10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 அளவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க.
2.
உயரம் 2 மீ மற்றும் அடிப்பரப்பு 250 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கனஅளவைக் காண்க.
3.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
4.
சம அளவு விட்டமும் சம உயரமும் கொண்ட உருளை, கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம் என்ன?
5.
6 செ.மீ ஆரம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட ஓர் உருளை வடிவப் பாத்திரம் முழுவதுமாக பனிக்கூழ் (Ice-cream) உள்ளது. அந்தப் பனிக்கூழானது, கூம்பு மற்றும் அரைக்கோளம் இணைந்த வடிவத்தில் நிரப்பப்படுகிறது. கூம்பின் உயரம் 9 செ.மீ மற்றும் ஆரம் 3 செ.மீ எனில், பாத்திரத்தில் உள்ள பனிக்கூழை நிரப்ப எத்தனைக் கூம்புகள் தேவை?
6.
45 செ.மீ உயரமுள்ள ஓர் இடைக்கண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ எனில், இடைக்கண்டத்தின் கன அளவைக் காண்க.
7.
ஓர் உள்ளீடற்ற பித்தளை கோளத்தின் உள்விட்டம் 14 செ.மீ, தடிமன் 1 மி.மீ மற்றும் பித்தளையின் அடர்த்தி 17.3 கிராம் / க. செ.மீ எனில், கோளத்தின் நிறையைக் கணக்கிடுக. (குறிப்பு: நிறை = அடர்த்தி × கனஅளவு)
8.
ஒரு திண்ம அரைக்கோளத்தின் கனஅளவு 29106 க. செ.மீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
9.
படத்தில் உள்ள உருளை A மற்றும் B -ல்
(i) எந்த உருளையின் கன அளவு அதிகமாக இருக்கும்?
(ii) அதிகக் கன அளவு கொண்ட உருளையின் மொத்தப்புறப்பரப்பு அதிகமாக இருக்குமா எனச் சோதிக்க.
(iii) உருளை A மற்றும் B-ன் கன அளவுகளின் விகிதம் காண்க.
10.
ஓர் உருளை வடிவ தண்ணீர் தொட்டியின் கன அளவு 1.078 x 106 லிட்டர் ஆகும். தொட்டியின் விட்டம் 7 மீ எனில், அதன் உயரம் காண்க.
1.
r1 h1 என்பன முதல் கூம்பின் ஆரம் மற்றும் உயரம் என்க. r2 மற்றும் h2 என்பன இரண்டாம் கூம்பின் ஆரம் மற்றும் உயரம் என்க.
இங்கு, h2 = 2h1 மற்றும் 
\(\frac { \frac { 1 }{ 3 } { \pi r }_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ \frac { 1 }{ 3 } { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { 2 }{ 3 } \)
\(\frac{r_1^2}{r_2^2} \times \frac{h_1}{2 h_1}=\frac{2}{3}\)
\(\frac { { r }_{ 1 }^{ 2 } }{ { r }_{ 2 }^{ 2 } } =\frac { 4 }{ 3 } \) இதிலிருந்து \(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } =\frac { 2 }{ \sqrt { 3 } } \)
ஆகவே, ஆரங்களின் விகிதம் =2:1\(\sqrt{3}\)
2.
உருளையின் ஆரம் மற்றும் உயரம் முறையே r மற்றும் h என்க.
இங்கு, உயரம் h = 2 மீ, அடிப்பரப்பு = 250 ச.மீ
உருளையின் கனஅளவு = \(\pi\)r2h க.அ
= அடிப்பரப்பு x h
= 250 x 2 = 500 மீ3
எனவே, உருளையின் கனஅளவு = 500 க.மீ
3.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
4.
உருளையின் கன அளவு \(={ \pi r }^{ 2 }h\)
கூம்பின் கன அளவு \(=\frac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }h\)
கோலத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
அவற்றின் கன அளவுகளின் விகிதம் V1:V2:V3
\(h:\frac { h }{ 3 } :\frac { 4r }{ 3 } \)
3h:h:4r
3h:h:2(2r) (இங்கு 2r=h)
∴ V1:V2:V3=3:1:2
5.
h மற்றும் r என்பன முறையே உருளையின் உயரம் மற்றும் ஆரம் என்க.
இங்கு, h = 15 செ.மீ, r = 6 செ.மீ
உருளையின் கனஅளவு V = πr2h க.அ
\(=\frac { 22 }{ 7 } \times 6\times 6\times 15\)
r1 = 3 செ.மீ மற்றும் h1 = 9 செ.மீ என்பன கூம்பின் ஆரம் மற்றும் உயரம் ஆகும்.
r1 = 3 செ.மீ என்பது அரைக்கோளத்தின் ஆரம் ஆகும்.
பனிக்கூழ்க் கூம்பின் கனஅளவு = கூம்பின் கனஅளவு + அரைக்கோளத்தின் கனஅளவு
\(=\frac { 1 }{ 3 } \pi { r }_{ 1 }^{ 2 }{ h }_{ 1 }+\frac { 2 }{ 3 } \pi { r }_{ 1 }^{ 3 }\)
\(=\frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 3\times 3\times 9+\frac { 2 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 3\times 3\times 3\)
ஒரு பனிக்கூழ்க் கனஅளவு \(=\frac { 22 }{ 7 } \times 45\)
எனவே, தேவையான கூம்புகளின் எண்ணிக்கை 
\(=\frac { \frac { 22 }{ 7 } \times 6\times 6\times 15 }{ \frac { 22 }{ 7 } \times 45 } =12\)
ஆகவே, தேவையான கூம்புகளின் எண்ணிக்கை 12 ஆகும்.
6.

இடைக்கண்டத்தின் உயரம் h எனவும் அதன் இருபுற ஆரங்கள் R மற்றும் r எனவும் கொள்க.
இங்கு, h = 45 செ.மீ, R = 28 செ.மீ, r = 7 செ.மீ
எனவே, இடைக்கண்டத்தின் கன அளவு \(=\frac { 1 }{ 3 } \pi h\left[ { R }^{ 2 }+Rr+{ r }^{ 2 } \right] \)க.அ
\(=\frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\times \left[ { 28 }^{ 2 }+(28\times 7)+{ 7 }^{ 2 } \right] \)
\(=\frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\times 1029=48510\)
எனவே, இடைக்கண்டத்தின் கன அளவு 48510 க.செ.மீ ஆகும்.
7.
r, R என்பன முறையே உள்ளீடற்ற கோளத்தின் உள் ஆரம் மற்றும் வெளி ஆரம் என்க.
இங்கு, உள்விட்டம் d = 14 செ.மீ; உள் ஆரம் r = 7 செ.மீ; தடிமன் = 1மி.மீ =\(\frac{1}{10}\) செ.மீ
வெளி ஆரம் R = 7+\(\frac{1}{10}=\frac {71}{10}=7.1\) செ.மீ
உள்ளீடற்ற கோளத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } \pi \left( { r }^{ 3 }-{ r }^{ 3 } \right) \)க.அ
\(=\frac { 4 }{ 3 } \times \frac { 22 }{ 7 } (357.91-343)=62.48\) க.செ.மீ
ஆனால், 1 க.செ.மீ பித்தளையின் அடர்த்தி = 17.3 கி
மொத்த நிறை = 17.3 x 62.48 = 1080.90 கி
எனவே, மொத்த நிறை 1080.90 கிராம் ஆகும்.
8.
r என்பது செதுக்கப்பட்ட அரைக்கோளத்தின் ஆரம் என்க,
அரைக்கோளத்தின் கன அளவு = 29106 க.செ.மீ.
புதிய அரைக்கோளத்தின் கன அளவு =\(\frac{2}{3}\) (முந்தைய அரைக்கோளத்தின் கன அளவு)
=\(\frac{2}{3}\) x 29106
புதிய அரைக்கோளத்தின் கனஅளவு = 19404 க.செ.மீ
\(\frac { 2 }{ 3 } { \pi r }^{ 3 }=19404\)
\({ r }^{ 3 }=\frac { 19404\times 3\times 7 }{ 2\times 22 } =9261\)
\(r=\sqrt [ 3 ]{ 9161 } =21\) செ.மீ
ஆகவே, புதிய அரைக்கோளத்தின் ஆரம் 21 செ.மீ ஆகும்.
9.

(i) உருளையின் கன அளவு = πr2h க.அ
உருளை A-ன் கன அளவு \(=\frac { 22 }{ 7 } \times \frac { 7 }{ 2 } \times \frac { 7 }{ 2 } \times 21\)
= 808.5 செ.மீ3
உருளை B-ன் கனஅளவு \(=\frac { 22 }{ 7 } \times \frac { 21 }{ 2 } \times \frac { 21 }{ 2 } \times 7\)
= 2425.5 செ.மீ3
ஆகவே, உருளை B-ன் கன அளவு உருளை A-ன் கன அளவை விட அதிகம் ஆகும்.
(ii) உருளையின் மொத்தப் புறப்பரப்பு = 2πr(h + r) ச.அ
உருளை A-ன் மொத்தப் புறப்பரப்பு \(=2\times \frac { 22 }{ 7 } \times \frac { 7 }{ 2 } \times (21+3.5)=539\) செ.மீ2
உருளை B-ன் மொத்தப் புறப்பரப்பு \(=2\times \frac { 22 }{ 7 } \times \frac { 21 }{ 7 } \times (7+10.5)=1155\) செ.மீ2
ஆகவே, கன அளவு அதிகம் கொண்ட உருளை B-ன் மொத்தப் புறப்பரப்பு அதிகமாக உள்ளது.
(iii) 
ஆகவே, உருளை A மற்றும் B-ன் கன அளவுகளின் விகிதம் 1:3
10.
r மற்றும் h என்பன முறையே உருளையின் ஆரம் மற்றும் உயரம் என்க.
தொட்டியின் கனஅளவு = 1.078 x 106 = 1078000 லிட்டர்
= 1078மீ3 (ஏனெனில் 1l =\(\frac{1}{1000}\)மீ3)
இங்கு, விட்டம் = 7 மீ எனில், ஆரம் = \(\frac{7}{2}\) மீ
தொட்டியின் கன அளவு =\(\pi \)r2h க.அ
\(1078=\frac { 22 }{ 7 } \times \frac { 7 }{ 2 } \times \frac { 7 }{ 2 } \times h\)
ஆகவே, தொட்டியின் உயரம் 28 மீ ஆகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards