10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
வடிவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
சுவரின் அடியிலிருந்து 4 அடி தொலைவில் உள்ள ஏணியானது சுவரின் உச்சியை 7 அடி உயரத்தில் தொடுமெனில் தேவையான ஏணியின் நீளத்தைக் காண்க. விடையை ஒரு தசம இடத்திருத்தமாக தருக.
2.
\(\Delta \)ABC -யில் C ஆனது செங்கோணம் ஆகும். பக்கங்கள் CA மற்றும் CB-யின் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில் 4(AQ2 + BP2) = 5AB2 என நிறுவுக.
3.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR -க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 4 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 4 } >1\))
4.
படம்-யில் \(\angle A=\angle CED\) எனில், \(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

5.
90 செ.மீ உயரமுள்ள ஒரு சிறுவன் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 1.2 மீ/வினாடி வேகத்தில் நடந்து செல்கிறான். தரையிலிருந்து விளக்கு கம்பத்தின் உயரம் 3.6 மீ எனில், 4 வினாடிகள் கழித்துச் சிறுவனுடைய நிழலின் நீளத்தைக் காண்க
6.
\(\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக.


7.
படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.
8.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
9.
படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க
10.
\(\Delta ABC\sim \Delta PQR\) ஆக இருக்குமா?

1.

ஏணியின் நீளம் AB = x என்க. BC = 4 அடி, AC = 7 அடி
பிதாகரஸ் தேற்றத்தின்படி, AB2 = AC2 + BC2
x2 = 72 + 42 ⇒ x2 = 49 + 16
x2 = 65 எனவே \(x=\sqrt { 65 } \)
\(\sqrt { 65 } \) ஆனது 8 மற்றும் 8.1 க்கு இடையில் அமைகிறது.
82 = 64 < 65 < 65.61 = 8.12
எனவே, ஏணியின் நீளம் தோராயமாக 8.1 அடி ஆகும்.
2.

\(\Delta \)AQC யில், C ஆனது, செங்கோணம் என்பதால், AQ2 = AC2 + QC2 ...(1)
\(\Delta \)BPC- யில் C ஆனது, செங்கோணம் என்பதால், BP2 = BC2 + CP2 ...(2)
\(\triangle A B C\)-யில், C ஆனது, செங்கோணம் என்பதால், \(A B^2=A C^2+B C^2 \ldots3\)
(1) மற்றும் (2) லிருந்து, AQ2 + BP2 = AC2 + QC2 + BC2 + CP2
4(AQ2 + BP2) = 4AC2 + 4QC2 + 4BC2 + 4CP2
= 4AC2 + (2QC)2 + 4BC2 + (2CP)2
= 4AC2 + BC2 + 4BC2 + AC2 (P மற்றும் Q என்பது நடுப்புள்ளி என்பதால்)
= 5(AC2 + BC2) (சமன்பாடு (3)-லிருந்து)
4(AQ2 + BP2) = 5AB2
3.

கொடுக்கப்பட்ட \(\triangle\)PQR -ன் பக்கங்களைப் போல் \(\frac { 7 }{ 4 } \) பங்கு அளவுடைய ஒத்த பக்கங்களைக் கொண்ட மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்
1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔPQR வரைக.
2. QR என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு, QX என்ற கதிரை P என்ற முனைப் புள்ளிக்கு எதிர் திசையில் வரைக.
3. QX யின் மீது Q1, Q2, Q3, Q4, Q5, Q6 மற்றும் Q7 என்ற 7 புள்ளிகளை (\(\frac { 7 }{ 4 } \) யில் 7 மற்றும் 4 ஆகியவற்றில் பெரியது)
QQ1 = Q1Q2 = Q2Q3 = Q3Q4 = Q4Q5 = Q5Q6 = Q6Q7 என்றவாறு குறிக்கவும்.
4. Q4 ஐ (4-வது புள்ளி, அதாவது \(\frac { 7 }{ 4 } \) யில் 4 மற்றும் 7 ஆகியவற்றில் சிறியது) புள்ளி R –வுடன் இணைக்க Q4R -க்கு இணையாக Q7-லிருந்து வரையப்படும் கோடு QR ஐ R'–ல் சந்திக்கிறது.
5. R'லிருந்து RP–க்கு இணையாக வரையப்படும் கோடு QP–ஐ P'–யில் சந்திக்கிறது. ΔP′QR'–யின் பக்கங்கள் ΔPQR –ன் ஒத்த பக்கங்களின் அளவில் 4–ல் 7 பங்கு ஆகும்.
6. ΔP'QR' ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
4.
\(\Delta CAB\) மற்றும் \(\Delta CED\) -யில், \(\angle C\) பொதுவானது,\(\angle A=\angle CED\)
எனவே, \(\Delta CAB\sim \Delta CED\) (AA விதிமுறைப்படி)
ஆகவே,\(\cfrac { CA }{ CE } =\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \)
\(\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \) ⇒ \(\cfrac { 9 }{ x } =\cfrac { 10+2 }{ 8 } \) எனவே, \(x=\cfrac { 8\times 9 }{ 12 } \)= 6 செ.மீ.
5.

வேகம் = 1.2 மீ/வினாடி, என்பது கொடுக்கப்பட்டது.
நேரம் = 4 வினாடி,
தொலைவு = வேகம் × நேரம்
= 1.2 x 4 = 4.8 மீ
4 வினாடிகளுக்குப் பிறகு சிறுவனுடைய நிழலின் நீளம் x என்க
\(\Delta ABE\sim \Delta CDE\) ஆகையால்,\(\cfrac { BE }{ DE } =\cfrac { AB }{ CD } \) எனவே \(\cfrac { 4.8+x }{ x } =\cfrac { 3.6 }{ 0.9 } =4\) (90 செ.மீ = 0.9 மீ)
4.8 + x = 4x ⇒ 3x = 4.8 ஆகவே, x = 1.6 மீ
சிறுவனுடைய நிழலின் நீளம் DE = 1.6 மீ
6.
(i) \(\Delta PST\) மற்றும் \(\Delta PQR\) யில்
\(\cfrac { PS }{ PQ } =\cfrac { 2 }{ 2+1 } =\cfrac { 2 }{ 3 } ,\cfrac { PT }{ PR } =\cfrac { 4 }{ 4+2 } =\cfrac { 2 }{ 3 } \)
இதிலிருந்து \(\cfrac { PS }{ PQ } =\cfrac { PT }{ PR } \) மற்றும் \(\angle P\) ஆனது பொதுக் கோணம்.
எனவே, SAS விதிமுறைப்படி, \(\Delta PST\sim \Delta PQR\)
(ii) \(\Delta PST\) மற்றும் \(\Delta PQR\) -யில்,
\(\cfrac { PS }{ PQ } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } ,\cfrac { PT }{ PR } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } \)
இதிலிருந்து,\(\cfrac { PS }{ PQ } =\cfrac { PT }{ PR } \) மற்றும் \(\angle P\) ஆனது பொதுக் கோணம்.
எனவே, SAS விதிமுறைப்படி, \(\Delta PST\sim \Delta PQR\)
7.
கொடுக்கப்பட்டது XY||AC
ஆகையால் ∠BXY = ∠A மற்றும்
∠BYX = ∠C (ஒத்த கோணங்கள்)
∴ ΔABC~ΔXBY (SAS விதிமுறைப்படி)
ஆகையால் \(\frac { ar(ABC) }{ ar(XBY) } ={ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }\) ...(1)
ar(ABC) = 2ar(XBY)
\(\frac { ar(ABC) }{ ar(XBY) } =\frac { 2 }{ 1 } \) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\({ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }=\frac { 2 }{ 1 } \) i.e. \(\frac { AB }{ XB } =\frac { \sqrt { 2 } }{ 1 } \)
\(\frac { XB }{ AB } =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(1-\frac { XB }{ AB } =1-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AB-XB }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AX }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } =\frac { 2-\sqrt { 2 } }{ 2 } \)
8.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
9.
PQ||RS
அதனால், ∠P = ∠S (ஒன்றுவிட்ட கோணங்கள்)
∠Q = ∠R
∠PQR = ∠SOR(குத்தெதிர் கோணங்கள் சமம்)
∴ ΔPOQ∼ΔSOR (AAA விதிமுறைப்படி)
10.
\(\Delta ABC\) மற்றும் \(\Delta PQR\) -யில்,
\(\cfrac { PQ }{ AB } =\cfrac { 3 }{ 6 } =\cfrac { 1 }{ 2 } ;\cfrac { QR }{ BC } =\cfrac { 4 }{ 10 } =\cfrac { 2 }{ 5 } \)
\(\cfrac { 1 }{ 2 }\neq\cfrac { 2 }{ 5 } \) என்பதால் \(\cfrac { PQ }{ AB } \neq \cfrac { QR }{ BC } \)
ஒத்த பக்கங்கள் விகிதச் சமமாக இல்லை.
எனவே, \(\Delta ABC\) ஆனது \(\Delta PQR\) -க்கு வடிவொத்ததாக அமையாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards