10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்கள் யாவை?
2.
தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்கள் யாவை?
3.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பற்றி எழுதுக.
4.
இந்திய நிலக்கரி நிறுவனம் குறிப்புத் தருக.
5.
ஆற்றல் வளங்கள் என்றால் என்ன? இது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
6.
மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?
7.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக
8.
நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக
9.
இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களைக் குறிப்பிடுக.
10.
இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
1.
சென்னை, கோயம்பத்தூர், திருவனந்தபுரம், பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, பூனா, இந்தூர், காந்திநகர், ஜெய்ப்பூர், நொய்டா, மொகாலி மற்றும் ஸ்ரீநகர் இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்களாகும்.
2.
நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி மற்றும் எண்ணூர் ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்கள் ஆகும்.
3.
1. இது இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைச்சகமாகும்.
2. இவ்வமைச்சகம் ஆய்வு செய்தல், உற்பத்தி, சுத்திகரித்தல், விநியோகம் இறக்குமதி, எண்ணெய் பாதுகாப்பு, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்திப்பொருள் போன்றவற்றிற்கு பொறுப்பு ஏற்கிறது.
4.
1. இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்கத்திலுள்ள கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது.
2. இதன் கிளைகள் தன்பாத், ராஞ்சி, பிலாஸ்பூர், சாம்பல்பூர், கோத்தகுடம் மற்றும் அசன்சால் ஆகிய இடங்களில் உள்ளன. இது உலக அளவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.
5.
1) மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் வளங்களை எரிசக்தி வளங்கள் என்று அழைக்கின்றோம்.
2) ஆற்றல் வளங்களை புதுப்பிக்கக் கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
6.
1. ஆந்திர பிரதேசம்
2. இராஜஸ்தான்
3. ஓடிஷா
4. ஜார்கண்ட்
7.
மேற்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்:
1. பாசின் எண்ணெய் வயல்
2. மும்பை ஹை
3. குஜராத் கடற்கரை
4. அங்கலேஸ்வர்
5. காம்பே-லூனி பகுதிகள்
6. அகமதாபாத் - கலோல் பகுதி
கிழக்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்:
1. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு (அசாம்)
2. திக்பாய்
3. நாகர்காட்டியா
4. மோரான் ஹக்ரிஜன்
5. ருத்ரசாகர் - லாவா
6. சர்மா பள்ளத்தாக்கு
7. அந்தமான், நிகோபாரின் உட்பகுதிகள்
8. மன்னார் வளைகுடா
9. பலேஷ்வர் கடற்கரை
8.
நிலக்கரி:
1. நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக தனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது.
2. நிலக்கரி ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது 'கருப்பு தங்கம்' (Black gold) என அழைக்கப்படுகிறது.
வகைகள்
கரிம அளவு
i. ஆந்த்ரசைட் : 80 முதல் 90 சதவீதம்.
ii. பிட்டுமினஸ் : 60 முதல் 80 சதவீதம்.
iii. பழுப்பு நிலக்கரி : 40 முதல் 60 சதவீதம்.
iv. மரக்கரி : 40 சதவீதத்திற்கும் குறைவு.
9.
1. இரும்புத்தாது படிவுகள் அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் உள்ளன.
2. இரும்புத்தாது படிவுகள் ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் காணப்படுகின்றன.
10.
1. மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் விநியோகம்.
2. தொழிலகங்கள் நிறுவுவதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
3. கடன் பெறுவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
4. கடனுக்கான அதிக வட்டி விகிதம்
5. மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை
6. ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்முறை பயிற்சிகள் இல்லாமை
7. தொழில்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards