3rd Term Model Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    5 x 1 = 5
  1. அதிர்வடையும் இசைக்கலவை ஒன்று ஏற்படுத்தும் அதிர்வுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரை அலைநீளம் எதைக் குறிக்கும்?

    (a)

    BD

    (b)

    AB

    (c)

    AE

    (d)

    DE

  2. கீழ்கண்டவற்றுள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது எது?

    (a)

    கார்பன் டைஆக்ஸைடு

    (b)

    கார்பன் மோனோக்ஸைடு

    (c)

    கால்சியம் கார்பனேட் 

    (d)

    சோடியம் பைகார்பனேட்

  3. சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________ 

    (a)

    நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு

    (b)

    நீரைச் சேமிப்பதற்கு

    (c)

    நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு

    (d)

    இவையனைத்தும்

  4. நிலவேம்பின் இடு சொல்பெயர் _________

    (a)

    லூக்காஸ் ஆஸ்பெரா

    (b)

    ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா

    (c)

    குரோட்டலே ரியா ஜன்சியா

    (d)

    கேஷியா பஸ்துலா

  5. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு _________ 

    (a)

    கல்லீரல்

    (b)

    நுரையீரல்

    (c)

    சிறுநீரகம்

    (d)

    மூளை

  6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக

    3 x 1 = 3
  7. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வளிமண்டல அழுத்தம்

  8. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________  ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நின்ஹைட்ரின் 

  9. ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளாத, நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் ___________ மற்றும் ___________ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நைட்ரோசோமோனாஸ், நாஸ்டாக்

  10. III சரியா தவறா எனக் கூறுக 

    2 x 1 = 2
  11. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.

    (a) True
    (b) False
  12. பன்னாட்டு வின்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்

    (a) True
    (b) False
  13. பகுதி- 

    ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்   விடையளி

    15 x 2 = 30
  14. சுற்றுக்காலம் வரையறு

  15. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  16. கீழ்க்கண்டவற்றை வரையறு    
    அ )  மீன் வளர்ப்பு
    ஆ)  தேனீ வளர்ப்பு
    இ ) மண்புழு வளர்ப்பு
    ஈ ) கடலுயிரி வளர்ப்பு
    உ ) மலரியில்
    ஊ ) கலப்பு உரம்
    எ ) கனியியல்
    ஏ ) பொருந்துதல்

  17. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பாக்டீரியோ ஃபேஜ்கள்

    1. அழுத்தங்கள்

    2. (1)

      20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

    3. மீயொலி

    4. (2)

      காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

    5. அலைவுக் காலம் 

    6. (3)

      இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள் 

    7. Hardware

    8. (4)

      RAM 

    9. LINUX

    10. (5)

      விநாடி

  18. வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.

  19. இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.

  20. கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
    காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
    இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.

  21. கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
    காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

  22. கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.
    காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  23. கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
    காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  24. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?

  25. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

  26. பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தைக் கணக்கிடவும்.

  27. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?

  28. கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

  29. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.

  30. சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
    அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
    ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
    இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.

  31. ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்றானது மிதப்பு விசையை உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசைபலூனின் எடையைவிட அதிகமாகும். எனவே பலூன் மேலெழும்புகிறது.
    அ) பலூன் மேலெழும்பும் போது, அதன் அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
    ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?
    இ) மிதப்பு விசை _______________ ன் அடர்த்தியைப் பொறுத்தது.

    1. WHO

    2. DPT

  32. பகுதி- 

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    4 x 5 = 20
    1. ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும், ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும் பொழுது என்ன நிகழ்கிறது என்பதை கவனித்து விவரி.

    2. ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.

    1. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.

    2. யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?

    1. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.

    2. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

    1. காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.

    2. சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
      அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
      ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
      இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
      ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Standard Science Term 3 Model Question Paper 2018 )

Write your Comment