10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
ஆயத்தொலைவு வடிவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கிழக்கு நிழற்சாலை மற்றும் குறுக்குச் சாலைகளால் ஒரு வட்ட வடிவத் தோட்டம் சூழப்பட்டுள்ளது. குறுக்குச் சாலையானது வடக்கு தெருவை D-யிலும், கிழக்குச் சாலையை E-யிலும் சந்திக்கிறது. தோட்டத்திற்கு A(3,10) என்ற புள்ளியில் AD ஆனது தொடுகோடாக அமைகிறது. படத்தைப் பயன்படுத்தி
குறுக்குச் சாலை கீழ்க்கண்டவற்றைச் சந்திக்கின்ற புள்ளியைக் காண்க
(i) வடக்குத் தெரு
(ii) கிழக்கு நிழற்சாலை
2.
கிழக்கு நிழற்சாலை மற்றும் குறுக்குச் சாலைகளால் ஒரு வட்ட வடிவத் தோட்டம் சூழப்பட்டுள்ளது. குறுக்குச் சாலையானது வடக்கு தெருவை D-யிலும், கிழக்குச் சாலையை E-யிலும் சந்திக்கிறது. தோட்டத்திற்கு A(3, 10) என்ற புள்ளியில் AD ஆனது தொடுகோடாக அமைகிறது. படத்தைப் பயன்படுத்தி
(a) பின்வருவனவற்றின் சமன்பாட்டினைக் காண்க
(i) கிழக்கு நிழற்சாலை
(ii) வடக்குத் தெரு
(iii) குறுக்குச்சாலை
(b) குறுக்குச்சாலை கீழ்க்கண்டவற்றைச் சந்திக்கின்ற புள்ளியைக் காண்க
(i) வடக்குத் தெரு
(ii) கிழக்கு நிழற்சாலை
3.
(-3, 8) என்ற புள்ளி வழி செல்வதும், ஆய அச்சுகளின் மிகைவெட்டுத்துண்டுகளின் கூடுதல் 7 உடையதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
4.
(2, 5) மற்றும் (4, 7) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், A(1, 4) என்ற புள்ளி வழி செல்லுவதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
5.
கொடுக்கப்பட்ட படமானது ஒரு வளாகத்தில் புதிய வாகன நிறுத்தம் ஏற்படுத்த அமைக்கப்பட்ட பகுதியைக் காட்டுகிறது. இதை அமைப்பதற்கு ஒரு சதுர அடிக்கு ₹1300 செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. எனில், வாகன நிறுத்தம் ஏற்படுத்துவதற்குத் தேவையான மொத்தச் செலவைக் கணக்கிடவும்.
6.
A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D (4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.
7.
கீழ்காணும் புள்ளிகள் (1, 7), (4, 2), (-1, -1) மற்றும் (-4, 4) சதுரத்தின் உச்சிகள் எனக் காட்டுக.
8.
(x,y) எனும் புள்ளி (7, 1) மற்றும் (3, 5) லிருந்து சமதூரத்தில் உள்ளதெனில், x மற்றும் y இடையேயான உறவைக் காண்க.
9.
(3, -4) என்ற புள்ளியின் வழி செல்வதும், \(\frac {-5}{7}\) ஐ சாய்வாக உடையதுமான நேர்க்கோட்டில் சமன்பாட்டைக் காண்க.
10.
(5, 7) என்ற புள்ளி வழி செல்வதும் (i) X அச்சுக்கு இணையாகவும் (ii) Y அச்சுக்கு இணையாகவும் அமைந்த நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
1.
(i) குறுக்குச் சாலை மற்றும் வடக்குத் தெரு சந்திக்கும் புள்ளியைக் காணுதல்.
D(0, k) என்பது குறுக்குச் சாலையின் மேல் உள்ள புள்ளி ஆகும்.
எனவே, x = 0, y = k என குறுக்கு சாலையின் சமன்பாட்டில் பிரதியிட, நாம் பெறுவது
0 - 3k + 18 = 0
k = 6
எனவே, D ஆனது (0,6) ஆகும்
(ii) குறுக்குச் சாலை மற்றும் கிழக்கு நிழற்சாலை சந்திக்கும் புள்ளியைக் காணுதல்.
E-யின் ஆயப் புள்ளி (q, 2) என்க.
x = q, y = 2 எனக் குறுக்குச் சாலை சமன்பாட்டில் பிரதியிட
4q - 6 + 18 = 0
4q = -12 எனவே q = –3
ஆகவே, E என்ற புள்ளி (-3, 2)ஆகும்.
ஆதலால், குறுக்கு சாலையானது வடக்கு தெருவை D(0, 6) என்ற புள்ளியிலும், கிழக்கு நிழற்சாலையை E (-3, 2) என்ற புள்ளியிலும் சந்திக்கிறது.
2.
(a) (i) கிழக்கு நிழற்சாலையானது C(0, 2) மற்றும் B(7, 2) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோடாகும்.
எனவே இரு புள்ளி வடிவத்தைப் பயன்படுத்திக் கிழக்கு நிழற்சாலையின் சமன்பாடு,
\(\frac { y-2 }{ 2-2 } =\frac { x-0 }{ 7-0 } \)
\(\frac { y-2 }{ 0 } =\frac { x }{ 7 } \) ⇒ y = 2 ஆகும்.
(ii) D மற்றும் C(0, 2) என்ற புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமைகிறது எனில் புள்ளி D-யின் x ஆயத் தொலைவு = 0 ஆகும்.
ஆகவே, வடக்கு தெருவிலுள்ள எந்தப் புள்ளிக்கும் x-யின் ஆயத் தொலைவு = 0 ஆகும்
எனவே, வடக்கு தெருவின் சமன்பாடு x = 0.
(iii) குறுக்குச் சாலையின் சமன்பாட்டைக் காணுதல்.
வட்டவடிவத் தோட்டத்தின் மையம் M–யின் ஆயப் புள்ளி (7, 7) மற்றும் A- யின் ஆயப் புள்ளி (3, 10) ஆகும். MA-யின் சாய்வு m1 எனில், m1 = \(\frac { 10-7 }{ 3-7 } =\frac { -3 }{ 4 } \)
குறுக்குச் சாலையானது MA-க்கு செங்குத்தாக உள்ளது. எனவே குறுக்குச் சாலையின் சாய்வு m2 எனில், m1 m2 = –1 ⇒ \(\frac { -3 }{ 4 } \) m2 = -1 ∴, m2 = \(\frac { 4 }{3 } \)
குறுக்குச் சாலையானது, சாய்வு \(\frac { 4 }{3 } \) மற்றும் A(3, 10) என்ற புள்ளி வழியாகவும் செல்கிறது
எனவே, குறுக்குச் சாலையின் சமன்பாடு y - 10 = \(\frac { 4 }{3 } \)(x - 3)
3y - 30 = 4x - 12
4x - 3y + 18 = 0
(b) (i) குறுக்குச் சாலை மற்றும் வடக்குத் தெரு சந்திக்கும் புள்ளியைக் காணுதல்.
D(0, k) என்பது குறுக்குச் சாலையின் மேல் உள்ள புள்ளி ஆகும்.
எனவே, x = 0, y = k என குறுக்கு சாலையின் சமன்பாட்டில் பிரதியிட, நாம் பெறுவது
0 - 3k + 18 = 0
k = 6
எனவே, D ஆனது (0, 6) ஆகும்
(ii) குறுக்குச் சாலை மற்றும் கிழக்கு நிழற்சாலை சந்திக்கும் புள்ளியைக் காணுதல்.
E-யின் ஆயப் புள்ளி (q, 2) என்க.
x = q, y = 2 எனக் குறுக்குச் சாலை சமன்பாட்டில் பிரதியிட
4q - 6 + 18 = 0
4q = -12 எனவே q = –3
ஆகவே, E என்ற புள்ளி (-3, 2)ஆகும்.
ஆதலால், குறுக்கு சாலையானது வடக்கு தெருவை D(0, 6) என்ற புள்ளியிலும், கிழக்கு நிழற்சாலையை E (3, 2) என்ற புள்ளியிலும் சந்திக்கிறது.
3.
a, b என்பன வெட்டுத்துண்டுகள் எனில் a + b = 7 அல்லது b = 7 − a
வெட்டுத்துண்டு வடிவம் \(\frac { x }{ a } +\frac { y }{ b } =1\)
ஆகவே, \(\frac { x }{ a } +\frac { y }{ 7-a } =1\)
இக்கோடானது (-3, 8), என்ற புள்ளி வழிச் செல்வதால்
\(\frac { -3 }{ a } +\frac { 8 }{ 7-a } =1\) ⇒ –3(7 – a) + 8a = a(7 – a)
−21 + 3a + 8a = 7a − a2
ஆகவே a2 + 4a − 21 = 0
இதனை தீர்ப்பதன் மூலம் (a − 3)(a + 7) = 0
a = 3 அல்லது a = −7
a என்பது மிகை எண் என்பதால் a = 3 மற்றும் b = 7 – a = 7 – 3 = 4.
எனவே, \(\frac { x }{ 3 } +\frac { y }{ 4 } =1\)
ஆகவே, தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு 4x + 3y - 12 = 0.
4.
கொடுக்கப்பட்ட புள்ளி A(1, 4), B(2, 5) மற்றும் C(4, 7)
BC - யின் சாய்வு = \(\frac { 7-5 }{ 4-2 } =\frac { 2 }{ 2 } \) = 1
தேவையான நேர்க்கோட்டின் சாய்வு m என்க.
இந்த நேர்க்கோடு BC-க்கு செங்குத்தாக உள்ளது.
எனவே, m x 1 = −1
m = −1
இக்கோடானது A(1,4) வழி செல்வதால்,
தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு y − y1 = m(x − x1)
y - 4 = − 1(x − 1)
y - 4 = −x + 1
எனவே, x + y − 5 = 0
5.
A(2, 2), B(5, 5), C(4, 9) மற்றும் D(1, 7) என்பது நாற்கர வடிவ வாகன நிறுத்தத்தின் முனைப் புள்ளிகள் ஆகும்.
வாகன நிறுத்தத்தின் பரப்பு = \(\frac 12\) ச.அலகுகள்
= \(\frac 12\) {(10 + 45 + 28 + 2) - (10 + 20 + 9 + 14)}
= \(\frac 12\) {85 - 53}
= \(\frac 12\) (32) = 16 சதுர அடிகள்.
வாகன நிறுத்தத்தின் பரப்பு = 16 சதுர அடிகள்
ஒரு சதுர அடி அமைக்க ஆகும் செலவு = ₹1300
வாகன நிறுத்தம் அமைக்க ஆகும் மொத்தச் செலவு = 16 × 1300 = ₹20800
6.
B, D ஐ இணைப்பதால் ΔABD, ΔBCD கிடைக்கின்றன.
இப்பொழுது ΔABD - ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-5(- 5 - 5) + (-4) (5 - 7) + 4 (7 + 5 )]
= \(\frac { 1 }{ 2 } \) (50 + 8 + 48)
= \(\frac { 106 }{ 2 } \) = 53 சதுர அலகுகள்
மேலும் ΔBCD யின் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-4 (- 6 - 5) - 1 (5 + 5) + 4 (-5 + 6)]
= \(\frac { 1 }{ 2 } \) (44 - 10 + 4)
= 19 சதுர அலகுகள்
ஆகையால் நாற்கரம் ABCD-ன் பரப்பு
= 53 + 19 = 72 சதுர அலகுகள்
7.
A (1, 7), B (4, 2), C (-1, -1) மற்றும் D (-4, 4) என்க. ABCD ஒரு சதுரம் என நிரூபிக்க வேண்டுமாயின் அதன் நான்கு பக்கங்களும் சமம் என்றும் மூலைவிட்டங்கள் சமம் என்றும் நிரூபிக்க வேண்டும்.
d = \(\sqrt { { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) }^{ 2 }+{ \left( { y }_{ 2 }-{ y }_{ 1 } \right) }^{ 2 } } \)
∴ AB = \(\sqrt { { \left( 1-4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
BC = \(\sqrt { { \left( 4+1 \right) }^{ 2 }+{ \left( 2+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
CD = \(\sqrt { { \left( -1+4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
DA = \(\sqrt { { \left( 1+4 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
AC = \(\sqrt { { \left( 1+1 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 4+64 } =\sqrt { 68 } \)
BD = \(\sqrt { { \left( 4+4 \right) }^{ 2 }+{ \left( 2-4 \right) }^{ 2 } } =\sqrt { 64+4 } =\sqrt { 68 } \)
AB = BC = CD = DA மற்றும் AC = BD
∴ ABCD ஒரு சதுரத்தின் உச்சிகள் ஆகும்.
8.
P(x, y) எனும் புள்ளி A(7, 1) மற்றும் B(3, 5) யிலிருந்து சமதூரத்தில் உள்ள புள்ளி. இங்கு AP = BP. ஆகையால் AP2 = BP2.
(x - 7)2 + (y - 1)2 = (x - 3)2 + (y - 5)2
x2 - 14x + 49 + y2 - 2y + 1 = x2 - 6x + 9 + y2 - 10y + 25
x - y = 2
இதுவே தேவையான உறவு ஆகும்.
9.
(x1, y1) = (3, -4) மற்றும் m = \(\frac {-5}{7}\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
புள்ளி - சாய்வு வடிவில் நேர்க்கோட்டின் சமன்பாடு
y − y1 = m(x −x1)
y + 4 = \(-\frac {5}{7}\) (x - 3)
இதிலிருந்து 5x + 7y + 13 = 0
10.
(i) X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடு y = b.
இது (5, 7) வழி செல்வதால், b = 7.
எனவே தேவையான நேர்கோட்டின் சமன்பாடு y = 7.
(ii) Y அச்சுக்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடு x = c
இது (5, 7) வழி செல்வதால், c = 5
எனவே தேவையான நேர்கோட்டின் சமன்பாடு x = 5.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards