10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter Eight Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அலிகார் இயக்கம்
அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர் யார்?
இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
ஈ) பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக
2.
பனிப்போர்
அ) இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவான இரு இராணுவப்பிரிவுகளைப் பற்றிக் கூறுக.
ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை உருவாக்கியவர் யார்? அதை முதலில் பயன்படுத்தியவர் யார்?
இ) நேட்டோவின் உருவாக்கத்திற்கு சோவியத் ரஷ்யாவின் பதிலடி யாது?
ஈ) எவ்வகைப் பட்டியில் வார்சா உடன்படிக்கை கலைக்கப்பட்டது?
3.
தென்கிழக்கு ஆசியாவை ஜப்பான் ஆக்கிரமித்தல்
அ) ஜப்பானிடம் வீழ்ந்த தென்கிழக்கு ஆகிய நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
ஆ) பசிபிக் பகுதியில் நேசநாடுகள் சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களைக் கணக்கிடுக.
இ) மிட்வே போரின் முக்கியத்துவம் யாது?
ஈ) பர்மாவில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்களுக்கு என்ன நேர்ந்தது?
4.
ஹோ சி மின்
அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
5.
ஜெர்மன் பேரரசர்
அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?
1.
அ) அலிகார் இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் இந்திய முஸ்லீம்கள் தங்கள் சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பதாகும்.
ஆ) சர் சையது அகமது கான்
இ) மேலைநாட்டு அறிவியலையும் அரசப் பணிகளையும் ஏற்றுக் கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார். அறிவியல் கழகம் ஒன்றை நிறுவிய அவர் ஆங்கில நூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்
ஈ) அலிகார் முகமதிய ஆங்கிலோ - ஓரியண்டல் கல்லூரி
2.
அ) ஐக்கிய அமெரிக்க நாடு சோவியத் நாடு
ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை முதன்முறையாக ஜார்ஜ் ஆர்வெல் (1945) என்ற ஆங்கில எழுத்தாளர் கையாண்டார்
இ) நேட்டோவின் ஒப்பந்தம் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னும் கலைக்கப்படாமல், முன்னாளைய வார்சா ஒப்பந்த உறுப்பினர் நாடுகள் ஏழையும் உள்ளடக்கியது
ஈ) 1991 - ல் வார்சா ஒப்பந்தத்தை சோவியத்தின் பிளவு முடிவுக்குக் கொண்டு வந்தது
3.
அ) குவாம், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர், மலேயா, டச்சுகிழக்கிந்தியா, (இந்தோனிசியா), பர்மா ஆகிய அனைத்தும் ஜப்பானிடம் வீழ்ந்தன
ஆ) போதுமான அளவிற்கு தயாரிப்பின்மையின் காரணமாக நேசநாடுகள், பசிபிக் பகுதியில் பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. காலனிய ஆட்சியாளர்கள் குறிப்பாக ஆங்கிலேயர் தாங்கள் ஆண்டு வந்த பகுதியிலிருந்து வெளியேறினார். இதனால் ஜப்பானியரின் அட்டூழியங்களை உள்ளூர் மக்களே எதிர்கொள்ள நேர்ந்தது
இ) மிட்வே போரில் அமெரிக்க கடற்படை ஜப்பானின் கப்பற்படையைத் தோற்கடித்தது. இந்நிகழ்வு போரின் போக்கை நேசநாடுகளுக்கு சாதகமாக மாற்றியது
ஈ) பல இந்தியர்கள் பர்மாவிலிருந்து கால்நடையாகவே இந்திய எல்லையை வந்தடைந்தனர். இடையில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டனர். நோயின் காரணமாகவும் களைப்பினாலும் பலர் இறந்துவிட்டனர். அந்நாடுகளிடையே தங்கியவர்கள் ஜப்பானியரிடம் துயருற்றனர்.
4.
அ) ஹோசிமின் 1890 இல் டோங்கிங்கில் பிறந்தவர்
ஆ) பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாம் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம் எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது
இ) ஹோ சி மின் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925 இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ - சீனாவில் வியட்மின் என்று அழைக்கப்பட்டது
5.
அ) ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் இரக்கமற்ற, ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டவர்
ஆ) ஜெர்மனியின் வெற்றிகொண்ட நாட்டுப்பற்று (kultur) என அழைக்கப்படுகிறது
இ) (i) மொராக்கோவில் பிரான்ஸ் நலன்கள் சார்ந்து, இங்கிலாந்து பிரான்சோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ஜெர்மனி எதிர்த்தது.
(ii) எனவே ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.
ஈ) (i) கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த ஜெர்மன் காலனிகளும், நேசநாடுகளால் தாக்கப்பட்டன
(ii) இக்காலனிகள் அனைத்தும் ஜெர்மனியில் இருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் அவைகளால் உடனடியாக எவ்வித உதவியையும் பெற முடியாமல் போனதாலும் நேசநாடுகளிடம் சரணடையும் நிலை ஏற்பட்டது
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards