Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களில் கணத்தைப் பட்டியல் முறையில் எழுதுக:
    (i) ASSESSMENT
    (ii) PRINCIPAL

  2. கோடிட்ட இடங்களில் \(\subseteq \) அல்லது \(\nsubseteq \) எனத் தருந்த குறியிட்டு நிரப்புக.
    {p, q, r} _____ {w, x, y, z}

  3. A = {2, 3} மற்றும் C = { } எனில் A∩C காண்க.

  4. வென்படம் வரைந்து, பின்வரும் கணச் செயல்களை வென்படத்தில் குறிக்கவும்.
    (i) A′
    (ii) (A–B)′
    (iii) (A∪B)′

  5. n(A) = 36, n(B) = 10, n(A∪B)=40, மற்றும் n(A′)=27 எனில், n(U) மற்றும் n(A∩B) காண்க.

  6. ஒரு விருந்தில் 60 பேர் கலந்து கொண்டனர். அதில் 35 பேர் வெண்ணிலா பனிக்கூழ் (vennila ice cream) மற்றும் 30 பேர் சாக்லேட் பனிக்கூழ் (chocolate ice cream) எடுத்துக்கொண்டனர். பங்கேற்றவர்களில் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு வகைப் பனிக்கூழையாவது எடுத்துக் கொண்டால்,
    (i) வெண்ணிலா மற்றும் சாக்லேட் என இரண்டு வகைப் பனிக் கூழையும் எடுத்துக்கொண்டவர்கள்,
    (ii) வெண்ணிலா பனிக்கூழ் மட்டும் எடுத்துக்கொண்டவர்கள் மற்றும்
    (iii) சாக்லேட் பனிக்கூழ் மட்டும் எடுத்துக்கொண்டவர்கள் எண்ணிக்கையைக் காண்க.

  7. x இன் மதிப்பு காண்க.

  8. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

  9. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

  10. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வட்ட நாற்கரம் ABCD இன் அனைத்துக் கோணங்களையும் காண்க.

  11. படத்தில் AB மற்றும் CD ஆனது O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் இரு இணையான நாண்கள். மேலும் AB=8 செ.மீ, CD=6 செ.மீ. OM丄AB, OL 丄CD இடைப்பட்ட  தூரம் LM ஆனது 7 செ.மீ எனில், வட்டத்தின் ஆரம் காண்க.

  12. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், \(\angle POQ=100°\) மற்றும் \(\angle PQR=30°\) எனில், \(\angle RPO\) காண்க.

  13. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்? 
    (அ) (3,–8)
    (ஆ) (–1,–3)
    (இ) (2, 5)
    (ஈ) (–7, 3)

  14. ஒரு வட்டத்தின் மையம் (−4,2). அந்த வட்டத்தில் (−3,7) என்பது விட்டத்தின் ஒரு முனை எனில், மற்றொரு முனையைக் காண்க.

  15. A(−3,5) மற்றும் B(4,−9) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(2, -5) என்ன விகிதத்தில் பிரிக்கும்?

  16. ஓர் அரிசி ஆலையில் உள்ள ஏழு தொழிலாளிகளின் நாள்கூலித் தரவுகள் முறையே ரூ. 500, ரூ. 600, ரூ. 600, ரூ. 800, ரூ. 800, ரூ. 800 மற்றும் ரூ. 1000. நாள்கூலித் தரவுகளின் முகடு காண்க.

  17. 2 cos  \(\theta \) = \(\sqrt { 3 } \) எனில், \(\theta \)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க. 

  18. பின்வரும் சமன்பாடுகளை சரிபார்க்க.
    (i) sin2 600 + cos2 600 =1
    (ii) 1+ tan2 300 = sec2 300
    (iii) cos900 =1- 2sin2 450 = 2cos2 450 -1
    (iv) sin300cos600 + cos300sin600 = sin900

  19. கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
    (i) sin65o39' + cos24o57' + tan10o10'
    (iii) tan70o58' + cos15o26' - sin84o59'

  20. இரு சமபக்க முக்கோண வடிவிலுள்ள ஒரு விளம்பரப் பலகையின் சுற்றளவு 36 மீ மற்றும் அதன் ஒவ்வொரு சமபக்கத்தின் நீளம் 13 மீ ஆகும். அதற்கு வண்ணம் பூச ஒரு சதுர மீட்டருக்கு ₹ 17.50 வீதம் ஆகும் செலவைக் காண்க.

  21. கீழ்க்காணும் பக்க அளவைக் கொண்ட கனச்சதுரங்களின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.(i) 8 மீ (ii) 21 செ மீ (iii) 7.5 செ மீ

  22. ஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ளளவைக் கொண்டுள்ளது. அத்தொட்டியின் பக்க நீளத்தை மீட்டரில் காண்க.

  23. ஒரு பானையில் 24 பந்துகள் உள்ளன, அவற்றில் 3 சிவப்பு, 5 நீலம் மற்றும் மீதி இருப்பவை பச்சை நிறமுடையதாகும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது அது (i) ஒரு நீல நிறப் பந்து (ii) ஒரு சிவப்பு நிறப் பந்து (iii) ஒரு பச்சை நிறப் பந்தாக இருக்க நிகழ்தகவு என்ன?

  24. நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு \(\frac { 91 }{ 100 } \) எனில், மழை பொழியாமல் இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?   

  25. 1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டிலுள்ள பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

    பணிப் பெண்கள் வகை  பகுதி நேரம் மட்டும்  முழுநேரம் மட்டும்   இரண்டு வகை பணிப்பெண்கள்   
    குடும்பங்களின் எண்ணிக்கை  860 370 250

    சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும்போது, அக்குடும்பம் (i) இரு வகைப் பணிப்பெண்களும் வைத்திருக்க (ii) பகுதி நேரப் பணிப்பெண் வைத்திருக்க (iii) பணிப்பெண் வைத்திருக்காமல் இருக்க நிகழ்தகவு காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Maths - Full Portion Two Marks Question Paper )

Write your Comment