10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5,10,15,20,25 என்ற எண்களின் திட்டவிலக்கம் காண். மேலும் 3 என்ற எண்ணை ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைக்கும் எண்களின் திட்ட விலக்கம் காண்.
2.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)
3.
எந்த ஒரு மிகை ஒற்றை முழு எண்ணும் 4q+1 அல்லது 4q+3, என்ற வடிவில் அமையும் என நிறுவுக.
4.
குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?
5.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
6.
கொடுக்கப்பட்ட படத்தில் OPRQ ஆனது சதுரம் மற்றும் \(\angle MLN={ 90 }^{ o }\) எனில், கீழ்க்கண்டவற்றை நிரூபிக்கவும்.

ΔQMO ~ ΔRPN
7.
\(\frac { \sin A }{ 1+\cos A } =\frac { 1-\cos A }{ \sin A } \) என்பதை நிரூபிக்கவும்
8.
கொடுக்கப்பட்ட தரவுப் புள்ளிகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக்கெழு ஆகியவற்றைக் காண்க: 25, 67, 48, 53, 18, 39, 44.
9.
(-3, -4), (7, 2) மற்றும் (12, 5) என்ற புள்ளிகள் ஒரு கோடமைந்தவை எனக் காட்டுக.
10.
ஓர் உருளை வடிவப் பீப்பாயின் உயரம் 20 செ.மீ மற்றும் அடிப்புற ஆரம் 14 செ.மீ எனில், அதன் வளைபரப்பு மற்றும் மொத்த புறப்பரப்பைக் காண்க.
11.
ஒரு விவரத்தின் மாறுபட்டுக் கெழு 69% திட்டவிலக்கம் 15.6 எனில், சராசரியைக் காண்.
12.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
13.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
-2,2,-2,2,-2,....
14.
f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.
15.
கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5).
16.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
17.
படத்தில் உள்ளவாறு ஒரு சமதளத் தரையில் இரண்டு மரங்கள் உள்ளன. தரையில் உள்ள X என்ற புள்ளியிலிருந்து இரு மர உச்சிகளின் ஏற்றக்கோணமும் 40° ஆகும். புள்ளி X –லிருந்து சிறிய மரத்திற்கான கிடைமட்டத் தொலைவு 8 மீ மற்றும் இரண்டு மரங்களின் உச்சிகளுக்கிடையே உள்ள தொலைவு 20 மீ எனில்,
இரண்டு மரங்களுக்கும் இடையேயுள்ள கிடைமட்டத் தொலைவு (cos40° = 0.7660) ஆகியவற்றைக் கணக்கிடுக.
18.
\(A=\left( \begin{matrix} 1 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \end{matrix} \right) \) மற்றும் \(B=\left( \begin{matrix} 2 \\ -1 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 4 \\ 2 \end{matrix} \right) \)எனில் (AB)T= BTAT என்பதைச் சரிபார்க்க.
19.
ஒரு வகுப்புத் தேர்வில், 10 மாணவர்களின் மதிப்பெண்கள் 25, 29, 30, 33, 35, 37, 38, 40, 44, 48 ஆகும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
20.
கனச்சதுரத்தின் ஒரு பகுதியில் l அலகுகள் விட்டமுள்ள (கனசதுரத்தின் பக்கஅளவிற்குச் சமமான) ஓர் அரைக்கோளம் (படத்தில் உள்ளதுபோல) வெட்டப்பட்டால், மீதமுள்ள திண்மத்தின் புறப்பரப்பைக் காண்க.

21.
படத்தில் sin ө = \(\frac {15}{7}\) எனில் BC =
58 மீ
65 மீ
95 மீ
75 மீ
22.
sin2θ + \(\frac{1}{1+tan^2θ}\) =
cosec2θ + cot2θ
cosec2θ-cot2θ
cot2θ - cosec2θ
sin2θ-cos2θ
23.
A ன் வரிசை 3 x 4 மற்றும் B ன் வரிசை 4 x 3 எனில் BA ன் வரிசை
3 x 3
4 x 4
4 x 3
வரையறுக்கப்படவில்லை
24.
அணிகளின் கூட்டல்
பரிமாற்று பண்பு உடையதல்ல
சேர்ப்பு பண்பு உடையதல்ல
பரிமாற்று பண்பு உடையது
இவற்றில் ஏதுமில்லை
25.
ΔABC -யில் AD ஆனது, ㄥBAC -யின் இருசமவெட்டி, AB = 8 செ.மீ, BD = 6 செ.மீ மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC -யின் நீளம் ____.
6 செ.மீ
4 செ.மீ
3 செ.மீ
8 செ.மீ
26.
27.
(1 + tan θ + sec θ)(1 + cot θ - cosec θ)-ன் மதிப்பு _____.
0
1
2
-1
28.
கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு \(\frac{1}{9}\) எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,___.
5
10
15
20
29.
8, 8, 8, 8, 8. . ., 8 ஆகிய தரவின் வீச்சு ______.
0
1
8
3
30.
(13 + 23 + 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.
14400
14200
14280
14520
31.
(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.
x - y - 3 = 0; 3x - y - 7 = 0
x + y = 3; 3x + y = 7
3x + 3y = 0; x + y = 7
x + 3y - 3 = 0; x - y - 7 = 0
32.
r1 அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2 அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது. எனில், r1:r2 ______.
2:1
1:2
4:1
1:4
33.
R = {(x,x2) |x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது _____.
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
34.
A = {1,2}, B = {1,2,3,4} C = {5,6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A x C) ⊂ (B x D)
(B x D) ⊂ (A x C)
(A x B) ⊂ (A x D)
(D x A) ⊂ (B x A)
35.
| குழு A | 50 | 20 | 10 | 30 | 30 |
| குழு B | 40 | 60 | 20 | 20 | 10 |
எந்த குழு அதிக சீர்மைத்தன்மை கொண்டுள்ளது.
36.
ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?
37.
A யிலிருந்து வரையப்பட்ட செங்கோடு பக்கம் BCஐ D யில் DB = 3 CD எனுமாறு ΔABC யில் வெட்டுகிறது. 2AB2 = 2AC2 +BC2 என நிரூபிக்க.
38.
பின்வருவனவற்றின் வர்க்கமூலம் காண்க :
\(\cfrac { { 7x }^{ 2 }+2\sqrt { 14x } +2 }{ { x }^{ 2 }-\frac { 1 }{ 2 } x+\frac { 1 }{ 16 } } \)
39.
கொடுக்கப்பட்ட படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் ஆரம் 5 செ.மீ ஆகும். T -யானது OT = 13 செ.மீ என அமைந்த ஒரு புள்ளி மற்றும் OT ஆனது வட்டத்தை E-யில் வெட்டுகிறது. வட்டத்தில் E என்ற புள்ளியின் வழியாகச் செல்லும் ஒரு தொடுகோடு AB எனில், AB-யின் நீளம் காண்க.

40.
107 ஆனது 4q + 3, q என்பது ஏதேனும் ஒரு முழு என்ற வடிவில் அமையும் என நிறுவுக.
41.
பின்வரும் தொடர்வரிசைகளில் எவை பெருக்குத் தொடர்வரிசைகளாகும்?
(i) 3, 9, 27, 81,...
(ii) 4, 44, 444, 4444,.....
(iii) 0.5, 0.05, 0.005,....
(iv) \(\frac { 1 }{ 3 } ,\frac { 1 }{ 6 } ,\frac { 1 }{ 12 } \),...
(v) 1, -5, 25, -125,...
(vi) 120, 60, 30, 18,...
(vii) 16, 4, 1, \(\frac { 1 }{ 4 } \),...
42.
7x − 3y = −12 மற்றும் 2y = x + 3 ஆகியன நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியையும், 3x + y + 2 = 0 மற்றும் x − 2y −4 = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியையும் இணைக்கும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
1.
| x | \({ d }^{ ' }=\cfrac { x-15 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 5 | -2 | 4 |
| 10 | -1 | 1 |
| 15 | 0 | 0 |
| 20 | 1 | 1 |
| 25 | 2 | 4 |
| \(\Sigma d=0\) | \(\Sigma d'^{ 2 }=10\) |
\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 75 }{ 5 } =15\)
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
A என்பது ஊகச் சராசரி, C என்பது பொதுக் காரணி
இங்கு A =15,C =5
\({ d }^{ ' }=\cfrac { x-\bar { x } }{ c } =\cfrac { x-A }{ c } \)
= \(\sigma =\sqrt { \left( \cfrac { \Sigma d'2 }{ n } \right) -\left( \cfrac { \Sigma d' }{ n } \right) ^{ 2 }\times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times c } =\sqrt { 2 } \times 5\)
= \(5\sqrt { 2 } \)
3 ஐ ஒவ்வொரு தரவுடன் கூட்டக் கிடைப்பது 8,13,18,23,28 என்ற புதிய மதிப்புகள்
| x | \({ d }^{ ' }=\cfrac { x-18 }{ 5 } \) | d'2 |
|---|---|---|
| 8 | -2 | 4 |
| 13 | -1 | 1 |
| 18 | 0 | 0 |
| 23 | 1 | 1 |
| 28 | 2 | 4 |
| \(\Sigma d'=0\) | \(\Sigma { d }^{ '2 }=0\) |
\(\therefore \sigma =\sqrt { \left( \cfrac { \Sigma { d }^{ '{ 2 } } }{ n } \right) -\left( \cfrac { \Sigma { d }^{ ' } }{ n } \right) \times c } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
திட்டவிலக்கம் மாறவில்லை.
\(\therefore \) ஒரு எண்ணை கூடினாலோ, கழித்தாலோ திட்டவிலக்கம் மாறாது.
2.
வாளியானது கூம்பின் இடைக்கண்டம். இடைக்கண்டத்தின் r1=28 செ.மீ, r2=7செ.மீ, h=45 செ.மீ
வாளியின் கொள்ளளவு=இடைக்கண்டத்தின் கன அளவு
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \pi h[{ r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 2 }^{ 2 }+{ r }_{ 1 }{ r }_{ 2 }]\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\left[ { 28 }^{ 2 }+{ 7 }^{ 2 }+28\times 7) \right] \)
\(\Rightarrow 22\times 15\times \times (28\times 4+7+28)\)
⇒330x147 செ.மீ3 ⇒ 48510 செ.மீ3
3.
முதல் உறுப்பு a என்க, (a ஒரு மிகை ஒற்றை எண்)
எனினும் 0≤r<4, அதனால் கிடைக்கும் மீதி 0,1,2, 3 ஆகும்.
∴ a ஆனது 4q, (அல்லது)4q+1, (அல்லது) 4q+2 (அல்லது)4q+3, இங்கு q ஈவு ஆகும்.
a ஒரு ஒற்றை என்பதால் 4q மற்றும் 4q+2 ஆக இருக்க முடியாது(∵அவை 2ஆல் வகுப்படும்).
எனவே எந்த ஒரு மிகை ஒற்றை குழுவும் 4q+1 அல்லது 4q+3 என்ற வடிவில் அமையும்.
4.
சார்பு அல்ல. குத்துக்கோடு வளைவரையை இரு புள்ளிகளில் சந்திக்கிறது.
5.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
6.
மேலும் ΔQMO மற்றும் ΔRPN இல்
\(\angle O Q M=\angle N R P=90^{\circ}\)
\(\triangle L O P \sim \triangle Q M O\) மற்றும் \(\triangle L O P \sim \triangle R P N\)
\(\therefore \triangle Q M O \sim \triangle R P N\)
7.
\(\frac { \sin A }{ 1+\cos A } =\frac { \sin A }{ 1+\cos A } \times \frac { 1-\cos A }{ 1-\cos A } \) [1 + cosA யின் இணையைக் கொண்டு தொகுதி மற்றும் பகுதியைப் பெருக்கவும்]
= \(\frac { \sin A(1-\cos A) }{ (1+\cos A)(1-\cos A) } =\frac { \sin A(1-\cos A) }{ 1-{ \cos }^{ 2 }A } \)
= \(\frac { \sin A(1-\cos A) }{ { \sin }^{ 2 }A } =\frac { 1-\cos A }{ \sin A } \)
8.
மிகப் பெரிய மதிப்பு, L = 67; மிகச் சிறிய மதிப்பு, S = 18
வீச்சு R = L - S = 67 - 18 = 49
வீச்சுக் கெழு \(=\frac{L-S}{L+S}\)
வீச்சுக் கெழு \(=\frac{67-18}{67+18}=\frac {49}{85}=0.576\)
9.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் (-3, -4),(7, 2) மற்றும் (12, 5)
புள்ளிகளை A(-3, -4), B(7, 2) மற்றும் C (12, 5) என்க.
கோட்டின் சாய்வு \(=\frac{y_1-y_2}{x_1-x_2} \)
AB-ன் சாய்வு \(=\frac{-4-2}{-3-7}=\frac{-6}{-10}=\frac{3}{5}\)
BC-ன் சாய்வு \(=\frac{2-5}{7-12}=\frac{-3}{-5}=\frac{3}{5}\)
AB-ன் சாய்வு = BC-ன் சாய்வு
∴ கொடுக்கப்பட்ட புள்ளிகள் A, B மற்றும் C ஒரே கோட்டமைப் புள்ளிகள் ஆகும்.
10.
r மற்றும் h என்பன முறையே உருளையின் ஆரம் மற்றும் உயரம் என்க.
இங்கு, h = 20 செ.மீ ; r = 14 செ.மீ
உருளையின் வளைபரப்பு = 2πrh ச.அ
\(=2\times \frac { 22 }{ 7 } \times 14\times 20=2\times 22\times 2\times 20=1760\) செ.மீ2
உருளையின் மொத்தப் புறப்பரப்பு = 2πr(h + r) ச.அ
\(=2\times \frac { 22 }{ 7 } \times 14\times (20+14)=2\times\frac{22}{7}\times 14\times 34\)
= 2992 செ.மீ2
ஆகவே, உருளையின் வளைபரப்பு = 1760 செ.மீ2, மொத்தப் புறப்பரப்பு = 2992 செ.மீ2
11.
\(C.V=\cfrac { \sigma }{ \bar { x } } \times 100\Rightarrow \bar { x } =\cfrac { \sigma }{ CV } \times 100\)
\(\bar { x } =\cfrac { 15.6 }{ 6.9 } \times 100=22.6\)
12.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
13.
-2,2,-2,2,-2
t2-t1=2-(-2)=4
t3-t2=-2-2=-4
t4-t3=2-(-2)=4
இது ஒரு கூட்டுத்தொடர் வரிசை அல்ல.
14.
A-யின் வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உறுப்புகளை கொண்டுள்ளன. B-ன் ஒவ்வொரு உறுப்புக்கும் முன் உரு உள்ளது.
∴ இது ஒரு ஒன்றுக்கொன்றான மேல் சார்பு ஆகும்.
15.
A (1, -1), B(-4, 6), மற்றும் C(-3, -5) சூத்திரத்தை பயன்படுத்தி
Δ = \(\frac { 1 }{ 2 } \) {x1(y2 - y3) + x2(y3 - y1) + x3(y1 - y2)} சதுர அலகுகள்
= \(\frac { 1 }{ 2 } \) [1 (6 + 5 ) + (-4) (-5 + 1) + (-3) (- 1 - 6)]
= \(\frac { 1 }{ 2 } \) [11 + 16 + 21] = 24 சதுர அலகுகள்
∴ முக்கோணத்தின் பரப்பு = 24 சதுர அலகுகள்
16.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
17.
பெரிய மரத்தின் உயரம் AB என்க. சிறிய மரத்தின் உயரம் CD என்க. தரையில் உள்ள ஒரு புள்ளி X என்க.
செங்கோண Δ XAB -ல்
cos40°= \(\frac { AX }{ BX } =\frac { AC+CX }{ BQ+DX } \)
0.7660 = \(\frac { AC+8 }{ 20+10.44 } \) ⇒ AC = 23.32 - 8 = 15.32 மீ
இரண்டு மரங்களுக்கு இடையேயுள்ள கிடைமட்டத் தொலைவு AC = 15.32 மீ.
18.
இடப்பக்கம் (AB)T
\(AB=\left( \begin{matrix} 1 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \end{matrix} \right) _{ 2\times 3 }\times \left( \begin{matrix} 2 \\ -1 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 4 \\ 2 \end{matrix} \right) _{ 3\times 2 }\)
= \(\left( \begin{matrix} 2-2+0 & -1+8+2 \\ 4+1+0 & -2-4+2 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 0 & 9 \\ 5 & -4 \end{matrix} \right) \)
\(\left( AB \right) ^{ T }=\left( \begin{matrix} 0 & 9 \\ 5 & -4 \end{matrix} \right) ^{ T }=\left( \begin{matrix} 0 & 5 \\ 9 & -4 \end{matrix} \right) \) ...(1)
வலப்பக்கம் (BTAT)
\({ B }^{ T }=\left( \begin{matrix} 2 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \end{matrix} \right) ,{ A }^{ T }=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \\ 1 \end{matrix} \right) \)
\({ B }^{ T }{ A }^{ T }=\left( \begin{matrix} 2 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \end{matrix} \right) _{ 2\times 3 }\times \left( \begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \\ 1 \end{matrix} \right) _{ 3\times 2 }\)
= \(\left[ \begin{matrix} 2-2+0 & 4+1+0 \\ -1+8+2 & -2-4+2 \end{matrix} \right] \)
\({ B }^{ T }{ A }^{ T }=\left( \begin{matrix} 0 & 5 \\ 9 & -4 \end{matrix} \right) \) ...(2)
(1), (2) –லிருந்து (AB)T = BTAT என நிரூபிக்கப்பட்டது.
19.
மதிப்பெண்களின் சராசரி = 35.9. இந்த மதிப்பானது தரவுகளின் நடுமதிப்பாக அமையும் அதனால் நாம் ஊகச் சராசரி A = 35, என எடுத்துக் கொள்கிறோம், மேலும், n = 10
| xi | di=xi-A di=xi-35 |
di2 |
| 25 | -10 | 100 |
| 29 | -6 | 36 |
| 30 | -5 | 25 |
| 33 | -2 | 4 |
| 35 | 0 | 0 |
| 37 | 2 | 4 |
| 38 | 3 | 9 |
| 40 | 5 | 25 |
| 44 | 9 | 81 |
| 48 | 13 | 169 |
| \(\sum \)di=9 | \(\sum \)di2=453 |
திட்ட விலக்கம் \(\sigma =\sqrt { \frac { { \sum { d } }_{ i }^{ 2 } }{ n } -{ \left( \frac { \sum { { d }_{ i } } }{ n } \right) }^{ 2 } } \)
\(=\sqrt { \frac { 453 }{ 10 } -{ \left( \frac { 9 }{ 10 } \right) }^{ 2 } } \)
\(=\sqrt { 45.3-0.81 } =\sqrt { 44.49 }\)
\(\sigma \simeq 6.67\)
20.
அரைக்கோளத்தின் ஆரம் r என்க
இங்கு, அரைக்கோளத்தின் விட்டம் = கனசதுரத்தின் ஒரு பக்கம் = l ஆகும்.
ஆரம் r =\(\frac{1}{2}\) அலகு
தற்போது, மீதமுள்ள திண்மத்தின் மொத்தப்பரப்பு = கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு + அரைக்கோளத்தின் வளைபரப்பு - அரைக்கோளத்தின் அடிப்பரப்பு
= 6 x (பக்கம்)2 + 2πr2 - πr2
= 6 x (பக்கம்)2 + πr2
\(=6\times { (l) }^{ 2 }+\pi { \left( \frac { l }{ 2 } \right) }^{ 2 }=\frac { 1 }{ 4 } (24+\pi ){ l }^{ 2 }\)
ஆகவே, மீதமுள்ள திண்மத்தின் புறப்பரப்பு \(\\ \\ =\frac { 1 }{ 4 } (24+\pi ){ l }^{ 2 }\) ச.அ
21.
(a)
58 மீ
22.
(a)
cosec2θ + cot2θ
23.
(a)
3 x 3
24.
(a)
பரிமாற்று பண்பு உடையதல்ல
25.
\(\frac{A B}{A C} =\frac{B D}{D C} \)
\(\frac{8}{A C} =\frac{6}{3} \)
\(A C =\frac{8}{6} \times 3=4\) செ.மீ
26.
(d)
27.
\((1+\tan \theta+\sec \theta)(1+\cot \theta-\operatorname{cosec} \theta) \)
\(=\left(1+\frac{\sin \theta}{\cos \theta}+\frac{1}{\cos \theta}\right)\left(1+\frac{\cos \theta}{\sin \theta}-\frac{1}{\sin \theta}\right) \)
\(=\left(\frac{(\cos \theta+\sin \theta)+1}{\cos \theta}\right)\left(\frac{(\sin \theta+\cos \theta)-1}{\sin \theta}\right) \)
\(=\frac{(\sin \theta+\cos \theta)^2-1^2}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{\sin ^2 \theta+\cos ^2 \theta+2 \sin \theta \cos \theta-1}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{1+2 \sin \theta \cos \theta-1}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{2 \sin \theta \cos \theta}{\sin \theta \cos \theta} \)
= 2
28.
குலுக்கலில் வெற்றி பெறும் நிகழ்வு A என்க
\(P(A)=\frac{1}{9} \)
\(\frac{n(A)}{n(S)}=\frac{1}{9} \)
\(\frac{n(A)}{n(S)}=\frac{1}{9} \Rightarrow \frac{n(A)}{135}=\frac{1}{9}\)
\(n(A)=\frac{135}{9}=15\)
29.
வீச்சு = L - S
= 8 - 8
= 0
30.
\(\left(1^3+2^3+3^3+\ldots+15^3\right)-(1+2+3+\ldots+15) \)
\(=\left[\frac{n(n+1)}{2}\right]^2-\left[\frac{n(n+1)}{2}\right] \)
\(=\left[\frac{15 \times 16}{2}\right]^2-\left[\frac{15 \times 16}{2}\right]=(120)^2-120\)
= 14400 - 120 = 14280
31.
(2,1) என்பதை சமன்பாடுகள் (2) ல் பிரதியிட, x + y = 3 மற்றும் 3 x +y = 7
இரண்டு சமன்பாடுகளும் (2,1) என்ற புள்ளியால் நிறைவு செய்யப்படுகிறது.
32.
r1 ஆரத்தைக் கொண்ட கோளப் பந்தின் கன அளவு \(=\frac{4}{3} \pi r_1^3\)
r2 ஆரத்தைக் கொண்ட சம கோளப் பந்துகளின் கன அளவு
\(=8\left(\frac{4}{3} \pi r_2^3\right)\)
இப்போது, கோளத்தின் கன அளவு / புதிய 8 கோளங்களின் கன அளவு
\(=\frac{\frac{4}{3} \pi r_1^3}{8\left(\frac{4}{3} \pi r_2^3\right)}=\frac{r_1^3}{8 r_2^3}=2: 1\)
33.
13 -க்கு குறைவாக உள்ள பகா எண்களின் கணம் {2,3,5,7,11}
உறவு \(\mathrm{R}=\left\{\left(\mathrm{x}, \mathrm{x}^2\right) / \mathrm{x}\right.\) என்பது 13 -க்கும் குறைவான பகா எண்}
R = {(2,4),(3,9),(5,25),(7,49),(11,121)}
\(\therefore\) வீச்சகம் = {4,9,25,49,121}
34.
\(A=\{1,2\}, B=\{1,2,3,4\},\)
C = {5, 6} மற்றும் D = {5,6,7,8}
\(\mathrm{A} \times \mathrm{C}=\{(1,5),(1,6),(2,5),(2,6)\} \)
\(\mathrm{B} \times \mathrm{D}=\{(1,5),(1,6),(1,7),(1,8), \)
\((2,5),(2,6),(2,7),(2,8), \)
\((3,5),(3,6),(3,7),(3,8), \)
\((4,5),(4,6),(4,7),(4,8)\} \)
எனவே, \((\mathrm{A} \times \mathrm{C}) \subset (\mathrm{B} \times \mathrm{D})\)
35.
| குழு A | ||
| x1 | d1=x -28 | \({ d }_{ 1 }^{ 2 }\) |
| 50 | 22 | 484 |
| 20 | -8 | 64 |
| 10 | -18 | 324 |
| 30 | 2 | 4 |
| 30 | 2 | 4 |
| 140 | \(\Sigma d=0\) | 880 |
\({ \bar { x } }_{ 1 }=\cfrac { 140 }{ 6 } =28\)
\({ \bar { \sigma } }_{ 1 }=\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 880 }{ 5 } } \)
= \(\sqrt { 176 } \)
= 13.27
\({ CV }_{ 1 }=\cfrac { { \sigma }_{ 1 } }{ { \bar { x } }_{ 1 } } \times 100\)
\({ CV }_{ 1 }=\cfrac { 13.27 }{ 28 } \times 100\)
= 47.39%
| குழு B | ||
|---|---|---|
| x2 | d2=x-30 | d2 |
| 40 | 10 | 100 |
| 60 | 30 | 900 |
| 20 | -10 | 100 |
| 20 | -10 | 100 |
| 10 | -20 | 400 |
| 150 | \(\Sigma d=0\) | 16000 |
\({ \bar { x } }_{ 2 }=\cfrac { 150 }{ 5 } =30\)
\({ \sigma }_{ 2 }=\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 1600 }{ 5 } } \)
= \(\sqrt { 320 } \)
= 17.89
\({ CV }_{ 1 }=\cfrac { { \sigma }_{ 2 } }{ { \bar { x } }_{ 2 } } \times 100\)
\({ CV }_{ 2 }=\cfrac { 17.89 }{ 30 } \times 100\)
= 59.63%
\(\therefore \) குழு A அதிக சீர்மைத் தன்மை கொண்டுள்ளது.
36.
தேவையான சிறிய கோளங்களின் எண்ணிக்கை
\(=\frac { \frac { 4 }{ 3 } \pi r^{ 3 } }{ \frac { 4 }{ 3 } \pi \times { \left( \frac { r }{ 4 } \right) }^{ 3 } } \)
\(={ r }^{ 3 }\times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } =64\)
சிறிய கோளங்கள் செய்யலாம்.
37.
DB = 3 CD
BC = BD + DC
BC = 3CD + CD
BC = 4CD
CD = \(\frac 14\)BC
CD = \(\frac 14\) BC
BD = 3CD = \(\frac 34\) BC
ΔABD ஒரு செங்கோண முக்கோணம் D = 90°
AB2 = AD2 + BD2...(ii)
ΔACD ஒரு செங்கோண முக்கோணம் ㄥD = 90°
AC2 = AD2 + CD2 ...(iii)
(ii) லிருந்து (iii) ஐக் கழிக்க.,
AB2 - AC2 = BD2 - CD2
⇒ AB2 - AC2 = \({ AB }^{ 2 }-{ AC }^{ 2 }={ \left( \frac { 3 }{ 4 } BC \right) }^{ 2 }-{ \left( \frac { 1 }{ 4 } BC \right) }^{ 2 }\) (i) லிருந்து
CD = \(\frac 14\)BC, BD = \(\frac 34\)BD
⇒ AB2 - AC2 = \(\frac {9}{16}\) BC2 - \(\frac {1}{16}\) BC2
⇒ AB2 - AC2 = \(\frac 12\) BC2
⇒ 2(AB2 - AC2) = BC2
⇒2AB2 = 2AC2+ BC2
என நிரூபிக்கப்பட்டது.
38.
\(\frac{7 x^2+2 \sqrt{14} x+2}{x^2-\frac{1}{2} x+\frac{1}{16}} \) ன் வர்க்கமூலம்
\(=\sqrt{\frac{7 x^2+2 \sqrt{14} x+2}{x^2-\frac{1}{2} x+\frac{1}{16}}} \)
\(7 x^2+2 \sqrt{14} x+2 \)
\(=7 x^2+\sqrt{14} x+\sqrt{14} x+2 \)
\(=\sqrt{7} \sqrt{7} x x^2+\sqrt{2} \sqrt{7} x+\sqrt{2} \sqrt{7} x+\sqrt{2} \sqrt{2} \)
\(=\sqrt{7} x(\sqrt{7} x+\sqrt{2})+\sqrt{2}(\sqrt{7} x+\sqrt{2}) \)
\(=(\sqrt{7} x+\sqrt{2})(\sqrt{7} x+\sqrt{2}) \)
\(=(\sqrt{7} x+\sqrt{2})^2 \)
\(x^2-\frac{1}{2} x+\frac{1}{16} \)
\(=x^2-\frac{1}{4} x-\frac{1}{4} x+\frac{1}{16} \)
\(=x\left(x-\frac{1}{4}\right)-1 / 4\left(x-\frac{1}{4}\right) \)
\(=\left(x-\frac{1}{4}\right)^2 \)
\(\therefore \sqrt{\frac{7 x^2+2 \sqrt{14} x+2}{x^2-1 / 2 x+\frac{1}{16}}} \)
\(=\sqrt{\frac{(\sqrt{7} x+\sqrt{2})^2}{(x-1 / 4)^2}} \)
\(=\sqrt{16 \frac{(\sqrt{7} x+\sqrt{2})^2}{(4 x-1)^2}} \)
\(=4\left|\frac{\sqrt{7} x+\sqrt{2}}{4 x-1}\right|\)
39.
TP மற்றும் TQ என்பது T என்ற புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோடுகளாகும்
OP = 5 செ.மீ, OT = 13 செ.மீ
ET = OT - OE = 13 - 5 = 8 செ.மீ
\(\angle O P T=90^{\circ}\)
பிதாகரஸ் தேற்றத்தின்படி ΔOPT இல்,
\(\mathrm{OT}^2=\mathrm{OP}^2+\mathrm{PT}^2 \)
\(13^2=5^2+\mathrm{PT}^2 \)
\(\mathrm{PT}^2=169-25 \)
\(\mathrm{PT}^2=144\)
PT = 12 செ.மீ
வட்டத்தின் வெளியே உள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோடுகள் சமம்.
\(\therefore \mathrm{AP}=\mathrm{AE}=\mathrm{x} \)
\(\Rightarrow \mathrm{AT}=\mathrm{PT}-\mathrm{AP}=(12-\mathrm{x}) \) செ.மீ
AB ஆனது E இல் தொடுகோடு
\(\therefore \mathrm{OE} \perp \mathrm{AB} \)
\(\Rightarrow \angle O E A =90^{\circ} \)
\(\Rightarrow \angle A E T =90^{\circ} \)
\(\mathrm{AT}^2 =\mathrm{AE}^2+\mathrm{ET}^2\)
[பிதாகரஸ் தேற்றத்தின்படி ΔAET இல்]
\((12-x)^2 =x^2+(13-5)^2 \)
\(144-24 x+x^2 =x^2+64 \)
\(24 x =144-64 \)
\(24 x =80 \)
\(\Rightarrow 3 x =10 \)
\(\mathrm{x} =\frac{10}{3} \)
மேலும் \( \mathrm{BE} =\frac{10}{3}\) செ.மீ
\(\therefore \mathrm{AB} =\mathrm{AE}+\mathrm{BE}\)
\(=\left(\frac{10}{3}+\frac{10}{3}\right) \) செ.மீ \(=\frac{20}{3} \) செ.மீ
\(\mathrm{AB} =\frac{20}{3}\) செ.மீ
40.
கொடுக்கப்பட்ட எண் 107,
இது ஒரு மிகை ஒற்றை எண்
எனவே a = 107 மற்றும் b = 4 என்க
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின்படி,
107 = 4q + r இங்கு 0 \(\leq\) r < 4
அதாவது r = 0, 1, 2, 3.
107 ஒற்றை எண், எனவே மீதி 0 அல்லது 2 ஆக இருக்க இயலாது.
எனவே, 107 ஐ 4q அல்லது 4q + 2 என்ற வடிவில் அமைக்க இயலாது. மீதமுள்ள வடிவங்கள் 4q + 1 அல்லது 4q + 3
4q + 1 = 107 எனில்
4q = 107 - 1 = 106
\(q=\frac{106}{4}\) ஒரு இயல் எண் அல்ல
∴ 107 = 4q + 3 என்ற வடிவில் மட்டுமே அமையும்
∴ இங்கு 107 = 4q + 3
4q = 107 - 3 = 104
\(q=\frac{104}{4}=26\)
\(\therefore\) 107 ஆனது 4q + 3 என்ற வடிவில் அமையும்.
41.
(i) 3, 9, 27, 81
இங்கு \(\frac{t_2}{t_1}=\frac{9}{3}=3\)
\(\frac{t_3}{t_2}=\frac{27}{9}=3 \)
\(\frac{t_4}{t_3}=\frac{81}{27}=3\)
அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக உள்ளன. எனவே 3, 9, 27, 81,.... ஒரு பெருக்குத் தொடர்வரிசை ஆகும்.
(ii) 4, 44, 444, 4444
\(\frac{t_2}{t_1}=\frac{44}{4}=11 \)
\(\frac{t_3}{t_2}=\frac{444}{44}=\frac{111}{11} \)
\(\frac{t_4}{t_3}=\frac{4444}{444}=\frac{1111}{111}\)
இங்கு அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக இல்லாததால் 4, 44, 444,..... என்ற தொடர்வரிசை ஒரு பெருக்குத் தொடர்வரிசை அல்ல
(iii) 0.5, 0.05, 0.005,....
\(\frac{t_2}{t_1}=\frac{0.05}{0.5}=\frac{0.5}{5}=\frac{5}{50}=\frac{1}{10} \)
\(\frac{t_3}{t_2}=\frac{0.005}{0.05}=\frac{5}{50}=\frac{1}{10}\)
அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக உள்ளன. எனவே 0.5, 0.05, 0.005,.... ஒரு பெருக்குத் தொடர்வரிசை ஆகும் (iv) \(\frac{1}{3}, \frac{1}{6}, \frac{1}{12}, \ldots \)
\(\frac{t_2}{t_1}=\frac{1 / 6}{1 / 3}=\frac{1}{6} \times \frac{3}{1}=\frac{1}{2} \)
\(\frac{t_3}{t_2}=\frac{1 / 12}{1 / 6}=\frac{1}{12} \times \frac{6}{1}=\frac{1}{2}\)
இரண்டு அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக உள்ளன. எனவே \(\frac{1}{3}, \frac{1}{6}, \frac{1}{12}, \ldots\) ஒரு பெருக்குத் தொடர்வரிசை ஆகும்.
(v) 1, -5, 25, -125,.....
\(\frac{t_2}{t_1}=\frac{-5}{1}=-5 \)
\(\frac{t_3}{t_2}=\frac{25}{-5}=-5 \)
\(\frac{t_4}{t_3}=\frac{-125}{25}=-5\)
இரண்டு அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக உள்ளன. எனவே, 1, -5, 25, -125,..... ஒரு பெருக்குத் தொடர்வரிசை ஆகும்.
(vi) 120, 60, 30, 18,.....
\(\frac{t_2}{t_1}=\frac{60}{120}=\frac{1}{2} \)
\(\frac{t_3}{t_2}=\frac{30}{60}=\frac{1}{2} \)
\(\frac{t_4}{t_3}=\frac{18}{30}=\frac{9}{15}=\frac{3}{5}\)
அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக இல்லாததால், 120, 60, 30, 18,..... ஒரு பெருக்குத் தொடர்வரிசை அல்ல.
(vii) 16, 4, 1, \(\frac { 1 }{ 4 } \),...
\(\frac{t_2}{t_1}=\frac{4}{16}=\frac{1}{4} \)
\(\frac{t_3}{t_2} =\frac{1}{4} \)
\(\frac{t_4}{t_3} =\frac{1 / 4}{1} \)
\(=\frac{1}{4}\)
அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக உள்ளன.
∴ 16, 4, 1, \(\frac { 1 }{ 4 } \),... ஒரு பெருக்குத் தொடர்வரிசை ஆகும்
42.
3x + y + 2 = 0 மற்றும் x - 2y - 4 = 0 ஆகியவற்றைத் தீர்க்க.
3x + y + 2 = 0 .....(1)
x - 2y - 4 = 0 .....(2)
x = 0 என (1) ல் பிரதியிட,
3(0) + y = -2
y = -2
சமன்பாடுகள் (1), (2) ஆகியவற்றின் வெட்டும்புள்ளி (0,-2)
7x - 3y = -12 மற்றும் 2y = x + 3 ஆகியவற்றைத் தீர்க்க.
7x - 3y = -12 ......(3)
x - 2y = -3 ......(4)
7x - 14y = -21 ...(6)
\(y=\frac{9}{11}\) என (2) ல் பிரதியிட,
\(x-2\left(\frac{9}{11}\right)=-3 \)
\(x =-3+\frac{18}{11} \)
\(=\frac{-15}{11}\)
சமன்பாடுகள் (3), (4) ஆகியவற்றின், வெட்டும் புள்ளி \(\left(\frac{-15}{11}, \frac{9}{11}\right)\)
(0,-2) மற்றும் \(\left(\frac{-15}{11}, \frac{9}{11}\right)\) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சமன்பாடு
\(\frac{y-y_1}{y_2-y_1}=\frac{x-x_1}{x_2-x_1} \)
\(\frac{y+2}{9} =\frac{x-0}{-\frac{15}{11}-2} \)
\(\frac{11(y+2)}{9+22} =\frac{-11 x}{15} \)
\(15(y+2) =-31 x \)
\(15 y+30 =-31 x \)
\(31 x+15 y+30 =0\)
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards