Plus One Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது 

    (a)

    கெளடில்யர்

    (b)

    சாணக்கியர்

    (c)

    திருவள்ளுவர்

    (d)

    இளங்கோவடிகள்

  2. கூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............

    (a)

    சங்க நடைமுறை விதிகள் 

    (b)

    கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள் 

    (c)

    கூட்டாண்மைச் சட்டம் 

    (d)

    கூட்டாண்மை

  3. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

    (a)

    வரம்பற்ற உறுப்பினர் 

    (b)

    ரொக்க வியாபாரம் 

    (c)

    தவறான நிர்வாகம் 

    (d)

    இழப்பு ஏற்படுவதால் 

  4. அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?

    (a)

    லாபம் ஈட்டுதல்

    (b)

    வேலை வாய்ப்பை உருவாக்குதல்

    (c)

    மக்களுக்கு சேவை செய்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  5. கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?

    (a)

    ICICI

    (b)

    HSBC

    (c)

    SIDBI

    (d)

    IDBI

  6. பிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.

    (a)

    பிணைய பண்டகக் காப்பகங்கள்

    (b)

    குளிர் சேமிப்பு 

    (c)

    பொது

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  7. மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?

    (a)

    தொடர்வண்டி

    (b)

    சாலை

    (c)

    கடல்

    (d)

    விமானம்

  8. பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல

    (a)

    கடன் நிதி அளிப்பு

    (b)

    இடர் பகிர்வு

    (c)

    மூலதன திரட்டுதல் உதவி

    (d)

    மட்டுப்படுத்துதல்

  9. பெயர்ச்சியியல் அரசாங்கம் தன் ஆதிக்கத்தை எதன் வழியாக செயலாக்குகிறது.

    (a)

    சட்டங்கள் வழியாக

    (b)

    செலவுகளை குறைத்தல்

    (c)

    போக்குவரத்து வழியாக

    (d)

    பகிர்ந்தளித்தல் வழியாக

  10. நெறிமுறைகளுக்கான தேவைகள் ______ 

    (a)

    உயர்மட்ட மேலாண்மை 

    (b)

    நடுத்தர அளவிலான மேலாளர்கள் 

    (c)

    மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  11. நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.

    (a)

    நிதி மேலாண்மை

    (b)

    வங்கி 

    (c)

    பண மேலாண்மை

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  12. நாட்டின் பொருளாதாரத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனிங்களின் பங்களிப்பு இன்றியமையாதவை          

    (a)

    தொழில்துறை உற்பத்தி  

    (b)

    ஏற்றுமதி    

    (c)

    வேலைவாய்ப்பு     

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  13. மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது

    (a)

    வெளிநாட்டு வியாபாரம்

    (b)

    உள்நாட்டு வியாபாரம்

    (c)

    மறு ஏற்றுமதி வியாபாரம்

    (d)

    வியாபாரம்

  14. உற்பத்தியாளரிடம் பொருட்களை வாங்கி  சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செயபவர்

    (a)

    உற்பத்தியாளர் 

    (b)

    மொத்த வியாபாரி

    (c)

    சில்லறை வியாபாரி

    (d)

    நுகர்வோர்

  15. EPC யின் விரிவாக்கம்

    (a)

    ஏற்றுமதி செயல்முறை குழு

    (b)

    ஏற்றுமதி வளர்ச்சிக்குழு

    (c)

    ஏற்றுமதி சரக்கேற்றி குழு

    (d)

    ஏற்றுமதி வளர்ச்சி காங்கிரஸ்

  16. உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்

    (a)

    1-1-1996

    (b)

    1-1-1997

    (c)

    1-1-1995

    (d)

    1-1-1994

  17. அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது

    (a)

    அலுவல் சார்ந்த மூலதனம்

    (b)

    தனியார் மூலதனம்

    (c)

    வங்கி மூலதனம்

    (d)

    அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம் 

  18. செல்லாத ஒப்பந்தம் குறிப்பது

    (a)

    சட்டத்துக்கு முரணான ஒப்பந்தத்தின் இயல்பு

    (b)

    சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியாத உடன்பாடு

    (c)

    சட்ட நடைமுறைகளை மீறுவதான ஒப்பந்தம்

    (d)

    பொதுக் கொள்கைக்கு எதிரான உடன்பாடு.

  19. A ,B,C கூட்டு ஒப்பந்தத்தின்படி 50,000 D என்பவருக்கு செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதை நிறைவேற்றுவதற்கு முன்,C இறந்து விடுகிறார்.இங்கே, ஒப்பந்தம் 

    (a)

    C யின் மரணத்தினால் ஒப்பந்தம் செல்லாது

    (b)

    C, சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து A  மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவேண்டும்.

    (c)

    A மற்றும் B மட்டும் தனியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

    (d)

    A,B மற்றும் D க்கு இடையே ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

  20. இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது

    (a)

    முழுவதும் வரி விதியிற்குட்பட்டது

    (b)

    முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது

    (c)

    வருமானம் கருதப் படுவதில்லை

    (d)

    மறைமுக வரி

  21. 7 x 2 = 14
  22. மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.

  23. போக்குவரத்து -வரையறு.

  24. தொழில் முறை நன்னெறி பொறுப்புணர்வு என்றால் என்ன?

  25. திரு .விக்ரம் என்பவர் தான் நடத்தி வரும் பின்னலாடை தொழிற்சாலைக்குக் தேவையான பஞ்சினை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறார் .இது எவ்வகை வியாபாரத்திற்கு எடூத்துகாட்டு?

  26. தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.

  27. பன்னாட்டு வணிகம் என்பதன் பொருள் யாது?

  28. துறைமுக இரசீது என்றால் என்ன?

  29. மாறுபயன் என்றால் என்ன?

  30. ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?

  31. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

  32. 7 x 3 = 21
  33. வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?

  34. தனியாள் வணிகத்தில் இரகசியத்தன்மை எப்படி காப்பாற்ற இயலும்?

  35. நிறுமத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை விவரி 

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள் என்பது பற்றி நீவீர் அறிவது யாது?

  38. குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?

  39. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

  40. வாங்குபவர்கள் மீது மின்னணு வணிகவியல் ஏற்படுத்தும் தாக்கம் என்றால் என்ன?

  41. உலகளாவிய  வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  42. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.

  43. 7 x 5 = 35
  44. பொருளாதாரச் செயல்பாடுகளும் மற்றும் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகளும் உள்ள வேறுபாடுகாளை விவரி

  45. வணிகத்திற்கு உருதுணையானவற்றைச் சுருக்கமாக விவரி

  46. ஏதேனும் ஐந்து தனிநபர் முதலீட்டு வழிகளை விளக்குக.

  47. அந்நிய நேரடி முதலீட்டினால் உண்டாகும் தீமைகளை விவரி?

  48. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

  49. சில்லறை வியாபாரிகளின் பணிகள் யாவை?

  50. துறைவாரிப் பண்டக சாலையின் நன்மைகளை விளக்குக.

  51. பன்னாட்டு வணிகத்தின் குறைபாடுகள் யாவை?

  52. ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.

  53. பன்னாட்டு நாணய நிதியகத்தினால் இந்தியா எவ்வாறு நனமை அடைந்திருக்கிறது என்பதை விளக்குக.

  54. மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக

  55. ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  56. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

  57. பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வணிகவியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Commerce Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment