10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/05/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Standard Science Public Model Question Paper June 2020)
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
அதிக பளுவாதல் என்றால் என்ன?
2.
வெப்ப ஆற்றல் மாற்றத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை?
3.
பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.
(i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
(ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
(iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?
4.
அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?
5.
Al2(SO4)3 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).
6.
எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படாத நிலைக்கு உட்படுத்தும். ஏன்?
7.
8.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
9.
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
10.
'g' மற்றும் 'G' இவற்றிற்கிடையே உள்ள தொடர்பினைத் தருவி.
11.
12.
சாறேற்றத்தினை படத்துடன் விளக்குக.
13.
கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
அ) NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை
ஈ. எத்தனாலின் எரிதல் வினை.
14.
15.
வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?
16.
மைலின் உறை உள்ள மற்றும் மைலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.
17.
அண்மைப் புள்ளி என்பது யாது?
18.
புற்று நோய்க்கான தடைக்காப்பு சிகிச்சை முறையை கூறு.
19.
தாஜ்மகால் எவ்வாறு அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது?
20.
எத்தனாயிக் அமிலத்தின் பயன்களை எழுதுக.
21.
ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.
22.
DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.
23.
அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கணக்கிடுக.
24.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
25.
வெப்பநிலையை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
26.
காப்பரின் முதன்மையான தாது________
காப்பர் பைரைட்
காப்பர் கிளான்ஸ்
குப்ரைட்
ரூபி காப்பர்
27.
___________________ கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது
ஆக்சின்
அபிசிசிக் அமிலம்
எத்திலின்
சைட்டோகைனின்
28.
ஆக்ஸானின் பிளாஸ்மா சவ்வு _________________ எனப்படும்.
ஆக்ஸோலெம்மா
ஆக்சோபிளாசம்
மையலின் உறை
ஸ்வான் செல்கள்
29.
25o C ல் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு
1.00 x 1014
1.00 x 10-14
1.00 x 104
1.00 x 10-4
30.
பின்வருவனவற்றுள் நீர்மமற்ற கரைசல் எது?
நீரில் உள்ள சர்க்கரை
நீரில் உள்ள பொதுவான உப்பு
காப்பர் சல்பைடில் உள்ள சல்பர்
இவற்றுள் எதுவுமில்லை
31.
குறிப்புகளை சேகரித்து, தொகுத்து, அச்செடுக்க பயன்படும் செயலி _________ ஆகும்.
பெயிண்டு
ஸ்கிராச்சு
நோட்பேடு
லினக்ஸ்
32.
உயிரித்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
வாழும் உயிரினங்கள்
வைட்டமின்கள்
(அ) மற்றும் (ஆ)
33.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவிலென்சானது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணைக்கற்றைகளை உருவாக்கும்
நிறக் கற்றைகளை உருவாக்கும்.
34.
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
35.
TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
தாது உப்பு
வைட்டமின்
கொழுப்பு அமிலம்
கார்போஹைட்ரேட்
36.
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
மின்தடை எண்
மின் கடத்து திறன்
மின் ஆற்றல்
மின் திறன்
37.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
X அல்லது –X
Y அல்லது –Y
(அ) மற்றும் (ஆ)
(அ) அல்லது (ஆ)
38.
வெண்ட்ரிக்கிளிலிருந்து வெளிச் செல்லும் முக்கியத் தமனிகளில் காணப்படும் வால்வு எது?
1.
(i) அதிக பளுவாதல் அல்லது குறுக்குத் தடச் சுற்று ஏற்பட்டால் மின் உருகு இழை அல்லது சிறிய மின்சுற்று உடைப்பி மின்சுற்றை முறித்துவிடும்.
(ii) ஒரே மின் மூலத்தில் அதிக அளவிலான மின்சுற்றுக்களை தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அதிக பளு ஏற்படுகிறது.
(iii) இது சுற்றின் வழியாக அதிகப்படியான மின்னோட்டம் பாய்வதற்கு வழிவகை செய்கிறது.
(iv) ஒரு மின் கம்பியில் அதன் எல்லையை தாண்டி அதிகப்படியான மின்னோட்டம் பாயும் போது மின் கம்பி சூடாகி தீ ஏற்படுகிறது. இதுவே, அதிக பளுவாதல் எனப்படும்.
2.
(i) வெப்பம் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளுக்குப் பரவும்.
(ii) ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ பொருளின் நிறையில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை.
(iii) எந்த ஒரு வெப்ப பரிமாற்றத்திலும் குளிர்ச்சியான பொருளினால் ஏற்கப்பட்ட வெப்பம், சூடான பொருளினால் இழக்கப்பட்ட வெப்பத்திற்குச் சமம்.
ஏற்கப்பட்ட வெப்பம் =இழக்கப்பட்ட வெப்பம்.
3.
(i) B மற்றும் D அல்கைன்கள் தொகுதியைச் சேர்ந்தவை.
(ii) E மற்றும் F ஹைட்ரோ கார்பன்கள் அல்ல.
4.
(i) அட்டையின் தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசம், பரவல் முறையில் நடைபெறுகிறது.
(ii) நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தால் பரவுகிறது.
(iii) உப்பைக் கொட்டுவதினால் உப்பு, நீரை உறிஞ்சிவிடுகிறது. மேலும் வாயு பரிமாற்றம் தடையாகிறது. இதனால், அட்டையின் உடல் உலர்ந்து அது இறந்து விடுகின்றது.
5.
Al2(SO4)3 - ன் மூலக்கூறு நிறை = Al x 2 + 3 [S × 1 + O x 4]
= 27 × 2 + 3 [ 32 × 1 + 16 ×4]
= 54 + 3 [32 + 64]
= 54 + 3 [96] = 342 கி
ஆக்சிஜனின் நிறை = 12 ஆக்சிஜன்
= 12 × O
= 12 × 16 = 192

Al2(SO4)3 ல் ஆக்சிஜன் நிறை சதவீதம்\(=\frac { 192 }{ 342 } \times 100=56.14 \%\)
6.
நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம்.
அலுமினியத்தின் மேல் பகுதியில் ஆக்சைடு படலம் உருவாவதால் அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.
7.
8.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
9.

1. Script tab-ல் Events option ஐ தேர்வு செய்க.


3. Script tab-ல் looks option ஐ தேர்வு செய்க. Say " " என்ற block ஐ Script area விற்குள் இழுத்து வைக்கவும்

4. Say tab-னுள் “Hello” என்ற வார்த்தையை தட்டச்சு செய்யவும்.

5. Script tab -> Sounds option ஐ தேர்வு செய்க. “Play sound” block ஐ இழுத்து Script Area வினுள் விடவும். Audio file லிருந்து “Hello” sound ஐ தேர்வு செய்யவும்.

6. File menu -> Save தேர்வு செய்க. இப்போது உங்கள் Project சேமிக்கப்படும்.
7. நிரலை இயக்க வலது மேல் ஓரத்தில் உள்ள பச்சை நிறக் கொடியை click செய்யவும்.


10.
m என்ற நிறையுள்ள பொருள் ஒன்று ஓய்வு நிலையில் புவி பரப்பின் மீது உள்ளது. பொருளின் மீது செயல்படும் இரு விசைகளை கீழ் கண்டவாறு கணக்கிடலாம்.
M என்பது புவியின் நிறையாக கொள்வோம். புவியின் நிறை புவி மையத்தில் குவிந்திருப்பதாக எடுத்துக் கொள்வோம்.
புவியின் ஆரம் R =6378 கி.மீ (தோராயமாக =6400 கி.மீ) ஆகும்.
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிப்படி, புவிக்கும் பொருளுக்கும் உள்ள ஈர்ப்பு விசை
F =\(\frac { GMm }{ { R }_{ 2 } } \) ........(1)
இதே போல் பொருள் மீது செயல்படும் விசை மதிப்பை நியூட்டனின் இரண்டாம் விதிப்படி கணக்கிடலாம். இவ்விதிப்படி விசையானது பொருளின் நிறைக்கும், முடுக்கத்திற்கும் உள்ள பெருக்கற்பலனாகும். இங்கு பொருளின் முடுக்கம், புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு உள்ள பெருக்கற்பலனாகும். இங்கு பொருளின் முடுக்கம், புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், (a=g)
F =ma =mg (எடை) ........(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) சமன் செய்ய
இவற்றை சமன் செய்ய mg =\(\frac { GMm }{ { R }_{ 2 } } \) ........(3)
எனவே புவி ஈர்ப்பு முடுக்கம் g =\(\frac { GM }{ { R }_{ 2 } } \) ........(4)
இச்சமன்பாடு 'g' மற்றும் 'G' இவற்றிற்கிடையே உள்ள தொடர்பினை அளிக்கிறது.
11.
12.
வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல் நோக்கியே கடத்துதல் மூலம் தாவரங்களின் பிற பகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும். சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன. சாறேற்றம் பின்வரும்படி நிலைகளில் நடைபெறுகிறது.
(i) வேர் அழுத்தம்:
மண்ணில் உள்ள நீர் வேர்த்தூவிகளுக்கு சவ்வூடு பரவலின் காரணமாக நீரானது வேரிலிருந்து மேல் நோக்கி தண்டின் அடிப்பகுதிக்கு செல்கிறது.
(ii) நுண்துளை ஈர்ப்பு விசை (தந்துகிக்குழாய் விசை)
நீர் அல்லது எந்த ஒரு திரவமும் நுண்துளைக் குழாய்களில் இயற்பியல் விசையின் காரணமாக மேலேறுகிறது. இதற்கு நுண்துளை ஈர்ப்பு விசை என்று பெயர். அதே போல் தண்டிலும் நீரானது குறிப்பிட்ட உயரம் காரணமாக கடத்தப்படுகிறது.
(iii) நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு விசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக நீரானது சைலத்தில் ஒரு தொடர்ச்சியான நீர்த்தம்பமாக உள்ளது.
(அ) கூட்டிணைவு: நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்.
(ஆ) ஒட்டிணைவு: பல்வேறு வகையான மூலக்கூறுகளிடையே காணப்படும் ஈர்ப்பு விசை ஒட்டிணைவு எனப்படும். நீர் மூலக்கூறுகள் சைலக்குழாயின் சுவருடன் ஒட்டிணைவின் காரணமாக பிணைந்துள்ளன.
(iv) நீராவிப்போக்கின் இழுவிசை:
1. இலைத்துளையின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கின் காரணமாக ஒரு வெற்றிடம் உண்டாகும். இதனால் ஒரு இழுவிசை (suction) உண்டாக்கப்படுகிறது. இந்த விசையே நீராவிப் போக்கின் இழுவிசை எனப்படும்.
2. நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக சைலத்தினுள் உள்ள நீர்த் தம்பானது மிக உயர்ந்த தாவரங்களிலும் மேலேறுகிறது.
13.
அ) NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை.
CH3COOH + NaOH → CH3COONa + H2O
(எத்தனாயிக் அமிலம்) (சோடியம் எத்தனோயேட்)
ஆ) எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை.
CH3COOH + NaHCO3 → CH3COONa + CO2 + H2O
(எத்தனாயிக் அமிலம்) (சோடியம் எத்தனோயேட்)
இ) எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை.
\(\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{OH}+\frac{\mathrm{K}_{2} \mathrm{Cr}_{2} \mathrm{O}_{7} / \mathrm{H}^{+}}{2[\mathrm{O}]} \mathrm{CH}_{3} \mathrm{COOH}+\mathrm{H}_{2} \mathrm{O}\)
எத்தனால் (எத்தனாயிக் அமிலம்)
ஈ) எத்தனாலின் எரிதல் வினை.
C2H5OH + 3O2 → 2CO2 + 3H2O
எத்தனால் (கார்பன் டை ஆக்சைடு)
14.
15.
இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்) வாழும் மனிதர்களால் வளர்க்கப்படாத உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும்.
உயிரியப் பல்வகைத் தன்மையை வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக் கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன.
வன உயிரிகளை பாதுகாத்தல்:
1. சிற்றினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்
2. தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்
3. அருகி வரும் சிற்றினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்களை அழியாமல் பாதுகாத்தல்
4. சட்ட விரோத வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றை தடை செய்தல்
5. தேசிய பூங்காக்கள், வன உயிரி சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
6. மேற்கூறிய முறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றுவது ஒரு சவாலான பணியாக உள்ளது. வன உயிரிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும்.
வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன.
16.
| வ. எண் | மைலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழை | மைலின் உறையற்ற நரம்பு நாரிழை |
|---|---|---|
| 1. | இதற்கு மைலின் உறையுடைய அல்லது ஆக்ஸான் நியூரான் என்று பெயர். | இதற்கு மைலின் உறையற்ற அல்லது சாம்பல் நிற ஆக்ஸான் என்று பெயர். |
| 2. | இது மூளையின் வெண்மை நிறப்பகுதியில் காணப்படும். | இது மூளையின் சாம்பல் நிற பகுதியில் காணப்படும். |
| நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். | நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டு இருக்காது. |
17.
(i) மனிதக் கண் ஒன்றினால் தன் கண் எதிரில் உள்ளப் பொருள்களைத் தெளிவாகக் காணக்கூடிய மிகச்சிறியத் தொலைவு' தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு' எனப்படும்.
(ii) இது அண்மைப்புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் கண்ணிற்குப் பொதுவாக 25செ.மீ என்ற அளவில் இருக்கும்.
18.
உயிரியல் தூதுகள் மாற்றிகளான இண்டர் பெரான்கள் தடைக்காப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கின்றன.
19.
மதுரா எண்ணெய் நிறுவனத்திலிருந்து வெளிவரும் சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் தாஜ்மகாலின் வெண்ணிற பளிங்கு கற்களின் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளது.
20.
(i) நெகிழி தயாரிப்பில் பயன்படுகிறது
(ii) துணிகளில் அச்சுப்பதிக்க பயன்படுகிறது.
(iii) ஆய்வக காரணியாக பயன்படுகிறது
(iv) இரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுகிறது.
21.
| வ.எண் | ஒலி அலைகள் | ஒளி அலைகள் |
|---|---|---|
| 1. | பரவுவதற்கு ஊடகம் தேவை | பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை |
| 2. | நெட்டலைகள் | குறுக்கலைகள் |
| 3. | அலை நீளம் 1.65 செ.மீ. முதல் 1.65 மீ வரை | அலை நீளம் 4 x 10-7 மீ முதல் 7 x 10-7 மீ |
| 4. | ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்(NTP) | ஒலி அலைகள் 3 x 108 மீவி-1 திசைவேகத்தில் பரவும் |
22.
1. டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காண பயன்படுகிறது.
2. மேலும் இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
3. இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள், பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
23.
அம்மோனியாவின் (NH3) மூலக்கூறு நிறை = (N x 1) + (H x 3)
= (14 × 1) + (1× 3) = 14 + 3
அம்மோனியாவின் மூலக்கூறு நிறை = 17

\(= \frac { 14 }{ 17 } \times 100 = \frac { 1400 }{ 17 } \)
அம்மோனியாவில் நைட்ரஜனின் சதவீத இயைபு = 82.35%.
24.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
25.
வெப்பம் அதிகரிக்கும் பொழுது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து அதிக வினைபடு பொருள்களை அயனிகளாக மாற்றி வினையின் வேகத்தை அதிகரிக்கிறது.
26.
(a)
காப்பர் பைரைட்
27.
(c)
எத்திலின்
28.
(a)
ஆக்ஸோலெம்மா
29.
(b)
1.00 x 10-14
30.
(c)
காப்பர் சல்பைடில் உள்ள சல்பர்
31.
(c)
நோட்பேடு
32.
(d)
(அ) மற்றும் (ஆ)
33.
(c)
இணைக்கற்றைகளை உருவாக்கும்
34.
(b)
தண்டு
35.
(c)
கொழுப்பு அமிலம்
36.
(c)
மின் ஆற்றல்
37.
(c)
(அ) மற்றும் (ஆ)
38.
செமிலுனார் வால்வு (semilunar valve)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards