10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
அனிச்சை வில் என்பதை வரையறு.
2.
வெப்பநிலை-வரையறு.
3.
இரத்த அழுத்தம் - வரையறு.
4.
வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
5.
இரண்டாகப் பிளத்தல் பல்கூட்டுப் பிளத்தலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?
6.
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
7.
மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.
8.
உடற்பருமனுக்கு காரணமான காரணிகள் எவை?
9.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
10.
ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?
11.
வெட்டும் கருவிகள் கூரிய முனை உடையவை ஏனெனில்
தொடும் பரப்பு அதிகம்
அழுத்தம் குறையும்
பரப்பு குறையும் அழுத்தம் அதிகரிக்கும்
பரப்பு அதிகரித்து அழுத்தம் அதிகரிக்கும்
12.
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ______.
அசிட்டோன்
பென்சீன்
நீர்
ஆல்கஹால்
13.
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______ என அழைக்கப்படுகின்றன.
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
திடீர் மாற்றம் அடைந்தவை
(அ) மற்றும் (ஆ)
14.
1 amu என்பது ____.
C - 12 ன் அணுநிறை
ஹைட்ரஜனின் அணுநிறை
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
O - 16 ன் அணு நிறை
15.
உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி ____.
தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.
தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை
16.
கிரெப்ஸ் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
புறத்தோல் துளை
மைட்டோகாண்ட்ரியாவின்
17.
பின்வரும் படிவரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
C3H8 மற்றும் C4H10
C2H2 மற்றும் C2H4
CH4 மற்றும் C3H6
C2H5OH மற்றும் C4H8OH
18.
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
எண்டோகார்டியம்
எபிகார்டியம்
மையோகார்டியம்
மேற்கூறியவை அனைத்தும்
19.
எனில் A மற்றும் Z ன் மதிப்பு ____.
8, 6
8, 4
4, 8
கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து காண இயலாது
20.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C
A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C
A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C
A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C
21.
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ______.
மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களை குட்டையாக்குவது
குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
வேர் உருவாதலை ஊக்குவிப்பது
இளம் இலைகள் மஞ்சளாவது
22.
கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்
மின்சாரம்
கரி
உயிரி வாயு
மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு
23.
ஸ்கிராச்சு என்பதனை விரிவாக விளக்குக.
24.
சடுதிமாற்றத்தை எடுத்துக்காட்டுடன் விவரி
25.
26.
முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக.
27.
1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பைக் கணக்கிடுக.
28.
உனது கையை யாராவது சிறு ஊசி மூலம் குத்தும்போது நீ என்ன செய்வாய்? என்பதனையும் இந்த நரம்புத் தூண்டல் செல்லக்கூடிய பாதையைப் படம் வரைந்து பாகங்களுடன் விளக்குக.
29.
மைலின் உறை உள்ள மற்றும் மைலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.
30.
ஒரு கரைசலின் pOH மதிப்பு 11.76 எனில் அக்கரைசலின் pH மதிப்பு காண்க.
31.
கணினி உன்னுடைய படிப்பிற்கு எம்முறைகளிலும் உதவிபுரிகிறது?
32.
’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. B-இல் நீரைச் சேர்க்கப்படும் போது ‘B’ மீண்டும் ’A’ ஆக மாறுகிறது. ’A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க.
33.
34.
இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
35.
அலைபேசி கோபுரங்கள் மனித வாழிடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட வேண்டும் – ஏன்?
36.
தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
37.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
38.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள் யாவை?
1.
நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல், துலங்கல், அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்தது அனிச்சை வில் எனப்படும்.
2.
ஒரு பொருள் சுற்றுப்புறத்துடன் வெப்பச் சமநிலையில் உள்ளதா அல்லது இல்லையா என்று கூறும் பண்பை வெப்பநிலை என வரையறுக்கலாம்.
3.
தமனிகள் வழியே இரத்தம் ஓடும்போது அத்தமனிகளின் பக்கவாட்டுச் சுவர் மீது இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படும்.
4.
(i) திட்டவெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மி.லி பருமனை ஆக்கிரமிக்கும்.
(ii) இது மோலார் பருமன் என அழைக்கப்படுகிறது.
5.
| எண் | இரண்டாகப் பிளத்தல் | பல்கூட்டுப் பிளத்தல் |
| 1. | இரண்டு சேய் உயிரினங்கள் மட்டுமே கிடைக்கிறது. | பல சேய் உயிரினங்கள் தோன்றுகின்றன. |
| 2 | ஒரு முறை மட்டுமே பிளக்கிறது | மீண்டும் மீண்டும் பிளத்தலில் ஈடுபடுகிறது. |
| 3 | ஒரே நேரத்தில் சைட்டோபிளாசமும், உட்கருவும் பிரிகிறது. | முதலில் உட்கரு பிரிந்து பின்பு சைட்டோபிளாசத்தால் சூழப்படுகிறது. |
| 3. | எ.கா. அமீபா, யூக்ளினா, பாக்டீரியா | எ.கா. பிளாஸ்மோடியம், ஆல்க்காக்கள் (ஸ்போராகைரா) |
6.
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் காற்றில்லா சுவாசம் (நொதித்தல்) ஆகும்.
7.
1. மின் சூடேற்றி
2. மின் சலவைப் பெட்டி ஆகியவைகளில் மின்னோட்டத்தின் வெப்பவிளைவு பயன்படுகிறது.
8.
1. மரபியல் காரணிகள்
2. உடல் உழைப்பின்மை
3. உணவு பழக்க வழக்கங்கள் (அளவுக்கதிகமாக உண்ணுதல்)
4. நாளமில்லா சுரப்பிக் காரணிகள்
9.
| மீள் வினை | மீளா வினை | |
|---|---|---|
| அ) | தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். | முன்னோக்கு வினை மட்டுமே நடைபெறும் |
| ஆ) | முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். | ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும். |
| இ) | வினையானது சமநிலை அடையும். | வினையானது சமநிலை அடையாது. |
| ஈ) | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது. | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக் கூடியது. |
| உ) | இவ்வினை மெதுவாக நடைபெறும். | வேகமாக நடைபெறும். |
10.
அசைவூட்டல்களையும், கேலிச்சித்திரங்களையும், விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH), இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language) எம்ஐடி ( Massachusetts Institute of Technology - MIT) என்னும் பல்கலைத் தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது.
11.
(c)
பரப்பு குறையும் அழுத்தம் அதிகரிக்கும்
12.
(c)
நீர்
13.
(a)
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
14.
(c)
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
15.
(b)
தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
16.
(b)
மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
17.
(a)
C3H8 மற்றும் C4H10
18.
(d)
மேற்கூறியவை அனைத்தும்
19.
(b)
8, 4
20.
(a)
A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C
21.
(b)
குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
22.
(c)
உயிரி வாயு
23.
அசைவூட்டல்களையும் , கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH). இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language) எம்ஐடி( Massachusetts Institute of Technology - MIT) என்னும் பல்கலைத்தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது. ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது அவை
1. ஸ்டேஜ்
2. ஸ்பிரைட்டு
3. ஸ்கிரிப்ட் எடிட்டர்
மேடை (STAGE):
1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும். தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.
ஸ்பிரைட்டு (SPRITE):
1. ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் ஸ்பிரைட்கள் என்பர்.
2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
ஸ்கிரிப்ட் எடிட்டர்(SCRIPT EDITOR) :
1. ஸ்கிரிப்ட் எடிட்டர் நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.
2. ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
1.Script Area
2. Block Menu
3. Block Palette
Script Area:
இங்கு நிரல் கட்டமைக்கப்படுகிறது.
Block Menu:
இங்கிருந்து பிளாக்கு வகைமையைத் (block category - Programming Statements) தேர்வு செய்யமுடியும்.
Block Palette:
இங்கு பிளாக்குகளை (block) தேர்வு செய்யலாம்.
24.
ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் ஆகும். சடுதிமாற்றத்துக்கு உட்படும் உயிரினம் “சடுதிமாற்றமுற்ற உயிரினம்” (mutant) எனப்படும்.
சடுதிமாற்றத்தைத் தூண்டும் காரணிகள் “மியூடாஜென்கள்” அல்லது “சடுதிமாற்றத் தூண்டிகள்” எனப்படும். சடுதி மாற்றத் தூண்டிகள் இரு வகைப்படும். அவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் மற்றும் வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் ஆகும்.
i) இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் சடுதிமாற்றத்தைத் தூண்டும் கதிர் வீச்சுகளான X – கதிர்கள், α, β மற்றும் γ-கதிர்கள், புறஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பநிலை போன்றவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும்.
ii) வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் சடுதிமாற்றத்தைத் தூண்டும் வேதிப் பொருட்கள் வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும். (எ.கா) கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம்.
பயிர் மேம்பாட்டிற்கு தூண்டப்பட்ட சடுதி மாற்றத்தைப் பயன்படுத்துவதே “சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம் ” எனப்படும்.
சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கத்தின் சாதனைகள் சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கத்தின் சில சாதனைகளைக் கீழே காணலாம்.
அ. சோனாரா – 64 என்ற கோதுமை ரகத்தில் இருந்து காமாக்கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி சோனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது.
ஆ. உவர் தன்மையைத் தாங்கும் திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அட்டாமிட்டா 2 அரிசி ரகம்.
இ. கடினமான கனி உறை கொண்ட நிலக்கடலை ரகம்
25.
26.
முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம் :
முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம் ஓரிணை விந்தகங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நாளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
விந்தகங்கள் விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன.
விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும், தோலாலான விதைப்பைகளினுள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு விந்தகமும் விந்து நுண்குழல்கள் என்ற சுருண்ட குழல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
இக்குழல்களில் விந்து செல்கள் முதிர்ச்சியடையும் போது, அவை சேகரிக்கும் நாளங்களில் தேக்கப்பட்டு எபிடிடைமிசுக்குக் கடத்தப்படுகின்றன.
இருபக்க விந்து நாளங்களும் சிறுநீர்பைக்கு சற்று கீழே சிறுநீர் வடிகுழாயில் இணைகின்றன.
சிறுநீர் வடிகுழாய் பின்னோக்கி சென்று, ஆண்குறியில் சேர்க்கிறது.
இனப்பெருக்கத்தில் பங்குக்கொள்ளும் மூன்று துணைச் சுரப்பிகள் உள்ளன.
அவை முறையே புராஸ்டேட் சுரப்பி, கௌப்பர் சுரப்பி மற்றும் கழிவிடச் சுரப்பிகள் ஆகும்.
27.
நீரில் HNO3 பிரியும் முறை :
HNO3(aq)➝H+(aq)+NO-3(aq)
கரைசலில் ஒரு மோல் நைட்ரிக் அமிலம், ஒரு H+ அயனியை தருகிறது. எனவே 1.0 x 10-4 மோலார் நைட்ரிக் அமிலம் 1.0 x 10-4 மோல் H+ அயனியை தருகிறது.
[H+] = 1.0 x 10-4 மோல் லிட்டர்-1
pH = -log10[H+]
= -log10[1.0 x 10-4]
= - (-4) log10 10 = 4 \(\times\) 1
pH = 4
1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பு 4.
28.

நமது கையை யாராவது சிறு ஊசி மூலம் குத்தும்போது வலி தூண்டப்பட்டு. உணர்ச்சி ஏற்பிகளால் உணரப்படுகிறது. இந்தத் தூண்டுதல் உணர்ச்சி நரம்புகளில் உணர்வலையை ஏற்படுத்துகிறது.
தண்டுவடத்துக்கு இத்தகவல்கள் உணர் நரம்பு செல்கள் மூலம் கடத்தப்படுகிறது.
தண்டுவடமானது இத்தூண்டல்களைப் பகுத்தறிந்து, உரிய துலங்கலை கடத்தும் மையத்தின் நரம்புச் செல்கள் மூலமாக இயக்க நரம்பு செல்களுக்கு கடத்துகிறது.
தண்டுவடம் பிறப்பிக்கும் கட்டளைகளை இயக்க நரம்புச் செல்கள் நமது கைகளுக்கு எடுத்துச் செல்கிறது.
நமது கையில் உள்ள தசை நார்கள் சுருங்குவதன் மூலம் நாம் நமது கையை உடனடியாக விலக்கிக் கொள்கிறோம்.
29.
| வ.எண் | மைலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள் | மைலின் உறையற்ற நரம்பு செல்கள் |
| 1. | இதற்கு மைலின் உறையுடைய அல்லது வெள்ளை நிற ஆக்சான் நியூரான் என்று பெயர். | இதற்கு மைலின் உறையற்ற அல்லது சாம்பல் நிற ஆக்சான் என்று பெயர். |
| 2. | இது மூளையின் வெண்மை நிறப்பகுதியில் காணப்படும். | இது மூளையின் சாம்பல் நிறப் பகுதியில் காணப்படும். |
| 3. | நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். | நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டு இருக்காது. |
30.
pH = 14 - pOH
pH = 14 - 11.76 = 2.24
31.
(i) கணினி புதிய கருத்துக்களை வெளிக் கொணரவும், புதிய கொள்கைகளில் ஆழமாக செல்வதற்கும் பல வழிகளில் CD - ரோம் or DVD போன்றவற்றின் மூலமாக உதவி செய்கிறது.
(ii) கலந்துரையாடல் பயிற்சிகளுக்கும் வழி வகுக்கிறது.
(iii) பாடங்களை எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் காட்சி தொடர்பு சாதனங்களின் மூலமும், அசைவூட்டல் மூலமாகவும், சித்திரங்களின் மூலமாகவும், நாங்கள் கற்றுக் கொள்ள உதவிபுரிகின்றது.
32.
A என்பது நீல நிறப் படிக உப்பு.
A \(\Rightarrow\) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் (CuSO4 . 5H2O).
'A' யை சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து 'B' ஆக மாறுகிறது.

33.
34.
1. மேல்புறத் தோலுக்கும், கீழ்புறத்தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும்.
2. இருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுக்களில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை செல்கள் உள்ளன.
3. ஒருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுவில் பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது.
4. செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன.
5. பசுங்கணிகம் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகின்றன.
6. ஒழுங்கற்ற செல்கள் வாயுப் பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன.
35.
1. அலைப்பேசி நிறுவனங்கள் அயனியாக்காத கதிர்களை பயன்படுத்துகின்றன. அயனியாக்காத கதிர்கள் X - கதிர், காமா கதிர்களை போல் ஆபத்தானவை இல்லை.
3. 2006 - ல் WHO - ன் அறிக்கையின் படி மனித உடல் அலைபேசி கோபுரங்களிலிருந்து தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் கதிர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக உட்கொள்கிறது.
4. ஒவ்வொரு அலைபேசி கோபுரத்திலிருந்தும் சில மைல் தொலைவு வரை அயனியாக்காத கதிர்வீச்சுகள் பயணிக்கின்றன.
5. எனவே நாம் அலைபேசி கோபுரத்திற்கு தொலைவில் இருக்கின்றோமோ அவ்வளவு குறைந்த கதிர்களை நம் உடல் உட்கொள்ளும்.
36.
| வ.எண். | தமனி | சிரை |
| 1. | வழங்கும் குழாய்கள் | பெறும் குழாய்கள் |
| 2. | இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது. | சிவப்பு நிறத்தினை உடையது. |
| 3. | உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது | உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. |
| 4. | அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் | குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம். |
| 5. | தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை | சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை. |
| 6. | நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. | நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. |
| 7. | உள்ளீடு வால்வுகள் கிடையாது. | உள்ளீடு வால்வுகள் உண்டு. |
37.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
38.
1. மாரடைப்பு வருவது குறைக்கப்படுகிறது
2. உடல் எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ளலாம்.
3. இரத்த கொழுப்பைக் குறைக்க பயன்படுகிறது.
4. வகை - 2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய் மற்றும் சில புற்றுநோய் வராமல் தடுக்கலாம் குறைந்த இரத்த அழுத்தம்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards