5 x 3 = 15
  1. ஓமின் விதியைக் கூறுக.

  2. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை எந்த காரணிகளைச் சார்ந்தது?

  3. மின்தடையம் ஒன்றில் பாயும் மின்னோட்டம் (I) மற்றும் அதன் குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாடு (V)ஆகியவற்றின் மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.மின்தடையத்தின் மின்தடை மதிப்பு என்ன?

    I (ஆம்பியர்) 0.5 1.0 2.0 3.0 4.0
    V (வோல்ட்) 1.6 3.4 6.7 10.2 13.2

    (நினைவுக் குறிப்பு: V-I வரைபடத்தை வரைந்து அதன் சாய்வை எடுக்கவும்)

  4. கம்பியொன்றின் குறுக்குவெட்டுப் பரப்பை 25 கூலூம் அளவிலான மின்னூட்டம் 50 வினாடி காலத்தில் கடந்து சென்றால் அதனால் விளையும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

  5. விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.2 A. விளக்கு ஒரு மணி நேரம் எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?

  6. 5 x 5 = 25
  7. 2\(\Omega \) மற்றும் 5\(\Omega \) மின் தடைகள் கொண்ட இரு மின் தடையங்கள் தொடரிணைப்பில் உள்ளவாறு மின்சுற்று ஒன்றை வரைக. அதனுடன் பக்க இணைப்பில் உள்ளவாறு ஒரு 3\(\Omega \) மின்தடை கொண்ட மின்தடையத்தை இணைக்கவும்.

  8. வீட்டு உபயோக மின் பொருள்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன? தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா? காரணங்கள் தருக.

  9. மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.

  10. கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

  11. 10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 2 மின்னூட்டமும் மின்னோட்டமும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 2 Electric Charge And Electric Current Three and Five Marks Questions )

Write your Comment