10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/05/2020
10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - III (10th Standard Maths Model Question Paper Part - III)
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5,10,15,20,25 என்ற எண்களின் திட்டவிலக்கம் காண். மேலும் 3 என்ற எண்ணை ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைக்கும் எண்களின் திட்ட விலக்கம் காண்.
2.
செவ்வக வடிவ தொட்டியின் கொள்ளளவு 28மீx16மீ x 11மீ ஆரமும் கொண்ட உருளையின் உயரம் என்ன?
3.
எந்த ஒரு மிகை ஒற்றை முழு எண்ணும் 4q+1 அல்லது 4q+3, என்ற வடிவில் அமையும் என நிறுவுக.
4.
குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?
5.
படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க
6.
BC -யின் மையப்புள்ளி D மற்றும் AE ⊥ BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
b2 + c2 = 2p2 + \(\frac { { a }^{ 2 } }{ 2 } \) என நிரூபிக்க.
7.
சரிவகம் ABCD AB||CD, E மற்றும் F என்பன முறையே இணையற்ற பக்கங்கள் AD மற்றும் BC -ன் மீது அமைந்துள்ள புள்ளிகள், மேலும் EF||AB என அமைந்தால் \(\frac { AE }{ ED } =\frac { BF }{ FC } \) என நிறுவுக
8.
\(A=\left[\begin{matrix} \sqrt { 7 } \\ -\sqrt { 5 } \\ \sqrt { 3 } \end{matrix}\begin{matrix} -3 \\ 2 \\ -5 \end{matrix} \right] \) எனில், –A-யின் நிரை நிரல் மாற்று அணியைக் காண்க.
9.
ஒரு கோபுரம் தரைக்குச் செங்குத்தாக உள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதியிலிருந்து தரையில் 48 மீ தொலைவில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து கோபுர உச்சியின் ஏற்றக்கோணம் 30° எனில், கோபுரத்தின் உயரத்தைக் காண்க.
10.
12y = − (p + 3)x +12, 12x−7y = 16 ஆகிய நேர்க்கோடுகள் ஒன்றுகொன்று செங்குத்து எனில் ‘p’- யின் மதிப்பைக் காண்க.
11.
ஓர் உள்ளீடற்ற மர உருளையின் வெளிப்புற ஆரம் மற்றும் நீளம் முறையே 16 செ.மீ மற்றும் 13 செ.மீ ஆகும். அதன் தடிமன் 4 செ.மீ எனில் உருளையின் மொத்தப் புறப்பரப்பு எவ்வளவு?
12.
9 tan2θ-9sec2θ=
1
0
9
-9
13.
(1 + tan2 θ)(1 - sin θ)(1 + sin θ) =
cos2θ-sin2θ
sin2θ-cos2θ
sin2θ + cos2θ
cos2θ-sin2θ
14.
(a + b)(a - b)(a2 - 2b + b2)(a2 + ab + b2) =
a6 + b6
a6 - b6
a3 - b3
a3 - b3
15.
A ன் வரிசை 3 x 4 மற்றும் B ன் வரிசை 4 x 3 எனில் BA ன் வரிசை
3 x 3
4 x 4
4 x 3
வரையறுக்கப்படவில்லை
16.
கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 900 மற்றும் AD 丄 BC எனில்,

BD.CD = BC2
AB.AC = BC2
BD.CD = AD2
AB.AC = AD2
17.
\(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் _____.
\(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)
\(\cfrac { x^{ 2 }+7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)
\(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
\(\cfrac { { x }^{ 2 }+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
18.
(1 + tan θ + sec θ)(1 + cot θ - cosec θ)-ன் மதிப்பு _____.
0
1
2
-1
19.
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m - 117 என்ற வடிவில் எழுதும்போது, m -யின் மதிப்பு _____.
4
2
1
3
20.
p சிவப்பு, q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது ______.
\(\frac { q }{ p+q+r } \)
\(\frac { P }{ p+q+r } \)
\(\frac {p + q }{ p+q+r } \)
\(\frac { p+r }{ p+q+r } \)
21.
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது_______.
எப்பொழுதும் மிகை எண்
எப்பொழுதும் குறை எண்
பூச்சியம்
பூச்சியமற்ற முழுக்கள்
22.
(12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு \(\frac 18\) எனில், ‘a’ –யின் மதிப்பு _______.
1
4
-5
2
23.
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ______ மடங்காகும்.
π
4π
3π
2π
24.
f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.
f(xy) = f(x).f(y)
f(xy) ≥ f(x).f(y)
f(xy) ≤ f(x).f(y)
இவற்றில் ஒன்றுமில்லை
25.
f: A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
26.
\(\Sigma x=99,n=9,\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79\) எனில்
(i) \({ \Sigma x }^{ 2 }\)
(ii) \(\Sigma \left( x-\bar { x } \right) \)
27.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
28.
ஒரு கூட்டுத் தொடரின் 3ம் உறுப்பு 5; 7வது உறுப்பு 9 எனில் அந்த A.P ஐக் காண்க.
29.
f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.
30.
A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.
31.
BL மற்றும் CM செங்கோணம் A வில் உள்ள முக்கோணம் ABC ன் நடுக்கோடுகள் 4(BL2 + CM2) = 5BC2 என நிரூபிக்க
32.
விமானம் ஒன்று புவிப் பரப்பிற்கு இணையாக 600 மீ உயரத்தில் 175 மீ/வி வேகத்தில் செல்கிறது. புவியின் மீது ஒரு புள்ளியிலிருந்து விமானத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் 37ϒ ஆகும். அதே புள்ளியிலிருந்து ஏற்றக்கோணம் 53°-க்கு அதிகரிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும்? (tan53° =1.3270, tan 37° = 0.7536)
33.
இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில், குறைந்தது ஒரு பெண் குழந்தையாவது இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க?
34.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொது உறுப்புகளையுடைய கூட்டுத் தொடர்வரிசைகளின் முதல் உறுப்பு மற்றும் பொது வித்தியாசம் காண்க.
(i) tn = -3 + 2n
(ii) tn = 4 - 7n
35.
n = 5, \(\overset{-}{x}\) = 6, \(\sum { { x }^{ 2 } } =765\) எனில், மாறுபாட்டுக் கெழுவைக் காண்க.
36.
A(0,5) மற்றும் B(4,1) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோடானது C(4,4) - ஐ மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு எனில்,
(i) AB என்ற கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(ii) C வழியாகவும் AB என்ற கோட்டிற்குச் செங்குத்தாக உள்ள நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(iii) AB என்ற கோடானது வட்டத்தைத் தொடும் புள்ளியைக் காண்க.
37.
\(\cfrac { { x }^{ 2 } }{ { y }^{ 2 } } -10\cfrac {x }{ y } +27-10\cfrac { y }{ x } +\cfrac { { y }^{ 2 } }{ { x }^{ 2 } } \) என்ற கோவையின் வர்க்கமூலம் காண்க.
38.
ஓர் உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உட்புற மற்றும் வெளிப்புற விட்டங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 10செ.மீ ஆகும். அது உருக்கப்பட்டு 14செ.மீ விட்டமுள்ள ஒரு திண்ம உருளையாக்கப்பட்டால், அவ்வுருளையின் உயரம் காண்க.
39.
ஒரு விவரத்தின் S.D 21.2,சராசரி 36.6 அதன் மாறுபாட்டுக் கெழு காண்.
40.
ஒரு மர உருளையிலிருந்து இரண்டு அரைக்கோளங்கள் இரு முனைகளிருந்தும் குடைந்து எடுக்கப்படுகிறது. உருளையின் உயரம் 10 செ.மீ, ஆரம் 3.5செ.மீ எனில் அந்த உருவத்தின் மொத்த புறப்பரப்பு என்ன?
41.
A யிலிருந்து வரையப்பட்ட செங்கோடு பக்கம் BCஐ D யில் DB = 3 CD எனுமாறு ΔABC யில் வெட்டுகிறது. 2AB2 = 2AC2 +BC2 என நிரூபிக்க.
42.
y = 2x2 என்ற வரைபடம் வரைந்து அதன் மூலம் 2x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
1.
| x | \({ d }^{ ' }=\cfrac { x-15 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 5 | -2 | 4 |
| 10 | -1 | 1 |
| 15 | 0 | 0 |
| 20 | 1 | 1 |
| 25 | 2 | 4 |
| \(\Sigma d=0\) | \(\Sigma d'^{ 2 }=10\) |
\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 75 }{ 5 } =15\)
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
A என்பது ஊகச் சராசரி, C என்பது பொதுக் காரணி
இங்கு A =15,C =5
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
= \(\sigma =\sqrt { \left( \cfrac { \Sigma d'2 }{ n } \right) -\left( \cfrac { \Sigma d' }{ n } \right) ^{ 2 }\times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times c } =\sqrt { 2 } \times 5\)
= \(5\sqrt { 2 } \)
3 ஐ ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைப்பது 8,13,18,23,28 என்ற புதிய மதிப்புகள்
| x | \({ d }^{ ' }=\cfrac { x-18 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 8 | -2 | 4 |
| 13 | -1 | 1 |
| 18 | 0 | 0 |
| 23 | 1 | 1 |
| 28 | 2 | 4 |
| \(\Sigma d'=0\) | \(\Sigma { d }^{ '2 }=0\) |
\(\therefore \sigma =\sqrt { \left( \cfrac { \Sigma { d }^{ '{ 2 } } }{ n } \right) -\left( \cfrac { \Sigma { d }^{ ' } }{ n } \right) \times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
திட்டவிலக்கம் மாறவில்லை.
\(\therefore \) ஒரு எண்ணை கூடினாலோ, கழித்தாலோ திட்டவிலக்கம் மாறாது.
2.
உருளையின் கன அளவு=செவ்வக தொட்டியின் கன அளவு
πr2h=28x16x11மீ3
உருளையின் உயரம் h=\(\frac{16\times11}{88}\)=2மீ
3.
முதல் உறுப்பு a என்க, (a ஒரு மிகை ஒற்றை எண்)
எனினும் 0≤r<4, அதனால் கிடைக்கும் மீதி 0,1,2, 3 ஆகும்.
∴ a ஆனது 4q, (அல்லது)4q+1, (அல்லது) 4q+2 (அல்லது)4q+3, இங்கு q ஈவு ஆகும்.
a ஒரு ஒற்றை என்பதால் 4q மற்றும் 4q+2 ஆக இருக்க முடியாது(∵அவை 2ஆல் வகுப்படும்).
எனவே எந்த ஒரு மிகை ஒற்றை குழுவும் 4q+1 அல்லது 4q+3 என்ற வடிவில் அமையும்.
4.
சார்பு அல்ல. குத்துக்கோடு வளைவரையை இரு புள்ளிகளில் சந்திக்கிறது.
5.
PQ||RS
அதனால், ∠P = ∠S (ஒன்றுவிட்ட கோணங்கள்)
∠Q = ∠R
∠PQR = ∠SOR(குத்தெதிர் கோணங்கள் சமம்)
∴ ΔPOQ∼ΔSOR (AAA விதிமுறைப்படி)
6.
\(\angle A E D=90^{\circ}[\because A E \perp B C]\)
\(\mathrm{BC}=\mathrm{a}, \mathrm{AC}=\mathrm{b}, \mathrm{AB}=\mathrm{c}, \mathrm{ED}=\mathrm{x}, \mathrm{AD}=\mathrm{p}\) மற்றும் AE = h என தரப்பட்டுள்ளது.
(1) மற்றும் (2) லிருந்து
\(\mathrm{AC}^2+\mathrm{AB}^2 =\mathrm{AD}^2+\mathrm{BC} \cdot \mathrm{DE}+\frac{1}{4} \mathrm{BC}^2+\mathrm{AD}^2- \)
\(\mathrm{BC} \cdot \mathrm{DE}+\frac{\mathrm{BC}^2}{4} \)
\(=2 \mathrm{AD}^2+2\left(\frac{B C^2}{4}\right) \)
\(\mathrm{AC}^2+\mathrm{AB}^2 =2 \mathrm{AD}^2+\frac{B C^2}{2} \)
\( { b}^2+\mathrm{c}^2 =2 \mathrm{p}^2+\frac{a^2}{2}\)
7.
தரப்பட்டுள்ளது: ABCD என்ற சரிவகத்தில் \(\mathrm{DC} || \mathrm{AB}\) மற்றும் \(\mathrm{EF} || \mathrm{AB}\)
நிரூபிக்க வேண்டியது: \(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
அமைப்பு: AC ஐ இணைக்கும் கோடு. EF ஐ G இல் சந்திக்கிறது.
நிரூபணம்:
ΔADC இல்
\(\mathrm{EG} || \mathrm{DC} \)
\(\Rightarrow \frac{A E}{E D}=\frac{A G}{G C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (1) }
ΔABC இல்
\(\frac{A G}{G C}=\frac{B F}{F C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
8.
\(A=\left[\begin{matrix} \sqrt { 7 } \\ -\sqrt { 5 } \\ \sqrt { 3 } \end{matrix}\begin{matrix} -3 \\ 2 \\ -5 \end{matrix} \right] \)
-A =\(\left[ \begin{matrix} -\sqrt { 7 } & 3 \\ \sqrt { 5 } & -2 \\ -\sqrt { 3 } & 5 \end{matrix} \right] \)
(-A)T = \(\left[ \begin{matrix} -\sqrt { 7 } & +\sqrt { 5 } & -\sqrt { 3 } \\ +3 & -2 & +5 \end{matrix} \right] \).
9.
கோபுரத்தின் உயரம் PQ என்க. PQ = h என்க. கோபுரத்திற்கும் தரையில் உள்ள புள்ளி R - க்கும் இடைப்பட்ட தொலைவு QR என்க.
செங்கோண Δ PQR - ல் ㄥPRQ = 30°
tan θ = \(\frac{PQ}{QR}\) ; tan 30° = \(\frac{h}{48}\)
⇒ \(\frac{1}{\sqrt3}\) = \(\frac{h}{48}\) எனவே, h = 16\(\sqrt3\)
ஆகவே, கோபுரத்தின் உயரம் 16\(\sqrt3\) மீ ஆகும்.
10.
கொடுக்கப்பட்ட கோடுகள்
12y = -(p + 3)x + 12 மற்றும்
12x - 7y = 16
\(\Rightarrow \ (\mathrm{p}+3) \mathrm{x}+12 \mathrm{y}-12=0\) ....(1)
12x - 7y - 16 = 0 .....(2)
\(\therefore \mathrm{a}_1=(\mathrm{p}+3), \mathrm{b}_1=12\) மற்றும் \(\mathrm{a}_2=12, \mathrm{~b}_2=-7\)
கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து என்பதால் \(\mathrm{a}_1 \mathrm{a}_2+\mathrm{b}_1 \mathrm{~b}_2=0\)
(p + 3)(12) + (12)(-7) = 0
12[p + 3 - 7] = 0
p - 4 = 0
p = 4
11.
உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற ஆரம் R = 16 செ.மீ
நீளம் h = 13 செ.மீ
தடிமன் R - r = 4.
\(\Rightarrow 16-\mathrm{r} =4 \)
r = 12 செ.மீ
உள்ளீடற்ற உருளையின் மொத்தப் புறப்பரப்பு
\(=2 \pi(\mathrm{R}+\mathrm{r})(\mathrm{R}-\mathrm{r}+\mathrm{h})\) ச. அலகுகள்
\(=2 \times \frac{22}{7} \times(16+12)(4+13) \)
\(=2 \times \frac{22}{7} \times 28 \times 17\)
= 2992 ச. செ.மீ
12.
(a)
1
13.
(a)
cos2θ-sin2θ
14.
(a)
a6 + b6
15.
(a)
3 x 3
16.
(c)
BD.CD = AD2
17.
\(\frac{x}{x^2-25}-\frac{8}{x^2+6 x+5} =\frac{x}{(x+5)(x-5)}-\frac{8}{(x+5)(x+1)} \)
\(=\frac{x(x+1)-8(x-5)}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2+x-8 x+40}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2-7 x+40}{\left(x^2-25\right)(x+1)}\)
18.
\((1+\tan \theta+\sec \theta)(1+\cot \theta-\operatorname{cosec} \theta) \)
\(=\left(1+\frac{\sin \theta}{\cos \theta}+\frac{1}{\cos \theta}\right)\left(1+\frac{\cos \theta}{\sin \theta}-\frac{1}{\sin \theta}\right) \)
\(=\left(\frac{(\cos \theta+\sin \theta)+1}{\cos \theta}\right)\left(\frac{(\sin \theta+\cos \theta)-1}{\sin \theta}\right) \)
\(=\frac{(\sin \theta+\cos \theta)^2-1^2}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{\sin ^2 \theta+\cos ^2 \theta+2 \sin \theta \cos \theta-1}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{1+2 \sin \theta \cos \theta-1}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{2 \sin \theta \cos \theta}{\sin \theta \cos \theta} \)
= 2
19.
65 மற்றும் 117 இன் மீ.பொ.வ = 13
\(65 \mathrm{~m}-117=13 \)
\(65 \mathrm{~m}=13+117=130 \)
\(\mathrm{~m}=\frac{130}{65}=2\)
20.
மொத்த பந்துகள் = p சிவப்பு + q நீலம் + r பச்சை
\(\mathrm{n}(\mathrm{S})=\mathrm{p}+\mathrm{q}+\mathrm{r}\)
சிவப்பு பந்து, எடுக்கும் நிகழ்வு A என்க.
\(\mathrm{n}(\mathrm{A})=\mathrm{P} \)
\(\mathrm{P}(\mathrm{A})=\frac{n(A)}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{p}{p+q+r}\)
21.
(c)
பூச்சியம்
22.
(12,3) மற்றும் (4, a) புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டின் சாய்வு 1 / 8
\(\frac{y_1-y_2}{x_1-x_2} =\frac{3-a}{12-4}=\frac{1}{8} \)
\(\frac{3-a}{8} =\frac{1}{8} \)
\(3-a =1 \Rightarrow a=2\)
23.
அரைக்கோளத்தின் மொத்தப்பரப்பு = 3πr2
= 3π (ஆரத்தின் வர்க்கம்)
= 3π மடங்கு
24.
(c)
f(xy) ≤ f(x).f(y)
25.
\(\mathrm{f}: \mathrm{A} \rightarrow \mathrm{B}\) என்பது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7.
f என்பது இருபுறச் சார்பு. அதாவது, ஒன்றுக்கு ஒன்றான மேல்சார்பு.
\(\therefore\) A மற்றும் B ஆகியவற்றில் உறுப்புகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். n(A) = 7
26.
n = 9,\({ \Sigma x }=99\),\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 99 }{ 9 } =11\)
\(\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79={ \Sigma x }^{ 2 }-20x+100=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\Sigma x+100\times 9=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\times 99+100=79\)
\({ \Sigma x }^{ 2 }=79+1980-900=1159\)
\(\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=\Sigma \left( x-11 \right) ^{ 2 }=\Sigma \left( { x }^{ 2 }-22x+121 \right) \)
= \({ \Sigma x }^{ 2 }-22\Sigma x+121\times 9\)
= \(1159-22\times 99+1089=70\)
\(\therefore { \Sigma x }^{ 2 }=1159,\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=70\)
27.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
28.
a3=a+(3-1)d=a+2d=5 (1)
a7=a+(7-1)d=a+6d=9 (2)
(1)-(2)⇒-4d=-4⇒d=1
d=1 என (1), ல் பிரதியிட
a+2(1)=5
a=3
தேவையான A.P=3,4,5,6,7.
29.
A-யின் வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உறுப்புகளை கொண்டுள்ளன. B-ன் ஒவ்வொரு உறுப்புக்கும் முன் உரு உள்ளது.
∴ இது ஒரு ஒன்றுக்கொன்றான மேல் சார்பு ஆகும்.
30.
P, Q என்ற புள்ளிகள் AB கோட்டினை
AP = PQ = QB எனப் பிரிப்பதாகக் கொள்வோம்.
எனவே P ஆனது AB ஐ உட்புறமாக 1:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது. எனவே, P பிரிவு சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(P(x,y)=\left[ \frac { 1(-7)+2(2) }{ 1+2 } ,\frac { 1(7)+2(-2) }{ 1+2 } \right] \) i.e., (-1, 0)
மேலும் Q ஆனது AB இன் உட்புறமாக 2:1 என்ற விகிதத்தில் Q பிரிக்கிறது.
\(\therefore Q(x,y)=\left[ \frac { 2(-7)+1(2) }{ 2+1 } ,\frac { 2(4)+(-2) }{ 2+1 } \right] \) i.e., (-4, 2)
∴ AB கோட்டினை P(-1, 0) மற்றும் (-4, 2) புள்ளிகள் மூன்றும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன.
31.
BL மற்றும் CM என்பன ΔABC யின் நடுக்கோடுகள்
A = ∠90°.
ΔABC யிலிருந்து
BC2 = AB2 + AC2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔABL லிருந்து,
BL2 = AL2 + AB2
\(BL^{ 2 }={ \left( \frac { AC }{ 2 } \right) }^{ 2 }+{ AB }^{ 2 }\)....(1)
(L ஆனது BC யின் நடுப்புள்ளி)
\({ BL }^{ 2 }=\frac { { AC }^{ 2 } }{ 4 } +{ AB }^{ 2 }\)
4BL2 = AC2 + 4AB2 ...(2)
ΔCMA லிருந்து,
CM2 = AC2 + AM2
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+{ \left( \frac { AB }{ 2 } \right) }^{ 2 }\)
(M ஆனது AB யின் நடுப்புள்ளி)
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+\frac { { AB }^{ 2 } }{ 4 } \)
4CM2 = 4AC2 + AB2 ...(3)
(2) மற்றும் (3) ஐ கூட்ட கிடைப்பது
4(BL2 + CM2) = 5(AC2 + AB2)
4(BL2 + CM2) = 5BC2 [(1) லிருந்து]
32.
A என்பது விமானத்தின் தொடக்கநிலை மற்றும் C என்பது 53o ஏற்றக்கோணத்தில் விமானத்தின் நிலை என்க.
\(\angle A E B=37^{\circ} \)
\(\angle C E D=53^{\circ}\)
செங்கோண முக்கோணம் \(\triangle A E B\)-லிருந்து
\(\tan 37^{\circ}=\frac{A B}{B E} \)
\(0.7536 =\frac{600}{B D+D E} \)
\(\mathrm{BD}+\mathrm{DE} =\frac{600}{0.7536} \)
\(=\frac{60,00,000}{7536} \)
BD + DE = 796.18 மீ .....(1)
செங்கோண முக்கோணம் \(\triangle C E D\) லிருந்து
\(\tan 53^{\circ}=\frac{C D}{D E} \)
\(1.3270=\frac{600}{D E} \)
\(\mathrm{DE}=\frac{600}{1.3270} \)
\(=\frac{6,00,000}{1327}\)
DE = 452.15 மீ .......(2)
\(\text { (1) }-(2) \Rightarrow \mathrm{BD}+\mathrm{DE}-\mathrm{DE}=796.18-452.15\)
BD= 344.03 மீ
\(\therefore\) CA = 344.03 மீ \(\quad[\because B D=C A] \)
\(\therefore\) விமானம் கடந்த தொலைவு =344.03 மீ
விமானத்தின் வேகம் = 175 மீ/வி
வேகம் = கடந்த தொலைவு / எடுத்துக்கொண்ட காலம்
எடுத்துக்கொண்ட காலம் = கடந்த தொலைவு / வேகம்
\(=\frac{344.03}{175}\)
= 1.965 வினாடிகள்
= 1.97 வினாடிகள்
\(\therefore\) ஏற்றக்கோணம் 53o க்கு அதிகரிக்க 1.97 வினாடிகள் தேவைப்படும்.
33.
குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர் எனத் தரப்பட்டுள்ளது.
பெண் குழந்தையை 'g' எனவும், ஆண் குழந்தையை 'b' எனவும் கொள்க.
கூறுவெளி \(S=\{(\mathrm{g}, \mathrm{g}),(\mathrm{g}, \mathrm{b}),(\mathrm{b}, \mathrm{g}),(\mathrm{b}, \mathrm{b})\}\)
\(\mathrm{n}(\mathrm{S})=4\)
குறைந்தது ஒரு பெண்ணாவது இருக்கும் நிகழ்வு A என்க.
\(A =\{(\mathrm{g}, \mathrm{g}),(\mathrm{g}, \mathrm{b}),(\mathrm{b}, \mathrm{g})\} \)
\(\mathrm{n}(\mathrm{A}) =3 \)
\(\mathrm{P}(\mathrm{A})=\frac{n(\mathrm{~A})}{n(\mathrm{~S})}=\frac{3}{4}\)
\(\therefore\) குறைந்தது ஒரு பெண் குழந்தையாவது இருக்கும் நிகழ்வின் நிகழ்தகவு \(=\frac{3}{4}\)
34.
(i) tn = -3 + 2n
கூட்டுத்தொடர் வரிசையின் n - வது உறுப்பு
tn = -3 + 2n
\(\mathrm{n}=1\) எனில், \(\mathrm{t}_1 =-3+2(1)=-3+2 \)
\(\mathrm{a}=\mathrm{t}_1 =-1 \)
\(\mathrm{n}=2\) எனில்,\(\mathrm{t}_2 =-3+2(2)=-3+4 \)
\(\mathrm{t}_2 =1\)
பொது வித்தியாசம் \(\mathrm{d}=\mathrm{t}_2-\mathrm{t}_1=1-(-1)\)
= 1 + 1 = 2
∴ முதல் உறுப்பு a = -1; பொது வித்தியாசம் d = 2
(ii) \(\mathrm{t}_{\mathrm{n}}=4-7 \mathrm{n}\)
கூட்டுத்தொடர் வரிசையின் n-வது உறுப்பு \(t_n=4-7 n\)
\(\mathrm{n}=1\) எனில், \(\quad \mathrm{t}_1=4-7(1)=4-7=-3 \)
\(\mathrm{a}=\mathrm{t}_1=-3 \)
\(\mathrm{n}=2 \) எனில், \(\quad \mathrm{t}_2=4-7(2)=4-14=-10\)
பொது வித்தியாசம் \(\mathrm{d}=\mathrm{t}_2-\mathrm{t}_1=-10-(-3)\)
= -10 + 3 = - 7
முதல் உறுப்பு a = - 3; பொது வித்தியாசம் d = - 7
35.
மாறுபாட்டுக்கெழு காண முதலில் திட்டவிலக்கம் (\(\sigma\)) காண வேண்டும்.
\(\sigma=\sqrt{\frac{\Sigma x_i^2}{n}-\left(\frac{\Sigma x_i}{n}\right)^2} \)
\(\frac{\Sigma x^2}{n}=\frac{765}{5}=153 \)
\(\left(\frac{\Sigma x}{n}\right)^2=(\bar{x})^2=6^2=36 \)
\(\therefore \quad \sigma=\sqrt{(153)-36}=\sqrt{117} \)
\(=\sqrt{3 \times 3 \times 13} \)
\(\sigma=3 \sqrt{13}\)
மாறுபாட்டுக் கெழு \(=\frac{\sigma}{x} \times 100 \%\)
\(=\frac{3 \sqrt{13}}{6} \times 100 \%=\frac{\sqrt{13}}{2} \times 100 \%=\frac{3.60555}{2} \times 100 \% \)
\(=1.80277 \times 100 \%=180.277 \%\)
\(\therefore \) மாறுபாட்டுக் கெழு = 180.28 %
36.
(i) A(0, 5) மற்றும் B(4,1) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் AB என்ற கோட்டின் சமன்பாடு
\(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
\(\frac { y-5 }{ 1-5 } =\frac { x-0 }{ 4-0 } \)
4(y -5) = −4x ஆகவே, y –5 = – x
x + y – 5 = 0
(ii) AB என்ற கோட்டின் சமன்பாடு x + y − 5 = 0 இந்த நேர்க்கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சமன்பாடு x − y + k = 0 ஆகும்.
இக்கோடானது மையம் (4,4) என்ற புள்ளி வழிச் செல்வதால்,
4 – 4 + k = 0 எனவே, k = 0
C வழியாக AB -க்கு செங்குத்தாக அமையும் நேர்க்கோட்டின் சமன்பாடு x − y = 0
(iii) x + y − 5 = 0 மற்றும் x − y = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியே AB என்ற கோடானது வட்டத்தைத் தொடும் புள்ளி ஆகும்.
x + y − 5 = 0 மற்றும் x − y = 0 இவற்றைத் தீர்ப்பதின் மூலம்.
x = \(\frac 52\) மற்றும் y = \(\frac 52\)
எனவே, தொடுபுள்ளி P–யின் ஆயப் புள்ளிகள் \(\left( \frac { 5 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right) \) ஆகும்.
37.
∴ \(\sqrt { \cfrac { { x }^{ 2 } }{ { y }^{ 2 } } -10\cfrac { x }{ y } +27-10\cfrac { y }{ x } +\cfrac { { y }^{ 2 } }{ { x }^{ 2 } } } =\left| \frac { x }{ y } -5+\frac { y }{ x } \right| \).
38.
உள்ளீடற்ற அரைக்கோளம் உட்புற விட்டம் = 6 செ.மீ
உட்புற ஆரம் 'r' = 3 செ.மீ
வெளிப்புற விட்டம் = 10 செ.மீ
வெளிப்புற ஆரம் 'R' = 5 செ.மீ
உள்ளீடற்ற அரைக்கோளத்தின் கன அளவு (அல்லது) பயன்படுத்தப்பட்ட உலோகத்தின் கன அளவு .
\(=\frac{2}{3} \pi\left(R^3-r^3\right)\) கன அலகுகள்
\(=\frac{2}{3} \pi\left(5^3-3^3\right)\)
\(=\frac{2}{3} \pi(125-27)=\frac{196 \pi}{3}\) செ.மீ3
உருளை
விட்டம் = 14 செ.மீ
ஆரம் = 7 செ.மீ
உயரம் = h
உருளையின் கன அளவு \(=\pi r^2 h\) கன அலகுகள்
\(=\pi(7)^2 h \)
\(=49 \pi h\)
கொடுக்கப்பட்டது: உள்ளீடற்ற அரைக்கோளம் உருக்கப்பட்டு உருளையாக மாற்றப்படுகிறது.
\(\therefore\) உருளையின் கன அளவு = உள்ளீடற்ற அரைக்கோளத்தின் கன அளவு
\(49 \pi h=\frac{196 \pi}{3} \)
\(\mathrm{h}=\frac{196}{3 \times 49}=\frac{4}{3}=1.33\)
\(\therefore\) உருளையின் உயரம் = 1.33 செ.மீ
39.
\(\sigma =21.2,\bar { x } =\cfrac { \sigma }{ CV } \times 100\)
\(CV=\cfrac { \sigma }{ \bar { x } } \times 100=\cfrac { 21.2 }{ 36.6 } \times 100\)
40.
உருளையின் ஆரம் =r என்க.
உருளையின் உயரம்=h
மொத்த புறப்பரப்பு =உருளையின் புறப்பரப்பு +2 அரைக்கோளத்தின் புறப்பரப்பு
=2πrh+2πr2=2πr(h+2r)
=2x\(\frac{22}{7}\)x3.5x(10+2x3.5)
=22x17=374 செ.மீ2
41.
DB = 3 CD
BC = BD + DC
BC = 3CD + CD
BC = 4CD
CD = \(\frac 14\)BC
CD = \(\frac 14\) BC
BD = 3CD = \(\frac 34\) BC
ΔABD ஒரு செங்கோண முக்கோணம் D = 90°
AB2 = AD2 + BD2...(ii)
ΔACD ஒரு செங்கோண முக்கோணம் ㄥD = 90°
AC2 = AD2 + CD2 ...(iii)
(ii) லிருந்து (iii) ஐக் கழிக்க.,
AB2 - AC2 = BD2 - CD2
⇒ AB2 - AC2 = \({ AB }^{ 2 }-{ AC }^{ 2 }={ \left( \frac { 3 }{ 4 } BC \right) }^{ 2 }-{ \left( \frac { 1 }{ 4 } BC \right) }^{ 2 }\) (i) லிருந்து
CD = \(\frac 14\)BC, BD = \(\frac 34\)BD
⇒ AB2 - AC2 = \(\frac {9}{16}\) BC2 - \(\frac {1}{16}\) BC2
⇒ AB2 - AC2 = \(\frac 12\) BC2
⇒ 2(AB2 - AC2) = BC2
⇒2AB2 = 2AC2+ BC2
என நிரூபிக்கப்பட்டது.
42.
படி 1 : y = 2x2 -ன் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 8 | 2 | 0 | 2 | 8 |
படி 2 : 2x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டின் தீர்வு காண்பதற்கு, முதலில் y = 2x2 லிருந்து 2x2 - x - 6 = 0 ஐ கழிக்க வேண்டும்.

y = x + 6 என்பது ஒரு நேர்கோட்டின் சமன்பாடு ஆகும். y = x + 6 நேர்கோட்டின் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 4 | 5 | 6 | 7 | 8 |
படி 3 : y = 2x2 என்ற பரவளையம் மற்றும் y = x + 6 என்ற நேர்கோடு வெட்டும் புள்ளிகள் (–1.5, 4. 5) மற்றும் (2, 8).
படி 4 : இப்புள்ளிகளின் x- ஆயத் தொலைவுகள் -1.5 மற்றும் 2 ஆகும்.
எனவே, சமன்பாடு 2x2 - x - 6 = 0 -யின் தீர்வுகள் –1.5 மற்றும் 2 ஆகும்.

10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards