10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பொழுதுபோக்கு வரி என்றால் என்ன?
2.
பயோ மெட்ரிக் குடும்ப அட்டை சிறு குறிப்பு வரைக.
3.
'பாரத் முதல் பூடான் வரை' என்றால் என்ன?
4.
இந்திய வெளியுறவு கொள்கை எவ்வகையில் மாற்றம் கொண்டது?
5.
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (MEPZ) பற்றி எழுதுக.
6.
தமிழ்நாட்டில் என்னென்ன பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன?
7.
தமிழ்மொழி இலக்கியங்கள் எவ்வாறு தூய தமிழ் உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தின?
8.
சென்னை மகாஜன சபை யாரால் துவங்கப்பட்டது?
9.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் கணவாய்கள் யாவை?
10.
வகுப்புவாரி ஒதுக்கீடு மற்றும் பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.
11.
சுதேசி இயக்கத்தின் நான்கு அம்சங்கள் யாவை?
12.
இரண்டாவது பாளையக்காரர் போர் குறிப்பு எழுதுக.
13.
வரி வரையறுக்க.
14.
வேளாண்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
15.
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணங்கள் யாவை?
16.
ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
17.
இந்திய வெளியுறவுக் கொள்கையில் நேருவின் பங்களிப்பை எடுத்துக் கூறுக.
18.
உங்கள் மாவட்டத்தில் ஏதேனும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்து பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தசம்பவத்தைப் பற்றி சுருக்கமாக எழுதவும்.
19.
தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
20.
நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
21.
ஆக்கபூர்வச் செயல்பாடுகளில் ஈ.வெ.ரா வின் பங்களிப்பு குறித்து சுருக்கமாய் எழுதுக.
22.
பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
23.
ஆக்கப்பூர்வ சுதேசி இயக்கம் பற்றிய கொள்கையை விவரிக்கவும்.
24.
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
25.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?
26.
பார்சி என்பவர்கள் யார்?
27.
பாக்சைட் பற்றி விளக்கவும்.
28.
'டாக்டர் சன்யாட் சென்' பற்றி சிறு குறிப்பு வரைக.
29.
இந்தியாவின் நீர்ப்பாசன வகைகள் பற்றி எழுதுக.
30.
உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள் யாவை?
31.
உயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள் என்றால் என்ன?
32.
இந்தியாவின் இயற்கை பிரிவுகளை எழுதவும்.
33.
மத்திய அமெரிக்காவின் ஐந்து குடியரசு நாடுகள் யாவை?
34.
சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பு தருக.
35.
பிரதம அமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
36.
கூட்டு நிறுவனம் என்றால் என்ன?
37.
முகவுரை என்றால் என்ன?
38.
வேறுபடுத்துக - நிகர நாட்டு உற்பத்தி (NNP) மற்றும் நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)
39.
நவீன உலகமயமாக்கல் என்றால் என்ன?
40.
"உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?
41.
GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.
42.
மனித வள மேம்பாடு என்றால் என்ன?
43.
கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
44.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
45.
இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக
46.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.
47.
'ஜெட் காற்றோட்டங்கள்’ என்றால் என்ன?
48.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக
49.
அயோத்தி தாசர் இலங்கை சென்றபோது நடந்த நிகழ்வு என்ன?
50.
குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
51.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
52.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.
53.
54.
ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.
1.
1) எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
2) உதாரணம்: திரைப்படம் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பூங்காக்கள் போன்றவை ஆகும்.
2.
1) தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) தேசிய மக்கள் தொகையின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநரின் தனித்துவமான அடையாள என்னை (UIN) வெளியிடுவதற்கு 10 விரல்கள் கைரேகை, இரண்டு கருவிழிகள் மற்றும் முகப்பதிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் பதிவேட்டில் பதிவிடப்படுகிறது.
3.
பூடான் நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். அதனால் கடல் சார்ந்த தொடர்புகளுக்கு இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது. பூடானின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்தியா முதன்மைப் பங்காற்றுகிறது. இந்தியா 'பாரத் முதல் பூடான் வரை' (B2B) என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அறிவித்தது.
4.
1) சீனாவுடனான நட்புறவு - கிழக்கு நோக்கு கொள்கை (1992)
2) பொக்ரான் (ராஜஸ்தானில்) நடைபெற்ற இரண்டாவது அணுசோதனை (1998)
3) இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்தலுக்கான உறவு.
4) அரபு நாடுகள் மற்றும் ஈரானுடன் எரிசக்தி ஆற்றல் வள தூதரக உறவு.
5) அமெரிக்காவின் அணு ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்
6) சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியாவின் வாக்களிப்பு.
5.
1. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.
2. மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
3. இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும், அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
6.
1) பருப்பு வகைகள் புரதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன. கொண்டைக்கடலை, உளுந்து, பச்சை பயிறு, துவரம் பருப்பு மற்றும் கொள்ளு ஆகியன தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பருப்பு வகைகளாகும்.
2) வறண்ட நிலப்பகுதிகளில் நீர்ப்பாசன வசதியுடனோ அல்லது நீர்பாசனமின்றியோ பயிரிடப்படுகிறன. மிதமான குளிர்கால நிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு இங்கு பயிரிட உகந்த சூழல்களாகும்.
3) சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.
7.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்மொழி இலக்கியங்களான தனித்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் இசை இயக்கம் போன்றவைகள் சமஸ்கிருதத்தின் செல்வாக்கிற்கு ஆட்படாத தூய தமிழை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தின.
8.
1884 மே 16இல் M.வீரராகவாச்சாரி, P.ஆனந்தசார்லு, P.ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக R.ரங்கையா பொறுப்பேற்றார்.
9.
பாலக்காட்டு கணவாய், செங்கோட்டைக் கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் மற்றும் அச்சன்கோவில் கணவாய் ஆகியன இத்தொடரின் முக்கிய கணவாய்களாகும்.
10.
வகுப்புவாரி ஒதுக்கீடு:
1932 ஆகஸ்ட் 16ஆம் நாள் வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார். முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட வகுப்பினர் என சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதிகளை இது வழங்கியது.
பூனா ஒப்பந்தம்:
1932 செப்டம்பர் 20ஆம் நாள் காந்தியடிகள் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தொடங்கினார்.
தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
11.
1. அந்நியப் பொருட்களைப் பறக்கணிப்பது.
2. அரசுப்பள்ளிகள், கல்லூரிகளைப் புறக்கணிப்பது.
3. நீதிமன்றங்கள், பட்டங்கள் மற்றும் அரசு வேலைகளைப் புறக்கணிப்பது.
4. சுதேசி தொழிற்சாலைகளை மேம்படுத்துவது.
5. பொறுத்துக்கொள்ளும் அளவைத் தாண்டி ஆங்கிலேயரின் அடக்குமுறை இருக்குமேயானால் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு ஆயத்தமாவது என்பனவாகும்.
12.
1. கட்டபொம்மனின் கலகம் 1799இல் ஒடுக்கப்பட்ட போதும் 1800இல் மீண்டும் கலகம் வெடித்தது. பிரிட்டிஷாரின் குறிப்புகளில் இது இரண்டாவது பாளையக்காரர் போர் என்று குறிப்பிடப்படுகிறது.
2. இப்போரானது சிவகங்கையின் மருதுபாண்டியர், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், மலபாரின் கேரள வர்மா, மைசூரின் கிருஷ்ணப்பா மற்றும் துண்டாஜி ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பால் வழிநடத்தப்பட்டது.
13.
வரி என்பது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணம் ஆகும்.
14.
1. நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக் கொள்வதில், ஆட்களை ஏற்பதில் பல வரையறைகள் பின்பற்ற நேரிடுகிறது.
2. பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும், கூலியை அதிகரிக்க வாய்ப்பில்லாததாலும் வறுமையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.
15.
1. விவசாய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்திடல்.
2. விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துதல்,
3. ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் விவசாயிகளின் வருமான நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
4. விவசாயத்துறையின் அனைத்து வட்டங்களிலும், விரிவான வளர்ச்சியடைதல் போன்ற காரணங்களுக்காக புதிய வேளாண் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
16.
1) உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா (Make in India, Skill India) திட்டங்களில் பங்களிக்கவும், ஜப்பானிய உற்பத்தித் திறன்களை வழங்கி இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறை தரத்தை மேம்படுத்தவும், 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
2) 2017 ஆம் ஆண்டு குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் ஜப்பான் - இந்தியா உற்பத்தி நிறுவனம் (JIM) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
17.
1) சுதந்திரம் அடைந்தது முதல் 1950 மற்றும் 1960 களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு வழிகாட்டுதலின்படி முக்கிய குறிக்கோள்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
2) நீண்டகாலமாக காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகள் பொருளாதார மேம்பாடு தொடர்பாக கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டன.
3) எனவே சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) ஆகியவற்றின் ஏதேனும் ஒரு முகாம்களில் சேர்வது அவசியமாயிற்று.
18.
1) ஒரு பெரிய அளவிலான விலங்கு கூட்டம் அல்லது மந்த கூட்டம் கட்டுப்பாடற்ற நிலையில் ஒரே சமயத்தில் ஒரே திசையை நோக்கி ஓடுவதால் கூட்டநெரிசல் ஏற்படுகிறது.
2) சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பெருமாள் கோவில் 40 வருடங்களுக்கு பிறகு குன்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சுவாமிக்கு வெகு விமரிசையாக 48 நாட்கள் திருவிழா எடுக்கப்பட்டது. சாமியை தரிசிப்பதற்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்ட நெரிசலில் சுமார் 4 பேர் இறந்துவிட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
19.
1. கிழக்கே வங்காள விரிகுடா
2. மேற்கே கேரளா
3. வடக்கே ஆந்திரப்பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும்
4. தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ் நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன.
20.
நீதிக்கட்சி 1926இல் இந்துசமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது. அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோயில்களின் நிர்வாகக்குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
21.
(i) தமிழ்நாட்டு அரசியலில் ஈ.வெ.ரா முக்கியப் பங்கு வகித்தார். கதரின் பயன்பாட்டை மேம்படுத்தி அதன் விற்பனையை அதிகரிக்கத் தீவிரமாகச் செயல்பட்டார்.
(ii) கள்ளுண்பதற்கு தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் தனக்குச் சொந்தமான தோப்பிலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினார்.
(iii) வைக்கம் என்னும் ஊரில் நடைபெற்ற கோவில் நுழைவுக்கான சத்தியகிரகத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சார்ந்த மக்கள் நடமாடக்கூட முடியாத அல்லது உயர்சாதி மக்களிடமிருந்து குறிப்பிட்ட தூரம் விலகியே நின்ற வேண்டிய வேண்டிய காலகட்டமது.
(iv) கேரளாவின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஈ.வெ.ரா அங்கு சென்று அவ்வியக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
(v) 1925 ஜூன் மாதத்தில் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியிருந்த வீதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
22.
1932 ஆம் ஆண்டு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
முக்கிய விதிமுறைகள்:
1. தனித் தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன மாறாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
2. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71லிருந்து 148ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப்பேரவையில் 18 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.
23.
ஆக்கப்பூர்வ சுதேசி இயக்கம்:
1. ஆக்கப்பூர்வ திட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுய உதவியையே வலியுறுத்தின.
2. ஆங்கிலேய ஆட்சியின் கட்டுப்பாட்டில் சிக்காமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய உள்ளாட்சி அமைப்புக்களை மாற்றாக உருவாக்குவது குறித்து அது கவனம் செலுத்தியது.
3. மக்களை சுயமாக வலுவாக்க வேண்டிய அவசியம் குறித்து அது வலியுறுத்தியது.
4. அதனால் அரசியல் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன் மதிப்பு வாய்ந்த குடிமகனை உருவாக்க முடியும்.
5. துணிகள், கைத்தறி ஆடைகள், சலவைக்காரம் (சோப்கள்), மண்பாண்டங்கள், தீப்பெட்டி, தோல்பொருட்கள் ஆகியன எங்கும் பரவியிருந்த சுதேசி கடைகளில் விற்கப்பட்டன.
24.
1. மருது சகோதரர்கள் ஜூன் 1801 இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.
2. இதுவே "திருச்சிராப்பள்ளி பேரறிக்கை" என்று அழைக்கப்படுகிறது.
3. பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே இப்பேரறிக்கை ஆகும்.
4. இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன் சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
5. ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழக பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.
6. சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரட்டினார்.
7. வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன.
8. புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள்.
9. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
25.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதி அல்லது முழுப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து மற்றும் பகுப்பாய்வு செய்து மக்களியல் பற்றி விவரங்களை அளித்தல் ஆகும்.
26.
பார்சி என்பவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் படிப்பறிவு பெற்றிருந்த பார்சிகளின் சமயக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஈரானிலிருந்து பத்தாம் நூற்றாண்டில் குடிபெயர்ந்து வந்த ஜொராஸ்டியர்கள்
27.
அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது. இத்தாது நீரேற்ற அலுமினிய ஆக்சைட் உள்ள பாறைகளில் காணப்படுகிறது. குறைந்த எடை மற்றும் கடினத்தன்மைக் கொண்ட பண்புகளால் அலுமினியமானது விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
28.
(i) டாக்டர் சன்யாட் சென் 1866 ஆம் ஆண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் சான்டன் நகரத்தின் அருகே பிறந்தார்
(ii) இவர் 'சீனாவின் தந்தை' என அழைக்கப் பெற்றார் ஒரு கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பெற்றதோடு கிறிஸ்தவராக மாறினார். ஹாங்காங் நகரில் மருத்துவ பயிற்சி பெற்றார்
(iii) மஞ்சுக்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு அவ்வெழுச்சி தோற்றத்தால் அவர் நாடு திறந்து வாழும் நிலை ஏற்பட்டது இவர் 1866 முதல் 1925 வரை வாழ்ந்தார்
29.
இந்தியாவின் நீர்ப்பாசன வகைகள்
1) கால்வாய் நீர்ப்பாசனம்
2) கிணற்றுப் பாசனம் மற்றும்
3) ஏரிப்பாசனம்
30.
(i) உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள் புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி (International Bank of Reconstruction and Development - IBRD) மற்றொன்று பன்னாட்டு வளர்ச்சி முகமை (International Development Association - IDA) ஆகியனவாகும்
(ii) இவையிரண்டுமே உலக வங்கி என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது
31.
உயிர்கோள பெட்டகம் என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று மக்கள் இவற்றின் ஒருங்கிணைந்த அங்கமாகும். இந்திய அரசாங்கம் 18 உயிர்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
32.
இந்தியாவின் இயற்கை அமைப்பை 6 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
1) இமயமலைகள்
2) பெரிய இந்திய வட சமவெளிகள்
3) தீபகற்ப பீடபூமிகள்
4) இந்திய பாலைவனம்
5) கடற்கரைச் சமவெளிகள்
6) தீவுகள்
33.
மத்திய அமெரிக்காவை ஐந்து குடியரசுகளாகப் (கோஸ்டாரிக்கா, எல் சால்வடார், கவுதமாலா, ஹாண்டுராஸ், நிகராகுவா) பிரிந்தது
34.
(i) 1862 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் நாளைத் தாங்கிய விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட சென்னை பம்பாய் கல்கத்தா ஆகிய மூன்று உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றாகும்.
(ii) சென்னை உயர்நீதிமன்றம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
35.
(i) மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராக குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(ii) மற்ற அமைச்சர்களை பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
36.
கூட்டு நிறுவனம் என்பது பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிற்சார் நிறுவனமாகும். தனக்கு நன்மை பயக்கும் விகிதத்தில் பொருட்களின் விநியோகம், விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்.
37.
(i) முகவுரை என்ற வார்த்தை அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முகவுரை என்பதைக் குறிக்கிறது. இது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது.
(ii) மேலும் இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டது. இது பெரும் மதிப்புடன் அரசியலமைப்பின் திறவுகோல் என விவரிக்கப்படுகிறது.
38.
| நிகர நாட்டு உற்பத்தி (NNP) | நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) |
| மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பணமதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும். | நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தை கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும். |
| நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP)-தேய்மானம் | நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-தேய்மானம். |
39.
19 ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கலின் வருகை நவீன வடிவத்தை நெருங்கியது. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன. அவை இந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டது.
40.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) முக்கிய குறிக்கோள்கள் :
1. அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
2. வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
3. வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்
4. நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்
5. உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்
6. முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்
7. முழுவேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்
41.
GDP யின் முக்கியத்துவம்:
1. பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.
2. பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
3. உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்குப் பயன்படுகிறது.
4. வாங்கும் திறன் மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
5. பொதுத்துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகிறது.
6. பொருளாதாரத் திட்டமிட வழிகாட்டியாகவும் பயன்படுகிறது.
42.
மனித வள மேம்பாடு: மனித வள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம், அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல் முறையாகும்.
43.
கனிமங்கள்
ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும். இவை புவியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது.
வகைகள்
வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
i. உலோகக் கனிமங்கள்
ii. அலோகக் கனிமங்கள்
44.
ஆளுநரின் தகுதிகள் :
ஆளுநர் பதவிக்கு தேவையான தகுதிகள் பின்வருவன.
1. அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
3. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
4. அவர், இலாபம் தரும் எந்தத் தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
45.
1) காரிஃப் பருவம் - ஜூன் - செப்டம்பர்
2) ராபி பருவம் - அக்டோபர் - மார்ச்
3) சைத் பருவம் - ஏப்ரல் - ஜூன்
46.
1. இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
2. நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும் பங்குகொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
47.
1.வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் "ஜெட் காற்றுகள்" எனப்படும்.
2. ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, உப அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் தென்மேற்குப் பருவக்காற்று உருவாகின்றது.
3. கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்றுக் காலங்களில் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
48.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள்:
மேற்கு : பாகிஸ்தான்,
வடமேற்கு : ஆப்கானிஸ்தான்,
வடக்கு : சீனா, நேபாளம், பூடான்
கிழக்கு : மியான்மர், வங்காளதேசம்
49.
(i) அயோத்தி தாசர் 1898 இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்
(ii) அதே ஆண்டில் பௌத்தமதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமத்துவத்தைக் கட்டமைப்பதற்காக சாக்கிய பௌத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்
(iii) பிராமணர்களால் இழிவு படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோர் என்பவர்களே உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்
50.
1. சிட்டிசன் (citizen) என்னும் சொல் 'சிவிஸ்' (Civis) எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
2. இதன் பொருள் 'ஒரு நகர அரசில் வசிப்பவர்" என்பதாகும்.
3. இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
51.
1. மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
2. இத்திட்டம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
52.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை 1919:
1919 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் கையெழுத்தான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையோடு முதல் உலகப்போர் முடிவுற்றது அதன் சரத்துக்கள் ஜெர்மன் மக்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
(i) ஜெர்மனி தனது மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய எல்லைகளில் பல பகுதிகளை விட்டுத்தரக் கட்டாயப்படுத்தப்பட்டது
(ii) ஜெர்மனி ஆயுதக் குறைப்புக்கு உள்ளாக்கப்பட்டு மிக்க குறைந்த அளவிலான படைகளை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. (காலாட்படை, கப்பற்படை, விமானப்படை)
(iii) நேச நாடுகளுக்கு போரில் ஏற்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்களின் உயிர் இழப்பிற்காக ஜெர்மனி நஷ்டஈடு வழங்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. போர் இழப்பானது 10 மில்லியன் டாலர் என இங்கிலாந்தாலும், 16 மில்லியன் டாலர் என அமெரிக்காவிலும் கணக்கிடப்பட்டது
53.
54.
1. ரஷ்யப் புரட்சி உலக மக்களின் கற்பனையைத் தூண்டியது.
2. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கப்பட்டன.
3. ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு காலனி நாடுகளை விடுதலைக்காகப் போராட ஊக்குவித்தது.
4. நிலச்சீர்த்திருத்தம், சமூகநலன், தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் போன்ற இன்றியமையாதவை குறித்த விவாதங்கள் உலகளவில் நடைபெறத் தொடங்கின.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards