Term 3 SA Model Question

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    5 x 1 = 5
  1. ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

    (a)

    34

    (b)

    20

    (c)

    15

    (d)

    0.2

  2. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

    (a)

    பாலிஸ்டைரீன்

    (b)

    பி.வி.சி

    (c)

    பாலிபுரோப்பலீன்

    (d)

    எல்.டி.பி.இ

  3. தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக் டீரியாக்கள் நைட்ரஜன்  சுழற்சியில் _________ க்கு காரணமாக உள்ளன .

    (a)

    அமோனியாவாதல்

    (b)

    நிலைப்படுத்துதல்

    (c)

    நைட்ரேட்டாதல்

    (d)

    நைட்ரேட் வெளியேற்றம்

  4. பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு (தேனீக்கள்) இனம் அல்ல?

    (a)

    ஏபிஸ் மெல்லிபெரா

    (b)

    ஏபிஸ் டார்சோட்டா

    (c)

    ஏபிஸ் ப்ளோரா

    (d)

    ஏபிஸ் சிரானா

  5. இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.

    (a)

    நிமோனியா  

    (b)

    காசநோய்

    (c)

    காலரா  

    (d)

    ரேஃபிஸ்

  6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    3 x 1 = 3
  7. பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ________ ஆகத் தோன்றும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குறைவு

  8. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________  ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நின்ஹைட்ரின் 

  9. காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விப்ரியே காலரே, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா

  10. III பொருத்துக 

    5 x 1 = 5
  11. மீயொலி

  12. (1)

    இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள் 

  13. திசைவேகம்

  14. (2)

    மீட்டர் / விநாடி

  15. அதிர்வெண்

  16. (3)

    ஹெர்ட்ஸ்

  17. Keyboard

  18. (4)

    உள்ளீட்டு கருவி 

  19. LINUX

  20. (5)

    20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

    IV சரியா தவறா எனக் கூறுக: 

    2 x 1 = 2
  21. ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

    (a) True
    (b) False
  22. ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .

    (a) True
    (b) False
  23. பகுதி- 

    ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்  விடையளி :

    15 x 2 = 30
  24. சுற்றுக்காலம் வரையறு

  25. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  26. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய்க்கிருமி

  27. சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக

  28. இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.

  29. கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
    காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
    இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.

  30. கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
    காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

  31. கூற்று: விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
    காரணம்: பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப் புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  32. கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
    காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  33. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?

  34. 750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா? (கொடுக்கப்பட்டுள்ளவை :g=10 மீ/வி, ஒலியின் வேகம்=340 மீ/வி)

  35. ‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.

  36. கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?

  37. தகவமைப்பு என்றால் என்ன?

  38. AYUSH பற்றி நீ அறிவது என்ன?

  39. சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
    அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
    ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
    இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.

  40. ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்றானது மிதப்பு விசையை உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசைபலூனின் எடையைவிட அதிகமாகும். எனவே பலூன் மேலெழும்புகிறது.
    அ) பலூன் மேலெழும்பும் போது, அதன் அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
    ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?
    இ) மிதப்பு விசை _______________ ன் அடர்த்தியைப் பொறுத்தது.

    1. ORS

    2. DPT

  41. பகுதி- 

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    8 x 5 = 40
    1. மிதத்தல் விதிகளைக் கூறு.

    2. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

    1. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

    2. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

    1. ஓரு  பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

    2. உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.

    1. மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.

    2. மனிதனுக்கு டைபாய்டு ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் பெயரென்ன ? இக்கிருமி எவ்வாறு உடலினுள்  செல்லும் பண்பைப் பெற்றுள்ள து? இதனைக்கண்டறியும் அறிகுறிகளையும், கடுமையான நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளையும் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு-3 திருப்புதல் தேர்வு கேள்வி வினா விடை (9th standard volume 3 revision test paper )

Write your Comment