10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
நரம்பு மண்டலத்திற்கும், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்குமிடையே இணைப்பாகச் செயல்படும் உறுப்பு எது?
2.
அட்டைக்கு கண், காதுகள் இருக்கின்றனவா?
3.
நீரேறிய உப்பு - வரையறு.
4.
உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.
5.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.
6.
இரண்டாகப் பிளத்தல் பல்கூட்டுப் பிளத்தலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?
7.
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
8.
மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?
9.
ராலே சிதறல் விதியைக் கூறுக.
10.
ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?
11.
ஸ்கிராச்சு என்பதனை விரிவாக விளக்குக.
12.
கீழ்கண்டவற்றின் மூலக்கூறு நிறையைக் காண்க.
1) H2O
2) CO2
3) Ca3(PO4)2
13.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?
14.
காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
15.
மழைநீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?
16.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மி.லி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மி.லி-லிருந்து 48.5 மி.லி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மி.லி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.
17.
ஒரு கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கம்
M =\(1+\frac { D }{ f } \)
m =\(\frac { v }{ u } \)
m =\(\frac { v }{ u } \left( 1+\frac { D }{ { f }_{ e } } \right) \)
m =\(\frac { v }{ u } \left( 1-\frac { D }{ { f }_{ e } } \right) \)
18.
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் ________ எனப்படும்.
தெவிட்டிய கரைசல்
தெவிட்டாத கரைசல்
அதி தெவிட்டிய கரைசல்
நீர்த்த கரைசல்
19.
rDNA என்பது ____.
ஊர்தி DNA
வட்ட வடிவ DNA
ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை
சாட்டிலைட் DNA
20.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் _____.
22.4 லிட்டர்
2.24 லிட்டர்
0.24 லிட்டர்
0.1 லிட்டர்
21.
உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி ____.
தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.
தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை
22.
23.
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்த சேர்மத்தின் வகை ___.
அல்கேன்
அல்கீன்
அல்கைன்
ஆல்கஹால்
24.
விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
‘O’ வகை
‘AB’ வகை
A அல்லது B வகை
அனைத்து வகை
25.
எனில் A மற்றும் Z ன் மதிப்பு ____.
8, 6
8, 4
4, 8
கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து காண இயலாது
26.
மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
27.
LH ஐ சுரப்பது ______.
அட்ரினல் சுரப்பி
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஹைப்போதலாமஸ்
28.
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
மழைப்பொழிவு இல்லாத இடம்
குறைவான மழை பொழிவு உள்ள இடம்
அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்
இவற்றில் எதுவுமில்லை
29.
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
30.
கீழ்க்கண்ட அணுக்கரு வினையிலிருந்து A,B,C மற்றும் D ஆகியவற்றைக் காண்க.
(i) 13Al27 + A → 15P30 + B
(ii) 12Mg24 + B → 11Na24 + C
(iii) 92U238 + B → 93Np239 + D
31.
கரோனரி சுற்றோட்டத்தை விவரி.
32.
சுவாச ஈவு (RQ) என்றால் என்ன?
33.
அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
34.
புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?
35.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
36.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
37.
38.
உயிர்ப்பொருண்மை சிதைவடைவதன் மூலம் நமக்கு கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் நாம் அவற்றை பாதுகாப்பது அவசியமாகிறது. ஏன்?
1.
ஹைப்போதலாமஸ், உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது.
2.
அட்டைக்கு காதுகள் இல்லை. அது அதிர்வுகளை தோல் மூலம் உணர்கிறது. ஆனால், கண்கள் உண்டு. அது 2 முதல் 10 சிறிய கண்கள் மூலம் உணவை அடையாளம் காண்கிறது.
3.
அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளுடன் வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்தி படிகங்கள் உருவாகும் நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
இந்தப் படிகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்கல் நீர் எனப்படும்.
எ.கா: நீல விட்ரியால் - CuSO4 5 H2O
4.
| வ.எண் | உட்கலப்பு | வெளிக்கலப்பு |
| 1 | நெருங்கிய தொடர்புடைய மற்றும் ஒரே இனத்தை சார்ந்த உயிரினங்களை 4 முதல் 6 தலைமுறைகளுக்கு கலப்பு செய்வதே உட்கலப்பு. இது ஒரே இனத்தைச் சார்ந்த வீரியமிக்க ஆண் மற்றும் வீரியமிக்க பெண் விலங்குகளை இனங்கண்டு, அவற்றை ஜோடியாக இனக்கலப்பு செய்வதாகும்.இம்முறையின் மூலம் வீரியமிக்க ஜீன்கள் கலப்பினத்தில் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டு, விரும்பத்தகாத ஜீன்கள் நீக்கப்படுகின்றன. | தொடர்பற்ற விலங்குகளைக் கலப்பு செய்வதாகும் இவ்வினக்கலப்பின் மூலம் உருவான புதிய உயிரி கலப்புயிரி, பெற்றோர்களைவிட பலம் வாய்ந்தது.இம்முறையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, விரும்பத்தக்க பண்புகளை கொண்ட இரண்டு சிற்றினங்கள் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. |
5.
(i) ஹைட்ரஜன் குளோரைடு (HCl)
(ii) ஹைட்ரஜன் அயோடைடு (HI).
6.
| எண் | இரண்டாகப் பிளத்தல் | பல்கூட்டுப் பிளத்தல் |
| 1. | இரண்டு சேய் உயிரினங்கள் மட்டுமே கிடைக்கிறது. | பல சேய் உயிரினங்கள் தோன்றுகின்றன. |
| 2 | ஒரு முறை மட்டுமே பிளக்கிறது | மீண்டும் மீண்டும் பிளத்தலில் ஈடுபடுகிறது. |
| 3 | ஒரே நேரத்தில் சைட்டோபிளாசமும், உட்கருவும் பிரிகிறது. | முதலில் உட்கரு பிரிந்து பின்பு சைட்டோபிளாசத்தால் சூழப்படுகிறது. |
| 3. | எ.கா. அமீபா, யூக்ளினா, பாக்டீரியா | எ.கா. பிளாஸ்மோடியம், ஆல்க்காக்கள் (ஸ்போராகைரா) |
7.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன. இவற்றில் இருவகைகள் உள்ளன.
1. ஒருங்கமைந்தவை
2. இருபக்க ஒருங்கமைந்தவை
8.
டங்ஸ்டனின் உருகுநிலை மிக அதிகம். ஆகவே அவை மின்னிழை விளக்குகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருள்களால் செய்யப்படுகிறது.
9.
1. ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்.
2. சிதறல் அளவு 'S' ∝ \(\frac { 1 }{ { \lambda }^{ 4 } } \)
10.
அசைவூட்டல்களையும், கேலிச்சித்திரங்களையும், விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH), இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language) எம்ஐடி ( Massachusetts Institute of Technology - MIT) என்னும் பல்கலைத் தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது.
11.
அசைவூட்டல்களையும் , கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH). இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language) எம்ஐடி( Massachusetts Institute of Technology - MIT) என்னும் பல்கலைத்தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது. ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது அவை
1. ஸ்டேஜ்
2. ஸ்பிரைட்டு
3. ஸ்கிரிப்ட் எடிட்டர்
மேடை (STAGE):
1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும். தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.
ஸ்பிரைட்டு (SPRITE):
1. ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் ஸ்பிரைட்கள் என்பர்.
2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
ஸ்கிரிப்ட் எடிட்டர்(SCRIPT EDITOR) :
1. ஸ்கிரிப்ட் எடிட்டர் நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.
2. ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
1.Script Area
2. Block Menu
3. Block Palette
Script Area:
இங்கு நிரல் கட்டமைக்கப்படுகிறது.
Block Menu:
இங்கிருந்து பிளாக்கு வகைமையைத் (block category - Programming Statements) தேர்வு செய்யமுடியும்.
Block Palette:
இங்கு பிளாக்குகளை (block) தேர்வு செய்யலாம்.
12.
1. H2O
H ன் அணு நிறை = 1, O -ன் அணு நிறை = 16
H2O ன் மூலக்கூறு நிறை = (1 x 2) + (16 x 1) = 2 + 16
H2O ன் மூலக்கூறு நிறை = 18 கி
2. CO2
C ன் அணு நிறை = 12, O - ன் அணு நிறை = 16
CO2 ன் மூலக்கூறு நிறை = (12 x 1) + (16 x 2)
= 12 + 32
CO2 ன் மூலக்கூறு நிறை = 44 கி
3. Ca3(PO4)2
Ca ன் அணு நிறை = 40, P -ன் அணு நிறை = 30,
O ன் அணு நிறை = 16
Ca3(PO4)2 ன் மூலக்கூறு நிறை = (40 x 3) + [30 + (16 x 4)] x 2
= 120 + (94 x 2)
= 120 + 188
Ca3(PO4)2 ன் மூலக்கூறு நிறை = 308 கி.
13.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கை தேர்வு உள்ளது. எவ்வாறெனில்,
அதிக இனப்பெருக்கத் திறன்:
1. உயிரினங்கள், அதிகளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை.
2. அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை.
வாழ்க்கைக்கான போராட்டம்:
1. அதிக உற்பத்தி காரணமாக, உயிரினங்கள் வாழ தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது.
2. இது உயிரினங்களுக்கான உணவு மற்றும் இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
வேறுபாடுகள்:
டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள் உயிரினத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.
இயற்கைத் தேர்வு:
1. வாழ்க்கைக்கான போராட்டத்தின் போது கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள் உயிர்பிழைத்து சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும்.
2. கடினமான சூழலை எதிர்கொள்ள முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்து விடும்.
3. சாதகமான வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை இயற்கை தேர்வு என அழைக்கப்படுகிறது.
சிற்றினங்களின் தோற்றம்:
பல தலைமுறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின் தொகுப்பினால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன.
14.
காற்று சுவாசம்:
1. இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் முழுவதுமாக ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
2. இந்த சுவாசம் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது.
C6H12O6 +6O2 → 6CO2 + 6H2O + ATP
காற்றுச் சுவாசத்தின் படிநிலைகள்
அ) கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு):
இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும்.
இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.
ஆ) கிரெப்ஸ் சுழற்சி:
இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம் - matrix).
கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறுகிறது.
இந்த சுழற்சிக்கு கிரெப்ஸ் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.
இ) எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:
மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் நடைபெறுகிறது.
கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரெப்ஸ் சுழற்சியின் போது உண்டான NADH + H+ மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD ஆக ஆக்ஸிகரணமடைகின்றன.
இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP யால் எடுத்துக்கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது.
இதற்கு ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு நீராக (H2O) ஒடுக்கமடைகிறது.
15.
மழைநீரை சேமிக்கும் முறைகள்:
1. மேற்கூரைகளில் விழும் மழைநீரை சேமித்தல் :
வீட்டின் மேற்கூரை, அடுக்கு மாடி குடியிருப்புகள் அலுவலகங்கள், கோயில்கள் ஆகியவற்றில் பெய்யும் மழைநீரை தொட்டிகளில் சேகரித்து, வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.
2. திறந்த வெளிகளிலிருந்து பெறப்படும் மழைநீர்:
வடிகட்டும் தொட்டிகளுக்கு பெறப்படும் மழைநீர் வடிகட்டும் தொட்டிகளுக்கு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர், கசிவு நீர் குழிகள் மூலம் மண்ணுக்குள் ஊடுருவி, நிலத்தடி நீராக சேகரிக்கப்படும்.
3. ஏரிகளில் மழைநீரை சேமித்தல்:
1. ஏரிகள் அமைத்து கிராம பகுதியில் மழைநீரை சேமிக்கலாம்.
2. இது தமிழ் நாட்டிலுள்ள மிகப்பழமையான மழை நீர்சேகரிப்பு முறையாகும். ஒரு ஏரியில் மழை நீர் சேகரித்த பின், அதில் உள்ள உபரி நீர் அருகிலுள்ள மற்றொரு கிராமத்திலுள்ள ஏரியை சென்றடைந்து சேமிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
4. ஊரணிகள்:
ஒவ்வொரு கிராமப் புறத்திலும் சிறிய அளவிலான மழைநீரைச் சேமிக்கும் விதமாக ஊரணிகள் அமைந்துள்ளன. இந்த நீரானது குளிக்க, குடிக்க, துணி துவைக்க உதவுகின்றன. இவை அருகிலுள்ள கிராமங்களுக்கும் பயன்படுகின்றன.
16.
திரவத்தின் ஆரம்ப நிலை L1 = 50 மிலி
கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
= 51.2 மிலி - 50 மிலி = 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு = L3 - L2
= 51.2 மிலி – 48.5 மிலி = 2.7 மிலி
17.
(c)
m =\(\frac { v }{ u } \left( 1+\frac { D }{ { f }_{ e } } \right) \)
18.
(a)
தெவிட்டிய கரைசல்
19.
(c)
ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை
20.
(b)
2.24 லிட்டர்
21.
(b)
தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
22.
(d)
23.
(b)
அல்கீன்
24.
(a)
‘O’ வகை
25.
(b)
8, 4
26.
(c)
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
27.
(c)
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
28.
(b)
குறைவான மழை பொழிவு உள்ள இடம்
29.
| வ.எண் | இச்சைச் செயல் | அனிச்சைச் செயல் |
| 1) | இச்சைச் செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. | அனிச்சைச் செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்படாதது. |
| 2) | இச்சைச் செயல்கள் மூளைக்கு கட்டுப்பட்டது. | அனிச்சை செயல் தண்டுவடத்திற்கு கட்டுப்பட்டது. |
| 3) | இது தசை இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. | அனிச்சைச் செயல் தசை இயக்கம் அல்லது சில சுரப்பிகளின் சுரப்புக்கு காரணமாக உள்ளது. |
30.
(i) 13Al27 + 2He4 → 15P30 + 0n1
(ii) 12Mg24 + 0n1 → 11Na24 + 1H1
(iii) 92U238 + 0n1 → 93Np239 + –1e0
A என்பது ஆல்பா துகள், B என்பது நியூட்ரான், C என்பது புரோட்டான் மற்றும் D என்பது எலக்ட்ரான்.
31.
1. இதயத் தசைகளுக்கு (கார்டியக் தசைகள்) இரத்தம் செல்லுதல் கரோனரி சுழற்சி எனப்படும்.
2. இதயத் தசைகளுக்கு ஆக்சிஜன் மிகுந்த இரத்தம் கரோனரி தமனி மூலமாக பெறப்படுகிறது.
3. இது பெருந்தமனியின் வளைவிலிருந்து உருவாகிறது.
4. இதயத் தசையிலிருந்து ஆக்சிஜன் குறைந்த இரத்தம் கரோனரி சைனஸ் மூலம் வலது ஏட்ரியத்தை வந்தடைகிறது.
32.
சுவாசித்தலின் போது வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அளவிற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆக்ஸிஜன் அளவிற்கும் இடையேயுள்ள விகிதமே சுவாச ஈவு எனப்படும்.
சுவாச ஈவு = வெளியிடப்படும் CO2 அளவு/எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு
33.
அ) அயனிப் பிணைப்பு
ஆ) எலக்ட்ரான் கவர்தன்மை
இ) தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும்.
தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது.
34.
1. படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள, கார்பன், யுரேனியம், காரீயம் போன்ற கதிரியக்கத் தனிமங்களால் கண்டுபிடிக்கலாம்.
2. உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை.
3. அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது.
4. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன் (C14) அளவைக் கொண்டு அந்த தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
35.
இந்நிலை அவனுக்கு அட்ரினலின் சுரப்பதால் ஏற்படுகிறது. தேர்வு பயத்தின் காரணமாக அட்ரினலின் சுரந்து அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சுவீதம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
36.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
37.
38.
1. கரி மற்றும் பெட்ரோலியம் ஆகியவை இயற்கை வளங்கள் ஆகும்.
2. இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் நிலத்தில் ஆழப் புதைந்து உயிரிப் பொருண்மை சிதைவின் மூலம் உருவானவையாகும்.
3. இவை எளிதில் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள்.
4. எனவே அவற்றை நாம் பாதுகாப்பது அவசியம்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards