10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/12/2019
அளவியல் - mensuration
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
2.
14 செ.மீ விட்டமுள்ள குழாயிலிருந்து 15 கி.மீ / மணி என்ற வேகத்தில் 50 மீ நீளம் மற்றும் 44 மீ அகலம் கொண்ட ஒரு செவ்வக வடிவத் தொட்டியினுள் தண்ணீர் பாய்கிறது. எவ்வளவு நேரத்தில் தண்ணீரின் மட்டம் 21 செ.மீ-க்கு உயரும்.
3.
ஒரு கனச்செவ்வகத்தின் மீது அரை உருளை உள்ளவாறு ஒரு நகைப்பெட்டி உள்ளது. கனச் செவ்வகத்தின் பரிமாணங்கள் 30 செ.மீ x 15 செ.மீ x 10 செ.மீ எனில், நகைப்பெட்டியின் கன அளவு காண்க.

4.
484 செ.மீ சுற்றளவுள்ள ஒரு மரக்கூம்பின் உயரம் 105 செ.மீ எனில், கூம்பின் கன அளவைக் காண்க.
5.
ஒரு மேஜை விளக்கின் வெளிப்புறத்திற்கு (மேல்பகுதியுடன்) மட்டும் வர்ணம் பூசப்படுகிறது. 1 ச. செ.மீ வர்ணம் பூச ரூ.2 செலவாகுமெனில் விளக்கிற்கு வர்ணம் பூசுவதற்கான மொத்தச் செலவை கணக்கிடுக.

6.
செவ்வக வடிவ தொட்டியின் கொள்ளளவு 28மீx16மீ x 11மீ ஆரமும் கொண்ட உருளையின் உயரம் என்ன?
7.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)
8.
12 செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
9.
10 மீ உட்புற விட்டம் மற்றும் 14 மீ ஆழம் கொண்ட ஓர் உருளை வடிவக் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மண் கொண்டு 5 மீ அகலத்தில் கிணற்றைச் சுற்றி மேடை அமைக்கப்படுகிறது எனில், மேடையின் உயரத்தைக் காண்க.
10.
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம் ______.
1:2:3
2:1:3
1:3:2
3:1:2
11.
இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1 அலகுகள் மற்றும் r1 அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே h2 அலகுகள் மற்றும் r2 அலகுகள் மற்றும் h2 : h1 = 1 : 2 எனில், r2 : r1-ன் மதிப்பு ______.
1:3
1:2
2:1
3:1
12.
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ______ மடங்காகும்.
π
4π
3π
2π
13.
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
6 மடங்கு
18 மடங்கு
12 மடங்கு
மாற்றமில்லை
14.
ஒரு மர உருளையிலிருந்து இரண்டு அரைக்கோளங்கள் இரு முனைகளிருந்தும் குடைந்து எடுக்கப்படுகிறது. உருளையின் உயரம் 10 செ.மீ, ஆரம் 3.5செ.மீ எனில் அந்த உருவத்தின் மொத்த புறப்பரப்பு என்ன?
15.
ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?
1.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
2.
குழாயிலிருந்து ஒரு செவ்வக வடிவத் தொட்டியினுள் தண்ணீர் பாய ஆகும் நேரம் t என்க
t மணி நேரத்தில், குழாயின் வழியே செல்லும் தண்ணீரின் கன அளவு = \(\pi r^2 h \)
r = \(\frac{14}{2}=7\) செ.மீ \(=\frac{7}{100}\)மீ
h = t மணி நேரத்தில் தண்ணீர் பாயும் குழாயின் நீளம்
= 15000 மீ /மணி x t மணி
= (15000 t) மீ
செவ்வக தண்ணீர்த் தொட்டியின் கன அளவு = l x b x h1 கன அலகுகள்
l = 50 மீ
b = 44 மீ
h1 = t மணி நேரத்தில் உயரும் தண்ணீர் தொட்டியின் அளவு
= 21 செ.மீ \(=\frac{21}{100}\) மீ
t மணி நேரத்தில் குழாயில் உள்ள தண்ணீரின் கன அளவு = தண்ணீர் தொட்டியின் கன அளவு
\(\pi r^2 h= l \times b \times h\)
\(\frac{22}{7} \times \frac{7}{100} \times\frac{7}{100}\times 15000\times t=50 \times 44 \times \frac{21}{100}\)
\(t=\frac{22 \times 21}{11 \times 7 \times 3} \)
= 2 மணிநேரம்
3.
கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே l,b மற்றும் h1 என்க.
உருளையின் ஆரம் மற்றும் உயரம் முறையே r மற்றும் h2 என்க.
பெட்டியின் கனஅளவு = கனச்செவ்வகத்தின் கன அளவு +\(\frac {1}{2}\)(உருளையின் கன அளவு)
\(=\left[ (l\times b\times { h }_{ 1 })+\frac { 1 }{ 2 } \left( { \pi r }^{ 2 }{ h }_{ 2 } \right) \right] \)க.அ
\(=(30\times 15\times 10)+\frac { 1 }{ 2 } \left( \frac { 22 }{ 7 } \times \frac { 15 }{ 2 } \times \frac { 15 }{ 2 } \times 30 \right) \)
= 4500 + 2651.79 = 7151.79
ஆகவே, பெட்டியின் கன அளவு 7151.79 க.செ.மீ ஆகும்.
4.
கொ.ப: சுற்றளவு = 484 செ.மீ
\(2 \pi r =484 \)
\(2 \times \frac{22}{7} \times r =484 \)
\(r =\frac{484 \times 7}{44}=77\) செ.மீ
உயரம் h = 105 செ.மீ .
கூம்பின் கன அளவு \(=\frac{1}{3} \pi r^2 h\) கன அலகுகள்
\(=\frac{1}{3} \times \frac{22}{7} \times 77 \times 77 \times 105 \)
= 652190 செ.மீ3
5.
படத்திலிருந்து r = 6 செ.மீ
R = 12 செ.மீ
h = 8 செ.மீ
\(l =\sqrt{h^2+(\mathrm{R}-\mathrm{r})^2} \)
\(=\sqrt{8^2+(12-6)^2} \)
\(=\sqrt{64+36} \)
\(=\sqrt{100}=10\) செ.மீ
வர்ணம் பூச வேண்டிய பரப்பு = வளைபரப்பு + மேற்புற வட்டப் பகுதியின் பரப்பு
\(=\pi(\mathrm{R}+\mathrm{r}) l+\pi r^2 \)
\(=\frac{22}{7}(12+6)(10)+\frac{22}{7}(6)^2 \)
\(=\frac{-22}{7}(180)+\frac{22}{7}(36) \)
\(=\frac{22}{7}(180+36) \)
\(=\frac{22}{7}(216) \)
\(=\frac{4752}{7} \simeq 678.86\)
ஒரு சதுர செ.மீ க்கு வர்ணம் பூச ஆகும் செலவு = ரூ 2
\(\therefore\) மொத்தச் செலவு = 678.86 x 2
= ரூ 1357.72
6.
உருளையின் கன அளவு=செவ்வக தொட்டியின் கன அளவு
πr2h=28x16x11மீ3
உருளையின் உயரம் h=\(\frac{16\times11}{88}\)=2மீ
7.
வாளியானது கூம்பின் இடைக்கண்டம். இடைக்கண்டத்தின் r1=28 செ.மீ, r2=7செ.மீ, h=45 செ.மீ
வாளியின் கொள்ளளவு=இடைக்கண்டத்தின் கன அளவு
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \pi h[{ r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 2 }^{ 2 }+{ r }_{ 1 }{ r }_{ 2 }]\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\left[ { 28 }^{ 2 }+{ 7 }^{ 2 }+28\times 7) \right] \)
\(\Rightarrow 22\times 15\times \times (28\times 4+7+28)\)
⇒330x147 செ.மீ3 ⇒ 48510 செ.மீ3
8.
கோளத்தின் ஆரம் = 12 செ.மீ
கோளத்தின் கன அளவு \(=\frac{4}{3} \pi r^3\) கன அலகுகள்
\(=\frac{4}{3} \pi(12)^3\)
\(=2304 \pi\)செ.மீ3
உருளையின் ஆரம் = 8 செ.மீ
உயரம் = h செ.மீ
உருளையின் கன அளவு \(=\pi r^2 h\) கன அலகுகள்
\(=\pi(8)^2 h=64 \pi \mathrm{h}\) செ.மீ3
கொடுக்கப்பட்டது: கோளம் உருக்கப்பட்டு உருளையாக மாற்றப்படுகிறது.
\(\therefore\) உருளையின் கன அளவு = கோளத்தின் கன அளவு
\(64 \pi \mathrm{h}=2304 \pi \)
\(h=\frac{2304 \pi}{64 \pi}=36\)
\(\therefore\) உருளையின் உயரம் = 36 செ.மீ
9.
கிணற்றின் ஆரம் = 5 மீ
கிணற்றின் ஆழம் = 14 மீ
எடுக்கப்பட்ட மண்ணின் கன அளவு \(=\pi r^2 h \)
\(=\frac{22}{7} \times(5)^2 \times 14=1100\) மீ3
எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு கிணற்றைச் சுற்றி உள்ளீடற்ற உருளை வடிவத்தில் மேடை அமைக்கப்படுகிறது.
உட்புற ஆரம் = 5 மீ
மேடையின் அகலம் = 5 மீ
\(\therefore\) வெளிப்புற ஆரம் = 5 + 5 = 10 மீ
உயரம் = h
உள்ளீடற்ற உருளையின் கன அளவு \(=\pi h\left(\mathrm{R}^2-\mathrm{r}^2\right) \)
\(\therefore \ \pi h\left(\mathrm{R}^2-\mathrm{r}^2\right) =1100 \)
\(\frac{22}{7} \times h\left(10^2-5^2\right) =1100\)
மேடையின் உயரம்
\(h=\frac{1100 \times 7}{22 \times 75}=4.67\) மீ
10.
உருளையின் விட்டம் = கூம்பின் விட்டம் = கோளத்தின் விட்டம்
உருளையின் உயரம் = கூம்பின் உயரம் = கோளத்தின் உயரம்
உருளையின் கனஅளவு \(=V_1=\pi r^2 h\)
கூம்பின் கன அளவு \(=V_2=\frac{1}{3} \pi r^2 h\)
கோளத்தின் கன அளவு \(=V_3=\frac{4}{3} \pi r^3\)
கோளத்தின் ஆரம் = 'R', விட்டம் = 2R
கன அளவுகளின் விகிதம் \(\Rightarrow V_1: V_2: V_3\)
\(=\pi R^2(2 R): \frac{1}{3} \pi R^2(2 R): \frac{4}{3} \pi R^3 \)
\(=1: \frac{1}{3}: \frac{2}{3}=3: 1: 2\)
11.
கொடுக்கப்பட்டது: \(\frac{h_2}{h_1}=\frac{1}{2}\)
\(\frac{h_2}{h_1} =\frac{r_2}{r_1}=\frac{1}{2} \)
\(r_2: r_1 =1: 2\)
12.
அரைக்கோளத்தின் மொத்தப்பரப்பு = 3πr2
= 3π (ஆரத்தின் வர்க்கம்)
= 3π மடங்கு
13.
ஆரம் மும்மடங்கானால், புதிய ஆரம் 3r.
உயரம் இரு மடங்கானால், புதிய உயரம் 2h.
கூம்பின் கன அளவு \(=\frac{1}{3} \pi r^2 h \) கன அலகுகள்
\(=\frac{1}{3} \pi(3 r)^2(2 h) \)
\(=\frac{\pi}{3}\left(9 r^2\right)(2 h) \)
\(=18\left(\frac{1}{3} \pi r^2 h\right)\)
= 18 (கூம்பின் கன அளவு)
= 18 மடங்கு
14.
உருளையின் ஆரம் =r என்க.
உருளையின் உயரம்=h
மொத்த புறப்பரப்பு =உருளையின் புறப்பரப்பு +2 அரைக்கோளத்தின் புறப்பரப்பு
=2πrh+2πr2=2πr(h+2r)
=2x\(\frac{22}{7}\)x3.5x(10+2x3.5)
=22x17=374 செ.மீ2
15.
தேவையான சிறிய கோளங்களின் எண்ணிக்கை
\(=\frac { \frac { 4 }{ 3 } \pi r^{ 3 } }{ \frac { 4 }{ 3 } \pi \times { \left( \frac { r }{ 4 } \right) }^{ 3 } } \)
\(={ r }^{ 3 }\times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } =64\)
சிறிய கோளங்கள் செய்யலாம்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards