Section - I

    33 x 1 = 33
  1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

    (a)

    கொரில்லா

    (b)

    சிம்பன்ஸி

    (c)

    உராங் உட்டான் 

    (d)

    பெருங்குரங்கு

  2. வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

    (a)

    பழைய கற்காலம்

    (b)

    இடைக்கற்காலம்

    (c)

    புதிய கற்காலம்

    (d)

    பெருங்கற்காலம்

  3. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு.

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை .

  4. கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
    காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    கூற்று சரி; காரணம் தவறு.
    கூற்றும் காரணமும் தவறானவை.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  5. ஹரப்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை

    (a)

    தங்கம் மற்றும் யானை

    (b)

    குதிரை மற்றும் இரும்பு

    (c)

    ஆடு மற்றும் வெள்ளி

    (d)

    எருது மற்றும் பிளாட்டினம்

  6. கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
    காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  7. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

    (a)

    ஆங்கிலம்

    (b)

    தேவநாகரி

    (c)

    தமிழ்-பிராமி

    (d)

    கிரந்தம்

  8. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

    (a)

    தீபவம்சம்

    (b)

    அர்த்தசாஸ்திரம்

    (c)

    மகாவம்சம்

    (d)

    இண்டிகா

  9. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது

    (a)

    மஹாஜனபதங்கள்

    (b)

    கனசங்கங்கள்

    (c)

    திராவிடம்

    (d)

    தட்சிணபதா

  10. மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்

    (a)

    மார்க்கோ போலோ 

    (b)

    ஃபாஹியான்

    (c)

    மெகஸ்தனிஸ்

    (d)

    செல்யூகஸ் 

  11. புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்

    (a)

    கருவம்

    (b)

    கவசம்

    (c)

    புவி மேலோடு

    (d)

    உட்கரு

  12. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ___________ கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

    (a)

    கோண்டுவானா

    (b)

    லொரேசியா

    (c)

    பாந்தலாசா

    (d)

    பாஞ்சியா

  13. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும் 

    (a)

    மடிப்பு

    (b)

    பிளவு

    (c)

    மலை

    (d)

    புவிஅதிர்வு

  14. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    வானிலைச் சிதைவு

    (b)

    அரித்தல்

    (c)

    கடத்துதல்

    (d)

    படியவைத்தல்

  15. இயற்கைக்   காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.

    (a)

    பதிவுகளால் நிரப்படுத்தல்

    (b)

    அரிப்பினால் சமப்படுத்துதல்

    (c)

    நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

    (d)

    ஏதுமில்லை

  16. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்

    (a)

    காற்றடி வண்டல்

    (b)

    பர்கான்

    (c)

    ஹமாடா

    (d)

    மணல் சிற்றலைகள்

  17. ________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன

    (a)

    காற்று

    (b)

    பனியாறு

    (c)

    ஆறு

    (d)

    நிலத்தடி நீர்

  18. கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

    (a)

    ஆசியா

    (b)

    தக்காண பீடபூமி 

    (c)

    குலு பள்ளத்தாக்கு

    (d)

    மெரினா கடற்கரை

  19. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.

    (a)

    கீழடுக்கு

    (b)

    மீள் அடுக்கு

    (c)

    வெளியடுக்கு

    (d)

    இடையடுக்கு

  20. _______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

    (a)

    வெளியடுக்கு

    (b)

    அயன அடுக்கு

    (c)

    இடையடுக்கு

    (d)

    மீள் அடுக்கு

  21. _______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

    (a)

    நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்

    (b)

    துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்

    (c)

    துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்

    (d)

    துருவ உயர் அழுத்த மண்டலம்

  22. பருவக்காற்று என்பது ______ 

    (a)

    நிலவும் காற்று

    (b)

    காலமுறைக் காற்றுகள்

    (c)

    தலக்காற்று

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  23. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    அழுத்தம்

    (b)

    காற்று

    (c)

    சூறாவளி

    (d)

    பனி

  24. எந்த நாட்டில் மக்களாட்சித் தோன்றியது?

    (a)

    இந்தியா

    (b)

    சுவிட்சர்லாந்து

    (c)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (d)

    ஏதென்ஸ்

  25. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

    (a)

    நாடாளுமன்றம்

    (b)

    மக்கள்

    (c)

    அமைச்சர் அவை

    (d)

    குடியரசு தலைவர்

  26. கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?

    (a)

    இந்தியா

    (b)

    பிரிட்டன்

    (c)

    கனடா

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  27. வாக்குரிமையின் பொருள்

    (a)

    தேர்ந்தெடுப்பதற்கான உரிமை

    (b)

    ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை

    (c)

    வாக்களிக்கும் உரிமை

    (d)

    பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

  28. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

    (a)

    சமூகச் சமத்துவம்

    (b)

    பொருளாதார சமத்துவம்

    (c)

    அரசியல் சமத்துவம்

    (d)

    சட்ட சமத்துவம்

  29. Section - II

    10 x 2 = 20
  30. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

  31. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.

  32. ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.

  33. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

  34. மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.

  35. வெப்பத் தலைகீழ் மாற்றம் - சிறுகுறிப்பு வரைக

  36. வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை – விளக்குக

  37. வளிமண்டல அழுத்தம் எவ்வாறு அளக்கப்படுகிறது?

  38. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.

  39. Section - III

    7 x 5 = 35
  40. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

  41. ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு

  42. சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக

  43. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.

  44. பனியாறு என்றால் என்ன? 

  45. வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக

  46. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி

  47. Section - IV

    1 x 10 = 10
  48. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  49. Section - V

    9 x 3 = 27
  50. தமிழ் அரசர்கள் மௌரிய அரசின் அதிகாரத்துக்கு உட்படாமல் இருந்தார்கள் – இந்தக் கூற்றுக்கு உன் விளக்கம் என்ன?

  51. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.

  52. இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.

  53. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

  54. வானிலைச் சிதைவு – வரையறு.

  55. கடல் அலை அரிமேடை என்றால் என்ன?

  56. ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக

  57. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II - 2020  (9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Questions II 2020)

Write your Comment