Term 1 ஒளி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம்  கொண்ட  பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.

  2. அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியின் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.
    ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும் 

  3. கோளக ஆடியில் மீது பட்டு அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிரின் திசை எது? ஏன் என்று காரணம் கூறுக.

  4. உருப்பெருக்கம் என்றால் என்ன? அதன் சமன்பாட்டை எழுதுக. மெய் பிம்பம் மற்றும் மாய பிம்பம் ஆகியவற்றிற்கு அதன் குறியீடு என்ன?

  5. கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.

  6. 5 x 5 = 25
  7. 20 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவியாடி ஒன்று மகிழுந்து  (car) ஒன்றில் பொருத்தப்பட்டு உள்ளது . அதிலிருந்து 6 மீ தொலைவில் இன்னொரு மகிழுந்து உள்ளது எனில்,
    அ) முதல் மகிழுந்தின் ஆடியிலிருந்து பார்க்கும் போது இரண்டாவது மகிழுந்து (அதன் தொலைவு) எங்கு இருககும்?
    ஆ)இரண்டாவது மகிழுந்து 2 மீ அகலமும் 1.6 மீ உயரமும் கொண்டது எனில், அதன் பிம்பத்தின் அளவு என்ன?
    குவியத்தொலைவு  f  = 20 செ,மீ (குவியாடி)
    பொருளின் தொலைவு= u = -6 மீ = -600 செ.மீ (குவியாடி)
    பிம்பத்தின் தொலைவு v  = ?

  8. பின்வரும் நிகழ்வுகளில் ஒளிவிலகல் நடைபெறும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக்குக.
    அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
    ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு
    இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக

  9. குழியாடியின் ஆடிமையம் P - க்கும் முக்கியக் குவியம் F - க்கும் இடையில் வைக்கப்படும் பொருள் ஒன்றின் பிம்பம் எவ்வாறு தோன்றுகிறது என்பதைப் படத்தின் மூலம் வரைந்து காட்டுக. அப்பிம்பத்தின் மூன்று சிறப்பியல்புகளைக் கூறுக.

  10. 12செ.மீ குவியத் தொலைவு  கொண்ட  குழியாடிக்கு முன் 20 செ.மீ தொலைவில்  வைக்கப்பட்டுள்ள 2 செ.மீ உயரம் உடைய பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் நிலை (இடம்), அளவு, தன்மையைக்தன்மையைக் காண்க.

  11. காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 \(\times\) 108 மீ/வி)

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் Term 1 ஒளி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science Term 1 Three and Five Marks Questions )

Write your Comment