10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5 மாணவர்கள் 50 மதிப்பெண் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 20,25,30,35,40 அவற்றின் திட்ட விலக்கம் காண். மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் புதிய எண்களின் திட்டவிலக்கம் காண்.
2.
5,10,15,20,25 என்ற எண்களின் திட்டவிலக்கம் காண். மேலும் 3 என்ற எண்ணை ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைக்கும் எண்களின் திட்ட விலக்கம் காண்.
3.
செவ்வக வடிவ தொட்டியின் கொள்ளளவு 28மீx16மீ x 11மீ ஆரமும் கொண்ட உருளையின் உயரம் என்ன?
4.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)
5.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
1,-1,-3,-5,....
6.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
4,10,16,22,....
7.
A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9} மற்றும் சார்பு f: A ⟶ B என்ற சார்பானது f(x) = 2x + 1 என வரையறுக்கப்படுகிறது. இதனை (i) வரிசைச் சோடி கணம் (ii) அட்டவணை (iii) அம்புக்குறிப் படம் (iv) வரைபட முறையில் குறிக்க.
8.
A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.
9.
கீழ்காணும் புள்ளிகள் (1, 7), (4, 2), (-1, -1) மற்றும் (-4, 4) சதுரத்தின் உச்சிகள் எனக் காட்டுக.
10.
(x,y) எனும் புள்ளி (7, 1) மற்றும் (3, 5) லிருந்து சமதூரத்தில் உள்ளதெனில், x மற்றும் y இடையேயான உறவைக் காண்க.
11.
படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.
12.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
13.
\(\Delta \)ABC -யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன. பின்வருவனவற்றிற்கு DE || BC என நிறுவுக.
AB = 5.6 செ.மீ, AD = 1.4 செ.மீ, AC = 7.2 செ.மீ மற்றும் AE = 1.8 செ.மீ.
14.
20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சியில் ஒரு விளையாட்டு வீரர் அமர்ந்துகொண்டு தரையிலுள்ள ஒரு பந்தை 60ϒ இறக்கக்கோணத்தில் காண்கிறார் எனில், கட்டட அடிப்பகுதிக்கும் பந்திற்கும் இடையேயுள்ள தொலைவைக் காண்க. (\(\sqrt 3\) = 1.732)
15.
ஒரு கோபுரம் தரைக்குச் செங்குத்தாக உள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதியிலிருந்து தரையில் 48 மீ தொலைவில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து கோபுர உச்சியின் ஏற்றக்கோணம் 30° எனில், கோபுரத்தின் உயரத்தைக் காண்க.
16.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. இரண்டு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
17.
ஒரு பகடை உருட்டப்படும் அதே நேரத்தில் ஒரு நாணயமும் சுண்டப்படுகிறது. பகடையில் ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கும், நாணயத்தில் தலைக் கிடைப்பதற்குமான நிகழ்தகவைக் காண்க.
18.
\(8,7,\frac { 1 }{ 4 } ,6\frac { 1 }{ 2 } ,5\frac { 3 }{ 4 } \) ... என்ற கூட்டுத் தொடர்வரிசையின் முதல் 15 உறுப்புகளின் கூடுதல் காண்க.
19.
கீழ்க்காணும் இருபடிச் சமன்பாடுகளுக்கு மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் காண்க.
x2 + 3x - 28 = 0
20.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இருபடிச் சமன்பாடுகளின் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் ஆகியவற்றைக் காண்க.
(i) x2 + 8x - 65 = 0
(ii) 2x2 + 5x + 7 = 0
(iii) kx2 - k2x - 2k3 = 0
21.
12 செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
22.
X அச்சுடன் மிகை திசையில் சாய்வு கோணத்தைக் கொண்ட கோட்டின் சாய்வு என்ன?
90°
23.
10 மீ உட்புற விட்டம் மற்றும் 14 மீ ஆழம் கொண்ட ஓர் உருளை வடிவக் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மண் கொண்டு 5 மீ அகலத்தில் கிணற்றைச் சுற்றி மேடை அமைக்கப்படுகிறது எனில், மேடையின் உயரத்தைக் காண்க.
24.
f(x) = 2x - x2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில்,
(i) f (1)
(ii) f (x + 1)
(iii) f (x) + f (1) ஆகியவற்றைக் காண்க.
25.
If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மற்றும் B -ஐ காண்க.
26.
ABCD என்ற ஒரு சரிவகத்தில் AB || DC மற்றும் P, Q என்பன முறையே பக்கங்கள் AD மற்றும் BC–யின் மீது அமைந்துள்ள புள்ளிகள் ஆகும். மேலும் PQ || DC, PD = 18 செ.மீ, BQ = 35 செ.மீ மற்றும் QC = 15 செ.மீ எனில், AD காண்க
27.
பின்வரும் பெருக்குத் தொடர்வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
(i) 4, 8, 16,... 8192
(ii) \(\frac { 1 }{ 3 } ,\frac { 1 }{ 9 } ,\frac { 1 }{ 27 } ,....\frac { 1 }{ 2187 } \)
28.
கீழ்க்கண்ட புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க.
(1, –1), (–4, 6) மற்றும் (–3, –5)
1.
ஊகச் சராசரி A =30
C = 5
| x | \({ d }^{ ' }=\cfrac { x-30 }{ 5 } \) | d'2 |
| 20 | -2 | 4 |
| 25 | -1 | 1 |
| 30 | 0 | 0 |
| 35 | 1 | 1 |
| 40 | 2 | 4 |
| \(\Sigma { d }^{ ' }=0\) | \(\Sigma { d }^{ '2 }=10\) |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 }\times 2 } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் ஒவ்வொரு மதிப்பெண்களையும் 2 ஆல் பெருக்க வேண்டும்.\(\therefore \) புதிய மதிப்புகள் 40,50,60,70,80
A =60,C=10 என்க
| \({ d }^{ ' }=\cfrac { x-60 }{ 10 } \) | d'2 | |
|---|---|---|
| 40 | -2 | 4 |
| 50 | -1 | 1 |
| 60 | 0 | 0 |
| 70 | 1 | 1 |
| 80 | 2 | 4 |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 } } \times c\)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0 } \times 10\)
= \(\sqrt { 2 } \times 10=10\sqrt { 2 } \)
\(\therefore \) புதிய திட்டவிலக்கம், முதல் திட்டவிலகத்தை 2 ஆல் பெருக்கக் கிடைக்கிறது.
2.
| x | \({ d }^{ ' }=\cfrac { x-15 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 5 | -2 | 4 |
| 10 | -1 | 1 |
| 15 | 0 | 0 |
| 20 | 1 | 1 |
| 25 | 2 | 4 |
| \(\Sigma d=0\) | \(\Sigma d'^{ 2 }=10\) |
\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 75 }{ 5 } =15\)
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
A என்பது ஊகச் சராசரி, C என்பது பொதுக் காரணி
இங்கு A =15,C =5
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
= \(\sigma =\sqrt { \left( \cfrac { \Sigma d'2 }{ n } \right) -\left( \cfrac { \Sigma d' }{ n } \right) ^{ 2 }\times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times c } =\sqrt { 2 } \times 5\)
= \(5\sqrt { 2 } \)
3 ஐ ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைப்பது 8,13,18,23,28 என்ற புதிய மதிப்புகள்
| x | \({ d }^{ ' }=\cfrac { x-18 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 8 | -2 | 4 |
| 13 | -1 | 1 |
| 18 | 0 | 0 |
| 23 | 1 | 1 |
| 28 | 2 | 4 |
| \(\Sigma d'=0\) | \(\Sigma { d }^{ '2 }=0\) |
\(\therefore \sigma =\sqrt { \left( \cfrac { \Sigma { d }^{ '{ 2 } } }{ n } \right) -\left( \cfrac { \Sigma { d }^{ ' } }{ n } \right) \times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
திட்டவிலக்கம் மாறவில்லை.
\(\therefore \) ஒரு எண்ணை கூடினாலோ, கழித்தாலோ திட்டவிலக்கம் மாறாது.
3.
உருளையின் கன அளவு=செவ்வக தொட்டியின் கன அளவு
πr2h=28x16x11மீ3
உருளையின் உயரம் h=\(\frac{16\times11}{88}\)=2மீ
4.
வாளியானது கூம்பின் இடைக்கண்டம். இடைக்கண்டத்தின் r1=28 செ.மீ, r2=7செ.மீ, h=45 செ.மீ
வாளியின் கொள்ளளவு=இடைக்கண்டத்தின் கன அளவு
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \pi h[{ r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 2 }^{ 2 }+{ r }_{ 1 }{ r }_{ 2 }]\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\left[ { 28 }^{ 2 }+{ 7 }^{ 2 }+28\times 7) \right] \)
\(\Rightarrow 22\times 15\times \times (28\times 4+7+28)\)
⇒330x147 செ.மீ3 ⇒ 48510 செ.மீ3
5.
1,-1,-3,-5
t2-t1=-1-1=-2
t3-t2=-3-(-1)=-2
t4-t3=-5-(-3)=-2
இது ஒரு A.P பொது வித்தியாசம் -2.
அடுத்த இரண்டு உறுப்புகள் (-5+(-2))=-7,-7+(-2)=-9, i.e \(\underline { -7 } ,\underline {-9} .\)
6.
4,10,16,22,..
இங்கு a2-a2=10-4=6
a3-a2=16-10=6
a4-a3=22-16=6
∴ அது ஒரு A.P. பொது வித்தியாசம் 6.
∴ அடுத்து இரண்டு உறுப்புகள், \(\underline { 28 } ,\underline { 34 } .\)
7.
A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9}
f(x) = 2x +1
f(0) = 2(0) + 1 = 1
f(1) = 2(1) + 1 = 3
f(2) = 2(2) + 1 = 5
f(3) = 2(3) + 1 = 7
(i) வரிசைச் சோடி கணம்
f = {(0, 1), (1, 3), (2, 5), (3, 7)}
(ii) அட்டவணை
| x | 0 | 1 | 2 | 3 |
|---|---|---|---|---|
| f(x) | 1 | 3 | 5 | 7 |
(iii) அம்புக்குறி படம்
(iv) வரைபடம்
f = {(x, f(x)/ x ∈ A}
= {(0, 1), (1, 3), (2, 5), (3, 7)}
8.
R-ன் மதிப்பகம் = {1, 2, 3, 4}
R-ன் துணை மதிப்பகம் = B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}
R-ன் வீச்சகம் = {3, 6, 10, 9}
9.
A (1, 7), B (4, 2), C (-1, -1) மற்றும் D (-4, 4) என்க. ABCD ஒரு சதுரம் என நிரூபிக்க வேண்டுமாயின் அதன் நான்கு பக்கங்களும் சமம் என்றும் மூலைவிட்டங்கள் சமம் என்றும் நிரூபிக்க வேண்டும்.
d = \(\sqrt { { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) }^{ 2 }+{ \left( { y }_{ 2 }-{ y }_{ 1 } \right) }^{ 2 } } \)
∴ AB = \(\sqrt { { \left( 1-4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
BC = \(\sqrt { { \left( 4+1 \right) }^{ 2 }+{ \left( 2+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
CD = \(\sqrt { { \left( -1+4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
DA = \(\sqrt { { \left( 1+4 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
AC = \(\sqrt { { \left( 1+1 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 4+64 } =\sqrt { 68 } \)
BD = \(\sqrt { { \left( 4+4 \right) }^{ 2 }+{ \left( 2-4 \right) }^{ 2 } } =\sqrt { 64+4 } =\sqrt { 68 } \)
AB = BC = CD = DA மற்றும் AC = BD
∴ ABCD ஒரு சதுரத்தின் உச்சிகள் ஆகும்.
10.
P(x, y) எனும் புள்ளி A(7, 1) மற்றும் B(3, 5) யிலிருந்து சமதூரத்தில் உள்ள புள்ளி. இங்கு AP = BP. ஆகையால் AP2 = BP2.
(x - 7)2 + (y - 1)2 = (x - 3)2 + (y - 5)2
x2 - 14x + 49 + y2 - 2y + 1 = x2 - 6x + 9 + y2 - 10y + 25
x - y = 2
இதுவே தேவையான உறவு ஆகும்.
11.
கொடுக்கப்பட்டது XY||AC
ஆகையால் ∠BXY = ∠A மற்றும்
∠BYX = ∠C (ஒத்த கோணங்கள்)
∴ ΔABC~ΔXBY (SAS விதிமுறைப்படி)
ஆகையால் \(\frac { ar(ABC) }{ ar(XBY) } ={ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }\) ...(1)
ar(ABC) = 2ar(XBY)
\(\frac { ar(ABC) }{ ar(XBY) } =\frac { 2 }{ 1 } \) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\({ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }=\frac { 2 }{ 1 } \) i.e. \(\frac { AB }{ XB } =\frac { \sqrt { 2 } }{ 1 } \)
\(\frac { XB }{ AB } =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(1-\frac { XB }{ AB } =1-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AB-XB }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AX }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } =\frac { 2-\sqrt { 2 } }{ 2 } \)
12.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
13.
AB = 5.6 செ.மீ
AD = 1.4 செ.மீ
AC = 7.2 செ.மீ
AE = 1.8 செ.மீ எனத் தரப்பட்டுள்ளது.
\(\mathrm{DB} =\mathrm{AB}-\mathrm{AD} \)
= 5.6 - 1.4 = 4.2 செ.மீ
\(\mathrm{EC} =\mathrm{AC}-\mathrm{AE} \)
= 7.2 - 1.8 = 5.4 செ.மீ
இங்கு \(\frac{A D}{D B}=\frac{1.4}{4.2}\)
\(\frac{A D}{D B}=\frac{1}{3} \)
\(\frac{A E}{E C}=\frac{1.8}{5.4} \)
\(\frac{A E}{E C}=\frac{1}{3}\)
(1) மற்றும் (2) லிருந்து
\(\frac{A D}{D B}=\frac{A E}{E C}\) ∴ DE || BC
14.
கட்டடத்தின் உயரம் BC என்க. தரையில் பந்து இருக்கும் இடத்தை A என்க. BC = 20 மீ, மேலும் ㄥXCA = 60° = ㄥCAB
AB = x மீ என்க.
செங்கோண Δ ABC – ல்
tan 60° = \(\frac {BC}{AB}\)
\(\sqrt 3 = \frac {20}{x }\)
x = \(\frac { 20\times \sqrt { 3 } }{ \sqrt { 3 } \times \sqrt { 3 } } =\frac { 20\times 1.732 }{ 3 } \) = 11.55 மீ
எனவே, கட்டடத்தின் அடிக்கும் பந்திற்கும் இடையேயுள்ள தொலைவு = 11.55 மீ.
15.
கோபுரத்தின் உயரம் PQ என்க. PQ = h என்க. கோபுரத்திற்கும் தரையில் உள்ள புள்ளி R - க்கும் இடைப்பட்ட தொலைவு QR என்க.
செங்கோண Δ PQR - ல் ㄥPRQ = 30°
tan θ = \(\frac{PQ}{QR}\) ; tan 30° = \(\frac{h}{48}\)
⇒ \(\frac{1}{\sqrt3}\) = \(\frac{h}{48}\) எனவே, h = 16\(\sqrt3\)
ஆகவே, கோபுரத்தின் உயரம் 16\(\sqrt3\) மீ ஆகும்.
16.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் முடிவுகளாவன
கூறுவெளி S \(= \{\mathrm{HHH}, \mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{HTT},THH, THT, TTH, TTT \}\)
n(S) = 8
A என்பது இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைக்கும் நிகழ்வு என்க.
\(A =\{\mathrm{HTT}, \mathrm{TTH}, \mathrm{TTT}\} \)
n(A) = 3
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(A)}{n(S)}=\frac{3}{8}\)
இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு \(=\frac{3}{8}\)
17.

கூறுவெளி, S = {1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T};
n(S) = 12
A ஆனது ஒற்றைப்படை எண் மற்றும் தலைக் கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
A = {1H, 3H, 5H}; n(A) = 3
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 3 }{ 12 } =\frac { 1 }{ 4 } \)
P(A) = 1/4
18.
இங்கு முதல் உறுப்பு a = 8, பொது வித்தியாசம் \(d=7 \frac{1}{4}-8=-\frac{3}{4}\),
கூட்டுத் தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn = \(\frac { n }{ 2 } \left[ 2a+(n-1)d \right] \)
S15 = \(\frac { 15 }{ 2 } \left[ 2\times 8+(15-1)\left( -\frac { 3 }{ 4 } \right) \right] \)
S15 = \(\frac { 15 }{ 2 } \left[ 16-\frac { 21 }{ 2 } \right] =\frac { 165 }{ 4 } \)
19.
\(x^2+3 x-28=0\)
\(a x^2+b x+c=0\) உடன் ஒப்பிட
a = 1, b = 3, c = -28
∴ மூலங்களின் கூடுதல் \(=-\frac{b}{a}=-\frac{3}{1}=-3\)
மூலங்களின் பெருக்கல் \(=\frac{c}{a}=-\frac{28}{1}=-28\)
20.
\(\alpha \) மற்றும் \(\beta \) என்பன கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் என்க
(i) x2 + 8x - 65 = 0 இங்கு a = 1,b = 8, c = -65
\(\alpha +\beta =\cfrac { b }{ a } =-8\) மற்றும் \(\alpha \beta =\cfrac { c }{ a } =-65\)
\(\alpha +\beta =-8;\alpha \beta =-65\)
(ii) 2x2 + 5x + 7 = 0 இங்கு, a = 2, b = 5, c = 7
\(\alpha +\beta =-\cfrac { b }{ a } =\cfrac { -5 }{ 2 } \) மற்றும் \(\alpha \beta =\cfrac { c }{ a } =\cfrac { 7 }{ 2 } \)
\(\alpha +\beta =-\cfrac { 5 }{ 2 } ;\alpha \beta =\cfrac { 7 }{ 2 } \)
(iii) kx2 - k2x - 2k3 = 0 இங்கு,a = k, b = -k2, c = -2k3
\(\alpha +\beta =-\cfrac { b }{ a } =\cfrac { -(-k^{ 2 }) }{ k } =k\) மற்றும் \(\alpha \beta =\cfrac { c }{ a } =\cfrac { -2k^{ 3 } }{ k } =-2k^{ 2 }\)
21.
கோளத்தின் ஆரம் = 12 செ.மீ
கோளத்தின் கன அளவு \(=\frac{4}{3} \pi r^3\) கன அலகுகள்
\(=\frac{4}{3} \pi(12)^3\)
\(=2304 \pi\)செ.மீ3
உருளையின் ஆரம் = 8 செ.மீ
உயரம் = h செ.மீ
உருளையின் கன அளவு \(=\pi r^2 h\) கன அலகுகள்
\(=\pi(8)^2 h=64 \pi \mathrm{h}\) செ.மீ3
கொடுக்கப்பட்டது: கோளம் உருக்கப்பட்டு உருளையாக மாற்றப்படுகிறது.
\(\therefore\) உருளையின் கன அளவு = கோளத்தின் கன அளவு
\(64 \pi \mathrm{h}=2304 \pi \)
\(h=\frac{2304 \pi}{64 \pi}=36\)
\(\therefore\) உருளையின் உயரம் = 36 செ.மீ
22.
கொடுக்கப்பட்ட சாய்வுக்கோணம் \(\theta=90^{\circ}\)
∴ கோட்டின் சாய்வு \('m' =\tan \theta\)
\(=\tan 90^{\circ}=\infty\) (வரையறுக்கப்படாதது)
23.
கிணற்றின் ஆரம் = 5 மீ
கிணற்றின் ஆழம் = 14 மீ
எடுக்கப்பட்ட மண்ணின் கன அளவு \(=\pi r^2 h \)
\(=\frac{22}{7} \times(5)^2 \times 14=1100\) மீ3
எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு கிணற்றைச் சுற்றி உள்ளீடற்ற உருளை வடிவத்தில் மேடை அமைக்கப்படுகிறது.
உட்புற ஆரம் = 5 மீ
மேடையின் அகலம் = 5 மீ
\(\therefore\) வெளிப்புற ஆரம் = 5 + 5 = 10 மீ
உயரம் = h
உள்ளீடற்ற உருளையின் கன அளவு \(=\pi h\left(\mathrm{R}^2-\mathrm{r}^2\right) \)
\(\therefore \ \pi h\left(\mathrm{R}^2-\mathrm{r}^2\right) =1100 \)
\(\frac{22}{7} \times h\left(10^2-5^2\right) =1100\)
மேடையின் உயரம்
\(h=\frac{1100 \times 7}{22 \times 75}=4.67\) மீ
24.
(i) x = 1 எனப் பிரதியிட்டால்,
\(f(1)=2(1)-(1)^2=2-1=1\)
(ii) x = x + 1 எனப் பிரதியிட்டால்,
\(f(x+1)=2(x+1)-(x+1)^2=2 x+2-\left(x^2+2 x+1\right)=-x^2+1\)
(iii) \(f(x)+f(1)=\left(2 x-x^2\right)+1=-x^2+2 x+1\)
\([f(x)+f(1) \neq f(x+1)\) என்பதைக் காணலாம். பொதுவாக, f(a + b) ஆனது f(a) + f(b)-க்கு சமமாக இருப்பதில்லை]
25.
A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)}
A = {A x B-யின் முதல் ஆயத்தொலைவு உறுப்புகளின் கணம்}. எனவே A = {3,5}
B = {A x B-யின் இரண்டாம் ஆயத்தொலைவு உறுப்புகளின் கணம்}. எனவே B = {2,4} எனவே A = {3,5} மற்றும் B = {2,4}.
26.
AC ஐ இணைக்கும் கோடு PQ ஐ G இல் சந்திக்கிறது.
\(\therefore \mathrm{AB} \| \mathrm{DC}\) மற்றும் \(\mathrm{PQ} \| \mathrm{DC}\)
\(\mathrm{PQ} \| \mathrm{AB}\)
ΔADC இல்
PG || DC
\(\frac{A P}{P D}=\frac{A G}{G C}\) ...(1)
ΔCAB இல்
\(\frac{A G}{G C}=\frac{B Q}{Q C}\)
(1) மற்றும் (2) லிருந்து
\(\frac{A P}{P D} =\frac{B Q}{Q C} \)
\(\frac{A P}{18} =\frac{35}{15} \)
\(A P =\frac{35 \times 18}{15} \)
AP =42 செ.மீ
இங்கு \(\mathrm{AD} =A \mathrm{P}^{\prime}+\mathrm{PD} \)
= 42 + 18 = 6 செ.மீ
AD =60 செ.மீ
27.
(i) \(4,8,16, \ldots 8192 \)
\(a=4, r=\frac{8}{4}=2\)
பெருக்குத் தொடர் வரிசையின் n -வது உறுப்பு
\(\mathrm{t}_{\mathrm{n}} =a r^{\mathrm{n}-1} \) \(\Rightarrow\) \(8192 =4 (2^{n-1})\)
\(\mathrm{2}^{\mathrm{n}-1} =\frac{8192}{4} \) = 2058 = 211
n - 1 = 11 \(\Rightarrow\) n = 11 + 1 = 12
\(\therefore\) பெருக்குத் தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 12.
(ii) \(\frac { 1 }{ 3 } ,\frac { 1 }{ 9 } ,\frac { 1 }{ 27 } ,....\frac { 1 }{ 2187 }\)
இங்கு \( \mathrm{a}=\frac{1}{3}, \mathrm{r}=\frac{t_2}{t_1}=\frac{1 / 9}{1 / 3}=\frac{1}{9} \times \frac{3}{1}\)
\(r=\frac{1}{3}\)
பெருக்குத் தொடர் வரிசையின் n- வது உறுப்பு
\(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{ar}^{\mathrm{n}-1} \)
\(\frac{1}{2187} =\frac{1}{3} (\frac{1}{3}) r^{n-1} \)
\(\Rightarrow \frac{3}{2187} =(\frac{1}{3})^{n-1} \)
\(\frac{1}{729} =(\frac{1}{3})^{(n-1)}\)\(\Rightarrow \left(\frac{1}{3}\right)^6 =(\frac{1}{3})^{n-1}\)
n - 1 = 6 \(\Rightarrow\) n = 6 + 1 = 7
∴ பெருக்குத் தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 7.
28.
கொடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5)
A(-4, 6), B(-3, -5), C(1, -1)
ΔABC -ன் பரப்பளவு \(=\frac{1}{2}\left[x_1\left(\mathrm{y}_2-\mathrm{y}_3\right)+x_2\left(\mathrm{y}_3-\mathrm{y}_1\right)\right]\)\(\left.+x_3\left(\mathrm{y}_1-\mathrm{y}_2\right)\right]\) சதுர அலகுகள்
\(=\frac{1}{2} [-4(-5+1)-3(-1-6)+1(6+5)] \)
\(=\frac{1}{2}[-4 \times(-4)-3 \times(-7)+1 \times(11)] \)
\(=\frac{1}{2}[16+21+11]\)
\(=\frac{1}{2}(48)=24\) சதுர அலகுகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards