Term 2 புள்ளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. 7 தரவுகளின் சராசரி 30 என்க ஒவ்வோர் எண்ணையும் 3 ஆல் வகுக்கக் கிடைக்கும் புதிய சராசரியைக் காண்க.

  2. 25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.

  3. ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°c, 24°c, 28°c, 31°c, 30°c, 26°c,24°c எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.

  4. கீழ்க்காணும் பரவலின் சராசரியை ஊகச் சராசரி முறையில் காண்க.

    பிரிவு இடைவெளி  0-10 10-20 20-30 30-40 40-50
    நிகழ்வெண் 5 7 15 28 8
  5. ஒரு மட்டைப் பந்தாட்டத்தில் 11 வீரர்கள் எடுத்த ஓட்டங்கள் முறையே 7, 21, 45, 12, 56, 35, 25, 0, 58, 66, 29 எனில், அவற்றின் இடைநிலை அளவு காண்க.

  6. 5 x 5 = 25
  7. இடைநிலை அளவு காண்க.

    உயரம் (செ.மீ) 160 150 152 161 156 154 155
    மாணவர்களின் எண்ணிக்கை 12 8 4 4 3 3 7
  8. கொடுக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களின் வாராந்திரச் செலவுக் குறிப்புகளின் இடைநிலை அளவு காண்க.

    வாரந்திரச் செலவு (Rs) 0-1000 1000-2000 2000-3000 3000-4000 4000-5000
    குடும்பங்களின் எண்ணிக்கை  28 46 54 42 30
  9. கீழ்க்காணும் தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில், x இன் மதிப்பைக் காண்க.

    பிரிவு இடைவெளி 0-10 10-20 20-30 30-40 40-50
    நிகழ்வெண் 6 24 16 9
  10. கீழ்க்காணும் தரவுகளுக்கு முகடு காண்க.

    மதிப்பெண்கள்  1-5 6-10 11-15 16-20 21-25
    மாணவர்களின் எண்ணிக்கை  7 10 16 32 24
  11. ஒரு பரவலின் சராசரி மற்றும் முகடு முறையே 66 மற்றும் 60 ஆகும். இடைநிலை அளவு காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Term 2 புள்ளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 2 Statistics Three and Five Marks Questions )

Write your Comment