10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018 பற்றி விவரி.
2.
வரி ஏய்ப்பு என்றால் என்ன? வரி ஏய்ப்பிற்கான காரணங்கள் யாவை?
3.
இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் பற்றி குறிப்பு தருக.
4.
பஞ்ச சீல கொள்கை விரிவாக விவரிக்கவும்.
5.
இந்திய விடுதலைக்கு முன்பிருந்த மொழி போராட்டம் பற்றி விரிவாக கூறவும்.
6.
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி விவரிக்கவும்.
7.
ரௌலட் சத்தியாகிரகம் பற்றி விரிவாக விவரி.
8.
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி எழுதுக.
9.
தமிழ்நாட்டில் உருவாகும் புயல்கள் மற்றும் புயல் மண்டலங்கள் பற்றி விவரிக்கவும்.
10.
காங்கிரஸ் அமைச்சரவைகளும் அவற்றின் பணியும் பற்றி விரிவாக கூறவும்.
11.
முண்டா கிளர்ச்சி பற்றி விரிவாக எழுதவும்.
12.
ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை ஆட்சியைப் பற்றி எழுதுக.
13.
தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?
14.
சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக
15.
பல பரிமாண வறுமைக் குறியீடு – இந்தியா மற்றும் தமிழ்நாடு பற்றி விவாதிக்கவும்.
16.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
17.
அண்டைநாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகளைப் பட்டியலிடுக.
18.
தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.
19.
தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்
20.
தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
21.
தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
22.
இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.
23.
1857ஆம் ஆண்டின் பெரும் புரட்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.
24.
சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.
25.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
26.
இந்தியாவின் பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு பற்றி விரிவாக எழுதவும்.
27.
இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் - விவரிக்க.
28.
பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக
29.
இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் விவரிக்க.
30.
ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்
31.
பின்னடையும் பருவக்காற்று பற்றி ஒரு கட்டுரை எழுதவும்.
32.
தீபகற்ப பீடபூமிகள் பற்றி விவரிக்கவும்.
33.
முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்.
34.
மத்திய அமைச்சர்களின் வகைகள் பற்றி விரிவாக எழுதவும்.
35.
அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்
36.
இந்தியாவில் குடியுரிமை பெறுதல் பற்றி விரிவாக எழுதவும்.
37.
GDP யின் துறை வாரியான பங்களிப்பு (2018-19) பற்றி வரைபடத்தில் விவரி.
38.
நியாயமான வணிக நடைமுறைகளில் பயனாளிகள் யாவர்?
(i) நுகர்வோர்
(ii) வர்த்தகர்
(iii) உற்பத்தியாளர்கள்
39.
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
40.
41.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
42.
ஹுக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.
43.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
44.
தீவிர வேளாண்மை மற்றும் கலப்பு வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
45.
இந்தியாவில் உள்ள உயிர்க்கோள பெட்டகங்கள் மற்றும் அவைகளின் அமைவிடங்களை எழுதுக.
46.
மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.
47.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
48.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
49.
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
50.
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
51.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
52.
ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
53.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
1.
1) ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (OPHI) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமைக் குறியீடு 2018 அறிக்கை, இந்தியாவைப் பற்றி பின்வருமாறு கூர்ந்து உருவாக்கியுள்ளது.
2) இந்தியா தனது வறுமை விகிதத்தை 10 ஆண்டுகளில் 55% லிருந்து 28% ஆக வெகுவாக குறைந்துள்ளது. 2005-2016 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டிற்கு இடையில் 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து விடுவித்தனர்.
3) இந்தியாவில் 2015-2016 ஆம் ஆண்டில் 364 மில்லியன் ஏழை மக்கள் இருந்தனர். இருப்பினும் 2005-2006 ஆம் ஆண்டில் 635 மில்லியனாக இருந்ததை குறைந்துள்ளது.
4) 2015-2016 ஆம் ஆண்டில் பல பரிமாண வறுமை குறியீடு ஏழைகளாக இருந்த 364 மில்லியன் மக்களில், 156 மில்லியன் குழந்தைகளாகும்.
5) இது 47% குறைவு அல்லது பல பரிமாண வறுமையில் வளர்ந்து வளரும் 136 மில்லியன் குறைவான குழந்தைகளை குறிக்கிறது.
6) பழங்குடியினரைச் சேர்ந்த 80% மக்கள் 2005-2006 ஆம் ஆண்டில் ஏழைகள், அவர்களில் 50% பேர் இன்னும் ஏழைகளாக உள்ளனர்.
7) 2015-16 ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக பீகார் இருந்தது.
8) பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு ஏழ்மையான மாநிலங்கள் இன்னும் 196 மில்லியன் பல பரிமாண வறுமை குறியிட்டுள்ள ஏழை மக்களைக் கொண்டுள்ளன.
9) 2006 ஆம் ஆண்டில் கேரளா மிக்க குறைந்த ஏழ்மை வட்டாரங்களில் ஒன்றாக இருந்தது.
10) அது பல பரிமாண வறுமை குறியீட்டை சுமார் 92% குறைத்துள்ளது.
2.
வரி ஏய்ப்பு:
தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
வரி ஏய்ப்பிற்கான காரணங்கள்:
1. கருப்பு பணத்தின் விளைவாக வரி ஏய்ப்பு மத்திய அரசின் வரி திரட்டல் முயற்சிகளைத் தடுக்கிறது.
2. நிதிப் பற்றாக்குறை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதை சிதைக்கிறது மற்றும் பொதுச் செலவுகள் தவிர்க்க முடியாததாக இருந்தால், பற்றாக்குறை நிதியுதவியை நாடும்படி அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது.
3. இது சேமிப்பு மற்றும் முதலீட்டு முறைகளை சிதைப்பதன் மூலமும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கான வளங்களின் கிடைக்கும் தன்மையினாலும், அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில் தலையிடுகிறது.
4. வரி ஏய்ப்பு, வரி அமைப்பின் சமத்துவப் பண்புகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது. நேர்மையான வரி செலுத்துவோர் விகிதாசார வரிச்சுமையை விருப்பத்துடன் சுமக்கிறார்கள்.
5. வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் ஆகியவை நாட்டின் தகுதியற்ற குழுக்களின் கைகளில் பொருளாதார சக்தியை குவிப்பதை ஊக்குவிக்கின்றன.
6. வரி ஏய்ப்பு, வரி நிர்வாகத்தின் நேரத்தினையும், சக்தியினையும் பயன்படுத்தி வரி ஏமாற்றுக்காரர்களின் சிக்கலான கையாளுதல்களைத் தடுக்கிறது.
3.
அண்டை நாட்டுறவைப் பொருத்த வரையில் இந்தியா ஒரு உன்னத நிலையைக் கொண்டுள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒரு பகுதியாக அண்டை நாடுகள் விளங்குகின்றன.
1) மிகப்பரந்த இந்தியாவின் வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
2) வடக்கில் சீனா, நேபாளம், பூடான்
3) கிழக்கில் வங்காளதேசம்
4) தூரக்கிழக்கில் மியான்மர்
5) தென்கிழக்கில் இலங்கை
6) தென்மேற்கில் மாலத்தீவு
போன்ற இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள இரு நாடுகளும் இந்திய பெருங்கடலால் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா இந்த அண்டை நாடுகளுடன் வரலாற்று ரீதியாகவும், சமய, பொருளாதார, இன மற்றும் மொழியின் அடிப்படையிலும் நல்லுறவைப் பேணுகிறது.
4.
சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது.
இந்தியா (பிரதமர் ஜவகர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணைந்திருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்) 1954 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் கையெழுத்தானது.
இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
பஞ்ச சீலம் கொள்கைகள் :
1) ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல்
2) பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
3) பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
4) பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
5) அமைதியாக சேர்ந்திருத்தல்.
இந்த கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபிரிக்க ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
5.
(i) பொதுவாக, மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும். மேலும் இணைந்து ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றும் உணர்வுகளுடன் இணைந்து நிற்பது.
(ii) தமிழ்மொழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தனது மேன்மையை மீட்டுப் பெற்றது.
(iii) மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம், பெரியாரின் மொழிச் சீர்திருத்தம் மற்றும் தமிழிசை இயக்கம் ஆகியவை தமிழுக்கு வலுச்சேர்த்தன.
(iv) திராவிட உணர்வுக்கு இட்டுச்சென்ற தமிழ் மறுமலர்ச்சி நவீனத் தமிழ்மொழியின் வளர்ச்சியிலும் அதன் கலை வடிவங்களுடைய வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பைச் செய்தது.
(v) கோவில்களில் செய்யப்படும் சடங்குகள் தமிழில் செய்யப்படுவதில்லை. இசை நிகழ்ச்சிகளிலும் தமிழ் பாடல்கள் ஓரளவிலான இடத்தையே பெற்றிருந்தன.
(vi) ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசை வரலாற்றை முறையாகக் கற்றாய்ந்து, பழந்தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றனர்.
(vii) 1912 இல் தஞ்சாவூர் "சங்கீத வித்யா மகாஜன சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவே தமிழிசை இயக்கத்தின் கருமூலமானது.
(viii) தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க 1943 இல் முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது.
(ix) தமிழ்நாட்டில் வெவ்வேறு காலப்பகுதிகளில் இந்தி கட்டாயமொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ்மொழிக்கும் பண்பாட்டிற்குமான அச்சுறுத்தலாகவே கருதப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்தார். இது சென்னை மாகாணத்தில் எதிர்ப்பை உருவாக்கியது.
(x) இந்திமொழி அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புக்குள்ளாகும் என மறைமலை அடிகள் சுட்டிக்காட்டினார். தங்கள் போராட்டத்தை பிராமணியத்திற்கும் தமிழின் மீதான சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும் எதிரான கருத்தியல் போராகவே கருத்தினர்.
(xi) போராட்டத்தின் போது பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்களும், பேரணிகளும் உண்ணாவிரதங்களும் அரங்கேறின. பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
6.
1) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சர்வதேச அளவில் முக்கிய பகுதிகளாகவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கக்கூடிய சூழலைப் பெற்றதாகவும் உள்ளது.
2) இம்மண்டலம் பல உற்பத்திப் பொருட்களை அளிப்பதுடன் பல்வேறு சேவைகளையும் அளிக்கிறது.
3) நாங்குநேரி, எண்ணூர், ஓசூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான; டைடல் பூங்கா-2, டைடல் பூங்கா -3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை சென்னையிலும் டைடல் பூங்கா 4 கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன.
7.
(i) 1919 மார்ச் 18இல் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்.
(ii) 1919 ஏப்ரல் 6 இல் 'கறுப்புச் சட்டத்தை' எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.
(iii) தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்து தொடங்கிய ஊர்வலங்கள் மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து பெரும் மக்கள் கூட்டமானது.
(iv) ராஜாஜி, கஸ்தூரி ரங்கர், S.சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். தொழிலாளர்க்கென தனியாக நடத்தப்பட்ட கூட்டமொன்றில், V. கல்யாணசுந்தரம் (திரு.வி.க.) B.P.வாடியா, வ.உ.சி. ஆகியோர் உரையாற்றினர்.
(vi) தொழிலாளர்களும், மாணவர்களும், பெண்களும் பெருவாரியான எண்ணிக்கையில் பங்கேற்றதே இவ்வியக்கத்தின் முக்கிய அம்சமாகும்.
8.
அ. தானியங்கி தொகுப்புகள்:
1. சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது.
2. சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழில்களை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.
3. சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிள்ஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன.
ஆ. வாகன மற்றும் பேருந்து கட்டுமானத் தொழில் தொகுப்புகள்:
1. தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள் சுமை தூக்கும் வாகன முழு பாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்களாகும்.
2. சுமை தூக்கும் வாகனக் கட்டுமானத் துறையில் 150 தொழில்களில் 250 அலகுகளில் இந்த தொகுப்பில் 12 பெரிய அளவிலான சுமை தூக்கும் வாகனக் கட்டுமான துறைகள் உள்ளன.
இ. நெசவுத் தொழில் தொகுப்புகள்:
1. இந்தியாவில் மிகப் பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.
2. கோயம்புத்தூரைச் சுற்றி 100 முதல் 150 கி.மீ. சுற்று வட்டார பகுதிகளாகும்.
3. ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளன.
4. நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.
ஈ. வாகன கட்டுமானத் தொழில்:
1. வாகன கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேஜைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.
2. இத்தகைய நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.
உ. தோல் மற்றும் தோல் பொருட்களின் தொகுப்பு:
1. இந்தியாவின் 60% தோல் பதனிடும் உற்பத்தித்திறனையும் 38% தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருட்களின் உற்பத்தியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.
2. வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியைக் கொண்டுள்ளது.
3. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது.
9.
1) வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் வெப்பமண்டல சூறாவளிகள் தமிழக கடற்கரையைத் தாக்குகின்றன.
2) வெள்ளப்பெருக்கு, உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவை மாநிலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வாகும்.
3) புயல் தாக்கும் தீவிரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மிக அதிக, அதிக, மிதமான மற்றும் குறைந்த புயல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
4) சென்னை, காஞ்சிபுரத்தின் கிழக்குப்பகுதி, விழுப்புரம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, கடலூர் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் மண்டலத்தில் அமைந்துள்ளன.
5) நாகப்பட்டினம், திருவள்ளூர், தென்மேற்குப் பகுதி நீங்கலான திருவாரூர், தஞ்சாவூரின் தென்பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப்பகுதி, கடலூர் மாவட்டத்தின் கிழக்குப்பகுதிகள், விழுப்புரம் மாவட்டத்தின் மத்தியபகுதிகள், திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள், வேலூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள் மற்றும் சென்னையின் வட பகுதிகள் ஆகியன புயலால், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகும்.
10.
(i) 1937ஆம் ஆண்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதுடன் 1936 ஆம் ஆண்டின் இந்திய அரசச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
(ii) சட்டமறுப்பு இயக்கத்தால் காங்கிரஸ் பெரிதும் பலன் பெற்றது. சட்டப்பேரவை புறக்கணிப்பைக் கைவிட்ட காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டது.
(iii) பதினோரு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள் ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லை மாகாணம், சார் முஹம்மது சாதுல்லா தலைமையிலான அசாம் பள்ளத்தாக்கு முஸ்லிம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு உட்பட எட்டு மாகாணங்களில் அது ஆட்சி அமைத்தது.
(iv) காங்கிரஸ் அரசுகள் பிரபலமான அரசுகளாக செயல்பட்டன. மக்களின் தேவைகளை அவை நிறைவேற்றின. அமைச்சர்களின் ஊதியம் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டது.
(v) தேசியவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முந்தைய நடவடிக்கைகள் ரத்து செய்தனர். காவல்துறை அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன.
(vi) விவசாயிகளின் கடன்கள் குறையவும் தொழிலக தொழிலாளர்களின் பணி நிலைமை மேம்படவும் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
11.
1. ராஞ்சியில் இக்கால கட்டத்தில் நடைபெற்ற உலுகுலன் கிளர்ச்சி (பெரிய கலகம்) பழங்குடியினக் கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதாக அறியப்படுகிறது.
2. பிர்சா முண்டா தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்த உடன் இந்த இயக்கத்துக்கு ஊக்கம் கிடைத்தது. தமக்கு இறைத் தொடர்பு இருப்பதாக கூறிய பிர்சா அண்டவெளியின் அதீத சக்திகளின் மூலமாக முண்டா இன மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்போவதாகவும் பிர்சா மக்களின் அரசை நிறுவப்போவதாகவும் உறுதியளித்தார்.
3. பிர்சா முண்டாவின் பிரபலத்தைப் பயன்படுத்தி மேலும் அதிக எண்ணிக்கையில் முண்டா இன மக்களை இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைக்க முண்டா தலைவர்கள் முயன்றனர்.
4. இரவுக் கூட்டங்கள் பல நடத்தப்பட்டு கிளர்ச்சி ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.
5. 1889ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தனர். கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
6. கிறித்துவ தூதுக்குழுக்கள் மற்றும் கிறித்துவர்களாக மதம் மாறிய முண்டாக்கள் மீது அம்பு எறிந்து தாக்குதல்கள் நடந்தன. அதன்பின் காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன.
7. அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களுக்கு இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இறுதியாக இந்த கிளர்ச்சி முடக்கப்பட்டது.
8. 1900ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட பிர்சா முண்டா பின்னர் சிறையில் உயிர்நீத்தார். பழங்குடியினரின் தலைவராக அறியப்பட்ட பிர்சா முண்டா இன்றளவும் பல நாட்டுப்புறப் பாடல்களில் போற்றப்படுகிறார்.
9. இந்த முண்டா கிளர்ச்சியை அடுத்து ஆங்கிலேய அரசு பழங்குடியின நிலம் பற்றிய கொள்கையை வகுக்க முனைந்தது. 1908இல் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது.
12.
1. கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப் படைத்தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்குத் தகவல் கொடுத்தார்.
2. கேப்டன் யங்கின் தலைமையிலான குதிரைப்படைப்பிரிவுடன் காலை 9 மணி அளவில் கர்னல் ஜில்லஸ்பி கோட்டையை வந்தடைந்தார்.
3. இதற்கிடையே புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பேரறிக்கை செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.
4. போர்விதிமுறைகள் எதையும் பொருட்படுத்தாத ஜில்லஸ்பி வீரர்களின் புரட்சியை வன்மையாக ஒடுக்கினார்.
5. நேரில் கண்ட ஒருவரின் வாக்குமூலப்படி, கோட்டையில் மட்டும் 800 வீரர்கள் பிணமாகக் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6. திருச்சிராப்பள்ளியிலும் வேலூரிலும் 600 வீரர்கள் விசாரணையை எதிர்நோக்கி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
13.
பருத்தி நெசவு ஆலைகள் :
1. இந்தியாவின் மிகப்பெரிய நெசவுத்தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது.
2. தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன.
விசைத்தறி நெசவு :
ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிக அளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.
பின்னலாடை :
1. திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.
2. 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய வெற்றியாளராகத் திகழ்கிறது.
3. இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலக சந்தையில் உலகின் தெற்கு அரைக்கோளத்தில் ஒரு சக்திவாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.
4. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.
வீட்டு அலங்காரப் பொருட்கள் :
மேஜைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்காரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரைவிரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.
பட்டு மற்றும் கைத்தறி :
பட்டு மற்றும் கைத்தறி புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகள் உள்ளன.
14.
நேர்முக வரிகள் :
1. நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர்கள் மீது புரட்டிவிட முடியாது.
2. வருமானவரி, சொத்துவரி மற்றும் நிறுவனவரி ஆகியன நேர்முக வரிகளாகும்.
வருமான வரி :
1. வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரிமுறையில் மிக முக்கியமான வரியாகும்.
2. இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது. இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக் கூடியது ஆகும்.
நிறுவன வரி :
1. இந்நிறுவன வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத்தொகைக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது.
2. நிறுவன வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெறும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது அல்லது இவ்வரியானது இந்தியாவில் தோன்றுவதாகக் கருதப்படுகிறது.
சொத்து வரி :
1. சொத்து வரி (அ) செல்வ வரி என்பது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
2. ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
3. இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
மறைமுக வரிகள் :
1. ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமையை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது "மறைமுக வரி" எனப்படும்.
2. முத்திரைத்தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத்தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி (GST) ஆகியன மறைமுக வரிகளாகும்.
முத்திரைத்தாள் வரி :
முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படுகின்ற வரிகளான திருமண பதிவு, சொத்து தொடர்பான ஆவண பதிவு மற்றும் சில ஒப்பந்த பத்திரங்கள் பதிவு போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.
பொழுதுபோக்கு வரி :
எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும். உதாரணமாக திரைப்படங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரியாகும்.
சுங்கத்தீர்வை (அ) கலால் வரி :
சுங்கத்தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும். இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) :
1. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி, நுகர்வோர்கள் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்கும் பொழுது விதிக்கப்படுகின்ற வரியாகும்.
2. இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
15.
இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு (2018)
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (OPHI) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமைக் குறியீடு 2018 அறிக்கை, இந்தியாவைப் பற்றி பின்வருமாறு கூர்ந்து உருவாக்கியுள்ளது.
1) இந்தியா தனது வறுமை விகிதத்தை 10 ஆண்டுகளில் 55% லிருந்து 28% ஆக வெகுவாக குறைந்துள்ளது. 2005-2006 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டிற்கு இடையில் 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து விடுவித்தனர்.
2) இந்தியாவில் 2015-2016 ஆம் ஆண்டில் 364 மில்லியன் ஏழை மக்கள் இருந்தனர். இது எந்த ஒரு நாட்டிற்கும் மிகப்பெரியதாகும். இருப்பினும் 2005-2006 ஆம் ஆண்டில் 635 மில்லியனாக இருந்ததை குறைத்துள்ளது.
3) 2015-2016 ஆம் ஆண்டில் பல பரிமாண வறுமை குறியீடு ஏழைகளாக இருந்த 364 மில்லியன் மக்களில், 156 மில்லியன் குழந்தைகளாகும். 2005-2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் 292 மில்லியன் ஏழைக் குழந்தைகள் இருந்தனர். இது 47% குறைவு அல்லது பல பரிமாண வறுமையில் வளர்ந்து வரும் 136 மில்லியன் குறைவான குழந்தைகளை குறிக்கிறது.
4) பழங்குடியினரைச் சேர்ந்த 80% மக்கள் 2005-2006 ஆம் ஆண்டில் ஏழைகள், அவர்களில் 50% பேர் இன்னும் ஏழைகளாக உள்ளனர்.
5) 2015-2016 ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக பீகார் இருந்தது.
தமிழ்நாட்டின் பல பரிமாண வறுமை குறியீடு அறிக்கை (2018)
1) கடந்த பத்து ஆண்டுகளாக, வறுமைக் குறைப்பில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
2) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை
i) உயர் வறுமை மாவட்டங்கள்
ii) மிதமான வறுமை மாவட்டங்கள்
iii) குறைந்த அளவிலான வறுமை மாவட்டங்கள்
3) 1994 க்குப் பிறகு, தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை படிப்படியாகக் குறைந்துள்ளது.
4) இந்தியாவில் அதன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது சிறிய ஏழ்மைப் பங்கினைக் கொண்டுள்ளது.
5) 2005 க்குப் பிறகு இந்தியாவில், பல மாநிலங்களை விட வறுமைக் குறைப்பு தமிழ்நாட்டில் வேகமாக உள்ளது.
6) 2014-2017 வரையிலான காலங்களில் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
7) இந்திய அரசு வறுமையை ஒழிக்க பல கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
8) இக்கொள்கைகளும், திட்டங்களும் தொடர்ந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாதிரி மாநிலமாக மாற வாய்ப்புள்ளது.
16.
பிரிக்ஸ்:
பிரேசில் , ரஷ்யா , இந்தியா , சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிராந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார , அரசியல் சக்திகள் ஆகும்.
பிரேசில் அமைப்பின் தலைமையகம்: சீனாவின் ஷாங்காய் நகரம்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்:
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மாற்றாகவும், அமெரிக்க மேலாதிக்கத்திற்கு போட்டியாகவும், உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
பிரிக்ஸின் நோக்கங்கள்:
1. பிராந்திய வளர்ச்சியை அடைவது.
2. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது.
3. மனித மேம்பாட்டிற்கு மிகப்பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்.
4. அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
5. வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்.
6. உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார மாற்றங்கள் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல்.
17.
அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவு கொள்கையின் அடிப்படைக் கருத்துகள்.
ஒருங்கிணைந்த அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை:
முதலில் அண்டை நாடுகள் கொள்கையின் அடிப்படைக்கு கருத்துகள்.
1) வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை மையமாகக் கொண்ட அண்டைநாடுகள் என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக எப்பொழுதும் இருந்து வருகிறது.
2) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் அரசியல் மற்றும் ராஜதந்திர முன்னுரிமையை இந்தியா அளித்து வருகிறது.
3) இந்திய வெளியுறவுக் கொள்கை இந்த அண்டை நாடுகளை மையம் கொண்டது என்பது பல்வேறு வகையான வளர்ச்சி இலக்குகளை இந்தியா அடைவதற்கு அமைதியான சுற்றுப்புறம் அவசியம் என்ற தெளிவான புரிதலை ஏற்படுத்தியுள்ளது.
அரசதந்திரம் மற்றும் வளர்ச்சியை இணைத்தல்:
1) இந்தியாவின் உள்நாட்டு முக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது.
2) இது தொழில்நுட்ப உதவி கிடைப்பதை மேம்படுத்துதல், மூலதனத்தை பெறுதல், சந்தையினைப் பெறுதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
"கிழக்கே நோக்கு" என்பதிலிருந்து "கிழக்குச் செயல்பாடு" என்ற கொள்கைக்கு படிப்படியான மாற்றம்:
1) வடகிழக்கு இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா தொடங்குகிறது. மியான்மர் இந்தியாவிற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் (ASEAN) பாலமாக உள்ளது.
2) இதன் நோக்கம் ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு இந்தோ - பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பல்முனை சமநிலையை உறுதிப்படுத்துவதாகும்.
3) நமது கிழக்கு கொள்கையின் மூன்று முக்கியக்கூறுகள் வலிமையான நிலப்பரப்பு, இணைப்பு, வணிகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானவை ஆகியனவாகும்.
பொருளாதார வளர்ச்சி:
1) விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
2) நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
3) இதனை அடைவதற்கு தேவையான பொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்த்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.
வழிகாட்டும் சக்தியாக இந்தியா:
1) ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் (BRICS) ஆகியவற்றில் உறுப்பு நாடாக இந்தியா இருப்பதும் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும்.
2) ஐ.நா.சபையின் பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
முடிவுரை:
தற்போது இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய மக்களாட்சி நாடு மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்கிவருகிறது.
18.
1. தேயிலை, காப்பி இரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.
2. தோட்டப்பயிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் பயிரிடப்படுகின்றன.
3. இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.
4. நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.
5. நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சரிவுகளில் காப்பி குறிப்பிடத் தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.
6. திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச்சரிவுகளிலும் காப்பி பயிரிடப்படுகின்றது.
7. காப்பி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.
8. இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாக காணப்படுகிறது.
9. தமிழ்நாட்டிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது.
10. கடலூர் மாவட்டத்தின் பெரும்பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது.
19.
கோடைப்பருவம்:
1. தமிழ்நாட்டின் கோடைக்காலம் மார்ச் முதல் மே வரையாகும். இக்காவத்தில் சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்து கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.
2. இக்காலத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம் கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது. பொதுவாக வெப்பநிலையானது 30°Cலிருந்து 40°C வரை வேறுபடுகிறது.
3. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவ மழைமூலமும், வெப்பச் சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.
குளிர்காலம்:
1. தமிழகத்தின் குளிர்காலம் ஜனவரி முதல் பிப்ரவரி வரை ஆகும். இக்காலத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
2. இப்பருவத்தில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன. ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
3. கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுவதில்லை. தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது.
4. மலைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°Cக்கும் குறைவாக உள்ளது.
5. நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது. இக்குறைந்த வெப்பநிலை அடர்மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக் காரணமாகிறது. இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
20.
கோயில் நுழைவு உரிமைப் போராட்டம்:
1. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் பதவி வகித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குறித்த தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
2. சாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிலும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது.
3. இதனை எதிர்த்து கேரளாவிலுள்ள வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற போராட்ட இயக்கத்திற்கு தலைமையேற்று வெற்றி பெற்றார்.
சேரன்மாதேவி குருகுல நிகழ்ச்சி:
1. சேரன்மாதேவியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் வ.வே. சுப்பிரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால் குருகுலப்பள்ளி ஒன்று நடத்தப்பெற்றது.
2. குருகுலப்பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதைக் கேள்வியுற்று மனவருத்தமடைந்த பெரியார் இதனைக் கண்டித்து எதிர்த்துப் போராடினார்.
பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு:
சட்டசபை போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் பெரியார் முனைப்புடன் இருந்தார்.
பகுத்தறிவு கருத்துக்களை பரப்புதல்:
1. பகுத்தறிவுக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காக பல செய்தித்தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் "குடி அரசு" ஆகும்.
2. பிராமணர் அல்லாதோர், பெண்கள், சமயத்தில் சிறுபான்மையினர் ஆகியோரின் எண்ணங்களையும் சமூகப் பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துக்களையும் பெரியார் வழக்கமான கட்டுரைகளாக எழுதினார்.
இந்தி எதிர்ப்பு:
1. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்குப் பெற்ற இயக்கத்தை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டமானது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2. இந்த போராட்டத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
குலக்கல்வித் திட்ட எறிப்பு:
1. பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில்கல்வி பயிற்சித்திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையார் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக இருந்தது.
2. இதைக் குலக்கல்வித் திட்டம் என்று விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார். இதற்கு எதிராக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் ராஜாஜியின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது.
பெரியார் ஒரு பெண்ணியவாதி:
1. பெரியார், குழந்தைத் திருமணத்தையும், தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார். பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
2. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபட்டது.
21.
கல்வியறிவு பெற்ற பிராமணரல்லாதோர்:
1. சென்னை மாகாணத்தில் கல்வி வேகமாக வளர்ந்தது. கல்வியறிவு பெற்ற பிராமனாரல்லாதோர் எண்ணிக்கை அதிகமானது.
2. தீவிர அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகள் படித்த பிராமணரல்லாதவர்களை அரசியலில் ஈடுபடவைத்தது.
3. பிராமணர்களின் மேலாதிக்கத்தில் இருந்த அரசுப்பணிகளிலும், தேர்வு செய்யப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதித்துவத்திலும், அரசு வாய்ப்புகளிலும் சமநிலையற்ற தன்மை இருப்பதாகவும் சாதியப்பாகுபாடு குறித்தும் அவர்கள் பிரச்சனைகளைக் கிளப்பினர்.
சென்னை திராவிடர் கழகம்:
1. பிராமணரல்லாதோர் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர்.
2. 1912இல் 'சென்னை திராவிடர் கழகம்' உருவாக்கப்பட்டது. அதன் செயலராக C. நடேசனார் செயலூக்க வகையில் பங்காற்றினார்.
3. 1916 ஜூன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக 'திராவிடர் சங்க தங்கும் விடுதியை' நிறுவினார். மேலும் பிராமனரல்லாதோரின் தலைவர்களான T.M. நாயர், P. தியாகராயர் ஆகிய இருவரிடையே நிலவிய கருத்து வேற்றுமையைச் சரிசெய்து இணக்கத்தை ஏற்படுத்தினார்.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்:
1. 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடினர்.
2. பிராமணரல்லாதோரின் நலன்களை மேம்படுத்துவதற்காக "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்" எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
3. அவர்கள் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் (Justice) தமிழில் திராவிடன். தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனும் மூன்று செய்தித்தாள்களைத் தொடங்கினர்.
நீதிக்கட்சி அமைச்சரவை:
1. 1920இல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. A. சுப்புராயலு முதலாவது முதலமைச்சரானார்.
2. 1923இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர் அமைச்சரவையை அமைத்தார்.
22.
இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்கள்:
1. இந்துமுஸ்லீம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்ட ஜின்னா பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முஸ்லீம்களுக்கு தனிநாடு என வலியுறுத்த ஆரம்பித்தார்.
2. மத்திய சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜின்னா சட்டதிருத்தத்தைக் கொண்டுவந்தார்.
3. மூன்றில் ஒரு பங்கு இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரினார். பின்னர் 14 அம்சங்கள் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார் எனினும் அனைத்தும் தோல்விகண்டது.
4. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியபடி 1934ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டினார்.
5. அமைச்சரவைகளை கடுமையாக விமர்சித்த ஜின்னா, அமைச்சரவைகள் பதவி விலகிய நாளை "மீட்பு நாள்" என்று அறிவித்தார்.
6. சுதந்திர இந்தியாவில் தங்களது அனைத்து அரசியல் அதிகாரங்களையும் முஸ்லிம்கள் இந்துக்களிடம் இழந்துவிடுவர் என்று வாதிட்ட ஜின்னா 1940 ஆண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
7. காங்கிரஸ் ஒரு இந்து அமைப்பு என்று குறைகூறிய முஸ்லிம்லீக், இந்தியாவில் முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதிநிதியாக தாம் மட்டுமே விளங்குவதாக அறிவித்தது.
8. இந்து மகாசபை மற்றும் ராஷ்டிரிய சுவயம் சேவக் சங் (RSS) ஆகியன முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன.
9. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை மற்றும் எதிரானவை என்று இந்து மகாசபையும், முஸ்லிம் லீக்கும் கோரின.
10. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையின் சில நடவடிக்கைகளான வங்கப்பிரிவினை, தனித் தொகுதிகள் ஆகியன மத வேறுபாடுகளைத் தூண்டின.
11. 1933இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ரஹ்மத் அலி பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தினை வெளிப்படுத்தினார்.
12. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முகம்மது இக்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.
13. சிம்லா மாநாட்டில் காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை. அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் லீக்கிலிருந்துதான் இடம்பெற வேண்டும் என்று ஜின்னா கோரினார்.
14. இடைக்கால அரசு நிறுவப்படும்போது மாகாணங்களைப் பிரிப்பது தற்காலிகமாக இருக்க வேண்டும் என்று காங்கிரசும், நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று முஸ்லிம்லீக்கும் முரண்பட்டன.
15. 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்தார்.
16. ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புப் போராட்டங்களும் நடந்தது விரைவில் அது இந்து முஸ்லிம் மோதலாக உருவெடுத்தது.
17. இது வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. நவகாளி மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
18. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு காந்தியடிகள் நடைபயணம் செய்து மோதல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
19. ஆயினும் பிரிவினை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாயிற்று.
20. 1947ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றியதையடுத்து. மவுண்ட்பேட்டன் திட்டப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக இந்தியா பிரிக்கப்பட்டது.
23.
காரணங்கள்:
அ) ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை:
1840 மற்றும் 1850களில் இரண்டு முக்கியக் கொள்கைகளின் மூலம் அதிக நிலப்பகுதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.
மேலதிகாரக் கொள்கை:
1. ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள்.
2. உள்நாட்டு ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.
வாரிசு இழப்புக் கொள்கை:
1. அரசுக்கட்டிலில் அரியணை ஏற தமக்கு பிறந்த ஆண் வாரிசை உருவாக்க உள்நாட்டு ஆட்சியாளர்கள் தவறினால் அந்த ஆட்சியாளரது இறப்பிற்குப்பின் அந்தப் பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
2. சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டன.
ஆ) இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது:
1. 1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் மதக்குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்குப் பதிலாக வட்டவடிவிலான தொப்பிகளை அணியுமாறு பணிக்கப்பட்டனர். அதனை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்தனர்.
2. இத்தகைய ஆடைக்கட்டுப்பாடுகள் சிப்பாய்களை கிறித்துவ மதத்திற்கு மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் அஞ்சினார்கள்.
3. அதேபோன்று 1824ஆம் ஆண்டு கல்கத்தா அருகே பராக்பூரில் சிப்பாய்கள் கடல்வழியாக பர்மா செல்ல மறுத்தனர். கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.
4. ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர்.
5. ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டது.
6. அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டதோடு மூத்த படையினரால் இனக்குறியிடப்பட்டு அவமதிக்கப் பட்டார்கள்.
உடனடிக்காரணம்:
1. புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டா பற்றிய வதந்தியே புரட்சிக்கு உடனடிக் காரணமாகும்.
2. பசு மற்றும் பன்றிக் கொழுப்பினால் தயாரிக்கப்பட்ட பசை இத்தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்டதாக வதந்தி பரவியது. அத்தோட்டாவினை வாயால் கடிக்க வேண்டியிருந்தது.
3. பசு இந்துக்களுக்கு புனிதமானதாகவும், பன்றி முஸ்லீமுக்கு தடைசெய்யப்பட்ட உணவாகவும் இருந்ததால் சிப்பாய்கள் இவற்றை உபயோகிக்க மறுத்தனர்.
பின்விளைவுகள்:
அ) இந்தியா ஆங்கில அரசுக் காலனியாக மாறுதல்:
1858ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி இந்தியா பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் நேரடியான ஆட்சியின் கீழ் வந்தது.
ஆ) நிர்வாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள்:
1. இந்திய மக்களுக்கு விக்டோரியா அரசியார் செய்த அறிவிப்பில், பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான விஷயங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது என்று தெரிவித்தார்.
2. அரசப் பணிகளில் இந்தியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று உறுதி மொழி கூறப்பட்டது.
3. இந்திய இராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது.
4. இராணுவத்தில் முக்கியமான பதவிகள் மற்றும் பொறுப்புகள் வகிப்பதிலிருந்து இந்தியர்கள் விலக்கி வைக்கப்பட்டனர்.
24.
சிவகங்கையின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
1. கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பி கமுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த சின்ன மருது அவர்களைத் தமது தலைமையிடமான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.
2. காலின் மெக்காலே தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டதால் கட்டபொம்மனின் சகோதரர்கள், மருது சகோதரர்களிடம் சிவகங்கையில் அடைக்கலம் கோரினர்.
3. தப்பியோடியவர்களை ஒப்படைக்கும்படி மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரால் வலியுறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.
4. இதனால் கர்னல் அக்னியூவும், கர்னல் இன்னஸும் சிவகங்கையை நோக்கி படைநடத்திச் சென்றனர்.
5. மருது சகோதரர்கள் 1801இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்தி "திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை " வெளியிட்டனர்.
6. ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.
7. சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்டினார்.
8. வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன.
9. புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள்.
10. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
சிவகங்கையின் வீழ்ச்சி:
1. ஆங்கிலேயர்கள் மே 1801இல் தஞ்சாவூரிலும் திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களைத் தாக்கினார்கள்.
2. கலகக்காரர்கள் பிரான்மலையிலும், காளையார் கோவிலிலும் தஞ்சம் புகுந்தனர்.
3. இறுதியாக வலுவான இராணுவமும், சிறப்பான தலைமைத்துவமும் கொண்ட ஆங்கிலேய கம்பெனி விஞ்சி நின்றது.
4. கலகம் தோற்றதால் 1801இல் சிவகங்கை இணைக்கப்பட்டது.
விளைவுகள்:
1. இராமநாதபுரத்தின் அருகே அமைந்த திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ல் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
2. ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16ல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.
3. கலகக்காரர்களில் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
4. பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டது.
5. 1801 ஜூலை 31ல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின்படி பிரிட்டிஷார் தமிழகத்தின் மீது நேரடி கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.
6. பாளையக்காரர் முறை முடிவுக்கு வந்தது.
7. அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகள் கலைக்கப்பட்டன.
25.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
26.
பொதுத் தகவல் தொடர்பு:
1) பொதுத் தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும். இது கல்வி மற்றும் பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் சிறந்த வழியாகும்.
2) பல்வேறு தேசியக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க பொது தகவல் தொடர்பு பயன்படுகிறது.
3) பொது தகவல் தொடர்பு அமைப்பானது அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் என்னும் இரண்டு முறைகளில் மக்களுக்கு தகவல்களை வழங்குகிறது.
மின்னணு ஊடகங்கள்:
1) இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை மும்பை வானொலி ஒளிபரப்பு சேவை மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2) இது 1936 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957 ஆம் ஆண்டு முதல் ஆகாச வாணி என்றும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டு வருகிறது.
3) இது கல்வி செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
தொலைக்காட்சி: தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள பல்வேறு தகவல்களை ஒளி -ஒலி காட்சி மூலமாக வழங்கும் சிறந்த ஊடகமாக உருவெடுத்துள்ளது.
இணையம்:
1) இணையம் என்பது வலையமைப்பு நெறி முறைகளை பயன்படுத்தும் கணினி மூலம் இணைக்கப்பட்ட உலகளாவிய ஒரு தகவல் பரிமாற்ற வலையமைப்பு ஆகும்.
2) செய்தி உருவாக்கம் எண்ணங்கள் வேலைவாய்ப்பு மற்றும் இதர செய்திகளை நேரடியாக பகிர்ந்து கொள்ள பயன்படும் ஒரு சமூக ஊடகமாகவும் பயன்படுகிறது.
செய்தித்தாள் ஊடகம்:
1) செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.
2) இந்தியாவில் உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக் கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன.
27.
இந்திய தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கிய பிரச்சனைகள்.
1. மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
2. தொழிலகங்கள் நிறுவுவதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை.
3. கடன் பெறுவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
4. கடனுக்கான அதிக வட்டி விகிதம்
5. மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
6. ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சிகள் இல்லாமை.
7. தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.
28.
(i) ஜெர்மானிய மேற்கு (ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு) கிழக்குப் (ஜெர்மானிய ஜனநாயகக் குடியரசு) பிரிவுகள் வேறுபட்ட வாழ்க்கைத் தரத்தில் எதிரொலித்தன.
(ii) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லினின் பொருளாதாரம் செழித்தோங்கியது.
(iii) அதற்கு பதிலாக கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை.
(iv) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ, சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்கு பெரும் சிரமம் இருந்தது.
(v) இதனால் கிழக்கு பெர்லின் மக்கள் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர் மேற்கு பெர்லினிலோ ரஷ்யா தன்மீது எந்த நேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் நிலவியது
(vi) இச்சூழலில் 1961 - ல் கிழக்கு ஜெர்மனி ஒரு சுவரை எழுப்பி கிழக்கு பெர்லின் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் மேற்கு பெர்லினுக்கும் இருந்த தொடர்பை நிறுத்தியது
(vii) காவல் கோபுரங்கள் எழுப்பப்பட்டு பயங்கர ஆயுதங்களின் துணையோடு கடுமையான கண்காணிப்பு பணியில் மூலம் கிழக்கிலிருந்து மக்கள் நுழைவது தவிர்க்கப்பட்டு வந்தது
(viii) ரஷ்யாவின் கட்டுப்பாட்டு 1980களின் நடுவில் வலுவிழக்கத் துவங்கிய நிலையில் இச்சுவரின் இருபுறமும் 9 நவம்பர், 1949ம் ஆண்டில் துவக்கத்தில் காஸா முனை தவிர்த்து எகிப்து, பாலஸ்தீன் எல்லை வரை நீண்ட நெகேவ் பகுதியை (பாலைவன பகுதியாகவும், அரைகுறை பாலைவனப் பகுதியாகவும் திகழும் தெற்கு இஸ்ரேலியப் பகுதி) இஸ்ரேலியர்கள் தங்கள் வசப்படுத்தினர்
(ix) இஸ்ரேலுடன் அரபு நாடுகள் தனித்தனியாக 1947 ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூன் வரை ஏற்படுத்திக் கொண்ட அமைதி உடன்படிக்கைகளின் கீழ் இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்துக்கு நாடுகளுக்குமிடையே தற்காலிகமான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது
(x) இஸ்ரேலைப் பொறுத்த வரையில் இக்கால கட்டத்தில் நிகழ்ந்த போர்கள் யாவும் அதன் சுதந்திரவேட்கையின் வெளிப்பாடாகவும்,சுதந்திர போராகவும் நினைவு கொள்ளப்பட்டது
(xi) அரேபியர்களைப் பொறுத்தமட்டில் பலரும் இப்போர்களினால் அகதிகளாக இடம்பெயர வேண்டிய இருந்ததால் அது நக்பா (பேரழிவு) என அழைக்கப்பட்டது
(xii) அரேபியர்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு உடனடியாக ஐ.நா சபையின் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்க நாடு போன்ற மேற்கத்திய சக்திகளுக்கு அவர்கள் வழங்கிய ஆயுதங்களும் நீதிக்கும் மாற்றாக விசுவாசத்தை வெளிப்படுத்தவே இஸ்ரேல் வலுவாக கட்டியெழுப்பப்பட்டது என்று உறுதியாகிறது
(xiv) 1989இல் கூடிய மக்கள் கூட்டம் அதை தகர்க்கத் துவங்கியது. ஜெர்மனி 3 அக்டோபர் 1990 அன்று முறையாக இணைக்கப்பட்டது. பெர்லின் சுவர் ஒரு கட்டுமானத் தடை என்பதை தாண்டிய ஒரு விஷயமாகும்.
(xv) அது முதலாளித்துவத்திற்கும், பொதுவுடமைக்கும் இடையே இருந்த பிளவை அடையாளப்படுத்தக்கூடிய ஒன்று.
(xvi) பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 26 டிசம்பர் 1991இல் சோவியத் நாடும் வீழ்ந்து பனிப்போர் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
29.
இந்திய வேளாண்மை மற்றும் இந்திய விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் சில இயற்கைக் காரணிகளாகவும் வேறு சில செயற்கைக் காரணிகளாகவும் உள்ளன அவை
சிறிய மற்றும் குறுநில உடமை:
இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் சிறிய மற்றும் துண்டாக்கப்பட்ட நில உரிமையாளர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவில் 67 சதவீதம் நில உடமையாளர்கள் [1 ஹெக்டேருக்கும் குறைவு] குறு விவசாயிகளாக உள்ளனர்.
அதிக செலவின் உள்ளீடுகள்:
1. அதிக விளைச்சலுக்கு தொடர் வேளாண் உற்பத்திக்கும் விதைகள் அடிப்படையான ஒரு உள்ளீடாகும்.
2. அதிக விலையின் காரணமாக நல்ல தரமான விதைகள் சிறு - குறு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது.
வளமற்ற மண்:
இந்திய மண் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளம் கூட்டல் மற்றும் புதுப்பித்தல் செயல்பாடின்றி வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் மண்ணின் வளம் குன்றி அதன் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன பற்றாக்குறை:
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பகுதியே பாசன வசதியைப் பெற்றிருக்கின்றது.
இயந்திரமயமாக்கப் பற்றாக்குறை:
நாட்டின் பல பகுதிகளில் வேளாண்மை பெரிய அளவில் இயந்திரமயமாக்கப் பட்டிருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களைக் கொண்டு எளிய மற்றும் பழமையான கருவிகள் மூலமே வேளாண்மை செய்யப்படுகிறது.
மண் அரிப்பு:
காற்று மற்றும் நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சந்தை:
தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் விவசாயப் பொருட்களின் விலையில் அதிகமாக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
சேமிப்பு கிடங்கு வசதியில்லாமை:
கிராமப்புற பகுதிகள் விவசாய சேமிப்பு கிடங்கு வசதியற்றோ அல்லது முழுமை பெறா நிலையிலோ காணப்படுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து வசதியின்மை:
இந்திய வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று மலிவான மற்றும் போதுமான போக்குவரத்து வசதியின்மையாகும்.
தற்சூழலில் இலட்சக்கணக்கான கிராமங்களில் பிரதான இணைப்புச் சாலைகள் இல்லாமலோ அல்லது சந்தை மையங்களுடன் இணைக்கப்படாமலோ உள்ளது.
மூலதனப் பற்றாக்குறை:
வேளாண்மை அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாகும். மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க போதுமான மூலதனம் விவசாயிகளிடம் இல்லை.
30.
(i) ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்படுவதற்காக முன் முயற்சியை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இங்கிலாந்தும் 1941 - இல் அட்லாண்டிக் சாசனத்தின் வழியே வெளியிட்டன.
(ii) இதில் நாஜிகளின் கொடுங்கோன்மை ஒழிக்கப்பட்டப் பின்னர் அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவுமென்றும் அதனால் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமில்லாமல் நிறைவேறாதத் தேவைகளென எதுவுமின்றி சுதந்திரமாக வாழலாம் என உரைக்கப்பட்டிருந்தது
(iii) ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் 1942 - இல் புத்தாண்டு தினத்தன்று அச்சு நாடுகளுக்கு எதிராக (ஜெர்மனி, இத்தாலி ஜப்பான்) போர் செய்து வந்த 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
(iv) ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் 1945 - ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 26 நாள் 61 நாடுகள் கையெழுத்திட்டன. இந்தியா அப்போது சுதந்திர நாடாக இல்லையென்பதால் சாசனத்தில் கையெழுத்திடவில்லை
(v) தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ ஐக்கிய நாடுகள் சபையின் சமமான வாக்குகளை அவை பெற்றுள்ளன
31.
1) செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியிலிருந்து வங்காள விரிகுடா நோக்கி வீசுகிறது.
2) பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ் விசை) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது. எனவே இக்காற்று வடகிழக்கு பருவக் காற்று என அழைக்கப்படுகிறது.
3) இப்பருவக்காற்று இந்திய துணைக்கண்ட பகுதியில் வடகிழக்குக் காற்றுத் தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது.
4) இப்பருவக்காற்றின் மூலம் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தென் கர்நாடகாவின் உட்பகுதியில் நல்ல மழைப்பொழிவைப் பெறுகின்றன.
5) வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன.
6) கடற்கரைப் பிரதேசங்களில் கனமழையுடன் கூடிய பலத்த புயல் காற்று, பெரும் உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
7) நாட்டின் வடமேற்கு பகுதியின் சராசரி வெப்பநிலையான அக்டோபர் மாதத்தில் 38oC -இல் இருந்து நவம்பர் மாதத்தில் 28oC ஆக குறைகிறது.
32.
1) தீபகற்ப பீடபூமி இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ளது. இது சுமார் 16 லட்சம் சதுர கி.மீ பரப்பளவை கொண்டு (இது நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் பாதியாகும்) இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவாக உள்ளது.
2) தீபகற்ப பீடபூமி தொன்மையான பாறை அமைப்புகளையும், பல குன்றுகளையும் பல்வேறு சிறு பீடபூமிகளையும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளால் பிளவுபட்டும் காணப்படுகின்றன.
3) இப்பீடபூமி வடமேற்கு ஆரவல்லி மலைத் தொடர், வடக்கு மற்றும் வடகிழக்கே புண்டேல்கண்ட் உயர்நிலைப்பகுதி, கைமூர், ராஜ்மகால், குன்றுகள் மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்கே கிழக்கு தொடர்ச்சி மலைகள் ஆகியன எல்லையாக அமைந்துள்ளன.
4) இப்பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீ உயரத்தைக் கொண்டது.
5) ஆனைமலையில் அமைந்துள்ள 2695 மீ உயரமுடைய ஆனைமுடி சிகரம் இப்பீடபூமியின் உயர்ந்த சிகரமாகும்.
6) இப்பீடபூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளது. இது கோண்டுவாணா நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்.
7) ஆற்றின் மூப்புநிலைக் காரணமாக ஆறுகள், அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளது.
8) நர்மதை ஆறு தீபகற்ப பீடபூமியை இருபெரும் பகுதிகளாக பிரிகின்றது. இதன் வடபகுதியை தக்காண பீடபூமி என்றும் அழைப்பர்.
9) விந்திய மலைக்கு தென்பகுதியில் பாயும் ஆறுகளான கோதாவரி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா போன்றவை கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
10) விந்திய மலையின் தென்பகுதியிலுள்ள பிளவு பள்ளத்தாக்குகளினால் நர்மதை மற்றும் தபதி ஆறுகள் மேற்குநோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன.
33.
(i) இத்தாலியில் 1924 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னர் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன
(ii) சோசலிஸ்டுகளின் தலைவரான மாட்டியொட்டி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லை. எனக் கேள்வி எழுப்பியதால் அவர் கொலை செய்யப்பட்டார்
(iii) இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எதிர் கட்சியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக முசோலினி எதிர்க்கட்சிகளைத் தடை செய்து பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்தினார்
(iv) எதிர்க்கட்சி தலைவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது சிறைவைக்கப்பட்டனர். 1929 இல் இரண்டாம் டியூஸ் (தலைவர்) எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட முசோலினி சட்டங்களை இயற்றும் அதிகாரத்துடன் சர்வாதிகாரியானார்.
(v) வேலை நிறுத்தங்களையும் ஆலை மூடல்களையும் தடைசெய்து சட்டங்கள் இயற்றினார். தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை முதலாளிகளும் இடம் கழகங்கள் உருவாக்கப்பட்டன
இவ்வமைப்பு ஊதியம் வெளியிட நிலைமைகள் ஆகியவை குறித்து முடிவு செய்யும். மீதியுள்ள மக்களில் பெரும் பகுதியினர் அவர்கள் செய்து வரும் பணியின் அடிப்படையில் பல கழகங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர்
(vi) இக்கழகங்கள் பின்னர் தேசியக்கூட்டமைப்புகளாக ஆக்கப்பட்டு கழகங்களுக்கான அமைச்சரின் பாராளுமன்றம் ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாகப் பாசிஸ்டுக் கட்சியின் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட்டது
(vii) இவ்வேறுபாடு பொருளாதாரத்தின் மீதான முசோலினியின் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டுக்கு துணை நின்றதுடன் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவராக மற்றபிற அதிகாரத்தைச் செயல்படுத்தவும் அவருக்கு உதவியது
34.
மத்திய அமைச்சர்களின் வகைகள் மூன்று வகைப்படும்.
(i) கேபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
(ii) இராஜாங்க அமைச்சர்கள்
(iii) துணை அமைச்சர்கள்
(i) கேபினெட் அமைச்சர்கள் :
நிர்வாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே கேபினெட் ஆகும். கேபினெட் அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள், உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. குடியரசுத் தலைவர் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அமைச்சரவை பரிந்துரைக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அமைச்சரவை ஒரு கருவியாக செயல்படுகிறது. நிதி மசோதாவானது அமைச்சரவையில் இருந்து தொடங்கும். பின்னர் குடியரசுத்தலைவர் பரிந்துரையின்படி மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமைச்சரவை முடிவு செய்வதோடு, சர்வதேச உடன்படிக்கைகளும் ஒப்புதல் அளிக்கிறது. பல்வேறு நாடுகளுக்கானத் தூதர்களை நியமிப்பதில் அமைச்சரவை முக்கிய பங்கு வகிக்கிறது.
(ii) இராஜாங்க அமைச்சர்கள் :
அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
(iii) துணை அமைச்சர்கள் :
அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். கேபினெட் அமைச்சர்கள் அல்லது இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.
35.
அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம்:
(i) தோல்வியடைந்த நாடுகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. அமைதி உடன்படிக்கை கட்டளையிடப்பட்டதாக இருந்தது. அது போரின் ஆதாயங்கள் வெற்றி பெற்றவருக்கே நேசநாடுகளே வெற்றியாளர்கள் எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது
(ii) அமைதியை மீட்பதற்காக உட்ரோ வில்சனால் முன் வைக்கப்பட்ட பதினான்கு அம்சத் திட்டம் எனும் கோட்பாடு ஜெர்மனியை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது
(iii) போர் இழப்பீட்டுத் தொகையான 6600 மில்லியன் பவுண்டுகள் ஜெர்மனியின் செலுத்தும் சக்தியைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்தது
(iv) அரசியல் பொருளாதார ரீதியாக ஜெர்மனி பலவீனப்படுத்தப்பட்டது. ஆனால் ஜெர்மனி தனது கிழக்கெல்லையில் மிகப்பெரும் ரஷ்யா, ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசுகளுக்குப் பதிலாக தற்போது சிறிய பலவீனமான புதிய நாடுகளை கொண்டிருந்தது
(v) ஜெர்மனியருக்கும் ஆஸ்திரியார்களுக்கும் பல வாக்குறுதிகளை வழங்கிய வில்சன் அவற்றிற்கு துரோகமிழைத்து விட்டார். 1920 ல் வெர்செயல்ஸ் உடன்படிக்கையை செனட் சபை ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்த அமெரிக்கா தனித்திருக்கும் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியது மிகவும் வலுவிழந்த நிலைமையிலிருந்த பிரான்ஸ் மட்டும் இங்கிலாந்தின் நல்லுதவியுடன் ஆற்றல் மிக்க ஜெர்மனியின் வலிமையை எதிர்கொள்ள நேர்ந்தது
36.
(i) குடியுரிமை பெறுதல் :
1. குடியுரிமை சட்டம் 1955 குடியுரிமை பெற ஐந்து வழிகளை பரிந்துரை செய்கிறது.
2. அவை பிறப்பு வம்சாவளி பதிவுசெய்தல், இயல்புரிமை மற்றும் பிரதேச இணைவு ஆகும்.
3. குடியுரிமை சட்டம் 1955-ன் படி ஒருவர் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் குடியுரிமை பெற முடியும்.
(ii) பிறப்பின் மூலம் :
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாகப் கருதப்படும்.
(iii) வம்சாவளி மூலம் :
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை அவர் பிறந்தபோது இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.
(iv) பதிவின் மூலம் :
ஒருவர் இந்திய குடியுரிமை கோரி பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
(v) இயல்புரிமை மூலம் :
ஒரு வெளிநாட்டவர் இந்திய அரசிற்கு இயல்புரிமை கோரி விண்ணப்பித்ததன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
(vi) பிரதேச (நாடுகள்) இணைவின் மூலம் :
பிற பிரதேசங்கள் இந்தியாவுடன் இணையும்போது இந்திய அரசு அவ்வாறு இணையும் பிரதேசங்களின் மக்களை தமது மக்களாகப் கருதி அவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது.
37.
GDP-யின் துறை வாரியான, பங்களிப்பு
(2018-19) (% பங்கு)
38.
(i) நுகர்வோர் :
நுகர்வோர், நியாயமான வர்த்தக அமைப்பை ஆதரித்தும் மற்றும் சர்வதேச வர்த்தக விதிகளின் பரந்த சீர்திருத்தத்தை ஒப்பிட்டும் அவர்கள் சிறந்த தயாரிப்புகளை வளர்ந்து வரும் வரம்பிலிருந்து தேர்வு செய்யலாம். நியாயமான வர்த்தக பெயரிட்ட தயாரிப்புகளை நுகர்வோர் வாங்குவதென் மூலம் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த போராடும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.
(ii) வர்த்தகர்/நிறுவனங்கள் :
2002 ஆம் ஆண்டு முதல் இது வர்த்தகத்தில் மிகவும் பரவலாக அங்கீரிக்கப்பட்டு சமூக மற்றும் முன்னேறிய அடையாளமாக மாறியுள்ளது. நியாயமான வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நம்பகமான வழியை வழங்குகிறது.
(iii) உற்பத்தியாளர்கள் :
நிலையான விலையில் நிலையான உற்பத்தி செலவுகளை கட்டுப்படுத்தலாம். சந்தை அணுகுதல் என்பது சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்ய வாங்குபவர்கள் உதவுதலாகும். பங்குதாரர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
39.
உலகமயமாக்கலின் சவால்கள்:
1. உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
2. வளர்ந்துவரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
3. உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில் முறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
4. இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
5. உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
6. மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல் நலக்குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
7. உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
40.
41.
சாலைகளின் வகைகள்:
1. தேசிய நெடுஞ்சாலைகள்
2. மாநில நெடுஞ்சாலைகள்
3. மாவட்டச் சாலைகள்
4. கிராமச் சாலைகள்
5. எல்லைப்புறச் சாலைகள்
6. தங்க நாற்கரச் சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகள்
1. தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கிய அமைப்பாகும். இது நாட்டின் எல்லைகள், மாநிலத் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள் இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
2. இச்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பொறுப்பாகும்.
3. இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH4 ஆகும். இது உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 2369 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும்.
4. குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47 A ஆகும். இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக் கொண்ட கொச்சின் துறைமுகத்தை இணைக்கிறது.
மாநில நெடுஞ்சாலைகள்:
1. மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களை, மாநில தலை நகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும், அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன.
2. இந்த மாநில நெடுஞ்சாலைகள் மாநில பொதுப்பணித்துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மாவட்டச் சாலைகள்:
1. மாவட்ட சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
2. மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
கிராமச்சாலைகள்:
1. கிராமச் சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
2. இவை பல்வேறு கிராமங்களை அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. இவைகளை கிராமப் பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.
எல்லைப்புறச்சாலைகள்:
1. எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளாகும்.
2. இவைகள் எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
3. இவ்வமைப்பு 1960இல் நிறுவப்பட்டது.
4. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
5. எல்லைப்புறச் சாலை நிறுவனத்தால் உலகிலேயே உயரமான (4270 மீ) எல்லைப்புற சாலை லடாக்கிலுள்ள லேவிலிருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது.
தங்க நாற்கரச்சாலை:
5846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி-கொல்கத்தா-சென்னை-மும்பை-புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வட -தென் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் :
வடதென் பகுதி இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைப்பதாகும்
கிழக்கு மேற்கு பகுதி இணைக்கும் வகையில் குஜராத் போர்பந்தரையும் அசாம் மாநிலத்தில் சில்சரையும் இணைப்பதாகும்.
விரைவுச் சாலை :
நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளை கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.
எ.கா: மும்பை - பூனா விரைவுச்சாலை
பன்னாட்டு நெடுஞ்சாலை:
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன சாலை பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
42.
ஹுக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகள்:
1. ஹுக்ளி ஆற்றுப் பகுதியில் சணல் பயிரிட உகந்த காலநிலை, மண்வளம் மற்றும் நீர்ப்பாசன வசதி போதுமான அளவு உள்ளது.
2. சணல், குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு இழைப்பயிர். இம்மூலப்பொருள் ஹுக்ளி ஆற்றுப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
3. ஆலைக்குத் தேவையான மலிவான தொழிலாளர்கள் மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து கிடைக்கின்றனர்.
4. சாலைப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஹுக்ளி ஆற்றுப்பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன.
5. கொல்கத்தா துறைமுகம் அருகில் அமைந்துள்ளதால் குறைந்த செலவில் பொருட்களை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக உள்ளது.
6. வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் போன்ற வசதிகளையும் இப்பகுதி பெற்றுள்ளது.
7. தொழிற்சாலைக்குத் தேவையான நீர் ஹுக்ளி நதியிலிருந்து கிடைக்கிறது.
43.
அமைச்சரவை தொடர்பானவை:
1. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
2. அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
3. தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
4. அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
5. அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை:
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
1. மாநில அரசு வழக்குரைஞர்
2. மாநில தேர்தல் ஆணையர்
3. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில திட்டக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
4. மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை:
1. சட்டமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
2. சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
3. சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
4. எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
44.
தீவிர வேளாண்மை
1. தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும்.
2. சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.
3. இந்த இயந்திரமயமாக்கல் மற்றும் தீவிரப்படுத்துதல் மூலம் சிறிய அளவில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையை குறிப்பாக பசுக்கள், பன்றிகள், கோழிகள் போன்ற விலங்குகளை பெரிய பண்ணைகள் மூலம் வளர்க்க வழிவகை செய்கிறது.
4. இந்தியாவில் பஞ்சாப், இராஜஸ்தானின் சில பகுதிகள், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசப் பகுதிகளில் இத்தீவிர வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது.
கலப்பு வேளாண்மை :
கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். விவசாயிகளின் பல தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.
45.
இந்தியாவின் உயிர்கோள காப்பகங்கள்: இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் (மன்னார் வளைகுடா, நந்தாதேவி, நீலகிரி, நாக்ரேக், பச்மாரி, சிம்லிபால், சுந்தரவணம், அகத்திய மலை பெரிய நிக்கோபார், கஞ்சன் ஜங்கா மற்றும் அமர்கண்டாக்) யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
| வ.எண் | உயிர்க்கோள காப்பகங்கள் | மாநிலம் |
| 1 | அச்சனக்மார்-அமர்கண்டாக் | மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் |
| 2 | அகத்தியமலை | கேரளா |
| 3 | திப்ரு செய்கொவா | அசாம் |
| 4 | திகேங் திபங் | அருணாச்சல பிரதேசம் |
| 5 | பெரிய நிக்கோபார் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
| 6 | மன்னார் வளைகுடா | தமிழ்நாடு |
| 7 | கட்ச் | குஜராத் |
| 8 | கஞ்சன்ஜங்கா | சிக்கிம் |
| 9 | மானாஸ் | அசாம் |
| 10 | நந்தா தேவி | உத்தரகாண்ட் |
| 11 | நீலகிரி | தமிழ்நாடு |
| 12 | நாக்ரெக் | மேகாலயா |
| 13 | பச்மாரி | மத்தியப் பிரதேசம் |
| 14 | சிம்லிபால் | ஒடிசா |
| 15 | சுந்தரவனம் | மேற்கு வங்காளம் |
| 16 | குளிர் பாலைவனம் | இமாச்சலப் பிரதேசம் |
| 17 | சேஷாலம் | ஆந்திரப் பிரதேசம் |
| 18 | பன்னா | மத்தியப் பிரதேசம் |
46.
மாநிலங்களவை பணிகள் :
(i) எந்தவொரு மசோதாவும் (நிதி மசோதா தவிர) சட்டமாவதற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவை. ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து முடக்கத்தை தீர்த்து வைக்கிறார்.
(ii) அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கான எந்த மசோதாவை நிறைவேற்றுவதிலும் மக்களவைப் போன்ற மாநிலங்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) மாநிலங்களவை உறுப்பினர்கள், லோக் சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர்.
(iv) தேசிய முக்கியத்துவம் கருதி மாநில அரசு பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றுள்ளது.
(v) மாநிலங்களவையில் 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் ஒப்புதல் பெறுகிறது.
மக்களவையின் பணிகள் :
(i) நிதி மசோதா உள்பட அனைத்து மசோதாக்களும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும் நிறைவேற்றவும் முடியும்.
(ii) குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பணிநீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது.
(iv) மக்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
(v) நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு தங்கள் பதவிகளை பணிதுறப்பு செய்ய வேண்டும்.
47.
கங்கை ஆற்று வடிநிலம்:
1. கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும்.
2. கங்கைச் சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளன.
3. கங்கைச் சமவெளி அதிக மக்களடர்த்தி கொண்டதாகும்.
4. கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
5. இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும்.
6. வடபகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டாக், கோசி மற்றும் தென்பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
7. வங்கதேசத்தில், கங்கை நதி பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
8. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
48.
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலை நாட்டுக் கல்வியினால் மக்கள் மேற்கத்திய கருத்துக்களான பகுத்தறிதல் , சமத்துவம் , சுதந்திரம் , தேசியம் மற்றும் மனிதாபிமானம் போன்ற கருத்துகளால் மிகவும் கவரப்பட்டனர் .
இவர்கள் மீது கிறிஸ்துவ மதத்தின் தாக்கமும் ஏற்பட்டது.
இராஜா ராம்மோகன் ராய் பங்கிம் சந்திர சட்டர்ஜி, K.C.சென் போன்ற சீர்திருத்தவாதிகள் மக்களுக்கு உற்சாகமூட்டினார்.
மேற்கத்திய தாராள சிந்தனையில் பரவியதும் சமூக பண்பாட்டு விழிப்புணர்வு தோன்றியது.
இந்தியா பண்பாட்டில் இருந்த குறைகளை களைந்து இந்தியாவின் பழம்பெரும் கலாச்சார புகழை மீண்டும் கொண்டுவர விரும்பினார்.
அவர்கள் பல்வேறு சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களைத் தோற்றுவித்தனர்.
இதன் மூலம் இந்தியா சமுதாயத்திலிருந்து குறைகளை களைய முற்பட்டனர்.
இத்தகைய சூழலில் தோன்றிய சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.
49.
i) சமத்துவ உரிமை
ii) சுதந்திர உரிமை
iii) சுரண்டலுக்கெதிரான உரிமை
iv) சமயச்சார்பு உரிமை
v) கல்வி, கலாச்சார உரிமை
vi) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
சமத்துவ உரிமை:
1. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
2. மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்தல்.
3. பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
4. தீண்டாமையை ஒழித்தல்.
5. இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.
சுதந்திர உரிமை:
1. பேச்சுரிமை, கருத்துத் தெரிவிக்கும் உரிமை.
2. அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.
3. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.
4. வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.
5. தொடக்கக்கல்வி பெறும் உரிமை.
6. சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.
சுரண்டலுக்கெதிரான உரிமை:
1. கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
2. தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.
சமயச் சார்பு உரிமை:
1. எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை,
2. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
3. எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
4. மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.
கல்வி கலாச்சார உரிமை :
1. சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
2. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை:
தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.
50.
மா சே துங்:
1. மா சே துங் தென்கிழக்கு சீனாவில் உள்ள ஹூனான் நகரில் பிறந்தார்.
2. ஹூனான் நகரை மையமாகக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய அவர் ஒரு முழு பொதுவுடைமைவாதியாக மாறியிருந்தார்.
3. கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங் கை-ஷேக் இருந்தபோது பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ - யென் - லாயும், மா சே - துங்கும் இருந்தனர்.
விவசாயிகளை வழிநடத்திய மாவோ:
1. கோமிங்டாங்கின் கட்டுப்பாடு நகரங்களின் மீது கடுமையாக இருந்ததை மாவோ உணர்ந்தார். அதனால் அவர் விவசாயிகளை ஒன்றிணைக்க முயன்றார்.
2. கோமிங்டாங்கிற்கும் பொதுவுடைமை கட்சிக்கும் இடையே நிலவிய உறவு முறிந்ததும் மாவோவின் தலைமையில் சில நூறு விவசாயிகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் ஏழு ஆண்டுகள் பதுங்கியிருந்தனர்.
3. கோமிங்டாங்கால் அக்காட்டு மலைப்பகுதியில் நுழைய முடியாத அதே வேளையில் மாவோவின் படை பெருகிக்கொண்டே சென்றது.
4. ஷியாங் கை-ஷேக் பொதுவுடைமைவாதிகளைச் சுற்றி முற்றுகையிட்டார். எனவே மாவோ ஹூனான் பகுதியை விட்டு அகன்று ஒரு பாதுகாப்பான பகுதிக்கு செல்ல நினைத்தார்.
நீண்ட பயணம்:
1. 1933 ஆம் ஆண்டுவாக்கில் சீனப் பொதுவுடைமை கட்சியின் மீது முழுக்கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
2. அவர் 1934 இல் 1,00,000 இராணுவத்தினருடன் ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்தார். அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
3. இப்பயணத்தில் பங்கு பெற்றோர் தொடர்ச்சியாக கடும் தொந்தரவிற்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டனர்.
4. இறுதியில் 6,000 மைல்களைக் கடந்து 1935 இன் பிற்பகுதியில் ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
5. மேற்கொண்டு அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன.
6. 1937 ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.
7. கோமிங்டாங் அரசு விவசாயிகளை உள்ளடக்கிய போர் வீரர்களின் அதிருப்தியை சம்பாதித்த வேளையில் மாவோ நடுத்தர வர்க்கத்தின் ஆதரவைப் பெற கடுமையாக முயற்சித்தார்.
மாவோவின் வெற்றி:
1. மாவோ ஒருபுறம் கொரில்லாப் போர் முறையைக் கடைபிடித்துக் கொண்டே மறுபுறம் பெயரளவிலான இராணுவ நகர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
2.ஷியாங் கை - ஷேக்கின் இராணுவம் வேகமாக உதிரத் துவங்கியது. சீனாவின் பெருவாரியான பகுதிகள் 1948 இல் பொதுவுடைமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
சீன மக்கள் குடியரசு
1. 1949 இல் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பீகிங் நகரில் கூடியது. அம்மாநாடு நடுவண் ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுத்து அதற்கு மா சே - துங்கை தலைவராக நியமித்தது.
2. சீனாவில் மா சே - துங்கின் தலைமையில் சீன மக்கள் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது.
51.
ஐ.நா. சபை
1. அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவிடவும் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமின்றி சுதந்திரமாக வாழ்ந்திடவும் ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2. ஐ.நா சபையின் சாசனத்தில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன.
3. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொதுச்சபை:
1. பொதுச்சபை எனும் அமைப்பில் ஒவ்வொரு நாடும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது.
2. இவ்வமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை கூடி நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்களும், முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு சபை:
1. பாதுகாப்பு சபையானது 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர். ஏனைய பத்து உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும், மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு. எந்த முடிவையும் இதன்மூலம் தடுத்துவிடலாம்.
நிர்வாக அமைப்பு:
1. ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
2. இதன்பொதுச்செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
3. பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐ.நா சபையை நடத்துகிறார்.
4. பன்னாட்டு நீதிமன்றம் ஐ.நா. சபையின் நீதி நிர்வாகக் கிளையாகும். இது நெதர்லாந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது.
5. பொருளாதார மற்றும் சமூகமன்றம் ஐ.நா.சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
ஐ.நா.வின் இதன் முக்கியத் துணைஅமைப்புகள்
1. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - (FAO)
2. உலக சுகாதார நிறுவனம் - (WHO)
3. ஐ.நா. வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு - (UNESCO)
4. ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் - (UNICEF)
5. ஐ.நா. வளர்ச்சி திட்டம் - (UNDP)
ஐ.நா வின் செயல்பாடுகள்:
1. கடந்த பல பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐ.நா. சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.
2. 1960 களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும்.
3. மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐ.நா. சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
4. ஐ.நா. வின் அமைதிப்படை உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அடிப்படை பணி செய்துள்ளது. அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய ராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.
52.
ஹிட்லர் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்:
1. 1919ஆம் ஆண்டு ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது ஜெர்மன் உழைப்பாளர் கட்சி எனப்படும் நாசிசக் கட்சியை உருவாக்கியது. ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
2. அவர் முதல் உலகப்போரின்போது பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
3. 1923 இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஹிட்லர் முயற்சி மேற்கொண்டார்.
4. மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர் மேற்கொண்ட தேசியப்புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது.
5. சிறையில் இருந்தபோது தனது சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein Kampf - எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார்.
6. 1932 இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தவறான வழியில் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
ஹிட்லரின் நாசிச ஆட்சி:
1. ஜெர்மனியில் குடியரசு ஆட்சி கவிழ்ந்ததின் விளைவாகத் தொழிலதிபர்களும், வங்கியாளர்களும் குடியாட்சிக் கட்சியினரும் ஹிட்லரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் 1933 இல் ஹிட்லரை சான்சிலராக (முக்கிய அமைச்சர்) பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹின்டென்பர்க்கை வற்புறுத்தினர்.
2. மூன்றாவது ரெய்க் (குடியரசு) என்று அழைக்கப்பட்ட ஹிட்லரின் நாஜி அரசு ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஹிட்லர் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள்:
1. ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடிக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட தேசிய சோசியலிசக் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
2. நாசிச கட்சியைத் தவிர பிறகட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டது.
3. ஹிட்லர் இளைஞர் அணியும், தொழிலாளர் அமைப்பும் நிறுவப்பட்டன.
4. தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன.
5. பத்திரிகைகள், அரங்குகள், திரைப்படங்கள், வானொலி, கல்வி ஆகிய அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
6. யூதர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக் கொள்கை பின்பற்றப்பட்டது.
7. 1934 ஆம் ஆண்டு ஹின்டென்பர்க் மறைவிற்குப்பின் சான்சிலராக இருந்த ஹிட்லர் குடியரசுத் தலைவராகவும் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
53.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
1. 1920-1925 ஆகிய ஆண்டுகளிடையே பன்னாட்டுச் சங்கம் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைக்கப்பட்டது.
2. மூன்று பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சங்கம் வெற்றி பெற்றது.
3. 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டுத் தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
4. பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
5. அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது, அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
6. மூன்றாவது பிரச்சனை கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
7. விசாரணைக்குப் பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது.
8. 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
9. லொக்கர்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
10. இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக் குழுவில் ஜெர்மனிக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட்டது.
தோல்விக்கான காரணங்கள்:
(i) அரசியல் பிரச்சனைகளில் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவு அவசியமாயிற்று
(ii) சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை
(iii) சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்த போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards