10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நிறமாலை எவ்வாறு தோன்றுகிறது?
2.
ஒளிவிலகல் ஏற்படக் காரணம் என்ன?
3.
LED பயன்படும் சில சாதனங்களைக் கூறு.
4.
மின்கூறுகள் யாவை?
5.
திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவின் வகைகள் யாவை?
6.
வெப்பநிலை-வரையறு.
7.
எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையினை கூறு.
8.
உடல் பருமக் குறியீடு என்பது யாது?
9.
நேர்மின் அயனி, எதிர்மின் அயனி வேறுபடுத்துக.
10.
ஜீன் சிகிச்சையின் வகைகள் யாவை?
11.
தூய வரிசை-வரையறு.
12.
மாலாவின் கன்னத்தில் மிகப்பெரிய வடு ஒன்று காணப்பட்டது. அது தன்னுடைய கல்லூரி நாட்களில் அவள் ஒரு தீவிபத்தினை சந்திக்க நேர்ந்ததால் ஏற்பட்டது. மேலும் தன் கன்னத்திலும் வடுவினை நினைத்து வருத்தப்பட்டாள். மேலும் அவள் தன்னுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டாள். மருத்துவரும், ''தாங்கள் இந்த வடுவினை நினைத்து வருத்தப்பட வேண்டாம். இது பெறப்பட்ட பண்பாகும்.'' எனக் கூறி அனுப்பி விட்டார்.
(அ) பெறப்பட்ட பண்பு என்றால் என்ன?
(ஆ) மரபுப் பண்பு என்றால் என்ன?
13.
சூரிய நீர் சூடேற்றி மின்சாரம் தயாரிப்பதில்லை, காரணம் கூறு.
14.
ஊரணிகள் என்பன யாவை?
15.
இந்திய அணுமின் நிலையங்களைப் பற்றி குறிப்பு வரைக.
16.
லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள செல்களையும் ஹார்மோனையும் கூறு.
17.
கருவுறாக் கனியாதல் என்றால் என்ன? எ.கா. தருக.
18.
கியூரி - வரையறு.
19.
எச்ச உறுப்புகளுக்கு சில உதாரணங்கள் தருக.
20.
சுயபடைப்புக் கோட்பாடு [அல்லது] உயிரிலிப் பிறப்பு என்றால் என்ன?
21.
மோல் வரையறு.
22.
வேற்றணு மூலக்கூறு என்றால் என்ன? உதாரணம் கொடு.
23.
இடியோகிராம் என்றால் என்ன?
24.
எஸ்டராக்குதல் வினையை எழுதுக.
25.
தோற்ற எடை என்றால் என்ன?
26.
நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் என்றால் என்ன?
27.
பல் இன வளையச் சேர்மம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
28.
செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.
29.
இரட்டை விசைகள் அல்லது இரட்டை என்பது யாது?
30.
கருவுறுதலின் முக்கியத்துவம் யாது?
31.
இனச்செல் உருவாக்கம் என்றால் என்ன?
32.
கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் சார்பியக்கத்தின் வகைகள் யாவை?
33.
ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.
34.
சேர்க்கை வினைக்கும் சிதைவு வினைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
35.
ஒரு வேதிவினை நடைபெறும்போது நிகழ்வதென்ன?
36.
நீரை வெப்பப்படுத்தும்போது குமிழிகள் உருவாகின்றன. ஏன்?
37.
20 கி சர்க்கரையை 40 கி நீரில் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அக்கரைசலின் செறிவை நிறை சதவீதத்தில் காண்.
38.
ஒற்றை இரத்த ஓட்டம் என்றால் என்ன?
39.
இதய சுழற்சி என்றால் என்ன?
40.
பசுங்கணிகத்தின் பணிகள் யாவை?
41.
அட்டையில் கரு வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகின்றன?
42.
பாலூட்டிகளின் இரு முக்கிய பண்புகளைக் குறிப்பிடுக.
43.
ஸ்கிரிப்ட் எடிட்டரைப் பற்றி குறிப்பு வரைக.
44.
நோட்பேடு மற்றும் பெயிண்ட் செயலியின் பயன்பாடுகளை எழுதுக.
45.
46.
கரைசல் – வரையறு
47.
அணுக்கட்டு எண் – வரையறு எடுத்துக்காட்டு தருக
48.
ஒப்பு அணுநிறை - வரையறு
49.
A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்ய பயன்படும். A மற்றும் B என்ன?
50.
A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.
51.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
52.
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
53.
சோப்பு மற்றும் டிடர்ஜெண்டை வேறுபடுத்துக.
54.
எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.
55.
மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?
56.
அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?
57.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
58.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
59.
பாராதைராய்டு ஹார்மோனின் பணிகள் யாவை?
60.
61.
உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
62.
பாயில் விதியைக் கூறுக.
63.
இன்சுலின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது?
64.
மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?
65.
வெப்பநிலையை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
66.
பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொழுது வெண்மைநிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச் சமன்பாட்டை தருக.
67.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
68.
இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.
69.
செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
70.
ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
71.
ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?
72.
திருத்தி (EDITOR) குறித்தும் அதன் பகுதிகள் குறித்தும் எழுதுக?
73.
எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?
74.
பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?
75.
இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?
76.
இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?
77.
அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது?
78.
முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக
79.
புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
80.
வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
81.
மைலின் உறை உள்ள மற்றும் மைலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.
82.
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
83.
மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பை படத்துடன் விளக்கு.
84.
ஊது உலையில் உருக்கிப்பிரித்தலை விவரி.
1.
வெள்ளொளியானது ஒளிபுகும் ஊடகத்தில் செல்லும் போது வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு கோண அளவுகளில் விலகல் அடைவதால் நிறப்பிரிகை ஏற்பட்டு நிறமாலை தோன்றுகிறது.
2.
ஒளியானது வெவ்வேறு ஊடகத்தில், வெவ்வேறு திசைவேகத்தில் செல்வதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது.
3.
டிஜிட்டல் கடிகாரங்கள், கணக்கீட்டு கருவிகள், போக்குவரத்து சமிக்கைகள், தெரு விளக்குகள், அலங்கார விளக்குகள்.
4.
ஒரு மின்சுற்றில் மின்கலன், மின்விளக்கு மற்றும் சாவி போன்ற பல மின்கூறுகள் உள்ளன.
5.
திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவு வகைகள்:
(i) நீள் வெப்ப விரிவு
(ii) பரப்பு வெப்ப விரிவு
(iii) பரும வெப்ப விரிவு
6.
ஒரு பொருள் சுற்றுப்புறத்துடன் வெப்பச் சமநிலையில் உள்ளதா அல்லது இல்லையா என்று கூறும் பண்பை வெப்பநிலை என வரையறுக்கலாம்.
7.
ரெட்ரோவைரஸிற்கு எதிரான மருந்துகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்ற சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.
8.
உடலின் கொழுப்பு அளவு மற்றும் நலம் சார்ந்த ஆபத்தினை உடற்பருமக் குறியீட்டைக் கொண்டு அளவிடலாம்.
9.
| நேர்மின் அயனி | எதிர்மின் அயனி | |
|---|---|---|
| 1. | ஓர் நடுநிலை அணு ஒரு எலக்ட்ரானை இழப்பதால் உருவாகிறது. | ஓர் நடுநிலை அணு ஒரு எலக்ட்ரானை ஏற்பதால் உருவாகிறது. |
| 2. | நேர்மின் அயனி அதன் தொடர்புடைய அணுவை விட உருவளவில் சிறியதாக இருக்கும். | எதிர்மின் அயனி அதன் தொடர்புடைய அணுவை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். |
10.
i) இனச்செல் (அ) கருநிலை செல் ஜீன் சிகிச்சை
ii) உடல்செல் ஜீன் சிகிச்சை.
11.
தூய வரிசை என்பது தனி உயிரியில் இருந்து தற்கலப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி ஆகும். இது தனித்தாவரத் தேர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
12.
அ) பெறப்பட்ட பண்பு
பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத பண்புகள் பெறப்பட்ட பண்புகள் எனப்படும்.
ஆ) மரபுப் பண்பு
பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடிய பண்புகள் மரபுப் பண்பு எனப்படும்.
13.
சூரிய நீர் சூடேற்றி நீரினை சூரிய ஒளியினால் சூடேற்ற உதவுகிறது. இவை மின்சாரத்தை தயாரிப்பதில்லை. நேரடியாகவே நீரை சூடேற்றி விடுகிறது.
14.
ஒவ்வொரு கிராமப் புறத்திலும் சிறிய அளவிலான மழைநீரை சேமிக்கும் விதமாக தோண்டப்பட்டுள்ள சிறிய நீர் சேமிக்கும் இடம் ஊரணிகள் எனப்படும்.
15.
(i) 1948 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறையால் இந்திய அணுசக்தி ஆணையம்(AEC) மும்பையில் அமைக்கப்பட்டது.
(ii) இதன் தலைவராக டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா முதன்முதலில் பொறுப்பு வகித்துள்ளார், அணுசக்தி துறையில் நடைபெறும் அனைத்து ஆய்வுகளும் இந்த நிறுவனத்தின் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இது தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என அழைக்கப்படுகிறது.
(iii) இந்திய மின் உற்பத்தியில், அணு சக்தியானது ஐந்தாவது வளமாக உள்ளது. தாராப்பூர் அணுமின் நிலையம் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் இந்தியாவின் முதல் அணுமின் நிலையமாகும். மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு அணுமின் நிலையங்கள் என ஏழு அணுமின் நிலையங்கள் உள்ளன.
(iv) தமிழ்நாட்டில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய இரண்டு இடங்களில் அணுமின்நிலையங்கள் அமைந்துள்ளன. ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை அப்சரா ஆகும். இந்தியாவில் தற்போது 22 அணுக்கரு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.
மற்ற சில செயல்பாடும் அணுக்கரு உலைகள் :
1. சைரஸ்
2. துருவா
3. பூர்ணிமா
16.
லாங்கர்ஹான் திட்டுகள் ஆல்ஃபா செல்கள் மற்றும் பீட்டா செல்கள் என்னும் இருவகை செல்களைக் கொண்டுள்ளன. ஆல்ஃபா செல்கள், குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
17.
கருவுறுதல் நடைபெறாமலேயே விதையில்லா கனிகள் உருவாதல் கருவுறாக் கனியாதல் எனப்படும். எ.கா. திராட்சை
18.
(i) இது கதிரியக்கத்தின் தொன்மையான அலகாக்கும். ஒரு கதிரியக்க பொருளிலிருந்து ஒரு வினாடியில் 3.7 x 1010 என்ற அளவில் சிதைவுகள் ஏற்பட்டால், அது ஒரு கியூரி எனப்படும். இது தோராயமாக 1 கிராம் ரேடியம் 226 ஏற்படுத்தும் சிதைவிற்குச் சமமாகும்.
(ii) 1 கியூரி = ஒரு வினாடி நேரத்தில் 3.7 x 1010 சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு.
19.
குடல்வால், கண்ணிமைப் படலம், வால் முள்ளெலும்பு, தண்டுவட எலும்பின் வால் பகுதி போன்றவை எச்ச உறுப்புகளாகும்.
20.
சுயபடைப்பு கோட்பாட்டின்படி உயிரற்ற பொருட்களிருந்து தன்னிச்சையாக உயிர் தோன்றியது. மீன்கள் சேற்றில் இருந்தும், தவளைகள் ஈரமான மண்ணில் இருந்தும், பூச்சிகள் அழுகும் பொருட்களில் இருந்தும் தோன்றியதாக நம்பப்பட்டது.
21.
ஒரு மோல் என்பது C -12 ஐசோடோப்பின் 12 கி நிறையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படை துகள்களை கொண்ட பொருளின் அளவாகும்.
22.
ஒரு மூலக்கூறானது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் உருவாக்கப்பட்டால், அது வேற்றணு மூலக்கூறு என அழைக்கப்படும்.
உதாரணம்: HCl , H2O
23.
ஒரு சிற்றினத்தின் கேரியோடைப் வரைபட விளக்கம் இடியோகிராம் எனப்படும்.
24.
(i) எத்தனால், எத்தனாயிக் அமிலத்துடன் அடர் H2SO4 முன்னிலையில் எத்தில் எத்தனோயேட் என்ற எஸ்டரைத் தருகிறது.
(ii) இது பழச்சாறின் மணமுடையது.
(iii) இவ்வினையே எஸ்டராக்குதல் என அழைக்கிறோம்.
25.
(i) ஓய்வு நிலையில் உள்ளபோது உள்ள நமது உண்மை எடை (actual weight), மேலே அல்லது நாம் நகரும் போது அதே மதிப்பில் இருக்காது.
(ii) புவிஈர்ப்பு விசை மட்டுமின்றி, இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் மாற்றம் ஏற்படும்.
(iii) இந்த எடை தோற்ற எடை என்றழைக்கப்படுகிறது.
26.
(i) நரம்புணர்வு கடத்திகள் என்பவை ஒரு நரம்புச் செல்லின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நரம்புச் செல்லின் டெண்ட்ரைட் முனைக்கு அல்லது எந்த இலக்கு உறுப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளதோ அந்த குறிப்பிட்ட இலக்கு உறுப்புக்கு நரம்புத் தூண்டல்களை கடத்தும் வேதிப்பொருட்கள் ஆகும்.
(iii) அசிட்டைல்கோலின் எனப்படும் நரம்பணுக்கள் வெளியிடும் வேதிப்பொருள் ஒரு குறிப்பிடத் தகுந்த நரம்புணர்வு கடத்தி ஆகும்.
27.
கார்பன் அணுக்களோடு ஆக்சிஜன், நைட்ரஜன், சல்பர் போன்ற மற்ற சில அணுக்களும் சங்கிலித்தொடரில் இணைந்திருந்தால் அவை பல் இன வளையச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா:
28.
(i) உணர்ச்சி அல்லது உட்செல் நரம்பு செல்கள்.
(ii) இயக்க அல்லது வெளிச்செல் நரம்பு செல்கள்.
(iii) சங்கம நரம்பு செல்கள்
29.
இரட்டை (Couple): இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை 'இரட்டை விசைகள்' அல்லது 'இரட்டை' என்றழைக்கப்படும். அவை ஒரே நேர்க்கோட்டில் செயல்படாது.
30.
i) சூற்பையைத் தூண்டி, கனியை உருவாக்குகிறது.
ii) புதிய பண்புகள் தோன்றக் காரணமாகிறது.
31.
i) ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் முட்டை உருவாதல் என்பது இனச்செல் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
ii) இது விந்து செல் உருவாக்கம் (விந்து உருவாதல்) மற்றும் அண்டசெல் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
iii) இதன் மூலம் ஒற்றைமய செல்களை உடைய இனச்செல்கள் உருவாக்கப்படுகின்றன.
32.
(i) கேட்குநர் நிலையான ஒலி மூலத்தை நோக்கியோ அல்லது விலகியோ செல்லுதல்.
(ii) ஒலி மூலமானது நிலையான கேட்குநரை நோக்கியோ அல்லது விலகியோ செல்லுதல்.
(iii) ஒலி மூலமும், கேட்குநரும் ஒன்றுக்கொன்று நோக்கியோ அல்லது விலகியோ செல்லுதல்.
(iv) ஒலி மூலமும், கேட்குநரும் ஓய்வு நிலையில் இருக்கும்போது ஒலி பரவும் ஊடகம் நகருதல்.
33.
| வ.எண் | ஒலி அலைகள் | ஒளி அலைகள் |
|---|---|---|
| 1. | பரவுவதற்கு ஊடகம் தேவை | பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை |
| 2. | நெட்டலைகள் | குறுக்கலைகள் |
| 3. | அலை நீளம் 1.65 செ.மீ. முதல் 1.65 மீ வரை | அலை நீளம் 4 x 10-7 மீ முதல் 7 x 10-7 மீ |
| 4. | ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்(NTP) | ஒலி அலைகள் 3 x 108 மீவி-1 திசைவேகத்தில் பரவும் |
34.
| சேர்க்கை வினைகள் | சிதைவு வினைகள் |
|---|---|
| ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைப்படுபொருட்கள் சேர்ந்து ஒற்றை விளை பொருளைத் தரும். | ஒற்றை வினைப்படு பொருள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளை பொருளாக சிதைக்கப்படுகிறது. |
| ஆற்றல் உமிழப்படுகிறது. | ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. |
| வினைபடு பொருள்கள் தனிமங்களாகவோ, சேர்மங்களாகவோ இருக்கலாம். | வினைபடு பொருள் ஒற்றை சேர்மமாகும். |
35.
(i) ஒரு வேதிவினையில் ஈடுபடும் மூலக்கூறுகளின் அணுக்கள் அல்லது தனிமங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய மூலக்கூறுகள் உருவாகின்றன.
(ii) அணுக்களுக்கிடையேயான பிணைப்புகள் உடைந்து புதிய வேதிப்பிணைப்புகள் உருவாகின்றன.
(iii) பிணைப்பு உடையும் பொழுது ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. அதேபோன்று பிணைப்பு உருவாகும் போது ஆற்றல் வெளிப்படுகிறது(உமிழப்படுகிறது).
36.
திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது வாயுவின் கரைத்திறன் குறைகிறது. ஆகையால் ஆக்சிஜன் குமிழிகளாக வெளியேறுகிறது.
37.
கரைசலின் செறிவு
= \(\frac { 20 }{ 40 } \times 100=50%\)
38.
சில விலங்கினங்களில் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்து இதயத்தினுள் ஒரு முறை மட்டுமே சென்று வரும். இத்தகைய சுற்றோட்டம் ஒற்றை இரத்த ஓட்டம் எனப்படும். எ.கா. மீன்கள், இரு வாழ்வியல் மற்றும் சில ஊர்வன.
39.
ஓர் இதயத் துடிப்பு துவங்குவதற்கும் முடிவடைவதற்கு இடைப்பட்ட வரிசையான சிக்கலான நிகழ்வுகள் இதய சுழற்சி (கார்டியாக் சுழற்சி) எனப்படும்.
40.
(i) ஒளிச்சேர்க்கை
(ii) தரசம் சேமித்தல்
(iii) கொழுப்பு அமில உற்பத்தி
(iv) லிப்பிடுகள் சேமிப்பு
(v) பசுங்கணிகம் உருவாக்கம்.
41.
(i) அட்டையில் அகக் கருவுறுதல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கக்கூன் முட்டைக் கூடு எனப்படும். இது 9, 10 மற்றும் 11 வது கண்டங்களைச் சுற்றி உருவாகிறது.
(ii) கரு வளர்ச்சி நேரடியானது. முட்டைக் கூட்டினுள் 1 முதல் 24 கருக்கள் வளர்கின்றன.
(iii) முதிர்ந்த அட்டையைப் போன்ற தோற்றம் கொண்ட இளம் அட்டைகள் வெளிவருகின்றன.
42.
(i) பாலூட்டிகளுக்கு பாலினைச் சுரக்கும் பால் சுரப்பி காணப்படுகிறது.
(ii) உடல் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். ஏனெனில் இவை வெப்ப இரத்தப் பிராணிகள்.
43.
ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது.
(i) Script Area : இங்கு நிரல் (Script) கட்டமைக்கப்படுகிறது.
(ii) Block Menu : இங்கிருந்து பிளாக்கு வகைமையைத் (blocks category-Programming Statements) தேர்வு செய்ய முடியும்.
(iii) Block Palette : இங்கு பிளாக்குகளை (block) தேர்வு செய்யலாம்.
44.
நோட்பேடு : கணினியில் நம் குறிப்புகளை சேகரிக்கவும், திருத்தம் செய்யவும் பயன்படுவது நோட்பேடு செயலி.
பெயிண்ட் : படங்கள் வரைவதற்கும் திருத்தம் செய்வதற்கும் நாம் பயன்படுத்துவது பெயிண்ட் செயலி.
45.
46.
"கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை" ஆகும்.
கரைப்பொருள் + கரைப்பான் → கரைசல்
குறைந்த அளவு அதிக அளவு
எ.கா: கடல் நீர்
47.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் "அணுக்கட்டு எண்" ஆகும்.

எடுத்துக்காட்டு: H2 மூலக்கூறுகளின் அணுக்கட்டு எண்-2.
48.

இதனை 'திட்ட அணு எடை' எனவும் அழைக்கலாம்.
49.
A + O2 \(\xrightarrow{800^{\circ} \mathrm{C}}\) B
வெள்ளியின் வெண்மை நிற உலோகம்
உலோகக் கலவை விமானத்தின் பாகம் செய்ய பயன்படும்
i) A என்பது அலுமினியம் (Al)
ii) 4 Al + 3 O2 \(\xrightarrow{800^{\circ} \mathrm{C}}\) 2 Al2 O3
(B \(\Rightarrow\) அலுமினியம் ஆக்சைடு)
| A | அலுமினியம் (Al) |
| B | அலுமினியம் ஆக்சைடு (Al2O3) |
50.

i) A \(\Rightarrow\) காப்பர் (Cu)
ii) 2 Cu + O2 \(\xrightarrow{<1370 \mathrm{~K}}\) 2 CuO
B \(\Rightarrow\) குப்ரிக் ஆக்சைடு
iii) 4 Cu + O2 \(\overrightarrow{>1370K}\) 2Cu2O
C \(\Rightarrow\) குப்ரஸ் ஆக்சைடு
| A | காப்பர் (Cu) |
| B | குப்ரிக் ஆக்சைடு CuO |
| C | குப்ரஸ் ஆக்சைடு Cu2O |
51.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து (CO2) கிடைக்கிறது.
52.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன. இவற்றில் இருவகைகள் உள்ளன.
1. ஒருங்கமைந்தவை
2. இருபக்க ஒருங்கமைந்தவை
53.
| சோப்பு | டிடர்ஜென்ட் |
|---|---|
| இது நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புகள். | இது சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்புகள். |
| சோப்பின் அயனி பகுதி COO-Na+ | டிடர்ஜெண்டின் அயனி பகுதி SO-3 Na+ |
| விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பு மற்றும் தாவரங்களிடம் இருந்து கிடைக்கும் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. | பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோகார்பனிலிருந்து இவை தயாரிக்கப்படுகிறது. |
| உயிரியல் சிதைவு அடையும் தன்மை பெற்றது. | உயிரியல் சிதைவு அடையும் தன்மை அற்றது. |
| கடின நீரில் பயன்படுத்த முடியாது. | கடின நீரிலும் சிறப்பாக சலவை செய்யலாம் |
54.
எத்தனாலை காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் (அ) அமிலம் கலந்த பொட்டாசியம்-டை-குரோமேட் கரைசலை கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்து எத்தனாயிக் அமிலத்தை தயாரிக்கலாம்.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\overset { kMn{ O }_{ 4 }/OH^-}{ \underset { 2[o] }{ \longrightarrow } } { CH }_{ 3 }COOH+{ H }_{ 2 }O\)
எத்தனால் எத்தனாயிக் அமிலம்
55.
நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்றவற்றால் மீயொலியை உணர முடியும்.
56.
அலைநீளம் λ = 0.20 மீ
ஒலியின் வேகம் v = 331 மீவி-1
அதிர்வெண் f = ?
\(n=\cfrac { v }{ \lambda } =\cfrac { 331 }{ 0.2 }\) = 1655 Hz
57.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
58.
1. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)
2. ஒரு கூலூம் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்கு வெட்டுப்பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

59.
மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
60.
61.
ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு K−1.
62.
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P α \(\frac{1}{V}\)
63.
கணையத்தில் உள்ள β செல்களின் சிதைவினால் இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது.
64.
புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
65.
வெப்பம் அதிகரிக்கும் பொழுது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து அதிக வினைபடு பொருள்களை அயனிகளாக மாற்றி வினையின் வேகத்தை அதிகரிக்கிறது.
66.
KCl(aq) + AgNO3(aq) ⟶ AgCl(s) ↓ + KNO3(aq)
AgCl வெள்ளை வீழ்படிவாக நீர்க்கரைசலான KNO3 - ல் கிடைக்கிறது.
67.
விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது. விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையாமல், கண்ணின் அண்மைப்புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாகின்றன.
68.
இரட்டைகளின் தொகுபயன் விசை மதிப்பு சுழியாதலால் இவை நேர்க்கோட்டு இயக்கத்தினை ஏற்படுத்தாது. ஆனால் சுழல் விளைவினை ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்புத்திறன் என்கிறோம்.
இரட்டையின் திருப்புத்திறன் (M) = விசையின் எண் மதிப்பு (F) \(\times\) இணைவிசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு (S)
M = F \(\times\) S
69.
விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து
1. ஒத்த இணைவிசைகள்
2. மாறுபட்ட இணைவிசைகள் என்று வகைப்படுத்தலாம்.
70.
காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (\(\mu\)) எனப்படுகிறது.
\(\mu=\frac{c}{v}\)
71.
ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்கள் என்பர். ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும். ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
72.
ஸ்கிரிப்ட் எடிட்டர் நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.
ஸ்கிராச்சு மென்பொருளைத் திறந்தவுடன் மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சாளரம் புலப்படும். இடப்புற மேல் பகுதியில் ஸ்டேஜ் பிரிவும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் ஸ்பிரைட் பட்டியல் பிரிவும் வலப்புறத்தில் ஸ்கிரிப்ட் எடிட்டர் பிரிவும் இருக்கும்.
ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
i) Script Area
ii) Block Menu
iii) Block Palette
73.
அமெரிக்கா - சிகாகோவில், 1942 -ல் கட்டப்பட்டது.
இந்தியாவில் - மும்பையில் 1956-ல் கட்டப்பட்டது.
74.
யுரேனியம்
75.
கரோனரி தமனி
76.
ஹீமோகுளோபின் என்ற நிறமி இருப்பதால்.
77.
அட்டைகள் தாடைகளின் மூலம் விருந்தோம்பியின் தோலில் மூன்று ஆர அல்லது Y வடிவ காயத்தை ஏற்படுத்தி ஓம்புயிரியின் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சுகிறது.
78.
முயலின் பல் வாய்ப்பாடு: \(\left( 1\frac { 2 }{ 1 } ,C\frac { 0 }{ 0 } ,PM\frac { 3 }{ 2 } ,M\frac { 3 }{ 3 } \right) \)இது பின்வருமாறு எழுதப்படும் \(\frac {2033}{1023}\)
79.
1. புதைபடிவ எரிபொருள்கள் தோன்ற பல மில்லியன் ஆண்டுகள் ஆவதால் நாம் பாதுகாக்க வேண்டும்.
2. இவை புதுப்பிக்க இயலாத ஆற்றல்.
3. உற்பத்தியாவதற்கு மிக நீண்ட காலம் ஆகும்.
4. இவ்வினை மிக மெதுவாக நடைபெறுகிறது.
80.
வன உயிரிகள் மறைய தொடங்கும் (அல்லது) நகரங்களை நோக்கி நகர தொடங்கும்.
81.
| வ. எண் | மைலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழை | மைலின் உறையற்ற நரம்பு நாரிழை |
|---|---|---|
| 1. | இதற்கு மைலின் உறையுடைய அல்லது ஆக்ஸான் நியூரான் என்று பெயர். | இதற்கு மைலின் உறையற்ற அல்லது சாம்பல் நிற ஆக்ஸான் என்று பெயர். |
| 2. | இது மூளையின் வெண்மை நிறப்பகுதியில் காணப்படும். | இது மூளையின் சாம்பல் நிற பகுதியில் காணப்படும். |
| நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். | நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டு இருக்காது. |
82.
| எண் | இச்சைச் செயல் | அனிச்சை செயல் |
|---|---|---|
| 1. | செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. | செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்படாதது. |
| 2. | இச்சைச் செயல்கள் மூளைக்கு கட்டுப்பட்டது. | அனிச்சை செயல் தண்டுவடத்திற்கு கட்டுப்பட்டது. |
| 3 | இது தசை இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. | அனிச்சைச் செயல் தசை இயக்கம் அல்லது சில சுரப்பிகளின் சுரப்பிக்கு காரணமாக உள்ளது. |
83.
மைட்டோகாண்ட்ரியாவின் சவ்வுகள்:
(i) உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்ட ஒரு நுண்ணுறுப்பாகும். ஒவ்வொரு சவ்வும் 60 - 70 \(\mathring { A }\) தடிமனுடையது. வெளிச்சவ்வானது வழவழப்பானது. அனைத்து மூலக்கூறுகளையும் உட்செல்ல அனுமதிக்கும். இதில் நொதிகள், புரதம் மற்றும் லிப்பிடுகள் காணப்படுகின்றன இச்சவ்வில் உள்ள போரின் மூலக்கூறுகள் (புரத மூலக்கூறுகள்) வெளிமூலக்கூறுகள் செல்வதற்கு கால்வாயாக செயல்படுகிறது.
(ii) உட்புறச்சவ்வு பல மடிப்புகளுடன் காணப்படுகிறது. இவை ஒரு தேர்ந்தெடுத்துக் கடத்தும் சவ்வாக, குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே செல்ல அனுமதிக்கும். இதில் கடத்துப் புரதங்களும் நொதிகளும் உள்ளன. இதில் 80% புரதம் மற்றும் லிப்பிடுகள் உள்ளன.
(iii) கிரிஸ்டே: உட்புறச்சவ்வில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் கிரிஸ்டே எனப்படும். இந்த கிரிஸ்டாவானது பரப்பளவை அதிகரிக்கிறது மற்றும் பல நொதிகளைப் பெற்றுள்ளன.
(iv) ஆக்ஸிசோம் அல்லது F1 துகள்கள்: கிறிஸ்டாவில் பல நுண்ணிய டென்னிஸ் ராக்கெட் வடிவ துகள்கள் காணப்படுகின்றன. இவை ஆக்ஸிசோம்கள் (F1 துகள்கள்) என அழைக்கப்படுகின்றன. இவை ATP உற்பத்தியில் பங்கு கொள்கின்றன.
84.
ஊது உலையில் உருக்கிப்பிரித்தல்:
வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8 : 4 : 1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக்கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது. உலையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
அ) கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்):
இந்தப் பகுதியின் வெப்பநிலை 1500°C ஆகும்
வெப்பக்காற்றுடன் தாதுக்கூளம் சேரும் போது, ஆக்சிஜனுடன் எரிந்து CO2 வாக மாறுகிறது.
C + O2 \(\overset { 1500^{ ° }C }{ \underset { \Delta}{ \longrightarrow } } \) CO2 + வெப்ப ஆற்றல்
இவ்வினையிலிருந்து வெப்ப ஆற்றல் வெளியாவதால் வெப்ப உமிழ்வினை எனப்படும்.
ஆ) நடுப்பகுதி அல்லது உருக்கு மண்டலம்:
இப்பகுதி 1000oC வெப்பநிலையில் உள்ளது. இங்கு CO2 ஆனது CO ஆக ஒடுக்கமடைகிறது.
CO2 + C \(\overset { 1000^{ ° }C }{ \underset { \Delta}{ \longrightarrow } } \)2 CO - வெப்ப ஆற்றல்
சுண்ணாம்புக்கல் சிதைந்து, கால்சியம் ஆக்சைடையும், CO2வையும் தரும்.
CaCO3 \(\overset { 1000^{ ° }C }{ \underset { \Delta}{ \longrightarrow } } \) CaO + CO2 – வெப்ப ஆற்றல்
மேற்கண்ட இருவினைகளில், வெப்பம் உட்கவரப்படுவதால் வெப்ப கொள்வினைகள் ஆகும். கால்சியம் ஆக்சைடு மணலுடன் சேர்ந்து கால்சியம் சிலிகேட் எனும் கசடாகிறது.
CaO + SiO2 \(\rightarrow\) CaSiO3
இ) மேற்பகுதி (ஒடுக்கும் மண்டலம்):
இப்பகுதியில் 400oC வெப்பநிலையில் ஃபெரிக் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மூலம் இரும்பாக ஒடுக்கம் அடைகிறது.
Fe2O3 + 3CO \(\xrightarrow{400^{\circ} \mathrm{C}}\) 2 Fe + 3 CO2 ↑
கசடை நீக்கிய பிறகு, உருகிய இரும்பானது, உலையின் அடியில் சேகரிக்கப்படுகிறது. இவ்விரும்பு மீண்டும் உருக்கப்பட்டு விதவித அச்சுக்களில் வார்க்கப்படுவதால், இது வார்ப்பிரும்பு எனப்படும்.

10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards