10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/05/2020
10 ஆம் வகுப்பு கணிதம் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Standard Maths Public Exam Model Question Paper June 2020)
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5,10,15,20,25 என்ற எண்களின் திட்டவிலக்கம் காண். மேலும் 3 என்ற எண்ணை ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைக்கும் எண்களின் திட்ட விலக்கம் காண்.
2.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)
3.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
4,10,16,22,....
4.
A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9} மற்றும் சார்பு f: A ⟶ B என்ற சார்பானது f(x) = 2x + 1 என வரையறுக்கப்படுகிறது. இதனை (i) வரிசைச் சோடி கணம் (ii) அட்டவணை (iii) அம்புக்குறிப் படம் (iv) வரைபட முறையில் குறிக்க.
5.
படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.
6.
கீழ்க்காணும் இருபடிச் சமன்பாடுகளுக்கு மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் காண்க.
3y2 - y - 4 = 0
7.
பின்வரும் தொடர்வரிசைகளில் எவை பெருக்குத் தொடர் வரிசையாகும்?
\(\frac { 1 }{ 2 } \) 1, 2, 4,..
8.
கீழ்க்காணும் தரவுகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக் கெழுவைக் காண்க.
43.5, 13.6, 18.9, 38.4, 61.4, 29.8
9.
O -வை மையமாக கொண்டு உடைய வட்டத்திற்கு P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடு PQ, QOR ஆனது விட்டம் ஆகும். வட்டத்தில் \(\angle POR={ 120 }^{\circ} \) எனில், \(\angle OPQ\)-ஐக் காண்க.
10.
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும்.
cot θ + tan θ = sec θ cosec θ
11.
8x − 7y + 6 = 0 என்ற கோட்டின் சாய்வு மற்றும் y வெட்டுத்துண்டு ஆகியவற்றைக் கணக்கிடுக.
12.
704 ச.செ.மீ மொத்தப் புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7 செ.மீ எனில், அதன் சாயுயரம் காண்க.
13.
\(\Sigma x=99,n=9,\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79\) எனில்
(i) \({ \Sigma x }^{ 2 }\)
(ii) \(\Sigma \left( x-\bar { x } \right) \)
14.
சம அளவு விட்டமும் சம உயரமும் கொண்ட உருளை, கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம் என்ன?
15.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
1,1,1,2,2,2,3,3,3,.....
16.
சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
பின்வருவனவற்றைக் காண்.
f(-7) - f(-3)
17.
கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5).
18.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.
19.
ஒரு பறவை A என்ற இடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் B என்ற இடத்திற்கு 35° கோணத்தில் பறக்கிறது. B-ல் 48° கோணத்தைத் தாங்கி 32 கி.மீ தொலைவில் உள்ள C என்ற இடத்திற்குச் செல்கிறது, A -ன் மேற்குப் புறமாக B-ன் தொலைவு எவ்வளவு?
(sin 55° = 0.8192, cos55° = 0.5736, sin 42° = 0.6691, cos42° = 0.7431)
20.
அருள் தனது குடும்ப விழாவிற்கு 150 நபர்கள் தங்குவதற்கு ஒரு கூடாரம் அமைக்கிறார். கூடாரத்தின் அடிப்பகுதி உருளை வடிவிலும் மேற்பகுதி கூம்பு வடிவிலும் உள்ளது. ஒருவர் தங்குவதற்கு 4 ச. மீ அடிப்பகுதி பரப்பும் 40 க. மீ காற்றும் தேவைப்படுகிறது. கூடாரத்தில் உருளையின் உயரம் 8 மீ எனில், கூம்பின் உயரம் காண்க.

21.
22.
x = a sec θ, y = b tan θ எனில் \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } \) ன் மதிப்பு =
1
-1
tan2θ
cosec2θ
23.
(1+tan2θ) sin2θ =
sin2θ
cos2θ
tan2θ
cot2θ
24.
\(A={ \left[ \begin{matrix} 2 & 1 & 0 \\ 1 & 3 & -2 \end{matrix} \right] }_{ 2\times 3 }B={ \left[ \begin{matrix} 8 & 1 & \\ -4 & 9 & \end{matrix} \right] }_{ 2\times 2 }C={ \left[ \begin{matrix} 3 & 5 \\ 1 & 6 \\ 4 & 7 \end{matrix} \right] }_{ 3\times 2 }\) எனில் கீழ்கண்ட எது கிடைக்கும்?
(i) AB
(ii) BC
(iii) AC + B
(iv) AC
(i) (ii)
(iii) (iv)
(iv)
(iii)
25.
மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பிற்கு தீர்வு காணும் போது 0 = 0 என்பது போன்ற முற்றொருமை கிடைக்குமாயின் அந்த சமன்பாட்டு தொகுப்பிற்கு
தீர்வு இல்லை
ஒரே ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
இவற்றில் ஏதுமில்லை
26.
வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?
ஒன்று
இரண்டு
முடிவற்ற எண்ணிக்கை
பூஜ்ஜியம்
27.
\(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் _____.
\(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)
\(\cfrac { x^{ 2 }+7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)
\(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
\(\cfrac { { x }^{ 2 }+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
28.
a cot θ + b cosec θ = p மற்றும் b cot θ + a cosec θ = q எனில் p2 - q2 -ன் மதிப்பு _____.
a2 - b2
b2 - a2
a2 + b2
b - a
29.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில் பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
30.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது _____.
2
1
3
1.5
31.
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது _____.
32.25
44.25
33.25
30
32.
33.
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு ______.
5600π க.செ.மீ
1120π க.செ.மீ
56π க.செ.மீ
3600π க.செ.மீ
34.
f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்
f = {(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)}
g = {(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)} எனக் கொடுக்கப்பட்டால் f o g -ன் வீச்சகமானது
{0,2,3,4,5}
{–4,1,0,2,7}
{1,2,3,4,5}
{0,1,2}
35.
{(a,8), (6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே _____.
(8,6)
(8,8)
(6,8)
(6,6)
36.
| குழு A | 50 | 20 | 10 | 30 | 30 |
| குழு B | 40 | 60 | 20 | 20 | 10 |
எந்த குழு அதிக சீர்மைத்தன்மை கொண்டுள்ளது.
37.
ஒரு மர உருளையிலிருந்து இரண்டு அரைக்கோளங்கள் இரு முனைகளிருந்தும் குடைந்து எடுக்கப்படுகிறது. உருளையின் உயரம் 10 செ.மீ, ஆரம் 3.5செ.மீ எனில் அந்த உருவத்தின் மொத்த புறப்பரப்பு என்ன?
38.
ஓர் ஏணியானது சுவர் மீது சாய்ந்து வைக்கப்படுகிறது. அதனுடைய கீழ்முனை சுவரிலிருந்து 2.5 மீ தூரத்தில் உள்ளது எனில் அதனுடைய உச்சி 6 மீ உயரத்தில் உள்ள ஜன்னலை தொடுகிறது. ஏணியின் நீளம் காண்க.
39.
2x2-7x+5=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில், பின்வருவனவற்றின் மதிப்பை காண்க. [குறிப்பு: தீர்வு தேவையில்லை]
\(\cfrac { \alpha +2 }{ \beta +2 } +\cfrac { \beta +2 }{ \alpha +2 } \).
40.
படத்தில் செங்கோண முக்கோண ABC-யில் கோணம் B ஆனது செங்கோணம் மற்றும் D, E என்ற புள்ளிகள் பக்கம் BC-ஐ மூன்று சமப்பகுதிகளாக பிரிக்கிறது எனில், 8AE2 = 3AC2 + 5AD2 என நிறுவுக.

41.
கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக.
x2 - 9x + 20 = 0
42.
ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தட்டுகளின் விட்ட அளவுகள் (செ.மீ-ல்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் திட்ட விலக்கம் காண்க.
| விட்டங்கள் (செ.மீ) | 21-24 | 25-28 | 29-32 | 33-36 | 37-40 | 41-44 |
| தட்டுகளின் எண்ணிக்கை | 15 | 18 | 20 | 16 | 8 | 7 |
1.
| x | \({ d }^{ ' }=\cfrac { x-15 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 5 | -2 | 4 |
| 10 | -1 | 1 |
| 15 | 0 | 0 |
| 20 | 1 | 1 |
| 25 | 2 | 4 |
| \(\Sigma d=0\) | \(\Sigma d'^{ 2 }=10\) |
\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 75 }{ 5 } =15\)
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
A என்பது ஊகச் சராசரி, C என்பது பொதுக் காரணி
இங்கு A =15,C =5
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
= \(\sigma =\sqrt { \left( \cfrac { \Sigma d'2 }{ n } \right) -\left( \cfrac { \Sigma d' }{ n } \right) ^{ 2 }\times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times c } =\sqrt { 2 } \times 5\)
= \(5\sqrt { 2 } \)
3 ஐ ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைப்பது 8,13,18,23,28 என்ற புதிய மதிப்புகள்
| x | \({ d }^{ ' }=\cfrac { x-18 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 8 | -2 | 4 |
| 13 | -1 | 1 |
| 18 | 0 | 0 |
| 23 | 1 | 1 |
| 28 | 2 | 4 |
| \(\Sigma d'=0\) | \(\Sigma { d }^{ '2 }=0\) |
\(\therefore \sigma =\sqrt { \left( \cfrac { \Sigma { d }^{ '{ 2 } } }{ n } \right) -\left( \cfrac { \Sigma { d }^{ ' } }{ n } \right) \times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
திட்டவிலக்கம் மாறவில்லை.
\(\therefore \) ஒரு எண்ணை கூடினாலோ, கழித்தாலோ திட்டவிலக்கம் மாறாது.
2.
வாளியானது கூம்பின் இடைக்கண்டம். இடைக்கண்டத்தின் r1=28 செ.மீ, r2=7செ.மீ, h=45 செ.மீ
வாளியின் கொள்ளளவு=இடைக்கண்டத்தின் கன அளவு
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \pi h[{ r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 2 }^{ 2 }+{ r }_{ 1 }{ r }_{ 2 }]\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\left[ { 28 }^{ 2 }+{ 7 }^{ 2 }+28\times 7) \right] \)
\(\Rightarrow 22\times 15\times \times (28\times 4+7+28)\)
⇒330x147 செ.மீ3 ⇒ 48510 செ.மீ3
3.
4,10,16,22,..
இங்கு a2-a2=10-4=6
a3-a2=16-10=6
a4-a3=22-16=6
∴ அது ஒரு A.P. பொது வித்தியாசம் 6.
∴ அடுத்து இரண்டு உறுப்புகள், \(\underline { 28 } ,\underline { 34 } .\)
4.
A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9}
f(x) = 2x +1
f(0) = 2(0) + 1 = 1
f(1) = 2(1) + 1 = 3
f(2) = 2(2) + 1 = 5
f(3) = 2(3) + 1 = 7
(i) வரிசைச் சோடி கணம்
f = {(0, 1), (1, 3), (2, 5), (3, 7)}
(ii) அட்டவணை
| x | 0 | 1 | 2 | 3 |
|---|---|---|---|---|
| f(x) | 1 | 3 | 5 | 7 |
(iii) அம்புக்குறி படம்
(iv) வரைபடம்
f = {(x, f(x)/ x ∈ A}
= {(0, 1), (1, 3), (2, 5), (3, 7)}
5.
கொடுக்கப்பட்டது XY||AC
ஆகையால் ∠BXY = ∠A மற்றும்
∠BYX = ∠C (ஒத்த கோணங்கள்)
∴ ΔABC~ΔXBY (SAS விதிமுறைப்படி)
ஆகையால் \(\frac { ar(ABC) }{ ar(XBY) } ={ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }\) ...(1)
ar(ABC) = 2ar(XBY)
\(\frac { ar(ABC) }{ ar(XBY) } =\frac { 2 }{ 1 } \) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\({ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }=\frac { 2 }{ 1 } \) i.e. \(\frac { AB }{ XB } =\frac { \sqrt { 2 } }{ 1 } \)
\(\frac { XB }{ AB } =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(1-\frac { XB }{ AB } =1-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AB-XB }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AX }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } =\frac { 2-\sqrt { 2 } }{ 2 } \)
6.
\(3 y^2-y-4=0\) என்பது 'y' ல் அமைந்த இருபடிச் சமன்பாடு
\(a x^2+b x+c=0\) உடன் ஒப்பிட a = 3, b = -1, c = -4
∴ மூலங்களின் கூடுதல் \(=-\frac{b}{a}=-\frac{(-1)}{3}=\frac{1}{3}\)
மூலங்களின் பெருக்கல் \(=\frac{c}{a}=-\frac{4}{3}\)
7.
\(\frac { 1 }{ 2 } \),1,2,4,...
\(\frac { { t }_{ 2 } }{ { t }_{ 1 } } =\frac { 1 }{ 1/2 } =2;\frac { { t }_{ 3 } }{ { t }_{ 2 } } =\frac { 2 }{ 1 } =2;\frac { { t }_{ 4 } }{ { t }_{ 3 } } =\frac { 4 }{ 2 } =2\)
இங்கு அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமம் என்பதால் \(\frac { 1 }{ 2 } \),1,2,4,.... என்ற தொடர்வரிசையின் பொது விகிதம் r = 2 என்பது ஒரு பெருக்குத் தொடர்வரிசையாகும்.
8.
43.5, 13.6, 18.9, 38.4, 61.4, 29.8
மிகப் பெரிய மதிப்பு L = 61.4
மிகச் சிறிய மதிப்பு S = 13.6
வீச்சு = L - S
= 61.4 - 13.6 = 47.8
வீச்சுக் கெழு \(=\frac{61.4-13.6}{61.4+13.6}\)
\(=\frac{47.8}{75}=0.637=0.64\)
\(\therefore\) வீச்சு = 47.8; வீச்சுக் கெழு = 0.64
9.
OQ-ஆரம்; PQ என்பது வட்டத்தின் வெளியே உள்ள P என்ற புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோடு. தொடு புள்ளியில் ஆரமும் தொடுகோடும் செங்குத்து.
\(\therefore \angle P Q O=90^{\circ} \)
\(\angle P O Q=180-120=60^{\circ}\)
\([\because \angle P O Q\) மற்றும் ㄥPOR என்பவை நேரிய கோண இணை]
ΔPQO இல் \(\angle P O Q+\angle P Q O+\angle O P Q=180^{\circ}\)
[ ∵ முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்]
\(60^{\circ}+90^{\circ}+\angle O P Q =180^{\circ} \)
\(\angle O P Q =180^{\circ}-150^{\circ} \)
\(\angle O P Q =30^{\circ}\)
10.
\(\cot \theta+\tan \theta=\sec \theta \operatorname{cosec} \theta\)
இடப்பக்கம் \(=\cot \theta+\tan \theta\)
\(=\frac{\cos \theta}{\sin \theta}+\frac{\sin \theta}{\cos \theta} \)
\(=\frac{\cos ^2 \theta+\sin ^2 \theta}{\sin \theta \cos \theta}=\frac{1}{\sin \theta \cos \theta} \)
\(=\left[\because \sin ^2 \theta+\cos ^2 \theta=1\right] \)
\(\frac{1}{\sin \theta} \times \frac{1}{\cos \theta} \)
\(=\operatorname{cosec} \theta \sec \theta \)
\(=\sec \theta \operatorname{cosec} \theta\)
= வலப்பக்கம்
11.
கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடு 8x − 7y + 6 = 0
7y = 8x + 6 (இதனை y = mx + c வடிவத்திற்கு மாற்றவும்)
\(y=\frac { 8 }{ 7 } x+\frac { 6 }{ 7 } \) ...(1)
(1) ஐ y = mx + c உடன் ஒப்பிட,
சாய்வு m = \(\frac 87\) மற்றும் y வெட்டுத்துண்டு c = \(\frac 67\)
12.
கூம்பின் ஆரம் r = 7 செ.மீ
கூம்பின் மொத்தப் புறப்பரப்பு = \(\pi\)r (l + r) ச.அ
மொத்தப் புறப்பரப்பு = 704 ச.செ.மீ
704 = \(\frac { 22 }{ 7 } \times 7(l+7)\)
32 = l + 7 ⇒ l = 25 செ.மீ
ஆகவே, கூம்பின் சாயுயரம் 25 செ.மீ. ஆகும்.
13.
n = 9,\({ \Sigma x }=99\),\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 99 }{ 9 } =11\)
\(\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79={ \Sigma x }^{ 2 }-20x+100=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\Sigma x+100\times 9=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\times 99+100=79\)
\({ \Sigma x }^{ 2 }=79+1980-900=1159\)
\(\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=\Sigma \left( x-11 \right) ^{ 2 }=\Sigma \left( { x }^{ 2 }-22x+121 \right) \)
= \({ \Sigma x }^{ 2 }-22\Sigma x+121\times 9\)
= \(1159-22\times 99+1089=70\)
\(\therefore { \Sigma x }^{ 2 }=1159,\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=70\)
14.
உருளையின் கன அளவு \(={ \pi r }^{ 2 }h\)
கூம்பின் கன அளவு \(=\frac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }h\)
கோலத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
அவற்றின் கன அளவுகளின் விகிதம் V1:V2:V3
\(h:\frac { h }{ 3 } :\frac { 4r }{ 3 } \)
3h:h:4r
3h:h:2(2r) (இங்கு 2r=h)
∴ V1:V2:V3=3:1:2
15.
1,1,1,2,2,2,3,3,3
t2-t1=1-1=0
t3-t2=1-1=0
t4-t3=2-1=1
இங்கு t2-t1≠t3-t2.
∴ இது ஒரு கூட்டுத் தொடர் அல்ல.
16.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad : -7\le x<-5 \\ x+5\quad \quad \quad\quad: -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad2<x\le 6 \end{cases}\)
f(-7) = x2 + 2x +1
= (-7)2 + 2(-7) + 1
= 49 - 14 + 1 = 36
f(3) = x + 5 = -3 + 5 = 2
f(-7) - f(-3) = 36 - 2 = 34
17.
A (1, -1), B(-4, 6), மற்றும் C(-3, -5) சூத்திரத்தை பயன்படுத்தி
Δ = \(\frac { 1 }{ 2 } \) {x1(y2 - y3) + x2(y3 - y1) + x3(y1 - y2)} சதுர அலகுகள்
= \(\frac { 1 }{ 2 } \) [1 (6 + 5 ) + (-4) (-5 + 1) + (-3) (- 1 - 6)]
= \(\frac { 1 }{ 2 } \) [11 + 16 + 21] = 24 சதுர அலகுகள்
∴ முக்கோணத்தின் பரப்பு = 24 சதுர அலகுகள்
18.
நிரூபணம்:
ΔABC ஒரு செங்கோண முக்கோணம்
∠B செங்கோணம்
நிரூபிக்க வேண்டியது: AC2 = AB2 + BC2
அமைப்பு: BC 丄 AC
ΔABC = ΔABC
\(\frac { AD }{ AB } =\frac { AB }{ AC } \)
(பக்கங்களின் விகிதம்)
AD · AC = AB2 ...(1)
மேலும், ΔBDC ~ ΔABC
\(\frac { CD }{ BC } =\frac { BC }{ AC } \)
CD · AC =BC2 ...(2)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
AD.AC+CD.AC = AB2+ BC2
AC(AD+CD) = AB2 + BC2
AC.AC = AB2+ BC2
AC2 = AB2 + BC2
19.
A என்பது பறவையின் தொடக்க நிலை
B என்பது 30o கோணத்தில் பறந்த பின் இருந்த நிலை மற்றும் C என்பது பறவை 32 கி.மீ பறந்த பின் இருந்த நிலை என்க.
\(\therefore \angle O A P=55^{\circ} \)
\(\angle P B C=42^{\circ}\)
\([\because\) நிரப்புக் கோணங்கள்]
செங்கோண முக்கோணம் \(\triangle A O B\) லிருந்து
\(\cos 55^{\circ}=\frac{O A}{A B} \)
\(0.5736 =\frac{O A}{30} \)
OA = 30 x 0.5736 = 17.21 கி.மீ
A இன் மேற்குப்புறமாக B இன் தொலைவு 17.21 கி.மீ.
20.
உருளை மற்றும் கூம்பின் உயரம் முறையே h1 மற்றும் h2 என்க.
இங்கு, ஒருவருக்குத் தேவையான பரப்பு = 4 ச.மீ
நபர்களின் எண்ணிக்கை = 150
தேவையான மொத்த அடிப்பரப்பு = 150 x 4
πr2 = 600 .....(1)
ஒருவருக்குத் தேவையான காற்றின் கனஅளவு = 40 க.மீ.
150 நபர்களுக்குத் தேவையான காற்றின் கன அளவு = 150 x 40 = 6000 க.மீ.
\(\pi { r }^{ 2 }{ h }_{ 1 }+\frac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }{ h }_{ 2 }=6000\) இதிலிருந்து, \(\pi { r }^{ 2 }\left( { h }_{ 1 }+\frac { 1 }{ 3 } { h }_{ 2 } \right) =6000\)
\((600) \left( 8+\frac { 1 }{ 3 } { h }_{ 2 } \right) =6000\) [(1) ஐப் பிரதியிட]
\(8+\frac { 1 }{ 3 } { h }_{ 2 }=\frac { 6000 }{600 } \)
\(\frac { 1 }{ 3 } { h }_{ 2 }=10-8=2\)
h2 = 6 மீ
ஆகவே, கூம்பின் உயரம் 6 மீ ஆகும்.
21.
22.
(a)
1
23.
(a)
sin2θ
24.
(a)
(i) (ii)
25.
(a)
தீர்வு இல்லை
26.
(b)
இரண்டு
27.
\(\frac{x}{x^2-25}-\frac{8}{x^2+6 x+5} =\frac{x}{(x+5)(x-5)}-\frac{8}{(x+5)(x+1)} \)
\(=\frac{x(x+1)-8(x-5)}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2+x-8 x+40}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2-7 x+40}{\left(x^2-25\right)(x+1)}\)
28.
\(\mathrm{p}^2-\mathrm{q}^2=(a \cot \theta+b \operatorname{cosec} \theta)^2-(b \cot \theta+a \operatorname{cosec} \theta)^2 \)
\(=a^2 \cot ^2 \theta+b^2 \operatorname{cosec}^2 \theta+2 a b \cot \theta \operatorname{cosec} \theta -\left(b^2 \cot ^2 \theta+a^2 \operatorname{cosec}^2 \theta+2 a b \cot \theta \operatorname{cosec} \theta\right)\)
\(=a^2 \cot ^2 \theta+b^2 \operatorname{cosec}^2 \theta+2 a b \cot \theta \operatorname{cosec} \theta -b^2 \cot ^2 \theta-a^2 \operatorname{cosec}^2 \theta-2 a b \cot \theta \operatorname{cosec} \theta\)
\(=a^2\left(\cot ^2 \theta-\operatorname{cosec}^2 \theta\right)+b^2\left(\operatorname{cosec}^2 \theta-\cot ^2 \theta\right) \)
\(=a^2(-1)+b^2(1) \)
\(=-a^2+b^2 \)
\(=\mathrm{b}^2-\mathrm{a}^2\)
29.
a = 1, d = 4
tn = a + (n - 1) d = 1 + (n - 1) 4 = 4n - 3
எண்ணானது 4n - 3 என்ற வடிவில் இருக்க வேண்டும்.
கொடுக்கப்பட்ட விடையிலிருந்து 7881 மட்டுமே 4n - 3 என்ற வடிவில் இருக்கும்.
30.
வேலை கிடைக்கும் நிகழ்வு A என்க
\(P(A) + P(\bar{A}) =1 \)
\(\frac{x}{3}+\frac{2}{3} =1 \)
\(\frac{x+2}{3} =1 \)
x + 2 = 3
x = 3 - 2
x = 1 .
31.
முதல் 20 இயல் எண்களின் கூடுதல்
\(=\frac{n(n+1)}{2}=\frac{20 \times 21}{2} \)
\(\sum x_i =210 \)
\(\sigma =\sqrt{\frac{\sum x_i^2}{n}-\left(\frac{\sum x_i}{n}\right)^2} \)
\(\sum x_i^2 =1^2+2^2+3^2+\ldots+20^2 \)
\(=\frac{n(n+1)(2 n+1)}{6} \)
\(=\frac{20 \times 21 \times 41}{6}=10 \times 7 \times 41 \)
\(=2870 \)
\(\sigma =\sqrt{\frac{2870}{20}-\left(\frac{210}{20}\right)^2}\)
விலக்க வா்க்கச் சராசரி
\(\sigma^2 =\frac{2870}{20}-\left(\frac{210}{20}\right)^2 \)
\(=143.5-\frac{441}{4} \)
\(=143.5-110.25=33.25\)
32.
(b)
33.
உட்புற ஆரம் = r, வெளிப்புற ஆரம் = R
கொ.ப. கூடுதல் = R + r = 14, தடிமன் R - r = 4, உயரம் h = 20 செ.மீ
பயன்பட்ட பொருளின் கன அளவு
\(=\pi\left(\mathrm{R}^2-\mathrm{r}^2\right) \mathrm{h}\) கன அலகுகள்
\(=\pi(\mathrm{R}+\mathrm{r})(\mathrm{R}-\mathrm{r}) \mathrm{h} \)
\(=\pi(14)(4) 20 \)
= 1120π செ.மீ
34.
f = {(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)}
g = {(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)}
இப்போது,
\(\mathrm{fog}(0)=\mathrm{f}[2]=0 \)
\(\mathrm{f} \circ \mathrm{g}(1)=\mathrm{f}[0]=1 \)
\(\mathrm{f} \circ \mathrm{g}(2)=\mathrm{f}[4]=2 \)
\(\mathrm{f} \circ \mathrm{g}(-4)=\mathrm{f}[2]=0 \)
\(\mathrm{f} \circ \mathrm{g}(7)=\mathrm{f}[0]=1\)
'fog' ன் வீச்சகம் = {0,1,2}
35.
கொடுக்கப்பட்டது {(a, 8),(6, b)} என்பது சமனிச் சார்பு
அதாவது, {(8,8), (6,6)}
\(\therefore a=8, b=6\)
36.
| குழு A | ||
| x1 | d1=x -28 | \({ d }_{ 1 }^{ 2 }\) |
| 50 | 22 | 484 |
| 20 | -8 | 64 |
| 10 | -18 | 324 |
| 30 | 2 | 4 |
| 30 | 2 | 4 |
| 140 | \(\Sigma d=0\) | 880 |
\({ \bar { x } }_{ 1 }=\cfrac { 140 }{ 6 } =28\)
\({ \bar { \sigma } }_{ 1 }=\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 880 }{ 5 } } \)
= \(\sqrt { 176 } \)
= 13.27
\({ CV }_{ 1 }=\cfrac { { \sigma }_{ 1 } }{ { \bar { x } }_{ 1 } } \times 100\)
\({ CV }_{ 1 }=\cfrac { 13.27 }{ 28 } \times 100\)
= 47.39%
| குழு B | ||
|---|---|---|
| x2 | d2=x-30 | d2 |
| 40 | 10 | 100 |
| 60 | 30 | 900 |
| 20 | -10 | 100 |
| 20 | -10 | 100 |
| 10 | -20 | 400 |
| 150 | \(\Sigma d=0\) | 16000 |
\({ \bar { x } }_{ 2 }=\cfrac { 150 }{ 5 } =30\)
\({ \sigma }_{ 2 }=\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 1600 }{ 5 } } \)
= \(\sqrt { 320 } \)
= 17.89
\({ CV }_{ 1 }=\cfrac { { \sigma }_{ 2 } }{ { \bar { x } }_{ 2 } } \times 100\)
\({ CV }_{ 2 }=\cfrac { 17.89 }{ 30 } \times 100\)
= 59.63%
\(\therefore \) குழு A அதிக சீர்மைத் தன்மை கொண்டுள்ளது.
37.
உருளையின் ஆரம் =r என்க.
உருளையின் உயரம்=h
மொத்த புறப்பரப்பு =உருளையின் புறப்பரப்பு +2 அரைக்கோளத்தின் புறப்பரப்பு
=2πrh+2πr2=2πr(h+2r)
=2x\(\frac{22}{7}\)x3.5x(10+2x3.5)
=22x17=374 செ.மீ2
38.
AB - ஏணி, CA - சுவர், A - ஜன்னல்,
மேலும், BC = 2.5 மீ மற்றும் CA = 6 மீ
பித்தாகரஸ் தேற்றத்தின்படி,
AB2 = BC2+ CA2
= (2.5)2 + (6)2
= 42.25
AB = 6.5
ஏணியின் நீளம் = 6.5 மீ.
39.
கொ.ப : சமன்பாடு \(2 x^2-7 x+5=0 \ a x^2+b x+c=0\) உடன் ஒப்பிட
\(\mathrm{a}=2, \quad \mathrm{~b}=-7, \quad \mathrm{c}=5\)
α, β என்பன மூலங்கள்
∴ மூலங்களின் கூடுதல் = α + β
\(=-\frac{b}{a}=\frac{7}{2}\)
மூலங்களின் பெருக்கல் = α β
\(=\frac{c}{a}=\frac{5}{2} \)
\(\frac{\alpha+2}{\beta+2}+\frac{\beta+2}{\alpha+2} =\frac{(\alpha+2)^2+(\beta+2)^2}{(\alpha+2)(\beta+2)} \)
\(=\frac{\alpha^2+4 \alpha+4+\beta^2+4 \beta+4}{\alpha \beta+2 \alpha+2 \beta+4} \)
\(=\frac{\left(\alpha^2+\beta^2\right)+4(\alpha+\beta)+8}{\alpha \beta+2(\alpha+\beta)+4} \)
\(=\frac{(\alpha+\beta)^2-2 \alpha \beta+4(\alpha+\beta)+8}{\alpha \beta+2(\alpha+\beta)+4} \)
\(=\frac{\left(\frac{7}{2}\right)^2-2\left(\frac{5}{2}\right)+4\left(\frac{7}{2}\right)+8}{\left(\frac{5}{2}\right)+2\left(\frac{7}{2}\right)+4} \)
\( =\frac {\frac{49}{4}+17 }{\frac{5}{2}+11 }\)
\(= \frac{117}{4} \times \frac{2}{27}=\frac{117}{54}\)
40.
D மற்றும் E ஆனது BC ஐ மூன்று சம பகுதிகளாக பிரிக்கும் புள்ளிகள். எனவே.
\(\mathrm{BD}=\dot{\mathrm{DE}}=\mathrm{CE} \)
\(\mathrm{BD}=\mathrm{DE}=\mathrm{CE}=\mathrm{X}\) என்க.
BE = 2x மற்றும் BC = 3x
செங்கோண முக்கோணங்கள் \(\triangle \mathrm{ABD}, \triangle \mathrm{ABE}\) மற்றும் \(\triangle \mathrm{ABC}\) இல்,
\(A D^2 =A B^2+B D^2 \)
\(\Rightarrow A D^2 =A B^2+x^2\) ...(1)
செங் ΔABE இல்
\(\mathrm{AE}^2=\mathrm{AB}^2+\mathrm{BE}^2 \)
\(\Rightarrow \mathrm{AE}^2=\mathrm{AB}^2+(2 \mathrm{x})^2 \)
\(\Rightarrow A E^2=A B^2+4 x^2\) ....(2)
செங்கோண ΔABC இல்
\(A C^2 =A B^2+B C^2 \)
\(\Rightarrow A C^2 =A B^2+(3 x)^2 \)
\(8 A E^2-3 A C^2-5 A D^2=8\left(A B^2+4 x^2\right)- 3\left(A B^2+9 x^2\right)-5\left(A B^2+x^2\right) \)
\(=8 A B^2+32 x^2-3 A B^2-27 x^2-5 A B^2-5 x^2 \)
\(\Rightarrow 8 A E^2-3 A C^2-5 A D^2=0 \) ....(3)
\(8 A E^2=3 A C^2+5 A D^2\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
41.
y = x2 - 9x + 20 = 0
y = x2 - 9x + 20 என்க
அட்டவணை மதிப்புகள்
| x | -1 | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| x2 | 1 | 0 | 1 | 4 | 9 | 16 | 25 | 36 |
| -9x | 9 | 0 | -9 | -18 | -27 | -36 | -45 | -54 |
| 20 | 20 | 20 | 20 | 20 | 20 | 20 | 20 | 20 |
| y | 30 | 20 | 12 | 6 | 2 | 0 | 0 | 2 |
வரைபடத்தில் புள்ளிகளைக் குறிக்க, நமக்குக் கிடைப்பது y = x2 - 9x + 20
பரவளையம் X-அச்சை (4, 0) மற்றும் (5, 0) என்ற புள்ளிகளில் வெட்டுகிறது.
எனவே, தீர்வு x =4 ,5
பரவளையம் X-அச்சை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுவதால், மூலங்கள் மெய் மற்றும் வெவ்வேறானவை.
42.
ஊகச் சராசரி A = 34.5 என்க மற்றும் c = 4
| விட்டங்கள் செ.மீ | மைய மதிப்பு xi | fi | \({ d }_{ i }=\cfrac { { x }_{ i }-A }{ C } \\ { d }_{ i }=\cfrac { { x }_{ i }-34.5 }{ 2 }\) | fidi | \({ d }_{ i }^{ 2 }\) | \({ f }_{ i }{ { d }_{ i }^{ 2 } }\) |
|---|---|---|---|---|---|---|
| 20.5-24.5 | 22.5 | 15 | -3 | -45 | 9 | 135 |
| 24.5-28.5 | 26.5 | 18 | -2 | -36 | 4 | 72 |
| 28.5-32.5 | 30.5 | 20 | -1 | -20 | 1 | 20 |
| 32.5-36.5 | 34.5 | 16 | 0 | 0 | 0 | 0 |
| 36.5-40.5 | 38.5 | 8 | 1 | 8 | 1 | 8 |
| 40.5-44.5 | 42.5 | 7 | 2 | 14 | 4 | 28 |
| \(\Sigma f_i=N=84\) | \(\Sigma f_id_i=-79\) | \(\Sigma f_id_i^2=263\) |
திட்ட விலக்கம்
\(\begin{aligned}
\sigma & =\sqrt{\frac{\Sigma f_i d_i^2}{N}-\left(\frac{\Sigma f_i d_i}{N}\right)^2} \\
& =\sqrt{\frac{78}{50}-\left(\frac{8}{50}\right)^2}=\sqrt{\frac{78}{50}-\frac{64}{2500}} \\
& =\sqrt{\frac{3900-64}{2500}}=\sqrt{\frac{3836}{2500}} \\
& =\sqrt{1.5344}=1.24
\end{aligned}\)
\(\therefore\) திட்ட விலக்கம் \(\sigma \simeq 1.24\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards