10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
புள்ளியியலும் நிகழ்தகவும்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09 எனில், P(A\(\cup\)B) ஐக் காண்க.
2.
இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
3.
பின்வரும் அட்டவணையில் ஒரு பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் உயரம் மற்றும் எடைகளின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி ஆகிய மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
| உயரம் | எடை | |
| சராசரி | 155 செ.மீ | 46.50 கி.கி |
| விலக்க வர்க்கச் சராசரி | 72.25 செ.மீ2 | 28.09 கி.கி2 |
இவற்றில் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது?
4.
தரவின் சராசரியானது 25.6 மற்றும் அதன் மாறுபாட்டுக் கெழுவானது 18.75 எனில், அதன் திட்ட விலகத்தைக் காண்க.
5.
கொடுக்கப்பட்ட தரவின் வீச்சைக் காண்க.
| வருமானம் | 400-450 | 450-500 | 500-550 | 550-600 | 600-650 |
| ஊழியர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 30 | 21 | 6 |
6.
ஒரு தரவின் வீச்சு 13.67 மற்றும் மிகப் பெரிய மதிப்பு 70.08 எனில் மிகச் சிறிய மதிப்பைக் காண்க.
7.
கொடுக்கப்பட்ட தரவுப் புள்ளிகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக்கெழு ஆகியவற்றைக் காண்க: 25, 67, 48, 53, 18, 39, 44.
8.
A மற்றும் B ஆகிய இரு விண்ணப்பதாரர்கள் IIT -யில் சேர்வதற்காகக் காத்திருப்பவர்கள். இவர்களில் A தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.5, A மற்றும் B இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.3 எனில், B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 என நிரூபிக்க.
9.
படத்தில் காட்டியுள்ள அம்புக்குறி சுழற்றும் விளையாட்டில் 1, 2, 3, …12 என்ற எண்கள் சமவாய்ப்பு முறையில் கிடைக்க வாய்ப்புள்ளது. அம்புக்குறியானது (i) 7 (ii) பகா எண் (iii) பகு எண் ஆகியவற்றில் நிற்பதற்கான நிகழ்தகவுகளைக் கண்டறிக.
10.
ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன.
| மதிப்பெண்கள் | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 | 60-70 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 17 | 14 | 9 | 7 | 4 |
இத்தரவிற்குத் திட்ட விலக்கம் காண்க.
11.
முதல் n இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்கச் சராசரிகளைக் காண்க.
12.
ஒரு வகுப்புத் தேர்வில், 10 மாணவர்களின் மதிப்பெண்கள் 25, 29, 30, 33, 35, 37, 38, 40, 44, 48 ஆகும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
13.
100 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவில், அவர்கள் எடுத்த மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்கமானது முறையே 60 மற்றும் 15 ஆகும். பின்னர் 45 மற்றும் 72 என்ற இரு மதிப்பெண்களுக்குப் பதிலாக முறையே 40 மற்றும் 27 என்று தவறாகப் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அவற்றைச் சரி செய்தால் கிடைக்கப்பெறும் புதிய தரவின் சராசரியும் திட்ட விலக்கமும் காண்க.
14.
கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு \(\frac{1}{9}\) எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,___.
5
10
15
20
15.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது _____.
2
1
3
1.5
16.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது _____.
3p + 5
3p
p + 5
9p + 15
17.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது.
3
15
5
225
18.
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது _____.
32.25
44.25
33.25
30
19.
100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுகளின் வர்க்கங்களின் கூடுதலானது ____.
40000
160900
160000
30000
20.
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது_______.
எப்பொழுதும் மிகை எண்
எப்பொழுதும் குறை எண்
பூச்சியம்
பூச்சியமற்ற முழுக்கள்
21.
8, 8, 8, 8, 8. . ., 8 ஆகிய தரவின் வீச்சு ______.
0
1
8
3
1.
P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09
P(A\(\cup\)B) = P(A) + P(B) - P(A\(\cap\)B)
P(A\(\cup\)B) = 0.37 + 0.42 - 0.09 = 0.7
2.
இரண்டு நாணயங்கள் சுண்டப்படும்பொழுது அதன் கூறுவெளியானது
S = {HH, HT, TH, TT} n(S) = 4
A ஆனது நாணயங்களில் வெவ்வேறு முகங்கள் கொண்ட நிகழ்ச்சி என்க.
A = {HT, TH}; n(A) = 2
நாணயங்களில் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\\ P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 2 }{ 4 } =\frac { 1 }{ 2 } \)
3.
இரண்டு தரவுகளை ஒப்பிட, முதலில் இரண்டிற்கும் மாறுபட்ட கெழு காண வேண்டும்.
சராசரி \({ \bar { x } }_{ 1 }\)= 155 செ.மீ, விலக்க வர்க்கச் சராசரி \({ \sigma }_{ 1 }^{ 2 }=72.25\) செ.மீ2
எனவே திட்ட விலக்கம் \({ \sigma }_{ 1 }=8.5\)
மாறுபாட்டுக் கெழு \(C.V_1=\frac { { \sigma }_{ 1 } }{ \bar { { x }_{ 1 } } } \times 100\)%
C.V. = \(\frac{8.5}{155}\times\)100% = 5.48% (உயரங்களுக்கானது)
சராசரி \(\overset{-}{x}_2\) = 46.50 கி.கி
விலக்க வர்க்கச் சராசரி \({ \sigma }_{ 2 }^{ 2 }\) = 28.09 கி.கி2
திட்ட விலக்கம் \({ \sigma }_{ 2 }\) = 5.3 கி.கி
மாறுபாட்டுக் கெழு C.V2 = \(\frac { { \sigma }_{ 2 } }{ { x }_{ 2 } } \times 100\)%
C.V2 = \(\frac { 5.3 }{ 46.50 } \times \)100% = 11.40%(எடைகளுக்கானது)
C.V1 = 5.48% மற்றும் C.V2 = 11.40%
எனவே, உயரம் அதிக நிலைப்புத் தன்மை உடையது.
4.
சராசரி \(\bar { x } \) = 25.6, மாறுபாட்டுக் கெழு, C.V. = 18.75
மாறுபாட்டுக் கெழு, C.V. = \(\frac { \sigma }{ x } \) x 100%
18.75 = \(\frac { \sigma }{ 25.6 } \times 100\) ⇒ \(\sigma \) = 4.8
5.
இங்கு மிகப் பெரிய மதிப்பு L= 650
மிகச் சிறிய மதிப்பு S = 400
\(\therefore \) வீச்சு R = L - S
R = 650 - 400 = 250
\(\therefore \) வீச்சு R = 250
6.
வீச்சு, R = 13.67
மிகப் பெரிய மதிப்பு, L = 70.08
வீச்சு, R = L - S
13.67 = 70.08 - S
S = 70.08 - 13.67 = 56.41
எனவே, மிகச் சிறிய மதிப்பு 56.41.
7.
மிகப் பெரிய மதிப்பு, L = 67; மிகச் சிறிய மதிப்பு, S = 18
வீச்சு R = L - S = 67 - 18 = 49
வீச்சுக் கெழு \(=\frac{L-S}{L+S}\)
வீச்சுக் கெழு \(=\frac{67-18}{67+18}=\frac {49}{85}=0.576\)
8.
P(A) = 0.5, P(A\(\cap\)B) = 0.3
P(A\(\cup\)B)\(\le\)1 என அறிவோம்
P(A) + P(B) - P(A\(\cap\)B) \(\le\) 1
0.5 + P(B) - 0.3 \(\le\) 1
P(B) \(\le\) 1 - 0.2
P(B) \(\le\) 0.8
எனவே, B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 ஆகும்.
9.
கூறுவெளி S = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}; n(S) = 12
(i) A ஆனது, அம்புக்குறி எண் 7-ல் நிற்பதற்கான நிகழ்ச்சி என்க. n(A) = 1
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 1 }{ 12 } \)
(ii) B ஆனது அம்புக்குறி பகா எண்ணில் நிற்பதற்கான நிகழ்ச்சி என்க.
B = {2, 3, 5, 7, 11}; n(B) = 5
\(P(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 5 }{ 12 } \)
(iii) C ஆனது அம்புக்குறி பகுஎண்ணில் நிற்பதற்கான நிகழ்ச்சி என்க.
C = {4, 6, 8, 9, 10, 12}; n(C) = 6
\(P(C)=\frac { n\left( C \right) }{ n(S) } =\frac { 6 }{ 12 } =\frac { 1 }{ 2 } \)
10.
| மதிப்பெண்கள் | மைய மதிப்பு ( xi) |
fi | di = xi-A | \({ d }_{ i }=\frac { { x }_{ i }-A }{ c } \) | fidi | fidi2 |
| 0-10 | 5 | 8 | -30 | -3 | -24 | 72 |
| 10-20 | 15 | 12 | -20 | -2 | -24 | 48 |
| 20-30 | 25 | 17 | -10 | -1 | -17 | 17 |
| 30-40 | 35 | 14 | 0 | 0 | 0 | 0 |
| 40-50 | 45 | 9 | 10 | 1 | 9 | 9 |
| 50-60 | 55 | 7 | 20 | 2 | 14 | 28 |
| 60-70 | 65 | 4 | 30 | 3 | 12 | 36 |
| N = 71 | \(\sum\)fidi = 30 | \(\sum\)fidi2 = 210 |
திட்ட விலக்கம்
\(\sigma =c\times \sqrt { \frac { \sum { { f }_{ i }{ d }_{ i }^{ 2 } } }{ N } -{ \left( \frac { { \sum { f } }_{ i }{ d }_{ i } }{ N } \right) }^{ 2 } } \)
\(\sigma =10\times \sqrt { \frac { 210 }{ 71 } -{ \left( -\frac { 30 }{ 71 } \right) }^{ 2 } } =10\times \sqrt { \frac { 210 }{ 71 } -\frac { 900 }{ 5041 } } \)
\(=10\times \sqrt { 2.779 } \Rightarrow \sigma \simeq 16.67\)
11.

\(=\frac { \sum { { x }_{ i } } }{ n } =\frac { 1+2+3+...+n }{ n } =\frac { n(n+1) }{ 2\times n } \)
சராசரி \(\bar { x } =\frac { n+1 }{ 2 } \)
விலக்க வர்க்கச் சராசரி \({ \sigma }^{ 2 }=\frac { \sum { { x }_{ i }^{ 2 } } }{ n } { -\left( \frac { { \sum { x } }_{ i } }{ n } \right) }^{ 2 }\left[ \begin{matrix} { \sum { x } }_{ i }^{ 2 } & = { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+{ 3 }^{ 2 }+...+{ n }^{ 2 } \\ { \left( \sum { { x }_{ i } } \right) }^{ 2 }= & { \left( 1+2+3+....+n \right) }^{ 2 } \end{matrix} \right] \)
\(=\frac { n(n+1)(2n+1) }{ 6\times n } -\left[ \frac { n(n+1) }{ 2\times n } \right] ^ 2\)
\(=\frac{2 n^2+3 n+1}{6}-\frac{n^2+2 n+1}{4} \)
விலக்க வர்க்கச் சராசரி \(\sigma^2 =\frac{4 n^2+6 n+2-3 n^2-6 n-3}{12}=\frac{n^2-1}{12} .\)
12.
மதிப்பெண்களின் சராசரி = 35.9. இந்த மதிப்பானது தரவுகளின் நடுமதிப்பாக அமையும் அதனால் நாம் ஊகச் சராசரி A = 35, என எடுத்துக் கொள்கிறோம், மேலும், n = 10
| xi | di=xi-A di=xi-35 |
di2 |
| 25 | -10 | 100 |
| 29 | -6 | 36 |
| 30 | -5 | 25 |
| 33 | -2 | 4 |
| 35 | 0 | 0 |
| 37 | 2 | 4 |
| 38 | 3 | 9 |
| 40 | 5 | 25 |
| 44 | 9 | 81 |
| 48 | 13 | 169 |
| \(\sum \)di=9 | \(\sum \)di2=453 |
திட்ட விலக்கம் \(\sigma =\sqrt { \frac { { \sum { d } }_{ i }^{ 2 } }{ n } -{ \left( \frac { \sum { { d }_{ i } } }{ n } \right) }^{ 2 } } \)
\(=\sqrt { \frac { 453 }{ 10 } -{ \left( \frac { 9 }{ 10 } \right) }^{ 2 } } \)
\(=\sqrt { 45.3-0.81 } =\sqrt { 44.49 }\)
\(\sigma \simeq 6.67\)
13.
மதிப்பெண்களின் சராசரி \(\bar x = 60\)
திட்ட விலக்கம் \(\sigma=15\)
தவறான பதிவுகள் = 40 மற்றும் 27
சரியான பதிவுகள் = 45 மற்றும் 72
பழைய சராசரி \(=\frac{\Sigma x_i}{n}=60\)
பழைய \(\Sigma x_i\) / 100 =60.
பழைய \(\Sigma x_i=60 \times 100=6000\)
\(\therefore\) சரியான \(\Sigma x_i=6000\) - தவறான பதிவுகள் + சரியான பதிவுகள்
= 6000 - (40 + 27) + (45 + 72)
= 6000 - 67 + 117
\(\therefore\) சரியான \(\Sigma x_i=6050\)
சரியான சராசரி = சரியான = பழைய = \(\Sigma x_i\) / n \(=\frac{6050}{100}\)
சரியான சராசரி = 60.5
பழைய திட்டவிலக்கம் \(\sigma=15\)
\(\sigma=\sqrt{\frac{\sum x_i^2}{n}-\left(\frac{\sum x_i}{n}\right)^2}\)
\(15=\sqrt{\frac{\sum x_i^2}{n}-(60)^2}\)
இருபுறமும் வர்க்கப்படுத்த,
\(225 =\frac{\Sigma x_i^2}{n}-3600 \)
\(225+3600 =\frac{\Sigma x_i^2}{100} \)
பழைய \(\Sigma x_i\) / 100 = 3825
பழைய \(\Sigma x_i^2=3825 \times 100\)
பழைய \(\Sigma x_i^2=382500\)
சரியான \(\Sigma x_i^2=382500\) - (தவறான பதிவுகள்)2 + (சரியான பதிவுகள்)2
\(= 382500-40^2-27^2+45^2+72^2\)
= 382500 - 1600 - 729 + 2025 + 5184
= 382500 - 2329 + 2025 + 5184
= 389709 - 2329
சரியான \(\Sigma x_i^2\) = 387380
சரியான \(\sigma=\sqrt{\frac{387380}{100}-(60.5)^2}\)
\(=\sqrt{3873.80-3660.25} \)
\(=\sqrt{213.55} \)
\(\sigma =14.61\)
\(\therefore\) சரியான \(\sigma\) = 14.61; சரியான சராசரி = 60.5
14.
குலுக்கலில் வெற்றி பெறும் நிகழ்வு A என்க
\(P(A)=\frac{1}{9} \)
\(\frac{n(A)}{n(S)}=\frac{1}{9} \)
\(\frac{n(A)}{n(S)}=\frac{1}{9} \Rightarrow \frac{n(A)}{135}=\frac{1}{9}\)
\(n(A)=\frac{135}{9}=15\)
15.
வேலை கிடைக்கும் நிகழ்வு A என்க
\(P(A) + P(\bar{A}) =1 \)
\(\frac{x}{3}+\frac{2}{3} =1 \)
\(\frac{x+2}{3} =1 \)
x + 2 = 3
x = 3 - 2
x = 1 .
16.
திட்ட விலக்கம் \(\sigma=\mathrm{p}\)
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 3 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 3 மடங்கு காண வேண்டும். புதிய \(\sigma=3\mathrm{p}\) ஒவ்வொரு புள்ளியுடனும் 5 ஐக் கூட்ட திட்ட விலக்கம் மாறாது.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 p\)
17.
திட்ட விலக்கம் \(\sigma\) = 3
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 5 மடங்கு காண வேண்டும்.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 \times 5=15\)
விலக்க வா்க்கச் சராசரி \(\sigma^2=15^2=225\)
18.
முதல் 20 இயல் எண்களின் கூடுதல்
\(=\frac{n(n+1)}{2}=\frac{20 \times 21}{2} \)
\(\sum x_i =210 \)
\(\sigma =\sqrt{\frac{\sum x_i^2}{n}-\left(\frac{\sum x_i}{n}\right)^2} \)
\(\sum x_i^2 =1^2+2^2+3^2+\ldots+20^2 \)
\(=\frac{n(n+1)(2 n+1)}{6} \)
\(=\frac{20 \times 21 \times 41}{6}=10 \times 7 \times 41 \)
\(=2870 \)
\(\sigma =\sqrt{\frac{2870}{20}-\left(\frac{210}{20}\right)^2}\)
விலக்க வா்க்கச் சராசரி
\(\sigma^2 =\frac{2870}{20}-\left(\frac{210}{20}\right)^2 \)
\(=143.5-\frac{441}{4} \)
\(=143.5-110.25=33.25\)
19.
N = 100
\(\bar{x} =40 \)
\(\sigma =3 \)
\(\sigma =\sqrt{\frac{\sum d_i^2}{N}-\left(\frac{\sum d_i}{N}\right)^2} \)
\(3^2 =\frac{\sum d_i^2}{100}-40^2 \)
\(9 =\frac{\sum d_i^2}{100}-1600 \)
\(9+1600 =\frac{\sum d_i^2}{100} \)
\(1609 \times 100 =\sum d_i^2 \)
\(\sum d_i^2 =1,60,900\)
20.
(c)
பூச்சியம்
21.
வீச்சு = L - S
= 8 - 8
= 0
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards