10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
25% ஆல்கஹால் கரைசல் என்பது ______.
100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
2.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
சுழி
3.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
f
ஈறிலாத் தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
4.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் _____.
22.4 லிட்டர்
2.24 லிட்டர்
0.24 லிட்டர்
0.1 லிட்டர்
5.
மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _______ எனப்படும்.
வர்ணம் பூசுதல்
நாகமுலாமிடல்
மின்முலாம் பூசுதல்
மெல்லியதாக்கல்
6.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
7.
சின்கேமியின் விளைவால் உருவாவது ______.
சூஸ்போர்கள்
கொனிடியா
சைகோட் (கருமுட்டை)
கிளாமிடோஸ்போர்கள்
8.
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
9.
அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
கழிவுநீக்க மண்டலம்
நரம்பு மண்டலம்
இனப்பெருக்க மண்டலம்
சுவாச மண்டலம்
10.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C
A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C
A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C
A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C
11.
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ______.
மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களை குட்டையாக்குவது
குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
வேர் உருவாதலை ஊக்குவிப்பது
இளம் இலைகள் மஞ்சளாவது
12.
புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
cms-1
Nkg-1
N m2 kg-1
cm2 s-2
13.
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை ______.
மூளை, தண்டு வடம், தசைகள்
உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்
தசைகள், உணர்வேற்பி, மூளை
உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
14.
வேரில் புறணியின் உட்புற அடுக்கு _________ஆகும்.
15.
ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை _______ என அழைக்கிறோம்.
16.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் ______ ஆகும்.
17.
நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை__________ ஆகும்.
18.
குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு ______ எனப்படும்.
19.
நீரானது வேர் தூவி செல்லின் _________ பிளாஸ்மா சவ்வின் வழியாக செல்கிறது.
20.
_______ நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது
21.
_____ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை_________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
22.
குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக ______ உண்டாகிறது.
23.
தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள_________ மற்றும் _______ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
24.
மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற _______ பயன்படுகிறது.
25.
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது ______ சிதறல் எனப்படும்.
26.
மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை?
27.
சூடான தெவிட்டிய காப்பர்சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?
28.
அணுக்கட்டு எண் – வரையறு எடுத்துக்காட்டு தருக
29.
A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.
30.
கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது?
31.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
32.
நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
33.
பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
34.
செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
35.
குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.
36.
| பகுதி I | பகுதி II | ||
| 1) | முலாம் பூசுதல் | அ) | மந்த வாயுக்கள் |
| 2) | காற்றில்லா வறுத்தல் | ஆ) | துத்தநாகம் பூச்சு |
| 3) | ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை | இ) | சில்வர் - டின் ரசக்கலவை |
| 4) | பற்குழி அடைத்தல் | ஈ) | அலுமினோ வெப்ப ஒடுக்க வினை |
| 5) | 18 ஆம் தொகுதி தனிமங்கள் | உ) | காற்றிலா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு |
37.
| பகுதி I | பகுதி II | ||
| 1) | நியூட்டனின் முதல் விதி | அ) | ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது. |
| 2) | நியூட்டனின் இரண்டாம் விதி | ஆ) | பொருட்களின் சமநிலை |
| 3) | நியூட்டனின் மூன்றாம் விதி | இ) | விசையின் விதி |
| 4) | நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி | ஈ) | பறவை பறத்தலில் பயன்படுகிறது |
38.
ஜிப்சம்
39.
| பகுதி I | பகுதி II | ||
| 1. | 8 கி O2 | அ) | 4 மோல்கள் |
| 2. | 4 கி H2 | ஆ) | 0.25 மோல்கள் |
| 3. | 52 கி He | இ) | 2 மோல்கள் |
| 4. | 112 கி N2 | ஈ) | 0.5 மோல்கள் |
| 5. | 35.5 கி Cl2 | உ) | 13 மோல்கள் |
40.
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
41.
குழந்தை பிறப்பு
42.
AB இரத்த வகை
43.
வேர் அழுத்தம்
44.
| பகுதி I | பகுதி II | ||
| 1) | நீள் வெப்ப விரிவு | அ) | பருமனில் மாற்றம் |
| 2) | பரப்பு வெப்ப விரிவு | ஆ) | சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள் |
| 3) | பரும வெப்ப விரிவு | இ) | 1.381 \(\times\) 10-23 JK-1 |
| 4) | வெப்ப ஆற்றல் பரவல் | ஈ) | நீளத்தில் மாற்றம் |
| 5) | போல்ட்ஸ்மேன் மாறிலி | உ) | பரப்பில் மாற்றம் |
45.
இன்சுலின்
46.
ஹைப்போதலாமஸ்
47.
| 1) | ரெட்டினா | அ) | கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை |
| 2) | கண் பாவை | ஆ) | சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல் |
| 3) | சிலியரித் தசைகள் | இ) | அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல் |
| 4) | கிட்டப்பார்வை | ஈ) | விழித்திரை |
| 5) | தூரப்பார்வை | உ) | விழி ஏற்பமைவுத்திறன் |
48.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
49.
தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
50.
வேரினுள் நீர் நுழைந்து, இலையின் மூலம் நீராவியாக வளிமண்டலத்தில் இழக்கப்படும் பாதையைக் காட்டுக.
51.
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
52.
அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.
1.
(c)
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
2.
(a)
நேர்க்குறி
3.
(c)
2f
4.
(b)
2.24 லிட்டர்
5.
(b)
நாகமுலாமிடல்
6.
(c)
ஒன்றிணைந்தவை
7.
(c)
சைகோட் (கருமுட்டை)
8.
(d)
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
9.
(b)
நரம்பு மண்டலம்
10.
(a)
A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C
11.
(b)
குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
12.
(b)
Nkg-1
13.
(d)
உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
14.
( )
அகத்தோல்
15.
( )
கரைபொருள்
16.
( )
அணுக்கட்டு எண்
17.
( )
அணு எண்
18.
( )
கொலஸ்ட்ரம் (சீம்பால்)
19.
( )
சிம்பிளாஸ்ட்
20.
( )
சிறுநீரகம் (நெஃப்ரான்)
21.
( )
1 கிராம், 1oC
22.
( )
கிரிட்டினிசம்
23.
( )
பரிவு , எதிர்ப்பரிவு மண்டலம்
24.
( )
பற்சக்கரங்கள்
25.
( )
மீட்சிச்
26.
(i) மூளை பாதுகாப்பாக மண்டையோட்டில் உள்ளது.
(ii) மூளையானது மூன்று பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டுள்ளது. மூளையின் உறைகள் அனைத்தும் மூளையை அடிபடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
(iii) மூளையில் மூளைத் தண்டுவடத் திரவம் காணப்படுகிறது. அவை திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
27.
நிறமற்ற, நீரற்ற காப்பர் சல்பேட் உப்பில் சில துளி நீரினைச் சேர்க்கும் போது அல்லது குளிர்விக்கும் போது உப்பானது நீலநிற நீரேறிய உப்பாக மாறுகிறது.
ஏனெனில் ஐந்து நீர் மூலக்கூறுகள் காப்பர் சல்பேட்டுடன் சேர்க்கப்படும் போது இவை படிகமாக மாறி நீரேறிய உப்பாக காட்சியளிக்கிறது.
28.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் "அணுக்கட்டு எண்" ஆகும்.

எடுத்துக்காட்டு: H2 மூலக்கூறுகளின் அணுக்கட்டு எண்-2.
29.

i) A \(\Rightarrow\) காப்பர் (Cu)
ii) 2 Cu + O2 \(\xrightarrow{<1370 \mathrm{~K}}\) 2 CuO
B \(\Rightarrow\) குப்ரிக் ஆக்சைடு
iii) 4 Cu + O2 \(\overrightarrow{>1370K}\) 2Cu2O
C \(\Rightarrow\) குப்ரஸ் ஆக்சைடு
| A | காப்பர் (Cu) |
| B | குப்ரிக் ஆக்சைடு CuO |
| C | குப்ரஸ் ஆக்சைடு Cu2O |
30.
1. குழந்தை பிறப்பிற்கு பிறகு முதல் 2 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குள் மார்பகங்களால் சுரக்கப்படும் பால் சீம்பால் (கொலஸ்ட்ரம்) எனப்படும்.
2. முன்புற பிட்யூட்டரி சுரக்கும் புரோலாக்டின் என்னும் ஹார்மோன் பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியை தூண்டுகிறது. பின் பிட்யூட்டரியின் ஹார்மோனான ஆக்ஸிடோசின் பால் வெளியேறுதலைத் தூண்டுகிறது.
31.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து (CO2) கிடைக்கிறது.
32.
நாளமுள்ளச் சுரப்பி
1. நாளங்கள் இல்லை
2. இவற்றின் சுரப்புகள் ஹார்மோன்கள் எனப்படும்.
3. இரத்தத்தின் மூலம் உடலில் பரவுகிறது.
i. பிட்யூட்டரி சுரப்பி
ii. தைராய்டு சுரப்பி
iii. பாரா தைராய்டு சுரப்பி
iv. கணையம் (லாங்கர்ஹான் திட்டுகள்)
v. அட்ரினல் சுரப்பி (கார்டக்ஸ் மற்றும் மெடுல்லா)
vi. இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பி)
vii. தைமஸ் சுரப்பி
நாளமில்லாச் சுரப்பி
1. நாளங்கள் உண்டு
2. உமிழ்நீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள்
3. உமிழ்நீர் சுரப்பியைத் தவிர மற்ற இரண்டு சுரப்பிகள் உடலின் வெளிப்புறத்தில் உள்ளன.
33.
1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
2. இதன் SI அலகு கெல்வின்-1
\(\frac{\Delta V}{V_{o}}=\alpha_{v}\Delta T\)
34.
விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து
1. ஒத்த இணைவிசைகள்
2. மாறுபட்ட இணைவிசைகள் என்று வகைப்படுத்தலாம்.
35.
| குவிலென்சு | குழிலென்சு |
| மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் | மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும் |
| இது குவிக்கும் லென்சு | இது விரிக்கும் லென்சு |
| பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் | மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் |
| தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது | கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது. |
36.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| ஆ | உ | ஈ | இ | அ |
37.
| 1 | 2 | 3 | 4 |
| ஆ | இ | ஈ | அ |
38.
NaOH
39.
| 1. | 2. | 3. | 4. | 5. |
| ஆ | இ | உ | அ | ஈ |
40.
டிரசீனா
41.
கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றம்
42.
ஆன்டிபாடி அற்ற இரத்த வகை
43.
சைலத்திலுள்ள அழுத்தம்
44.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| ஈ | உ | அ | ஆ | இ |
45.
டயாபடீஸ் மெல்லிடஸ்
46.
பின்மூளை
47.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| ஈ | அ | உ | ஆ | இ |
48.
தற்சார்பு ஊட்ட உயிரிகளான ஆல்காக்கள், தாவரங்கள், பச்சை நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்தி கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை எனப்படும்.
இது செல்லில் பசுங்கணிகங்களில் நடைபெறுகிறது.
49.
| வ.எண். | தமனி | சிரை |
| 1. | வழங்கும் குழாய்கள் | பெறும் குழாய்கள் |
| 2. | இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது. | சிவப்பு நிறத்தினை உடையது. |
| 3. | உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது | உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. |
| 4. | அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் | குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம். |
| 5. | தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை | சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை. |
| 6. | நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. | நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. |
| 7. | உள்ளீடு வால்வுகள் கிடையாது. | உள்ளீடு வால்வுகள் உண்டு. |
50.
வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல் நோக்கிய கடத்துதல் மூலம் தாவரங்களின் பிறபகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும். சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன. சாறேற்றம் பின்வரும் படிநிலைகளில் நடைபெறுகிறது.
1. வேர் அழுத்தம்.
2. நுண்துளை ஈர்ப்பு விசை (தந்துகிக் குழாய் விசை)
3. நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
4. நீராவிப் போக்கின் இழுவிசை.
51.
அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்:
ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளிக்கும் போது, அது போல்டிங்கைத் தூண்டுகிறது. இது விதை உற்பத்தியைத் தூண்டும் இயற்கை வழி முயற்சி ஆகும்.
ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால், அழுகிய பழத்தில் இருந்து உற்பத்தியாகும் எத்திலின் பழுக்காத பழத்தினை முதிர்ச்சி அடைய செய்து விரைவாகப் பழுக்கத் தூண்டும்.
இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது;
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது, செல்பகுப்பு, வளர்ச்சி உருவத்தோற்றவியல் முதலியவற்றை காண இயலாது.
52.
தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.
அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y - வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.
உமிழ்நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படும் ஹிருடின் என்ற பொருள் இரத்தத்தை உறைய விடுவதில்லை.
பக்கக் கால்களும், மயிர்க் கால்களும் காணப்படுவதில்லை.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards