10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
2.
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
SA கணு
AV கணு
பர்கின்ஜி இழைகள்
ஹிஸ் கற்றைகள்
3.
விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
‘O’ வகை
‘AB’ வகை
A அல்லது B வகை
அனைத்து வகை
4.
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
வெண்ட்ரிக்கிள் ⟶ ஏட்ரியம் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
வெண்ட்ரிக்கிள் -⟶ சிரை ⟶ ஏட்ரியம் ⟶ தமனி
5.
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
எண்டோகார்டியம்
எபிகார்டியம்
மையோகார்டியம்
மேற்கூறியவை அனைத்தும்
6.
கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
பரவல்
சவ்வூடு பரவல்
இவை அனைத்தும்
7.
வேர்த் தூவிகளானது ஒரு ______.
புறணி செல்லாகும்
புறத்தோலின் நீட்சியாகும்
ஒரு செல் அமைப்பாகும்
ஆ மற்றும் இ
8.
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
கார்பன்டை ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
நீர்
இவை ஏதுவுமில்லை
9.
வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ______.
புறணி
புறத்தோல்
புளோயம்
சைலம்
10.
ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) _____.
மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது
ஆற்றல் செலவிடப்படுகிறது
அவை மேல் நோக்கி கடத்துத்தல் முறையாகும்
இவை அனைத்தும்
11.
இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?
12.
வெண்ட்ரிக்கிளிலிருந்து வெளிச் செல்லும் முக்கியத் தமனிகளில் காணப்படும் வால்வு எது?
13.
எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?
14.
இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?
15.
மனித இரத்தத்தில் உள்ள RBC – யின் வடிவம் என்ன?
16.
மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்குகளாலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.
17.
நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.
18.
நுரையீரல் தமனி மற்றும் நுரையீரல் சிரை ஆகியவை சாதாரண தமனி மற்றும் சிரை ஆகியவற்றின் பணிகளோடு ஒப்பிடும் போது எவ்வாறு வேறுபடுகின்றன.
19.
இதய ஒலியைக் கண்டறிய மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்துவது ஏன்?
20.
இடது வெண்ட்ரிக்கிள் சுவரானது மற்ற அறைகளின் சுவர்களை விட தடிமனாக இருப்பது ஏன்?
21.
உலர்ந்த தாவரப்பொருளை நீரில் வைக்கும் போது உப்பிவிடும். இதற்கான நிகழ்ச்சி என்ன? வரையறை செய்க.
22.
இதய சுழற்சியின் நிகழ்வானது 0.8 வினாடிகளில் நிறைவடைகிறது எனில், ஒவ்வொரு நிகழ்வின் கால அளவையும் குறிப்பிடுக?
23.
உடல் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் இரத்த ஓட்டத்தினை வேறுபடுத்துக.
24.
சைனோ ஆரிக்குலார் கணு ‘பேஸ் மேக்கர்’ என்று ஏன் அழைக்கப்படுகிறது?
25.
தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
26.
Rh காரணியைக் கண்டறிந்தவர் யார்? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
27.
28.
இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
29.
மனிதர்களின் சுற்றோட்டமானது இரட்டைச் சுற்றோட்டம் என அழைக்கப்படுகிறது ஏன்?
30.
மனித இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விவரி.
31.
ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரின் அளவைவிட இலையின் மூலம் நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் என்ன நிகழும்?
32.
வேரினுள் நீர் நுழைந்து, இலையின் மூலம் நீராவியாக வளிமண்டலத்தில் இழக்கப்படும் பாதையைக் காட்டுக.
33.
கூட்டிணைவு என்றால் என்ன?
34.
நீராவிப்போக்கின் போது இலைத்துளை திறப்பதற்கும் மூடிக் கொள்வதற்குமான காரணத்தை கூறு.
35.
பாலூட்டிகளின் முதிர்ந்த RBC யில் செல் நுண்ணுறுப்புக்கள் காணப்படுவதில்லை.
36.
வலது ஆரிக்கிள் சுவரை விட வலது வெண்ட்ரிக்கிள் சுவர் தடிமனாக உள்ளது.
37.
இலைகள் உதிரும் போது தாவரங்களில் கனிமங்கள் இழக்கப்படுவதில்லை.
38.
புளோயத்தின் வழியாக உணவுப்பொருளானது அனைத்து பகுதிகளுக்கும் பல திசைகளில் கடத்தப்படுகிறது.
39.
இலைத்துளைகள் திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணமான அமைப்பு காப்பு செல்கள் ஆகும்.
40.
தாவர வேர்கள் கனிமங்களை ஆற்றல் சாரா நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் கொள்வதில்லை.
41.
இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
42.
சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக. இதயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.
43.
லியூக்கோசைட்டுகள் துகள்கள் உடையவை மற்றும் துகள்களற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏன்? அவற்றின் பெயர்களையும், பணிகளையும் குறிப்பிடுக.
44.
நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக
45.
தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன. விவரி
1.
(d)
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
2.
(a)
SA கணு
3.
(a)
‘O’ வகை
4.
(c)
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
5.
(d)
மேற்கூறியவை அனைத்தும்
6.
(a)
செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
7.
(d)
ஆ மற்றும் இ
8.
(c)
நீர்
9.
(d)
சைலம்
10.
(d)
இவை அனைத்தும்
11.
கரோனரி தமனி
12.
செமிலுனார் வால்வு (semilunar valve)
13.
பிளாஸ்மா, புரதம், வெள்ளை இரத்த செல்கள்.
14.
ஹீமோகுளோபின் என்ற நிறமி இருப்பதால்.
15.
இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்.
16.
பெரிகார்டியம்.
17.
(i) நீராவிப்போக்கின் மூலம் நீர் மற்றும் தனிமங்கள் வேரிலிருந்து மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
(ii) ஆனால் அதிகப்படியான நீராவிப்போக்கு தாவரங்களைச் உலர செய்வதுடன், இலைகள் வாடிப்போவதுடன், நீரும் வெளியேறுவதால் நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல்.
18.
(i) நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கின்றன.
(ii) நுரையீரல் சிரையை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கின்றன.
19.
(i) மனித உடலின் உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளைக் கண்டறிய ஸ்டெதாஸ்கோப் பயன்படுகிறது
(ii) ஸ்டெதாஸ்கோப்பினை மார்புப் பகுதியில் வைத்து இதயத்தின் ஒலியினைக் கேட்டறியலாம்.
(iii) இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
20.
இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்துக் காணப்படுகின்றன.
21.
1. உலர்ந்த தாவரப் பொருளை நீரில் வைக்கும்போது, நீரினை உறிஞ்சி அது உப்புகின்ற நிகழ்ச்சி உள்ளீர்த்தல் எனப்படும்.
2. எடுத்துக்காட்டாக உலர் விதைகள் மற்றும் உலர் திராட்சை நீரை உறிஞ்சி உப்பிவிடும்.
3. ஆனால் நீரில் கரையாது.
22.
ஒவ்வொரு இதய சுழற்சியும் 0.8 வினாடிகளில் முடிவடையும். அவை கீழ்க்கண்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது.
(i) ஏட்ரியல் சிஸ்டோல் - ஆரிக்கிள்கள் சுருக்கம் 0.1 விநாடி.
(ii) வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல் - வெண்ட்ரிக்கிள்கள் சுருக்கம் 0.3 விநாடி.
(iii) வெண்ட்ரிக்குலார் டயஸ்டோல் - வெண்ட்ரிக்கிள்கள் விரிவடைதல் 0.4 விநாடி.
23.
| வ. எண்: |
உடல் இரத்த ஓட்டம் | நுரையீரல் இரத்த ஓட்டம் |
| 1. | இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து துவங்கி ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் பல உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது. | வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து இரத்தம் நுரையீரல் தமனியின் மூலம் நுரையீரலை அடையும். |
| 2. | உடலின் பல பாகங்களிலிருந்து ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை வலது ஏட்ரியத்திற்கு கொண்டு வரும். | நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் பெற்ற இரத்தம் நுரையீரல் சிரைகளின் மூலம் மீண்டும் இதயத்தின் இடது ஏட்ரியத்தை வந்தடையும். |
| 3. | ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பெருந்தமனி எடுத்துச் செல்கிறது. | வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் வழியாக இரத்தம் மீண்டும் இடது வெண்ட்ரிக்கிளை சென்றடையும். |
24.
1. SA கணுவானது இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது.
2. ஏனெனில் இது இதயத்துடிப்புகளான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது.
3. சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது.
25.
| வ.எண். | தமனி | சிரை |
| 1. | வழங்கும் குழாய்கள் | பெறும் குழாய்கள் |
| 2. | இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது. | சிவப்பு நிறத்தினை உடையது. |
| 3. | உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது | உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. |
| 4. | அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் | குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம். |
| 5. | தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை | சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை. |
| 6. | நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. | நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. |
| 7. | உள்ளீடு வால்வுகள் கிடையாது. | உள்ளீடு வால்வுகள் உண்டு. |
26.
1. Rh காரணியை கண்டறிந்தவர் லேண்ட்ஸ்டெய்னர் மற்றும் வியன்னர்.
2. இது ரீசஸ் இனக் குரங்கின் இரத்தத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
27.
28.
1. இதய ஒலியானது இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் ஏற்படுகிறது.
2. முதல் ஓலியான ‘லப்’ நீண்ட நேரத்திற்கு ஒலிக்கும்.
3. வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது.
4. இரண்டாவது ஒலியான 'டப்' சற்று குறுகிய காலமே ஒலிக்கும்.
5. இவ்வொலியானது வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.
29.
ஒரு முழு சுழற்சியின் போது இரத்தமானது இதயத்தின் வழியாக இரு முறை சுற்றி வருவது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும். இதில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை
30.
அமைப்பு
1. இதயம் இரண்டு அடுக்குகளால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது.
2. மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.
3. மெல்லிய தசைகளால் ஆன மேல் அறைகள் இரண்டும் ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள் (ஒருமை - ஏட்ரியம்) என்றும் தடித்த தசையால் ஆன கீழ் அறைகள் இரண்டும் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படும்.
4. இவ்வறைகளைப் பிரிக்கின்ற இடைச்சுவர் 'செப்டம்' எனப்படும்.
5. இதயத்தின் கீழ் அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் எனப்படும். வலது மற்றும் இடது வெண்ட்ரிக்குலார் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
6. வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து உருவான நுரையீரல் பொதுத்தமனி, வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகளாகப் பிரிவடைகிறது.
7. இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி தோன்றுகிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது.
8. கரோனரி தமனி இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.
9. இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.
வால்வுகள்
இதய வால்வுகள் தசையால் ஆன சிறு மடிப்புகள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன. இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதை தடுக்கவும் உதவுகிறது. இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.
i) வலது ஏட்ரியோவெண்ட்ரிக்குலார் வால்வு:
1. இது வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
2. முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய இதழ் தசை மடிப்புகளால் ஆனதால் இது மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது. வால்வின் இதழ் முனைகள் கார்டா டென்டினே என்ற தசை நீட்சிகளால் வெண்ட்ரிக்கிளின் பாப்பில்லரித் தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன.
ii) இடது ஏட்ரியோவெண்ட்ரிக்குலார் வால்வு:
1. இது இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
2. இது இரண்டு செதில் போல அமைந்துள்ளதால், ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு என்றும் அழைக்கப்படுகிறது.
iii) அரைச்சந்திர வால்வுகள்:
இதயத்திலிருந்து வெளியேறும் முக்கியத் தமனிகளில் (பெருந்தமனி, நுரையீரல், தமனி) உள்ள அரைச்சந்திர வால்வுகள் வெண்ட்ரிக்கிளுக்குள் இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன.
செயல்படும் விதம்
1. இதயம் உடலின் பல பகுதிகளிலிருந்து சிரைகளின் மூலம் இரத்தத்தை பெறும். குறிப்பாக மேல், கீழ் பெருஞ்சிரைகள் மற்றும் நுரையீரல் சிரைகள் இதயத்தை நோக்கி இரத்தத்தை செலுத்துகின்றன.
2. இவ்விதம் இதயத்தின் வலது ஏட்ரிய அறை ஆக்ஸிஜன் நீக்கப்பட்ட இரத்தத்தையும் இடது ஏட்ரிய அறை நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜன் பெற்ற இரத்தத்தையும் பெறும்.
3. இரு ஏட்ரிய அறைகளும் சுருங்கும் வேளையில் முறையே இரத்தம் வலது, இடது வெண்ட்ரிக்கிள்களை அடையும்.
4. வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் முக்கிய தமனி இரத்தத்தை ஆக்ஸிஜன் பெறுவதற்கென நுரையீரல்களுக்கு எடுத்து செல்லும். இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து ஓர் பெருந்தமனி தோன்றியுள்ளது.
5. இத்தமனியிலிருந்து - கரோனரி தமனிகளும் உடல் சுற்றுக்கான தமனிகளும் தோன்றியுள்ளன.
31.
ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரின் அளவைவிட இலையின் மூலம் நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் தாவரங்கள் உலர்ந்து போகும், மேலும் வளர்ச்சி தடைபடும்.
32.
வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல் நோக்கிய கடத்துதல் மூலம் தாவரங்களின் பிறபகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும். சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன. சாறேற்றம் பின்வரும் படிநிலைகளில் நடைபெறுகிறது.
1. வேர் அழுத்தம்.
2. நுண்துளை ஈர்ப்பு விசை (தந்துகிக் குழாய் விசை)
3. நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
4. நீராவிப் போக்கின் இழுவிசை.
33.
கூட்டிணைவு: நீர் மூலக்கூறுக்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்
34.
காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறக்கிறது. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்புத்தன்மை குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக்கொள்கிறது.
35.
காரணங்கள்:
1. பாலூட்டிகளின் RBC யில் உட்கரு இல்லாதிருப்பதினால் அச்செல்லானது இருபுறமும் குழிந்த அமைப்பைப் பெற்று, அதிகளவு ஆக்ஸிஜன் இணைவதற்கான மேற்பரப்பினைப் பெற்றுள்ளது.
2. RBC -ல் மைட்டோகாண்ட்ரியா இல்லாதிருப்பதால் அதிக அளவு ஆக்ஸிஜனை திசுக்களுக்கு கடத்துவதை அனுமதிக்கிறது.
3. எண்டோபிளாச வலைப்பின்னல் இல்லாதிருப்பதால் மெல்லிய இரத்தத் தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று RBC எளிதாக ஊடுருவுகிறது.
36.
காரணங்கள்:
இதயத்திலிருந்து இரத்தம் அதிக அழுத்தத்துடன் இந்த அறைகளிலிருந்து வெளியேற்றப்படுவதால் சுவர் கடினமாக உள்ளது.
37.
காரணங்கள்:
1. சில தாவரங்களில் மூப்படைந்த உதிரும் நிலையிலுள்ள இலைகளில் உள்ள தனிமங்கள் இளம் இலைகளுக்கு இடம் பெயர்கின்றன. இந்நிகழ்ச்சி இலையுதிர் தாவரங்களில் நடைபெறுகிறது.
2. பாஸ்பரஸ், சல்பர், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மிக விரைவாக இடம் பெயரும் தனிமங்களாகும். கால்சியம் எளிதில் இடம் பெயர்வதில்லை.
3. சிறிதளவு தனிமங்கள் சைலம் மற்றும் புளோயத்தினிடையே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
38.
காரணங்கள்:
1. புளோயம் உணவினை (சுக்ரோஸ்) தோற்றவாயிலிருந்து தேக்கிடத்திற்கு கடத்துகிறது.
2. உணவு உற்பத்தியாகும் இடமான இலைகள் தோற்றுவாயாகவும் (source) சேமிக்கும் அல்லது தேவையான இடம் தேக்கிடமாகவும் (sink) கருதப்படுகிறது.
3. ஆனால் தோற்றுவாயும், தேக்கிடமும் தேவையைப் பொறுத்தும், பருவகாலத்தைப் பொறுத்தும் மாறுபடலாம்.
4. தோற்றுவாய்க்கும் தேக்கிடத்திற்கும் உள்ள தொடர்பு அவ்வப்போது மாறுபாடு அடையக் கூடியது.
5. உணவு இடம் பெயர்வது மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ (இரு திசைகளில்) நடைபெறுகிறது.
39.
காரணங்கள்:
1. ஒவ்வொரு இலைத்துளையும் இரண்டு காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளையானது (stomata) பகலில் திறந்தும், இரவில் மூடியும் காணப்படும்.
2. இலைத்துளையின் செயல்பாடானது காப்புச் செல்களின் விறைப்புத்தன்மை மாறுபாடுகளால் நடைபெறுகிறது.
3. பகலில் காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளைகள் திறந்து கொள்கின்றன.
4. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்புத்தன்மை குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன.
5. இதனால் இலைத்துளை மூடிக் கொள்கிறது.
40.
காரணங்கள்:
1. கனிமங்கள் மண்ணில் அயனிகளாக உள்ளதால் அவை சவ்வின் வழியாக எளிதில் புக முடியாது.
2. மண்ணிலுள்ள கனிமங்களின் செறிவு வேர்களின் செல்களில் உள்ள செறிவினை விடக் குறைவாக உள்ளது.
3. ஆகவே பெரும்பாலான கனிமங்கள் ஆற்றல் சார்ந்த கடத்துதல் மூலமாக வேரின் புறத்தோல் சைட்டோபிளாசம் வழியாக உள் நுழைகிறது.
4. இதற்கு தேவையான ஆற்றலை ATP-யின் மூலம் பெறுகிறது.
5. பின்பு, நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக அனைத்து பாகங்களுக்கும் கடத்தப்படுகிறது.
41.
இரத்தத்தின் பணிகள்:
1. சுவாச வாயுக்களைக் கடத்துகிறது (ஆக்சிஜன் மற்றும் CO2)
2. செரிமானம் அடைந்த உணவுப் பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.
3. ஹார்மோன்களைக் கடத்துகிறது.
4. நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அமோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.
5. நோய்த்தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
6. உடலின் வெப்பநிலை மற்றும் pH - ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கும் ஊடகமாக செயல்படுகிறது.
7. உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கிறது.
42.
| சிஸ்டோல் | டையஸ்டோல் |
| வெண்ட்ரிகுலார் சிஸ்டோல் நிகழ்வின் போது இடது வெண்ட்ரிக்கிள் சுருங்குவதால் இரத்தம் பெருந்தமனிக்குள் வேகமாக செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வின்போது ஏற்படும் மிகை அழுத்தம் சிஸ்டோலிக் அழுத்தம் எனப்படும். |
இடது வெண்ட்ரிக்கிள் விரிவடைவதன் காரணமாக அழுத்தம் குறைகிறது. இக்குறை அழுத்தமே டையஸ்டோலிக் அழுத்தம் எனப்படும். |
இதய துடிப்பின் பரவுதல்:
1. சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய அறைகளை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது.
2. SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு பரவுகிறது.
3. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது.
43.
இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இவை மூன்று வகைப்படும்.
1) துகள்களுடைய செல்கள்.
2) துகள்களற்ற செல்கள்.
துகள்களுடைய செல்கள்:
இவை சைட்டோபிளாசத்தில் துகள்களைக் கொண்டுள்ளன. இவற்றின் உட்கருக்கள் ஒழுங்கற்றவை அல்லது மடல்களுடையவை.
இவை மூன்று வகைப்படும்.
i) நியூட்ரோஃபில்கள்.
ii) ஈசினோஃபில்கள்.
iii) பேசோஃபில்கள்.
i) நியூட்ரோஃபில்கள்:
1. இவை அளவில் பெரியவை, இவற்றில் உட்கரு 2-7 மடல்களை கொண்டுள்ளது.
2. மொத்த வெள்ளை அணுக்களில் 60% - 65% நியூட்ரோஃபில்கள் காணப்படுகின்றன.
3. நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ii) ஈசினோஃபில்கள்:
1. இவற்றின் உட்கரு இரு மடல்களைக் கொண்டது.
2. மொத்த வெள்ளையணுக்களில் 2% - 3% வரை இவ்வகை செல்கள் உள்ளன.
3. உடலில் சில ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
4. நச்சுகளை அழித்தல் மற்றும் நச்சு முறிவினை ஏற்படுத்துவது ஈசினோஃபில்களின் முக்கிய பணிகளாகும்.
iii) பேசோஃபில்கள்:
1. பேசோஃபில்கள் மடலுடைய உட்கருவை கொண்டுள்ளன.
2. மொத்த வெள்ளையணுக்களில் 0.5% - 10% வரை இவ்வகை செல்கள் உள்ளன.
3. வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.
துகள்களற்ற செல்கள்:
இவற்றின் சைட்டோபிளாசத்தில் துகள்கள் காணப்படுவதில்லை. இவை இரண்டு வகைப்படும்.
i) லிம்போசைட்டுகள்
ii) மோனோசைட்டுகள்
i) லிம்போசைட்டுகள்:
1. மொத்த வெள்ளையணுக்களில் இவை 20% - 25% உள்ளன.
2. வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்பொருளை உருவாக்குகின்றன.
ii) மோனோசைட்டுகள்:
1. இவை லியூக்கோசைட்டுகளிலேயே மிகப் பெரியவை.
2. இவை அமீபாய்டு வடிவம் கொண்டவை.
3. மொத்த வெள்ளையணுக்களில் 5 - 6% உள்ளது.
4. இவை விழுங்கு செல்களாதலால் பாக்டீரியாவை விழுங்குகின்றன.
44.
தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும்.
நீராவிப்போக்கின் முக்கியத்துவம்:
(i) நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்ல காரணமாகிறது.
(ii) ஒளிசேர்க்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.
(iii) கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல உதவுகின்றன.
(iv) இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக நீராவிப் போக்கு உதவுகிறது.
(v) செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.
45.
நீரானது வேர்த்தூவியினுள் சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது. ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது. மண்ணிலிருந்து வேர்த்தூவியின் வழியாக சைலத்திற்கு நீர் செல்லும் பாதை
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards