Section - I

    28 x 1 = 28
  1. ஒரு மெட்ரிக் டன் என்பது _______.

    (a)

    100 குவின்டால்

    (b)

    10 குவின்டால்

    (c)

    1/10 குவின்டால்

    (d)

    1/100 குவின்டால்

  2. சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?

    (a)

    கிலோ  மீட்டர்      

    (b)

    மீட்டர்

    (c)

    சென்டி மீட்டர்     

    (d)

    மில்லி மீட்டர்

  3. மாற்றுக : 300K = _________ 0

    (a)

    230 C

    (b)

    2730 C

    (c)

    270 C

  4. ஒரு கருவியினால் அளவிடக் கூடிய மிகச்சிறிய அளவு ________ எனப்படும்.

    (a)

    மீச்சிற்றளவு

    (b)

    முதன்மை கோல் அளவு

    (c)

    வெர்னியர் அளவு

  5. ஒரு வானியல் அலகு என்பது

    (a)

    1.496 x 1011 மீ

    (b)

    9.46 x 1015 மீ

    (c)

    1.496 x 10-11 மீ

  6. திசைவேகம் – காலம்  வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?

    (a)

    நகரும் பொருளின் திசைவேகம்

    (b)

    நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி

    (c)

    நகரும் பொருளின் வேகம்

    (d)

    நகரும் பொருளின் முடுக்கம்

  7. ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட _________ இருக்கும்

    (a)

    பாதி அளவு

    (b)

    இரு மடங்கு

    (c)

    நான்கு மடங்கு

    (d)

    நான்கில் ஒரு பகுதி

  8. சரியான அறிக்கையை தேர்வு செய்க.

    (a)

    வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.

    (b)

    வினை மற்றம் எதிர்வினை விசைகள்  வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.

    (c)

    (a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி 

  9. நேராகச் செல்லும் ஒரு பொருளின் இயக்கம் _____ எனப்படும் 

    (a)

    நேர்கோட்டு  இயக்கம்

    (b)

    வட்ட இயக்கம்

    (c)

    சுழற்சி 

  10. ஒரு பொருளின் சம காலத்தில் சமமற்ற தொலைவுகளை கடக்குமானால் அது _____ இயக்கம்.

    (a)

    சீரான இயக்கம் 

    (b)

    சிரற்ற  இயக்கம் 

    (c)

    வட்ட  இயக்கம் 

  11. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______ 

    (a)

    குழியாடி

    (b)

    குவியாடி

    (c)

    சமதளஆடி

  12. ஒளியின் திசைவேகம் ________ ல் பெருமமாக உள்ளது.

    (a)

    வெற்றிடத்தில்

    (b)

    கண்ணாடியில்

    (c)

    வைரத்தில்

  13. மாறுநிலை கோணத்தின் மதிப்பு_____

    (a)

    45o

    (b)

    90o

    (c)

    120o

  14. ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______

    (a)

    குவிய தூரம்

    (b)

    குவியம்

    (c)

    வளைவு ஆரம்

  15. முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்

    (a)

    அடர்மிகு;அடர்குறை

    (b)

    அடர்குறை:அடர்குறை

    (c)

    அடர்மிகு;அடர்மிகு

  16. பின்வருவனவற்றுள் ______ ஒரு கலவை.

    (a)

    சாதாரண உப்பு

    (b)

    தூய வெள்ளி

    (c)

    கார்பன் டை  ஆக்ஸைடு

    (d)

    சாறு

  17. பின்னக் காய்ச்சி வடித்தலில் பயன்படும் தத்துவத்தில் ----------------------- உள்ள வேறுபாடு

    (a)

    கரைதிறன்

    (b)

    உருகுநிலை

    (c)

    கொதிநிலை

    (d)

    பரப்புக்கவர்ச்சி

  18. திண்மங்களில் துகள்கள் _________ இடைவெளியில் இருக்கும்.

    (a)

    மிக அதிக

    (b)

    மிக குறைந்த

  19. ஆக்ஸிஜனின் உருகுநிலை மதிப்பு ________.

    (a)

    -219o C

    (b)

    98o C

    (c)

    100o C

  20. கீழ்க்கண்டவற்றுள் எது சேர்மம் _________.

    (a)

    நீர்

    (b)

    LPG

    (c)

    சாறு

  21. \(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    80, 80, 35

    (b)

    35, 55,80

    (c)

    35, 35, 80

    (d)

    35, 45, 35

  22. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

    (a)

    2,8,9

    (b)

    2,8,1

    (c)

    2,8,8,1

    (d)

    2,8,8,3

  23. M -கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _________.

    (a)

    18

    (b)

    32

    (c)

    8

  24. அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.

    (a)

    ஆர்பிட்

    (b)

    உட்கரு

    (c)

    புரோட்டான்

  25. கால்சியம் மற்றும் ஆர்கான் _________.

    (a)

    ஐசோடோப்பு

    (b)

    ஐசோபார்

    (c)

    ஐசோடோன்

  26. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?

    (a)

    வேதிச் சார்பசைவு

    (b)

    நடுக்கமுறு வளைதல்

    (c)

    ஒளிச் சார்பசைவு

    (d)

    புவிஈர்ப்பு சார்பசைவு

  27. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது__________ எனப்படும்

    (a)

    வெப்ப சார்பசைவு

    (b)

    வெப்பமுறு வளைதல்

    (c)

    வேதி சார்பசைவு

    (d)

    நடுக்க முறு வளைதல்

  28. நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்

    (a)

    பழம்

    (b)

    விதை

    (c)

    மலர்

    (d)

    இலைத்துளை

  29. Section - II

    18 x 2 = 36
  30. 1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக

  31. புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?

  32. ஒளி ஆண்டு வரையறு.

  33. வட்ட இயக்கம் என்றால் என்ன?

  34. முடுக்கம் - வரையறு.

  35. ஓர்  ஊடகத்திலிருநது மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகி்றது?

  36. பல்லை ஆராய பல் மருத்துவர் குழியாடியையே பயன்படுத்துகின்றனர் ஏன்?

  37. சமதள ஆடியில் ஒருவரின் முழு உருவம் தெரிய வேண்டுமெனில் சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?

  38. குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?

  39. குழி ஆடியில் P மற்றும் C க்கு இடையே உள்ள தொலைவு 10 cm எனில் குவியத் தூரத்தை காண்க.

  40. 22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய்.அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?

  41. டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?

  42. பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.

  43. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

  44. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
    கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்

  45. ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.       

  46. நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக? 

  47. ஒளிச்சேர்க்கையின் போது வெளியேறும்  வாயு என்ன?

  48. Section - III

    6 x 3 = 18
  49. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?

  50. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.

  51. நிலையான வேகம் கொண்ட பொருள் முடுக்கம் அடையுமா? நியாயப்படுத்துவதற்கு ஓர் உதாரணம் தருக.

  52. பின் வருவானவற்றுள் குவியாடி எது குழியாடி எது எனத் தெரிவு செய்து அதனை அட்டவணைப்படுத்துக
    பின்னோக்கு ஆடி,பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி,ஒப்பனை ஆடி.

  53. மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?

  54. ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.

  55. Section - IV

    6 x 5 = 30
  56. கீழ்க்காணும் படத்திலிருந்து நேர் சுழிப்பிழை மற்றும் எதிர்சுழிப்பிழையை க் கணக்கிடுக

  57. கீழ்க்காணும் வரைபடம் ஒரு மகிழுந்தின் இயக்கத்தைக் காண்பிக்கிறது. OA மற்றும் OB பகுதிகளில் நீங்கள் புரிந்து கொண்டது என்ன? AB ப பகுதியில் மகிழுந்தின்  வேகம் என்ன? இவ்வேகத்தை அது எவ்வளவு நேரத்திற்குப் பிறகு அடைந்தது?

  58. பின்வரும் நிகழ்வுகளில் ஒளிவிலகல் நடைபெறும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக்குக.
    அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
    ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு
    இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக

  59. டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.

  60. புரோட்டானின் நிறையை கணக்கிடுக
    அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
    மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1

  61. நீர் சார்பசைவு - நிரூபிக்க ஒரு சோதனையை வடிவமைத்து விளக்கவும். 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 9th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )

Write your Comment