10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஏழு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Seven Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
தூரப்பார்வை [ஹைப்பர் மெட்ரோபியா] குறைபாடு எவ்வாறு சரி செய்யப்படுகிறது? படத்துடன் விவரி.
2.
குழிலென்சின் வழியாக ஒளிவிலகல் ஏற்படுவதை படத்துடன் விவரி. பொருளின் நிலை, பிம்பங்கள் உருவாக்கப்படும் நிலை குறித்து விவரி.
3.
பக்க இணைப்பில் தொடர் மின்தடையாக்கிகளின் சமன்பாட்டினைத் தருக.
4.
ஓம் விதியினைக் கூறி அதன் வரைபடத்தினை விவரி.
5.
திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.
6.
வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.
7.
உடல் பருமன் பற்றி குறிப்பெழுதுக.
8.
புகைத்தலின் ஆபத்துக்கள் மற்றும் புகையிலையின் விளைவுகளை எழுது.
9.
எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பைக் கொண்டு வேதிப்பிணைப்புகள் தன்மையை எவ்வாறு அறிவாய்?
10.
நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்களின் சிறப்பம்சங்களை எழுது.
11.
ஹைட்ரோ கார்பன்களின் பண்புகளை எழுது.
12.
மரபுப்பண்பு மாற்றம் செய்யப்பட்ட விலங்கு மற்றும் தாவரங்களை அட்டவணைப்படுத்தி அவற்றில் புகுத்தப்பட்ட ஜீன் சாதனைகளை எழுதுக.
13.
டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில் நுட்பம் பற்றி விளக்கு.
14.
அனைத்து விதமான ஆற்றலும் வெவ்வேறு வழிமுறைகளில் சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. இதனை நீ ஏற்றுக்கொள்கிறாயா?
15.
அ) சூரிய ஆற்றல் பற்றி குறிப்பெழுதுக.
ஆ) சூரிய மின் கலன்களின் பயன்கள் யாவை?
16.
அணுகுண்டு செயல்பாட்டினை விவரி.
17.
\(\alpha ,\beta ,\gamma \) - சிதைவினை விவரி.
18.
சடுதி மாற்றம் பற்றி விரிவாக எழுது.
19.
பிட்யூட்டரியின் முன் கதுப்பு சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவற்றில் எதாவது ஒன்றின் விளைவுகளைக் கூறு.
20.
ஆக்சின்களின் வாழ்வியல் விளைவுகளை விளக்குக.
21.
சென்ட்ரோமியர் அமைந்திருக்கும் நிலைக்கும் ஏற்ப குரோமோசோம்களை வகைப்படுத்து.
22.
நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதிக்கு எடுத்துக்காட்டுடன் தருக.
23.
திருப்புத்திறன் நடைமுறை வாழ்க்கையில் செயல்படும் சில அமைப்புகளை எடுத்துக்காட்டுடன் விவரி.
24.
பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டினை விளக்கு.
25.
பரிணாமத்தின் சான்றுகளாகிய புறத்தோற்றவியல் மற்றும் உடற்கூறியல் சான்றுகளை விளக்கு.
26.
27.
கரிமச் சேர்மங்களின் பொதுப் பண்புகளை எழுது.
28.
மூளைத் தண்டுவட திரவத்தின் பணிகள் யாவை?
29.
மூளையின் பாகங்களையும் அவற்றின் பணிகளையும் அட்டவணைப்படுத்து.
30.
அயல் மகரந்தச்சேர்க்கைக்கான காரணிகள் பற்றி விளக்கு.
31.
மனித விந்துவின் அமைப்பை படத்துடன் விவரி.
32.
டாப்ளர் விளைவின் பயன்பாடுகளை விவரி.
33.
ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.
34.
மீளாவினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
35.
மீள் வினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
36.
'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரத்தம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?
37.
ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கினை விளக்கு.
38.
சாறேற்றத்தினை படத்துடன் விளக்குக.
39.
25oC ல் 100 கி நீரில் பின்வரும் கரைபொருளின் கரைத்திறனை எழுதுக.
CaCO3
NaCl
NH3
NaOH
C6H12O6
NaBr
NaI
40.
இருமடிக்கரைசலின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.
41.
இருவித்திலை தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை படத்துடன் விவரி.
42.
முயலின் இதயத்தை படத்துடன் விவரி.
43.
முயலின் பல் அமைப்பை பற்றி எழுதுக.
44.
கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக.
45.
குறிப்பு வரைக.
அ) தெவிட்டிய கரைசல்
ஆ) தெவிட்டாத கரைசல்
46.
மருத்துவத் துறையில் உயிர்தொழில் நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
47.
உயிரூட்டச் சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
48.
புதிதாகப் பிறந்த குழந்தையின் பாலின நிர்ணயம் ஒரு தற்செயல் நிகழ்வு. தாயோ தந்தையோ இதற்குப் பொறுப்பாக கருத முடியாது. குழந்தையின் பாலினத்தை எத்தகைய இன செல் இணைவு முடிவு செய்கிறது?
49.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?
50.
ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
51.
N2 + 3 H2 ➝ 2NH3 (N = 14, H = 1)
1 மோல் நைட்ரஜன் = ______ கி + 3 மோல் ஹைட்ரஜன் = ______ கி ➝ 2 மோல் அம்மோனியா = _____ கி
52.
அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
53.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?
54.
ஒரு உலோகம் A யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D ஐ உருவாக்கும் D யானது வாயுநிலை சேர்மம் எனில் A,B,C மற்றும் D எவை?
55.
கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக.
56.
மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிடுக.
57.
58.
59.
கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினையை விளக்குக.
60.
கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
அ) NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை
ஈ. எத்தனாலின் எரிதல் வினை.
61.
கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
62.
சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக. இதயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.
63.
நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக
64.
அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
65.
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
66.
67.
மூன்று மின் தடைகளை (அ) தொடர் இணைப்பு (ஆ) பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைக்கான கோவையை தகுந்த மின்சுற்றுப்படம் வரைந்து கணக்கிடு.
68.
ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
69.
ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
70.
முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது?
71.
72.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
73.
74.
இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.
75.
மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.
76.
ஒரு வினையின் வினை வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
77.
வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?
78.
ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு நரம்பு தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன?
79.
தண்டுவடத்தின் அமைப்பினை விவரி.
80.
வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?
81.
திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?
82.
10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
83.
பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.
84.
உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.
85.
பருவமடைதலுக்கு முன்னரும், கர்ப்பத்தின் போதும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வதில்லை ஏன்?
86.
87.
அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?
1.
(i) தூரப் பார்வை என்று அழைக்கப்படும், ஹைப்பர் மெட்ரோபியா குறைபாடானது விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படுகிறது.
(ii) இக்குறைபாடு உடைய மனிதர்களால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியும். ஆனால் அருகில் உள்ள பொருள்களைக் காண முடியாது.
(iii) விழிலென்சின் குவியத்தொலைவு அதிகரிப்பதால், விழி லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ளத் தொலைவு குறைவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
(iv) இதனால் அண்மைப் புள்ளியானது 25 செ.மீ என்ற தொலைவில் அமையாமல், சேய்மைப் புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
(v) எனவே, அருகில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு அப்பால் (பின்புறம்) உருவாக்கப்படுகின்றன. தகுந்த குவியத்தொலைவு கொண்ட குவி லென்சினைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டைச் சரி செய்யலாம், பயன்படுத்த வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை பின்வரும் முறையில் கண்டறியலாம்.
(vi) தூரப்பார்வை குறைபாடு உடைய ஒரு மனிதரால் 'd' என்ற தொலைவிற்கு அப்பால் உள்ள பொருள்களை மட்டுமே காண முடிகிறது எனக் கொள்வோம். அவர் 'd' குறைவாக உள்ள 'D' என்ற தொலைவில் அமைந்த பொருள்களையும் காண விரும்பினால், பயன்படுத்த வேண்டிய குவி லென்சின் குவிய தூரம்.
f=\(\frac { dD }{ d-D } \).
2.
(i) குழிலென்சின் முன்பாக வாய்ப்புள்ள இரண்டு நிலைகளில் பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பங்கள் குறித்துக் காண்போம்.
(ii) பொருள் ஈறிலாத் தொலைவில் உள்ள பொழுது பொருளொன்று, குழிலென்சின் முன்பாக, ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, நேரான, மிகச்சிறிய மாயப்பிம்பம் குழிலென்சின் முதன்மைக் குவியத்தில் உருவாக்கப்படுகிறது.
(iii) பொருளானது அளவிடக் கூடிய தொலைவில் வைக்கப்படும் போது பொருளொன்று குழிலென்சிற்கு முன்பாக அளவிடக் கூடிய தொலைவில் வைக்கப்படும் போது, குழிலென்சின் ஒளியியல் மையத்திற்கு, முதன்மைக் குவியத்திற்கும் இடையேயே நேரான, சிறிய மாயப்பிம்பத்தை உருவாக்குகிறது.
(iv) லென்சிற்கும் பொருளுக்கு இடையே உள்ள தொலைவு குறையும் போது பிம்பத்திற்கும் லென்சிற்கும் இடையே உள்ள தொலைவும் குறைகிறது. மேலும், பிம்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனைப் படத்தில் காணலாம்.
3.
(i) தொடரிணைப்பில் உள்ள மின்தடையாக்கி சுற்றுகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது நமக்கு பக்க - தொடர் இணைப்புச் சுற்றுகள் கிடைக்கும்.
(ii) மின்தடையாக்கிகள் R1 மட்டும் R2 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு தொகுபயன் மின்தடை RS1 பெறப்படுகிறது.
(iii) இதேபோன்று R3 மற்றும் R4 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு தொகுபயன் மின்தடை RS2 பெறப்படுகிறது.
(iv) இந்த இரண்டு தொடர் சுற்றுக்களும் பக்க இணைப்பில் இணைக்கப்படுகிறது.
சமன்பாடு RS=R1+R2+R3 -லிருந்து
RS1=R1+R2, RS2=R3+R4
இறுதியாக சமன்பாடு
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } +\frac { 1 }{ { R }_{ 3 } } \) -யிலிருந்து
தொகுபயன் மின்தடை
\(\frac { 1 }{ { R }_{ total } } =\frac { 1 }{ { R }_{ S1 } } +\frac { 1 }{ { R }_{ S2 } } \).
4.
(i) ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஜெர்மன் இயற்பியலாளர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
இவ்விதியின்படி மாறா வெப்ப நிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
I α V. எனவே \(\frac { I }{ V } \)= மாறிலி
இந்த மாறிலி மதிப்பு \(\frac { 1 }{ R } \) ஆகும்
எனவே I=\(\left( \frac { I }{ R } \right) \)V
V=IR
இங்கு R என்பது மின்தடையாகும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு (எ.கா. நிக்ரோம்) குறிப்பிட்ட வெப்ப நிலையில் மின்தடை ஒரு மாறிலி ஆகும். மின்னழுத்த வேறுபாடு V-யும் மின்னோட்டம் I-யும் ஒன்றுக்கொன்று நேர்தகவில் அமைவதால் V மற்றும் I இடையேயான வரை படம் ஒரு நேர்கோடு ஆகும்.
5.
(i) திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலினைப் பெற்று விலக்கு விசைக்கு உட்படுகிறது.
(ii) பொருள் விரிவடைவதன் அளவு பொருளுக்கு பொருள் வேறுபடும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும் போது வாயுவில் ஏற்படும் வெப்ப விரிவு திட மற்றும் திரவப் பொருள்களைவிட அதிகமாகவும், திடப் பொருள்களைவிட அதிகமாகவும் திடப் பொருளை ஒப்பிடும் போது திரவப் பொருள்களில் அதிகமாகவும் இருக்கும்.
(iii) பரும வெப்ப விரிவு குணத்தின் மதிப்பு திரவத்தில் வெப்பநிலையைச் சார்ந்ததல்ல. ஆனால் வாயுவில், இதன் மதிப்பு வெப்ப நிலையைச் சார்ந்து அமையும்.
(iv) ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தினை வெப்பப்படுத்தும்போது கொள்கலனின் வழியாக வெப்ப ஆற்றலானது திரவத்திற்கு அளிக்கப்படுகிறது. எனவே, வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலன் விரிவடைவதற்கும், மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து திரவத்தில் ஏற்படும் உண்மையான விரிவை நேரடியாக கணக்கிட இயலாது.
(v) எனவே திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவினை உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இருவழிகளில் வரையறுக்கலாம்.
உண்மை வெப்ப விரிவு:
(i) எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு உண்மை வெப்ப விரிவு எனப்படும்.
(ii) ஓரழகு வெப்பநிறை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
தோற்ற வெப்ப விரிவு:
(i) கொள்கலன் இல்லாமல் திரவத்தினை நேரடியாக வெப்பப்படுத்த முடியாது. இதனால் நடைமுறையில் கொள்கலனில் வைத்தே திரவத்தினை வெப்பப்படுத்த வேண்டும்.
(ii) அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலனை விரிவடையச் செய்வதற்கும் மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது.
(iii) எனவே, இந்நிகழ்வில் நாம் காண்பது திரவத்தின் உண்மையான வெப்ப விரிவு அல்ல. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் வெப்ப விரிவு என அழைக்கப்படும்.
(iv) ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு தோற்ற வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
6.
(i) ஒரு கோப்பையில் உள்ள சூடான பாலினை சிறிது நேரம் மேசையின் மீது வைத்தால் என்ன நிகழும்? சூடான பாலின் வெப்பம் சிறிது நேரத்திற்குப் பிறகு குறையும்.
(ii) இதே போல் ஒரு பாட்டிலில் உள்ள குளிர்ச்சியான நீரினை சிறிது நேரம் மேசையின் மீது வைக்கும்போது அதனுடைய வெப்பநிலை சிறிது அதிகரிக்கும்.
(iii) சூடான பாலிலிருந்து ஆற்றலானது சுற்றுப்புறத்திற்குப் பரவுகிறது. அடுத்த நிகழ்வில் ஆற்றல் சுற்றுப்புறத்திலிருந்து நீர் உள்ள பாட்டிலுக்கு பரவுகிறது. இந்த ஆற்றலையே வெப்ப ஆற்றல் எனலாம்.
(iv) எனவே சூடான பொருள் குளிர்ச்சியான பொருளிற்கு அருகில் வைக்கப்பட்டால், சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளிற்கு பரிமாற்றம் அடையும். ஆற்றலே வெப்ப ஆற்றல் என அழைக்கப்படுகிறது .
(v) எனவே, வெப்ப ஆற்றல் என்பது ஒரு வகையான ஆற்றல், இது இரு வேறு வெப்ப நிலையில் உள்ள இரண்டு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக 'வெப்பம்' எனவும் அழைக்கலாம்.
(vi) ஒரு பொருள் வெப்பத்தினை உணர்வதற்கும், அந்த பொருள் வெப்பம் அடைவதற்கும் வெப்ப ஆற்றல் ஓர் காரணியாக செயல்படுகிறது.
(vii) வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும். இந்த நிகழ்விற்கு வெப்பப்படுத்துதல் என்று பெயர்.
(viii) வெப்பக் கடத்தல். வெப்பச் சலனம் மற்றும் வெப்பக் கதிர்வீசல் ஆகிய ஏதாவது ஒரு வழிகளில் வெப்பப்பரவல் நடைபெறுகிறது.
(ix) வெப்பம் என்பது ஓர் ஸ்கேலார் அளவு ஆகும். வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு ஜூல் (J) ஆகும்.
(x) வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. இதுபோல, அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் குளிர்விக்கப்படுகிறது.
(xi) இதனால் சில நேரங்களில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் என்பது குளிர்வித்தல் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பல நிகழ்வுகளில் குளிர்வித்தல் என்பதற்குப் பதிலாக வெப்பப்படுத்துதல் என்றே பயன்படுத்தப்படுகிறது.
(xii) ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரிமாற்றம் அடையும் போது, இரண்டு பொருள்களில் ஒன்றில் வெப்பநிலை குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்கிறது.
7.
அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிப்பது உடல் பருமன் எனப்படும். உடல் பருமன் என்பது சமுதாயம், நடத்தை, உளவியல், வளர்சிதை மாற்றம் மற்றும் செல் காரணிகளின் தாக்கத்தினால் உருவாகும் ஒரு சிக்கலான நாள்பட்ட பல்நோக்கு நோயாகும். செலவழிக்கும் அளவு விட உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு அதிகரிக்கும் போது உடல்பருமன் உண்டாகிறது. ஒருவரது வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடை சராசரி நிலையான எடையை விட அதிகரிக்கும்போது உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் காணப்படும். உடலின் கொழுப்பு அளவு மற்றும் நலம் சார்ந்த ஆபத்தினை உடற்பருமக் குறியீட்டைக் (BMI) கொண்டு அளவிடலாம்.
BMI=எடை (கிகி)/உயரம்(மீ2)
காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்:
(i) மரபியல் காரணிகள், உடல் உழைப்பின்மை உணவுப் பழக்க வழக்கங்கள் (அளவுக்கதிகமாக உண்ணுதல்) மற்றும் நாளமில்லா சுரப்பிக் காரணிகள் போன்றவற்றால் உடல் பருமன் உண்டாகிறது.
(ii) உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பித்தப்பை நோய்கள், கரோனரி இதய நோய் மற்றும் கீல்வாதம் (மூட்டு வீக்கம் - ஆர்த்ரைடிஸ்) போன்றவை உடல்பருமன் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தான நேரடி விளைவுகளாகும்.
உடல் பருமன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்:
உணவுக் கட்டுப்பாட்டு மேலாண்மை:
(i) குறைந்த கலோரி, இயல்பான புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், கட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட், கொழுப்பு, அதிக நார்சாது மிக்க உணவுகள் போன்றவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பவைகளாகும்.
(ii) எடை குறைப்பில் கலோரி கட்டுப்பாடு பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் ஆகும்.
உடற்பயிற்சிகள்:
(i) மிதமான உடற்பயிற்சியுடன் கூடிய குறைந்த கலோரி உணவு, உடல் எடையைக் குறைப்பதில் திறன் மிக்கதாக விளங்குகிறது.
(ii) மன அழுத்தம் காரணமாக அதிகப்படியான உணவு உட்கொள்ளுதலை தியானம், யோகா மற்றும் உடல் உழைப்பின் மூலம் குறைக்க முடியும்.
8.
புகை உள்ளிழுக்கப்படும்போது திசுக்களால் உறிஞ்சப்படுகின்ற வேதிப் பொருள்கள் பின்வரும் தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
(i) புகைபிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள பென்சோபைரின் மற்றும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் என்னும் புற்றுநோய்க்காரணிகள், நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
(ii) புகைப்பிடித்தலினால் தொண்டை மற்றும் மூச்சுக்குழலில் ஏற்படும் வீக்கம், மூச்சுக்குழல் அழற்சி மற்றும் நுரையீரல் காசநோய்க்கு வழிவகுக்கிறது.
(iii) நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் ஏற்படும் வீக்கம் வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பைசீமா என்னும் நோய் உண்டாக்குகிறது.
(iv) புகைபிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைபாக்சியாவை உண்டாக்குகிறது.
(v) புகைபிடித்தலினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
(vi) இரைப்பை சுரப்பினை அதிகரித்து இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை ஏற்படுத்துகிறது.
(vii) புகையிலை மெல்லுதல் வாய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
9.
(i) இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்தன்மை வித்தியாசம் 1.7 என இருந்தால், அப்பிணைப்பு 50% அயனித் தன்மையையும் 50% சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும்.
(ii) அவ்வித்தியாசம் 1.7 ஐ விட குறைவாயின் அப்பிணைப்பு சகப்பிணைப்புகளாகும்.
(iii) வித்தியாசமானது 1.7 ஐ விட அதிகமெனில் அப்பிணைப்பு அயனிப்பிணைப்பாகும்.
10.
(i) தொடர்களின் சிறப்பம்சங்கள்:
தனிமங்களின் கிடைமட்ட வரிசைகள் தொடர்களாகும்.ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.
(ii) முதலாம் தொடர்(அணு எண் 1 மற்றும் 2)
இத்தொடர் மிகச்சிறிய தொடராகும்.இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் எனும் 2 தனிமங்களே உள்ளன.
(iii) இரண்டாம் தொடர் : (அணு எண் 3 லிருந்து 10 வரை) இது சிறிய தொடராகும்.இதில்"Li' யிலிருந்து 'Ne' வரை 8 தனிமங்கள் உள்ளன.
(iv) மூன்றாம் தொடர் : இதுவும் ஒரு சிறிய தொடராகும். (அணு எண் 11 லிருந்து 18 வரை) இதில்"Na' யிலிருந்து"Ar' வரை 8 தனிமங்கள் உள்ளன.
(v) நான்காம் தொடர் : (அணு எண் 37 லிருந்து, 54 வரை) இது ஒரு நீண்ட தொடராகும்.இதில் "K" யிலிருந்து"Kr" வரை,18 தனிமங்கள் உள்ளன. இவற்றில் 8 சாதாரண தனிமங்களும், 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.
(vi) ஐந்தாம் தொடர் : (அணு எண் 37 லிருந்து 54 வரை) இதுவும் ஒரு நீண்ட தொடராகும். இதில் Rb-யிலிருந்து Xe வரை 18 தனிமங்கள் உள்ளன. இவற்றில் 8 சாதாரண தனிமங்களும்,10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.
(vii) ஆறாம் தொடர் : (அணு எண் 55 லிருந்து 86 வரை) இது மிக நீண்ட தொடராகும். இதில்'Cs' லிருந்து, 'Rn' வரை 32 தனிமங்கள் உள்ளன. இவற்றுள் 8 சாதாரண தனிமங்கள், 1 இடைநிலைத் தனிமங்கள் மற்றும் 14 உள் இடைநிலைத் தனிமங்கள்(லாந்தனைடுகள்) என ஆகும்.
(viii) ஏழாம் தொடர் : (அணு எண் 87 லிருந்து,118 வரை) ஆறாம் தொடரைப் போல, இதுவும் 32 தனிமங்கள் கொண்டது.சமீபத்தில், நான்கு தனிமங்கள் அட்டவணையில் IUPAC ஆல் உட்படுத்தப்பட்டன.
11.
(i) குறைவான கார்பன் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன்கள் அறை வெப்பநிலையில் வாயுக்களாக உள்ளன. (மீத்தேன், ஈத்தேன் ஆகியவை வாயுக்கள்)
(ii) ஹைட்ரோகார்பன்கள் நிறம் மற்றும் மணம் இல்லாதவைகள்.
(iii) கார்பன் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஹைட்ரோகார்பன்களின் கொதிநிலை அதிகரிக்கும்.
(iv) ஆக்சிஜனுடன் வினைபுரிந்து இவை கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை கொடுக்கின்றன.
(v) மற்ற ஹைட்ரோகார்பன்களுடன் ஒப்பிடும்போது அல்கேன்கள் குறைவான வினை திறன் கொண்டவை.
(vi) அல்கைன்களில் முப்பிணைப்பு காணப்படுவதால் அவை அதிக வினை திறன் கொண்டுள்ளன.
(vii) அல்கேன்கள் நிறைவுற்ற கரிமச் சேர்மங்கள், அல்கீன்களும் அல்கைன்களும் நிறைவுறா கரிமச் சேர்மங்கள் ஆகும்.
(viii) ஹைட்ரோகார்பன்கள் நீரில் கரையாது.
12.
| நோக்கம் | புகுத்தப்பட்ட ஜீன் | சாதனை |
| விலங்குகள் | ||
| மேம்படுத்தப்பட்ட கம்பளி தரம் மற்றும் உற்பத்தி | சிஸ்டைன் அமினோ அமில உற்பத்திக்கான ஜீன் | அயல் ஜீனைப் பெற்ற செம்மறி ஆடு (ஜீன் வெளிப்படுத்தப்பட்டது) |
| மீன்களில் அதிக வளர்ச்சி | சால்மன் அல்லது ரெயின்போ டிரவுட் அல்லது திலேப்பியா வளர்ச்சி ஹார்மோன் ஜீன் | அயல் ஜீனைப் பெற்ற மீன் (ஜீன் வெளிப்படுத்தப்பட்டது) |
| தாவரங்கள் | ||
| மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து தரத்திற்கான அரிசி | பீட்டா கரோட்டின் ஜீன் (மனிதர்களில் வைட்டமின் A உற்பத்திக்கு பீட்டா கரோட்டின் ஜீன் தேவை) | "கோல்டன் ரைஸ்" (வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கும் பீட்டா கரோட்டினை உற்பத்திச் செய்யும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி) |
| அதிக பயிர் உற்பத்தி | பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட Bt ஜீன் (Bt ஜீன் பூச்சிகளுக்கு எதிரான நச்சுத் தன்மையுடைய புரதத்தை உற்பத்தி செய்கிறது) | பூச்சி எதிர்ப்புத் திறன் பெற்ற தாவரங்கள் (இத்தாவரங்கள் பூச்சிகளுக்கு எதிரான நச்சுத்த தன்மை வாய்ந்த புரதத்தினை உற்பத்தி செய்து பூச்சித் தாக்குதலைத் தடுக்க வல்லவை). |
13.
i) மனித ஜீனோம் 3 பில்லியன் கார இணைகளைக் கொண்டது. ஒற்றைக் கரு இரட்டையர்களைத் தவிர எந்த இரு மனிதரின் டி.என்.ஏ அமைவும் ஒன்றாக இருப்பதில்லை.
ii) ஒவ்வொரு மனிதரின் டி.என்.ஏ வும் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் ஒவ்வொரு மனிதரின் டி.என்.ஏ விலும் ஒரு சிறு வேறுபாடு டி.என்.ஏ நியூக்ளியோடைடு வரிசை காணப்படும்.
iii) எனவே இரு நபர்களின் மரபியல் வேறுபாடுகளை ஒப்பிட டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில்நுட்பம் எளிதான மற்றும் விரைவான முறையாகும்.
iv) இம்முறையினை அலெக் ஜெஃப்ரிஸ் என்பவர் வடிவமைத்தார். இம்முறை ஒவ்வொரு தனி மனிதனின் தனித்தன்மை வாய்ந்த டி.என்.ஏ வரிசையமைப்பை பகுத்தராய்ந்து அந்த நபரின் குறிப்பிட்ட பண்புகளை வெளிக்கொணர்வதால் அந்த நபரை அடையாளம் காண உதவுகின்றது. டி.என்.ஏ-வில் உள்ள மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர் வரிசை அமைப்பு அடையாளம் காண்பதற்கான மூலக்கூறு குறியீடாகத் திகழ்கிறது.
v) மனிதரில் 99% டி.என்.ஏ வரிசை தொடர்கள் அனைவருக்கும் பொதுவாகக் காணப்படும். இதற்கு மொத்த ஜீனோமிக் டி.என்.ஏ என்று பெயர்.
vi) மீதமுள்ள 1% டி.என்.ஏ வரிசைத் தொடர் ஒவ்வொரு மனிதரில் வேறுபடுகிறது. இந்த 1% டி.என்.ஏ வரிசைத் தொடர் ஒரு சிறிய பகுதியாக தொடர்ந்து காணப்படும். இதற்கு சாட்டிலைட் டி.என்.ஏ என்று பெயர். இந்தத் தொடர் வரிசை 'மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர் வரிசை அமைப்பு' என்றும் அழைக்கப்படுகிறது.
vii) இந்தத் தொடர் அமைப்பு ஒவ்வொரு மனிதரிலும் வேறுபட்ட எண்ணிக்கையில் இருக்கும். எனவே ஒவ்வொரு மனிதரின் டி.என்.ஏ வின் அளவு மற்றும் நீளம் ஆகியவை வேறுபடுத்துகின்றன.
viii) AGCT என்ற தொடர் முதல் மனிதரில் 6 முறையும் இரண்டாவது மனிதரில் 5 முறையையும் மூன்றாவது மனிதரில் 7 முறையும் திரும்பத் திரும்ப வந்துள்ளது.
ix) இதனால் மூன்றாவது மனிதரின் DNA துண்டு மிகப் பெரியதாகவும் அடுத்ததாக முதல் மனிதரின் DNA துண்டு பெரியதாகவும், இரண்டாவது மனிதரின் DNA துண்டு மூவரில் சிறியதாகவும் காணப்படுகிறது.
x) இதன் மூலம் சாட்டிலைட் DNA மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது என்பது தெளிவாகிறது. DNA வின் பட்டை அமைவு முறை மனிதரிடையே வேறுபாடுகள் உள்ளதைக் காண்பிக்கின்றது.
டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள்
i) டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காணப்பயன்படுகிறது. மேலும் இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காணப்பயன்படுகிறது. தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
ii) இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள், பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
14.
ஆம் ஏற்றுக்கொள்கிறேன். சூரியன் ஒரு மிகப்பெரிய ஆற்றல் மூலமாகும். நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ அனைத்து விதமான ஆற்றல்களும் தனக்கு தேவையானதை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்கிறது. உதாரணமாக:
(i) புதை படிம எரிபொருள்கள்: தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் எரிபொருளாகி கிடைக்கிறது. (சிதைத்தல்)
(ii) நீராற்றல்: நீரானது ஆவியாகி வேகமாகச் சென்று மழை பொழிகிறது.
(iii) காற்று ஆற்றல்: காற்றானது வெப்பமாதல் அடிப்படையில் வீசப்படுகிறது.
15.
அ) சூரிய ஆற்றல்:
சூரியனில் இருந்து பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் எனப்படும். சூரியன் பெருமளவு வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடுகிறது. சூரியனிலிருந்து ஒளி ஆற்றல் ஏறக்குறைய பாதியளவே (47%) பூமியின் மேற்பரப்பை வந்து அடைகிறது. இதில் மிகச் சிறிய அளவைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நம் நாட்டில் பெருமளவு ஆற்றல் தேவைகளில் நிறைவு பெற முடியும். சூரிய ஆற்றல் பல மேன்மைகளை கொண்டிருந்தாலும் ஒரு சில வரையறைகளுக்கும் உட்பட்டதாகும்.
சூரிய ஆற்றல் சாதனங்கள்:
சூரிய ஒளியை ஆற்றலாகப் பயன்படுத்தலாம். சூரிய ஆற்றலை வெவ்வேறு பயன்பாட்டிற்காக மாற்றி உபயோகிக்க உதவும் பல்வேறு சாதனங்கள் சூரிய ஆற்றல் சாதனங்கள் எனப்படும்.
சூரிய மின்கலன்கள்:
(i) சூரிய மின்கலன்கள் (ஃபோட்டோ வோல்டாயிக் கருவிகள்) சிலிக்கானால் உற்பத்தி செய்யப்பட்டு சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டவை.
(ii) சூரிய மின்கலன்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை.
(iii) இதிலிருந்து மாசு உண்டாக்கக்கூடிய எரிபொருட்களோ ஆபத்தான வாயுக்களோ கழிவுப் பொருட்களோ வெளியேறுவதில்லை.
(iv) இவற்றினை யாரும் அணுக இயலாத அல்லது மிக தொலைதூர இடங்களிலும் பொருத்த முடியும். (காடுகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள்).
(v) இங்கு வேறு ஆற்றல் நிலையங்களை பெரும் பொருட்செலவில் மட்டுமே அமைக்க இயலும்.
ஆ) சூரிய மின் கலன்களின் பயன்கள்:
(i) தெருவிளக்குகள், போக்குவரத்து விளக்குகள், நீரேற்றம் மற்றும் மின்கலனில் மீண்டும் ஆற்றலை நிரப்பவும் பயன்படுகிறது.
(ii) செயற்கைக் கோள்கள் மற்றும் தொலைவெளி நுண்ணுணர்விகள், ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
(iii) தொலைதூரப் பகுதிகளில் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு பயன்படுகிறது.
(iv) கால்குலேட்டர்கள், மின்னணு விளையாட்டு பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
16.
(i) அணுகுண்டு : கட்டுப்பாடற்ற தொடர்வினை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அணு குண்டு செயல்படுகிறது. கட்டுப்பாடற்ற தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும் அணுகருப்பிளவு வினையும், பெருக்குத் தொடர் முறையில்(GP) கட்டுக்கடங்காமல் பெருகின்றன. மிகக் குறுகிய காலத்தில் அதிக ஆற்றலுடன் கூடிய பெரு வெடிப்பு நிகழ்கிறது.

(ii) அமைப்பு : அணுகுண்டில் குறை மாறுநிலை நிறை கொண்ட பிளவுக்கு உட்படும் பொருளின் ஒரு சிறு பகுதி பகுதியானது உருளை வடிவ வெற்றிடத்தைக் கொண்டுள்ளது. வெற்றிடத்திற்குப் பொருந்தும் வகையில், உருளை வடிவப் பிளவுக்குட்படும் பொருள் ஒன்று வைக்கப்படுகிறது. இதன் நிறை, மாறுநிலை நிறையவிடக் குறைவாக இருக்க வேண்டும். அணு குண்டு வெடிப்பிற்காக இந்த உருளையானது வெற்றிடத்திற்குள்ளே ஊடுருவிச் செய்யப்படுகிறது. இவ்விரு பகுதிகளும் ஒன்றாகச் சேர்ந்து மீ-மாறுநிலை நிறையை (Supercritical mass) அடைந்தவுடன் அணுகுண்டு வெடிப்பு நிகழ்கிறது. இதனைப் படம் காட்டுகிறது.
(iii) அணுகுண்டு வெடிப்பு நிகழ்வின்போது மிக அதிக அளவு ஆற்றலுடன் வெப்பமும் ஒளியும், கதிரியக்கமும் வெளியாகின்றன. மிகக்குறுகிய விநாடிகளுக்குள் கட்டுக்கடங்காத அழுத்தமும், வெப்பமும் மிக அதிக அளவில் உயர்கிறது, அனைத்து வித உயிரிகளுக்கும் தீங்கிழைக்கக்கூடிய காமாக் கதிர்களைப் போன்ற கதிர்வீச்சுகளும் இத்துடன் வெளியாகின்றன. 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகளில் இவ்வகையான அணுகுண்டுகள் வீசப்பட்டன.
17.
(i) அணுக்கரு வினையின்போது நிலையற்ற தாய் உட்கருவானது,\(\alpha \) துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது \(\alpha \) -சிதைவு என்றழைக்கப்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு யுரேனியம் 238(U238) சிதைவடைந்து.\(\alpha \) துகளை உமிழ்ந்து தோரியம்-234(Th234) ஆக மாறுகிறது.
92U238 \(\longrightarrow \) 90Th234+2He4 (\(\alpha \)-சிதைவு)
(iii) ஒரு தாய் உட்கருவானது \(\alpha \) சிதைவடைந்து அதன் நிறை எண்ணில் நான்கும் அணு எண்ணில் இரண்டும் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும் என்பதனை படம் விளக்குகிறது.

(iv) \(\beta \) -சிதைவு
அணுக்கரு வினையின்போது நிலையற்ற தாய் உட்கருவானது \(\beta \) துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது \(\beta \) -சிதைவு என்றழைக்கப்படுகிறது.
\(_{ 15 }{ P }^{ 32 }\longrightarrow _{ 16 }{ S }^{ 32 }+_{ -1 }{ e }^{ 2 }\)(\(\beta \)-சிதைவு)
(v) \(\beta \) -சிதைவின் போது நிறை எண்ணில் எவ்வித மாறுபாடு இல்லாமல், அணு எண்ணில் ஒன்று அதிகரிக்கும்.
(vi) \(\gamma \) -காமா கதிர்கள்
காமா சிதைவின் போது உட்கருவின்'ஆற்றல் மட்டம்'மட்டுமே மாற்றம் அடைகிறது. அதன் அணு எண் மற்றும் நிறை எண்ணில் மாற்றம் ஏதுமில்லாமல் அதே அளவில் இருக்கும்.
18.
(1) 1901 ஆம் ஆண்டு ஹயூகோ டீ விரிஸ் என்பவர். 'சடுதி மாற்றம்' என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
(2) பரம்பரையாகத் தொடரக்கூடிய, திடீரென ஓர் உயிரியின் மரபுப் பொருளில் (DNA) திடீரென ஏற்படும் மாற்றம் 'சடுதி மாற்றம்' எனப்படும்.
(3) சடுதி மாற்றம் இரண்டு வகைப்படும் அவை குரோமோசோம் சடுதி மாற்றம் மற்றும் ஜீன் 'சடுதி மாற்றம்'.
(I) குரோமோசோம் சடுதி மாற்றம்:
குரோமோசோம் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம் குரோமோசோம் சடுதி மாற்றம் என அழைக்கப்படுகின்றன. இதன் விளைவாக கீழ்க்கண்ட நிலைகள் தோன்றலாம்.
(II) குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்:
பொதுவாக, செல் பகுப்பின் பொது ஏற்படும் தவறுகளால் குரோமோசோம் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குரோமோசோம்களில் ஏற்படும் நீக்கமடைதல், இரட்டிப்பாதல், தலை கீழ் மாற்றம் மற்றும் இடம்பெயர்தல் ஆகியவற்றின் விளைவாக ஜீன்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
(III) குரோமோசோம் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்
இவை, ஒரு செல்லில் இடம் பெற்றுள்ள குரோமோசோம் எண்ணிக்கை அதிகரித்தல் அல்லது குறைதல் ஆகியவற்றை உள்ளடிக்கியது. இது பன்மய நிலை (பிளாய்டி) எனப்படுகிறது. பன்மயநிலை இரு வகைப்படும்.
அ) யூபிளாய்டி
ஆ) அன்யூபிளாய்டி
(IV) யூபிளாய்டி
உயிரிகள் வழக்கமான இருமய (2n) குரோமோசோம்களை விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை யூபிளாய்டி எனப்படும். ஒரு உயிரி மூன்று ஒற்றைமய குரோமோசோம் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது மும்மய நிலை (3n) எனப்படும். மும்மயத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பொதுவாக மலட்டுத்தன்மை உடையவை. ஒரு உயிரி நான்கு ஒற்றைமயத் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது நான்மய நிலை, பெரும்பாலும் அளவில் பெரிய மற்றும் பூக்களை விளைவிக்கும்.
(v) அன்யூபிளாய்டி
தொகுப்பில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் அல்லது கூடுதலாகப்பெறுதல் ஆன்யூ பிளாய்டி எனப்படும். இது மூன்று வகைப்படும். மோனோசாமி
(2n -1), டிரைசோமி (2n +1) மற்றும் நல்லிசோமி (2n -2) அன்யூபிளாய்டி நிலைக்கான பொதுவாக அறியப்பட்ட எடுத்துக்காட்டு மனிதனில் ஏற்படும் டவுன் நோய்க் கூட்டு அறிகுறி (syndrome).
(VI) டவுன் நோய்க் கூட்டு அறிகுறி
இந்த நிலை முதன்முதலாக லாங்க்டன் டவுன் என்ற மருத்துவரால் 1866 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இது 21வது குரோமோசோமில் ஒரு கூடுதல் நகல் குரோமோசோம் (21வது டிரைசோமி) உள்ள மரபியல் நிலை ஆகும். மனவளர்ச்சிக் குறைபாடு, தாமதமான வளர்ச்சி, நடத்தை சார்ந்த பிரச்சனைகள், பலவீனமான தசை அமைப்பு, பார்வை மாற்று கேட்கும் குறைபாடு ஆகியவை பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் சில நினைவுகள்.
(VII) ஜீன் அல்லது புள்ளி சடுதிமாற்றம்
ஒரு ஜீனின் நியூக்ளியோடைடு வரிசையில் ஏற்படும் மாற்றங்கள் ஜீன் சடுதிமாற்றம் எனப்படும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நைட்ரஜன் காரங்களில் ஏற்படும் பதிலீடு செய்தல், நீக்கமடைதல், இடைசேர்தல் அல்லது தலைகீழாதால் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஜீன்களில் ஏற்படும் மாற்றம் ஒரு உயிரியின் இயல்புக்கு மாறான புரத உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
19.
பிட்யூட்டரியின் முன் கதுப்பு (அடினோ ஹைப்போபைஸிஸ்) சுரக்கும் ஹார்மோன்கள்:-
(அ) வளர்ச்சி ஹார்மோன் (GH)
(ஆ) தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)
(இ) அட்ரினோ கார்டிக்கோட்ராபிக் ஹார்மோன்/ அட்ரினல் புறணியை தூண்டும் ஹார்மோன் (ACTH)
(ஈ) கொனாடோட்ராபிக் ஹார்மோன் (GTH)
(உ) ப்ரோலாக்டின் (PRL)
(அ) வளர்ச்சி ஹார்மோன் (GH)
வளர்ச்சி ஹார்மோன் என்பது உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. தசைகள் குருத்தெலும்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது செல்களின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோனின் முறையற்ற சுரத்தல் கீழ்காணும் விளைவுகளை ஏற்படுத்தும்.
(i) குள்ளத்தன்மை: குறைவான சுரப்பின் காரணமாக இந்நிலை குழந்தைகளில் காணப்படுகிறது. குன்றிய வளர்ச்சி, எலும்புகள் உருவாவதில் தாமதம், மற்றும் மனவளர்ச்சி குறைபாடு ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
(ii) அசுரத்தன்மை: குழந்தைகள், வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரத்தல் காரணமாக மிகையான வளர்ச்சி அடைவார்கள்.
(iii) அக்ரோமெகலி: பெரியவர்கள் அதிகப்படியான வளர்ச்சி ஹார்மோன் சுரத்தல் காரணமாக முகம், தலை, கை, கால்கள் ஆகியவைகளில் அதிகமான வளர்ச்சியை பெற்றிருப்பர்.
20.
(i) தாவரங்களின் பல்வேறு பாகங்களில் ஆக்சின்கள் பல வகையான வாழ்வியல் விளைவுகளை உருவாக்குகின்றன.
(அ) ஆக்சின்கள் தண்டு மற்றும் மூளைக்குருத்தின் நீட்சியை ஊக்குவித்து அவற்றை வளரச் செய்கின்றன.
(ஆ) குறைந்த செலவில் ஆக்சின்கள் வேர் உருவாதலைத் தூண்டுகின்றன. அதிக செறிவில் வேர் உருவாதலைத் தடை செய்கின்றன.
(இ) நுனி மொட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இதற்கு நுனி ஆதிக்கம் என்று பெயர்.
(ஈ) ஆக்சின்களைத் தெளிப்பதால் கருவுறுதல் நடைபெறாமலேயே விதையில்லாக் கனிகள் உருவாதல் தூண்டப்படுகிறது. (கருவுறக்கனியதல் (எ.கா) தர்பூசணி, திராட்சை, எலுமிச்சை போன்றவை.
(உ) ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாதலைத் தடை செய்கின்றன.
21.
சென்ட்ரோமியர் அமைந்திருக்கும் நிலைக்கும் ஏற்ப குரோமோசோம்கள் டீலோசென்ட்ரிக், அக்ரோசென்ட்ரிக், சப்-மெட்டா சென்ட்ரிக் மற்றும் மெட்டா சென்ட்ரிக் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(i) டீலோசென்ட்ரிக் - சென்ட்ரோமியர் குரோமோசோமின் ஒரு முனையில் காணப்படுகிறது. இவை கோல் வடிவ குரோமோசோம்கள்.
(ii) அக்ரோசென்ட்ரிக் - சென்ட்ரோமியர் குரோமோசோமின் ஒரு முனைக்கு அருகில் காணப்படுவதால், ஒரு குட்டையான கரமும் ஒரு நீண்ட கரமும் பெற்றுள்ள இவையும் கோல் வடிவக் குரோமோசோம்கள்.
(iii) சப்-மெட்டா சென்ட்ரிக் - சென்ட்ரோமியர் குரோமோசோமின் மையத்திற்கு அருகில் காணப்படுகிறது. எனவே இரண்டு சமமற்ற கரங்கள் உருவாக்குகின்றன . இவை L வடிவ குரோமோசோம்கள்.
(iv) மெட்டா சென்ட்ரிக் - சென்ட்ரோமியர் குரோமோசோமின் மையத்தில் அமைந்துள்ளதால் இரண்டும் சம நீளமுள்ள கரங்கள் உருவாக்கின்றது. இவை V வடிவ குரோமோசோம்கள்.
22.
(i) பறவைகள் தமது சிறகுகளின் விசை (விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை (எதிர் விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.
(ii) நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின் நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.
(iii) துப்பாக்கி சுடுதலில் குண்டு, விசையுடன் முன்னோக்கி செல்ல அதற்கு சமமான எதிர்விசையினால் குண்டு வெடித்தபின் துப்பாக்கி பின்னோக்கி நகர்கிறது.
23.
1. பற்சக்கரங்கள் (Gears):
பற்சக்கரங்கள் வட்டப்பரப்பின் விளிம்புகளில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும். பற்சக்கரங்கள் மூலம் திருப்பு விசையினை மாற்றி இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை மாற்றலாம். மேலும் திறனை கடத்துவதற்கு பற்சக்கரங்கள் உதவுகின்றன.
2. ஏற்றப்பலகை: (seesaw play):
ஏற்றப்பலகையில் அமர்ந்துள்ள எடை அதிகமான ஒருவர், மற்றொருவரை எளிதில் தூக்குகிறார். எடை அதிகமான நபர் பலகையின் ஆதாரப்புள்ளியினை நோக்கி நகரும் போது, விசை செயல்படும் தூரம் குறைந்து, திருப்புவிசையின் செயல்பாடு குறைகிறது. இது எடை குறைவான நபரானவர், எடை அதிகமான நபரை தூக்க வழி வகை செய்கிறது.
3. திருப்பிச்சக்கரம் (steering wheel)
மிக வலுவான மகிழுந்து மற்றும் பார உந்துகளின் சக்கரங்களின் திசையினை, குறைவான திருப்பு விசை எளிதில் மாற்ற திருப்புச்சக்கரம் உதவுகிறது.
24.
பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாடு:
i) லாமார்க்கின் உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டின்படி ஓர் உறுப்பைத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, அவ்வுறுப்பு நன்கு வளர்ச்சியடைந்து வலிமை பெறுகின்றது.
ii) ஒரு உறுப்பை, நீண்ட காலம் பயன்படுத்தாத போது அது படிப்படியாகக் குன்றல் அடைகிறது.
iii) ஒட்டகச்சிவிங்கியின் முன்னோர்கள் குட்டையான கழுத்தையும், குட்டையான முன்னங்கால்களையும் பெற்றிருந்தன. புற்களின் பற்றாக்குறை காரணமாக அவை மரங்களில் உள்ள இலைகளை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கழுத்தும் முன்னங்கால்களும் உருவாகின. இது தொடர்ச்சியான உறுப்பின் பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டு.
iv) கிவி பறவையின் சிறப்பிழந்த இறக்கைகள் உறுப்பைப் பயன்படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு.
25.
உயிரினங்களின் புறத்தோற்றவியல் மற்றும் உடற்கூறியல் ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆய்வுகள் அவை சில பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன.
அமைப்பு ஒத்த உறுப்புகள்:
i) ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும்.
ii) பாலூட்டிகளின் முன்னங்கால்கள், அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். எடுத்துக்காட்டாக மனிதனின் கை. பூனையின் முன்னங்கால், திமிங்கலத்தின் துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறாகவும், வெவ்வேறு பணிகளை செய்வதற்கேற்பவும் தகவமைக்கப்பட்டுள்ளன.
iii) ஆனால் அவற்றின் வளர்ச்சி முறையும் எலும்புகளின் அடிப்படை அமைப்பும் ஒரே மாதிரியாக உள்ளன.
i) செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன.
ii) எ.கா. வௌவாலின் இறக்கை, பறவையின் இறக்கை, பூச்சியின் இறக்கை.
iii) ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளன.
எச்ச உறுப்புகள்
விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள், எச்ச உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன. தொடர்புடைய ஒரு சில விலங்குகளில், இதே உறுப்புகள் நன்றாக வளர்ச்சியடைந்தும் இயங்கும் நிலையிலும் காணப்படுகின்றன. குடல்வால், கண்ணிமைப் படலம், வால் முள்ளெலும்பு, தண்டுவட எலும்பின் வால் பகுதி ஆகியவை மனிதனில் காணப்படும் சில எச்ச உறுப்புகள் ஆகும்.
முன்னோர் பண்பு மீட்சி சில உயிரிகளில் அவற்றின் மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் தோன்றுவது முன்னோர் பண்பு மீட்சி எனப்படுகிறது. பிறந்த குழந்தைகளில் காணப்படும் வளர்ச்சியற்ற வால், மனித உடல் முழுவதும் அடர்த்தியான ரோமம் போன்றவை முன்னோர் பண்பு மீட்சிக்கான சில எடுத்துக்காட்டுகளாகும்.
26.
27.
கரிமச் சேர்மங்களின் பொதுப் பண்புகள்:
(i) கரிமச் சேர்மங்கள் சிக்கலான அமைப்பையும், அதிக மூலக்கூறு நிறையையும் கொண்டுள்ளன
(ii) கரிமச் சேர்மங்கள் பொதுவாக நீரில் கரையாது. ஆனால் ஈதர், கார்பன் டெட்ராகுளோரைடு, டொலுவின் போன்ற கரிமக் கரைப்பான்களில் கரையும்.
(iii) கரிமச் சேர்மங்கள் எளிதில் எரியக்கூடிய தன்மை உடையவை.
(iv) கரிமச் சேர்மங்களை கனிமச் சேர்மங்களோடு ஒப்பிடுகையில் குறைவாகவே வினைபுரிகின்றன. இதனால் அவற்றின் வினைவேகமும் குறைவாகவே இருக்கிறது.
(v) பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் இயற்கையாகவே சகபிணைப்பைக் கொண்டுள்ளன.
(vi) கரிமச் சேர்மங்கள் கனிமச் சேர்மங்களை விட குறைவான உருகுநிலையும் கொதிநிலையும் கொண்டுள்ளன.
(vii) கரிமச் சேர்மங்கள் மாற்றியமைப்பண்பை பெற்றுள்ளன. அதாவது ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டை பெற்றுள்ள கரிமச் சேர்மங்கள் அதனுடைய இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளில் மாறுகின்றன.
(viii) இவை எளிதில் ஆவியாகும் தன்மையுடையவை.
(ix) பல்வேறு கரிமச் சேர்மங்களை ஆய்வகத்தில் தயாரிக்கலாம்.
28.
மூளைத் தண்டுவட திரவத்தின் பணிகள்:
(i) திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
(ii) மூளைக்கான ஊட்டச்சத்துகளை அளிக்கும் பணியை மேற்கொள்கிறது.
(iii) மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும் பணியினை மேற்கொள்கிறது.
(iv) மூளைப் பெட்டகத்தின் உள்ளே நிலையான அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
29.
மூளையின் அமைப்பு மற்றும் பணிகள்:
| அமைப்பு | பணிகள் |
|---|---|
| பெரு மூளைப் புறணி (செரிப்ரல் கார்டெக்ஸ்) | உணர்வுகளைப் பெறுதல், தன்னிச்சையான செயல்களைக் கட்டுப்படுத்துதல், சிந்தித்தல், நுண்ணறிவு, விழிப்புணர்வு நிலை, நினைவுத்திறன், முடிவெடுக்கும் திறன், கற்பனைத் திறன், காரண காரியம் ஆராய்தல். |
| தலாமஸ் | கடத்தும் மையமாகச் செயல்படுதல் |
| ஹைப்போதலாமஸ் | உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல், தாகம், பசி, சிறுநீர் வெளியேற்றுதல், நரம்பு மண்டலத்திற்கும், நாளமில்லாச் சுரப்பி மண்டலத்திற்கும் இடையே முக்கியமான இணைப்பாகச் செயல்படுதல். |
| சிறுமூளை | உடல் சமநிலை, தசைகளின் தன்னிச்சையான செயல்களைக் கட்டுப்படுத்துதல். |
| பான்ஸ் மற்றும் முகுளம் | உறக்க - விழிப்பு சுழற்சி, இதயத்துடிப்பு, சுவாச மற்றும் செரித்தலைக் கட்டுப்படுத்தும் மையமாகச் செயல்படுதல் |
30.
காற்று வழி மகரந்தச்சேர்க்கை
i) காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை அனிமோஃபிலி எனப்படும்.
ii) இவ்வகை மலர்கள் ஏராளமான மகரந்தத் தூள்களை உற்பத்தி செய்கின்றன.
iii) மகரந்தத்தூள்கள் சிறியதாகவும், மென்மையானதாகவும், உலர்ந்ததாகவும், எடை குறைவாகவும் உள்ளன.
iv) இவ்வகைத் தாவரங்களின் மகரந்தத் தூள்கள் 1000 கி.மீ. தூரத்துக்கு மேல் கடக்கின்றன.
v) சூல்முடியானது பெரியதாகவும் வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கும்.
vi) சில நேரங்களில் கிளைத்து முடி போன்று மகரந்தத் தூளைப் பிடித்துக் கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும். எ.கா. புல் மற்றும் சில கள்ளிச் செடிகள்.
நீர்வழி மகரந்தச்சேர்க்கை
i) நீரின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு ஹைட்ரோஃபிலி என்று பெயர்.
ii) இவ்வகைத் தாவரங்களில் நடைபெறுகிறது.
iii) மகரந்தத்தூள்கள் பெண் மலர்களில் உள்ள சூல்முடியை அடையும் வரை நீரில் மிதந்து கொண்டிருக்கும். எ.கா. ஹைட்ரில்லா, வாலிஸ்நீரியா.
விலங்குகள் வழி மகரந்தச்சேர்க்கை
i) விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை, விலங்குகள் வழி மகரந்தச்சேர்க்கை (சூஃபிலி)எனப்படும்.
ii) இவ்வகை மகரந்தச்சேர்க்கையில் மலர்கள், விலங்குகளைக் கவர்வதற்காகப் பிரகாசமான வண்ணங்களைக் கொண்டவையாகவும் அளவில் பெரியவையாகவும் இருக்கும். எ.கா. தேன்சிட்டு பறவை மூலம் கல்வாழை, கிளாடியோலி போன்ற தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
iii) அணில்கள் மூலமாக இலவம் பஞ்சு மரத்தில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
31.
i) விந்து செல்லானது தலை, நடுப்பகுதி மற்றும் வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ii) விந்து செல்லின் நீண்ட தலைப்பகுதி சுருங்கிய உட்கருவைக் கொண்டுள்ளது.
iii) தொப்பி போன்ற முன் முனைப்பகுதி அக்ரோசோம் என்று அழைக்கப்படுகிறது.
iv) கருவுறுதலின் போது விந்துவானது அண்டத்தினுள் நுழைவதற்குத் தேவையான ஹயலுரானிடேஸ் என்னும் நொதியை அக்ரோசோம் கொண்டுள்ளது.
v) தலையையும் நடுப்பகுதியையும் இணைக்கின்ற குறுகிய கழுத்துப் பகுதியானது சென்ட்ரியோலை உள்ளடக்கியுள்ளது.
vi) மைட்டோகாண்ட்ரியாவால் ஆன நடுப்பகுதி வால்பகுதி நகர்வதற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
vii) விந்துவின் நகர்வானது கருவுறுதலுக்கு அவசியமாகிறது.
32.
டாப்ளர் விளைவின் பயன்பாடுகள்:
(i) வாகனம் ஒன்றின் வேகத்தை அளவிடுதல் :
காவலரின் காரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ஒன்று மின் காந்த அலையை உமிழும். இந்த அலையானது சாலையில் வேகமாக செல்லும் வாகனத்தின் மீது பட்டு எதிரொளிக்கப்படும். எதிரொளித்த அலையின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்படும்.அந்த அதிர்வெண்ணில் மாற்றத்தைப் பயன்படுத்தி வாகனத்தின் வேகத்தைக் காண இயலும்.இது அதிவேக வாகனங்களைக் கண்காணிக்க உதவுகிறது.
(ii) துணைக்கோள் ஒன்றின் தொலைவினைக் கணக்கிடுதல் :
துணைக்கோள் ஒன்று புவியிலிருந்து வெகு தொலைவிற்குச் செல்லும்போது, அதனால் உமிழப்பட்ட ரேடியோ அலைகளின் அதிர்வெண் குறையும். அந்தந்த அதிர்வெண்ணில் மாற்றத்தைப் பயன்படுத்தி துணைக்கோளின் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.
(iii) ரேடார் (RADAR-Radio Detection and Ranging):
ரேடரானது அதிர்வெண் மிக்க ரேடியோ அலைகளை ஆகாய விமானத்தை நோக்கி அனுப்பும். எதிரொளித்து வரும் ரேடியோ அலைகளை ரேடார் நிலையத்தில் உள்ள வேறுபாட்டைக் கொண்டு விமானத்தின் வேகத்தைக் கணக்கிடலாம்.
(iv) சோனார்(SONAR-Sound Navigation And Ranging)
சோனார் கருவியின் மூலம் நீரில் அனுப்பப்பட்ட மற்றும் எதிரொலித்தக் கதிரின் அதிர்வெண் வேறுபாட்டைக் கொண்டு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களை கண்டறியலாம்.
33.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ரா சோனா கிராபி கருவியல் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
(iv) இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும்.
(v) ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப்படுகிறது.
(vi) ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
34.
மீளாவினைகள்:
(i) ஒரு வினையில் வினைபடு பொருள்களை மீண்டும் பெற இயலாத வினை 'மீளா வினை' எனப்படும்.
(ii) இவ்வினை ஒரே திசையில் மட்டுமே நிகழும். அதாவது முன்னோக்கு வினையாக மட்டுமே நடைபெறும்.
(iii) நிலக்கரி எரிதல் வினையின் போது கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைக் கொடுக்கிறது.
(iv) இவ்வினையில் நிலக்கரியானது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீரினை வெளியிடுகிறது.
(v) இதில் உருவான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவானது மீண்டும், நிலக்கரியாகவும், ஆக்சிஜனாகவும் மாற இயலாது. எனவே இவ்வினை மீளாவினை எனப்படும்.
35.
மீள் வினைகள்:
(i) மீள் வினைகள் என்பவை மீண்டும் நிகழக்கூடிய வினைகள் ஆகும். அதாவது வினைவிளை பொருள்களை வினைபடு பொருள்களாக மாற்ற முடியும். ஒரு மீள் வினையை கீழ்கண்டவாறு குறிக்கலாம்.
(ii) மேற்கண்ட வினையில், வினைபடு பொருள் AB ஆனது சிதைவுற்று வினைவிளை பொருள் 'A' பொருள் 'B' கிடைக்கிறது. இது 'முன்னோக்கு வினையாகும்'. இவ்வாறு உருவாகும் வினைவிளை பொருளான A மற்றும் B மீண்டும் இணைந்து AB என்ற சேர்மமாக மாறுகிறது. இது பின்னோக்கு வினை எனப்படும். ஆகவே இந்த வினை முன்னோக்கு மற்றும் பின்னோக்கு திசைகளில் நடைபெறுகிறது. அப்படியாயின் மேற்கண்ட வினையில் எந்த ஒரு வினைவிளை பொருள்களும் உருவாகவில்லை என்று கருதுகிறாயா? நீ அவ்வாறு கருதினால் அது தவறு. ஏனெனில் வினையானது இரு திசைகளில் நிகழ்ந்தாலும் வினையின் தொடக்கத்தில் அவற்றின் வினைவேகம் சமமானதாக இல்லை.
(iii) எ.கா: பாஸ்பரஸ் பென்டா குளோரைடு சிதைவுற்று பாஸ்பரஸ் டிரை குளோரைடு மற்றும் குளோரினைத் தரும் வினையை எடுத்துக் கொள்வோம்.
\({ PCl }_{ 5(g) }\rightleftharpoons { PCl }_{ 3(g) }+{ Cl }_{ 2(g) }\)
(iv) PCl5 சிதைவுறுதல் முன்னோக்கு வினையாகவும், PCl3 மற்றும் Cl2 இணைந்து PCl5 உருவாதல் பின்னோக்கு வினையாகவும் நடைபெறுகிறது. முதலில் வினையின் துவக்கத்தில் முன்னோக்கு வினையானது, பின்னோக்கு வினையை விட வேகமாக நடைபெறும். சிறிது நேரத்திற்குப் பிறகு முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினையின் வேகமானது சமமாகிறது. எனவே பின்னோக்கு வினை நடைபெறுவதால் PCl5 முழுமையாக சிதைவடையாது. இது மீள்வினையாகும். வேதிச் சமநிலையின் போது PCl5 - இன் செறிவானது PCl3 மற்றும் Cl2 - இன் செறிவை விட அதிகம்.
(v) மீள்வினையின் போது வினைவிளை பொருள்களை அவை உருவான உடனே நீக்குவது மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வினைபடுபொருள்களை சேர்ப்பதன் மூலமாகவோ அதிக அளவு வினைவிளை பொருள்களை பெறமுடியும்.
\(2{ H }_{ 2 }{ O }_{ 2(aq) }\rightleftharpoons 2{ H }_{ 2 }{ O }_{ (l) }+O_{ 2(g) }\)
36.
இரத்தம் வழங்குதல்:
(i) இரத்தம் செலுத்துவதற்கு முன்னர் இரத்தம் பெறுபவர்க்கும் இடையில் ஆன்டிஜெனுக்கும் ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ள வேண்டும்.
(ii) பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை ஒருவர் பெறுவதினால் அவருக்கு இரத்தத் திரட்சி ஏற்பட்டு இறக்க நேரிடும்.
(iii) 'AB' இரத்த வகை கொண்ட நபரை 'இரத்தக் கொடையாளி' என அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்குவார்.
(v) எனவே 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரத்தம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
37.
ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தின் உள்ளே நடைபெறுகிறது. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவிலும், ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவிலும் நடைபெறுகிறது.
1. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளிவினை (ஹில் வினை)
இது ராபின் ஹில் (1939) என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு சூரிய ஒளியின் முன்னிலையில் தைலக்காய்டு சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH2 வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள்வினைக்குப் பயன்படுகின்றன.
2. ஒளிசாரா வினை அல்லது இருள்வினை (உயிர்பொருள் உற்பத்தி நிலை)
இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது. இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கால்வின் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு சூரிய ஒளி தேவை இல்லை. கால்வின் சுழற்சியில் காற்றிலிருந்து CO2 ம் ஒளி வினையின் மூலம் உண்டான ATP மற்றும் NADPH2 ம் உள்நுழைகிறது.
38.
வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல் நோக்கியே கடத்துதல் மூலம் தாவரங்களின் பிற பகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும். சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன. சாறேற்றம் பின்வரும்படி நிலைகளில் நடைபெறுகிறது.
(i) வேர் அழுத்தம்:
மண்ணில் உள்ள நீர் வேர்த்தூவிகளுக்கு சவ்வூடு பரவலின் காரணமாக நீரானது வேரிலிருந்து மேல் நோக்கி தண்டின் அடிப்பகுதிக்கு செல்கிறது.
(ii) நுண்துளை ஈர்ப்பு விசை (தந்துகிக்குழாய் விசை)
நீர் அல்லது எந்த ஒரு திரவமும் நுண்துளைக் குழாய்களில் இயற்பியல் விசையின் காரணமாக மேலேறுகிறது. இதற்கு நுண்துளை ஈர்ப்பு விசை என்று பெயர். அதே போல் தண்டிலும் நீரானது குறிப்பிட்ட உயரம் காரணமாக கடத்தப்படுகிறது.
(iii) நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு விசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக நீரானது சைலத்தில் ஒரு தொடர்ச்சியான நீர்த்தம்பமாக உள்ளது.
(அ) கூட்டிணைவு: நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்.
(ஆ) ஒட்டிணைவு: பல்வேறு வகையான மூலக்கூறுகளிடையே காணப்படும் ஈர்ப்பு விசை ஒட்டிணைவு எனப்படும். நீர் மூலக்கூறுகள் சைலக்குழாயின் சுவருடன் ஒட்டிணைவின் காரணமாக பிணைந்துள்ளன.
(iv) நீராவிப்போக்கின் இழுவிசை:
1. இலைத்துளையின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கின் காரணமாக ஒரு வெற்றிடம் உண்டாகும். இதனால் ஒரு இழுவிசை (suction) உண்டாக்கப்படுகிறது. இந்த விசையே நீராவிப் போக்கின் இழுவிசை எனப்படும்.
2. நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக சைலத்தினுள் உள்ள நீர்த் தம்பானது மிக உயர்ந்த தாவரங்களிலும் மேலேறுகிறது.
39.
| கரைபொருளின் பெயர் | கரைபொருளின் வாய்ப்பாடு | கரைத்திறன் கி/100 கி நீரில் |
|---|---|---|
| கால்சியம் கார்பனேட் | CaCO3(திண்மம்) | 0.0013 |
| சோடியம் குளோரைடு | NaCl(திண்மம்) | 36 |
| அம்மோனியா | NH3(வாயு) | 48 |
| சோடியம் ஹைட்ராக்ஸைடு | NaOH(திண்மம்) | 80 |
| குளுக்கோஸ் | C6H12O6(திண்மம்) | 91 |
| சோடியம் புரோமைடு | NaBr(திண்மம்) | 95 |
| சோடியம் அயோடைடு | NaI(திண்மம்) | 184 |
40.
| கரைபொருள் | கரைப்பான் | உதாரணம் |
|---|---|---|
| திண்மக் கரைசல் | ||
| திண்மம் | திண்மம் | தங்கத்தால் கரைக்கப்பட்ட காப்பர் (உலோகக் கலவைகள்) |
| திரவம் | திண்மம் | பாதரசத்துடன் கலந்த சோடியம்(இரசக்கலவைகள்) |
| திரவக் கரைசல் | ||
| திண்மம் | திரவம் | நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு கரைசல் |
| திரவம் | திரவம் | நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால் |
| வாயு | திரவம் | நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு (சோடா நீர்) |
| வாயுக் கரைசல் | ||
| திரவம் | வாயு | காற்றில் உள்ள நீராவி (மேகம்) |
| வாயு | வாயு | ஆக்சிஜன் - ஹீலியம் வாயுக்கலவை |
41.
இரு வித்திலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் உள்ளன.
(i) மேல்புறத்தோல்:
ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆனது. மேல்புறத் தோலின் வெளிப்புறத்தில் கியூட்டிகிள் படலம் உள்ளது. இலைத்துளைகள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
(ii) கீழ்புறத்தோல்:
வெளிப்புறத்தில் கியூட்டிகிளுடன் ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆன அடுக்கு காணப்படுகிறது. இதில் பல இலைத்துளைகள் உள்ளன. ஒவ்வொரு இலைத்துளையும் பசுங்கணிகத்துடன் கூடிய இரண்டு காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவி புரிகின்றன.
(iii) இலையிடைத்திசு:
மேல்புறத் தோலுக்கும் கீழ்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும். இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை செல்கள் உள்ளன .
அ. பாலிசேட் பாரன்கைமா:
மேல்புறத்தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள், அதிக பசுங்கணிகங்களுடனும் காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச் சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.
ஆ. ஸ்பாஞ்சி பாரன்கைமா:
இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோள வடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
வாஸ்குலார் கற்றைகள்:
வாஸ்குலார் கற்றைகள் மைய நரம்பில் மற்றும் பிற நரம்புப் பகுதிகளில் அமைந்துள்ளது. வாஸ்குலார் கற்றைகள், ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன கற்றை உறை உள்ளது. வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத்தோலை நோக்கியும், புளோயம் கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது.
42.
(i)முயலின் சுற்றோட்ட மண்டலம் இரத்தம், இரத்தக் குழாய்கள் மற்றும் இதயம் ஆகியவற்றைக் கொண்டது. இதயம் பேரிக்காய் வடிவத்தில் மார்பறையினுள் இரு நுரையீரல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதயம் பெரிகார்டியம் என்ற இரட்டைச் சவ்வுகளால் ஆன உறையால் சூழப்பட்டுள்ளது.
(ii) இதயம் இரு ஆரிக்கிள்கள் மற்றும் இரு வென்ட்ரிக்கிள்கள் என நான்கு அறைகளைக் கொண்டது. வலது மற்றும் இடது ஆரிக்கிள்கள், ஆரிக்கிள் இடைத் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. இதே போல், வலது மற்றும் இடது வென்ட்ரிக்கிள்கள், வென்ட்ரிக்கிள் இடைத் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
(iii) வலது ஆரிக்குலோ - வென்ட்ரிக்குலார் துளை மூலம் வலது வென்ட்ரிக்கிள் திறக்கிறது. இத்துளை மூவிதழ் வால்வினால் காக்கப்படுகிறது. இடது ஆரிக்கிள், இடது வென்ட்ரிக்குலார் துளை மூலம் திறக்கிறது. இத்துளையை ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு காக்கிறது. நுரையீரல் வளைவு மற்றும் பெருந்தமனி திறக்கும் இடங்களில் அரைச்சந்திர வால்வு உள்ளன.
(iv) இரு பெருஞ்சிரைகள் (முன்கேவல் சிரைகள்) மற்றும் ஒரு கீழ்ப்பெருஞ்சிரை (பின்கேவல் சிரை) மூலம் உடலின் அனைத்து பாகங்களிருந்தும் ஆக்சிஜன் நீக்கம் பெற்ற இரத்தத்தை வலது ஆரிக்கிள் பெறுகிறது.
(v) இடது ஆரிக்கிள், நுரையீரல் சிரைகள் மூலம் நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுகிறது. வலது வென்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்கிறது. இடது வென்ட்ரிக்கிளிலிருந்து சிஸ்டமிக் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.
43.
(i) பற்கள் கடினமான, எலும்பு போன்ற அமைப்புகள், இவை உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு, மெல்லுவதற்கும், அரைப்பதற்கும் பயன்படுகின்றன. முயல் தன் வாழ்நாளில் இரு தொகுதி பற்களைப் பெறுகிறது. இவ்வாறு ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் காணப்படும் நிலை 'இரு முறை தோன்றும் பல்லமைப்பு' எனப்படுகிறது. முயலின் பற்கள் வெவ்வேறு வகையின. இத்தகைய பல்லமைப்புக்கு 'மாறுபட்ட பல்லமைப்பு' என்று பெயர்.
(ii) பாலூட்டிகளில் நான்கு வகைப் பற்கள் காணப்படுகின்றன. அவை வெட்டும் பற்கள் (I), கோரைப்பற்கள் (C), முன் கடைவாய்ப் பற்கள் (PM) மற்றும் பின்கடைவாய்ப் பற்கள் (M) ஆகும். இவை பல் வாய்பாட்டின் மூலம் குறிக்கப்படுகின்றன.
(iii) ஒரு பாலூட்டியில் காணப்படும் பற்களை பற்றி சுருக்கமாக எழுதும் முறையே பல் வாய்பாடு ஆகும். ஒரு பாலூட்டியின் மேல் மற்றும் கீழ்த் தாடைகளில் ஒரு வகைப் பற்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது. முயலின் பல் வாய்ப்பாடு \(\left( 1\frac { 2 }{ 1 } ,C\frac { 0 }{ 0 } ,PM\frac { 3 }{ 2 } ,M\frac { 3 }{ 3 } \right) \) இது பின்வருமாறு எடுத்தப்படும் \(\frac {2033}{1023}\) முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
(iv) முயலின் வெட்டும் பற்களுக்கும், முன்கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என அழைக்கப்படுகிறது மேலும், அரைக்கும்போதும் உணவைக் கையாளுவதற்கு இந்த பல் இடைவெளி பயன்படுகிறது.
44.
கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவை,
(i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை
(ii) வெப்பநிலை
(iii) அழுத்தம்
(i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை:
1. கரைதிறனில், கரைப்பான் மற்றும் கரைபொருளின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது.
2. நீர் பெரும்பான்மையான பொருட்களை கரைக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், சில பொருள்கள் நீரில் கரைவதில்லை.
3. இதனையே வேதியியலாளர்கள் கரைதிறனை பற்றிக் குறிப்பிடும் போது “ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது" (Like dissolves like) என்கின்றனர்.
4. கரைபொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் போது தான் கரைதல் நிகழ்கிறது.
5. முனைவுறும் சேர்மம், முனைவுறும் கரைப்பானில் எளிதில் கரைகிறது. உதாரணம்; நீரில் கரைக்கப்பட்ட சமையல் உப்பு.
6. முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் எளிதில் கரைகிறது. உதாரணம்: ஈதரில் கரைக்கப்பட்ட கொழுப்பு.
7. முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் கரைவதில்லை.
8. முனைவுறும் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் கரைவதில்லை.
ii) வெப்பநிலை:
திரவத்தில் திண்மங்களின் கரைதிறன்:
1. வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது.
2. உதாரணம்: குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை, சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
3. வெப்பக்கொள் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் அதிகரிக்கிறது.
4. வெப்பஉமிழ் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது.
திரவத்தில் வாயுக்களின் கரைதிறன்:
5. திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் குறைகிறது.
6. ஏனெனில் நீரை வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜன் குமிழிகளாக வெளியேறுகிறது.
iii) அழுத்தம்:
1. வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டுமே அழுத்தத்தின் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
2. அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.
3. எ.கா; குளிர்பானங்கள், பார்மலின்.
45.
அ) தெவிட்டிய கரைசல் :
1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில், மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ, அக்கரைசல் தெவிட்டிய கரைசல் எனப்படும்.
2. உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
3. மேலும் கரைபொருளைச் சேர்க்கும் போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது
ஆ) தெவிட்டாத கரைசல் :
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 10 கி அல்லது 20 கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.
46.
1. இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
2. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்.
3. ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய் கட்டுப்பாட்டிற்கான இரத்த உறைதல் காரணிகள்.
4. இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பை தவிர்க்க உதவுகிறது.
5. ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெறி நாய்க்கடி(ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.
47.
விரும்பத் தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே உயிரூட்டச்சத்தேற்றம் எனப்படும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட சில பயிர் ரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்களான புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா (இந்தியாவில் உருவாக்கப்பட்டவை)
2. புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66
3. இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம்
4. வைட்டமின் A செறிந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள்.
48.
1. மனிதனில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி, (23வது ஜோடி) பால் குரோமோசோம்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2. பெண் கேமீட்டுகள் அல்லது அண்ட செல்கள் ஒரே மாதிரியான குரோமோசோம் அமைப்பைப் (22 + X) பெற்றுள்ளன.
3. அவை (22 + X) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள் மற்றும் (22 + Y) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள் மனித இனத்தில் ஆண்கள் ஹெட்டிரோகேமிட்டிக் என அழைக்கப்படுகின்றனர்.
4. ஆகவே, மனித இனத்தில் பெண் உயிரிகள் ஹோமோகேமீட்டிக் ஆகும்.
5. ஆண் கேமீட்டுகள் அல்லது விந்தணுக்கள் இரண்டு வகைப்படும். இரண்டு வகைகளும் சம விகிதத்தில் உருவாகின்றன.
6. அண்டம் (X), X - குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால். XX உயிரி (பெண்) உருவாகிறது.
7. அண்டம் (X), Y - குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால் XY - உயிரி (ஆண்) உருவாகிறது.
8. தந்தை உருவாக்கும் விந்தணுவே, குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்விதப் பங்கும் இல்லை.
9. (22 + X) அண்டம் (22 + X) விந்தணுவுடன் கருவுறும் பொழுது பெண் குழந்தை (44 + XX) உருவாகிறது.
10. (22 + X) அண்டம், (22 + Y) விந்தணுவுடன் கருவுறும் பொழுது ஆண் குழந்தை (44 + XY) உருவாகிறது.
49.

1. இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு இருபண்பு கலப்பு எனப்படும்.
2. மெண்டல் விதையின் நிறம் மற்றும் வடிவத்தைத் தன் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தார். விதையின் நிறம்-மஞ்சள் மற்றும் பச்சை விதையின் வடிவம் -உருண்டை மற்றும் சுருங்கியது.
3. மெண்டல் உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பினம் செய்து கீழ்க்கண்ட முடிவுகளைக் கண்டறிந்தார்.
4. மெண்டல், முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பு செய்யும்போது F1 சந்ததியில் கிடைத்த அனைத்துத் தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன.
5. சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் F1 ல் தோன்றவில்லை.
6. இதிலிருந்து அவர் உருண்டை மற்றும் நிற விதையுடைய தாவரங்கள் ஓங்கு பண்புத் தாவரங்கள் எனவும் சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் ஒடுங்கு பண்புத் தாவரங்கள் எனவும் கண்டறிந்தார்.
7. முதல் சந்ததியில் தோன்றிய இரு பண்புக் கலப்புயிரியான உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளைத் தன் மகரந்தச் சேர்க்கைக்குட்படுத்தும் போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின.
8. அவை முறையே உருண்டை மஞ்சள் (9), உருண்டை பச்சை (3), சுருங்கிய மஞ்சள் (3), சுருங்கிய பச்சை (1), நிற விதைகளுடைய தாவரங்கள் எனவே இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகும்.
9. மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில் பண்புகளுக்கான காரணிகள் தனித்தன்மையுடனும் சார்பின்றியும் கேமீட்டுகளில் காணப்படுகின்றன.
10. இக்காரணிகள் ஒவ்வொன்றும் சார்பின்றி தனித்தன்மை இழக்காமல் அடுத்த சந்ததிக்குச் செல்லும்.
| ஒருபண்பு கலப்பு | இருபண்பு கலப்பு |
| ஒரு பண்புகளில் இரு மாற்றுத் தோற்றங்களை தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களை கலப்புறச் செய்வது. | இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு செய்வது. |
| எ.கா : தண்டின் உயரம். | எ.கா: விதையின் நிறம் மற்றும் விதையின் வடிவம். |
50.
ஒப்பு மூலக்கூறு நிறை (ஹைட்ரஜன் அளவீடு):

ஆவி அடர்த்தி (V.D.):

அவகாட்ரோ விதிப்படி v \(\alpha\) n
ஒரு பருமனுள்ள வாயுவில் 'n' எண்ணிக்கையிலான மூலக்கூறுகள் உள்ளதாக கொண்டால்,

'n' = 1 எனக் கொண்டால்,

ஹைட்ரஜன் ஈரணு மூலக்கூறு. எனவே,

ஒப்புமூலக்கூறு நிறையின் வரையறையை பிரதியிட

ஒப்புமூலக்கூறு நிறை = 2 \(\times\) ஆவி அடர்த்தி
51.
ஒரு மோல் நைட்ரஜனின் நிறை N2 = 2 x N = 2 × 14 = 28 கி
3 மோல் ஹைட்ரஜனின் நிறை H2 = 3(2 × H) = 3(2 × 1) = 6 கி
2 மோல் அம்மோனியாவின் நிறை NH3 = 2[(N × 1) + (H × 3)]
= 2[(14 × 1) + (1 × 3)]
= 2[14 + 3]
= 34 கி.
52.
| எண் | அமைப்பு ஒத்த உறுப்புகள் | செயல் ஒத்த உறுப்புகள் |
| 1 |
ஒரே மாதிரியான கருவளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும். |
செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது. |
| 2. | பாலூட்டிகளின் முன்னங்கால்கள் அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். | வௌவாலின் இறக்கை, பறவையின் இறக்கை பூச்சியின் இறக்கை இதற்கு எடுத்துக்காட்டாகும். |
53.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கை தேர்வு உள்ளது. எவ்வாறெனில்,
அதிக இனப்பெருக்கத் திறன்:
1. உயிரினங்கள், அதிகளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை.
2. அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை.
வாழ்க்கைக்கான போராட்டம்:
1. அதிக உற்பத்தி காரணமாக, உயிரினங்கள் வாழ தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது.
2. இது உயிரினங்களுக்கான உணவு மற்றும் இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
வேறுபாடுகள்:
டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள் உயிரினத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.
இயற்கைத் தேர்வு:
1. வாழ்க்கைக்கான போராட்டத்தின் போது கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள் உயிர்பிழைத்து சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும்.
2. கடினமான சூழலை எதிர்கொள்ள முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்து விடும்.
3. சாதகமான வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை இயற்கை தேர்வு என அழைக்கப்படுகிறது.
சிற்றினங்களின் தோற்றம்:
பல தலைமுறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின் தொகுப்பினால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன.
54.

i) A \(\Rightarrow\) காப்பர் (Cu)
ii) 2 Cu + O2 + CO2 + H2O \(\rightarrow\) CuCO3.Cu(OH)2
B \(\Rightarrow\) கார காப்பர் கார்பனேட்
iii) Cu + 2H2SO4 \(\rightarrow\) CuSO4 + SO2 \(\uparrow\) + 2 H2O
C \(\Rightarrow\) காப்பர் சல்பேட் D \(\Rightarrow\) சல்பர் டைஆக்சைடு
| A | காப்பர் (Cu) |
| B | கார காப்பர் கார்பனேட் (CuCO3 .Cu(OH)2) |
| C | காப்பர் சல்பேட் (CuSO4) |
| D | சல்பர் டைஆக்சைடு (SO2) |
55.
அமைப்பு:
1. கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவிலென்சுகளைக் கொண்டது.
2. இவற்றில் பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவியதூரம் கொண்ட குவிலென்சானது 'பொருளருகு லென்சு' அல்லது பொருளருகு வில்லை என்றும் உற்று நோக்குபவரின் கண்ணுக்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும் கொண்ட குவிலென்சு 'கண்ணருகு லென்சு' அல்லது கண்ணருகு வில்லை என்றும் அழைக்கப்படுகின்றன.
3. இந்த இரண்டு லென்சுகளும் முன்னும் பின்னும் நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளன.
செயல்படும் விதம்:
1. பொருள் (AB) யானது, பொருளருகு லென்சின் குவிய தூரத்தை விடச் சற்றுக் கூடுதலான தொலைவில் வைக்கப்படுகிறது. பொருளருகு லென்சின் மறுபுறத்தில் பெரிய, தலைகீழான, மெய்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
2. இந்த பிம்பமானது கண்ணருகு லென்சிற்குப் பொருளாகச் செயல்படுகிறது.
3. மேலும், இப்பிம்பமானது (A'B') கண்ணருகு லென்சின் முதன்மைக் குவியத்திற்குள் அமையுமாறு கண்ணருகு லென்சு சரிசெய்யப்படுகிறது.
4. கண்ணருகு லென்சு, அளவில் பெரிய நேரான மாயபிம்பத்தைப் (A"B") பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.
5. கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்குத் திறனானது எளிய நுண்ணோக்கியின் உருப்பெருக்குத் திறனைக் காட்டிலும் 50 முதல் 200 மடங்கு வரை அதிகமாக இருக்கும்.

56.
மாதவிடாய் சுழற்சியை உள்ளடக்கிய 4 நிலைகளாவன
1. மாதவிடாய் அல்லது அழிவுநிலை
2. பாலிக்குலார் அல்லது பெருக்கநிலை
3. அண்டம் விடுபடும் நிலை
4. லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை
| நிலை | நாட்கள் | அண்டகத்தில் நிகழும் மாற்றங்கள் | கருப்பையில் நிகழும் மாற்றங்கள் | ஹார்மோன்களில் நிகழும் மாற்றங்கள் |
| மாதவிடாய் நிலை | 4-5 நாள்கள் | முதல்நிலை பாலிக்கிள்களின் வளர்ச்சி | கருப்பையின் எண்டோமெட்ரியத்தின் உட்சுவர் உரிந்து ஏற்படும் இரத்தப் போக்கு. | புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைதல். |
| பாலிக்குலார் நிலை | 6-13 நாள்கள் | முதல்நிலை பாலிக்கிள்கள் வளர்ச்சியடைந்து முதிர்ச்சியடைந்த கிராபியன் பாலிக்கிள்களாதல். | பெருக்க நிலையினால் எண்டோமெட்ரியம் புத்தாக்கம் பெறுதல். | FSH மற்றும் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பு. |
| அண்டம் விடுபடும் நிலை | 14-ம் நாள் | கிராபியன் பாலிக்கிள் வெடித்து அண்டம் விடுபடுதல். | எண்டோமெட்ரியத்தின் சுவர் தடிமனாகிறது. | LH-ன் உச்ச நிலை. |
| லூட்டியல் நிலை | 15-28 நாள்கள் | காலியான கிராபியன் பாலிக்கிள் வளர்ச்சியுற்று கார்பஸ் லூட்டியமாதல். | முட்டையில் கருவுறுதல் நிகழ்ந்தால் எண்டோமெட்ரியம் கருப்பதிவுக்கு தயாராகிறது. கருவுறுதல் நிகழாதபோது கார்பஸ் லூட்டியம் சிதைந்து கருப்பையின் சுவர் உரிந்து கருவுறாத முட்டை இரத்தத்துடன் வெளியேறும். | LH மற்றும் FSH குறைதல், கார்பஸ் லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜெஸ்டிரான் அளவு குறைந்து மாதவிடாய் ஏற்படும். |
57.
58.
59.
கட்டுப்பாடான தொடர்வினை:
1. கட்டுப்பாடான தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது.
2. அதாவது உட்கவரும் பொருட்களை கொண்டு வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதித்து, மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகின்றன.
3. ஆகையால் இவ்வினையானது கட்டுப்பாடான வினையாக தொடர்கிறது.
4. இத்தொடர்வினையின் மூலம் வெளியேற்றப்படும் ஆற்றல் ஆக்கபூர்வமாக முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
5. அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க கட்டுப்பாடான தொடர்வினையே பயன்படுத்தப்படுகிறது .
கட்டுப்பாடற்ற தொடர்வினை:
1. இவ்வகை தொடர்வினையில் எண்ணற்ற நியூட்ரான்கள் பெருக்கமும், அதன் காரணமாகப் பிளவும் அதிகமான பிளவுப்பொருள்களும் உருவாக்குகின்றன.
2. இதன் முடிவில் ஒரு வினாடிக்குள் அதிகமான ஆற்றல் வெளியேறுகின்றது.
3. இவ்வகை தொடர்வினை அணுகுண்டு வெடித்தலில் பயன்படுகிறது.

60.
அ) NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை.
CH3COOH + NaOH → CH3COONa + H2O
(எத்தனாயிக் அமிலம்) (சோடியம் எத்தனோயேட்)
ஆ) எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை.
CH3COOH + NaHCO3 → CH3COONa + CO2 + H2O
(எத்தனாயிக் அமிலம்) (சோடியம் எத்தனோயேட்)
இ) எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை.
\(\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{OH}+\frac{\mathrm{K}_{2} \mathrm{Cr}_{2} \mathrm{O}_{7} / \mathrm{H}^{+}}{2[\mathrm{O}]} \mathrm{CH}_{3} \mathrm{COOH}+\mathrm{H}_{2} \mathrm{O}\)
எத்தனால் (எத்தனாயிக் அமிலம்)
ஈ) எத்தனாலின் எரிதல் வினை.
C2H5OH + 3O2 → 2CO2 + 3H2O
எத்தனால் (கார்பன் டை ஆக்சைடு)
61.
1. கரும்பு சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிமமாக்கும் பொழுது மீதமுள்ள ஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவம் கழிவுபாகு எனப்படுகிறது.
2. இதில் படிமமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாத 30% சுக்ரோஸ் உள்ளது.
1. கழிவுப்பாகினை நீர்த்தல்:
கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு 8 லிருந்து 10 சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.
2. அம்மோனியம் உப்புகள் சேர்த்தல்:
நொதித்தலின் போது ஈஸ்ட்டிற்குத் தேவையான நைட்ரஜன் கழிவுப்பாகில் உள்ளது.
குறைவாக இருப்பின் அம்மோனியம் சல்பேட் (அ) அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உரமூட்டப்படுகிறது.
3. ஈஸ்ட் சேர்த்தல்:
1. படி (ii) -ல் கிடைக்கும் கரைசலை பெரிய நொதித்தல் தொட்டிகளில் சேகரித்து பின் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது.
2. இக்கலவை 303K வெப்பநிலையில் சில நாட்களுக்கு வைக்கப்படுகிறது.
3. அந்த நாட்களில் ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், மற்றும் சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.

நொதித்த நீர்மம் கழுவு நீர்மம் எனப்படுகிறது.
4. கழுவு நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல்:
15 முதல் 18% வரை ஆல்கஹாலும், மீதம் நீராகவும் உள்ள நொதித்த நீர்மத்தை பின் காய்ச்சி வடித்தல் மூலம் 95.5% எத்தனாலும் 4.5% நீரும் கிடைக்கிறது. இது எரிசாராயம் என அழைக்கப்படுகிறது.
இதனை 5 லிருந்து 6 மணி நேரம் வரை சுட்ட சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்டு 12 மணி நேரம் வைக்கும் போது 100% தூய ஆல்கஹால் கிடைக்கிறது.
இது தனி ஆல்கஹால் எனப்படுகிறது.
62.
| சிஸ்டோல் | டையஸ்டோல் |
| வெண்ட்ரிகுலார் சிஸ்டோல் நிகழ்வின் போது இடது வெண்ட்ரிக்கிள் சுருங்குவதால் இரத்தம் பெருந்தமனிக்குள் வேகமாக செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வின்போது ஏற்படும் மிகை அழுத்தம் சிஸ்டோலிக் அழுத்தம் எனப்படும். |
இடது வெண்ட்ரிக்கிள் விரிவடைவதன் காரணமாக அழுத்தம் குறைகிறது. இக்குறை அழுத்தமே டையஸ்டோலிக் அழுத்தம் எனப்படும். |
இதய துடிப்பின் பரவுதல்:
1. சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய அறைகளை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது.
2. SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு பரவுகிறது.
3. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது.
63.
தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும்.
நீராவிப்போக்கின் முக்கியத்துவம்:
(i) நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்ல காரணமாகிறது.
(ii) ஒளிசேர்க்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.
(iii) கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல உதவுகின்றன.
(iv) இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக நீராவிப் போக்கு உதவுகிறது.
(v) செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.
64.
அ) மீயொலி அதிர்வுறுதல்
20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் மீயொலி அதிர்வுறுதல் எனப்படும். இவற்றை மனிதர்களால் கேட்க இயலாது.
ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள்
வௌவால் இரவிலும் மீயொலியை ஏற்படுத்தி தன் பாதையை சரியாக அறிகிறது.
மீயொலியை பயன்படுத்தும் கருவிகள், வெகு ஆழத்தில் மறைந்திருக்கும் பொருட்களின் தொலைவினை அறிய உதவுகிறது.
அல்ட்ராசோனோகிராபி போன்ற கருவிகள் மகப்பேறு மருத்துவத்துறையில் பெருமளவில் பயன்படுகிறது.
இ) கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் மீயொலியின் அதிர்வுகளை உணர முடியும்.
65.
அடர்த்தியின் விளைவு:
1. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் விகிதில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
\(V\propto \sqrt { \cfrac { 1 }{ d } } \)
வெப்பநிலையின் விளைவு:
வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர் விகிதில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது. \(V\alpha \sqrt { T } \) வெப்பநிலை T°C ல் திசைவேகமானது.
VT = (v0 + 0.61 T) ms-1
இங்கு v0 என்பது 0°C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு v0 = 331 மீ.வி-1 எனவே ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீ.வி-1 அதிகரிக்கிறது.
ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு:
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
66.
67.
தொடர் இணைப்பு:
(i) ஒரு மின்சுற்றில் தொடர் இணைப்பு என்பது மின்கூறுகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து ஒரு மூடிய சுற்றை உருவாக்குவது ஆகும்.
தொடர் சுற்றில் மின்னோட்டமானது ஒரே ஒரு மூடிய சுற்றின் வழியாக பாயும்.
(ii) இந்த மூடிய சுற்றில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைப்பட்டால் மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயாது.
(iii) எனவே சுற்றில் இணைக்கப்பட்டுள்ள மின் சாதனங்கள் வேலை செய்யாது. விழாக்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் தொடர் விளக்குகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
(iv) எனவே, மின் தடையாக்கிகள் தொடராக உள்ளபோது ஒவ்வொரு மின் தடையாக்கியின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.

(v) இங்கு மூன்று மின்தடையாக்கிகள் R1, R2 மற்றும் R3 தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
I என்ற மின்னோட்டம் இந்த மின்தடையாக்கிகள் வழியே செல்கிறது. மின்தடையாக்கிகள் R1, R2 மற்றும் R3 யின் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் முறையே V1, V2 மற்றும் V3 ஆகும்.
(vi) ஓம் விதியின்படி
V1 = IR1 .....(1)
V2 = IR2 ....(2)
V3 = IR3 .....(3)
ஒவ்வொரு மின்தடைக்கும் எதிராக உள்ள மின்னழுத்த வேறுபாட்டின் கூடுதலை V எனலாம்.
V = V1 + V2 + V3
சமன்பாடுகள் (1), (2), மற்றும் (3) லிருந்து
V = IR1 + IR2 + IR3 ....(4)
(vii) தொகுபயன் மின்தடை என்பது அனைத்து மின்தடையாக்கிகளுக்கு பதிலாக அதே அளவு மின்னோட்டம் சுற்றின் வழியே செல்ல அனுமதிக்கும் ஒரு மின் தடையாக்கியின் மின்தடை ஆகும்.
இந்த தொகுபயன் மின்தடை RS எனப்படும். எனவே,
V = IRS .....(5)
சமன்பாடுகள் (4) மற்றும் (5) லிருந்து,
IRS = IR1 + IR2 + IR3
எனவே RS = R1 + R2 + R3 ....(6)
(viii) எனவே பல மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை தனித்தனி மின் தடையாக்கிகளின் மின் தடைகளின் கூடுதலுக்கு சமம் என புரிந்துக் கொள்ளலாம்.
சம மதிப்பு உடைய ‘n’ மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை ‘n R’ ஆகும்.
அதாவது, Rs = n R
மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும்போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.
பக்க இணைப்பு
(i) பக்க இணைப்பு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு மூடிய சுற்று இருக்கும்.
(ii) ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுகளின் வழியாக மின்னோட்டம் பாயும்.
நமது வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

(iii) மூன்று மின்தடையாக்கிகள் R1, R2 மற்றும் R3 யானது A மற்றும் B புள்ளிகளுக்கிடையே பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மின்தடையாக்கிக்கும் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடானது சமமாக இருக்கும். இது A மற்றும் B புள்ளிகளுக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு சமமாக இருக்கும்.
வோல்ட் மீட்டர் மூலமாக இந்த மின்னழுத்த வேறுபாடு அளவிடப்படுகிறது.
புள்ளி A யை அடையும் மின்னோட்டம் I ஆனது I1, I2 மற்றும் I3 என பிரிந்து முறையே R1, R2 மற்றும் R3 வழியே செல்கிறது.
ஓம் விதியின்படி
I1=\(\frac { V }{ { R }_{ 1 } } \) ....(7)
I2=\(\frac { V }{ { R }_{ 2 } } \) ....(8)
I3=\(\frac { V }{ { R }_{ 3 } } \) ....(9)
மின் சுற்றிலுள்ள மொத்த மின்னோட்டம்
I = I1 + I2 + I3
சமன்பாடுகள் (7), (8) மற்றும் (9) லிருந்து
I =\(\frac { V }{ { R }_{ 1 } } +\frac { V }{ { R }_{ 2 } } +\frac { V }{ { R }_{ 3 } } \) ....(10)
மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை Rp என்க. எனவே
I=\(\frac { V }{ { R }_{ p } } \) .....(11)
சமன்பாடுகள் (10), (11)-லிருந்து
\(\frac { V }{ { R }_{ p } } =\frac { V }{ { R }_{ 1 } } +\frac { V }{ { R }_{ 2 } } +\frac { V }{ { R }_{ 3 } } \) ....(12)
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } +\frac { 1 }{ { R }_{ 3 } } \) .....(13)
(v) எனவே பல மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தனித்தனி மின்தடையாக்கிகளின் மின் தடையின் தலைகீழிகளின் கூடுதல் தொகுபயன் மின்தடையின் தலைகீழிகளுக்கு சமம்.
சம மதிப்புடைய ‘n’ மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது அதன் தொகுபயன் மின்தடை \(\frac{R}{n}\) ஆகும்.
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ R } +\frac { 1 }{ R } +\frac { 1 }{ R } ...+\frac { 1 }{ R } =\frac { n }{ R } \)
எனவே, Rp =\(\frac { R }{ n } \).
(vi) மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.
68.
ஈஸ்ட்ரோஜன், வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றன.
ஈஸ்ட்ரோஜனின் பணிகள்:
1. இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
2. அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது.
3. அண்ட ஃபாலிக்கின் செல்கள் முதிர்வதைத் தூண்டுகிறது.
4. இரண்டாம் நிலை பால்பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.
69.
1. தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களை தெளிக்கும்போது, அது கணுவிடைப் பகுதியின் அசாதாரணமான நீட்சியைத் தூண்டுகிறது. (எ.கா) மக்காச் சோளம் மற்றும் பட்டாணி.
2. நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (bolting) என்று பெயர்.
3. ஜிப்ரல்லின்கள் இருபாலினைந்த தாவரங்களில் (ஓரில்லத் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன (வெள்ளரி).
4. ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
5. விதைகளற்ற கனிகளைத் (கருவூறாக் கனிகள் - கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆக்சின்களை விட ஜிப்ரல்லின்கள் திறம் மிக்கவை (எ.கா) தக்காளி.
70.
1. தாவர உண்ணிகளுக்கு ஊன்உண்ணிகளை விட சிறந்த செரிமான மண்டலம் உள்ளது.
2. ஏனெனில் மாமிச உணவை விட தாவர உணவு செரிமானமாவது கடினம்.
3. ஏனெனில் அதில் செல்லுலோஸ் உள்ளது தாவர உண்ணிகளுக்கு ஊன் உண்ணிகளை விட நீளமான குடல் உள்ளது. எனவே, செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
4. பற்கள் கடினமான அமைப்புகள் பெற்று இருக்கும். மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவைக் கையாளுவதற்கு டயாஸ்டீமா எனப்படும் பல் இடைவெளி காணப்படுகிறது.
71.
72.

1. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு கணக்கிட வேண்டிய திரவத்தினை கொள்கலனில் நிரப்பி சோதனையை தொடங்கலாம்.
2. இப்பொழுது கொள்கலனில் உள்ள திரவத்தின் நிலையை L1 எனக் குறித்துக் கொள்ளலாம்.
3. பிறகு கொள்கலன் மற்றும் திரவத்தினை படத்தில் காட்டியுள்ளவாறு வெப்பப்படுத்தப்படுகிறது.
4. தொடக்கத்தில் கொள்கலனானது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும்.
5. அப்போது திரவத்தின் பருமன் குறைவதாகத் தோன்றும். இப்போது இந்த நிலையை L2 எனக் குறித்துக் கொள்ளலாம்.
6. மேலும் வெப்பப்படுத்தும்போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையை L3 எனக் குறித்துக் கொள்ளலாம்.
7. நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L3 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
8. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
9. உண்மை வெப்ப விரிவு = L3 - L2
10. தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
73.
74.
குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும். அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும். நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.
உடல் செயல்பாடுகள்:
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல் நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும்.
அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்:
ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.
75.
கல்வி மற்றும் ஆலோசனை
கல்வி மற்றும் தகுந்த ஆலோசனைகள், மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபடவும், வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் உதவும்.
உடல் செயல்பாடுகள்
மறுவாழ்வை மேற்கொள்ளும் நபர்கள், நூல்கள் வாசித்தல், இசை, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடம் உதவியை நாடுதல்
1. சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.
2. தங்களது பதட்டமான உணர்வுகள், தவறான செயல்களைக் குறித்துப் பேசுவதன் மூலம், மேலும் அத்தவறுகளைச் செய்யாமல் தங்களை தடுத்துக் கொள்ள உதவும்.
மருத்துவ உதவி
1. உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவிகள் பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.
2. மதுவிலிருந்து மீட்பு (de-addiction) மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தனிநபருக்கு உதவிகரமாக உள்ளன.
3. இதனால் அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, இயல்பான மற்றும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.
76.
வினையின் வினைவேகத்தைப் பாதிக்கக் கூடிய முக்கிய காரணிகள்:
i) வினைபடு பொருள்களின் தன்மை
ii) வெப்பநிலை
iii) வினையூக்கி
iv) அழுத்தம்
v) வினைப்படு பொருளின் புறப்பரப்பளவு
i) வினைபடு பொருள்களின் தன்மை:
சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைவிட, அசிட்டிக் அமிலத்துடன் மெதுவாக வினைபுரிகிறது.
ஏனென்றால் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலத்தை விட வினைதிறன் மிக்கது. எனவே, வினைபடு பொருளின் இயல்பு வினைவேகத்தை பாதிக்கிறது.
2Na(s) + 2 HCl(aq) \(\rightarrow\) 2 NaCl(aq) + H2(g) (வேகமாக)
2 Na(s) + 2 CH3 COOH(aq) \(\rightarrow\) 2 CH3 COONa(aq) + H2(g) (மெதுவாக)
ii) வினைபடு பொருள்களின் செறிவு:
குறிப்பிட்ட கனஅளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவே செறிவு ஆகும்.
செறிவு அதிகமாக இருக்கும் போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வினையின் வேகமும் அதிகரிக்கும்.
துத்தநாக துகள்கள், 1 M HCl-ஐ விட 2 M HCl -ல் வேகமாக வினைபுரியும்.
iii) வெப்பநிலை:
வெப்பநிலை அதிகரிக்கும்போது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.
அறை வெப்பநிலையில் கால்சியம் கார்பனேட் மெதுவாக வினைபுரியும். ஆனால் வெப்பப்படுத்தும்போது வினையின் வேகம் அதிகரிக்கும்.
iv) அழுத்தம்:
வாயுநிலையிலுள்ள வினைபடுபொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகம் அதிகரிக்கும்.
ஏனெனில், அழுத்தத்தை அதிகரிக்கும்போது வினைபடு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.
v) வினையூக்கி:
வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடாமல், வினையின் வேகத்தை அதிகரிக்கும்.
பொட்டாசியம் குளோரேட்டை சூடுபடுத்தும் போது ஆக்சிஜன் குறைவான வேகத்தில் வெளிவருகிறது.
ஆனால் மாங்கனீசு டை ஆக்சைடை வினைபடு பொருளுடன் சேர்த்த பிறகு ஆக்சிஜனின் வெளியேறும் வேகம் அதிகரிக்கிறது.
vi) வினைபடு பொருள்களின் புறப்பரப்பளவு:
வேதிவினையில் கட்டியான வினைபடுபொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைப்படுபொருள்களே விரைவாக வினைபுரியும்.
கட்டியான கால்சியம் கார்பனேட்டை விட தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக வேகமாக வினைபுரிகிறது.
ஏனெனில் தூளாக்கும் பொழுது புறப்பரப்பளவு அதிகரிக்கிறது.
77.
1. ஒரு சேர்மம் வெப்பத்தை உட்கொண்டு சிதைவுற்று இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதைவுறும் வினை வெப்பச் சிதைவு வினை எனப்படும்.
2. மெர்குரி II ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாறுகிறது.
3. இவ்வினை சேர்மத்திலிருந்து தனிமம் / தனிமம் சிதைவடைதல் என்ற வகையைச் சார்ந்தது.

4. கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும்போது சிதைவுற்று கால்சியம் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.
5. இவ்வினை சேர்மத்திலிருந்து சேர்மம் / சேர்மம் என்ற வகையைச் சார்ந்தது.

வெப்பச் சிதைவு வினைகளில் பிணைப்புகளை உடைப்பதற்கு வெப்பம் தரப்படுகிறது.
இது போன்ற வெப்பத்தை உறிஞ்சும் வினைகளை "வெப்பக்கொள் வினைகள்" எனலாம்.
78.
நரம்பு தூண்டல் கடத்தப்படுதல் :
1. உணர் உறுப்புகளான கண், மூக்கு, தோல் போன்றவற்றின் மூலம், புறச் சூழ்நிலையிலிருந்து பெறப்படும் தூண்டல்கள் உணரவேற்பிகளின் மூலம் உணரப்படுகின்றன.
2. இத்தூண்டல்கள் மின்தூண்டல்களாக நியூரான்கள் வழி கடத்தப்படுகின்றன. மேலும் இத்தூண்டல்கள் டெண்ட்ரைட் முனை வழியாக செல் உடலத்துக்குள் கடத்தப்பட்டு ஆக்ஸான் முனையை சென்றடைகின்றன.
3. இப்போது ஆக்சான் முனையானது நரம்புணர்வு கடத்திகளை (நியூரோட்ரான்ஸ்மிட்டர்) வெளியிடுகிறது.
4. இவை நரம்பு இணைவுப் பகுதியில் பரவி அடுத்த நியூரானிலுள்ள டெண்ட்ரைட்டுகளை அடைந்து செல் உடலத்தில் மின் தூண்டல்களாக கடத்தப்படுகின்றன.
5. இவ்வாறு தொடர்ந்து கடத்தப்பட்டு மின் தூண்டல்கள் மூளை அல்லது தண்டுவடத்தைச் சென்றடைகின்றன.
6. இதற்குரிய துலங்கல்கள்(Response) மூளை அல்லது தண்டுவடத்திலிருந்து வெளிப்பட்டு குறிப்பிட்ட தசைகள் அல்லது சுரப்பிகளை சென்றடைகின்றன.

79.
தண்டுவடம் :
1. தண்டுவடமானது குழல் போன்ற அமைப்பாக முதுகெலும்பின் உள்ளே முள்ளெலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள் அமைந்துள்ளது.
2. மூளையைப் போன்று தண்டுவடமும் மூவகை சவ்வுகளால் மூடப்பட்டுள்ளது.
3. இது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்துள்ளது.
4. தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது "ஃபைலம் டெர்மினலே" எனப்படுகிறது.
5. தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது. இது மையக்குழல் (central canal) எனப்படுகிறது.
6. தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது ஆங்கில எழுத்தான "H" போன்று அமைந்துள்ளது.
7. "H" எழுத்தின் மேற்பக்க முனைகள் "வயிற்றுப்புறக் கொம்புகள்" (posterior horns) என்றும், கீழ்ப்பக்க முனைகள் "முதுகுப்புறக் கொம்புகள்" (anterior horns) என்றும் குறிப்பிடப்படுகிறது.
8. வயிற்றுப்புறக் கொம்புப்பகுதியில் கற்றையான நரம்பிழைகள் சேர்ந்து பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன.
9. முதுகுப்புற கொம்பு பகுதிகளிலிருந்து வெளிப்புறமாக வரும் நரம்பிழைகள் எதிர்ப்பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன. இவையிரண்டும் இணைந்து தண்டுவட நரம்புகளை (spinal nerves) உண்டாக்குகின்றன.
10. வெளிப்புற வெண்மை நிற பகுதி நரம்பிழைக் கற்றைகளைக் கொண்டுள்ளது.

80.
இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்) வாழும் மனிதர்களால் வளர்க்கப்படாத உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும்.
உயிரியப் பல்வகைத் தன்மையை வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக் கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன.
வன உயிரிகளை பாதுகாத்தல்:
1. சிற்றினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்
2. தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்
3. அருகி வரும் சிற்றினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்களை அழியாமல் பாதுகாத்தல்
4. சட்ட விரோத வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றை தடை செய்தல்
5. தேசிய பூங்காக்கள், வன உயிரி சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
6. மேற்கூறிய முறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றுவது ஒரு சவாலான பணியாக உள்ளது. வன உயிரிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும்.
வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன.
81.
திடக்கழிவுகள் என்பது நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவை உள்ளடங்கியவை. திடக்கழிவுகள் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் கழிவு பொருட்களை சேகரித்தால் உருவாகும்.
திடக்கழிவுகளை அகற்றும் முறைகள்:
1. தனித்து பிரித்தல்:
பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும் தன்மையற்றவை என தனித்து பிரிப்பதாகும்.
2. நிலத்தில் நிரப்புதல்:
1. தாழ்வான பகுதிகளில் திடக்கழிவுகளை நிரப்புவது ஆகும்.
2. கழிவுப் பொருட்களை நிரப்பிய பிறகு அதன்மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள் மூலம் அழுத்தச் செய்யலாம்.
3. 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள் நிலைப்படுத்தப்படுகின்றன.
3. எரித்து சாம்பலாக்கல்;
எரியும் தன்மை உடைய கழிவுகளான மருத்துவமனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட எரியூட்டிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.
4. உரமாக்குதல்:
உயிரி சிதைவடைய கூடிய கழிவுகளை மண்புழுக்களை பயன்படுத்தியும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தியும் சிதைவடையச் செய்து மட்கி உரமாக மாற்றுவது.
82.
குவியத்தொலைவு (f) - 10 செ.மீ.
பொருளின் தூரம் (u) = - 20 செ.மீ.
பிம்பம் தோன்றும் இடம் (v) = ?
\(\begin{aligned}
\frac{1}{f}=\frac{1}{v}-\frac{1}{u}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{1}{v}=\frac{1}{f}+\frac{1}{u}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{1}{v}=\frac{1}{10}+\frac{1}{-20}=\frac{1}{10}-\frac{1}{20}=\frac{2-1}{20}=\frac{1}{20}
\end{aligned}\)
பிம்பம் தோன்றும் இடம் = 20 செ.மீ. தொலைவில்
பிம்பத்தின் தன்மை
மெய்ப்பிம்பம், தலைகீழான, பொருளின் அளவிலேயே, மற்றொரு பக்கத்தில் வளைவு மையத்தில் பிம்பம் கிடைக்கிறது.
83.
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வொரு துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது.
அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.
மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும்.
இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
m1 மற்றும் m2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம்.
இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி.
நியூட்டன் ஈர்ப்பியல் விதிப்படி,

\(F\propto \) m1 \(\times\) m2
\(F\propto { 1/r }^{ 2 }\)
இவை இரண்டையும் இணைத்து
\(F\propto \cfrac { { m }_{ 1 }\times{ m }_{ 2 } }{ { r }^{ 2 } } \)
\(F=\cfrac { { Gm }_{ 1 }\times m_{ 2 } }{ { r }^{ 2 } } \)
G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 \(\times\) 10-11N m2kg-2
84.
1. புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும்.
2. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை கீழ்கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் நிரூபிக்கலாம்:

3. A மற்றும் B என்ற இருபொருட்களின் நிறைகள் முறையே m1 மற்றும் m2 என்க. அவை நேர்க்கோட்டில் பயணிப்பதாக கொள்வோம்.
4. u1 மற்றும் u2 என்பவை அவற்றின் ஆரம்ப திசைவேகங்களாக கொள்வோம்.
5. பொருள் A னது, B ஐ விட அதிக திசைவேகத்தில் செல்வதாக கருதுவோம்.
6. (u1 > u2) 't' என்ற கால இடைவெளியில் பொருள் A ஆனது, B மீது மோதலை ஏற்படுத்துகிறது.
7. மோதலுக்குப் பிறகு அப்பொருள்கள் அதே நேர்க்கோட்டில் V1 மற்றும் V2 திசைவேகத்தில் பயணிப்பதாக கொள்வோம்.
8. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி
9. B யின் மீது A செயல்படுத்தும் விசை FA = m2 (v2 - u2)/t அதேபோல் A யின் மீது B செயல்படுத்தும் விசை FB = m1 (v1 - u1)/t
11. நியூட்டனின் மூன்றாம் விதிப்படி A ன் மீது செயல்படும் விசையானது B மீது செயல்படும் எதிர்விசைக்கு சமம்.
FB = - FA
m1 (v1 - u1)/t = - m2 (v2 - u2)/t
m1 v1+ m2 v2 = m1u1 + m2 u2
12. மேற்காண் சமன்பாடு, இந்நிகழ்வில் வெளிவிசையின் தாக்கம் ஏதும் இல்லாதபோது, மோதலுக்கு பின் உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது.
13. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.
85.
1. பருவமடைவதற்கு முன் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு மிகக் குறைவாக காணப்படும்.
2. புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறைவாக இருப்பதால் அண்டம் உருவாவதில்லை.
3. கருவுற்ற காலத்தில் கர்ப்ப காலம் வரை கார்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் கருப்பையின் சுவரை தடிமனாகவும் மற்றும் மற்ற ஃபாலிக்கிள்கள் முதிர்ச்சியடைவதைத் தடுப்பதாலும் அண்டம் உருவாவதில்லை.
4. எனவே மாதவிடாய் நிகழ்வு நடைபெறுவதில்லை.
86.
1. ஒளிச்சார்ந்த வினை தைலக்காய்டு (கிரானா) பகுதியில் நடைபெறுகிறது.
2. ஒளிசாரா வினை (கால்வின் சுழற்சி) ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.
87.
1. அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன் சேர்க்கப்படுவது ஃப்ளூர்ஸ்பார்.
2. இது மின்பகுளியின் உருக்கு வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards