10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
கல்லீரல் அழற்சி இதன் மூலம் ஏற்படுகிறது.
இன்சுலின் சாரா நீரிழிவு நோய்
மது அருந்துதல்
போதைப்பொருள்
புகையிலை பழக்கம்
2.
புவியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கோளில் ஒரு பொருளின் எடை
சுழி
உண்மை எடை
உண்மை எடையைவிட குறைவு
உண்மை எடையை விட அதிகம்
3.
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை _____.
2
3
4
5
4.
பூசா கோமல் என்பது _______ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
கரும்பு
நெல்
தட்டைப்பயறு
மக்காச் சோளம்
5.
20Ca40 தனிமத்தின் உட்கருவில் _____.
20 புரோட்டான் 40 நியூட்ரான்
20 புரோட்டான் 20 நியூட்ரான்
20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
6.
"பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்.
சார்லஸ் டார்வின்
எர்னஸ்ட் ஹெக்கல்
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
கிரிகர் மெண்டல்
7.
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
ATP யானது ADP யாக மாறும் போது
CO2 நிலை நிறுத்தப்படும் போது
நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
இவை அனைத்திலும்
8.
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்
(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்
(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்
(iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது
(i) மட்டும் சரி
(i) மற்றும் (ii) சரி
(iv) மட்டும் சரி
(iii) மற்றும் (iv) சரி
9.
மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
10.
LH ஐ சுரப்பது ______.
அட்ரினல் சுரப்பி
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஹைப்போதலாமஸ்
11.
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
மழைப்பொழிவு இல்லாத இடம்
குறைவான மழை பொழிவு உள்ள இடம்
அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்
இவற்றில் எதுவுமில்லை
12.
நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?
Script area
Block palette
Stage
Sprite
13.
மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை?
14.
அட்டையின் மருத்துவப் பயனை எழுதுக.
15.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.
16.
A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.
17.
மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?
18.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
19.
மனோவியல் மருந்துகள் என்றால் என்ன?
20.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
21.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
22.
ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?
23.
நீ ஒரு மாணவன். நீ உனது வீட்டிலும் பள்ளியிலும் எவ்வாறு மின்சாரத்தை சேமிப்பாய்?
24.
ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக் கற்றையானது 0.3 மீ குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்துகிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.
25.
ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
26.
அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
27.
28.
எலுமிச்சை சாறின் pH மதிப்பு 2 எனில், அதன் ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு என்ன?
29.
வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?
30.
வேறுபடுத்துக : அ. உடல் செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
ஆ. மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
31.
20 கிகி நிறையுள்ள ஒரு கோளம் 40 ms-1 திசைவேகத்தில் ஓய்விலுள்ள 15 கிகி நிறையுள்ள மற்றொரு கோளத்தின் மீது மோதுகிறது. மோதலுக்குப்பின் அதே திசைவேகத்துடன் அவை நகர்கின்றன. திசைவேகத்தைக் காண்க.
32.
அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் . திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைகளை உற்று நோக்கினான். காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.
33.
எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படாத நிலைக்கு உட்படுத்தும். ஏன்?
34.
பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச்செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது ?
35.
சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.
36.
88Ra226 என்ற தனிமம் 3 ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
37.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
38.
காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.
39.
நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
i. “L” செல்களின் பெயரை கூறுக.
ii. “M” மற்றும் ”N” என்பவை யாவை?
iii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.
1.
(b)
மது அருந்துதல்
2.
(a)
சுழி
3.
(a)
2
4.
(c)
தட்டைப்பயறு
5.
(b)
20 புரோட்டான் 20 நியூட்ரான்
6.
(c)
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
7.
(c)
நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
8.
(b)
(i) மற்றும் (ii) சரி
9.
(c)
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
10.
(c)
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
11.
(b)
குறைவான மழை பொழிவு உள்ள இடம்
12.
(a)
Script area
13.
(i) மூளை பாதுகாப்பாக மண்டையோட்டில் உள்ளது.
(ii) மூளையானது மூன்று பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டுள்ளது. மூளையின் உறைகள் அனைத்தும் மூளையை அடிபடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
(iii) மூளையில் மூளைத் தண்டுவடத் திரவம் காணப்படுகிறது. அவை திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
14.
(i) அட்டைகள் இரத்த உறைவைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் செயல்திறன் மிக்கவை.
(ii) சுற்றோட்டக் குறைபாடுகளையும், இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பான நோய்களையும் அட்டைகளில் குணப்படுத்துகின்றன.
(iii) மேலும் அட்டையின் உமிழ்நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
15.
(i) ஹைட்ரஜன் குளோரைடு (HCl)
(ii) ஹைட்ரஜன் அயோடைடு (HI).
16.

i) A \(\Rightarrow\) காப்பர் (Cu)
ii) 2 Cu + O2 \(\xrightarrow{<1370 \mathrm{~K}}\) 2 CuO
B \(\Rightarrow\) குப்ரிக் ஆக்சைடு
iii) 4 Cu + O2 \(\overrightarrow{>1370K}\) 2Cu2O
C \(\Rightarrow\) குப்ரஸ் ஆக்சைடு
| A | காப்பர் (Cu) |
| B | குப்ரிக் ஆக்சைடு CuO |
| C | குப்ரஸ் ஆக்சைடு Cu2O |
17.
1. நாப்கின்களை முறையாக. குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றுவதன் மூலமாக கலவிக் கால்வாயில் நுண்ணுயிர்கள் மூலமாக ஏற்படும் தொற்றினையும், பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையினையும் தடுக்கலாம்.
2. பிறப்புறுப்புகளை வெந்நீரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நாள்களில் ஏற்படும் தசைப்பிடிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
3. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவதால், பிறப்புறுப்புகளில் காற்றோட்டத்தை பெறுவதன் மூலம் வியர்வை உருவாவதை தடுக்கப்படுகிறது.
18.
1. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)
2. ஒரு கூலூம் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்கு வெட்டுப்பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

19.
(i) மூளையின் மீது செயல்பட்டு அவற்றின் செயல்பாடுகளான நடத்தை, உணர்வறி நிலை, சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றியமைக்கும் மருந்துகள் மனோவியல் மருந்துகள் எனப்படும்.
(ii) இவை மனநிலை மாற்றும் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன.
20.
| மீள் வினை | மீளா வினை | |
|---|---|---|
| அ) | தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். | முன்னோக்கு வினை மட்டுமே நடைபெறும் |
| ஆ) | முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். | ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும். |
| இ) | வினையானது சமநிலை அடையும். | வினையானது சமநிலை அடையாது. |
| ஈ) | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது. | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக் கூடியது. |
| உ) | இவ்வினை மெதுவாக நடைபெறும். | வேகமாக நடைபெறும். |
21.
1. சூரிய ஒளியானது வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது ராலே சிதறல் விதிப்படி குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தைவிட அதிகமாக சிதறல் அடைகிறது.
2. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
22.
ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்கள் என்பர். ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும். ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
23.
1. நான் கீழ்க்காணும் முறைகளை கையாளுவதன் மூலம் மின்சாரத்தை சேமிப்பேன்.
2. குறைந்த மின் ஆற்றலை மேம்படுத்தும் சாதனங்களான CFL பல்பு, LED பல்புகளை பயன்படுத்துவேன்,
3. உபயோகிக்காத போது விளக்குகள், மின்விசிறிகள், தொலைக்காட்சி பெட்டி, பிற மின்சாதனங்களில் இணைப்பை துண்டித்து விடுவேன்.
4. செல்லிடைபேசி மின்இணைப்பை தேவையில்லாத போது அணைத்து வைப்பேன்.
5. சூரிய ஒளியினை போதுமான அளவு பயன்படுத்துவேன்.
6. மின் நீர் சூடேற்றிகளுக்கு பதிலாக சூரிய ஒளி நீர் சூடேற்றிகளை பயன்படுத்துவேன்.
7. குளிர்சாதன வசதியினை தேவையான போது மட்டும் பயன்படுத்துவேன்.
24.
f = -0.3 மீ, v = -0.2 மீ
லென்சு சமன்பாட்டிலிருந்து
\(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)
\(\frac { 1 }{ u } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ f } \)
\(\frac { 1 }{ u } =\frac { 1 }{ -0.2 } -\frac { 1 }{ -0.3 } =\frac { -10 }{ 6 } \)
\(u=\frac { -6 }{ 10 } =-0.6\) மீ
25.
ஒப்பு மூலக்கூறு நிறை (ஹைட்ரஜன் அளவீடு):

ஆவி அடர்த்தி (V.D.):

அவகாட்ரோ விதிப்படி v \(\alpha\) n
ஒரு பருமனுள்ள வாயுவில் 'n' எண்ணிக்கையிலான மூலக்கூறுகள் உள்ளதாக கொண்டால்,

'n' = 1 எனக் கொண்டால்,

ஹைட்ரஜன் ஈரணு மூலக்கூறு. எனவே,

ஒப்புமூலக்கூறு நிறையின் வரையறையை பிரதியிட

ஒப்புமூலக்கூறு நிறை = 2 \(\times\) ஆவி அடர்த்தி
26.
| எண் | அமைப்பு ஒத்த உறுப்புகள் | செயல் ஒத்த உறுப்புகள் |
| 1 |
ஒரே மாதிரியான கருவளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும். |
செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது. |
| 2. | பாலூட்டிகளின் முன்னங்கால்கள் அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். | வௌவாலின் இறக்கை, பறவையின் இறக்கை பூச்சியின் இறக்கை இதற்கு எடுத்துக்காட்டாகும். |
27.
28.
கொடுத்தது: pH = 2,
ஹைட்ரஜன் அயனியின் செறிவு H+ =?
விடை: pH = - log10 [H+] = 2
log10 [H+] = - 2
[H+] = 10-2 = 0.01 மோல் லிட்டர்-1
29.
இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்) வாழும் மனிதர்களால் வளர்க்கப்படாத உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும்.
உயிரியப் பல்வகைத் தன்மையை வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக் கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன.
வன உயிரிகளை பாதுகாத்தல்:
1. சிற்றினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்
2. தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்
3. அருகி வரும் சிற்றினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்களை அழியாமல் பாதுகாத்தல்
4. சட்ட விரோத வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றை தடை செய்தல்
5. தேசிய பூங்காக்கள், வன உயிரி சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
6. மேற்கூறிய முறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றுவது ஒரு சவாலான பணியாக உள்ளது. வன உயிரிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும்.
வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன.
30.
அ)
| வ.எண் | உடல் செல் ஜீன் சிகிச்சை | இன செல் ஜீன் சிகிச்சை |
| 1 | உடல் செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் உடல் செல் ஜீன் சிகிச்சை எனப்படும். | கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும் |
| 2 | உடல் செல்களில் செய்யப்படும் ஜீன் திருத்தம் அந்த திருத்தம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே நன்மை பயக்கும். அத்திருத்தம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதில்லை. | உடல் செல்களில் செய்யப்படும் ஜீன் திருத்தம் அந்த திருத்தம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே நன்மை பயக்கும். அத்திருத்தம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படும் . |
ஆ)
| வ.எண் | மாறுபாடு அடையாத செல்கள் | மாறுபட்ட செல்கள் |
| 1 | மாறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு | மாறுபாடு அடைந்த சிறப்பு செல்கள் |
| 2 | பல செல் வகைகளாக மாறுபாடு அடையும் | நமது உடலில் பல்வேறு பணிகளை செய்ய ஏதுவாக மாற்றம் அடைகிறது. |
| 3 | எ.கா தொப்புள்கொடி | எ.கா கணைய செல்கள் |
31.
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1=20 kg
இரண்டாம் பொருளின் நிறை m2=15 kg
முதல் பொருளின் தொடக்க திசைவேகம் u1=40 ms-1
இரண்டாம் பொருளின் தொடக்க திசைவேகம் u2=0
(தொடக்கத்தில் ஒய்வு நிலையில் உள்ளது)
முதல் பொருளின் இறுதி திசைவேகம் =v1
இரண்டாம் பொருளின் இறுதி திசைவேகம் =v2
(ie) v1 = v2 =v
கண்டறிய:
v=?
உந்தமாறா விதிப்படி,
m1u1 + m2u2 =m1v1 + m2v2
m1u1 + m2u2 =(m1+m2)v
20 x 40 + 15 x 0 =(20+15)v
800 =35v
v=\(\frac{800}{35}\)=22.85 ms-1
32.
அருண் நினைத்தது சரி.
காரணங்கள்:
1. காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன.
2. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது.
33.
நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம்.
அலுமினியத்தின் மேல் பகுதியில் ஆக்சைடு படலம் உருவாவதால் அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.
34.
1. ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய சைகோட்டைத் (2n) தோற்றுவிக்கிறது.
2. மற்றோர் ஆண் இனச் செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவினைத் தோற்றுவிக்கிறது.
3. இது மும்மய உட்கரு ஆகும். இந்த கருவூண், உருவாகும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது.
4. எனவே இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது.
35.
1. சூரிய மின்கலங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை.
2. இதிலிருந்து மாசு உண்டாக்கக்கூடிய எரிபொருட்களோ ஆபத்தான வாயுக்களோ கழிவு பொருட்களோ வெளியேறுவதில்லை.
3. இவற்றினை யாரும் அணுக இயலாத அல்லது மிக தொலைதூர இடங்களிலும் பொருத்த முடியும் (காடுகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள்).
4. பெரும் பொருட் செலவில் மட்டுமே அமைக்க இயலும்.
36.
ஒரு ஆல்பா சிதைவில் சேய் தனிமத்திற்கு அணு எண் இரண்டும் நிறை எண் நான்கும் குறைகிறது. எனவே 3 - ஆல்பா சிதைவில் சேய் தனிமத்திற்கு அணு எண் (3 × 2) ஆறும், நிறை எண் (3 × 4) 12 - ம் குறையும்.
[அணு எண் = 88 - 6 = 82, நிறை எண் = 226 - 12 = 214]
\(_{ 88 }{ Ra^{ 226 } }\rightarrow _{ 82 }{ X }^{ 214 }+3_{ 2 }{ He }^{ 4 }\)
A = 214, Z = 82
சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை N = A - Z
N = 214 - 82
N = 132
37.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
38.
1. பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் நிக்கல், காப்பரை விட அதிக வினைதிறன் கொண்டது.
2. எனவே நிக்கல், காப்பரை இடப்பெயர்ச்சி செய்து நிக்கல் சல்பேட்டையும், காப்பரையும் தரும்.
Ni(s) + CuSO4(aq) \(\rightarrow\) NiSO4(aq) + Cu(s)
39.
(i) 'L' - நரம்பு செல் (அ) நியூரான்
(ii) “M” ஆக்சான் மற்றும் ”N’ டெண்ட்ரைட்டுகள்
(iii) “O” சினாப்ஸ்
(iv) “P” அசிட்டைல்கோலின்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards