10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
ஆயத்தொலைவு வடிவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D (4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.
2.
A(1,-2) , B(6,-2), C(5,1) மற்றும் D(2,1) என்பன நான்கு புள்ளிகள் எனில், விடைகளிலிருந்து நீங்கள் அறிவது என்ன?
3.
வரைபடமானது y அச்சில் பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலையையும் x அச்சில் செல்சியஸ் டிகிரி வெப்பநிலையையும் குறிக்கிறது எனில்,
கோட்டின் சமன்பாட்டை எழுதுக.
4.
2x + 3y - 8 = 0, 4x + 6y + 18 = 0 ஆகிய நேர்க்கோடுகள் இணை எனக் காட்டுக.
5.
ஒரு பூனை xy-தளத்தில் (-6, -4) என்ற புள்ளியில் உள்ளது. (5, 11) என்ற புள்ளியில் ஒரு பால் புட்டி வைக்கப்பட்டுள்ளது. பூனை மிகக் குறுகிய தூரம் பயணித்துப் பால் அருந்த விரும்புகிறது எனில், பாலைப் பருகுவதற்குத் தேவையான பாதையின் சமன்பாட்டைக் காண்க.
6.
ஓர் அலைபேசி மின்கலத்தின் சக்தி 100% இருக்கும்போது (battery power) அலைபேசியைப் பயன்படுத்த தொடங்குகிறோம். x மணி நேரம் பயன்படுத்திய பிறகு மீதி இருக்கும் மின்கலத்தின் சக்தி y சதவீதம் (தசமத்தில்) ஆனது y = − 0.25x + 1 ஆகும்
(i) எத்தனை மணி நேரத்திற்குப் பிறகு மின்கலத்தின் சக்தி 40% ஆகக் குறைந்திருக்கும் எனக் காண்க.
(ii) மின்கலம் தனது முழுச் சக்தியை இழக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு?
7.
ஆய அச்சுகளுடன் சமமாகவும், எதிர் குறியும் உடைய வெட்டுத்துண்டுகளை ஏற்படுத்தி, (5,7) என்ற புள்ளி வழி செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
8.
8x − 7y + 6 = 0 என்ற கோட்டின் சாய்வு மற்றும் y வெட்டுத்துண்டு ஆகியவற்றைக் கணக்கிடுக.
9.
(5, 7) என்ற புள்ளி வழி செல்வதும் (i) X அச்சுக்கு இணையாகவும் (ii) Y அச்சுக்கு இணையாகவும் அமைந்த நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
10.
(–2, 2), (5, 8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோடு r மற்றும் (–8, 7), (–2, 0) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோடு s ஆகும் எனில், நேர்க்கோடு r - ஆனது நேர்க்கோடு s - க்கு செங்குத்தாக அமையுமா?
11.
(i) ஒரு கோட்டின் சாய்வுக் கோணம் 30° எனில், அக்கோட்டின் சாய்வைக் காண்க.
(ii) ஒரு கோட்டின் சாய்வு \(\sqrt 3\) எனில், அக்கோட்டின் சாய்வுக் கோணம் காண்க.
12.
P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையும் எனக் காட்டுக.
13.
(-3, 5), (5, 6) மற்றும் (5, -2) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
14.
(2, 5) மற்றும் (4, 7) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், A(1, 4) என்ற புள்ளி வழி செல்லுவதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
15.
(8,6) , (5,11), (-5,12) மற்றும் (-4,3) ஆகிய புள்ளிகளை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பைக் காண்க.
16.
ஓர் அறையின் தளமானது ஒரே மாதிரியான முக்கோண வடிவத் தரை ஓடுகளைக் கொண்டு (tiles) அமைக்கப்படுகிறது. அதில் ஓர் ஓட்டின் முனைகள் (-3, 2), (-1, -1) மற்றும் (1, 2) ஆகும். தரைத்தளத்தை முழுமையாக அமைக்க 110 ஓடுகள் தேவைப்படுகின்றது எனில், அதன் பரப்பைக் காண்க.
17.
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள்
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
18.
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை_______.
இரு பக்கங்கள் இணை
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை
எதிரெதிர் பக்கங்கள் இணை
அனைத்துப் பக்கங்களும் சமம்.
19.
8y = 4x + 21 என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
20.
7x - 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு _______.
7x - 3y + 4 = 0
3x - 7y + 4 = 0
3x + 7y = 0
7x - 3y = 0
21.
Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு _______.
8x + 5y = 40
8x - 5y = 40
x = 5
y = 5
22.
(12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு \(\frac 18\) எனில், ‘a’ –யின் மதிப்பு _______.
1
4
-5
2
23.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி ________.
(5, 3)
(2, 4)
(3,5)
(4, 4)
24.
(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு _______.
3
6
9
12
25.
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது _______.
X -அச்சுக்கு இணை
Y -அச்சுக்கு இணை
ஆதிப் புள்ளி வழிச் செல்லும்
(0, 11) என்ற புள்ளி வழிச் செல்லும்
26.
(−5, 0), (0, −5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.
0 ச. அலகுகள்
25 ச. அலகுகள்
5 ச. அலகுகள்
எதுவுமில்லை
1.
B, D ஐ இணைப்பதால் ΔABD, ΔBCD கிடைக்கின்றன.
இப்பொழுது ΔABD - ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-5(- 5 - 5) + (-4) (5 - 7) + 4 (7 + 5 )]
= \(\frac { 1 }{ 2 } \) (50 + 8 + 48)
= \(\frac { 106 }{ 2 } \) = 53 சதுர அலகுகள்
மேலும் ΔBCD யின் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-4 (- 6 - 5) - 1 (5 + 5) + 4 (-5 + 6)]
= \(\frac { 1 }{ 2 } \) (44 - 10 + 4)
= 19 சதுர அலகுகள்
ஆகையால் நாற்கரம் ABCD-ன் பரப்பு
= 53 + 19 = 72 சதுர அலகுகள்
2.
AB- யின் சாய்வும் CD–ன் சாய்வும் சமமாக இருப்பதால், அவைகள் இணையாகும். இதேபோல் AD– யின் சாய்வும், BC-ன் சாய்வும் சமம் இல்லை. எனவே, இவை இணை இல்லை.
ஆகையால், நாற்கரம் ABCD ஆனது ஒரு சரிவகம் என அறியலாம்
3.
சாய்வு மற்றும் y வெட்டுத்துண்டு வடிவத்தைப் பயன்படுத்தி, நேர்கோட்டின் சமன்பாட்டை எழுதலாம்.
நேர்கோட்டின் சமன்பாடு y = \(\frac 95\)x + 32
4.
2x + 3y - 8 = 0 என்ற நேர்க்கோட்டின் சாய்வு
m1 =
m1 = \(\frac {-2}3\)
4x + 6y + 18 = 0 என்ற நேர்க்கோட்டின் சாய்வு
m2 = \(\frac{-4}{6}=\frac{-2}{3}\)
இங்கு, m1 = m2
அதாவது, சாய்வுகள் சமம். எனவே இவ்விரு நேர்க்கோடுகளும் இணையாகும்.
5.
A என்ற புள்ளியில் பூனை இருப்பதாகவும், B என்ற புள்ளியில் பால்புட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொள்க.
கொடுக்கப்பட்டது: A(-6,-4), B(5,11)
\(\left(\mathrm{x}_1, \mathrm{y}_1\right),\left(\mathrm{x}_2, \mathrm{y}_2\right) \)ஆகிய புள்ளிகள் வழிச் செல்லும் கோட்டின் சமன்பாடு.
\(\frac{y-y_1}{y_2-y_1} =\frac{x-x_1}{x_2-x_1} \)
\(\frac{y+4}{11+4} =\frac{x+6}{5+6} \)
\(11(y+4) =15(x+6) \)
\(11 y+44 =15 x+90 \)
\(15 x-11 y+46 =0\)
6.
(i) மின்கலச் சக்தி 40% எனில், நேரத்தைக் கணக்கிட, y = 0.40 என எடுத்துக் கொள்க.
0.40 = −0.25x + 1 ⇒ 0.25x = 0.60
x = \(\frac {0.60}{0.25}\) = 2.4 மணி
(ii) மின்கலம் தனது முழுச் சக்தியை இழந்துவிட்டால் y = 0 எனக் கிடைக்கும்.
எனவே , 0 = −0.25x + 1 ⇒ 0.25x = 1 எனவே , x = 4 மணி.
∴ நான்கு மணி நேரத்திற்குப் பின்பு அலைபேசியின் மின்கலம் தனது முழுச் சக்தியையும் இழக்கிறது.
7.
x - வெட்டுத்துண்டு a மற்றும் y - வெட்டுத்துண்டு '-a' என்க.
வெட்டுத்துண்டு வடிவில் நேர்க்கோட்டின் சமன்பாடு \(\frac { x }{ a } +\frac { y }{ -b } \) = 1
\(\frac { x }{ a } +\frac { y }{ -a } \) = 1 (இங்கே b = -a)
எனவே, x − y = a ...(1)
(1) ஆனது (5, 7) வழிச் செல்வதால், 5 - 7 = a ⇒ a = −2
ஆகவே, தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு x − y = −2 அதாவது x − y + 2 = 0
8.
கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடு 8x − 7y + 6 = 0
7y = 8x + 6 (இதனை y = mx + c வடிவத்திற்கு மாற்றவும்)
\(y=\frac { 8 }{ 7 } x+\frac { 6 }{ 7 } \) ...(1)
(1) ஐ y = mx + c உடன் ஒப்பிட,
சாய்வு m = \(\frac 87\) மற்றும் y வெட்டுத்துண்டு c = \(\frac 67\)
9.
(i) X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடு y = b.
இது (5, 7) வழி செல்வதால், b = 7.
எனவே தேவையான நேர்கோட்டின் சமன்பாடு y = 7.
(ii) Y அச்சுக்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடு x = c
இது (5, 7) வழி செல்வதால், c = 5
எனவே தேவையான நேர்கோட்டின் சமன்பாடு x = 5.
10.
நேர்க்கோடு r -யின் சாய்வு \({ m }_{ 1 }=\frac { 8-2 }{ 5+2 } =\frac { 6 }{ 7 } \)
நேர்க்கோடு s -யின் சாய்வு \({ m }_{ 2 }=\frac { 0-7 }{ -2+8 } =\frac { -7 }{ 6 } \)
சாய்வுகளின் பெருக்கல் = \(\frac { 6 }{ 7 } \times \frac { -7 }{ 6 } =-1\)
அதாவது, m1m2 = -1
எனவே, நேர்க்கோடு r ஆனது, நேர்க்கோடு s -க்கு செங்குத்தாக அமையும்.
11.
(i) இங்கு θ = 30°
சாய்வு m = tan θ
எனவே, சாய்வு m = tan 30° = \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
(ii) சாய்வு \(\sqrt 3\) , θ என்பது கோட்டின் சாய்வுக் கோணம் என்க.
tan θ = \(\sqrt 3\)
⇒ θ = 60°
12.
P(-1.5, 3), Q(6, -2) , R(-3, 4) ஆகியன கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஆகும்.
∆PQR - யின் பரப்பு = \(\frac 12\) {(x1y2 + x2y3 + x3y1) − (x2y1 + x3y2 + x1y3)}
= \(\frac 12\) {(3 + 24 - 9) - (18 + 6 - 6)} = \(\frac 12\) {18 - 18} = 0
எனவே, கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
13.
படத்தில், கொடுக்கப்பட்ட புள்ளிகளைக் கடிகார முள்ளின் எதிர் திசையில் அமையுமாறு குறிக்கவும்.
என்பன முக்கோணத்தின் முனைகள் என்க.
ΔABC - யின் பரப்பு
= \(\frac {1}{2}\) {(x1y2 + x2y3 + x3y1) - (x2y1 + x3y2 + x1y3)}
= \(\frac {1}{2}\) {(6 + 30 + 25) - (25 - 10 - 18)}
= \(\frac {1}{2}\) {61 + 3}
= \(\frac {1}{2}\) (64) = 32 சதுர அலகுகள்
14.
கொடுக்கப்பட்ட புள்ளி A(1, 4), B(2, 5) மற்றும் C(4, 7)
BC - யின் சாய்வு = \(\frac { 7-5 }{ 4-2 } =\frac { 2 }{ 2 } \) = 1
தேவையான நேர்க்கோட்டின் சாய்வு m என்க.
இந்த நேர்க்கோடு BC-க்கு செங்குத்தாக உள்ளது.
எனவே, m x 1 = −1
m = −1
இக்கோடானது A(1,4) வழி செல்வதால்,
தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு y − y1 = m(x − x1)
y - 4 = − 1(x − 1)
y - 4 = −x + 1
எனவே, x + y − 5 = 0
15.
நாற்கரத்தின் பரப்பைக் காண்பதற்கு முன்பாகக் கொடுக்கப்பட்ட புள்ளிகளை வரைபடத்தில் குறிக்கவேண்டும்.
A(8,6), B(5,11), C(–5,12) மற்றும் D(–4,3) என்பன முனைப் புள்ளிகள் ஆகும்.
எனவே, நாற்கரம் ABCD - யின் பரப்பு
= \(\frac 12\) {(x1y2 + x2y3 + x3y4 + x4y1) − (x2y1 + x3y2 + x4y3 + x1y4)}
= \(\frac 12\) {(88 + 60 - 15 - 24) - (30 - 55 - 48 + 24)}
= \(\frac 12\) {109 + 49}
= \(\frac 12\) {158} = 79 ச.அலகுகள்
16.
ஓர் ஓட்டின் முனைப் புள்ளிகள் (-3,2), (-1, -1) மற்றும் (1, 2) ஆகும்.
இந்த ஓட்டின் பரப்பு = \(\frac {1}{2}\) {(3 - 2 + 2) - (-2 - 1 - 6)} ச.அலகுகள்
= \(\frac {1}{2}\)(12) = 6 ச. அலகுகள்
தரைத்தளமானது ஒரே மாதிரியான 110 ஓடுகளால் நிரப்பப்படுவதால், தரைத்தளத்தின் பரப்பு = 110 × 6 = 660 ச.அலகுகள்.
17.
(a)
இரு பக்கங்களின் சாய்வுகள்
18.
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை.
19.
கொடுக்கப்பட்ட கோடு 8y = 4x + 21
\(y=\frac{x}{2}+\frac{21}{8}\)
\(\mathrm{y}=\frac{x}{2}+2.625\)\(\mathrm{y}=\mathrm{mx}+\mathrm{c}\) என்ற வடிவில்
இங்கு, \(\mathrm{m}=\frac{1}{2}=0.5, \mathrm{c}=2.625\)
\(\therefore \) சாய்வு \(\mathrm{m} =\frac{1}{2}=0.5 \)
y வெட்டுத்துண்டு = 2.6
20.
7x - 3y + 4 = 0 என்ற கோட்டின் சாய்வு
\(\frac{-a}{b}=\frac{-7}{-3}=\frac{7}{3}\)
செங்குத்துக் கோட்டின் சாய்வு \(=\frac{-3}{7}\)
(0,0) வழிச் செல்வதும் சாய்வு \(\frac{-3}{7}\) உடையதுமான கோட்டின் சமன்பாடு
\(y-y_1 =m\left(x-x_1\right) \)
\(y-0 =\frac{-3}{7}(x-0) \)
7y = -3x
3x + 7y = 0
21.
கொடுக்கப்பட்டது: A என்பது Y -அச்சின் மீதுள்ள புள்ளி, அதன் செங்குத்து அச்சுத்தூரம் 8. B என்பது X-அச்சின் மீதுள்ள புள்ளி, அதன் கிடைஅச்சுத்தூரம் 5 .
\(\therefore\) A மற்றும் B என்பன முறையே (0,8) மற்றும் (5,0) ஆகும்.
AB ன் சமன்பாடு \(\frac{y-y_1}{y_2-y_1}=\frac{x-x_1}{x_2-x_1}\)
\(\frac{y-8}{0-8} =\frac{x-0}{5-0} \)
5(y - 8) = -8x
8x + 5y- 40 = 0
8x + 5y = 40
22.
(12,3) மற்றும் (4, a) புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டின் சாய்வு 1 / 8
\(\frac{y_1-y_2}{x_1-x_2} =\frac{3-a}{12-4}=\frac{1}{8} \)
\(\frac{3-a}{8} =\frac{1}{8} \)
\(3-a =1 \Rightarrow a=2\)
23.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஐத் தீர்க்க
3x - y = 4 ......(1)
x + y = 8 .....(2)
___________
\((1)+(2) \Rightarrow 4 x =12\)
x = 3
(2) -ல் பிரதியிட
3 + y = 8
y = 5
\(\therefore\) வெட்டும்புள்ளி (3,5)
24.
கொடுக்கப்பட்ட (5, 7), (3, p) மற்றும் (6,6) என்பன ஒரே கோடமைப் புள்ளிகள்
\(\therefore\) இப்புள்ளிகளால் அமையும் முக்கோணத்தின் பரப்பு பூச்சியம்.
அதாவது \(\frac{1}{2}\left\{x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right\}=0\)
\(5(\mathrm{p}-6)+3(6-7)+6(7-\mathrm{p})=0 \)
\(5 \mathrm{p}-30-3+42-6 \mathrm{p}=0 \)
\(\Rightarrow-\mathrm{p}+9=0 \Rightarrow \mathrm{p}=9\)
25.
x = a என்ற வடிவில் உள்ள எந்த ஒரு கோடும் y -அச்சிற்கு இணையாக இருக்கும்.
26.
புள்ளிகள் (-5, 0), (0, -5) மற்றும் (5, 0) முக்கோணத்தின் பரப்பளவு
\(=\frac{1}{2}\left[x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right]\)
\(=\frac{1}{2}[-5(-5-0)+0(0-0)+5(0+5)] \)
\(=\frac{1}{2}[25+25]=\frac{50}{2}=25 \) சதுர அலகுகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards