" /> -->

முக்கிய வினாவிடைகள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    Part - A

    58 x 1 = 58
  1. பொருளின் அளவு என்பது

    (a)

    அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்

    (b)

    அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்தகவில் இருக்கும்

    (c)

    அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்

    (d)

    அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்தகவில் இருக்கும்

  2. SI அலகு என்பது

    (a)

    பன்னாட்டு அலகு முறை

    (b)

    ஒருங்கிணைந்த அலகு முறை

    (c)

    பன்னாட்டு குறியீட்டு முறை

    (d)

    ஒருங்கிணைந்த குறியீட்டு முறை

  3. மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

    (a)

    98.4o F மற்றும் 99.6o F

    (b)

    98.4o F மற்றும் 98.6o F

    (c)

    97.4F மற்றும் 98.6F

    (d)

    97.6o F மற்றும் 99.6o F

  4.  ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

    (a)

    ஒளிபாயம் 

    (b)

    ஒளித்திறன் 

    (c)

    ஒளிச்செறிவு

    (d)

    (அ) அல்லது (ஆ) சரி 

  5. மின்னூட்டத்தின் அலகு

    (a)

    கூலும் 

    (b)

    ஆம்பியர் 

    (c)

    ரேடியன்

    (d)

    ஸ்ட்ரேடியன்

  6. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது

    (a)

    திரவத்தின் அடர்த்தி

    (b)

    திரவத்தம்ப உயரம்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  7. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.

    (a)

    நீரியல் உயர்த்தி

    (b)

    தடை செலுத்தி (பிரேக்)

    (c)

    அழுத்தப்பட்ட பொதி

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  8. எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை 

    (a)

    அழுத்தம்

    (b)

    உந்துவிசை

    (c)

    அடர்த்தி

    (d)

    பருமன்

  9. தொடுபரப்பு அதிகமாக இருந்தால் _________ அதிகமாக இருக்கும்

    (a)

    அழுத்தம் 

    (b)

    வெப்பநிலை 

    (c)

    உராய்வு 

    (d)

    விசை

  10. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு_______ எனப்படும்.

    (a)

    வளைவு மையம்

    (b)

    ஆடிமையம்

    (c)

    முதன்மை அச்சு

    (d)

    வளைவு ஆரம்

  11. பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____

    (a)

    ஈறிலாத் தொலைவு

    (b)

    F ல்

    (c)

    F க்கும் P க்கும் இடையில்  

    (d)

    C ல்

  12. ஒரு பொருளின் சரியான பிம்பத்தினை உருவாக்குவது

    (a)

    கோளக ஆடிகள்

    (b)

    பரவளைய ஆடிகள்

    (c)

    சமதள ஆடிகள்

    (d)

    உருளை ஆடிகள்

  13. கண்ணாடிகளுக் கிடைப்பட்ட கோணத்தின் மதிப்பைக் குறைக்கும் போது  தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை 

    (a)

    அதிகரிக்கும் 

    (b)

    குறையும் 

    (c)

    மாற்றம் இருக்காது 

    (d)

    எதுவும் இல்லை 

  14. கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது?

    (a)

    நைட்ரஜன்

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    குளோரின்

    (d)

    கார்பன்

  15. பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

    (a)

    வெள்ளி

    (b)

    தாமிரம்

    (c)

    துத்தநாகம்

    (d)

    அலுமினியம்

  16. ஒரு தனிமத்தில் உள்ள மிகச் சிறிய துகள்

    (a)

    அணு

    (b)

    மூலக்கூறு

    (c)

    சேர்மம்

    (d)

    கலவை

  17. தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்

    (a)

    கனிமச் சேர்மங்கள்

    (b)

    கரிமச் சேர்மங்கள் 

    (c)

    தொகுப்பு சேர்மங்கள் 

    (d)

    செயற்கை சேர்மங்கள்

  18. பிரைன் என்பது ______ இன் அடர் கரைசல் ஆகும்.

    (a)

    சோடியம் சல்பேட்

    (b)

    சோடியம் குளோரைடு

    (c)

    கால்சியம் குளோரைடு

    (d)

    சோடியம் புரோமைடு

  19. _____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

    (a)

    கார்பன் டை ஆக்சைடு

    (b)

    மீத்தேன்

    (c)

    குளோரோ புளோரோ கார்பன்கள்

    (d)

    இவை அனைத்தும்

  20. இரும்பு துருப்பிடித்தல் ஒரு  _________ மாற்றம்.

    (a)

    இயற்பியல்

    (b)

    வேதியியல்

    (c)

    இயற்பியல் & வேதியியல்

    (d)

    நடுநிலை

  21. மின்சாரத்தை செலுத்தி நடைபெறும் வேதிவினை

    (a)

    துருப்பிடித்தல்

    (b)

    வெப்பச்சிதைவு வினை

    (c)

    மின்னாற்பகுத்தல் வினை

    (d)

    ஒளி வேதி வினை

  22. நறுக்கிய ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுதல்

    (a)

    துருப்பிடித்தல்

    (b)

    ஊசிப்போதல்

    (c)

    பழுப்பாதல்

    (d)

    நொதித்தல்

  23. நுண்ணுயிரிகள்_________ ஆல் அளவிடப்படுகின்றன.

    (a)

    செமீ

    (b)

    மிமீ

    (c)

    மைக்ரான்

    (d)

    மீட்டர்

  24. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை________ 

    (a)

    புரோட்டோசாவா 

    (b)

    வைரஸ்

    (c)

    பாக்டீரியா

    (d)

    பூஞ்சை

  25. ________ ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரியாகும்.

    (a)

    வைரஸ்

    (b)

    ஆல்கா 

    (c)

    பூஞ்சை 

    (d)

    பாக்டீரியா

  26. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில்______ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  27. ஆல்காவின் தாவர உடலம் ________  என அழைக்க ப்படுகிறது.

    (a)

    தண்டு

    (b)

    தாலஸ்

    (c)

    இலை

    (d)

    வேர்

  28. உண்ண த் தகுந்த காளான்

    (a)

    பாலிபோரஸ்

    (b)

    அகாரிகஸ்

    (c)

    பெனிசிலியம்

    (d)

    அஸ்பர் ஜில்லஸ்

  29. நன்கு வளர்ச்சியடை ந்த ஸ்போரோபைடிக் தாவர உடலம் காணப்படுவது.

    (a)

    பிரையோ ஃபைட்டுகள்

    (b)

    டெரிடோ ஃபைட்டுகள்

    (c)

    ஜிம்னோஸ்பெர்ம்கள்

    (d)

    ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

  30. மிகவும் பழமையான வகைப்பாட்டு முறை _________ 

    (a)

    செயற்கை வகைப்பாட்டு முறை

    (b)

    இயற்கை வகைப்பாட்டு முறை.

    (c)

    மரபு வழி வகைப்பாட்டு முறை 

    (d)

    நவீன வகைப்பாட்டு முறை

  31. உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் என்ப து __________ எனப்படும்.

    (a)

    ஹோமியோஸ்டாஸிஸ்  (அ) தன்னிலை காத்தல்

    (b)

    ஹோமியோபைட்ஸ் 

    (c)

    ஹோமியோஹைனசிஸ் 

    (d)

    ஹோமியோவிலிக்ஸ் 

  32. காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ________ ஐக் கொடுக்கும்

    (a)

    லாக்டிக் அமிலம்

    (b)

    சிட்ரிக் அமிலம்

    (c)

    அசிட்டிக் அமிலம்

    (d)

    நைட்ரிக் அமிலம்

  33. _______செல்கள் என்ப து சிறப்பு வாய்ந்த செல்களாகும். அவை உடலின் எந்த செல்லா கவும் மாற இயலும்.

    (a)

    நரம்பு

    (b)

    மூல

    (c)

    இதய

    (d)

    எலும்பு

  34. ________ திசுக்கள் நரம்புத் தூண்டல்களை கடத்துகிறது.

    (a)

    இணைப்பு

    (b)

    எபீதீலியத்

    (c)

    நரம்பு

    (d)

    தசைத்

  35. கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

    (a)

    மார்டின் லுதர் கிங்

    (b)

    கிரகாம் பெல்

    (c)

    சார்லி சாப்ளின்

    (d)

    சார்லஸ் பாப்பேஜ்

  36. ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.

    (a)

    சேமிப்பகம்

    (b)

    செயற்கையான நுண்ணறிவு 

    (c)

    ஒருங்கிணைந்த சுற்று.

    (d)

    வெளியீட்டு

  37. பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டு_________ 

    (a)

    வரைதல் கருவிகள் 

    (b)

    வரைகலை அட்டை 

    (c)

    மந்திர சபை 

    (d)

    RAM

  38. நான்காம் தலைமுறை கணினியில் உபயோகப்படுத்தப்பட்ட கூறு_________ 

    (a)

    ஒருங்கிணைந்த சுற்று 

    (b)

    செயற்கையான நுண்ணறிவு

    (c)

    வெற்றிடக் குழாய் 

    (d)

    நுண்செயலி 

  39. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?

    (a)

    விரிவடைதல்

    (b)

    வெப்பநிலை உயர்வு

    (c)

    நிலைமாற்றம்

    (d)

    அனைத்தும்

  40. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

    (a)

    பதங்கமாதல்

    (b)

    குளிர்வித்தல்

    (c)

    உறைதல்

    (d)

    படிதல்

  41. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

    (a)

    நியூட்ரான்கள்

    (b)

    புரோட்டான்கள்

    (c)

    எலக்ட்ரான்கள்

    (d)

    புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

  42. ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

    (a)

    நேர் மின்னூட்டம்

    (b)

    எதிர் மின்னூட்டம்

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    எதுவும் இல்லை 

  43. மின் உருகி என்பது ஒரு

    (a)

    சாவி

    (b)

    குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

    (c)

    அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

    (d)

    மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

  44. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    முழுமையாக எரியும் வாயு

    (b)

    பகுதியளவு எரியும் வாயு

    (c)

    எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

    (d)

    எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

  45. கார்பன்டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

    (a)

    நீலலிட்மசை சிவப்பாக

    (b)

    சிவப்பு லிட்மசை நீலமாக

    (c)

    ஊதா லிட்மசை மஞ்சளாக

    (d)

    லிட்மசுடன் வினை புரிவதில்லை

  46. அசோட் எனப்படுவது எது?

    (a)

    ஆக்சிஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    சல்பர் 

    (d)

    கார்பன் டை ஆக்சைடு

  47. நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

    (a)

    1: 8

    (b)

    8: 1

    (c)

    2: 3

    (d)

    1: 3

  48. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

    (a)

    அணுவைப் பிளக்க முடியாது

    (b)

    அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.

    (c)

    தனிமங்கள் அணுக்களால் ஆனவை 

    (d)

    ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

  49. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?

    (a)

    நாய்

    (b)

    நத்தை

    (c)

    மண்புழு

    (d)

    மனிதர்

  50. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

    (a)

    கழுத்தெலும்பு -7

    (b)

    மார்பெலும்பு -10

    (c)

    இடுப்பு எலும்பு - 4

    (d)

    வால் எலும்பு – 4

  51. _________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.

    (a)

    எலும்பு

    (b)

    எலும்புக்கூடு

    (c)

    தசை

    (d)

    மூட்டுகள்

  52. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.

    (a)

    வியர்வை

    (b)

    எண்ணெய்

    (c)

    வியர்வை மற்றும் எண்ணெய்

    (d)

    எதுவுமில்லை

  53. விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது

    (a)

    ஆண்குறி

    (b)

    அண்டகம்

    (c)

    கருப்பை

    (d)

    விந்தகங்கள்

  54. நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.

    (a)

    ஹார்மோன்கள்

    (b)

    நொதிகள்

    (c)

    புரதங்கள்

    (d)

    கொழுப்பு அமிலங்கள்

  55. மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    நின்றுவிடுகிறது

    (d)

    இயல்பாக உள்ளது

  56. நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

    (a)

    பொட்டாசியம்

    (b)

    பாஸ்பரஸ்

    (c)

    இரும்பு

    (d)

    கால்சியம்

  57. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

    (a)

    Ctrl + Z

    (b)

    Ctrl + R

    (c)

    Ctrl + Y

    (d)

    Ctrl + N

  58. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

    (a)

    வண்ணம் தீட்ட

    (b)

    கணிதம் கற்க

    (c)

    நிரல் பற்றி அறிய

    (d)

    வரைகலையைக் கற்க

  59. Part - B

    34 x 2 = 68
  60. அணுக்கடிகாரங்களில் பயன்படும் அலைவுகளின் வகை என்ன?

  61. ஒரு நிமிட நேரத்தில் எத்தனை மணிகள் உள்ளன?

  62. மெட்ரிக் அலகு முறைகள் யாவை?

  63. ஒரு கல்லின் எடை 500N எனில் 25 செ.மீ2 பரப்புடைய தளத்தில் கல்லினால் ஏற்படும் அழுத்த்தை கணக்கிடுக.

  64. எண்ணெய் அல்லது தேன் இவற்றில் அதிக பாகுநிலை கொண்டது எது? ஏன்?.

  65. சுமோ வீரர்களும், கபடி வீரர்களும் தங்களது கைகளை மணலில் தேய்த்துக் கொள்ள காரணம் என்ன?

  66. கோளக ஆடி ஒன்றின் குவியத் தொலைவு 7 செ.மீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?

  67. ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.

  68. சூரியச் சமையற்கலன் மற்றும் சூரிய வெப்ப சூடேற்றி ஆகியவற்றிலும் பயன்படும் ஆடி?

  69. நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்த உயிரினங்களும் சுவாசிக்கும்போது உள்ளிழுத்துக்  கொள்வதுமான அலோகம் எது?

  70. உலோக போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  71. திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பீடுக.

  72. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?

  73. குமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட் டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக , நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாக இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல சலுகை தருவதாக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
    அ) ரமேஷின் அறிவுரை சரியானதா?
    ஆ) ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
    இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?

  74. ஒளிவேதி வினைகள் என்றால் என்ன?

  75. ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக.

  76. நுண்ணுயிரிகளால் தாவரங்களில் உண்டாகும் 2 நோய்களை எழுதுக.

  77. தாலஸ் வரையறு.

  78. ஸீனோசைட்டிக் மைசீலியம் என்றால் என்ன?

  79. வளர்சிதை மாற்றம் வரையறு.

  80. சைலேஷ் என்பவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனுக்கு அலைபேசியில் காணொலி விளையாட்டில் ஆதீத ஆர்வம்கொ ண்டிருந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவனது கண்கள் சிவந்து, வலியையும் உணர்ந்தா ன். அவனது அறிவியல் ஆசிரியர் அதற்கான காரணங்களை க் கேட்டறிந்து அவனது பெற்றோரை  அழைத்துகண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுமாறு கூறினார்.
    அ. அதிக அளவு அலைபே சியை பயன்ப டுத்தினால் எவ்வா று நமது கண்க ளுக்கு பாதிப்பு ஏற்ப டுத்துகிறது?
    ஆ. ஆசிரியரிடமிருந்து பெற்ற பண்புகளைக் கூறு?

  81. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்றால் என்ன?

  82. வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

  83. உராய்வு மூலம் மின்னூட்டங்களை எவ்வாறு உருவாக்க முடியும்?

  84. மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  85. நைட்ரஜனின் பயன்கள் யாவை?

  86. பொருண்மை அழியாவிதி – வரையறு

  87. ஹைட்ரஜனைப் பொறுத்து இணை திறனைக் கணக்கிடும் முறையைக் கூறுக.

  88. எலும்புக்கூடு என்றால் என்ன?

  89. நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?

  90. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக

  91. வளரிளம் பருவம் என்றால் என்ன?

  92. கருவுறுதல் என்றால் என்ன?

  93. ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?

  94. Part - C

    18 x 3 = 54
  95. உங்களது நண்பன் நேற்று பள்ளிக்கு வருகை தரவில்லை. நீங்கள் அதற்கான காரணத்தினை அறிந்து கொள்ள அவரிடம் வினவுகிறீர்கள்.அதற்கு அவர், நேற்று 1000C காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 1000C காய்ச்சல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா அது பிழை எனில், சரிசெய்து அவருக்குப் புரியவைத்திடுக.

  96. 3 ஆம்பியர் மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக 5 வினாடிகளுக்குச் சென்றால், கடத்தியில் பாயும் மின்னூட்டத்தைக் கணக்கிடுக?

  97. பாஸ்கல் விதியின் மூன்று பயன்பாடுகளைத் தருக.

  98. அணைக்கட்டுகளின் மேற்புறத்தை விட அடிப்புறம் வலிமையாகவும் அகலமானதாகவும் அமைக்கப்பட்டிருப்பது ஏன்?

  99. கோளக ஆடி என்றால் என்ன?

  100. கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களின் வகைகள்?

  101. உலோகப் போலிகளின் பயன்கள் யாது?

  102. வினைபடு பொருள்கள் கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும் ஒரு வேதி வினை பற்றி எழுதுக.

  103. வைரஸின் உயிரற்ற பண்புகளை எழுதுக.

  104. பாசிகளின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  105. உறுப்பு வரையறு.

  106. கட்டுப்பாட்டகம் என்றால் என்ன?

  107. கணிதத் தருக்கச் செயலகம். (ALU - Arithmetic Logic Unit) விவரி.

  108. வெப்பக் கட்டுப்படுத்தி பற்றி குறிப்பு வரைக.

  109. கீழ்க்கண்ட சேர்மங்கள் ஆக்சிஜனுடன் எரியும்போது உருவாகும் பொருட்களை எழுதுக.
    அ) கார்பன்
    ஆ) சல்பர்
    இ) பாஸ்பரஸ்
    ஈ) மெக்னீசியம்
    உ) இரும்பு
    ஊ) சோடியம்

  110. கீழ்க்கண்ட வினைகளுக்கான முற்றுப்பெறா வாய்பாட்டினை எழுதி அதனை சமன் செய்க.
    அ. கார்பன் + ஆக்சிஜன் → கார்பன் டை ஆக்சைடு
    ஆ. பாஸ்பரஸ் + குளோரின் → பாஸ்பரஸ் பென்டா குளோரைடு
    இ. சல்பர் + ஆக்சிஜன் → சல்பர் டை ஆக்சைடு
    ஈ. மெக்னீசியம் + ஹைட்ரஜன் குளோரைடு→ மெக்னீசியம் குளோரைடு + ஹைட்ரஜன்

  111. பறவையின் எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?

  112. வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் யாவை ?

  113. Part - D

    14 x 5 = 70
  114. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் பல்வேறு அளவீடுகள் மற்றும் பல்வேறு வெப்பநிலை அளவுகளின் பயன்பாடுகள் பற்றி எழுதுக?
     

  115. விசையின் விளைவானது விசையின் எண் மதிப்பையும் அது செயல்படும் பரப்பையும் சார்ந்தது என்பதை செயல்முறையுடன் விளக்குக?

  116. குவி ஆடிகளின் பயன்களை எழுதுக?

  117. சில சேர்மங்களின் வேதிப்பெயர், பகுதிப்பொருள்கள் பயன்களை கூறு.

  118. வேதி வினைகளால் எவ்வாறு உணவுப்பொருள்கள் கெட்டுப் போகின்றன என்பதை விளக்குக?

  119. ஒரு செல் உயிரி அமிபாவின் அமைப்பினை விவரி.

  120. பிரையோஃபைட்டுகளின் பொதுப்பண்புகளை எழுதுக.

  121. ஒரு விலங்கு செல்லின் அமைப்பை படத்துடன் விவரி.

  122. குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?

  123. நிலை மின்காட்டி என்றால் என்ன? அது செயல்படும் முறையை விளக்குக.

  124. பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக்கின்றனர்?

  125. எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?

  126. மனித அச்சு எலும்புக்கூட்டைப் பற்றி எழுதுக. அதன் படம் வரைந்து பாகங்களைக் குறி.

  127. வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 8th Standard Science Important Questions with Answer key )

Write your Comment