10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் பெருக்கற்பலன் 12 இதனுடன் 36 ஐக் கூட்டினால் அந்த எண்ணானது இலக்கங்கள் இடமாறி கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்.
2.
16,13,17,21,18 என்ற மதிப்புகளின் மாறுபாட்டுக் கெழுவைக் காண்.
3.
சம அளவு விட்டமும் சம உயரமும் கொண்ட உருளை, கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம் என்ன?
4.
சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
பின்வருவனவற்றைக் காண்.
2 f (-4) + 3 f (2)
5.
கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5).
6.
இரண்டு நகரங்களின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யும் நிலக்கடலை பொட்டலங்களின் விலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த நகரத்தில் விலைகளானது மிகவும் நிலையானதாக உள்ளது?
| நகரம் A -ன் விலைகள் | 20 | 22 | 19 | 23 | 16 |
| நகரம் B-ன் விலைகள் | 10 | 10 | 18 | 12 | 15 |
7.
13824 = 2a x 3b எனில், a மற்றும் b -யின் மதிப்பைக் காண்க.
8.
தீர்க்க : 3x + y - 3z = 1; -2x - y + 2z = 1; -x - y + z = 2
9.
1 + 6 + 62+...6n > 5000 என்றவாறு அமையும் மிகச் சிறிய மிகைமுழு எண் n காண்க.
10.
35, 56 மற்றும் 91 ஆல் வகுக்கும் போது மீதி 7 ஐத் தரக்கூடிய மிகச்சிறிய எண் எது?
11.
f ஆனது R-லிருந்து R-க்கு ஆன சார்பு. மேலும் அது f(x) = 3x - 5 என வரையறுக்கப்படுகிறது. (a, 4) மற்றும் (1, b) எனக் கொடுக்கப்பட்டால் a மற்றும் b -யின் மதிப்புகளைக் காண்க.
12.
A = {-2,-1,0,1,2} மற்றும் f: A ⟶ B என்ற சார்பானது f(x) = x2 + x + 1 மேல் சார்பு எனில், B-ஐ காண்க.
13.
குத்துக்கோடு சோதனையைப் பயன்படுத்திப் பின்வரும் வரைபடங்களில் எவை சார்பினைக் குறிக்கும் எனத் தீர்மானிக்கவும். (படம் -(i), (ii), (iii), (iv))

14.
பின்வரும் தொடர்களின் n உறுப்புகள் வரை கூடுதல் காண்க.
(i) 0.4 + 0.44 + 0.444 +.... n உறுப்புகள் வரை
(ii) 3 + 33 + 333 + .... n உறுப்புகள் வரை
15.
ஒரு பெட்டியில் 3, 5, 7, 9, … 35, 37 என்ற எண்கள் குறிக்கப்பட்ட சீட்டுகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படும் ஒரு சீட்டு ஆனது 7 -ன் மடங்காக அல்லது பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
16.
ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு 40,000 மற்றும் ஒவ்வொரு வருடமும் அதன் மதிப்பு 10% குறைகிறது. 6-வது வருடத்தில் இயந்திரத்தின் தோராய மதிப்பைக் காண்க.
1.
அந்த எண்ணின் பத்தாம் இட =x என்க.
இலக்கங்களின் பெருக்கற்பலன் =12
ஒன்றுக்கான இலக்கம் = \(\cfrac { 12 }{ x } \)
அந்த எண் = \(10x+\cfrac { 12 }{ x } \)
இந்த எண்ணுடன் 36ஐக் கூட்டினால் இலக்கங்கள் இடமாறுகின்றன.
\(\therefore 10x+\cfrac { 12 }{ x } +36=10\times \cfrac { 12 }{ x } +x\)
\(\Rightarrow 10x+\cfrac { 12 }{ x } +36=\cfrac { 120 }{ x } +x\)
\(\Rightarrow 9x-\cfrac { 108 }{ x } +36=0\)
\(\Rightarrow 9{ x }^{ 2 }-108+36x=0\)
\(\Rightarrow { x }^{ 2 }+4x-12=0\)
\(\Rightarrow (x+6)(x-2)=0\)
(\(\because\)(x+6)\(\neq 0\) ஏனெனில் x>0)
x=-6,2
பத்தாம் இட இலக்கம் குறை எண்ணாக இருக்க முடியாது.ஆகையால் x =2
அந்த எண் \(10\times 2+\cfrac { 12 }{ 2 } =26\)
2.
சராசரி \(\bar { x } =\cfrac { 16+13+17+21+18 }{ 5 } =\cfrac { 85 }{ 5 } =17\)
| x | d =x-17 | d2 |
|---|---|---|
| 16 | -1 | 1 |
| 13 | -4 | 16 |
| 17 | 0 | 0 |
| 21 | 4 | 16 |
| 18 | 1 | 1 |
| \(\Sigma d=0\) | \({ \Sigma d }^{ 2 }=34\) |
\(\sigma =\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 34 }{ 5 } } =\sqrt { 6.8 } \)
\(\sigma =2.61\)
மாறுபாட்டுக் கெழு
\(CV=\cfrac { \sigma }{ \bar { x } } \times 100=\cfrac { 2.61 }{ 17 } \times 100\)
= 15.35%
3.
உருளையின் கன அளவு \(={ \pi r }^{ 2 }h\)
கூம்பின் கன அளவு \(=\frac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }h\)
கோலத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
அவற்றின் கன அளவுகளின் விகிதம் V1:V2:V3
\(h:\frac { h }{ 3 } :\frac { 4r }{ 3 } \)
3h:h:4r
3h:h:2(2r) (இங்கு 2r=h)
∴ V1:V2:V3=3:1:2
4.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad : -7\le x<-5 \\ x+5\quad \quad \quad\quad: -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad2<x\le 6 \end{cases}\)
f(-4) = x +5 = -4 + 5 = 1
2f(-4) = 2 x 1 = 2
f(2) = x + 5 = 2 + 5 = 7
3f(2) = 3(7) = 21
∴ 2f(-4) + 3f(2) = 2 + 21 = 23
5.
A (1, -1), B(-4, 6), மற்றும் C(-3, -5) சூத்திரத்தை பயன்படுத்தி
Δ = \(\frac { 1 }{ 2 } \) {x1(y2 - y3) + x2(y3 - y1) + x3(y1 - y2)} சதுர அலகுகள்
= \(\frac { 1 }{ 2 } \) [1 (6 + 5 ) + (-4) (-5 + 1) + (-3) (- 1 - 6)]
= \(\frac { 1 }{ 2 } \) [11 + 16 + 21] = 24 சதுர அலகுகள்
∴ முக்கோணத்தின் பரப்பு = 24 சதுர அலகுகள்
6.
நகரம் A இன் விலைகள்
| xi | 20 | 22 | 19 | 23 | 16 | \(\Sigma x_i=100\) |
| xi2 | 400 | 484 | 361 | 529 | 256 | \(\Sigma x_i^2=2030\) |
சராசரி \(\bar{x} =\frac{\sum x_i}{n} \)
\(\bar{x} =\frac{100}{5}=20 \)
திட்டவிலக்கம் \( \sigma_A =\sqrt{\frac{\sum x_i^2}{n}-\left(\frac{\sum x_i}{n}\right)^2}\)
\(=\sqrt{\frac{2030}{5}-\left(\frac{100}{5}\right)^2} \)
\(=\sqrt{406-400}=\sqrt{6}=2.45 \)
நகரம் A இன் விலைகளின் மாறுபாட்டுக்கெழு
\(C.V =\frac{\sigma}{x} \times 100 \% \)
\(=\frac{2.45}{20} \times 100 \%=\frac{245}{20} \% \)
\(=\frac{122.5}{10} \%=12.25 \%\)
\(\text { C.V }{ }_1=12.25 \%\)
நகரம் B இன் விலைகள்
n = 5
| xi | 10 | 20 | 18 | 12 | 15 | \(\Sigma x_i=75\) |
| xi2 | 100 | 400 | 324 | 144 | 225 | \(\Sigma x_i^2=1193\) |
\(\bar{x}=\frac{75}{5}=15 \)
\(\sigma_B =\sqrt{\frac{1193}{5}-\left(\frac{75}{5}\right)^2} \)
\(=\sqrt{238.6-15^2} . \)
\(=\sqrt{238.6-225}=\sqrt{13.6}\)
= 3.69
நகரம் B இன் விலைகளின் மாறுபாட்டுக்கெழு
\(\text { C.V }_2 =\frac{3.69}{15} \times 100 \% \)
\(=\frac{369}{15} \%=24.6 \%\)
நகரம் A இன் மாறுபாட்டுக்கெழு < நகரம் B இன் மாறுபாட்டுக்கெழு.
\(\therefore\) நகரம் A இன் விலைகள் நிலையானது.
7.
எனவே 13824 = 29 x 33 , இது 2a x 3b னும் வடிவில் உள்ளது
∴ a = 9, மற்றும் b = 3.
8.
3x + y - 3z = 1 ..(1)
-2x - y + 2z = 1 ...(2)
-x - y + z = 2 ...(3)

இங்கு நாம் 0 = -1 என்ற தவறான முடிவைப் பெறுகிறோம். எனவே இந்தத் தொகுப்பானது ஒருங்கமைவற்றது. மேலும் கொடுக்கப்பட்ட சமன்பாட்டு தொகுப்பிற்குத் தீர்வு இல்லை.
9.
எத்தனை குறைவான உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 5000-ஐத் தாண்டும் என நாம் காண வேண்டும்.
அதாவது எந்தக் குறைவான n மதிப்பிற்கு Sn > 5000 வரும் எனக் காண வேண்டும்.
Sn = \(\frac { a({ r }^{ n }-1) }{ r-1 } =\frac { 1({ 6 }^{ n }-1) }{ 6-1 } =\frac { { 6 }^{ n }-1 }{ 5 } \)
Sn > 5000 ⇒ \(\frac { { 6 }^{ n }-1 }{ 5 } \) > 5000
6n -1 > 25000 ⇒ 6n > 25001
65 = 7776 மற்றும் 66 = 46656 என்பதால்
1 + 6 + 62+...+6n > 5000 என்றவாறு அமையும் மிகச்சிறிய n -ன் மதிப்பு 6 ஆகும்.
10.
தேவையான எண் = (35, 56, 91) இன் மீ.பொ.ம + 7
35, 56, 91 இன் மீ.பொ.ம = 7 x 5 x 8 x 13 = 3640
தேவையான எண் = 3640 + 7 = 3647
11.
f(x) = 3x - 5, f = {(x, 3x - 5) |x ∈ R} என எழுதலாம்.
(a, 4) எனில், a-யின் நிழல் உரு 4. அதாவது, f(a) = 4
3a - 5 = 4 லிருந்து a = 3
(1, b) எனில், 1 -யின் நிழல் உரு b. அதாவது, f(1) = b
3(1) – 5 = b எனவே, b = –2
12.
A = {-2,-1,0,1,2} மற்றும் f(x) = x2 + x + 1 கொடுக்கப்பட்டுள்ளது.
f(-2) = (-2)2 + (-2) + 1 = 3; f(-1) = (-1)2 + (-1) + 1 = 1
f(0) = 02 + 0 + 1 = 1; f(1) = 12 + 1 + 1 = 3
f(2) = 22 + 2 + 1 = 7
எனவே, f –ன் வீச்சகம் B = {1,3,7}
13.
படம் -(i) மற்றும் படம்-(iii) வரைபடங்களில், ஒரு குத்துக்கோடு, வரைபடத்தை P மற்றும் Q ஆகிய இரு புள்ளிகளில் வெட்டுவதால் இவை ஒரு சார்பினைக் குறிக்காது.
படம் (ii) மற்றும் படம் -(iv) வரைபடங்களில் அதிகபட்சமாக ஒரேயொரு புள்ளியில் வெட்டுவதால், இவை சார்பினைக் குறிக்கும்.
14.
(i) \(0.4+0.44+0.444+\ldots \mathrm{n}\) உறுப்புகள் வரை
\(\mathrm{S}_{\mathrm{n}}=0.4+0.44+0.444+\ldots \mathrm{n}\) உறுப்புகள் வரை.
\(=4[0.1+0.11+0.111+\ldots \mathrm{n}\) உறுப்புகள் வரை]
9 ஆல் பகுதி மற்றும் தொகுதியை பெருக்க
=\(\frac{4}{9}\)[0.9 + 0.99 + 0.999 + ... n உறுப்புகள் வரை]

\(=\frac{4}{9}\left[n-\left[\frac{\frac{1}{10}\left(1-\left(\frac{1}{10}\right)^n\right)}{1-\frac{1}{10}}\right]\right] \)
\(=\frac{4}{9}\left[n-\frac{\frac{1}{10}\left(1-\frac{1}{10^n}\right)}{\frac{9}{10}}\right] \)
\(=\frac{4}{9}\left[n-\frac{1}{9}\left(1-\frac{1}{10^n}\right)\right]=\left[\frac{4 n}{9}-\frac{4}{81}\left(1-\frac{1}{10^n}\right)\right] \)
0.4 + 0.44 + 0.444 \(=\frac{4}{9} n-\frac{4\left(1-\left(\frac{1}{10}\right)^n\right)}{81}\)
(ii) 3 + 3 + 333 + .... n உறுப்புகள் வரை
Sn = 3 + 33 + 333 + ...n உறுப்புகள் வரை
= 3 [1 + 11 + 111 + n உறுப்புகள் வரை]
\(=\frac{3}{9}[9+99+999+\ldots \mathrm{n} \) உறுப்புகள் வரை]
9 ஆல் பகுதி மற்றும் தொகுதியை பெருக்க
\(=\frac{1}{3}[(10-1)+(100-1)+(1000-1)+\ldots n\) உறுப்புகள் வரை]
\(=\frac{1}{3}\left[(10-1)+\left(10^2-1\right)+\left(10^3-1\right)+\ldots\right. \)n உறுப்புகள் வரை]
\(=\frac{1}{3}\left\{\left[10+10^2+10^3+\ldots \mathrm{n}\right.\right. \) உறுப்புகள் வரை] - n }
\(=\frac{1}{3}\left\{\left[\frac{10\left(10^n-1\right)}{10-1}\right]-n\right\} \)
\(=\frac{1}{3}\left[\frac{10\left(10^n-1\right)}{9}-n\right] \)
\(=\frac{10}{27}\left(10^n-1\right)-\frac{n}{3}\)
\(3+33+333+\ldots n\) உறுப்புகள் வரை
\(=\frac{10}{27}\left(10^n-1\right)-\frac{n}{3}\)
15.
பெட்டியில் உள்ள சீட்டுகள் \(=\{3,5,7,9, \ldots . ., 37\}\)
சீட்டுகளின் எண்ணிக்கை \(=\frac{l-a}{d}+1\)
\(=\frac{37-3}{2}+1=\frac{34}{2}+1=17+1\)
\(\therefore\) மொத்த சீட்டுகள் = 18
\(\mathrm{n}(\mathrm{S})=18\)
எடுக்கப்படும் சீட்டு 7 -இன் மடங்காக இருக்கும் நிகழ்வு A என்க.
\(\mathrm{A} =\{7,21,35\} \)
\(\mathrm{n}(\mathrm{A}) =3 \)
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(A)}{n(S)}=\frac{3}{18}\)
எடுக்கப்படும் சீட்டு பகா எண்ணாக இருக்கும் நிகழ்வு B என்க.
\(\mathrm{B}=\{3,5,7,11,13,17,19,23,29,31,37\} \)
\(\mathrm{n}(\mathrm{B}) =11 \)
\(\mathrm{P}(\mathrm{B}) =\frac{n(B)}{n(S)}=\frac{11}{18} \)
\(A \cap B =\{7\} \)
\(\mathrm{n}(A \cap B) =1 \)
\(\mathrm{P}(A \cap B) =\frac{\mathrm{n}(A \cap B)}{n(S)} \)
\(\mathrm{P}(A \cap B) =\frac{1}{18} \)
\(\mathrm{P}(\mathrm{A} \cup \mathrm{B}) =\mathrm{P}(\mathrm{A})+\mathrm{P}(\mathrm{B})-\mathrm{P}(\mathrm{A} \cap B) \)
\(\mathrm{P}(\mathrm{A} \cup \mathrm{B}) =\frac{3}{18}+\frac{11}{18}-\frac{1}{18} \)
\(=\frac{3+11-1}{18}=\frac{13}{18}\)
எடுக்கப்படும் சீட்டு 7 -இன் மடங்காக அல்லது பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு \(\frac{13}{18}\)
16.
இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ.40,000. அதன் மதிப்பு ஒவ்வொரு வருட முடிவில் 10% குறையும் என்பதால், முதல் வருட முடிவில் அதன் மதிப்பு ஆரம்ப மதிப்பில் 90% ஆக இருக்கும்.
அதாவது முதல் வருட முடிவில் இயந்திரத்தின் மதிப்பு 40,000 x \(\frac { 90 }{ 100 } \) ஆகும்.
இரண்டு வருடம் கழித்து இயந்திரத்தின் மதிப்பானது முதல் வருட மதிப்பில் 90% ஆக இருக்கும்.
இரண்டாம் வருட முடிவில் இயந்திரத்தின் மதிப்பானது 40,000 x \(\left( \frac { 90 }{ 100 } \right) ^{ 2 }\) ஆகும்.
இந்த வகையில் தொடர்ந்தால், இயந்திரத்தின் மதிப்பு பின்வருமாறு குறைகிறது.
\(40000,40000\times \frac { 90 }{ 100 } ,40000\times \left( \frac { 90 }{ 100 } \right) ^{ 2 }...\)
இந்தத் தொடர்வரிசை முதல் உறுப்பு 40,000 மற்றும் பொது விகிதம் \(\frac { 90 }{ 100 } \) உடைய ஒரு பெருக்குத் தொடர்வரிசை ஆகும்.
6வது வருடத்தில் இயந்திரத்தின் மதிப்பைக் காண (5வது வருட முடிவில்), பெருக்குத் தொடர்வரிசையின் 6-வது உறுப்பைக் கண்டறிய வேண்டும்.
ஆகவே, n = 6, a = 40,000, r = \(\frac { 90 }{ 100 } \)
tn = arn-1, என்பதைப் பயன்படுத்த t6 = \(40,000\times \left( \frac { 90 }{ 100 } \right) ^{ 6-1 }=40000\times \left( \frac { 90 }{ 100 } \right) ^{ 5 }\)
t6 = \(40,000 \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \) = 23619.6
எனவே, 6-வது வருடத்தில் இயந்திரத்தின் மதிப்பு = ரூ.23619.60
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards