10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
லென்சை உருவாக்குவோர் சமன்பாடு உருவாக்கப்பட்டதன் அவசியம் யாது?
2.
அதிக பளுவாதல் என்றால் என்ன?
3.
கிலோ கலோரி -வரையறு.
4.
தீர்க்க:
(i) \(_{ 88 }{ Ra }^{ 226 }\rightarrow Rn+\_ \_ \_ \_ \_ \_ \_ \_ \_ \) (\(\alpha \) சிதைவு)
(ii) \(_{ 27 }{ Co }^{ 60 }\rightarrow Ni+\_ \_ \_ \_ \_ \) (\(\beta \) சிதைவு)
5.
சமன்பாட்டினை சமன் செய்
\(_{ 6 }{ C }^{ 14 }\rightarrow _{ -1 }{ e }^{ 0 }+?\)
6.
பின்வரும் அட்டவணை தனிம வரிசை அட்டவணையில் உள்ள A, B, C, D, E மற்றும் F என்ற தனிமங்களின் இடங்களை குறிக்கிறது?
| தொகுதிகள் | 1 | 2 | 3 to 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| தொடர்கள் | |||||||||
| 2 | A | B | C | ||||||
| 3 | D | E | F |
மேற்கண்ட அட்டவணையைப் பயன்படுத்தி பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
(i) எந்த தனிமம் சகப்பிணைப்பை மட்டும் உருவாக்கும்?
(ii) எந்த தனிமம் இணைதிறன் 2 உடைய அலோகம்?
(iii) எந்த தனிமம் இணைதிறன் 3 உடைய அலோகம்?
(iv) D மற்றும் E இவற்றில் எது அதிக அணு ஆரத்தை உடையது.ஏன்?
(v) தனிமங்கள் C மற்றும் F உள்ள குடும்பத்தின் பொதுவான பெயரை எழுது.
7.
மேலிக்னன்ட் கட்டிகள் மற்றும் மேலிக்னன்டி வகை அல்லாத கட்டிகள் வேறுபடுத்துக.
8.
கார்சினோஜன் என்றால் என்ன?
9.
பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.
(i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
(ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
(iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?
10.
உட்கலப்பு வீழ்ச்சி என்றால் என்ன?
11.
தாவர ரகங்களை தேர்வு செய்தலின் முறைகளைக் கூறு.
12.
மின்னணுக் கழிவுகளால் உண்டாகும் பாதிப்புகள் யாவை?
13.
வன உயிரி பாதுகாப்பு சட்டத்தில் முக்கிய அம்சங்கள் யாவை?
14.
பிட்யூட்ரியின் பின் கதுப்பில் சுரக்கப்படும் ஹார்மோன்களையும் பற்றி குறிப்பு வரைக.
15.
புரோஜெஸ்டிரானின் இரு பணிகளைக் கூறு.
16.
மெண்டல் பயன்படுத்திய பட்டாணி தாவரத்தில் ஏதேனும் மூன்று வேறுபட்ட பண்புகளை அட்டவணைப்படுத்து.
17.
"நம்முடைய பல் மற்றும் யானையின் தந்தம் இவை இரண்டும் அமைப்பு ஒத்த உறுப்புகளாகும்." இக்கூற்றினை நியாயப்படுத்து. மேலும் செயல் ஒத்த உறுப்புகள் எவ்வாறு காணப்படுகிறது?
18.
ஒரு பொருளின்மீது செயல்படும் செங்குத்து விசை 50 N. பொருளானது O என்ற புள்ளியில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளது. 'O'-விலிருந்து விசை செயல்படும் புள்ளிக்கு தொலைவு 5 செ.மீ விசையின் திருப்புத்திறனைக் காண்க.
19.
மெக்னீசியம்,சல்பைட்டில் உள்ள Mg மற்றும் Sன் நிறை விகிதம் 3:4 Mg மற்றும் S அணுக்களின் விகித எண்கள் என்ன?
20.
81 கி அலுமினியத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
21.
யூபிளாய்டி பற்றி எழுது.
22.
20 கிகி நிறையுள்ள ஒரு கோளம் 40 ms-1 திசைவேகத்தில் ஓய்விலுள்ள 15 கிகி நிறையுள்ள மற்றொரு கோளத்தின் மீது மோதுகிறது. மோதலுக்குப்பின் அதே திசைவேகத்துடன் அவை நகர்கின்றன. திசைவேகத்தைக் காண்க.
23.
A யில் மூளை தண்டுவடத் திரவம் காணப்படுகிறது. அதில் உள்ள இடைவெளிப்பகுதி B எனப்படுகிறது. A யின் சாம்பல் நிறப்பகுதியானது ஆங்கில எழுத்தில் H போன்று அமைந்துள்ளது. H-ன் மேல்முனை C எனப்படுகிறது. அதன் கீழ் முனை D ஆகும். A, B, C, D யினை காண்.
24.
சில நேரங்களில் நமது கை முட்செடியில் படும் போது முட்கள் நம் உடலில் வலியை ஏற்படுத்துகின்றன. உடனே நாம் கையை முட்செடியினை விட்டு விலக்கி விடுகிறோம். இதில் எந்த வகையான நியூரான்கள் செயல்படத் துவங்குகின்றன?
25.
கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ள போது ஒரு ரயில் வண்டி 30 மீவி-1 வேகத்தில் அவரை நோக்கி நெருங்குகிறது.ரயிலின் அதிர்வெண் 600Hz ஒலியின் வேகம் 340 மீ.வி-1 எனில் கேட்குநர் உணரும் அதிர்வெண் யாது?
26.
ஓய்வு நிலையில் உள்ள, 100 Hz ஒலிமூலத்தை நோக்கி ஒரு கேட்குநர் இருமடங்கு ஒலிவேகத்தில் நகர்கிறார். அவர் உணரும் அதிர்வெண் அளவு என்ன?
27.
எதிர் துருவச் செல்கள் என்பன யாவை?
28.
ஈஸ்ட்டில் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
29.
உலகில் மனிதர்கள் பலவகைப்பட்ட நிறங்களில் காணப்படுகின்றனர். ஆனால் இரத்தம் ஒரே நிறத்தில் காணப்படுவது ஏன்?
30.
ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்கு விளக்கம் கூற முடியுமா?
31.
அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
ஆ] அதன் வகைகளைக் கூறு.
இ] உதாரணம் தருக.
32.
அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?
33.
அட்டை, நோய்களை உண்டாக்குமா?
34.
கணினி உன்னுடைய படிப்பிற்கு எம்முறைகளிலும் உதவிபுரிகிறது?
35.
’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. B-இல் நீரைச் சேர்க்கப்படும் போது ‘B’ மீண்டும் ’A’ ஆக மாறுகிறது. ’A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க.
36.
விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதேவகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?
37.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
38.
தோட்டப் பட்டாணிச் செடியிலுள்ள மலர்கள் அனைத்தும் தன் மகரந்த சேர்க்கை நடைபெறும் இரு பால் மலர்கள். ஆகவே அவற்றில் குறுக்கே கலத்தல் மூலம் கலப்பினம் செய்வது கடினம். இவ்வகைப் பட்டாணிச் செடியில் எவ்வாறு ஒரு பண்பு மற்றும் இருபண்பு கலப்பை மெண்டல் மேற்கொண்டார்?
39.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?
40.
கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க.
(Ca = 40, C = 12, O = 16).
41.
கீழ்கண்டவற்றின் நிறையைக் காண்க.
அ. 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு
ஆ. 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு
இ. 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு
ஈ. 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு
42.
அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
43.
A என்ற உலோகம் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்தது. வினைகளுடன் A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A,B,C எவை எவை என வினைகளுடன் எழுதுக.
44.
ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?
45.
46.
கீழ்க்காணும் கழிவுகளை எவ்வாறு கையாளுவாய்?
அ) வீட்டுக் கழிவுகளான காய்கறி கழிவுகள்.
ஆ) தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு உருளைகள்.
இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? ஆம் எனில் எவ்வாறு பாதுகாக்கும்?
47.
சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.
48.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று உணவு வகைகளைக் கூறுக. இதை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என விவரி.
49.
போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால், அதிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை ஏன் ?
50.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
51.
ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
52.
ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
அ. சேர்மம் A யைக் கண்டறிக.
ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.
53.
ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O அதில் -OH இட எண் 2
அ. அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
ஆ. IUPAC பெயரினை எழுதுக.
இ. இச்சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?
54.
தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
55.
நீராவிப்போக்கின் போது இலைத்துளை திறப்பதற்கும் மூடிக் கொள்வதற்குமான காரணத்தை கூறு.
56.
இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?
57.
இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C ஐ அடைய இயலும். அந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (Vo = 331 மீவி-1 )
58.
ஓம் விதி வரையறு.
59.
சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமாரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.
60.
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
61.
அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.
62.
முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?
63.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
64.
காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.
65.
66.
நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
i. “L” செல்களின் பெயரை கூறுக.
ii. “M” மற்றும் ”N” என்பவை யாவை?
iii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.
67.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
68.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
69.
ராஜா என்ற மாணவர், குவிலென்ஸ் ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
70.
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
71.
ஒரு குழி லென்சு 20 செ.மீ குவிய தொலைவு உடையது. 5 செ.மீ உயரமுடைய பொருள் ஒன்று எத்தொலைவில் வைக்கப்பட்டால், அது லென்சிலிருந்து 15 செ.மீ தொலைவில் பிம்பம் உருவாகும்? உருவாக்கப்படும் பிம்பத்தின் அளவைக் கணக்கிடுக.
72.
கொடுக்கப்பட்ட மின்சுற்றுப் படத்திலிருந்து (i) தொகுபயன் மின்தடை, (ii) சூரின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டம், (iii) ஒவ்வொரு மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம், (iv) மின்தடையின் குறுக்கே மின்னழுத்தம், (v) ஒவ்வொரு மின்தடையாலும் ஆற்றல் பயனீடு இவற்றை காண்.
73.
ஒரு அலுமினியம் தாளின் நீளம் 30 மீ, அதைக்கொண்டு ΔT=300 K வெப்பநிலையில் கூம்பாக செய்யப்படுகிறது. நீளத்தில் ஏற்படும் மாற்றம் யாது? (அலுமினியத்தின் நீள் வெப்ப விரிவு குணகம் 23 x 10-6K-1).
74.
R மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சமநீளமுடைய கம்பிகளாக வெட்டப்படுகிறது.
அ) வெட்டப்பட்ட கம்பியின் மின்தடை வெட்டப்படாத அசல் கம்பியின் மின்தடையோடு ஒப்பிடுகையில் எவ்வாறு மாற்றமடைகிறது.
ஆ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடையைக் கணக்கிடுக.
இ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும்போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைகளின் விகிதத்தை கணக்கிடுக.
75.
துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீ3 ஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தைக் கணக்கிடுக.
76.
பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாயப்படுத்துக.
77.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீ.வி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
78.
நீ ஒரு படம் வரையும் கலைஞன் என்றால் எந்த செயலியை உன்னுடைய படம் வரையும் செயலுக்கு பயன்படுத்துவாய்?
79.
நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி.
80.
நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன ?
81.
மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்புநிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
82.
வரையறு: ராண்ட்ஜன்
83.
இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
1.
(i) அனைத்து லென்சுகளும் ஒளி புகும் ஊடகங்களால் உருவாக்கப்படுகின்றன.
(ii) இந்த ஊடகங்கள் வேறுபட்ட ஒளிவிலக்கல் எண்களைக் கொண்டவை
(iii) லென்சை உருவாக்கும் ஒருவர் லென்சின் வளைவு ஆரம் மற்றும் ஒளிவிலகல் எண் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
(iv) லென்சு சமன்பாடானது, குவியத் தொலைவு, பொருள் மற்றும் பிம்பத்தின் தொலைவு ஆகியவற்றை மட்டுமே தொடர்புபடுத்துவதால், லென்சின் வளைவு ஆரம்,ஒளிவிலகள் எண் மற்றும் குவியத்தொலைவு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தவும் சமன்பாடு ஒன்று தேவைப்படுகிறது.
(v) இத்தேவையை நிறைவேற்றுவதற்காக 'லென்சை உருவாக்குவோர் சமன்பாடு (Lens Marker's Formula) உருவாக்கப்பட்டது,
இச்சமன்பாட்டின் படி,\(\frac { 1 }{ f } =(\mu -1)\left( \frac { 1 }{ { R }_{ 1 } } -\frac { 1 }{ { R }_{ 2 } } \right) \)
(vi) இங்கு μ என்பது லென்சு செய்யப் பயன்படுத்தப்பட்ட பொருளின் ஒளி விலகல் எண்.R1,R2 என்பவை லென்சின் இரு கோளாகப் பரப்புகளின் வளைவு ஆரங்கள் f என்பது குவியத்தொலைவு ஆகும்.
2.
(i) அதிக பளுவாதல் அல்லது குறுக்குத் தடச் சுற்று ஏற்பட்டால் மின் உருகு இழை அல்லது சிறிய மின்சுற்று உடைப்பி மின்சுற்றை முறித்துவிடும்.
(ii) ஒரே மின் மூலத்தில் அதிக அளவிலான மின்சுற்றுக்களை தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அதிக பளு ஏற்படுகிறது.
(iii) இது சுற்றின் வழியாக அதிகப்படியான மின்னோட்டம் பாய்வதற்கு வழிவகை செய்கிறது.
(iv) ஒரு மின் கம்பியில் அதன் எல்லையை தாண்டி அதிகப்படியான மின்னோட்டம் பாயும் போது மின் கம்பி சூடாகி தீ ஏற்படுகிறது. இதுவே, அதிக பளுவாதல் எனப்படும்.
3.
ஒரு கிலோகிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 10C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கிலோ கலோரி என வரையறுக்கப்படுகிறது.
4.
(i) \(_{ 88 }{ Ra }^{ 226 }\rightarrow Rn+_{2}{He}^{4}\) (\(\alpha \)-சிதைவு)
(ii) \(_{ 27 }{ Co }^{ 60 }\rightarrow Ni+_ {1}{e}^4\)(\(\beta \) -சிதைவு)
5.
\(_{ 6 }{ C }^{ 14 }\rightarrow _{ -1 }{ e }^{ 0 }+_{ 7 }{ N }^{ 14 }\)
6.
(i) தொகுதி 14ல் உள்ள E என்ற தனிமம் ஒரு அலோகம் அத்தனிமத்தின் பெயர் சிலிக்கான்(Si) இது சகப்பிணைப்பு மட்டுமே உருவாக்கும்.
(ii) தொகுதி 2-ல் உள்ள D என்ற தனிமம் மெக்னீசியம் ஆகும். இதன் இணைதிறன் 2 ஆகும்.
(iii) தொகுதி 15இல் உள்ள B என்ற அலோகம் நைட்ரஜன் ஆகும்.
(iv) தனிமம் D ஆனது தனிமம் E யை விட அதிக அணு ஆரத்தை உடையது. ஏனெனில், அணுவின் உருவளவு தொடரில் குறைந்து காணப்படுகிறது.
(v) C மற்றும் F தனிமங்கள் உள்ள தொகுதி 18 பொதுவாக உயரிய வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன.
7.
| மேலிக்னன்ட் கட்டிகள் | மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள் |
| பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும். |
உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது. |
8.
புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கார்சினோஜென்கள் அல்லது புற்றுநோய்க் காரணிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை இயற்பியல், வேதியியல், அயனியாக்கும் கதிர்வீச்சுகள் மற்றும் உயிரியல் காரணிகளாகும்.
9.
(i) B மற்றும் D அல்கைன்கள் தொகுதியைச் சேர்ந்தவை.
(ii) E மற்றும் F ஹைட்ரோ கார்பன்கள் அல்ல.
10.
தொடர்ச்சியாக ஒரு இனத்தின் தொடர்புடைய விலங்குகளிடையே உட்கலப்பு செய்வது அதன் பாலின வளத்தையும் மற்றும் உற்பத்தித் திறனையும் பாதிக்கும். இது உட்கலப்பு வீழ்ச்சி எனப்படும்.
11.
மூன்று வகையான தேர்வு முறைகள் உள்ளன.
அவை
i) கூட்டுத் தேர்வு முறை
ii) தூய வரிசைத் தேர்வு முறை
iii) போத்து தேர்வு முறை (குளோனல் தேர்வு முறை)
12.
மின்னணுக் கழிவுகளால் உண்டாகும் பாதிப்புகள்:
(i) ஈயம்:
மனிதரில் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
(ii) குரோமியம்:
மூச்சுத் திணறல் ஆஸ்துமா
(iii) கேட்மியம்:
சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் படிந்து அதன் பணிகளை பாதிக்கிறது. நரம்புகளை பாதிக்கின்றது.
(iv) பாதரசம்:
மூளை மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.
13.
(i) குறிப்பிட்ட வன உயிரிகளை வேட்டையாடுவதும் கொல்லுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
(ii) வன உயிரிகளை பாதுகாக்க சரணாலயங்களை, தேசிய பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை புதிதாக உருவாக்க வழி வகைமை செய்யப்பட்டுள்ளது.
14.
(i) வாசோபிரஸ்ஸின் அல்லது ஆண்டி டையூட்ரிக் ஹார்மோன்
(அ) சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் நீர் இழைப்பைக் குறைக்கிறது. எனவே இது ஆண்டி டையூட்ரிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) எனப்படுகிறது.
(ஆ) ADH குறைவாக சுரப்பதால், நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.
(ii) ஆக்சிடோசின்:
பெண்களின் குழந்தைப்பேற்றின் போது கருப்பையை சுருக்கியும், விரிவடையச் செய்தும், குழந்தைப்பேற்றிற்கு பிறகு பால் சுரப்பிகளில் பாலை வெளியேற்றுவதற்கும் காரணமாகிறது.
15.
(i) புரோஜெஸ்டிரான் பருவமடைதலில் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
(ii) அண்ட செல் உருவாக்கத்தினை ஊக்குவிக்கிறது.
(iii) அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடைவதைத் தூண்டுகிறது.
16.
| எண் | ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பண்பு | ஓங்கு பண்பு | ஒடுங்கு பண்பு |
| 1, | விதையின் வடிவம் | உருண்டை | சுருங்கியது |
| 2, | விதையின் நிறம் | மஞ்சள் | பச்சை |
| 3, | விதையுறையின் நிறம் | உடையது | வெள்ளை |
17.
i) நம்முடைய பல் மற்றும் யானையின் தந்தம் இவை இரண்டும் அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். எனில் இவை இரண்டும் ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகளாகும். மேலும் பார்க்க வெவ்வேறாகவும் வெவ்வேறு பணிகளை செய்வதற்கேற்ப தகவமைக்கப்பட்டுள்ளன. பொருட்களை கடிக்க நாம் பற்களை பயன்படுத்துகிறோம்.
ii) செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அது வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டவையாக உள்ளன.
18.
கொடுக்கப்பட்டவை:
விசை F =50 N
தொலைவு d =5 cm
கண்டறிய:
விசையின் உந்தம் =F x d
உந்தவிசை = 50 x 5 x 10-2
= 250 x 10-2
= 2.5 Nm
19.
மெக்னீசியம் சல்பைட்டின் வாய்ப்பாடு = MgS
Mg மற்றும் Sன் நிறை விகிதம் = 3:4
3 கி மெக்னீசியத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = \(\cfrac { { N }_{ A } }{ 24 } \times 3=\cfrac { { N }_{ A } }{ 8 } \)
4 கி S -ல் உள்ள அணுக்களின் எண்ணிக்கை
= \(\cfrac { { N }_{ A } }{ 32 } \times 4=\cfrac { { N }_{ A } }{ 8 } \)
Mg மற்றும் S-அணுக்களின் எண்களின் விகிதம்
= \(\cfrac { { N }_{ A } }{ 8 } :\cfrac { { N }_{ A } }{ 8 } \)
= 1:1
20.

21.
(i) உயிரிகள் வழக்கமான இருமய (2n) குரோமோசோம்களை விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை யூபிளாய்டி எனப்படும்.
(ii) ஒரு உயிரி மூன்று ஒற்றைமய குரோமோசோம் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது மும்மய நிலை (3n) எனப்படும். மும்மயத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பொதுவாக மலட்டுத்தன்மை உடையவை.
(iii) ஒரு உயிரி நான்கு ஒற்றைமயத் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது நான்மய நிலை (4n) எனப்படும்.
(iv) நான்மய நிலைப் தாவரங்கள் நன்மை பயக்கக் கூடியவை. ஏனெனில் நான்மய நிலை, பெரும்பாலும் அளவில் பெரிய பழம் மற்றும் பூக்களை விளைவிக்கும்.
22.
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1=20 kg
இரண்டாம் பொருளின் நிறை m2=15 kg
முதல் பொருளின் தொடக்க திசைவேகம் u1=40 ms-1
இரண்டாம் பொருளின் தொடக்க திசைவேகம் u2=0
(தொடக்கத்தில் ஒய்வு நிலையில் உள்ளது)
முதல் பொருளின் இறுதி திசைவேகம் =v1
இரண்டாம் பொருளின் இறுதி திசைவேகம் =v2
(ie) v1 = v2 =v
கண்டறிய:
v=?
உந்தமாறா விதிப்படி,
m1u1 + m2u2 =m1v1 + m2v2
m1u1 + m2u2 =(m1+m2)v
20 x 40 + 15 x 0 =(20+15)v
800 =35v
v=\(\frac{800}{35}\)=22.85 ms-1
23.
A என்பது : மூளைத் தண்டுவடத் திரவம்
B என்பது : மையக் குழல்
C என்பது : வயிற்றுப்புறக் கொம்புகள்
D என்பது : முதுகுப்புறக் கொம்புகள்
24.
(i) நமது கை முட்செடியில் படும் போது முதலில் உணர் நரம்பு செல்கள் செயல்படத் தொடங்குகின்றன.
(ii) இவை முதலில் செய்திகளை மூளைக்கோ அல்லது தண்டுவடத்திற்கோ கடத்துகிறது.
(iii) மூளை அல்லது தண்டுவடம் இத்தூண்டலை பகுத்தறிந்து, உரிய துலங்கல்களை உடனடியாக கடத்தும் மையத்தின் நரம்பு செல்கள் மூலமாக இயக்க நரம்பு செல்களுக்கு கடத்துகிறது. அவை நம் கைகளுக்கு துலங்கல்களை கடத்தி உடனடியாக கையினை முட்செடியினை விட்டு விலகச் செய்கிறது.
25.
\(n'\left( \cfrac { V }{ V-{ V }_{ s } } \right) n=\left[ \cfrac { 340 }{ 340-30 } \right] \times 600=\cfrac { 340 }{ 310 } \times 600\)
தோற்ற அதிர்வெண் n' = 658 Hz
26.
\({ v }^{ 1 }=\left( \cfrac { V+{ V }_{ 1 } }{ V } \right) n=\left( \cfrac { V+2V }{ V } \right) \times 1000\)
தோற்ற அதிர்வெண் \(n'=\cfrac { 3V }{ V } \times 1000=3,000Hz\)
27.
சூல் துளையின் அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிர்துருவச் செல்களாக உள்ளன.
28.
ஈஸ்ட்டில் தாய் தாவரத்திலிருந்து தோன்றும் புதிய வளரியிலிருந்து மொட்டு தோன்றுகிறது. அது மேலும் வளர்ச்சியடைந்து புதிய தாவரத்தை உருவாக்குகிறது.
29.
உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் இரத்தத்திலும் ஒரே வகையான ஆக்கக்கூறுகளே உள்ளன. மேலும் சுவாச நிறமியான ஹீமோகுளோபினை RBC கொண்டுள்ளதால் இரத்தம் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது. எனவே பலதரப்பட்ட மனிதர்களின் நிறங்களுக்கும் இரத்தத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
30.
(i) ஆலமரமானது இருவித்திலை தாவரம், வாஸ்குலார் தொகுப்பில் கேம்பியம் திசு காணப்படுகிறது. இந்த கேம்பியம் திசு இரண்டாம் நிலை வளர்ச்சியில் ஈடுபடுவதால் ஒவ்வொரு நாளும் இதன் தண்டுப்பகுதி வளர்கிறது. சைலம் மற்றும் புளோயம் தடிமனாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
(ii) தென்னை மரமானது ஒருவித்திலைத் தாவரம். இங்கு இரண்டாம் நிலை வளர்ச்சி ஏற்படுவதில்லை. எனவே அது பருமனாக காணப்படுவதில்லை
31.
அ) இது ஒரு வாஸ்குலார் திசுத் தொகுப்பு.
ஆ) இது சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையாகும். இவை இரு வகைப்படும். அவை:
1. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
2. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
நாம் படத்தில் பார்ப்பது புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை. ஏனெனில், புளோயம் கற்றை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது.
இ) எ.கா. பாலிபோடியம்
32.
(i) அட்டையின் தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசம், பரவல் முறையில் நடைபெறுகிறது.
(ii) நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தால் பரவுகிறது.
(iii) உப்பைக் கொட்டுவதினால் உப்பு, நீரை உறிஞ்சிவிடுகிறது. மேலும் வாயு பரிமாற்றம் தடையாகிறது. இதனால், அட்டையின் உடல் உலர்ந்து அது இறந்து விடுகின்றது.
33.
அட்டை நோய்களை உண்டாக்குவதில்லை. இவை விருந்தோம்பிகளின் இரத்தத்தை மட்டுமே உறிஞ்சிவிடும். ஆனால் சில விருந்தோம்பிகளிலிருந்து அதிக இரத்தத்தினை உறிஞ்சிவிடுவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
34.
(i) கணினி புதிய கருத்துக்களை வெளிக் கொணரவும், புதிய கொள்கைகளில் ஆழமாக செல்வதற்கும் பல வழிகளில் CD - ரோம் or DVD போன்றவற்றின் மூலமாக உதவி செய்கிறது.
(ii) கலந்துரையாடல் பயிற்சிகளுக்கும் வழி வகுக்கிறது.
(iii) பாடங்களை எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் காட்சி தொடர்பு சாதனங்களின் மூலமும், அசைவூட்டல் மூலமாகவும், சித்திரங்களின் மூலமாகவும், நாங்கள் கற்றுக் கொள்ள உதவிபுரிகின்றது.
35.
A என்பது நீல நிறப் படிக உப்பு.
A \(\Rightarrow\) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் (CuSO4 . 5H2O).
'A' யை சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து 'B' ஆக மாறுகிறது.

36.
விணு எளிதில் சர்க்கரையை கரைப்பார்.
குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
ஏனெனில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைபொருளின் கரைதிறனும் அதிகரிக்கிறது.
37.
அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகள்:
1. நிலைப்பு தன்மை
2. உயர்த்தப்பட்ட உணவூட்ட மதிப்பு
3. நோய் எதிர்ப்புத் தன்மை
4. மாறுபடும் சுற்றுச்சூழல் நிலைகளுக்குத் தாங்கும் தன்மை
5. குறைந்த செலவில் அதிக வளர்ச்சி வேகம்.
38.
1. மெண்டல் 34 வகைக்குட்பட்ட 10,000 தாவரங்களைத் தனது சோதனைக்கு உட்படுத்தினார்.
2. ஒவ்வொரு தாவரமும் மற்ற தாவரத்திலிருந்து பல வகைகளில் வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
3. இவ்வாறு அவர் எழு ஜோடி பண்புகளில் வேறுபட்ட தாவரங்களைத் தனது ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தார்.
4. மெண்டல் இந்த வேறுபட்ட ஏழு பண்புகளிலிருந்து தன்னுடைய ஒருபண்பு கலப்பு சோதனையில் தண்டின் உயரப் பண்பினை தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்தினார்.
5. இரு பண்பு கலப்பு சோதனையில் விதையின் நிறம் மற்றும் விதையின் வடிவம் என்ற இரண்டு பண்புகளையும் தேர்வு செய்து ஆய்வினை மேற்கொண்டார்.
39.
1. உயிரிகள் வழக்கமான இருமய (2n) குரோமோசோம்களை விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை யூபிளாய்டி எனப்படும்.
2. நன்மய நிலையான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நன்மை பயக்கக்கூடியவை.
3. ஏனெனில், நான்மய நிலை, தாவரங்கள் பெரும்பாலும் அளவில் பெரிய பழம் மற்றும் பூக்களை விளைவிக்கும்.
4. எனவே யூபிளாய்டி நிலைத் தாவரங்கள் சாதகமாகக் கருதப்படுகிறது.
40.
சூத்திரம்

CaCO3 - ன் மூலக்கூறு நிறை = (Ca \(\times\)1) + (C \(\times\)1) + (O \(\times\)3)
= (40 \(\times\) 1) + (12 \(\times\) 1) + (16 \(\times\)3)
= 40 + 12 + 48 = 100 கி

CaCO3 - ல் கால்சியத்தின் நிறை சதவீதம் \(= \frac { 40 }{ 100 } \times 100 = 40 \%\)
CaCO3 - ல் கார்பனின் நிறை சதவீதம் \(= \frac { 12 }{ 100 } \times 100 = 12 \%\)
CaCO3 - ல் ஆக்ஸிஜன் நிறை சதவீதம் \(= \frac { 48 }{ 100 } \times 100 = 48 \%\)
41.
அ) 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு:
H₂ ன் மூலக்கூறு நிறை
H₂ = H x 2
= 1 x 2 = 2
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 2 x 2
2 மோல்கள் ஹைட்ரஜனின் நிறை = 4 கி
ஆ) 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு:
குளோரின் மூலக்கூறு நிறை Cl2
Cl2 = Cl x 2 = 35.5 x 2 = 71
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 3 x 71
3 மோல்கள் குளோரின் மூலக்கூறின் நிறை = 213 கி.
இ) 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு:
சல்பர் மூலக்கூறு நிறை S8
S8 = S x 8 = 32 x 8 = 256
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 5 × 256
5 மோல்கள் சல்பர் மூலக்கூறின் நிறை
= 1280 கி.
ஈ) 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு:
பாஸ்பரஸ் மூலக்கூறின் நிறை
P4 = P × 4 = 30.97 × 4 = 123.88
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறின் நிறை = 4 × 123.88
= 495.52
நிறை = 496 கி
42.
அ) அயனிப் பிணைப்பு
ஆ) எலக்ட்ரான் கவர்தன்மை
இ) தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும்.
தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது.
43.

i) A \(\Rightarrow\) அலுமினியம் (Al)
ii) 2 Al + 3 H2O \(\rightarrow\) Al2O3 + 3 H2 \(\uparrow\)
நீராவி B \(\Rightarrow\) அலுமினியம் ஆக்சைடு
iii) 2 Al + 2 NaOH + 2H2O \(\rightarrow\) 2 NaAlO2 + 3 H2 \(\uparrow\)
C \(\Rightarrow\) சோடியம் மெட்டா அலுமினேட்
| A | அலுமினியம் (A/) |
| B | அலுமினியம் ஆக்சைடு (Al2O3) |
| C | சோடியம் மெட்டா அலுமினேட் (NaAlO2) |
44.
1. ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரிகளாகக் கருதப்படுகிறது.
2. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது.
3. ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவ பற்களையும் பெற்றிருந்தது.
4. எனவே ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக கருதப்படுகிறது.
45.
46.
அ) வீட்டு கழிவுகளான காய்கறி கழிவுகளை வீடுகளிலே குழி அமைத்து மட்க செய்து உரமாக மாற்றலாம்.
ஆ) தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு உருளைகளை அகற்றுவதற்கு மறுசுழற்சி முறையை பின்பற்றலாம். ஆம் இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.
47.
1. சூரிய மின்கலங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை.
2. இதிலிருந்து மாசு உண்டாக்கக்கூடிய எரிபொருட்களோ ஆபத்தான வாயுக்களோ கழிவு பொருட்களோ வெளியேறுவதில்லை.
3. இவற்றினை யாரும் அணுக இயலாத அல்லது மிக தொலைதூர இடங்களிலும் பொருத்த முடியும் (காடுகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள்).
4. பெரும் பொருட் செலவில் மட்டுமே அமைக்க இயலும்.
48.
1. குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள் மிகவும் பொருத்தமானவை.
2. கார்போஹைட்ரேட்டுகள் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (சுக்ரோஸ், குளுக்கோஸ்) எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
3. நாள்தோறும் முழு தானியங்கள், சிறு தானியங்கள் (சோளம், கம்பு, கேழ்வரகு) கீரை வகைகள், கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி போன்றவற்றை உள்ளடக்கியதாக உணவு முறை அமைய வேண்டும்.
4. மொத்த கலோரி மதிப்பில் 50 - 55% அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும். அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பெற 10 - 15% புரதம் கொண்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. நிறைவுறாத பல கொழுப்பு அமிலங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
6. மொத்த கலோரியில் 15 - 25% கொழுப்பைக் கொண்டிருக்க வேண்டும். நிறைவுற்ற கொழுப்பினை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
49.
1. இது மூளையின் நரம்புகளில் ஒரு சந்தோஷமான உணர்வை கொடுக்கிறது.
2. மது அருந்துபவருக்கு உடல் நிலையில் மது இல்லாமல் இருக்க முடியாது, ஏனெனில்
3. அவர்களுக்கு பய உணர்வு, உடல் நடுக்கம், முடிவில்லாத நிலையில் மற்றும் குழப்பங்களுடன் இருக்க முடிகிறது.
50.
தற்சார்பு ஊட்ட உயிரிகளான ஆல்காக்கள், தாவரங்கள், பச்சை நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்தி கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை எனப்படும்.
இது செல்லில் பசுங்கணிகங்களில் நடைபெறுகிறது.
51.
52.
அ) சேர்மம் ' A ' என்பது எத்தனாயிக் அமிலம் (அசிட்டிக் அமிலம்) - CH3COOH [C2H4O2]
ஆ) சேர்மம் ' B ' உருவாதல் வினையினை எழுதுக.

சேர்மம் ' B ' CH3COOCH2CH3 → எத்தில் எத்தனோயேட்
இ) எஸ்டராக்குதல்
ஏனென்றால் எத்தில் எத்தனோயேட் என்பது ஒரு எஸ்டர் ஆகும்.
53.
அ)
(அ) 
ஆ) பியூட்டேன் - 2 - ஆல் (அ) 2 - பியூட்டனால்
இ) இச்சேர்மம் நிறைவுற்ற சேர்மம். ஏனென்றால் அனைத்து கார்பன் அணுக்களும் ஒற்றைப் பிணைப்பை மட்டுமே கொண்டுள்ளது.
54.
| வ.எண். | தமனி | சிரை |
| 1. | வழங்கும் குழாய்கள் | பெறும் குழாய்கள் |
| 2. | இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது. | சிவப்பு நிறத்தினை உடையது. |
| 3. | உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது | உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. |
| 4. | அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் | குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம். |
| 5. | தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை | சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை. |
| 6. | நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. | நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. |
| 7. | உள்ளீடு வால்வுகள் கிடையாது. | உள்ளீடு வால்வுகள் உண்டு. |
55.
காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறக்கிறது. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்புத்தன்மை குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக்கொள்கிறது.
56.
1. ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்க வேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவான எதிரொலிக்கும் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்களில் பிரதிபலிக்கும் ஒலியானது, சுவரில் எங்கு மோதினாலும், ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப்புள்ளியில் குவிக்கப்படுகிறது.
3. இதனால் இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும் மீண்டும் மீண்டும் எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும் அடையும்.
57.
வெப்பநிலை = 46°C
ஒலியின் திசைவேகம் = 331 மீ.வி-1
46°C ல் ஒலியின் திசைவேகம் = ?
VT = Vo + 0.61 T மீ.வி-1
= 331 + 0.61 \(\times\) 46
= 359.06 மீ.வி-1.
58.
மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
V = IR
59.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா) என்னும் அறிகுறி இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிக்கும் போது ஏற்படும்.
2. டயாபடீஸ் மெலிடஸ் என்னும் நோய் உள்ளவர்களிடம் காணப்படும்.
3. சீரான உடற்பயிற்சி, சிறந்த உணவுக்கட்டுப்பாடு முதலியவற்றின் மூலம் டயாபடீஸ் மெலிடஸ் நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
60.
அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்:
ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளிக்கும் போது, அது போல்டிங்கைத் தூண்டுகிறது. இது விதை உற்பத்தியைத் தூண்டும் இயற்கை வழி முயற்சி ஆகும்.
ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால், அழுகிய பழத்தில் இருந்து உற்பத்தியாகும் எத்திலின் பழுக்காத பழத்தினை முதிர்ச்சி அடைய செய்து விரைவாகப் பழுக்கத் தூண்டும்.
இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது;
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது, செல்பகுப்பு, வளர்ச்சி உருவத்தோற்றவியல் முதலியவற்றை காண இயலாது.
61.
தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.
அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y - வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.
உமிழ்நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படும் ஹிருடின் என்ற பொருள் இரத்தத்தை உறைய விடுவதில்லை.
பக்கக் கால்களும், மயிர்க் கால்களும் காணப்படுவதில்லை.
62.
மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன.
63.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
64.
1. பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் நிக்கல், காப்பரை விட அதிக வினைதிறன் கொண்டது.
2. எனவே நிக்கல், காப்பரை இடப்பெயர்ச்சி செய்து நிக்கல் சல்பேட்டையும், காப்பரையும் தரும்.
Ni(s) + CuSO4(aq) \(\rightarrow\) NiSO4(aq) + Cu(s)
65.
66.
(i) 'L' - நரம்பு செல் (அ) நியூரான்
(ii) “M” ஆக்சான் மற்றும் ”N’ டெண்ட்ரைட்டுகள்
(iii) “O” சினாப்ஸ்
(iv) “P” அசிட்டைல்கோலின்
67.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
68.
இந்த பண்பானது பார்க்கும் தூரம் மற்றும் பரப்பளவு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு ஒளி கிடைக்க பயன்படுகிறது.
எனவே ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களின் கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
69.
i) ஆம், பிம்பம் கிடைக்கும். ஆனால் தெளிவான பிம்பம் தெரிவதில்லை.
ii) இல்லை. குவிலென்சானது தளக் குவிலென்சாக மாறிவிடும், இது குவிலென்சை போன்று செயல்பட்டு ஒளிக்கற்றையை குவிக்கும்.
70.

1. Script tab-ல் Events option ஐ தேர்வு செய்க.


3. Script tab-ல் looks option ஐ தேர்வு செய்க. Say " " என்ற block ஐ Script area விற்குள் இழுத்து வைக்கவும்

4. Say tab-னுள் “Hello” என்ற வார்த்தையை தட்டச்சு செய்யவும்.

5. Script tab -> Sounds option ஐ தேர்வு செய்க. “Play sound” block ஐ இழுத்து Script Area வினுள் விடவும். Audio file லிருந்து “Hello” sound ஐ தேர்வு செய்யவும்.

6. File menu -> Save தேர்வு செய்க. இப்போது உங்கள் Project சேமிக்கப்படும்.
7. நிரலை இயக்க வலது மேல் ஓரத்தில் உள்ள பச்சை நிறக் கொடியை click செய்யவும்.


71.
கொடுக்கப்பட்டவை:
குவிய தொலைவு
பொருளின் உயரம்
பிம்பத்தின் தொலைவு
\(\cfrac { 1 }{ f } =\cfrac { 1 }{ v } -\cfrac { 1 }{ u } \)
\(\therefore \cfrac { 1 }{ f } =\cfrac { 1 }{ v } -\cfrac { 1 }{ u } \)
\(\cfrac { 1 }{ u } =\cfrac { 1 }{ -15 } +\cfrac { 1 }{ 20 } =\cfrac { -20+15 }{ 300 } =\cfrac { -5 }{ 300 } \)
u = -60 செ.மீ
உருப்பெருக்கம் \(m=\cfrac { { h }_{ 1 } }{ { h }_{ 0 } } =\cfrac { v }{ u } \)
\({ h }_{ 1 }=\cfrac { v }{ u } .{ h }_{ 0 }\)
பிம்பத்தின் அளவு \({ h }_{ 1 }=\cfrac { -15 }{ -60 } \times 5\)
\(=\cfrac { 5 }{ 4 } =1.25\) செ.மீ
மிகவும் சிறிய பிம்பம் மற்றும் மாயப்பிம்பம்.
72.
(i) மின்சுற்று பக்க இணைப்பில் உள்ளது. எனவே தொகுபயன் மின்தடை R =?
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } +\frac { 1 }{ { R }_{ 3 } } \)
=\(\frac { 1 }{ 20 } +\frac { 1 }{ 100 } +\frac { 1 }{ 50 } \)
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 5+1+2 }{ 100 } =\frac { 8 }{ 100 } \)
Rp=\(\frac { 100 }{ 8 } \)=12.5 Ω
(ii) மின்சுற்றின் வழியே பாயும் மொத்த மின்னோட்டம் =\(\frac { { V }_{ p } }{ { R }_{ p } } \)
Ip =\(\frac { 125 }{ 12.5 } \)=10 A
(iii) ஓமின் விதிப்படி ஒவ்வொரு மின்தடையின் வழியே மின்னோட்டம் V=IR
I1= \(\frac { { V }_{ 1 } }{ { R }_{ 1 } } =\frac { 125 }{ 20 } \)=6.25 A
I2=\(\frac { { V }_{ 2 } }{ { R }_{ 2 } } =\frac { 125 }{ 100 } \)=1.25 A
I3=\(\frac { { V }_{ 3 } }{ { R }_{ 3 } } =\frac { 125 }{ 50 } \)=2.50 A
மின் சுற்றில் பாயும் மின்னோட்டம்
Ip=I1+I2+I3
I=6.25+1.25+2.50=10 A
(iv) பக்க இணைப்புச் சுற்றுகளில் ஒவ்வொரு மின்தடையின் குறுக்கே மின்னழுத்தம்
=V1=V2=V3=125
(v) ஒவ்வொரு மின்தடையின் வழியேயான ஆற்றல் பங்கீடு
P1=V1I1=125 x 6.25 =781.25w
P2=V2I2=125 x 1.25=156.25w
P3=V3I3=125 x 50=312.50 w
73.
கொடுக்கப்பட்டவை:
அலுமினியத்தாளின் நீளம் L =30 மீ
நீள் வெப்ப விரிவு குணகம் ΔL=23 x 106K-1
வெப்பநிலை மாற்றம் ΔT=300 K
கண்டறிய:
நீளத்தில் மாற்றம் ΔL=?
ΔL =Lα1ΔT
=(30) x (23 x 10-6) x (300) =2.07 x 10-1
ΔL=0.207மீ
74.
அ) கம்பியின் மின்தடை = RΩ
ஐந்து பகுதிகளாக வெட்டப்பட்டால் ஒரு பகுதி கம்பியின் மின்தடை =\(\frac { R }{ 5 } \) Ω
ஆ) பக்க இணைப்பில் அதன் தொகுபயன் மின்தடை
\(\frac { 1 }{ R_{ p } } =\frac { 5 }{ R } +\frac { 5 }{ R } +\frac { 5 }{ R } +\frac { 5 }{ R } +\frac { 5 }{ R } \)
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 25 }{ R } \) \(\Rightarrow\) Rp=\(\frac { R }{ 25 } \) Ω
இ) தொடர் இணைப்பு அதன் தொகுபயன் \( =\frac{R}{5}+\frac{R}{5}+\frac{R}{5}+\frac{R}{5}+\frac{R}{5}\)
\(=\frac{5 \mathrm{R}}{5}=\mathrm{R} \Omega \)
தொகுபயன் மின்தடைகளின் விகிதம் \(=\frac{\mathrm{R}_{\mathrm{s}}}{\mathrm{R}_{\mathrm{P}}}=\frac{\mathrm{R}}{\mathrm{R} / 25} \)= 25:1
75.
\(\Delta\) V = 0.3 - 0.25 = 0.05 மீ3
உண்மையான பருமன் Vo = 0.25 மீ3
\(\Delta\)T = 50 K
\(\begin{aligned}
\frac{\Delta V}{V_0} & =\alpha \Delta \mathrm{T}
\end{aligned}\)
\(\begin{aligned}
\alpha_v & =\frac{\Delta \mathrm{V}}{\mathrm{V}_0} \times \frac{1}{\Delta \mathrm{T}}=\frac{0.05}{0.25 \times 50}=\frac{0.05}{12.5}=0.004
\end{aligned}\)
av = 0.004 K-1
76.
நியூட்டனின் முதல் விதிப்படி, புறவிசை செயல்படாத நிலையில் இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து அதே திசையில் இயக்க நிலையிலேயே இருக்கும். வேகமாகச் செல்லும் இரு சக்கர வண்டி திடீரென்று நிறுத்தப்பட்டால் அதில் அமர்ந்திருப்பவர் தொடர்ந்து அதே திசையில் இயக்கம் பெற்றவராகவே இருப்பார். இதன் காரணமாக, வாகன ஓட்டி எறிபொருள் போன்று வீசப்படுவார்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியின்படி, பொருள் ஒன்றின் மீது செலுத்தப்படும் விசையால் தோற்றுவிக்கப்படும் முடுக்கம் பொருளின் நிறையைப் பொறுத்தது. மோதல் ஏதும் ஏற்படும் பொழுது, வாகனத்தின் முன்பக்கம் உள்ள காற்றுத் தடுப்பான் கண்ணாடியின் மீது வேகமாக சென்று மோதாமல், மோதல் நேரத்தை நீட்டித்து கணத்தாக்கு விசையின் விளைவைக் குறைப்பதற்கு பெல்ட் உதவுகிறது.
தலை, முதலாவது தரையை வந்தடைந்து தலையில் அதிகமாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க தலைக்கவசம் மிகவும் அவசியம்.
77.
m = 1கிகி ; v = 10 மீ.வி-1
மோதலுக்கு பின் அதே வேகத்தில் பந்து உயரச் செல்வதால் உந்தம் mv - லிருந்து - mv க்கு மாற்றமடைகிறது. ஆகவே உந்த மாற்றம்
உந்த மாற்றம் = இறுதி உந்தம் - தொடக்க உந்தம்
= - mv - mv
= -2 mv = - 2 \(\times\) 1 \(\times\) 10
= - 20 கிகி மீ.வி-1
78.
நான் படம் வரையும் கலைஞனாக இருந்தால் பெயிண்ட் செயலியை (Paint) பயன்படுத்தி படங்கள் வரைவேன். தேவைப்பட்டால் திருத்தங்களும் செய்வேன்.
79.
1. வைரஸ்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன.
2. இது பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது.
3. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக் கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி, அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்தி செய்வது, நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் எனப்படும்.
80.
படிப்பின்மை, பயம், மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் குறைபாடுகளை தெரிந்து கொள்ளாமை போன்ற காரணங்களினால் அனைத்து மக்களாலும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
81.
1. மாதவிடாய் சுழற்சியில் லூட்டியல் நிலையில் LH மற்றும் FSH குறைதல். கார்பஸ் லூட்டியத்தால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜெஸ்டிரான் அளவு குறைந்து மாதவிடாய் ஏற்படுதல்.
2. கருவுறுதல் நிகழாத போது கார்பஸ் லூட்டியம் சிதைந்து விடுதல் போன்றவை நிகழ்வதால் சுரப்புநிலை என அழைக்கப்படுகிறது.
82.
ஒரு ராண்ட்ஜன் என்பது நிலையான அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோகிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது 2.58 × 10-4 கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும்.
83.
இயற்கை கதிரியக்கத்தின் பண்புகள்:
இயற்கை கதிரியக்கம் அணுக்கருவின் தன்னிச்சையான சிதைவு நிகழ்வாகும்.
இவை பொதுவாக 82 ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த முடியாது.
செயற்கை கதிரியக்கத்தின் பண்புகள்:
செயற்கை கதிரியக்கம் அணுக்கருவின் தூண்டப்பட்ட சிதைவு நிகழ்வாகும்.
இவை பொதுவாக 82 ஐ விட குறைவாக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது
இதனை கட்டுப்படுத்த முடியும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards