10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Five Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
16,13,17,21,18 என்ற மதிப்புகளின் மாறுபாட்டுக் கெழுவைக் காண்.
2.
\(\Sigma x=99,n=9,\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79\) எனில்
(i) \({ \Sigma x }^{ 2 }\)
(ii) \(\Sigma \left( x-\bar { x } \right) \)
3.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
4.
சம அளவு விட்டமும் சம உயரமும் கொண்ட உருளை, கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம் என்ன?
5.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
1,1,1,2,2,2,3,3,3,.....
6.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
-2,2,-2,2,-2,....
7.
f(x) = (1 + x),
g(x) = (2x - 1)
எனில் fo(g(x)) ≠ gof(x) என நிரூபி.
8.
f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.
9.
கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5).
10.
A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.
11.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.
12.
BL மற்றும் CM செங்கோணம் A வில் உள்ள முக்கோணம் ABC ன் நடுக்கோடுகள் 4(BL2 + CM2) = 5BC2 என நிரூபிக்க
13.
ABC என்ற ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் AB, BC, AC-யின் (அல்லது பக்கங்களின் நீட்சி) மீது முறையே D, E, F என்ற புள்ளிகள் உள்ளன . AD:DB = 5:3, BE : EC = 3:2 மற்றும் AC = 21 எனில், கோட்டுத்துண்டு CF-யின் நீளம் காண்க.
14.
ஒரு விமானம் G-யிலிருந்து 24 கோணத்தைக் தாங்கி 250 கி.மீ தொலைவிலுள்ள H-ஐ நோக்கிச் செல்கிறது. மேலும் H-லிருந்து 55° விலகி 180 கி.மீ தொலைவிலுள்ள J-ஐ நோக்கிச் செல்கிறது எனில்,
(i) G-ன் வடக்கு திசையிலிருந்து H–ன் தொலைவு என்ன?
(ii) G-ன் கிழக்கு திசையிலிருந்து H-ன் தொலைவு என்ன?
(iii) H-ன் வடக்கு திசையிலிருந்து J-ன் தொலைவு என்ன?
(iv) H-ன் கிழக்கு திசையிலிருந்து J-ன் தொலைவு என்ன?
\(\left( \begin{matrix} \sin{ 24 }^{ \circ }=0.40476\sin{ 11 }^{ \circ }=0.1908 \\ \cos{ 24 }^{ \circ }=0.9135\cos{ 11 }^{ \circ }=0.9816 \end{matrix} \right) \)
15.
இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க?
16.
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும்.
\(\frac { \sin A-\sin B }{ \cos A+\cos B } +\frac { \cos A-\cos B }{ \sin A+\sin B } =0\)
17.
ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் பெருக்கற்பலன் 343 மற்றும் அவற்றின் கூடுதல் \(\frac { 91 }{ 3 } \) எனில், அந்த மூன்று உறுப்புகளைக் காண்க.
18.
A(0,5) மற்றும் B(4,1) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோடானது C(4,4) - ஐ மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு எனில்,
(i) AB என்ற கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(ii) C வழியாகவும் AB என்ற கோட்டிற்குச் செங்குத்தாக உள்ள நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(iii) AB என்ற கோடானது வட்டத்தைத் தொடும் புள்ளியைக் காண்க.
19.
70004 மற்றும் 778 ஆகிய எண்களை 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
20.
ஒரு குறிப்பிட்ட பருவத்தில் 6 நாள்களில் பெய்யும் மழையின் அளவானது 17.8 செ.மீ, 19.2 செ.மீ, 16.3 செ.மீ, 12.5 செ.மீ, 12.8 செ.மீ, 11.4 செ.மீ எனில், இந்த தரவிற்கு திட்டவிலக்கம் காண்க.
21.
உயரம் 2.4 செ.மீ மற்றும் விட்டம் 1.4 செ.மீ கொண்ட ஒரு திண்ம உருளையில் இருந்து அதே விட்டமும் உயரமும் உள்ள ஒரு கூம்பு வெட்டி எடுக்கப்பட்டால் மீதமுள்ள திண்மத்தின் கனஅளவு எவ்வளவு கன செ.மீ ஆகும்?
22.
23.
24.
ஒரு நிறுவனத்தில் உதவியாளர்கள் (A) எழுத்தர்கள்(C), மேலாளர்கள் (M) மற்றும் நிர்வாகிகள் (E) ஆகிய நான்கு பிரிவுகளில் பணியாளர்கள் உள்ளனர். A, C, M மற்றும் E பிரிவு பணியாளர்களுக்கு ஊதியங்கள் முறையே ₹10,000, ₹25,000, ₹ 50,000 மற்றும் ₹1,00,000 ஆகும். A1, A2, A3, A4 மற்றும் A5 ஆகியோர் உதவியாளர்கள். C1, C2, C3, C4 ஆகியோர் எழுத்தர்கள். M1, M2, M3 ஆகியோர்கள் மேலாளர்கள் மற்றும் E1, E2 ஆகியோர் நிர்வாகிகள் ஆவர். xRy என்ற உறவில் x என்பது y என்பவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் எனில் R-என்ற உறவை, வரிசைச் சோடிகள் மூலமாகவும் அம்புக்குறி படம் மூலமாகவும் குறிப்பிடுக.
25.
சார்பு f மற்றும் g ஆகியவை f(x) = 6x + 8; g(x) = \(\frac { x-2 }{ 3 } \) எனில்,
(i) \(gg\left( \frac { 1 }{ 2 } \right) \)-யின் மதிப்பைக் காண்க.
(ii) gf(x)-ஐ எளிய வடிவில் எழுதுக.
26.
\(\cfrac { { 2x }^{ 3 }+{ x }^{ 2 }+3 }{ \left( { x }^{ 2 }+2 \right) ^{ 2 } } \) -யிலிருந்து \(\cfrac { 1 }{ { x }^{ 2 }+2 } \) ஐக் கழிக்க.
27.
6 மீ மற்றும் 3 மீ உயரமுள்ள இரண்டு செங்குத்தான தூண்கள் AC என்ற தரையின் மேல் படத்தில் காட்டியுள்ளவாறு ஊன்றப்பட்டுள்ளது எனில், y -யின் மதிப்பு காண்க

28.
X + Y =\(\left[\begin{matrix} 7 & 0 \\ 3 & 5 \end{matrix} \right]\) மற்றும் X - Y = \(\left[\begin{matrix} 3 & 0 \\ 0 & 4 \end{matrix} \right]\) எனில், X மற்றும் Y ஆகிய அணிகளைக் காண்க.
1.
சராசரி \(\bar { x } =\cfrac { 16+13+17+21+18 }{ 5 } =\cfrac { 85 }{ 5 } =17\)
| x | d =x-17 | d2 |
|---|---|---|
| 16 | -1 | 1 |
| 13 | -4 | 16 |
| 17 | 0 | 0 |
| 21 | 4 | 16 |
| 18 | 1 | 1 |
| \(\Sigma d=0\) | \({ \Sigma d }^{ 2 }=34\) |
\(\sigma =\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 34 }{ 5 } } =\sqrt { 6.8 } \)
\(\sigma =2.61\)
மாறுபாட்டுக் கெழு
\(CV=\cfrac { \sigma }{ \bar { x } } \times 100=\cfrac { 2.61 }{ 17 } \times 100\)
= 15.35%
2.
n = 9,\({ \Sigma x }=99\),\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 99 }{ 9 } =11\)
\(\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79={ \Sigma x }^{ 2 }-20x+100=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\Sigma x+100\times 9=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\times 99+100=79\)
\({ \Sigma x }^{ 2 }=79+1980-900=1159\)
\(\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=\Sigma \left( x-11 \right) ^{ 2 }=\Sigma \left( { x }^{ 2 }-22x+121 \right) \)
= \({ \Sigma x }^{ 2 }-22\Sigma x+121\times 9\)
= \(1159-22\times 99+1089=70\)
\(\therefore { \Sigma x }^{ 2 }=1159,\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=70\)
3.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
4.
உருளையின் கன அளவு \(={ \pi r }^{ 2 }h\)
கூம்பின் கன அளவு \(=\frac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }h\)
கோலத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
அவற்றின் கன அளவுகளின் விகிதம் V1:V2:V3
\(h:\frac { h }{ 3 } :\frac { 4r }{ 3 } \)
3h:h:4r
3h:h:2(2r) (இங்கு 2r=h)
∴ V1:V2:V3=3:1:2
5.
1,1,1,2,2,2,3,3,3
t2-t1=1-1=0
t3-t2=1-1=0
t4-t3=2-1=1
இங்கு t2-t1≠t3-t2.
∴ இது ஒரு கூட்டுத் தொடர் அல்ல.
6.
-2,2,-2,2,-2
t2-t1=2-(-2)=4
t3-t2=-2-2=-4
t4-t3=2-(-2)=4
இது ஒரு கூட்டுத்தொடர் வரிசை அல்ல.
7.
f (x) = 1 + x
g (x) = (2x - 1)
fog (x) = f (g(x)) = f(2x - 1)
= 1 + 2x - 1 = 2x ....(1)
gof (x) = g(f(x)) = g(1 + x) = 2(1 + x) -1
= 2 + 2x -1
= 2x + 1
(1) ≠ (2)
∴ fog (x) ≠ gof (x) எனவே நிரூபிக்கப்பட்டது.
8.
A-யின் வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உறுப்புகளை கொண்டுள்ளன. B-ன் ஒவ்வொரு உறுப்புக்கும் முன் உரு உள்ளது.
∴ இது ஒரு ஒன்றுக்கொன்றான மேல் சார்பு ஆகும்.
9.
A (1, -1), B(-4, 6), மற்றும் C(-3, -5) சூத்திரத்தை பயன்படுத்தி
Δ = \(\frac { 1 }{ 2 } \) {x1(y2 - y3) + x2(y3 - y1) + x3(y1 - y2)} சதுர அலகுகள்
= \(\frac { 1 }{ 2 } \) [1 (6 + 5 ) + (-4) (-5 + 1) + (-3) (- 1 - 6)]
= \(\frac { 1 }{ 2 } \) [11 + 16 + 21] = 24 சதுர அலகுகள்
∴ முக்கோணத்தின் பரப்பு = 24 சதுர அலகுகள்
10.
P, Q என்ற புள்ளிகள் AB கோட்டினை
AP = PQ = QB எனப் பிரிப்பதாகக் கொள்வோம்.
எனவே P ஆனது AB ஐ உட்புறமாக 1:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது. எனவே, P பிரிவு சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(P(x,y)=\left[ \frac { 1(-7)+2(2) }{ 1+2 } ,\frac { 1(7)+2(-2) }{ 1+2 } \right] \) i.e., (-1, 0)
மேலும் Q ஆனது AB இன் உட்புறமாக 2:1 என்ற விகிதத்தில் Q பிரிக்கிறது.
\(\therefore Q(x,y)=\left[ \frac { 2(-7)+1(2) }{ 2+1 } ,\frac { 2(4)+(-2) }{ 2+1 } \right] \) i.e., (-4, 2)
∴ AB கோட்டினை P(-1, 0) மற்றும் (-4, 2) புள்ளிகள் மூன்றும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன.
11.
நிரூபணம்:
ΔABC ஒரு செங்கோண முக்கோணம்
∠B செங்கோணம்
நிரூபிக்க வேண்டியது: AC2 = AB2 + BC2
அமைப்பு: BC 丄 AC
ΔABC = ΔABC
\(\frac { AD }{ AB } =\frac { AB }{ AC } \)
(பக்கங்களின் விகிதம்)
AD · AC = AB2 ...(1)
மேலும், ΔBDC ~ ΔABC
\(\frac { CD }{ BC } =\frac { BC }{ AC } \)
CD · AC =BC2 ...(2)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
AD.AC+CD.AC = AB2+ BC2
AC(AD+CD) = AB2 + BC2
AC.AC = AB2+ BC2
AC2 = AB2 + BC2
12.
BL மற்றும் CM என்பன ΔABC யின் நடுக்கோடுகள்
A = ∠90°.
ΔABC யிலிருந்து
BC2 = AB2 + AC2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔABL லிருந்து,
BL2 = AL2 + AB2
\(BL^{ 2 }={ \left( \frac { AC }{ 2 } \right) }^{ 2 }+{ AB }^{ 2 }\)....(1)
(L ஆனது BC யின் நடுப்புள்ளி)
\({ BL }^{ 2 }=\frac { { AC }^{ 2 } }{ 4 } +{ AB }^{ 2 }\)
4BL2 = AC2 + 4AB2 ...(2)
ΔCMA லிருந்து,
CM2 = AC2 + AM2
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+{ \left( \frac { AB }{ 2 } \right) }^{ 2 }\)
(M ஆனது AB யின் நடுப்புள்ளி)
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+\frac { { AB }^{ 2 } }{ 4 } \)
4CM2 = 4AC2 + AB2 ...(3)
(2) மற்றும் (3) ஐ கூட்ட கிடைப்பது
4(BL2 + CM2) = 5(AC2 + AB2)
4(BL2 + CM2) = 5BC2 [(1) லிருந்து]
13.
கொடுக்கப்பட்ட முக்கோணம் ΔABC இல் D, E, F என்பவை முறையே பக்கங்கள் AB, BC, AC இல் அல்லது அவற்றின் நீட்சியில் அமைந்த புள்ளிகள்.
\(\mathrm{AD}: \mathrm{DB}=5: 3 \)
\(\mathrm{BE}: \mathrm{EC}=3: 2\)
\(\mathrm{AD}=5 \mathrm{k}_1 ; \mathrm{DB}=3 \mathrm{k}_1 ; \mathrm{BE}=3 \mathrm{k}_2 ; \mathrm{EC}=2 \mathrm{k}_2\) என்க
மெனிலாஸ் தேற்றத்தின்படி
\(\frac{B E}{E C} \times \frac{C F}{F A} \times \frac{A D}{D B} =-1 \)
\(\frac{3 k_2}{2 k_2} \times \frac{C F}{F C-A C} \times \frac{5 k_1}{3 k_1} =-1 \)
\(\frac{3}{2} \times \frac{C F}{F C-21} \times \frac{5}{3} =-1 \)
\(\frac{C F}{F C-21} =\frac{-1 \times 2}{5} \)
\(\frac{C F}{(-C F)-21} =\frac{-2}{5} \)
\(5 C F =-2[(-C F)-21] \)
\(5 C F =2 C F+42 \quad[\because \text { FC }=-C F] \)
\(5 C F-2 C F =42 \)
\(3 C F =42 \)
\(C F =\frac{42}{3}=14\) அலகுகள்
14.
(i) செங்கோன Δ GOH-ல் cos 24° = \(\frac { OG }{ GH } \)
0.9135 = \(\frac { OG }{ 250 } \); OG = 228.38 கி.மீ
G-ன் வடக்கு திசையிலிருந்து H-ன் தொலைவு = 228.38 கி.மீ.
(ii) செங்கோண Δ GOH-ல்,
sin 24° = \(\frac { OH }{ GH } \)
0.4067 = \(\frac { OH }{ 250 } \); OH = 101.68
G-ன் கிழக்கு திசையிலிருந்து H-ன் தொலைவு 101.68 கி.மீ.
(iii) செங்கோண Δ HIJ-ல்
sin11° = \(\frac { IJ }{ HJ } \)
0.1908 = \(\frac { IJ }{ 180 } \); IJ = 34.34 கி.மீ
H-ன் வடக்கு திசையிலிருந்து J-ன் தொலைவு = 34.34 கி.மீ.
(iv) செங்கோண Δ HIJ-ல்,
cos11° = \(\frac { HI }{ HJ } \)
0.9816 = \(\frac { HI }{ 180 } \); HI = 176.69 கி.மீ
H-ன் கிழக்கு திசையிலிருந்து J-ன் தொலைவு = 176.69 கி.மீ.
15.
இரண்டு பகடைகள் ஒன்றாக உருட்டப்படும் பொழுது அதன் கூறுவெளியில் 6 x 6 = 36 உறுப்புகள் இருக்கும். எனவே n(S) = 36
A-ஆனது இரண்டு பகடைகளிலும் ஒரே முக மதிப்புகள் மற்றும் B-ஆனது இரண்டு பகடைகளின் முக மதிப்புகளின் கூடுதல் 4-ஆக கிடைக்கப்பெறும் நிகழ்ச்சிகள் என்க.
எனவே, A = {(1,1),(2,2),(3,3),(4,4),(5,5),(6,6)}
B = {(1,3),(2,2),(3,1)}
A\(\cap \)B = {(2,2)}
எனவே, n(A) = 6, n(B) = 3, n(A\(\cap \)B) = 1
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 6 }{ 36 } \)
\(P(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 3 }{ 36 } \)
\(P(A\cap B)=\frac { n(A\cap B) }{ n(S) } =\frac { 1 }{ 36 } \)
P (ஒரே முக மதிப்புகள் அல்லது முக மதிப்புகள் கூடுதல் 4 கிடைக்க) = P(A\(\cup \)B)
P(A\(\cup \)B) = P(A) + P(B) - P(A∩B)
\(=\frac { 6 }{ 36 } +\frac { 3 }{ 36 } -\frac { 1 }{ 36 } =\frac { 8 }{ 36 } =\frac { 2 }{ 9 } \)
எனவே, தேவையான நிகழ்தகவு \(\frac {2}{9}\)ஆகும்.
16.
\(\frac{\sin A-\sin B}{\cos A+\cos B} + \frac{\cos A-\cos B}{\sin A+\sin B}=0\)
இடப்பக்கம் \(=\frac{\sin A-\sin B}{\cos A + \cos B} + \frac{\cos A-\cos B}{\sin A + \sin B}\)
\(=\frac{(\sin A-\sin B)(\sin A+\sin B)+(\cos A-\cos B)(\cos A+\cos B)}{(\cos A+\cos B)(\sin A+\sin B)} \)
\(=\frac{\left(\sin ^2 A-\sin ^2 B\right)+\left(\cos ^2 A-\cos ^2 B\right)}{(\cos A+\cos B)(\sin A+\sin B)} \)
\(=\frac{\sin ^2 A-\sin ^2 B+\cos ^2 A-\cos ^2 B}{(\cos A+\cos B)(\sin A+\sin B)} \)
\(=\frac{\left(\sin ^2 A+\cos ^2 A\right)-\left(\sin ^2 B+\cos ^2 B\right)}{(\cos A+\cos B)(\sin A+\sin B)} \)
\(=\frac{1-1}{(\cos A+\cos B)(\sin A+\sin B)} \)
\( {\left[\because \sin ^2 \theta+\cos ^2 \theta=1\right] } \)
\(= \frac{0}{(\cos A+\cos B)(\sin A+\sin B)}=0 \)
= வலப்பக்கம்
17.
அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்டுள்ளதால் அந்த மூன்று உறுப்புகளை நாம் \(\frac { a }{ r } \), a, ar என எடுத்துக் கொள்வோம்.
உறுப்புகளின் பெருக்கற்பலன் = 343
\(\frac { a }{ r } \) x a x ar =343
a3 = 73 ⇒ a = 7
உறுப்புகளின் கூடுதல் =\(\frac { 91 }{ 3 } \)
ஆகவே, a\(\left( \frac { 1 }{ r } +1+r \right) =\frac { 91 }{ 3 } \)-
\(7\left( \frac { 1+r+r^{ 2 } }{ r } \right) =\frac { 91 }{ 3 } \)
3 + 3r + 3r2 = 13r ⇒ 3r2 - 10r + 3 = 0
(3r - 1)(r - 3) = 0 ⇒ r = 3 அல்லது r = \(\frac{1}{3}\)
a = 7, r = 3 எனில், தேவையான மூன்று உறுப்புகள் \(\frac { 7 }{ 3 } \), 7, 21
a = 7, r = \(\frac{1}{3}\) எனில், தேவையான மூன்று உறுப்புகள் 21, 7, \(\frac { 7 }{ 3 } \).
18.
(i) A(0, 5) மற்றும் B(4,1) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் AB என்ற கோட்டின் சமன்பாடு
\(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
\(\frac { y-5 }{ 1-5 } =\frac { x-0 }{ 4-0 } \)
4(y -5) = −4x ஆகவே, y –5 = – x
x + y – 5 = 0
(ii) AB என்ற கோட்டின் சமன்பாடு x + y − 5 = 0 இந்த நேர்க்கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சமன்பாடு x − y + k = 0 ஆகும்.
இக்கோடானது மையம் (4,4) என்ற புள்ளி வழிச் செல்வதால்,
4 – 4 + k = 0 எனவே, k = 0
C வழியாக AB -க்கு செங்குத்தாக அமையும் நேர்க்கோட்டின் சமன்பாடு x − y = 0
(iii) x + y − 5 = 0 மற்றும் x − y = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியே AB என்ற கோடானது வட்டத்தைத் தொடும் புள்ளி ஆகும்.
x + y − 5 = 0 மற்றும் x − y = 0 இவற்றைத் தீர்ப்பதின் மூலம்.
x = \(\frac 52\) மற்றும் y = \(\frac 52\)
எனவே, தொடுபுள்ளி P–யின் ஆயப் புள்ளிகள் \(\left( \frac { 5 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right) \) ஆகும்.
19.
70000 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
70000 ≡ 0 (மட்டு 7)
70000 + 4 ≡ 0 + 4 (மட்டு 7)
70004 ≡ 4 (மட்டு 7)
எனவே 70004 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 4.
777 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
777 ≡ 0 (மட்டு 7)
777 + 1 ≡ 0 + 1 (மட்டு 7)
778 ≡ 1 (மட்டு 7)
எனவே, 778 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 1.
20.
கொடுக்கப்பட்ட தரவின் ஏறுவரிசையில் எழுதக் கிடைப்பது 11.4, 12.5, 12.8, 16.3, 17.8, 19.2 ஆகும்.
தரவுப் புள்ளிகளின் எண்ணிக்கை n = 6
சராசரி \(=\frac { 11.4+12.5+12.8+16.3+17.8+19.2 }{ 6 } =\frac { 90 }{ 6 } =15\)
| xi | di=xi-\(\overset{-}{x }\) =x -15 |
di2 |
| 11.4 | -3.6 | 12.96 |
| 12.5 | -2.5 | 6.25 |
| 12.8 | -2.2 | 4.84 |
| 16.3 | 1.3 | 1.69 |
| 17.8 | 2.8 | 7.84 |
| 19.2 | 4.2 | 17.64 |
| \(\sum \)di2=51.22 |
திட்ட விலக்கம் \(\sigma =\sqrt { \frac { { \sum { d } }_{ i }^{ 2 } }{ n } } \)
\(=\sqrt { \frac { 51.22 }{ 6 } } =\sqrt { 8.53 } \)
ஆகவே, \(\sigma \simeq 2.9\)
21.
திண்ம உருளையின் விட்டம் = 1.4 செ.மீ
திண்ம உருளையின் ஆரம் \(=\frac{1.4}{2}=0.7\) செ.மீ
திண்ம உருளையின் உயரம் = 2.4 செ.மீ
உருளையின் கன அளவு \(=\pi r^2 h\) கனஅலகுகள்
\(=\frac{22}{7} \times 0.7 \times 0.7 \times 2.4\)
கூம்பின் ஆரம் = 0.7 செ.மீ
கூம்பின் உயரம் = 2.4 செ.மீ
கூம்பின் கன அளவு \(=\frac{1}{3} \pi r^2 h\) கன அலகுகள்
\(=\frac{1}{3} \times \frac{22}{7} \times 0.7 \times 0.7 \times 2.4\)
\(\therefore\) மீதமுள்ள திண்மத்தின் கன அளவு = உருளையின் கன அளவு- கூம்பின் கன அளவு
\(=\frac{22}{7} \times 0.7 \times 0.7 \times 2.4-\frac{1}{3} \times \frac{22}{7} \times 0.7 \times 0.7 \times 2.4\)
\(=\frac{22}{7} \times 0.7 \times 0.7 \times 2.4\left(1-\frac{1}{3}\right) \)
\(=\frac{22}{7} \times 0.7 \times 0.7 \times 2.4 \times \frac{2}{3}=2.464 \) செ.மீ
மாற்றுமுறை : உருளை மற்றும் கூம்பு ஆகியவற்றின் உயரங்கள் சமமாகவும், ஆரங்கள் சமமாகவும் இருப்பதால் மீதமுள்ள திண்மத்தின் கன அளவு = உருளையின் கன அளவு - கூம்பின் கன அளவு
\(=\pi r^2 h-\frac{1}{3} \pi r^2 h \)
\(=\frac{2}{3} \pi r^2 h \)
\(=\frac{2}{3} \times \frac{22}{7} \times(0.7)^2(2.4) \)
= 2.464 செ.மீ3
22.
23.
24.
உறவு R என்பது x R y என வரையறுக்கப்படுகிறது. x என்பது y என்ற பணியாளருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம்.
வரிசைச் சோடி:
உறவு R = {(10000, A1), (10000, A2), (10000, A3), (10000, A4), (10000, A5), (25000, C1), (25000, C2), (25000, C3), (25000, C4), (50000, M1), (50000, M2), (50000, M3), (100000, E1), (100000, E2)}
அம்புக்குறி படம்:

25.
\(\mathrm{f}(\mathrm{x})=6 \mathrm{x}+8, \mathrm{~g}(\mathrm{x})=\frac{x-2}{3} \)
(i) \(g\left(\frac{1}{2}\right)=\frac{\frac{1}{2}-2}{3}=\frac{1-4}{2 \times 3}=-\frac{3}{6}=-\frac{1}{2} \)
\(\therefore g g\left(\frac{1}{2}\right)=g\left[g\left(\frac{1}{2}\right)\right] \)
\(=g\left(-\frac{1}{2}\right)=\frac{-\frac{1}{2}-2}{3}=\frac{-1-4}{2 \times 3}=-\frac{5}{6}\)
(ii) \(\mathrm{g} \mathrm{f}(\mathrm{x})=\mathrm{g}[\mathrm{f}(\mathrm{x})]=\mathrm{g}[6 \mathrm{x}+8] \)
\(=\frac{6 x+8-2}{3}=\frac{6 x+6}{3} \)
\(=\frac{6(x+1)}{3}=2(x+1)\)
26.
\(\frac{2 x^3+x^2+3}{\left(x^2+2\right)^2}-\frac{1}{x^2+2} =\frac{2 x^3+x^2+3-\left(x^2+2\right)}{\left(x^2+2\right)^2} \)
\(=\frac{2 x^3+x^2+3-x^2-2}{\left(x^2+2\right)^2} \)
\(=\frac{2 x^3+1}{\left(x^2+2\right)^2}\)
27.
ΔPAC, ΔQBC இவை வடிவொத்த முக்கோணங்கள்
AP மற்றும் CR என்பன 6 மீ மற்றும் 3 மீ உயரமுடைய செங்குத்துத் தூண்கள் என்க BQ = y மீ
ΔCRA மற்றும் ΔBQA இல்
∠A = ∠A (பொதுக்கோணம்)
\(\angle A C R=\angle A B Q=90^{\circ}\)
∴ AA வடிவொப்புமை விதிமுறைப்படி,
\(\triangle C R A \sim \triangle B Q A\)
∴ அவற்றின் ஒத்த பக்கங்கள் விகிதசமம்.
\(\frac{A C}{A B}=\frac{C R}{B Q} \)
\(\frac{A C}{A B} =\frac{3}{y} \)
\(A B =\frac{A C \times y}{3} \) ....(1)
ΔCBQ மற்றும் ΔCAP இல்
\(\angle C B Q =\angle C A P=90^{\circ} \)
∠C = ∠C [பொதுக்கோணம்]
\(\therefore \triangle CB Q \sim \Delta C A P \)
\(\frac{C B}{C A} =\frac{B Q}{A P} \)
\(\frac{C B}{C A} =\frac{y}{6} \)
\( \mathrm{BC}=\frac{y \times C A}{6} \) ...(2)
\((1)+(2) \Rightarrow \mathrm{AB}+\mathrm{BC}=\frac{A C \times y}{3}+\frac{y \times C A}{6}\)
\(A C=y \times A C\left(\frac{1}{3}+\frac{1}{6}\right) \)
\(\frac{A C}{A C} =y\left(\frac{2+1}{6}\right) \)
\(1 =y\left(\frac{3}{6}\right) \)
\(1 =\frac{1}{2} y \)
y = 2 மீ
28.
\(\begin{aligned} &X+Y=\left(\begin{array}{ll} 7 & 0 \\ 3 & 5 \end{array}\right) \\ \end{aligned}\) ....(1)
\(\begin{aligned} &X-Y=\left(\begin{array}{ll} 3 & 0 \\ 0 & 4 \end{array}\right) \end{aligned}\) ....(2)
\(\begin{aligned} (1)+(2) \Rightarrow 2 \mathrm{X} &=\left(\begin{array}{cc} 10 & 0 \\ 3 & 9 \end{array}\right) \\ \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{X} &=\frac{1}{2}\left(\begin{array}{cc} 10 & 0 \\ 3 & 9 \end{array}\right) \\ \end{aligned}\)
\(\begin{aligned} &=\left(\begin{array}{cc} 5 & 0 \\ 3 / 2 & 9 / 2 \end{array}\right) \end{aligned}\)
(1) –ல் பிரதியிட,
\(\begin{aligned} Y &=\left(\begin{array}{ll} 7 & 0 \\ 3 & 5 \end{array}\right)-\left(\begin{array}{cc} 5 & 0 \\ 3 / 2 & 9 / 2 \end{array}\right) \\ \end{aligned}\)
\(\begin{aligned} &=\left(\begin{array}{cc} 2 & 0 \\ 3 / 2 & 1 / 2 \end{array}\right) \\ \end{aligned}\)
\(\begin{aligned} \therefore \mathrm{X} &=\left(\begin{array}{cc} 5 & 0 \\ 3 / 2 & 9 / 2 \end{array}\right) \\ \end{aligned}\)மற்றும் \(\begin{aligned} \mathrm{Y} &=\left(\begin{array}{cc} 2 & 0 \\ 3 / 2 & 1 / 2 \end{array}\right) \end{aligned}\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards