10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/05/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - I (10th Standard Science Model Question Paper Part - I)
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
மின்சுற்று என்றால் என்ன?
2.
பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.
(i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
(ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
(iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?
3.
அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?
4.
Al2(SO4)3 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).
5.
அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
6.
ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?
7.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
8.
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
9.
200 K வெப்பநிலையில் எஃகுத் துண்டின் நீளம் 2மீ. 250 K ல் அதன் நீளம் 0.1மீ அதிகரிக்கிறது எனில், பரும வெப்ப விரிவு குணகத்தைக் காண்க.
10.
மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.
11.
12.
ABO இரத்த வகைகளைப் பற்றி குறிப்பெழுதுக.
13.
CH3–CH2–CH2–OH. என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசைக்கிரமமாக எழுதுக.
14.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
15.
16.
வேறுபடுத்துக:
அ. உடல் செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
ஆ. மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
17.
மைலின் உறை உள்ள மற்றும் மைலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.
18.
லென்சு சமன்பாடு குறிப்பு வரைக.
19.
எய்ட்ஸ் நோயினை கண்டறிவதற்கான சோதனைகளை கூறு?
20.
தாஜ்மகால் எவ்வாறு அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது?
21.
எத்தனாலின் பயன்களை எழுதுக.
22.
ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.
23.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.
24.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
25.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
26.
எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பு அடிப்படையாகக் கொண்டது.
பிணைப்பு ஆற்றல்
எலக்ட்ரான் ஆற்றல்
அயனியாக்கும் ஆற்றல்
மேற்கண்ட அனைத்தும்
27.
இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் உண்டாவது _________________
டயாபடீஸ் மெலிடஸ்
தசை இறுக்கம்
தைராய்டு குறைபாடு
கிரிட்டினிசம்
28.
_________________ என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும்.
மெனிஞ்சைடிஸ்
மையலின் உறை
பையா மேட்டர்
அரக்னாய்டு உறை
29.
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து அம்மோனியா உருவாகும் வினை _______________ வினைக்கு உதாரணம்.
வெப்பச்சிதைவு
சேர்க்கை வினை
வீழ்ப்படிவாக்கல்
இடப்பெயர்ச்சி
30.
திண்மத்தில் திண்மம் உள்ளவற்றிற்கு எடுத்துக்காட்டு
சோடா நீர்
கற்பூரத்தில் உள்ள வாயு
கரி
உலோகக் கலவை
31.
கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் _______ எனப்படும்.
கோப்பு
கோப்புத் தொகுப்பு
தட்டு
வெளியீடு
32.
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ________ ஆகும்.
IR 8
IR 24
அட்டாமிட்டா 2
பொன்னி
33.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவிலென்சானது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணைக்கற்றைகளை உருவாக்கும்
நிறக் கற்றைகளை உருவாக்கும்.
34.
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
35.
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்த சேர்மத்தின் வகை ___.
அல்கேன்
அல்கீன்
அல்கைன்
ஆல்கஹால்
36.
மின்தடையின் SI அலகு ______.
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
37.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
X அல்லது –X
Y அல்லது –Y
(அ) மற்றும் (ஆ)
(அ) அல்லது (ஆ)
38.
எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?
1.
(i) மின்சுற்று என்பது மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலையமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதையாகும்.
(ii) மின்சாதனங்களையும் மின்னூட்டத்தின் மூலமான மின்கலத்தையும் இணைக்கும் பாதைகளாக மின்கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iii) மின்கலம், மின் விளக்கு, சாவி ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு எளிய மின்சுற்று படத்தில் காட்டப்பட்டுள்ளது.
2.
(i) B மற்றும் D அல்கைன்கள் தொகுதியைச் சேர்ந்தவை.
(ii) E மற்றும் F ஹைட்ரோ கார்பன்கள் அல்ல.
3.
(i) அட்டையின் தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசம், பரவல் முறையில் நடைபெறுகிறது.
(ii) நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தால் பரவுகிறது.
(iii) உப்பைக் கொட்டுவதினால் உப்பு, நீரை உறிஞ்சிவிடுகிறது. மேலும் வாயு பரிமாற்றம் தடையாகிறது. இதனால், அட்டையின் உடல் உலர்ந்து அது இறந்து விடுகின்றது.
4.
Al2(SO4)3 - ன் மூலக்கூறு நிறை = Al x 2 + 3 [S × 1 + O x 4]
= 27 × 2 + 3 [ 32 × 1 + 16 ×4]
= 54 + 3 [32 + 64]
= 54 + 3 [96] = 342 கி
ஆக்சிஜனின் நிறை = 12 ஆக்சிஜன்
= 12 × O
= 12 × 16 = 192

Al2(SO4)3 ல் ஆக்சிஜன் நிறை சதவீதம்\(=\frac { 192 }{ 342 } \times 100=56.14 \%\)
5.
அ) அயனிப் பிணைப்பு
ஆ) எலக்ட்ரான் கவர்தன்மை
இ) தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும்.
தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது.
6.
1. ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரிகளாகக் கருதப்படுகிறது.
2. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது.
3. ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவ பற்களையும் பெற்றிருந்தது.
4. எனவே ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக கருதப்படுகிறது.
7.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
8.

1. Script tab-ல் Events option ஐ தேர்வு செய்க.


3. Script tab-ல் looks option ஐ தேர்வு செய்க. Say " " என்ற block ஐ Script area விற்குள் இழுத்து வைக்கவும்

4. Say tab-னுள் “Hello” என்ற வார்த்தையை தட்டச்சு செய்யவும்.

5. Script tab -> Sounds option ஐ தேர்வு செய்க. “Play sound” block ஐ இழுத்து Script Area வினுள் விடவும். Audio file லிருந்து “Hello” sound ஐ தேர்வு செய்யவும்.

6. File menu -> Save தேர்வு செய்க. இப்போது உங்கள் Project சேமிக்கப்படும்.
7. நிரலை இயக்க வலது மேல் ஓரத்தில் உள்ள பச்சை நிறக் கொடியை click செய்யவும்.


9.
கொடுக்கப்பட்டவை:
எஃகுத் துண்டின் நீளம் L=2மீ
தொடக்க வெப்பநிலை (Ti)=200 K
இறுதி வெப்பநிலை (Tf) =250K
ΔT =Tf - Ti
வெப்பநிலை உயர்வு,
ΔT =250-200
=50 K
நீளத்தில் ஏற்படும் மாற்றம்,
ΔL=0.1 மீ
கண்டறிய:
நீள் வெப்ப விரிவு குணகம் =αL=?
αL=\(\frac { 0.1 }{ 2 } \times \frac { 1 }{ 50 } \)
αL=0.001 K-1
பரும வெப்ப விரிவு குணகம்
=3 x நீள் வெப்ப விரிவு குணகம்
αv =3 x αL =3 x 0.001 =0.003 K
10.
| நிலை 1: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் மேலே நகர்கிறது. |
நிலை 2: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது. |
நிலை 3: மின்தூக்கி ஓய்வில் உள்ளது (a =0) முடுக்கம் சுழியாகும். |
நிலை 4: மின்தூக்கி புவி ஈர்ப்பு முடுக்க மதிப்பில் கீழே தடையின்றி விழுகிறது. (a=g) |
| R -W = Fதொ = ma R=W+ma R=mg+ma R=m(g+a) |
W-R=Fதொ=ma |
முடுக்கம் சுழியாகும் (a=0) W-R=Fதொ=0 R=W R=mg |
R=W-ma |
| R>W | R |
R=W | R=0 |
| தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட அதிகம். |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட குறைவு. |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடைக்கு சமம். | தோற்ற எடையின் மதிப்பு சுழியாகும். |
11.
12.
(i) கார்ல் லேண்ட்ஸ்டீனர் (1900) இரத்த வகைகளைக் கண்டறிந்தார். இவர் A, B மற்றும் O இரத்த வகைகளை அடையாளம் கண்டறிந்தார். டி காஸ்டிலோ மற்றும் ஸ்டெய்னி (1902) AB இரத்த வகையினை கண்டறிந்தார்.
(ii) மனித இரத்தத்தில் சில தனிச் சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜன் (Ag) மற்றும் அக்ளுட்டினின் (அ) எதிர்பொருள்கள்
(ஆன்டிபாடி) காணப்படுவதன் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக அறியலாம். இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.
(a) 'A' வகை: ஆன்டிஜென் A-RBC யின் மேற்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி B-இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
(b) 'B' வகை: ஆன்டிஜென் B-RBC யின் மேற்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி A-இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
(c) 'AB' வகை: ஆன்டிஜென் A மற்றும் B - RBC யின் மேற்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில் காணப்பட மாட்டாது.
(d) 'O' வகை: ஆன்டிஜென் A மற்றும் B-RBC யின் மேற்பரப்பில் காணப்படாது. ஆனாலும் அதற்கான ஆன்டிபாடி A மற்றும் B பிளாஸ்மாவில் காணப்படும்.
13.
CH3–CH2–CH2–OH
படி 1: இது மூன்று கார்பன் இருக்கும் சங்கிலித் தொடர். எனவே அடிப்படைச் சொல் "புரப்" ஆகும்.
படி 2: கார்பன்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை பிணைப்புகளாக இருப்பதால் "யேன்" என்ற முதன்மை பின்னோட்டைச் சேர்க்க வேண்டும்.
படி 3: கார்பன் சங்கிலித் தொடரில் -OH தொகுதி இருப்பதால் இது ஒரு ஆல்கஹால். எனவே -OH தொகுதி அண்மையில் அமையும் விதமாக கார்பன் அணுவிலிருந்து எண்ணிடுதலை தொடங்க வேண்டும்.
3 2 1
CH3–CH2–CH2–OH
படி 4: OH தொகுதியின் இட எண் 1. எனவே இரண்டாம் நிலை பின்னொட்டாக '1- ஆல்' சேர்க்க வேண்டும். எனவே சேர்மத்தின் பெயர்.
புரப் + யேன் + (1- ஆல் ) = புரப்பேன் -1- ஆல்
14.

1. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு கணக்கிட வேண்டிய திரவத்தினை கொள்கலனில் நிரப்பி சோதனையை தொடங்கலாம்.
2. இப்பொழுது கொள்கலனில் உள்ள திரவத்தின் நிலையை L1 எனக் குறித்துக் கொள்ளலாம்.
3. பிறகு கொள்கலன் மற்றும் திரவத்தினை படத்தில் காட்டியுள்ளவாறு வெப்பப்படுத்தப்படுகிறது.
4. தொடக்கத்தில் கொள்கலனானது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும்.
5. அப்போது திரவத்தின் பருமன் குறைவதாகத் தோன்றும். இப்போது இந்த நிலையை L2 எனக் குறித்துக் கொள்ளலாம்.
6. மேலும் வெப்பப்படுத்தும்போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையை L3 எனக் குறித்துக் கொள்ளலாம்.
7. நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L3 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
8. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
9. உண்மை வெப்ப விரிவு = L3 - L2
10. தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
15.
16.
அ)
| வ.எண் | உடல் செல் ஜீன் சிகிச்சை | இனச்செல் ஜீன் சிகிச்சை |
| 1 | உடல் செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் | இனப்பெருக்க செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் |
| 2 | இந்த திருத்தம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே நன்மை பயக்கும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதில்லை | நோயாளிக்கு நன்மை பயக்கும் மற்றும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படும். |
ஆ)
| வ.எண் | மாறுபாடு அடையாத செல்கள் | மாறுபட்ட செல்கள் |
| 1 | மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு செல் வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு. | மாறுபாடு அடைந்து வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும். |
17.
| வ. எண் | மைலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழை | மைலின் உறையற்ற நரம்பு நாரிழை |
|---|---|---|
| 1. | இதற்கு மைலின் உறையுடைய அல்லது ஆக்ஸான் நியூரான் என்று பெயர். | இதற்கு மைலின் உறையற்ற அல்லது சாம்பல் நிற ஆக்ஸான் என்று பெயர். |
| 2. | இது மூளையின் வெண்மை நிறப்பகுதியில் காணப்படும். | இது மூளையின் சாம்பல் நிற பகுதியில் காணப்படும். |
| நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். | நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டு இருக்காது. |
18.
(i) கோளக லென்சுகளுக்கு லென்சு சமன்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
(ii) இச்சமன்பாடு பொருளின் தொலைவு (u), பிம்பத்தின் தொலைவு (v) மற்றும் குவியத் தொலைவு (f) ஆகியவற்றைத் தொடர்புபடுத்துகிறது.
(iii) லென்சு சமன்பாடானது,
\(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)
19.
(i) எலைசா சோதனை
(ii) வெஸ்டர்ன் பிளாட் சோதனை
20.
மதுரா எண்ணெய் நிறுவனத்திலிருந்து வெளிவரும் சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் தாஜ்மகாலின் வெண்ணிற பளிங்கு கற்களின் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளது.
21.
(i) மருத்துவமனைகளில் காயங்களைத் துடைத்து எடுக்கும் கிருமித்தடுப்பானாக பயன்படுகிறது.
(ii) வாகனங்களிலுள்ள குளிர்விப்பானில் தண்ணீர் உறைவதைத் தடுப்பதில் பயன்படுகிறது.
(iii) காயங்களில் கிருமி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
22.
| வ.எண் | ஒலி அலைகள் | ஒளி அலைகள் |
|---|---|---|
| 1. | பரவுவதற்கு ஊடகம் தேவை | பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை |
| 2. | நெட்டலைகள் | குறுக்கலைகள் |
| 3. | அலை நீளம் 1.65 செ.மீ. முதல் 1.65 மீ வரை | அலை நீளம் 4 x 10-7 மீ முதல் 7 x 10-7 மீ |
| 4. | ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்(NTP) | ஒலி அலைகள் 3 x 108 மீவி-1 திசைவேகத்தில் பரவும் |
23.
(i) ஹைட்ரஜன் குளோரைடு (HCl)
(ii) ஹைட்ரஜன் அயோடைடு (HI).
24.
1. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)
2. ஒரு கூலூம் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்கு வெட்டுப்பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

25.
| மீள் வினை | மீளா வினை | |
|---|---|---|
| அ) | தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். | முன்னோக்கு வினை மட்டுமே நடைபெறும் |
| ஆ) | முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். | ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும். |
| இ) | வினையானது சமநிலை அடையும். | வினையானது சமநிலை அடையாது. |
| ஈ) | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது. | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக் கூடியது. |
| உ) | இவ்வினை மெதுவாக நடைபெறும். | வேகமாக நடைபெறும். |
26.
(d)
மேற்கண்ட அனைத்தும்
27.
(a)
டயாபடீஸ் மெலிடஸ்
28.
(a)
மெனிஞ்சைடிஸ்
29.
(b)
சேர்க்கை வினை
30.
(d)
உலோகக் கலவை
31.
(a)
கோப்பு
32.
(a)
IR 8
33.
(c)
இணைக்கற்றைகளை உருவாக்கும்
34.
(b)
தண்டு
35.
(b)
அல்கீன்
36.
(c)
ஓம்
37.
(c)
(அ) மற்றும் (ஆ)
38.
பிளாஸ்மா, புரதம், வெள்ளை இரத்த செல்கள்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards