10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஒளியின் பாதை
2.
மின்சூடேற்றி (Geyser)
3.
திருப்பு விசை
4.
ஜிப்ரெல்லின்
5.
பரம்பரை
6.
2n+1
7.
பியூட்டேன்
8.
திண்மத்தில் உள்ள திரவம்
9.
அண்டக்குழாய்
10.
ஸ்டேஜ் பிரிவு
11.
மேகக் கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்கக் காரணம் ______
12.
நமது வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் ______ இணைக்கப்பட்டுள்ளது.
13.
வெப்ப ஆற்றல் என்பது ஒரு வகையான ______
14.
ஹைட்ரஜன் _______ ஐசோடோப்புகளை உடையது.
15.
\(_{ 4 }{ Be }^{ 9 }+_{ 2 }{ He }^{ 4 }\rightarrow \_ \_ \_ \_ \_ \_ \_ \)
16.
முன் மூளையானது, பெருமூளை மற்றும் ____________________ என்பவைகளால் ஆனது.
17.
பொருளின் இயக்கத்தையும், அதற்கு காரணமாக ____ பற்றியும் விளக்குவது இயக்கவிசையியல் ஆகும்.
18.
ஒரு ஊடகத்தில் பரவும் அலையின் திசைவேகம்_____
19.
ஒருவித்திலை தாவர வேரின் வாஸ்குலார் திசுவில் சைலம் _________ களுடன் காணப்படும்.
20.
இந்தியக் கால்நடை அட்டையின் உயிரியல் பெயர் _______ ஆகும்.
21.
லென்சு சமன்பாடு குறிப்பு வரைக.
22.
அணு ஆரம்-வரையறு.
23.
ஜீன் சிகிச்சையின் வகைகள் யாவை?
24.
மியூடாஜென் என்றால் என்ன?
25.
3R முறை என்பது யாது?
26.
ஹைட்ரஜன் குண்டு - விளக்குக.
27.
இடியோகிராம் என்றால் என்ன?
28.
எஸ்டராக்குதல் வினையை எழுதுக.
29.
இரட்டையின் சுழற்விளைவு எவ்வாறு அளவிடப்படுகிறது?
30.
இரத்த அழுத்தம் - வரையறு.
31.
லென்சின் உருப்பெருக்கம் வரையறு. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
32.
சடுதி மாற்றம் வரையறு.
33.
10 g நிறையுள்ள ஒரு பொருளின்மீது 5 விநாடிகளுக்கு 200 டைன் விசை செயல்படுகிறது. ஓய்விலிருந்து நகரத் தொடங்கும்போது அதன் திசைவேகம் யாது? SI அலகில் குறிப்பிடுக.
34.
அல்லி வட்டம் துணை அடுக்கு என கருதப்படுகிறது ஏன்?
35.
மண்ணெண்ணையின் ஒளிவிலகல் 1.44 அதன் வழியே ஒளியின் திசைவேகம் யாது?
1.
பாவை
2.
வெப்ப சூடேற்றும் கருவி
3.
விசையின் திருப்புத்திறன்
4.
போல்டிங்
5.
வட்டார இனத் தாவரவியல்
6.
டிரைசோமி
7.
C4H10
8.
இரசக்கலவை
9.
முட்டை
10.
இடப்புற மேல்பகுதி
11.
( )
மீ-சிதறல்
12.
( )
பக்க இணைப்பில்
13.
( )
ஆற்றல்
14.
( )
மூன்று
15.
( )
6C13
16.
( )
டயன்செஃபலான்
17.
( )
விசை
18.
( )
அலைத்திசைவேகம்
19.
( )
பலமுனை
20.
( )
ஹிருடினேரியா கிரானுலோசா
21.
(i) கோளக லென்சுகளுக்கு லென்சு சமன்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
(ii) இச்சமன்பாடு பொருளின் தொலைவு (u), பிம்பத்தின் தொலைவு (v) மற்றும் குவியத் தொலைவு (f) ஆகியவற்றைத் தொடர்புபடுத்துகிறது.
(iii) லென்சு சமன்பாடானது,
\(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)
22.
ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும் இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படுகிறது.
23.
i) இனச்செல் (அ) கருநிலை செல் ஜீன் சிகிச்சை
ii) உடல்செல் ஜீன் சிகிச்சை.
24.
சடுதிமாற்றத்தினை தூண்டும் காரணிகள் மியூடாஜென் எனப்படுகிறது.
25.
கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுதல் 3R முறை ஏற்றதாகும். Reduce (குறைத்தல்), Reuse (மறுபயன்பாடு), Recycle (மறுசுழற்சி) என்பதாகும்.
26.
(i) அணுக்கரு இணைவு தத்துவத்தின் அடிப்படையில் ஹைட்ரஜன் குண்டு செயல்படுகிறது. இதற்குத் தேவையான உயர் வெப்பநிலையையும் அழுத்தத்தையும் உருவாக்க, அணு குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்படுகிறது.
(ii) இதன் பிறகு, ஹைட்ரஜனில் அணுக்கரு இணைவானது நடைபெற்று கட்டுக்கடங்காத அளவு அதிக ஆற்றல் வெளியாகிறது. ஹைட்ரஜன் குண்டின் மூலம் (அணுக்கரு இணைவு) உருவாகும் ஆற்றலானது, அணுகுண்டின் மூலம் (அணுக்கரு பிளவு) உருவாகும் ஆற்றலை விட அதிகமாகும்.
27.
ஒரு சிற்றினத்தின் கேரியோடைப் வரைபட விளக்கம் இடியோகிராம் எனப்படும்.
28.
(i) எத்தனால், எத்தனாயிக் அமிலத்துடன் அடர் H2SO4 முன்னிலையில் எத்தில் எத்தனோயேட் என்ற எஸ்டரைத் தருகிறது.
(ii) இது பழச்சாறின் மணமுடையது.
(iii) இவ்வினையே எஸ்டராக்குதல் என அழைக்கிறோம்.
29.
(i) இரட்டையின் சுழற்விளைவு, அதன் திருப்புத்திறன் மதிப்பு கொண்டு அளவிடப்படுகிறது. இம்மதிப்பு ஏதெனும் ஒரு விசையின் எண்மதிப்பு மற்றும் இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு, இவைகளின் பெருக்கற்பலனுக்கு சமமாகும்.
(ii) இரட்டையின் திருப்புத்திறன் (M)=விசையின் எண் மதிப்பு (F) x இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு (S) M =F x S
30.
தமனிகள் வழியே இரத்தம் ஓடும்போது அத்தமனிகளின் பக்கவாட்டுச் சுவர் மீது இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படும்.
31.
(i) பிம்பத்தின் உயரத்திற்கும், பொருளின் உயரத்திற்கும் இடையே உள்ள தகவு 'உருப்பெருக்கம்' எனப்படுகிறது. உருப்பெருக்கம் 'm' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. பொருளின் உயரத்தை h எனவும், பிம்பத்தின் உயரத்தை h' எனவும் கொண்டால்,
m = பிம்பத்தின் உயரம்/பொருளின் உயரம் = h'/h
(iii) உருப்பெருக்கமானது பிம்பத்தின் தொலைவு மற்றும் பொருளின் தொலைவு ஆகியவற்றை கொண்டும் தொடர்புபடுத்தப்படுகிறது.
(iv) m = பிம்பத்தின் தொலைவு /பொருளின் தொலைவு = v/u
(v) உருப்பெருக்கத்தின் மதிப்பு 1 ஐ விட அதிகமாக இருந்தால் பொருளை விடப் பெரிய பிம்பமும், 1 ஐ விட குறைவாக இருந்தால் பொருளை விடச் சிறிய பிம்பமும் கிடைக்கும்.
32.
ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும்.
33.
விசை F =200 டைன்
நிறை m =10 g
t =5 s
முடுக்கம் a =\(\frac { F }{ m } =\frac { 200 }{ 10 } \)=20 cm s-2
திசைவேகம் v =at
⇒ v=20 x 5 =100 cm s-1
SI அலகுமுறையில்
v=100 x 10-2 ms-1
v=1 ms-1
34.
அல்லி வட்டம் நேரடியாக இனப்பெருக்கத்தில் பங்கெடுப்பதில்லை. எனவே இது துணை அடுக்கு எனக் கருதப்படுகிறது.
35.
கொடுக்கப்பட்டவை:
காற்றின் வழியே ஒளியின் திசைவேகம்
Ca =3 x 108 ms-1
கண்டறிய:
மண்ணெண்ணையின் வழியே ஒளியின் வேகம் Ck =?
மண்ணெண்ணையின் வழியே ஒளிவிலகல்
μk =1.44
μk =\(\frac { { C }_{ a } }{ { C }_{ k } } \) ⇒
μk =\(\frac { 3\times 10^{ 8 } }{ { C }_{ k } } \) =2.083 x 108 ms-1
மண்ணெண்ணையின் வழியே ஒளியின் வேகம் Ck=2.083 x 108 ms-1.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards