By QB365 on 18 May, 2020
10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - III (10th Standard Science Model Question Paper Part - III)
10th Standard
அறிவியல்
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
சுழி
பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.
3.81 J மோல்–1 K–1
8.03 J மோல்–1 K–1
1.38 J மோல்–1 K–1
8.31 J மோல்–1 K–1
மின்தடையின் SI அலகு ______.
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
பொட்டாசியம்______ தொடரில் உள்ளது.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
நீர் வெறுக்கும் சேர்மங்கள் ______________ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
ஆக்சிஜனேற்றி
ஒடுக்கி
கார்பாக்சில் நீக்க கரணி
உலர்த்தி
பின்வரும் வினைகளில் சாத்தியமற்றது எது?
Zn + CuSO4 ⟶ ZnSO4 + Cu
2 Ag + Cu(NO3)2 ⟶ AgNO + Cu
Fe + CuSO4 ⟶ FeSO4 + Cu
Mg + 2HCl ⟶ MgCl2 + H2
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்_____.
95.5 %
75.5 %
55.5 %
45.5 %
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது
புறணி
பித்
பெரிசைக்கிள்
அகத்தோல்
_________________ தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது
முன்மூளை
நடுமூளை
பெருமூளை
ஹைப்போதலாமஸ்
ஆண்டிடையூரிட்டிக் ஹார்மோனின் மறுபெயர் _________________ ஆகும்.
வாசோபிரஸ்ஸின்
நார் எபிநெஃப்ரின்
ஆஸ்டோஸ்டிரோன்
இன்சுலின்
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
போத்துத் தேர்வு முறை
கூட்டுத் தேர்வு முறை
தூய வரிசைத் தேர்வு முறை
கலப்பினமாக்கம்
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்றவை_________க்கு உதாரணம் ஆகும்.
கோப்பு
கோப்புத் தொகுப்பு
இயக்க அமைப்பு
நிரல்
பகுதி - II
எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
மீ சிதறல் ஏற்படக் காரணம் என்ன?
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.
வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
பின்வருவனவற்றுள் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா இரட்டை, முப்பிணைப்பு கொண்ட சேர்மங்களை குறிப்பிடு.
(i) C5H12
(ii) C2H2
(iii) C3H8
(iv) C4H8
எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
உடல் பருமக் குறியீடு என்பது யாது?
தாஜ்மகால் எவ்வாறு அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது?
பகுதி - III
எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
ஒரு குளிரூட்டியிலிருந்து ஒரே சமயத்தில் வெளியே எடுக்கப்பட்ட தர்பூசணியானது நீண்ட நேரத்திற்கு தனது குளிர் தன்மையை இழப்பதில்லை. ஆனால் பிரெட் சாண்ட்விச் எளிதில் குளிர்தன்மையை இழக்கிறது. ஏன்?
1 kwh என்பதன் விளக்குக.
போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B - 10 மற்றும் B - 11 சதவீத பரவலைக் காண்க?
அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.
(i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
(ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
(iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?
அட்டை, நோய்களை உண்டாக்குமா?
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் . திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைளை உற்று நோக்கினான். காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
பகுதி - IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
அறிவியலறிஞர் கலிலியோவின் கருத்துக்களைக் கூறு.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.
கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரதம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?
மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை?