10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/05/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - III (10th Standard Science Model Question Paper Part - III)
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
1 kwh என்பதன் விளக்குக.
2.
ஒரு குளிரூட்டியிலிருந்து ஒரே சமயத்தில் வெளியே எடுக்கப்பட்ட தர்பூசணியானது நீண்ட நேரத்திற்கு தனது குளிர் தன்மையை இழப்பதில்லை. ஆனால் பிரெட் சாண்ட்விச் எளிதில் குளிர்தன்மையை இழக்கிறது. ஏன்?
3.
பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.
(i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
(ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
(iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?
4.
அட்டை, நோய்களை உண்டாக்குமா?
5.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
6.
போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B - 10 மற்றும் B - 11 சதவீத பரவலைக் காண்க?
7.
அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் . திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைகளை உற்று நோக்கினான். காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.
8.
அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
9.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
10.
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
11.
அறிவியலறிஞர் கலிலியோவின் கருத்துக்களைக் கூறு.
12.
13.
'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரத்தம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?
14.
கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
15.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
16.
17.
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
18.
மீ சிதறல் ஏற்படக் காரணம் என்ன?
19.
உடல் பருமக் குறியீடு என்பது யாது?
20.
தாஜ்மகால் எவ்வாறு அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது?
21.
பின்வருவனவற்றுள் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா இரட்டை, முப்பிணைப்பு கொண்ட சேர்மங்களை குறிப்பிடு.
(i) C5H12
(ii) C2H2
(iii) C3H8
(iv) C4H8
22.
எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.
23.
வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
24.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
25.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
26.
பொட்டாசியம் ______ தொடரில் உள்ளது.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
27.
ஆண்டிடையூரிட்டிக் ஹார்மோனின் மறுபெயர் _________________ ஆகும்.
வாசோபிரஸ்ஸின்
நார் எபிநெஃப்ரின்
ஆல்டோஸ்டிரோன்
இன்சுலின்
28.
_________________ தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது
முன்மூளை
நடுமூளை
பெருமூளை
ஹைப்போதலாமஸ்
29.
பின்வரும் வினைகளில் சாத்தியமற்றது எது?
Zn + CuSO4 ⟶ ZnSO4 + Cu
2 Ag + Cu(NO3)2 ⟶ AgNO + Cu
Fe + CuSO4 ⟶ FeSO4 + Cu
Mg + 2HCl ⟶ MgCl2 + H2
30.
நீர் வெறுக்கும் சேர்மங்கள் ______________ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
ஆக்சிஜனேற்றி
ஒடுக்கி
கார்பாக்சில் நீக்க கரணி
உலர்த்தி
31.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்றவை_________க்கு உதாரணம் ஆகும்.
கோப்பு
கோப்புத் தொகுப்பு
இயக்க அமைப்பு
நிரல்
32.
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
போத்துத் தேர்வு முறை
கூட்டுத் தேர்வு முறை
தூய வரிசைத் தேர்வு முறை
கலப்பினமாக்கம்
33.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
சுழி
34.
35.
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்_____.
95.5 %
75.5 %
55.5 %
45.5 %
36.
மின்தடையின் SI அலகு ______.
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
37.
பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.
3.81 J மோல்–1 K–1
8.03 J மோல்–1 K–1
1.38 J மோல்–1 K–1
8.31 J மோல்–1 K–1
38.
எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?
1.
(i) நுகரப்படும் மின்னாற்றலின் SI அலகு வாட் விநாடியாக இருந்த போதிலும் நடைமுறையில் வாட் மணி என்ற அலகால் அளவிடப்படுகிறது.
(ii) நுகரப்படும் மின்னாற்றலை நடைமுறையில் பயன்படுத்த பெரிய அலகு தேவைப்படுகிறது. இந்த பெரிய அலகு கிலோ வாட் மணி (kWh).
(iii) ஒரு கிலோ வாட் மணி என்பதனை ஒரு யூனிட் மின்னாற்றல் எனவும் கூறலாம்.
1 kWh =1000 வாட் மணி
=1000 (60 x 60) வாட் வினாடி
=3.6 x 106 J
2.
தர்பூசணியின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம். எனவே அது குளிர்ச்சித்தன்மையை இழக்க நேரமாகிறது. ஆனால் குறைந்த தன் வெப்ப ஏற்புத்திறன் கொண்ட பொருட்கள் வெப்பம் அடைகின்றன.
3.
(i) B மற்றும் D அல்கைன்கள் தொகுதியைச் சேர்ந்தவை.
(ii) E மற்றும் F ஹைட்ரோ கார்பன்கள் அல்ல.
4.
அட்டை நோய்களை உண்டாக்குவதில்லை. இவை விருந்தோம்பிகளின் இரத்தத்தை மட்டுமே உறிஞ்சிவிடும். ஆனால் சில விருந்தோம்பிகளிலிருந்து அதிக இரத்தத்தினை உறிஞ்சிவிடுவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
5.
அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகள்:
1. நிலைப்பு தன்மை
2. உயர்த்தப்பட்ட உணவூட்ட மதிப்பு
3. நோய் எதிர்ப்புத் தன்மை
4. மாறுபடும் சுற்றுச்சூழல் நிலைகளுக்குத் தாங்கும் தன்மை
5. குறைந்த செலவில் அதிக வளர்ச்சி வேகம்.
6.
B - 10 = x %
B - 11 = (100 - x)% எனக் கொள்வோம்
சராசரி அணுநிறை = \(\frac{10 x+11(100-x)}{100}=\frac{10 x+1100-11 x}{100}\)
10.804 = 1100 - x
x = 1100 - 1080.4
x = 19.6 [B-10 ன் சதவீத பரவல்]
B-11 ன் சதவீத பரவல்:
B - 11 = (100 - 19.6) %
= 80.4 %
7.
அருண் நினைத்தது சரி.
காரணங்கள்:
1. காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன.
2. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது.
8.
அ) அயனிப் பிணைப்பு
ஆ) எலக்ட்ரான் கவர்தன்மை
இ) தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும்.
தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது.
9.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
10.

1. Script tab-ல் Events option ஐ தேர்வு செய்க.


3. Script tab-ல் looks option ஐ தேர்வு செய்க. Say " " என்ற block ஐ Script area விற்குள் இழுத்து வைக்கவும்

4. Say tab-னுள் “Hello” என்ற வார்த்தையை தட்டச்சு செய்யவும்.

5. Script tab -> Sounds option ஐ தேர்வு செய்க. “Play sound” block ஐ இழுத்து Script Area வினுள் விடவும். Audio file லிருந்து “Hello” sound ஐ தேர்வு செய்யவும்.

6. File menu -> Save தேர்வு செய்க. இப்போது உங்கள் Project சேமிக்கப்படும்.
7. நிரலை இயக்க வலது மேல் ஓரத்தில் உள்ள பச்சை நிறக் கொடியை click செய்யவும்.


11.
அறிவியலறிஞர் கலிலியோ விசை, நிலைமம் மற்றும் இயக்கம் பற்றி கீழ்கண்டவாறு விளக்கினார்.
(i) இயற்கையில் உள்ள புவிசார் பொருள்கள் யாவும் தத்தமது இயல்பான ஒய்வு நிலையிலோ அல்லது சீரான இயக்க நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
(ii) புறவிசை ஏதும் செயல்படாத வரை பொருள்களை யாவும் தத்தமது முந்தைய நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.
(iii) பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்கும் போது, தம் நிலை மாற்றத்தினை தவிர்க்க முயலும் தன்மை அதன் நிலைமம் எனப்படும்.
(iv) வெற்றிடத்தில் வெவ்வேறு நிறை கொண்ட பொருள்கள் யாவும் ஒரே உயரத்தில் இருந்து விழும்போது, அவை ஒரே நேரத்தில் தரையை வந்தடையும்.
12.
13.
இரத்தம் வழங்குதல்:
(i) இரத்தம் செலுத்துவதற்கு முன்னர் இரத்தம் பெறுபவர்க்கும் இடையில் ஆன்டிஜெனுக்கும் ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ள வேண்டும்.
(ii) பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை ஒருவர் பெறுவதினால் அவருக்கு இரத்தத் திரட்சி ஏற்பட்டு இறக்க நேரிடும்.
(iii) 'AB' இரத்த வகை கொண்ட நபரை 'இரத்தக் கொடையாளி' என அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்குவார்.
(v) எனவே 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரத்தம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
14.
1. கரும்பு சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிமமாக்கும் பொழுது மீதமுள்ள ஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவம் கழிவுபாகு எனப்படுகிறது.
2. இதில் படிமமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாத 30% சுக்ரோஸ் உள்ளது.
1. கழிவுப்பாகினை நீர்த்தல்:
கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு 8 லிருந்து 10 சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.
2. அம்மோனியம் உப்புகள் சேர்த்தல்:
நொதித்தலின் போது ஈஸ்ட்டிற்குத் தேவையான நைட்ரஜன் கழிவுப்பாகில் உள்ளது.
குறைவாக இருப்பின் அம்மோனியம் சல்பேட் (அ) அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உரமூட்டப்படுகிறது.
3. ஈஸ்ட் சேர்த்தல்:
1. படி (ii) -ல் கிடைக்கும் கரைசலை பெரிய நொதித்தல் தொட்டிகளில் சேகரித்து பின் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது.
2. இக்கலவை 303K வெப்பநிலையில் சில நாட்களுக்கு வைக்கப்படுகிறது.
3. அந்த நாட்களில் ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், மற்றும் சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.

நொதித்த நீர்மம் கழுவு நீர்மம் எனப்படுகிறது.
4. கழுவு நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல்:
15 முதல் 18% வரை ஆல்கஹாலும், மீதம் நீராகவும் உள்ள நொதித்த நீர்மத்தை பின் காய்ச்சி வடித்தல் மூலம் 95.5% எத்தனாலும் 4.5% நீரும் கிடைக்கிறது. இது எரிசாராயம் என அழைக்கப்படுகிறது.
இதனை 5 லிருந்து 6 மணி நேரம் வரை சுட்ட சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்டு 12 மணி நேரம் வைக்கும் போது 100% தூய ஆல்கஹால் கிடைக்கிறது.
இது தனி ஆல்கஹால் எனப்படுகிறது.
15.

1. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு கணக்கிட வேண்டிய திரவத்தினை கொள்கலனில் நிரப்பி சோதனையை தொடங்கலாம்.
2. இப்பொழுது கொள்கலனில் உள்ள திரவத்தின் நிலையை L1 எனக் குறித்துக் கொள்ளலாம்.
3. பிறகு கொள்கலன் மற்றும் திரவத்தினை படத்தில் காட்டியுள்ளவாறு வெப்பப்படுத்தப்படுகிறது.
4. தொடக்கத்தில் கொள்கலனானது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும்.
5. அப்போது திரவத்தின் பருமன் குறைவதாகத் தோன்றும். இப்போது இந்த நிலையை L2 எனக் குறித்துக் கொள்ளலாம்.
6. மேலும் வெப்பப்படுத்தும்போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையை L3 எனக் குறித்துக் கொள்ளலாம்.
7. நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L3 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
8. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
9. உண்மை வெப்ப விரிவு = L3 - L2
10. தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
16.
17.
| எண் | இச்சைச் செயல் | அனிச்சை செயல் |
|---|---|---|
| 1. | செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. | செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்படாதது. |
| 2. | இச்சைச் செயல்கள் மூளைக்கு கட்டுப்பட்டது. | அனிச்சை செயல் தண்டுவடத்திற்கு கட்டுப்பட்டது. |
| 3 | இது தசை இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. | அனிச்சைச் செயல் தசை இயக்கம் அல்லது சில சுரப்பிகளின் சுரப்பிக்கு காரணமாக உள்ளது. |
18.
வளிமண்டலத்தின் கீழ் அடுக்குப் பகுதியில் உள்ள தூசு புகை, நீர்த்துளிகள் மற்றும் சில துகள்களால் மீ-சிதறல் ஏற்படுகிறது.
19.
உடலின் கொழுப்பு அளவு மற்றும் நலம் சார்ந்த ஆபத்தினை உடற்பருமக் குறியீட்டைக் கொண்டு அளவிடலாம்.
20.
மதுரா எண்ணெய் நிறுவனத்திலிருந்து வெளிவரும் சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் தாஜ்மகாலின் வெண்ணிற பளிங்கு கற்களின் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளது.
21.
(i) C5H12 - பென்டேன் நிறைவுற்றது
(ii) C2H2 - ஈத்தைன் நிறைவுறாத முப்பிணைப்பு உடையது
(iii) C3H8 - புரோப்பேன் நிறைவுற்றது
(iv) C4H8 - பியூட்டீன் நிறைவுறாத இரட்டை பிணைப்பு உடையது
22.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ராசோனோகிராபி கருவி பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
23.
(i) திட்டவெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மி.லி பருமனை ஆக்கிரமிக்கும்.
(ii) இது மோலார் பருமன் என அழைக்கப்படுகிறது.
24.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
25.
| மீள் வினை | மீளா வினை | |
|---|---|---|
| அ) | தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். | முன்னோக்கு வினை மட்டுமே நடைபெறும் |
| ஆ) | முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். | ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும். |
| இ) | வினையானது சமநிலை அடையும். | வினையானது சமநிலை அடையாது. |
| ஈ) | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது. | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக் கூடியது. |
| உ) | இவ்வினை மெதுவாக நடைபெறும். | வேகமாக நடைபெறும். |
26.
(d)
நான்காம்
27.
(b)
நார் எபிநெஃப்ரின்
28.
(b)
நடுமூளை
29.
(b)
2 Ag + Cu(NO3)2 ⟶ AgNO + Cu
30.
(d)
உலர்த்தி
31.
(c)
இயக்க அமைப்பு
32.
(d)
கலப்பினமாக்கம்
33.
(a)
நேர்க்குறி
34.
(d)
35.
(a)
95.5 %
36.
(c)
ஓம்
37.
(d)
8.31 J மோல்–1 K–1
38.
பிளாஸ்மா, புரதம், வெள்ளை இரத்த செல்கள்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards