10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/11/2019
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5 மாணவர்கள் 50 மதிப்பெண் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 20,25,30,35,40 அவற்றின் திட்ட விலக்கம் காண். மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் புதிய எண்களின் திட்டவிலக்கம் காண்.
2.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)
3.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
4,10,16,22,....
4.
எந்த ஒரு மிகை ஒற்றை முழு எண்ணும் 4q+1 அல்லது 4q+3, என்ற வடிவில் அமையும் என நிறுவுக.
5.
குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?
6.
A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D (4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.
7.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
8.
2x - 3y + 8 = 0 -க்கு செங்குத்தான நேர்கோட்டின் சாய்வைக் காண்க.
9.
\(\Delta ABC\) ஆனது \(\Delta DEF\) க்கு வடிவொத்தவை. மேலும் BC = 3 செ.மீ, EF = 4 செ.மீ மற்றும் முக்கோணம் ABC-யின் பரப்பு = 54 செ.மீ2 எனில், \(\triangle\)DEF -யின் பரப்பைக் காண்க.
10.
tan2θ - sin2θ = tan2θsin2θ என்பதை நிரூபிக்கவும்
11.
12.
ஓர் அலைபேசி மின்கலத்தின் சக்தி 100% இருக்கும்போது (battery power) அலைபேசியைப் பயன்படுத்த தொடங்குகிறோம். x மணி நேரம் பயன்படுத்திய பிறகு மீதி இருக்கும் மின்கலத்தின் சக்தி y சதவீதம் (தசமத்தில்) ஆனது y = − 0.25x + 1 ஆகும்
(i) எத்தனை மணி நேரத்திற்குப் பிறகு மின்கலத்தின் சக்தி 40% ஆகக் குறைந்திருக்கும் எனக் காண்க.
(ii) மின்கலம் தனது முழுச் சக்தியை இழக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு?
13.
f ஆனது R-லிருந்து R-க்கு ஆன சார்பு. மேலும் அது f(x) = 3x - 5 என வரையறுக்கப்படுகிறது. (a, 4) மற்றும் (1, b) எனக் கொடுக்கப்பட்டால் a மற்றும் b -யின் மதிப்புகளைக் காண்க.
14.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
15.
A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.
16.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
17.
50 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், 28 பேர் NCC-யிலும், 30 பேர் NSS-லும் மற்றும் 18 பேர் NCC மற்றும் NSS-லும் சேர்கிறார்கள். ஒரு மாணவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்
(i) NCC -யில் இருந்து, ஆனால் NSS-ல் இல்லாமல்
(ii) NSS -ல் இருந்து, ஆனால் NCC-யில் இல்லாமல்
(iii) ஒன்றே ஒன்றில் மட்டும் சேர்ந்து இருப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.
18.
இரு கப்பல்கள் கலங்கரை விளக்கத்தின் இரு பக்கங்களிலும் கடலில் பயணம் செய்கின்றன. இரு கப்பல்களிலிருந்து கலங்கரை விளக்கத்தின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் முறையே 30° மற்றும் 45°ஆகும். கலங்கரை விளக்கத்தின் உயரம் 200 மீ எனில், இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.\(\left( \sqrt { 3 } =1.732 \right) \)
19.
ஒரு தாய் தன்னிடம் உள்ள ரூ.207 ஐ கூட்டுத் தொடர் வரிசையில் அமையும் மூன்று பாகங்களாகப் பிரித்துத் தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுக்க விரும்பினார். அவற்றில் இரு சிறிய தொகைகளின் பெருக்கற்பலன் ரூ.4623 ஆகும். ஒவ்வொரு குழந்தையும் பெறும் தொகையினைக் காண்க.
20.
கனச்சதுரத்தின் ஒரு பகுதியில் l அலகுகள் விட்டமுள்ள (கனசதுரத்தின் பக்கஅளவிற்குச் சமமான) ஓர் அரைக்கோளம் (படத்தில் உள்ளதுபோல) வெட்டப்பட்டால், மீதமுள்ள திண்மத்தின் புறப்பரப்பைக் காண்க.

21.
ஓர் உள்ளீடற்ற பித்தளை கோளத்தின் உள்விட்டம் 14 செ.மீ, தடிமன் 1 மி.மீ மற்றும் பித்தளையின் அடர்த்தி 17.3 கிராம் / க. செ.மீ எனில், கோளத்தின் நிறையைக் கணக்கிடுக. (குறிப்பு: நிறை = அடர்த்தி × கனஅளவு)
22.
\(\frac{1+tan^2θ}{1+cos^2θ}\) =
cos2θ
tan2θ
sin2θ
cot2θ
23.
(1+tan2θ) sin2θ =
sin2θ
cos2θ
tan2θ
cot2θ
24.
\(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ -9 & 5 \end{matrix} \right] -\left[ \begin{matrix} 1 & 5 \\ 7 & -1 \end{matrix} \right] \) எனில் A ன் கூட்டல் நேர்மாறு
\(\left[ \begin{matrix} -1 & 2 \\ 16 & -6 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 1 & -2 \\ -16 & 6 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 1 & -16 \\ -2 & 6 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -1 & -2 \\ -16 & -6 \end{matrix} \right] \)
25.
\(A = \left[ \begin{matrix} 2 & 0 \\ 0 & 3 \end{matrix} \right] \) என்பது எந்த வகை அணி
திசையிலி அணி
அலகு அணி
முலைவிட்ட அணி
பூச்சிய அணி
26.
இரு சமபக்க முக்கோணம் \(\Delta ABC\) -யில் \(\angle C={ 90 }^{ 0 }\) மற்றும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது
2.5 செ.மீ
5 செ.மீ
10 செ.மீ
\(5\sqrt { 2 } \) செ.மீ
27.
கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் ;\({ y }^{ 2 }+\cfrac { 1 }{ { y }^{ 2 } } \) க்குச் சமம் இல்லை.
\(\cfrac { { y }^{ 4 }+1 }{ { y }^{ 2 } } \)
\(\left( y+\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }\)
\(\left( y-\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }+2\)
\(\left( y+\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }\)-2
28.
x = a tan θ மற்றும் y = b sec θ எனில் _____.
\(\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } -\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\)
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =0\)
29.
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் ____.
0, 1, 8
1, 4, 8
0, 1, 3
1, 3, 5
30.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது.
3
15
5
225
31.
8y = 4x + 21 என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
32.
r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு ______.
4πr2 ச.அ
6πr2 ச.அ
3πr2 ச.அ
8πr2 ச.அ
33.
A = {1,2,3,4}, B = {4,8,9,10} என்க. சார்பு f : A ⟶ B ஆனது f = {(1,4), (2,8), (3,9), (4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது _____.
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
34.
{(a,8), (6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே _____.
(8,6)
(8,8)
(6,8)
(6,6)
35.
ஒரு சதுரங்க அட்டையில் 64 சம அளவுள்ள சதுரங்கள் உள்ளன.ஒவ்வொரு சதுரத்தின் பரப்பு 6.25செ.மீ2,அந்த அட்டையைச் சுற்றி 2 செ.மீ அகலத்தில் ஓரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது எனில் சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவைக் காண்.
36.
(-3, 2), (5, 4), (7, -6) மற்றும் (-5, -4) என்பன ஒரு நாற்கரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனை புள்ளிகள் எனில், நாற்கரத்தின் பரப்பு காண்க.
37.
6 செ.மீ விட்டமுள்ள வட்டம் வரைந்து வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ தொலைவில் P என்ற புள்ளியைக் குறிக்கவும். அப்புள்ளியிலிருந்து PA மற்றும் PB என்ற இரு தொடுகோடுகள் வரைந்து அவற்றின் நீளங்களை அளவிடுக.
38.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. சரியாக இரண்டு தலைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு பூ அல்லது அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
39.
y = 2x2 என்ற வரைபடம் வரைந்து அதன் மூலம் 2x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
1.
ஊகச் சராசரி A =30
C = 5
| x | \({ d }^{ ' }=\cfrac { x-30 }{ 5 } \) | d'2 |
| 20 | -2 | 4 |
| 25 | -1 | 1 |
| 30 | 0 | 0 |
| 35 | 1 | 1 |
| 40 | 2 | 4 |
| \(\Sigma { d }^{ ' }=0\) | \(\Sigma { d }^{ '2 }=10\) |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 }\times 2 } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் ஒவ்வொரு மதிப்பெண்களையும் 2 ஆல் பெருக்க வேண்டும்.\(\therefore \) புதிய மதிப்புகள் 40,50,60,70,80
A =60,C=10 என்க
| \({ d }^{ ' }=\cfrac { x-60 }{ 10 } \) | d'2 | |
|---|---|---|
| 40 | -2 | 4 |
| 50 | -1 | 1 |
| 60 | 0 | 0 |
| 70 | 1 | 1 |
| 80 | 2 | 4 |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 } } \times c\)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0 } \times 10\)
= \(\sqrt { 2 } \times 10=10\sqrt { 2 } \)
\(\therefore \) புதிய திட்டவிலக்கம், முதல் திட்டவிலகத்தை 2 ஆல் பெருக்கக் கிடைக்கிறது.
2.
வாளியானது கூம்பின் இடைக்கண்டம். இடைக்கண்டத்தின் r1=28 செ.மீ, r2=7செ.மீ, h=45 செ.மீ
வாளியின் கொள்ளளவு=இடைக்கண்டத்தின் கன அளவு
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \pi h[{ r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 2 }^{ 2 }+{ r }_{ 1 }{ r }_{ 2 }]\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\left[ { 28 }^{ 2 }+{ 7 }^{ 2 }+28\times 7) \right] \)
\(\Rightarrow 22\times 15\times \times (28\times 4+7+28)\)
⇒330x147 செ.மீ3 ⇒ 48510 செ.மீ3
3.
4,10,16,22,..
இங்கு a2-a2=10-4=6
a3-a2=16-10=6
a4-a3=22-16=6
∴ அது ஒரு A.P. பொது வித்தியாசம் 6.
∴ அடுத்து இரண்டு உறுப்புகள், \(\underline { 28 } ,\underline { 34 } .\)
4.
முதல் உறுப்பு a என்க, (a ஒரு மிகை ஒற்றை எண்)
எனினும் 0≤r<4, அதனால் கிடைக்கும் மீதி 0,1,2, 3 ஆகும்.
∴ a ஆனது 4q, (அல்லது)4q+1, (அல்லது) 4q+2 (அல்லது)4q+3, இங்கு q ஈவு ஆகும்.
a ஒரு ஒற்றை என்பதால் 4q மற்றும் 4q+2 ஆக இருக்க முடியாது(∵அவை 2ஆல் வகுப்படும்).
எனவே எந்த ஒரு மிகை ஒற்றை குழுவும் 4q+1 அல்லது 4q+3 என்ற வடிவில் அமையும்.
5.
சார்பு அல்ல. குத்துக்கோடு வளைவரையை இரு புள்ளிகளில் சந்திக்கிறது.
6.
B, D ஐ இணைப்பதால் ΔABD, ΔBCD கிடைக்கின்றன.
இப்பொழுது ΔABD - ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-5(- 5 - 5) + (-4) (5 - 7) + 4 (7 + 5 )]
= \(\frac { 1 }{ 2 } \) (50 + 8 + 48)
= \(\frac { 106 }{ 2 } \) = 53 சதுர அலகுகள்
மேலும் ΔBCD யின் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-4 (- 6 - 5) - 1 (5 + 5) + 4 (-5 + 6)]
= \(\frac { 1 }{ 2 } \) (44 - 10 + 4)
= 19 சதுர அலகுகள்
ஆகையால் நாற்கரம் ABCD-ன் பரப்பு
= 53 + 19 = 72 சதுர அலகுகள்
7.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
8.
கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடு 2x - 3y + 8 = 0
சாய்வு m = \(\frac {-2}{-3}\) = \(\frac 23\)
ஒன்றுக்கொன்று செங்குத்தான நேர்கோட்டு சாய்வுகளின் பெருக்கற்பலன் -1 என்பதால் 2x - 3y + 8 = 0 என்ற நேர்கோட்டிற்கு செங்குத்தான கோட்டின் சாய்வு = \(\frac { -1 }{ \frac { 2 }{ 3 } } =\frac { -3 }{ 2 } \)
9.
இரு வடிவொத்த முக்கோணங்களுடைய பரப்புகளின் விகிதமானது அவற்றின் ஒத்த பக்கங்களுடைய வர்க்கங்களின் விகிதத்திற்குச் சமம் என்பதால்

\(\Delta DEF\)-ன் பரப்பளவு =\(\cfrac { 16\times 54 }{ 9 } \)= 96 செ.மீ2.
10.
tan2θ - sin2θ = tan2θ - \(\frac { { \sin }^{ 2 }\theta }{ { \cos }^{ 2 }\theta } .{ \cos }^{ 2 }\theta \)
= tan2θ - (1 - cos2 θ) = tan2θ sin2θ
11.
12.
(i) மின்கலச் சக்தி 40% எனில், நேரத்தைக் கணக்கிட, y = 0.40 என எடுத்துக் கொள்க.
0.40 = −0.25x + 1 ⇒ 0.25x = 0.60
x = \(\frac {0.60}{0.25}\) = 2.4 மணி
(ii) மின்கலம் தனது முழுச் சக்தியை இழந்துவிட்டால் y = 0 எனக் கிடைக்கும்.
எனவே , 0 = −0.25x + 1 ⇒ 0.25x = 1 எனவே , x = 4 மணி.
∴ நான்கு மணி நேரத்திற்குப் பின்பு அலைபேசியின் மின்கலம் தனது முழுச் சக்தியையும் இழக்கிறது.
13.
f(x) = 3x - 5, f = {(x, 3x - 5) |x ∈ R} என எழுதலாம்.
(a, 4) எனில், a-யின் நிழல் உரு 4. அதாவது, f(a) = 4
3a - 5 = 4 லிருந்து a = 3
(1, b) எனில், 1 -யின் நிழல் உரு b. அதாவது, f(1) = b
3(1) – 5 = b எனவே, b = –2
14.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
15.
இணைகரத்தில் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும்.
∴ AC யின் மையப்புள்ளி = BD-ன் மையப்புள்ளி
i.e., \(\left[ \frac { 6+9 }{ 2 } ,\frac { 1+4 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 2+3 }{ 2 } \right] \)
\(\left[ \frac { 15 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] \)
\(\frac { 15 }{ 2 } ,\frac { 8+p }{ 2 } \)
P = 7
16.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
17.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை n(S) = 50
A மற்றும் B ஆகியவை முறையே NCC மற்றும் NSS-யில் சேர்ந்த மாணவர்கள் என்க.
n(A) = 28, n(B) = 30,n(A\(\cap\)B) = 18
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 28 }{ 50 } \)
\(P(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 30 }{ 50 } \)
\(P(A\cap B)=\frac { n(A\cap B) }{ n(S) } =\frac { 18 }{ 50 } \)
i) NCC யில் சேர்ந்து NSS-யில் சேராமல் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு
\(P(A\cap \bar { B } )=P(A)-P(A\cap B)=\frac { 28 }{ 50 } -\frac { 18 }{ 50 } =\frac { 1 }{ 5 } \)
ii) NSS யில் சேர்ந்து NCC-யில் சேராமல் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு C
\(P(\bar { A } \cap B)=P(B)-P(A\cap B)=\frac { 30 }{ 50 } -\frac { 18 }{ 50 } =\frac { 6 }{ 25 } \)
iii) ஏதாவது ஒன்றில் மட்டுமே சேர்ந்த மாணவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு P(A மட்டும் அல்லது B மட்டும்)
\(P[(A\cap \bar { B } )\cup (\bar { A } \cap B)]\)
\(=P(A\cap \bar { B } )+(\bar { A } \cap B)=\frac { 1 }{ 5 } +\frac { 6 }{ 25 } =\frac { 11 }{ 25 } \)
(குறிப்பு : \((A \cap \bar{B}),(\bar{A} \cap B) \) ஆகியவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்)
18.
கலங்கரை விளக்கம் AB என்க. C மற்றும் D என்பன இரு கப்பல்கள் இருக்கும் இடங்கள் என்க.
மேலும், AB = 200 மீ.
ㄥACB = 30°, ㄥADB = 45°
செங்கோண Δ BAC -ல்
tan 30° = \(\frac {AB}{AC }\)
\(\frac{1}{\sqrt3}\) = \(\frac{200}{AC}\) ⇒ AC = 200\(\sqrt3\) .....(1)
செங்கோண Δ BAD -ல் tan 45° = \(\frac {AB}{AD }\)
1 = \(\frac{200}{AD}\) ⇒ AD = 200 ...(2)
தற்போது, CD = AC + AD = 200\(\sqrt3\) [(1), (2) -லிருந்து]
CD = 200(\(\sqrt3\) + 1) = 200 x 2.732 = 546.4
இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவு 546.4 மீ ஆகும்.
19.
மூன்று குழந்தைகள் பெறும் தொகை கூட்டுத் தொடர்வரிசையில் அமைவதால் அவற்றை a - d, a, a + d, என்க. தொகையின் கூடுதல் ரூ.207 என்பதால்
(a - d) + a + (a + d) = 207
3a = 207 ⇒ a = 69
இரு சிறிய தொகைகளின் பெருக்கற்பலன் 4623 என்பதால்
(a - d)a = 4623
(69 - d)69 = 4623
d = 2
எனவே, மூன்று குழந்தைகளுக்கும் தாய் பிரித்துக் கொடுத்த தொகை
ரூ.(69-2), ரூ 69, ரூ.(69+2). அதாவது, ரூ.67, ரூ.69 மற்றும் ரூ.71.
20.
அரைக்கோளத்தின் ஆரம் r என்க
இங்கு, அரைக்கோளத்தின் விட்டம் = கனசதுரத்தின் ஒரு பக்கம் = l ஆகும்.
ஆரம் r =\(\frac{1}{2}\) அலகு
தற்போது, மீதமுள்ள திண்மத்தின் மொத்தப்பரப்பு = கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு + அரைக்கோளத்தின் வளைபரப்பு - அரைக்கோளத்தின் அடிப்பரப்பு
= 6 x (பக்கம்)2 + 2πr2 - πr2
= 6 x (பக்கம்)2 + πr2
\(=6\times { (l) }^{ 2 }+\pi { \left( \frac { l }{ 2 } \right) }^{ 2 }=\frac { 1 }{ 4 } (24+\pi ){ l }^{ 2 }\)
ஆகவே, மீதமுள்ள திண்மத்தின் புறப்பரப்பு \(\\ \\ =\frac { 1 }{ 4 } (24+\pi ){ l }^{ 2 }\) ச.அ
21.
r, R என்பன முறையே உள்ளீடற்ற கோளத்தின் உள் ஆரம் மற்றும் வெளி ஆரம் என்க.
இங்கு, உள்விட்டம் d = 14 செ.மீ; உள் ஆரம் r = 7 செ.மீ; தடிமன் = 1மி.மீ =\(\frac{1}{10}\) செ.மீ
வெளி ஆரம் R = 7+\(\frac{1}{10}=\frac {71}{10}=7.1\) செ.மீ
உள்ளீடற்ற கோளத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } \pi \left( { r }^{ 3 }-{ r }^{ 3 } \right) \)க.அ
\(=\frac { 4 }{ 3 } \times \frac { 22 }{ 7 } (357.91-343)=62.48\) க.செ.மீ
ஆனால், 1 க.செ.மீ பித்தளையின் அடர்த்தி = 17.3 கி
மொத்த நிறை = 17.3 x 62.48 = 1080.90 கி
எனவே, மொத்த நிறை 1080.90 கிராம் ஆகும்.
22.
(a)
cos2θ
23.
(a)
sin2θ
24.
(a)
\(\left[ \begin{matrix} -1 & 2 \\ 16 & -6 \end{matrix} \right] \)
25.
(a)
திசையிலி அணி
26.
\(A B^2 =A C^2+B C^2 \)
\(=5^2+5^2=50 \)
\(A B =\sqrt{50}=5 \sqrt{2}\) 5 செ.மீ
27.
\(y^2+\frac{1}{y^2}\) என்பது \(\left(y+\frac{1}{y}\right)^2\) க்கு சமமல்ல.
ஏனெனில், \(y^2+\frac{1}{y^2} \neq y^2+\frac{1}{y^2}+2\)
28.
\( x=a \tan \theta \quad y=b \sec \theta \)
\(x^2=a^2 \tan ^2 \theta \quad y^2=b^2 \sec ^2 \theta \)
\(\frac{x^2}{a^2}=\tan ^2 \theta \quad \frac{y^2}{b^2}=\sec ^2 \theta \)
\(\sec ^2 \theta-\tan ^2 \theta=\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2} \)
\(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1\)
29.
(a)
0, 1, 8
30.
திட்ட விலக்கம் \(\sigma\) = 3
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 5 மடங்கு காண வேண்டும்.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 \times 5=15\)
விலக்க வா்க்கச் சராசரி \(\sigma^2=15^2=225\)
31.
கொடுக்கப்பட்ட கோடு 8y = 4x + 21
\(y=\frac{x}{2}+\frac{21}{8}\)
\(\mathrm{y}=\frac{x}{2}+2.625\)\(\mathrm{y}=\mathrm{mx}+\mathrm{c}\) என்ற வடிவில்
இங்கு, \(\mathrm{m}=\frac{1}{2}=0.5, \mathrm{c}=2.625\)
\(\therefore \) சாய்வு \(\mathrm{m} =\frac{1}{2}=0.5 \)
y வெட்டுத்துண்டு = 2.6
32.
'r' என்ற சம ஆரத்தைக் கொண்ட இரு அரைக்கோளங்கள் ஒன்றாக இணைக்கப்படும்போது உருவாகும் திண்மம் ஒரு கோளமாகும்
\(\therefore\) திண்மத்தின் புறப்பரப்பு = 4πr2 சதுர அலகுகள்
33.
A = {1,2,3,4}, B = {4,8,9,10} மற்றும் f ={(1,4),(2,8),(3,9),(4,10)} ஒன்றுக்கு ஒன்றான சார்பு
34.
கொடுக்கப்பட்டது {(a, 8),(6, b)} என்பது சமனிச் சார்பு
அதாவது, {(8,8), (6,6)}
\(\therefore a=8, b=6\)
35.

சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவு x என்க
64 சதுரங்களின் பரப்பு =(x-4)2
(x-4)2=64X6.25
\(\Rightarrow \)x2-8x+16=400
\(\Rightarrow \)x2-8x-384=0
\(\Rightarrow \)x2-24x+16x-384=0
\(\Rightarrow \)(x-24)(x+16)=0
x=24செ.மீ
36.
= \(\frac { 1 }{ 2 } \) [(-12 - 30 - 28 - 10) - (+0 + 28 + 30 + 12)]
= \(\frac { 1 }{ 2 } \) [-80 - (-80)]
= \(\frac { 1 }{ 2 } \) [-160] = -80 = 80 சதுர அலகுகள்
37.
விட்டம் (d) = 6 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம் \(\left( r \right) =\frac { 6 }{ 2 } \) = 3 செ.மீ

வரைமுறை
படி 1 : O-வை மையமாகக் கொண்டு 3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக
படி 2 : 8 செ.மீ நீளமுள்ள OP என்ற ஒரு கோடு வரைக.
படி 3 : OP-க்கு மையக்குத்துக் கோடு வரைக. அது OP-ஐ M -ல் சந்திக்கும்.
படி 4 : M-யை மையமாகவும், MO-வை ஆரமாகவும் கொண்டு வரையப்படும் வட்டமானது முந்தைய வட்டத்தை A மற்றும் B -யில் சந்திக்கிறது.
படி 5 : AP மற்றும் BP யை இணைக்கவும். AP மற்றும் BP தேவையான தொடுகோடுகள் ஆகும். தொடுகோட்டின் நீளம் PA = PB = 7.4 செ.மீ.
சரிபார்த்தல் : செங்கோண முக்கோணம் OPA-யில் PA2 = OP2 - OA2 = 82 – 32 = 64 – 9 = 55
PA = \( \sqrt{55} = 7.4\) செ.மீ (தோராயமாக) .
38.
ஒரு நாணயம் 3 முறை சுண்டப்படும்போது கூறுவெளி
\(\mathrm{S}=\{\mathrm{HHH}, \mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{HTT}, \mathrm{THH}, \mathrm{THT},TTH, TTT \} \)
\(\mathrm{n}(\mathrm{S})=8\)
சரியாக இரண்டு தலைகள் கிடைக்கும் நிகழ்வு A என்க.
\(\mathrm{A} =\{\mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{THH}\} \)
\(\mathrm{n}(\mathrm{A}) =3 \)
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(\mathrm{~A})}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{3}{8}\)
குறைந்தபட்சம் 1 பூ கிடைக்கும் நிகழ்வு B என்க.
B = {HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
n(B) = 7
\(\mathrm{P}(\mathrm{B})=\frac{n(\mathrm{~B})}{n(\mathrm{~S})}=\frac{7}{8}\)
அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைக்கும் நிகழ்வு C என்க.
\({\mathrm{C}} =\{\mathrm{HHT}, \mathrm{THH}, \mathrm{HHH}\} \)
\(\mathrm{n}(\mathrm{C}) =3 \)
\(\mathrm{P}(\mathrm{C}) =\frac{n(\mathrm{C})}{n(\mathrm{~S})}=\frac{3}{8} \)
\(A \cap B=\{\mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{THH}\} \)
\(\mathrm{n}(A \cap B)=3 \)
\(\mathrm{P}(A \cap B)=\frac{n(\mathrm{~A} \cap B)}{n(\mathrm{~S}) \cdot}=\frac{3}{8} \)
\(B \cap C=\{\mathrm{HHT}, \mathrm{THH}\} \)
\(n(\mathrm{~B} \cap \mathrm{C})=2 \)
\(P(B \cap \mathrm{C})=\frac{n(\mathrm{~B} \cap \mathrm{C})}{n(\mathrm{~S})}=\frac{2}{8} \)
\(A \cap C=\{\mathrm{HHT}, \mathrm{THH}\} \)
\(n(\mathrm{~A} \cap C)=2 \)
\(P(\mathrm{~A} \cap \mathrm{C})=\frac{n(\mathrm{~A} \cap \mathrm{C})}{n(\mathrm{~S})}=\frac{2}{8} \)
\(A \cap B \cap C=\{\mathrm{HHT}, \mathrm{THH}\} \)
\(n(\mathrm{~A} \cap \mathrm{B} \cap \mathrm{C})=2 \)
\(P(A \cap B \cap C)=\frac{n(A \cap B \cap C)}{n(S)}=\frac{2}{8} \)
\(P(\mathrm{~A} \cup \mathrm{B} \cup \mathrm{C})= \) \(P(A)+P(B)+P(C)-P(A \cap B)-P(B \cap C)-P(A \cap C)+P(A \cap B \cap C) \)
\({P}(\mathrm{~A} \cup \mathrm{B} \cup \mathrm{C}) \quad =\frac{3}{8}+\frac{7}{8}+\frac{3}{8}-\frac{3}{8}-\frac{2}{8}-\frac{2}{8}+\frac{2}{8} \)
\(=\frac{3+7+3-3-2-2+2}{8} \)
\(=\frac{8}{8}=1\)
\(\therefore\) தேவையான நிகழ்தகவு = 1
39.
படி 1 : y = 2x2 -ன் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 8 | 2 | 0 | 2 | 8 |
படி 2 : 2x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டின் தீர்வு காண்பதற்கு, முதலில் y = 2x2 லிருந்து 2x2 - x - 6 = 0 ஐ கழிக்க வேண்டும்.

y = x + 6 என்பது ஒரு நேர்கோட்டின் சமன்பாடு ஆகும். y = x + 6 நேர்கோட்டின் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 4 | 5 | 6 | 7 | 8 |
படி 3 : y = 2x2 என்ற பரவளையம் மற்றும் y = x + 6 என்ற நேர்கோடு வெட்டும் புள்ளிகள் (–1.5, 4. 5) மற்றும் (2, 8).
படி 4 : இப்புள்ளிகளின் x- ஆயத் தொலைவுகள் -1.5 மற்றும் 2 ஆகும்.
எனவே, சமன்பாடு 2x2 - x - 6 = 0 -யின் தீர்வுகள் –1.5 மற்றும் 2 ஆகும்.

10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards