காண்க.

  9. 22, 25, 21, 22, 29, 25, 34, 37, 30, 22, 29, 25 ஆகியவற்றின் முகடு காண்க.

  10. பின்வரும் நிகழ்வெண் பட்டியலுக்கு முகடு காண்க

    கூலி 250 300 350 400 450 500
    தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 15 16 12 11 13
  11. 20 x 3 = 60
  12. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு ஒரு நிகழ்வுச் செவ்வகம் வரைக.

    பிரிவு இடைவெளி  0-10 10-20 20-30 30-40 40-50 50-60
    நிகழ்வெண்  8 12 6 14 10 5
  13. ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில் பார்வையாளர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரு நிகழ்வுச் செவ்வகம் வரையவும்.

    வயது (ஆண்டுகளில்) 10-19 20-29 30-39 40-49 50-59 60-69
    பார்வையாளர்களின்
    எண்ணிக்கை
    4 6 12 10 8 2
  14. பின்வரும் அட்டவணையில் அறிவுக்கூர்மைத் தேர்வு எழுதிய 150 போட்டியாளர்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

    அறிவுக்கூர்மை விகிதம் 55-70 70-85 85-100 100-115 115-130 130-145
    போட்டியாளர்களின் எண்ணிக்கை 20 40 30 35 10 15
  15. கீழ்க்கண்ட விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகத்தைப் பயன்படுத்தாமல் நிகழ்வுப் பலகோணம் அமைக்கவும்.

    பிரிவு இடைவெளி  30-34 35-39 40-44 45-49 50-54 55-59
    நிகழ்வெண்  12 16 20 8 10 4
  16. எட்டாம் வகுப்பில் 36 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளனர்.

    அமைப்புகள் கணக்கு N.C.C J.R.C சாரணர்
    மாணவர்களின் எண்ணிக்கை 12 6 10 8

    மேற்கண்ட விவரங்களை ஒரு வட்ட விளக்கப் படத்தில் காண்பிக்கவும்.

  17. ஒரு பள்ளியில் வெவ்வேறு வகைப் bghGJ போக்கில் ஈடுபடும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விவரங்களுக்கு ஒரு வட்ட விளக்கப்படம் வரைக

    பொழுதுபோக்கு இசை மண் பொம்மை
    செய்தல்
    நடனம் நாடகம் சமூக
    நலப்பணி
    மாணவர்களின் எண்ணிக்கை 20 25 27 28 20
  18. ஒரு புத்தக வெளியீட்டாளரால் புத்தகம் ஒன்றுக்குச் செலவு செய்யப்பட்ட தொகைக்கான விவரம் பின்வருமாறு:

    விவரங்கள் தாள் அச்சிடல் கட்டமைப்பு விளம்பரம் உரிமை
    செலவு செய்யப்பட்ட தொகை(ரூபாயில்) 25 12 6 9 8

    மேற்கண்ட விவரங்களுக்கு ஒரு வட்ட விளக்கப்படம் வரைக.

  19. ஓர் உணவுப்பொருளில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு உள்ளன. கீழ்க்கண்ட விவரங்களை ஒரு வட்ட விளக்கப்படத்தில் வரைக.

    சத்துப்
    பொருட்கள்
    புரதம் கொழுப்பு கார்போ
    ஹைட்ரேட்
    வைட்டமின் தாது
    உப்பு
    சதவீதம் 30 10 40 15 5
  20. ஒரு பள்ளிக்கு மாணவர்கள் வருகை தரும் போக்குவரத்து முறை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன

    போக்குவரத்து
    முறை
    பேருந்து மிதிவண்டி நடந்து
    வருதல்
    ஸ்கூட்டர்
    கார்
    மாணவர்கள் சதவீதம் 40 30 15 10 5

    இதை ஒரு வட்ட விளக்கப்படத்தின் உதவியுடன் குறிக்கவும் 

  21. திரு. இராஜன் பாபு தன் வருமானத்தில் 20% ஐ வீட்டு வாடகைக்காகவும், 30ரூ ஐ உணவுக்காகவும், 10% ஐ தன் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் செலவழிக்கின்றார். 25% ஐச் சேமிக்கின்றார். எஞ்சியதை மற்ற செலவினங்களுக்கா கச் செலவு செய்கிறார். இவற்றை விளக்க ஒரு வட்ட விளக்கப்படம் வரைக.

    வரவு செலவு திட்டம் வீட்டு வாடகை உணவு குழந்தைகளின் கல்விச் செலவு சேமிப்பு மற்ற செலவினங்கள்
    சதவீதம் 20% 30% 10% 25% 15%
  22. கூட்டுச் சராசரி காணவும் 2, 4, 6, 8, 10 , 12, 14, 16.

  23. ஒரு வகுப்பில் உள்ள 20 மாணவர்களின் சராசரி உயரம் 160 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 152 செ.மீ என்பதை 132 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்தது. சரியான சராசரி உயரம் காணவும்.

  24. ஒரு தொழிற்சாலையிலுள்ள 12 தொழிலாளர்களின் எடைகள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் சராசரி எடையைக் காணவும்

    எடைகள் (கி.கி.) 60 64 68 70 72
    தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 4 2 2 1
  25. பின்வரும் மதிப்புகளுக்கு இடைநிலை காண்க.
    83, 66, 86, 30, 81.

  26. 43 தொழிலாளர்களின் மாதச் சம்பளம் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இடைநிலை அளவைக் காண்க.

    மாதச் சம்பளம்(ரூபாயில்) 4000 5500 6000 8250 10,000 17,000 25,000
    தொழிலாளர்களின் எண்ணிக்கை 7 5 4 3 13 8 3
  27. பின்வரும் விவரங்களுக்கு முகடு காணவும்.
    43, 36, 27, 25, 36, 66, 20, 25.

  28. பின்வரும் விவரங்களுக்கு முகடு காண்க

    வெப்பநிலை oC 29 32.4 34.6 36.9 38.7 40
    நாட்களின் எண்ணிக்கை 7 2 6 4 8 3
  29. பின்வரும் நிகழ்வெண் அட்டவணைக்குக் கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு மற்றும் முகடு காண்க

    வயது (ஆண்டுகளில்) 19 21 23 25 27 29 31
    ஆள்களின் எண்ணிக்கை 13 15 20 18 16 17 13

    இவற்றின் கூட்டுச் சராசரி, இடைநிலை மற்றும் முகடு காண்க.

  30. பின்வரும் மதிப்புகளுக்கு இடைநிலை காண்க.
    45, 49, 46, 44, 38, 37, 55, 51.

  31. பின்வரும் மதிப்புகளுக்கு இடைநிலை காண்க.
    51, 55, 46, 47, 53, 55, 51, 46.

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 விவரங்களைக் கையாளுதல் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Maths Term 3 Data Handling Chapter Important Questions and Answers )

Write your Comment