10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
கருவியல் சான்றுகள்
தொல் உயிரியல் சான்றுகள்
எச்ச உறுப்பு சான்றுகள்
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
2.
3.
சின்கேமியின் விளைவால் உருவாவது ______.
சூஸ்போர்கள்
கொனிடியா
சைகோட் (கருமுட்டை)
கிளாமிடோஸ்போர்கள்
4.
TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
தாது உப்பு
வைட்டமின்
கொழுப்பு அமிலம்
கார்போஹைட்ரேட்
5.
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமா கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்
(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(iv) மட்டும் சரி
(iii) மற்றும் (iv) சரி
6.
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
மின்விளக்கு மின்னேற்றமடையும்
7.
அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
கழிவுநீக்க மண்டலம்
நரம்பு மண்டலம்
இனப்பெருக்க மண்டலம்
சுவாச மண்டலம்
8.
மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
கண்கள்
செவி உணர்வுப் பகுதி
கல்லீரல்
மைய நரம்பு மண்டலம்
9.
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
வெப்பம்
மின்னாற்றல்
ஒளி
எந்திர ஆற்றல்
10.
ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்கு சமமாகும்.
9.8 டைன்
9.8 \(\times\) 104 N
98 \(\times\) 104 டைன்
980 டைன்
11.
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் ________.
கண் விழித்திரை
பெருமூளைப் புறணி
வளர் கரு
சுவாச எபிதீலியம்
12.
நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது?
Inkscape
Script editor
Stage
Sprite
13.
ஊரணிகள் என்பன யாவை?
14.
நீரேறிய உப்பு - வரையறு.
15.
நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி.
16.
பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் என்ன நிகழும் ?
17.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
18.
வரையறு: மாறுநிலை நிறை
19.
டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுப்படுத்துகின்றன? இம்மாசுப்பாட்டினை தவிர்க்கும் வழிமுறையாது?
20.
எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
21.
தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
22.
திருப்புத்திறன் தத்துவம் வரையறு.
23.
180 கி நீரில், 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.
24.
குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன் விவரி.
25.
நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
26.
மூன்று வோல்ட் மின்னழுத்தம் மற்றும் 600 மில்லி ஆம்பியர் மின்னோட்டமும் பாயும் ஒரு டார்ச் விளக்கினால் உருவாகும்
அ) மின் திறன்
ஆ) மின்தடை மற்றும்
இ) நான்கு மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் ஆகியவைகளை கணக்கிடுக.
27.
நியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குக.
28.
நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
29.
10 மீட்டர் நீளமும், 2 \(\times\) 10–7 m 2, குறுக்குவெட்டு பரப்பும் கொண்ட கம்பியின் மின்தடை 2 ஓம் எனில் அதன் (i) மின்தடை எண், (ii) மின்கடத்து திறன் மற்றும் (iii) மின் கடத்தி எண் ஆகியவற்றை காண்க.
30.
பிட்யூட்ரியின் பின் கதுப்பில் சுரக்கப்படும் ஹார்மோன்களையும் பற்றி குறிப்பு வரைக.
31.
பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச்செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது ?
32.
இயற்கையில் தனிமம் போரான் என்பது போரான் – 10 (5 புரோட்டான்கள் + 5 நியூட்ரான்கள்) மற்றும் போரான் – 11 (5 புரோட்டான்கள் + 6 நியூட்ரான்கள்) ஆகியவற்றின் கலவையாக உள்ளது. B –10 ன் சதவீத பரவல் 20 ஆகவும் B – 11 ன் சதவீத பரவல் 80 ஆகவும் உள்ளது. எனில் போரானின் சராசரி நிறை கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
33.
Rh காரணியைக் கண்டறிந்தவர் யார்? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
34.
அர்ஜூன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்ததால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்ற போது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கொடூரமாக இருப்பதைக் கண்ட அர்ஜூன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும்போதே, அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும் ?
35.
புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
36.
காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.
37.
தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது? இதற்கான மாற்று முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கூறு. இந்தத் தடையின் காரணமாக சுற்றுச்சூழல் எவ்வாறு சீரடையும்?
38.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
1.
(d)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
2.
(b)
3.
(c)
சைகோட் (கருமுட்டை)
4.
(c)
கொழுப்பு அமிலம்
5.
(d)
(iii) மற்றும் (iv) சரி
6.
(b)
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
7.
(b)
நரம்பு மண்டலம்
8.
(d)
மைய நரம்பு மண்டலம்
9.
(c)
ஒளி
10.
(c)
98 \(\times\) 104 டைன்
11.
(a)
கண் விழித்திரை
12.
(b)
Script editor
13.
ஒவ்வொரு கிராமப் புறத்திலும் சிறிய அளவிலான மழைநீரை சேமிக்கும் விதமாக தோண்டப்பட்டுள்ள சிறிய நீர் சேமிக்கும் இடம் ஊரணிகள் எனப்படும்.
14.
அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளுடன் வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்தி படிகங்கள் உருவாகும் நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
இந்தப் படிகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்கல் நீர் எனப்படும்.
எ.கா: நீல விட்ரியால் - CuSO4 5 H2O
15.
1. வைரஸ்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன.
2. இது பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது.
3. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக் கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி, அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்தி செய்வது, நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் எனப்படும்.
16.
பிளனேரியாவை சிறுசிறு துண்டுகளாக வெட்டினால் ஒவ்வொரு சிறு துண்டும் ஒரு பிளனேரியாவைத் தோற்றுவிக்கும்.
17.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து (CO2) கிடைக்கிறது.
18.
தொடர் வினையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு நிறையை மாறுநிலை நிறை என்கிறோம்.
19.
1. சில டிடர்ஜெண்ட்கள் மிகுந்த கிளைகளைக் கொண்ட ஹைட்ரோகார்பன் சங்கிலி தொடரை கொண்டுள்ளது. இவை நுண்ணுயிரிகளை எளிதாய் சிதைக்க இயலாது.
2. எனவே நீரில் கரையாத உப்புகளாக நீரில் படிந்து நீரை மாசுபடுத்துகிறது.
3. தவிர்க்கும் வழிமுறைகள் : உயிரியல் சிதைவுறும் டிடர்ஜெண்ட்களை பயன்படுத்தலாம்
4. இவை நேரான ஹைட்ரோகார்பன் சங்கிலி தொடரை பெற்றவை.
5. இவற்றை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைக்க இயலும்.
20.
1. தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது.
2. நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருந்தால் எளிய காய்டர் (தைராய்டு பெருக்கம்) ஏற்படும்.
21.
ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு தோற்ற விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு K-1.
22.
சமநிலையில் உள்ளபோது ஒரு புள்ளியின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் திருப்புத்திறன்களின் கூடுதல் சுழிக்கு சமமாகும்.
வலஞ்சுழி திருப்புத்திறன் = இடஞ்சுழி திருப்புத்திறன்
F1 \(\times\) d1 = F2 \(\times\) d2
23.
கரைப்பானின் நிறை = 180 கி
கரைபொருளின் நிறை = 45 கி
கரைபொருளின் நிறை சதவீதம் = ?
நிறை சதவீதம்

\(=\frac { 45 }{ 45+180 } \times 100=\frac { 45 }{ 225 } \times 100 = \frac { 4500 }{ 225 }\)
நிறை சதவீதம் = 20%
24.
1. Dr. இயான் வில்மட் பெண் செம்மறி ஆட்டின் மடியில் உள்ள இரட்டை குரோமோசோம் எண் (2N) கொண்ட உடல செல்லை தேர்ந்தெடுத்தார்.
2. அதேபோல் மற்றொரு ஆட்டின் அண்டத்தை பிரித்தெடுத்தார். அண்டம் ஒற்றை எண் குரோமோசோமைக் (n) கொண்டதால், அதனால் புதிய செம்மறி ஆட்டினை உருவாக்க இயலாது.
3. அதேபோல மடியில் உள்ள உடல் செல் (2N) இனப்பெருக்கச் செல்லாக இல்லாததால் அச்செல்லும் புதிய ஆட்டினை தோற்றுவிக்க முடியாது.
4. எனவே வில்மட் மரபுச் செல்லின் இரட்டை எண் (2n) கொண்ட உட்கருவை நீக்கினார்.
5. அதேபோல அண்டத்தில் உள்ள ஒற்றை எண் (n) கொண்ட உட்கருவை நீக்கினார்.
6. பின்னர் மடிச் செல் உட்கருவை உட்கரு நீங்கிய கரு முட்டையினுள் செலுத்தினார்.
7. தற்போது கருமுட்டை (2n)இரட்டை எண் கொண்ட குரோமோசோம்களின் தொகுதியினை உட்கரு மாற்றி பொருத்தல் மூலம் முழுவதும் பெற்றது.
8. பின்னர் இரட்டை எண் (2n) உட்கரு கொண்ட கருமுட்டை, அதன் தாய் செம்மறி ஆட்டின் கருப்பையினுள் மீண்டும் பொருத்தப்பட்டது.
9. மேற்படி கருமுட்டையை மற்றொரு புதிய தாய் செம்மறி ஆட்டின்(செவிலித்தாய்) கருப்பையிலும் பொருத்தப்படலாம். கருமுட்டை கருப்பையினுள் வளர்ந்து செம்மறி ஆட்டுக்குட்டியைத் தோற்றுவித்தது.
10. இவ்வாறு உருவான குளோனிங் செம்மறி ஆடு மரபுப் பண்புகளில் இரட்டை எண் உட்கருவை (மடிச் செல்) வழங்கிய செம்மறி ஆட்டினை ஒத்திருக்குமேயன்றி கருமுட்டை வழங்கிய செம்மறி ஆட்டினை ஒத்திராது.
25.
அணு என்பது பிளக்கக்கூடிய துகள் மற்றும் வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் (எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் கண்டுபிடிப்புக்குப் பிறகு).
ஒரு தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன. [ஐசோடோப்புகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு எ.கா. 17Cl35, 17Cl37]
வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறைகளைப் பெற்றுள்ளன. [ஐசோபார்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு எ.கா. 18Ar40, 20Ca40]
அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்றமுடியும். (செயற்கை மாற்று தனிமமாக்கல் முறை)
அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. [எ.கா குளுக்கோஸ் C6H12O6 C:H:O = 6:12:6 அல்லது 1:2:1]
ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலை கணக்கிட முடியும். [E = mc2]
26.
அ) மின்திறன்
மின்திறன் (P) = V \(\times\) I
V = 3V
I = 600 மில்லி ஆம்பியர் =600 \(\times\) 10-3 A
மின்திறன் =3 \(\times\) 600 \(\times\) 10-3 = 18 \(\times\) 10-1 = 1.8W
ஆ) மின்தடை
மின்தடை (R) = \(\frac{V}{I}\)=\(\frac{3}{600\times 10^{-3}}=18\times 10^{-1}=1.8W\)
இ) நான்கு மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல்
நான்கு மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் = P \(\times\) t
1.8 \(\times\) 4 = 7.2 வாட் மணி
27.

நியூரான்களின் வகைகள்:
அமைப்பின் அடிப்படையில் நியூரான்கள் மூன்று வகைப்படும்.
அவை
(i) ஒருமுனை நியூரான்கள்:
இவ்வகை நியூரான்களில் ஒருமுனை மட்டுமே சைட்டானில் இருந்து கிளைத்து காணப்படும். இதுவே ஆக்சான் மற்றும் டெண்ட்ரைட்டாக செயல்படும்.
வளர் கருவின் ஆரம்ப நிலையில் மட்டும் காணப்படும். முதிர் உயிரிகளில் காணப்படாது.
(ii) இருமுனை நியூரான்கள்:
சைட்டானிலிருந்து இரு நரம்புப் பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று ஆக்சானாகவும் மற்றொன்று டெண்ட்ரைட்டாகவும் செயல்படும்.
கண்ணின் விழித்திரையிலும், நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபீதிலியத்திலும் காணப்படும்.
iii) பலமுனை நியூரான்கள்:
சைட்டானிலிருந்து பல டெண்ட்ரைட்டுகள் கிளைத்து ஒரு முனையிலும், ஆக்சான் ஒரு முனையிலும் காணப்படும்.
மூளையின் புறப்பரப்பான பெருமூளைப் புறணியில் காணப்படும்.
28.
நியூட்டனின் முதல் விதி:
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி:
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
29.
நீளம் , L = 10 மீ, மின்தடை , R = 2 ஓம் குறுக்குவெட்டு பரப்பு , A = 2 × 10–7 m2
மின்தடை எண், \(\rho=\frac{R A}{L}=\frac{2 \times 2 \times 10^{-7}}{10}\)
\(=4 \times 10^{-8} \Omega \mathrm{m}\)
மின்கடத்து திறன் , \( \mathrm{G}=\frac{1}{\mathrm{R}}=\frac{1}{2}=0.5 \mathrm{mho}\)
மின்கடத்து எண், \(\sigma=\frac{1}{\rho}=\frac{1}{4 \times 10^{-8}}\)
= 0.25 × 108 மோ மீ-1
30.
(i) வாசோபிரஸ்ஸின் அல்லது ஆண்டி டையூட்ரிக் ஹார்மோன்
(அ) சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் நீர் இழைப்பைக் குறைக்கிறது. எனவே இது ஆண்டி டையூட்ரிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) எனப்படுகிறது.
(ஆ) ADH குறைவாக சுரப்பதால், நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.
(ii) ஆக்சிடோசின்:
பெண்களின் குழந்தைப்பேற்றின் போது கருப்பையை சுருக்கியும், விரிவடையச் செய்தும், குழந்தைப்பேற்றிற்கு பிறகு பால் சுரப்பிகளில் பாலை வெளியேற்றுவதற்கும் காரணமாகிறது.
31.
1. ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய சைகோட்டைத் (2n) தோற்றுவிக்கிறது.
2. மற்றோர் ஆண் இனச் செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவினைத் தோற்றுவிக்கிறது.
3. இது மும்மய உட்கரு ஆகும். இந்த கருவூண், உருவாகும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது.
4. எனவே இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது.
32.
போரானின் அணு நிறை
\(=\left(10 \times \frac{20}{100}\right)+\left(11 \times \frac{80}{100}\right)\)
= (10 × 0.20) + (11 × 0.80)
= 2 + 8.8
= 10.8 amu
33.
1. Rh காரணியை கண்டறிந்தவர் லேண்ட்ஸ்டெய்னர் மற்றும் வியன்னர்.
2. இது ரீசஸ் இனக் குரங்கின் இரத்தத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
34.
அட்டை கடிக்கும்போது விருந்தோம்பிகளின் தோல்களில் மயக்க தன்மை கொண்ட திரவத்தை உட்செலுத்துகிறது. இதனால் கடிக்கும் போது வலி ஏற்படாது.
35.
கட்டுப்பாடற்ற அபரிமிதமான செல்பிரிதல் புற்று நோயாகும் இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான செல்பிரிதலை மேற்கொள்வதில்லை.
36.
1. பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் நிக்கல், காப்பரை விட அதிக வினைதிறன் கொண்டது.
2. எனவே நிக்கல், காப்பரை இடப்பெயர்ச்சி செய்து நிக்கல் சல்பேட்டையும், காப்பரையும் தரும்.
Ni(s) + CuSO4(aq) \(\rightarrow\) NiSO4(aq) + Cu(s)
37.
1. நெகிழிப் பொருளும், பிளாஸ்டிக் பொருளும் சுற்றுச்சூழலை பாதிக்கின்றது.
2. இவை மட்கும் தன்மை அற்றது.
மாற்று வழிகள்:
1. பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக துணிப் பைகளை உபயோகிப்பது நல்லது.
2. மட்கக்கூடிய மெல்லிய பைகளை பயன்படுத்துவது
3. கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது
பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தடை செய்வதால், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவது குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
38.
இந்த பண்பானது பார்க்கும் தூரம் மற்றும் பரப்பளவு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு ஒளி கிடைக்க பயன்படுகிறது.
எனவே ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களின் கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards